Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டெஸ்ட் போட்டி தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 50 கேட்சுகள் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோணி!

 

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 50 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கேப்டன் டோணி. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவ ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 50 கேட்சுகள் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோணி! தற்போது மெல்போர்ன் நகரில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50வது கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கேப்டன் டோணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 19 போட்டிகளில் விளையாடில் 51 கேட்சுகள் பிடித்தும், 14 ஸ்டம்பிங் செய்தும் மொத்தமாக 65 முறை அவுட் செய்துள்ளார் டோணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆலம் நாட்தான் 97 கேட்சுகள், 8 ஸ்டம்பிங் செய்து முன்னணியில் உள்ளார். அவர் மொத்தம் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 90 டெஸ்ட் போட்டிகளில் 250 கேட்சுகளைப் பிடித்து விக்கெட் கீப்பர்களில் 7வது இடத்தில் இருக்கிறார் டோணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ms-dhoni-becomes-first-indian-wicketkeeper-take-50-catches-against-australia-in-tests-217826.html

  • Replies 151
  • Views 7.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டத்தை சிறப்பானது என்று சொல்லமுடியாது.. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் சும்மா வாரி வழங்கினார்கள்.. கிறிஸ் ரோஜர்ஸ் தடவின தடவலுக்கு இவர் ஐந்து நாள் ஆட்டத்துக்கு தகுதியானவரா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் அவரையும் ஒரு ஐம்பது அடிக்க வைத்தார்கள் இந்திய பந்துவீச்சாளர்கள்.

இது போதாது என்று ரையன் ஹாரிஸ் அரை சதம் கடந்தார்.. இந்திய அணி இந்தியாவில் விளையாடத்தான் லாயக்கு. :D முரளி விஜய் விதிவிலக்கு.

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்

ஆட்டத்தில் கவனம் வைக்காமல் அனுஷ்கா ஷர்மாவுடன் நள்ளிரவில் ஊர் சுற்றிய கோஹ்லி

 

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் அடிலெய்டு, பிரிஸ்பேன் டெஸ்டுகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன், மனைவிகளை தங்க அனுமதி அளித்து இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், காதலியை ஒரே அறையில் தங்க வைக்க தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

14junua.jpg

ஆட்டத்தில் கவனம் வைக்காமல் அனுஷ்கா ஷர்மாவுடன் நள்ளிரவில் ஊர் சுற்றிய கோஹ்லி இந்நிலையில் பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா தனது காதலர் விராட் கோஹ்லியை சந்திக்க முடிவு செய்தார். கோஹ்லி தற்போது மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். எனவே காதலனை பார்ப்பதற்காகவே அனுஷ்கா மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளார். நேற்று, முதல் நாள் ஆட்டம் முடிந்தபின்னர் விராட் கோஹ்லி, மெர்ல்போர்னில் அனுஷ்கா ஷர்மா தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாகவும், இரவு முழுவதும் இருவரும் மெல்போர்ன் சாலையை சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைபடங்கள் இனையதளத்தில் பரவியுள்ளது.

 

மேலும் இவர்களை மெல்போர்ன் சாலையில் பார்த்த ஒருவர் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மறுநாள் போட்டியில் விளையாட உள்ள நிலையில் இரவு முழுவதும் நடிகையுடன் ஊர்சுற்றிய விராட் கோஹ்லி மீது கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட் கோஹ்லி தனது காதலி அனுஷ்காவுடன் ஜோடியாக பல இடங்களில் சுற்றி திரிந்தார். அந்த தொடரின்போது, அவரது பேட்டிங் திறமை பாதிக்கப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/virat-kohli-have-anushka-company-at-boxing-day-test-at-mcg-217838.html

  • தொடங்கியவர்

ரஹானே, கோலி சதம்: எழுச்சியுடன் தொடங்கி பின்னர் சொதப்பிய இந்தியா 462 ரன்கள் குவிப்பு
 

 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா, 8 விக்கெட்டுகளை இழந்து 462 ரன்களை எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவை விட இந்தியா 68 ரன்கள் பின் தங்கியுள்ளது.

தேநீர் இடைவேளை வரை வெகு சிறப்பாக இருந்த இந்திய அணியின் ஆட்டம், ரஹானே வீழ்ந்த பின் மொத்தமாக மாறியது. ரஹானே 147 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தொடர்ந்து வந்த ராகுல் (3), தோனி (11), அஸ்வின் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் கோலி மட்டும் பொறுமையாக ஆடி 242 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார்.

