Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

che_guevara_death-161114-seithy-350.jpg

உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப பொலிவிய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப பொலிவிய இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் இரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பொலிவியாவில் மத போதகர் லூயிஸ் கார்டேரா என்பவரிடம் இருந்தன.

   

2012ஆம் ஆண்டில் அந்த மத போதகர் இறந்த போது, அவரது உடைமைகளை உறவினர்கள் சோதனையிட்டதில், சேகுவாராவின் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த புகைப்படங்களை, அவரது உறவினரும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான இமானுல் ஆர்டியா என்பவர் தனது நாட்டுக்கு எடுத்து வந்தார். தற்போது அந்தப் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களில், ஒரு படத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், கம்பீரத்துடன் சேகுவாராவின் முகம் இருப்பது போன்றும், மற்றொரு படத்தில் சேகுவாராவின் உடல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதும் இருக்கின்றன. சேகுவாரா கொல்லப்பட்ட பிறகு, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் மார்க் ஹட்டனால் எடுக்கப்பட்ட புகைப்படமே சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகின. அதுதவிர, வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. எனவே இந்த புகைப்படங்களை மதபோதகர் கார்டேராவிடம் மார்க் ஹட்டனே கொடுத்திருக்கலாம் என இமானுல் தெரிவித்துள்ளார்.

 

che_guevara_death-161114-seithy-(1).jpg

 

 

che_guevara_death-161114-seithy-(2).jpg

 

 

che_guevara_death-161114-seithy-(3).jpg

 

 

che_guevara_death-161114-seithy-(4).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=120864&category=WorldNews&language=tamil

 

 

நியானி: தகவல் பிழை திருத்தப்பட்டுள்ளது.

Edited by நியானி

சேகு வேரா ஒரு மாபெரும் போராளி.நம்முடைய ஈயடிச்சான் கொப்பி இணையத்தளங்களுக்கு அவரின் மகத்துவமும் அவரது வரலாறும் தெரியாது.நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன சொல்லுறமாதிரி... எப்படி அடுத்தவனை கொப்பிடிச்சு தங்கடை இணையத்தில் போட்டு தங்களை பிரபலப்படுத்தலாம் என்று நினைக்கும் இவர்களுக்கு குறைந்த பட்சம் சரியான தகவலையாவது கொப்பிடிச்சு வெளியிட வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை.இந்தச் செய்தி முதலில் தமிழில் ஒரு குட்டி இணையத்தளத்தில் வந்தது; பின்னர் அதை 34 இணையத்தளங்கள் வெட்டி ஒட்டும் வேலையை செய்தன.தங்களை பெரிய இணையத்தள விற்பன்னர்கள் என்று சொல்பவர்கள் கூட இதே வேலையை செய்தனர்.இப்போ யாழ் இணையத்திலும் வேறொரு இணையத்தின் இணைப்பு முகவரியுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
 
சேகுவராவின் உண்மை வரலாறு இது தான் 
சே குவேரா
 
 
 
சே குவேரா 225px-CheHigh.jpg
போராளி
மார்ச் 5, 1960 அன்று எடுக்கப்பட்ட ஒளிப்படம்
பிறப்பு

எர்னெஸ்டோ குவேரா
ஜூன் 141928

[1]
ஆர்ஜெந்தீனா இறப்பு அக்டோபர் 91967 (அகவை 39) (மரண தண்டணை)
பொலிவியா கல்லறை சே குவேரா கல்லறை
கியூபா பணி மருத்தவர், எழுத்தாளர், போராளி, அரச அலுவலர் அமைப்பு(கள்) சூலை 26 இயக்கம், கியூப சோசலிச புரட்சியின் ஐக்கிய கட்சி,[2] பொலிவிய தேசிய விடுதலைப்படை சமயம் இல்லை (மாக்சிய மனிதநேயம்)[3][4][5] பெற்றோர் எர்னெஸ்டோ குவேரா லின்ச்[6]
Celia de la Serna y Llosa[6] வாழ்க்கைத் துணை கில்டா (1955–1959)
அலேய்டா மார்ச் (1959–1967, மரணம் வரை) பிள்ளைகள் கில்டா (1956–1995), அலேய்டா (பி. 1960), கமிலோ (பி. 1962), செலியா (பி. 1963), எர்னெஸ்டோ (பி. 1965) கையொப்பம் 110px-CheGuevaraSignature.svg.png

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 141928 -ஒக்டோபர் 91967அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

 

 

பெயர்

 

சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்று கருதப்படுகிறது. அவ்விந்தியர், எனதுஎன்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர்.ஆனால், தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு, ஆச்சரியம், ஆனந்தம், வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால், கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது பெற்றோர், அவரை 'டேட்டி' என்று செல்லமாக அழைப்பர்.

 

இளமைக்காலம்

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்கெந்தீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இசுபானிய, பாஸ்க்கு, ஐரிசிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள்,மார்க்ஸ்போல்க்னர்கைடேசல்காரிவேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேருகாப்கா,காமுஸ்லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ்ஏங்கெல்ஸ்வெல்ஸ்புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.

அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகாஅலெக்ரியாஇக்காசாடாரியோஆஸ்டூரியாஸ்போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர்அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

கல்வி

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர்குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம்[7]விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

பயணங்கள்

 

1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியாபெருஈக்குவடோர்பனாமாகொஸ்தாரிக்காநிக்கராகுவாஹொண்டூராஸ்எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.

குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

மார்க்சியத்தில் ஈடுபாடு

 

 

 

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றினார்.[8]பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

 

பொலிவியாவில் சே குவேரா

சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ சால்மோன் என்பவரின் தலைமையில் [8]ஒக்டோபர் 91967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

 

வாழ்க்கை நிகழ்வுகள்
250px-Freedom_Che_-_placard.JPG
 
"விடுதலை சே" என்ற வாசகத்துடன் முச்சக்கர வண்டி, 
  • 1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
    • ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
  • 1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
    • ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
  • 1957 மே 27, 28 - யுவேராப் போர். சூனூ 5 - இராணுவத்தினுடைய நான்காவது அணித் தளபதியாகிறார்.
  • 1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
    • டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
  • 1958 ஆகத்து 21 - சிரோ ரிடன்டோ எட்டாவது அணியின் தலைவராகப் பொறுப்பேற்று லாஸ் வில்லாசு மாநிலத்திற்கு போக உத்தரவு.
    • அக்டோபர் 10 நாளன்று, எஸ்கம்ப்ரே மலைகளை, அவரின் படைப்பிரிவு அடைகிறது.
    • திசம்பர் சான்டா கிளாரா முற்றுகை நடைபெறுகிறது. அம்மாதம் 28-31 நாள்வரை தலைமை ஏற்றுப் போரை நடத்துகிறார்.
  • 1959
    • ஜனவரி 1 - சாண்டா கிளாரா, சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
    • ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
    • ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
    • ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
    • மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
    • ஜூன் 2 - சேவும், அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
    • ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
    • அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
    • நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
  • 1961
    • ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
    • பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
    • ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
  • 1962
    • மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
    • ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
  • 1964
    • பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
    • மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
    • அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
    • டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
  • 1966
    • நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
  • 1967
    • மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
    • ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
    • ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
    • செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
    • அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
    • அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்.
அவரது இறுதிக்கூற்று வருமாறு: “ "என்னைக் கொல்வதற்காகவே இங்குள்ளாய், என்பதெனக்குத் தெரியும். சுடு, கோழையே.., ஓர் ஆளைதான், நீ கொல்லப் போகிறாய்"
("I know you are here to kill me. Shoot,coward, you are only going to kill a man") ”
  • 1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
  • 1997
    • ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
    • ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
    • அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
    • அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.

000000000

சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்..போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம்


சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்..போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். சே எனும் அற்புத போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான் மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக் கறையுடனான உண்மைகளும்தான். லத்தீன் அமெரிக்க புரட்சியில் க்யூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையை உருவாக்க உருதுணையாக சே ஏந்திய துப்பாக்கியின் தோட்டாக்கள் புரட்சியின் வடிவமாக அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.