அஸ்வின் விக்கெட்டைத் தொடர்ந்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷமி, பொறுப்பாக ஆடி, கோலிக்கு துணை நின்றார். இன்றைய ஆட்ட த்தின் கடைசி ஓவரில், ஜான்சனின் பந்தில் கோலி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டோடு இன்றைய நாள் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 462 ரன்களை எடுத்திருந்தது. கோலி ஷமி 9 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸி. அணியின் ரயன் ஹாரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவை விட இந்தியா 68 ரன்கள் பின்தங்கியுள்ளது.

 

முன்னதாக இன்றைய ஆட்டத்தை 108 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே புஜாராவை 25 ரன்களுக்கு இழந்தது. நிலைத்து ஆடி வந்த முரளி விஜய் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் கோலி இணை வெகு சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டனர். ரஹானே விரைந்து ஆடி 127 பந்துகளிலேயே சதத்தை எட்டினார். மறுமுனையில் ஆடி வந்த கோலியும், லயான் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி 166 பந்துகளில் சதத்தைக் கடந்தார். ரஹானே ஆட்டமிழக்கும் முன் வரை, இந்த இணையின் பார்ட்னர்ஷிப்பில் 262 ரன்கள் சேர்ந்தது. இந்தியா - ஆஸ்திரேலிய ஆட்டங்களில், இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-462-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6732543.ece

  • தொடங்கியவர்

சீண்டினார்  ஜான்சன்...சீறினார் கோஹ்லி
டிசம்பர் 28, 2014.

 

மெல்போர்ன்: விராத் கோஹ்லியை வீணாக உசுப்பேற்றினார் ஜான்சன். இவரது உடலை நோக்கி பந்தை ஆவேசமாக எறிந்தார். இதற்கு பதிலடியாக சதம் அடித்து அசத்தினார் கோஹ்லி.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், 83வது ஓவரை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சன் வீசினார். இதன் இரண்டாவது பந்தை இந்தியாவின் கோஹ்லி அடித்தார். பந்தை பிடித்த ஜான்சன், ‘ரன்–அவுட்’ செய்வதற்காக ‘ஸ்டெம்ப்சை’ நோக்கி எறிந்தார். ஆனால் பந்து விராத் கோஹ்லியின் உடலில் பட்டது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கோஹ்லியிடம், ஜான்சன் மன்னிப்பு கேட்டார். இந்த ஓவரின் கடைசி பந்தை ‘பவுண்டரிக்கு’ விரட்டிய கோஹ்லியிடம், ஜான்சன் ஏதோ கூறினார். இதனால் இருவருக்கும் வார்த்தை போர் முற்றவே, அம்பயர் கெட்டில்புரூக், கோஹ்லியை சமாதானம் செய்தார். அதன்பின், இவர்கள் இருவரும் அடிக்கடி முறைத்துக் கொண்டனர்.   

    

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:

 

ஜான்சன் எறிந்த பந்து என் மீது பட்ட போது மிகவும் கோபமடைந்தேன். அப்போது அவரிடம், ‘அடுத்த முறை என் மீது எறிய முயற்சிக்க வேண்டாம், ‘ஸ்டெம்ப்சை’ நோக்கி எறியவும்’ எனக் கூறினேன். அப்போதிருந்தே ஜான்சன் உள்ளிட்ட சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் வார்த்தை போர் ஆரம்பமானது.

அவர்கள் என்னை ‘அடக்கமில்லாத குழந்தை’ என கேலி செய்தனர். ஜான்சனுக்கு பேட்டிங்கில் மூலம் பதிலடி கொடுக்க முடிவு செய்தேன். நேற்றைய ஆட்டத்தில் இவரது ஓவரில் சராசரியாக 5 ரன்கள் வரை எடுத்ததால், நெருக்கடியுடன் காணப்பட்டார்.                  களத்தில் எதிரணி வீரர்களுடன் வார்த்தை போரில் ஈடுபடுவது குறித்து கவலையில்லை. இது, போட்டியில் சாதிக்க உதவியாக இருக்கும். இதனால் தான் மெல்போர்ன் டெஸ்டில் 169 ரன்கள் எடுக்க முடிந்தது.    

 

             

தற்போது ஆஸ்திரேலிய அணி தொடரில் 2–0 என முன்னிலையில் உள்ளது. இதனால் இவர்கள் எதிரணியினருடன் வம்பிழுப்பார்கள். ஒருவேளை தொடர் 1–1 என சமநிலையில் இருந்திருந்தால், இப்படி செய்வார்களா? கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் அமைதியாகவே காணப்பட்டனர். அப்போது அதிகளவில் வார்த்தை போர் இல்லை.                 

மரியாதை இல்லை: ஆஸ்திரேலிய அணியில் உள்ள ஒரு சில வீரர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர்களுக்கு நான் மரியாதை கொடுப்பேன். ஆனால் ஒரு சிலர் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. பின், அவர்களுக்கு  நான் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும். தவிர நான் இங்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக மட்டுமே வந்துள்ளேன். மற்றவர்களிடம் இருந்து மரியாதை பெறுவதற்கு அல்ல.