எர்னெஸ்டோ ‘சே’ குவேரா – மனிதர்களை பெரும் துயர்களிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட ஒரு மனிதன் – அவனது வாழ்க்கை – அவனது தேடல் – அவனின் பயணம் இதுவே வால்டர் சாலஸ் இயக்கியிருக்கும் the Motorcycle Diaries’ திரைக்கதையின் ஒற்றைவரி. உலகின் முதன்மையான புரட்சியாளரின் ஆரம்பக் கட்ட நாள்களின் தொகுப்பே இத்திரைப்படம். உண்மையே புனைவாக்கம் செய்யப்பட்டு நிழலாக மட்டுமல்லாமல் திரையின் நிஜமாக காலத்தின் கரங்களில் ஆழமான பதிவு செய்யப்பட்டிருக்கும் திரைக்காவியம் இது எனலாம்.

1951 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்ட எர்னஸ்டோ குவேரா (ப்யூசர் எனும் செல்லப் பெயர் உண்டு) பயோ கெமிஸ்டான தன் நண்பன் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு (ப்யூசரை விட நான்கைந்து வயது மூத்தவன்) புதிய நாடுகளை, வெவ்வேறு ஊர்களை, அதன் மனிதர்களை, குறிப்பாக பெண்களை பார்த்து பழக ஆசைப்பட்டு தங்களது அதர பழசான ஆனால் நல்ல நிலையில் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிளில் (அதன் பெயர் மைட்டி ஒன்) லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே நீண்ட நெடிய பயணத்தை துவக்குகிறார்கள். நண்பனின் பொறுப்பில் எர்னஸ்டோவை ஒப்படைத்த அவனின் குடும்பம் புன்னகையுடனும் கொஞ்சம் கண்ணீருடனும் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறது. துள்ளலுடன் துவங்கிய அவர்களின் அதி உற்சாகப் பயணம் மலைப்பாதைகளையும் ஆற்றோடைகளையும் நீண்ட புறவழிச் சாலைகளிலும் தங்கு தடையின்றி வழுக்கியோடியது.

மைட்டி ஒன்னும் மின்னலெனவே அவர்களுக்காய் பறந்தது. இளமையின் உச்சத்திலும் சாகச மனோபாவத்திலும் திளைத்துக் கிடக்கும் அவ்விருவரும் பெரும் மனஉத்வேகத்துடன் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஓரிரு முறை அவர்கள் வண்டி மணற்பாதையில் சறுக்கி விழுந்தாலும் கலங்காமல் சரி செய்து பயணத்தை தொடர்கிறார்கள். தோழர்கள் இருவரும் தேர்ந்தெடுத்திருந்த வழி அபாயகரமானது மிகவும் கடினமானது. ஆனால் ஒரு போதும் அடைய முடியாதது அன்று. வடக்கு திசையில் ஆண்டெஸ் மலையை தாண்டி, சிலியின் கரைகளில் பயணித்து, அடகாமா பாலைவனத்தை கடந்து பெருவிற்குள் நுழைந்து இறுதியில் வெனின்சுலாவை அடைய வேண்டும், ஆல்பர்டோவின் சபதம் ஏப்ரல் இரண்டாம் தேதிக்குள் தனது முப்பதாவது வயது தொடக்கத்தில், தோழன் எர்னஸ்டோவுடன் அங்கு சென்று சேர்வதுதான். ஆனால் அவர்களின் அருமை நண்பன் மைட்டி ஒன் அடிக்கடி ரிப்பேர் ஆனதால் அவர்களின் பயணம் தடைப்பட்டு தடைப்பட்டு ஜூலை மாதம்தான் சென்றடைகிறார்கள். இடைப்பட்ட காலகட்டங்களில் அவர்களின் அனுபவங்களே எர்னஸ்டோவின் மொழியில் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களின் அவனது டைரிக் குறிப்புக்களாக பதிவாகிறது.

இந்தப் பயணம்தான் ப்யூசர் புரட்சியாளராக மாறியதற்கான முதல் விதையை போட்டது பயணத்தின் ஆரம்பத்தில் எர்னஸ்டோ தன்னுடைய தோழி சின்சினாவை சந்திக்க விரும்பி அவளின் ஊருக்குச் செல்கிறான். சூதாட்டம், ஆட்டம் பாட்டத்திற்கு பிறகு அவர்கள் சிறுது நேரம் பேசுகிறார்கள். வெகு நாள் கழித்து அவனை சந்தித்த அவள் அவனுடைய பயணத்தை வாழ்த்தி முத்தமிட்டு பலமுத்தமிட்டு கொஞ்சி அதன் பின் அடுத்த நாள் அவன் கிளம்பும் தருவாயில் கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை அவனிடம் தந்து எக்காரணத்தை கொண்டும் செலவு செய்து விடக்கூடாதென்ற அன்பான பந்தனையுடன் அவனுக்கு அளிக்கிறாள். புன்னகையுடன் விடைபெற்று பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். பல சோதனைகள் வரும்போதெலாம் அப்பணத்தை ஆல்பர்டோ கேட்கிறான், எவ்வளவு கெஞ்சியும் தர மறுக்கிறான் எர்னெஸ்டோ.

ஒரு கட்டத்தில் தீவிர ஆஸ்மாவால் பாதிக்கப்பட்ட தன்னை காப்பாற்றிக் கொள்ளக் கூட அவன் அப்பணத்தை பயன்படுத்தவில்லை. மன உறுதியும் நேர்மையும் ஒருங்கே உள் குணம் கொண்டவனாய் நம்முன் எர்னெஸ்டோ காட்சிப்படுத்தப்படுகிறான். ஆரம்பத்தில் கோலகலமாக தொடங்கிய அவர்களின் பயணம் பல அலைக்கழிப்புக்களுக்கு உள்ளாகிறது. தென் அமெரிக்காவின் பரந்த நிலப்பரப்புக் காட்சிகள் பார்க்க சலிக்காதவை. தெள்ளந்தெளிவான வானம், மிதந்து செல்லும் மேகம் அதன் கீழே மலையின் ஹேர்பின் வளைவுகளிலும், நீண்ட ஒற்றையடிப் பாதைகளிலும், யாருமற்ற பனிக் காடுகளிலும், மூடுபனி மலைச்சாலைகளில் கடுமையான பனி மழையின் நடுக்கத்திலும் சோர்வடையாத மனதுடன் அவர்கள் வெற்றி வீரர்களாக பயணம் செய்கிறார்கள். கொடுமை என்னவெனில் எர்னெஸ்டோ வாழ்நாள் முழுவதும் கடுமையான ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டவன். அவனுக்கு வீசிங் வந்துவிட்டால் தாங்கமுடியாத மூச்சிரைப்பால் மிகவும் சிரமப்படுவான். ஒரு குழந்தையைப் போல அவனைத் தாங்கும் நண்பனான ஆல்பர்ட்டோ உடனே டெக்காட்ரானை அவனுக்கு எவ்வாறோ கிடைக்கச் செய்து அவன் சுவாசத்தை அவனுக்கு மீட்டுத் தருவான். எத்தகைய நோய்மையினாலும் உடல் சோர்வினாலும் அவர்களின் பயணம் நிற்கவில்லை. மாறாக இன்னும் தீவிரத்துடன் தொடர்ந்தது.

எர்னெஸ்டோ அடிக்கடி தன் டைரியை எடுத்து அன்று தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை அழகான குறிப்புக்களாக எழுதிக்கொண்டிருப்பான். ஒரு மலைப்பாதையில் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக கட்டாயப்படுத்தப்படும் தம்பதியினரை சந்திக்கிறான். ஏன் அவர்கள் கட்டாயத்துக்குட்படுத்தப்படுகிறார்கள் என்ற கேள்வி அவன் மனதில் எழுகிறது. கேட்பதற்கு யாருமில்லை எனவே தன் டைரியில் பதிவு செய்கிறான், தன் இதயத்தின் அடி ஆழத்திலும் கூட… இப்படி வெவ்வேறு மனிதர்களின் பலவகைப்பட்ட துன்பங்களையும் அல்லல்களையும் நேரிடையாக பார்த்த எர்னெஸ்டோவின் மனம் கலங்குகிறது. என்ன வாழ்க்கை எங்கே இது நம்மை இட்டுச் செல்கிறது வாழ்வின் ஆரம்பம் என்ன முடிவு என்ன போன்ற பெரும் கேள்விகள் அவன் இளம் மனதை ஆட்டிப்படைக்கிறது. வறுமை, பசி, பிணி என்று வாழ்க்கை மரணத்தின் வெவ்வேறு உருக்களாய் எங்கும் படிந்து கிடப்பதை மனித நேயக் கண்ணோடு பார்க்கிறான். ஒரு இடத்தில் மருத்துவ வசதியற்ற முதிய பெண்மணிக்கு மனம் முழுக்க தீரா வலியுடன் அவளைப் பிழைக்க வைக்க முடியாதெனத் தெரிந்தும் வைத்தியம் செய்கிறான். வலியாவது குறையும் என்பதே அவன் நோக்கம்.. அவளுக்கான பிரார்த்தனையாய் அன்றைய டைரியின் பக்கங்கள் அவனின் கண்ணீரால் நனைகிறது. எர்னெஸ்டோவைப் பற்றி குறிப்பிட வேண்டிய பெரும்குணங்களில் ஒன்று அவன் மிகவும் நேர்மையானவன். உண்மையை அதன் ஒளியுடன் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவன். ஆல்பர்ட்டோவோ அவ்வப்போது புளுகு மூட்டைகளை அள்ளி விடுபவன். இருவருக்கும் இதனால் அவ்வப்போது நடக்கும் சிறு சிறு சண்டைகளின் இறுதியில் வெல்பவன் எர்னெஸ்டோதான். தங்களுக்கு மிகவும் உதவிய டாக்டர் ஒருவர் எழுதிய புதினம் வாசிக்கக் கிடைத்தபோது மிகவும் நேர்மையுடன் அது எழுத்தே அல்ல என்பதை விமர்சிக்கிறான் எர்னெஸ்டோ…அவனை எரித்துவிடும்படியாக பார்த்த ஆல்பர்ட்டோவைத் தவிர்த்து…நல்ல வேளையாக அந்த நேர்மையான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் அந்த டாக்டருக்கு இருந்தது. அவர் தான் இவர்களை பெருவிற்கு வழிநடத்திச் சென்றவர். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் நடந்த நிகழ்ச்சியொன்று தான் அவர்களின் இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. அங்கிருந்த தொழுநோயாளிகள் ஆஸ்பத்திரியில் சில வாரங்கள் தொண்டு செய்தது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

தொழுநோயாளிகள் என்பவர்கள் எப்படி சமூகத்தினரால் புறக்கணிக்க்பட்டு சரியான மருத்துவ வசதிகள் இன்றி வீதிகளில் கைவிடப்பட்ட மனிதர்களாய் இன்றும் நாம் காண்கிறோம். மனித் நேயமும் தாயன்பும் கொண்ட எர்னெஸ்டோ தொழுநோயாளிகளிடம் எவ்வித அறுவறுப்பும் இல்லாமல் க்ளவுஸ் என்ற உறையைக் கூட அணியாமல் அவர்களுக்கு எவ்வகையிலும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களோடு கலந்து பழகி மருத்துவம் செய்கிறான். சிறுகச் சிறுக அவர்களின் அன்பையும் நம்பிக்கையும் பெற்று தீர்க்க முடியாத வியாதிகளின் தீவிரத்தன்மையை குறைத்து, சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்து, மனம் உடைந்து போயிருக்கும் நோயாளிகளுக்கு ஆறுதல் மட்டுமே தந்து கொண்டிருக்காமல் அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி தானும் அவர்களுடன் விளையாடி, ஆடிப் பாடி அவர்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கித் தருகிறான். அவனின் உள் அன்பினாலும் நிபந்தனையற்ற பிரியத்தாலும் அந்நோயாளிகள் அவனை நடமாடும் தெய்வமாகவே பார்க்கிறார்கள். ஆனால் எர்னெஸ்டோவிற்கு புகழ்ச்சியோ வழிபடல்களோ ஒருபோதும் பிடிப்பதில்லை. கருணை மனம் கொண்ட அவன் விரும்புவதெல்லாம் வலியினின்றும் வேதனையினின்றும் மனிதர்களைக் காப்பாற்ற உருவாக்கப் படவேண்டிய ஒரு சக்தி. அல்லது கருவி .அது எதுவாக இருக்கும் என்பதை தீவிரமாக யோசித்திக் கொண்டிருந்தான்.

தொழுந்நோயாளிகாளின் காப்பகத்திலிருந்து கிளம்பக்கூடிய நாள் நெருங்கியது. அனைவரும் தங்கள் கண்ணீரை மறைத்து இவர்க்ளுக்கு ப்ரியாவிடை தருகிறார்கள். எர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் கனத்த மனத்துடன் புறப்பட்ட புள்ளிக்கு மீண்டும் திரும்புகிறார்கள். இப்போது அவர்கள் வாழ்வின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு கட்டாய நிலையில் இருக்கிறார்கள். ஆல்பர்ட்டோ ப்ராக்டிகல் வாழ்க்கையில் ஊறியிருப்பவன், அவன் செல்லும் திசை எல்லாரும் செல்லக்கூடியதுதான். ஒவ்வொரு மனிதனும் காலம் காலமாக செய்து கொண்டிருப்பதுதான் அது மிகச் சாதாரண வழியேதானாலும் நம்மைப் போல அவனுக்கும் வேறு வழியில்லை – அவ்வழியிலேயே செல்லத் தலைப்படுகிறான். புறப்படும்முன் எர்னெஸ்டோவிடம் ஒரு உண்மையை சொல்லிவிட்டுச் செல்கிறான். தன்னுடைய பிறந்த தேதி ஏப்ரல் இரண்டு அல்ல…ஒரு இலக்கை நிர்ணயித்து பயணித்தால் பயணம் வேகமாகும் என்பதற்காகவே அவ்வாறு பொய் கூறினேன் என்று சொல்லிய போது புன்னகையுடன் எர்னெஸ்டோ அது தனக்கு தெரியும் என்கிறான்.

மென்சோகத்துடன் எர்னெஸ்டோவிடம் கைகுலுக்கி விடைபெறுகிறான் ஆல்பர்ட்டோ. ஆனால் எர்னெஸ்டோ சே குவேரா தேர்ந்தெடுத்த பாதை யாரும் செல்ல அஞ்சுவது. மிகவும் நேசிக்கும் மனிதர்களின் துயர் துடைக்க ஆயுதம் எடுத்து தோட்டாக்களின் இடைவெளிகளில் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய அபாயகரமான புரட்சிக்கானது. மிக மெல்லிய மனதும் அதே சமயம் எஃகு போல் உறுதியான் நெஞ்சுரமும் கொண்ட சே தேர்தெடுத்த பாதை போராட்டக் களமானது. உலகில் இரண்டே விதமான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். முதல் வகையினர் ஆல்பர்ட்டோ போன்றவர்கள். இவர்களே பெரும்பான்மையினர். ஆயிரத்தில், கோடியில் ஒருவர் தான் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள், பிற உயிர்க்காக தன்னுயிரை விடுபவர்கள். என்றும் எல்லா காலங்களிலும் எல்லார் மனதிலும் வாழும் சே போன்றவர்களே அம்மாமனிதர்கள்…அவர்களின் ரத்தம் பருகித்தான் இந்த நிலம் ஈரப்பதத்துடன் இருக்கிறது. அதில் நின்று கொண்டிருப்பது நாமும்தான்… இப்படத்தின் தாக்கம் என்பது சில நாள்கள் மட்டுமன்று ஒரு வாழ்நாளுக்கானது…

சேவின் டைரிக் குறிப்பிலிருந்து சில துளிகள்: “என்னுடைய கனவு காணும் மனதை நிறைவு செய்ய இயலாதவனாய் நான் அமைதி இழந்தவனாகிறேன். மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள், தேர்வுகள் ஆகியவை எனக்கு சலிப்பை ஏற்படுத்தின. மனம் போன போக்கில் அமெர்க்க கண்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட எங்கள் பயணம் நான் உணர்ந்ததை விட அதிகமாகவே என்னை மாற்றிவிட்டது. எங்கள் மனங்களிலு கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும் அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாரவே உள்ளோம். மிருக பலத்திற்கும் அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.

மக்கள் என்னை ‘சே’ என்று அழைப்பதை நான் மிகவ்ம் விரும்புகிறேன். பலர் என்னை ஒரு வீரசாகசச் செயல்களில் நாட்டமுள்ளவன் எனக் கூறலாம். நான் அத்தகையவந்தான். ஆனால் கொஞ்சம் வேறுபட்டவன், என்னுடைய கொள்கைக்காகவும் நம்பிக்கைக்காகவும் உயிரையும் தருபவர்களில் நானும் ஒருவன்.” சில பின் குறிப்புகள் : “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும் க்யூபா, பொலிவியா, காங்கோ இன்னும் அடக்குமுறை எந்தெந்த இடங்களில் கொடிகட்டிப் பறந்ததோ ஏகாதிக்பத்யம் தன் கொடுங்கரங்களை மக்கள் மீதி பதித்திருந்ததோ அங்கே ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் சேயை ஈடுபடச் செய்தது. அவரின் மனித நேயம் பரந்துபட்டது, எல்லைக்ளுக்கு உட்பட்டதில்லை. எல்லை என்பது நிலங்களில்தான் மனங்களில் இல்லை என்பதை தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்தவர் சே. படத்தில் சே குவேராவாக நடித்திருந்த கேல் கார்சியா பெர்னல் (Gael García Bernal) தன் அருமையான நடிப்பாலும் வசீகரத்தாலும் பார்வையாளர்களை கட்டிப் போட்டுவிடுகிறார். ஆல்பர்டோவாக நடித்தவர் ரோட்ரிகோ. பயணத்தின் போது எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் முதலில் புத்தகம் ஒன்றைத்தான் எழுதினார்.

இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது. சே குவேரா க்யூபாவின் அதிபரான ஃபிடல் காஸ்ரோவிற்கு நெருங்கிய நண்பர். சே குவேரா ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் பிற போராளிகளும் தங்கள் உயிரைப் பயணம் வைத்து க்யூபப் போராட்டத்தில் வெற்றியடைந்தனர். சே குவேரா – சில குறிப்புகள் • பிறப்பு – 1929 ஜூன் மாதம் 14ம் தேதி. • 1945 – மருத்துவ மேற்படிப்பு • 1950 – மோட்டார்சைக்கிளில் 3000 மைல் தூரம் அர்ஜெண்டைனா முழுவதும் சுற்றுப்பயணம் ஆரம்பம் • 1952 – தனது ப்ரியமான நண்பன் ஆல்பர்டோ கிரனட்டொவுடன் பெரு, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு கடும் பயணம் செய்தார். தொழுநோயாளிகள் குடியிருப்பில் சேவை செய்து அங்கு பணிபுரிந்தார். • 1953 ஜூன் 12 – மருத்துவர் பட்டம் பெற்றார் • 1953 ஜூலை 6, லத்தீன் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார். • பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தால் சே கைது செய்யப்பட்டு பொலிவிய ராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னும் இடத்தில் அக்டோபர் 9ம் தேதி 1967 ஆண்டு சே கொல்லப்பட்டார்.


 

Edited by navam

சே மகத்தான ஒரு போராளி புரட்சியாளன். இறந்த உடலில் கூட என்ன ஒரு கம்பீரம் ஆகர்ஷணம் ஆதரிசம். சேயை பற்றி ஒன்றுமே தெரியாமல் சில தமிழ் இணைய தளங்கள் அவர் கியூபா படைகளால் கொல்லப்பட்டார் என்று எழுதுகின்றன. என்ன கொடுமை. ஆனானப்பட்ட பிரபாகரனுக்கே ஆதரிச குருவாக இருந்தவர் சே. ஒருவிதத்தில் பிரபாகரனை விட சே மேலானவர். பிரபாகரன் தனது மக்களின் விடுதலைக்காக போராடினார். ஆனால் அர்ஜென்டினாவில் பிறந்த சே கியுபா பொலிவிய விடுதலைக்காக போராடினார். எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் போராட புறப்பட்ட மாவீரன் சே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

che_guevara_death-161114-seithy-(1).jpg

 

che_guevara_death-161114-seithy-(3).jpg

 

 

படத்தில் வெள்ளை சேட்டுடன் இருப்பவரை பார்க்க எமக்கு தெரிந்த ஒருவரின் ஞாபகம் வருகின்றது.

 


இவரும் அடையாளப்படுத்த வந்திருக்கின்றாரா???

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்காவின் துணையுடன் பொலிவியா இராணுவம் இவரை கொலை செய்தது........இந்தியாவின் துணையுடன் சிறிலங்கா இராணுவம் பிரபாகரனை கொலை செய்தது.....புரட்சி,போராட்டம் போன்றவற்றை அழிப்பதற்க்கு என்றே ஒரு சக்திமிக்க வலைப்பின்னல் அரசுகளுக்கிடையே உண்டு என்று இதிலிருந்து தெரியவருகின்றது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.