 

நேற்றைய ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர் ரகானேவின் ஆட்டம் அருமையாக இருந்தது. எனக்கு பின் களமிறங்கிய இவர், முதலில் சதம் அடித்தது ஆச்சர்யம் அளித்தது. தவிர இவர், ஜான்சன் வீசிய பந்துகளை எதிர்கொண்டவிதம் பாராட்டுக்குரியது. சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’ கிடைக்கும் போது எந்த ஒரு பவுலரையும் எளிதில் சமாளித்து விடலாம். அடுத்த முறை இதுபோல வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இரட்டை சதம் அடிக்க முயற்சிப்பேன்.                 

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419786793/JohnsonKohliVerbalSpatIndiaAustraliaTestCricket.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெல்போர்ன் டெஸ்ட்: நெருக்கடியில் இந்திய அணி
டிசம்பர் 28, 2014.

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில், இந்திய அணி நெருக்கடியான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிந்த நிலையில் இந்திய அணி 0–2 என பின் தங்கியுள்ளது.

 

இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், மெல்போர்னில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 530 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 462 ரன்கள் எடுத்து, 68 ரன்கள் பின்தங்கி இருந்தது.

 

இந்தியா ‘ஆல் அவுட்’:

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சில நிமிடத்தில் உமேஷ் யாதவ் ‘டக்’ அவுட்டானார். அடுத்து வந்த இஷாந்த் சர்மாவும், ரன் கணக்கைத் துவங்காமல் திரும்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 465 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷமி (12) அவுட்டாகாமல் இருந்தார்.

 

ஆஸி., முன்னிலை:

65 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணியின் வார்னர் 40 ரன்கள் எடுத்தார். உணவு இடைவேளையின் போது 1 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்து, 155 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

அப்போது, திடீரென பலத்த காற்று வீசியது. மேகங்கள் திரண்டு வந்ததால், மழை பெய்யும் நிலை ஏற்பட, ஆடுகளம் தார்ப்பாயினால் மூடப்பட்டது.

இதன் பின் வாட்சன் (17), ஸ்மித் (14) அவுட்டாகினர். இத்தொடரில் நான்காவது முறையாக அரைசதம் அடித்த  ரோஜர்ஸ் 69 ரன்னுக்கு அவுட்டானார்.

பர்ன்ஸ் (9), ஹாடின் (13), ஜான்சன் (15) நிலைக்கவில்லை. மறுமுனையில் ஷான் மார்ஷ் அரைசதம் அடித்தார்.

நான்காவது நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்திருந்தது. மார்ஷ் (62), ஹாரிஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

தற்போது, 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, நாளை ‘டிக்ளேர்’ செய்யும் பட்சத்தில், இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெறுமா அல்லது போட்டியை ‘டிரா’ செய்யுமா என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், ஏற்கனவே 0–2 என, தொடரில் பின் தங்கியுள்ள இந்திய அணிக்கு, வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளதால், நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/12/1419787712/AustraliaIndiaThirdTestRahaneViratKohli.html

 

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா 326 ரன்கள் முன்னிலை: சுவாரசியமான கட்டத்தில் மெல்போர்ன் டெஸ்ட்

 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று காலை 462 ரன்களுடன் தொடங்கிய இந்திய அணியின் ஆட்டம் 15 பந்துகள் மட்டுமே தாங்கியது. இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்குச் சுருண்டு ஆஸ்திரேலியாவுக்கு 65 ரன்கள் முன்னிலை கொடுத்தது. எதிரணியினரின் கீழ் வரிசை பேட்ஸ்மென்களை 200 ரன்களுக்கும் மேல் அடிக்க விடும் இந்திய அணி 108-வது ஓவரில் 409/3 என்ற நிலையிலிருந்து 129-வது ஓவரில் 465 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. 56 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் சாய்ந்தது.

 

இதனையடுத்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா வார்னர் மூலம் அதிரடித் தொடக்கம் கண்டது. வழக்கம் போல் பீல்டைப் புரிந்து கொள்ளாத பந்து வீச்சு, பந்து வீச்சை புரிந்து கொள்ளாத கள அமைப்பு இவற்றினால் வார்னர் 42 பந்துகளில் 6 சுலபமான பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து கடைசியில் அஸ்வினின் அபாரமான பந்து ஒன்றில் எல்.பி. ஆகி வெளியேற்றப்பட்டார். 14.2 ஓவர்களில் 57 ரன்கள் எடுக்கப்பட்டது.

 

வாட்சனும், ராஜர்ஸும் உணவு இடைவேளையின் போது ஸ்கோரை 90 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனால் 22 ஓவர்களில் 90 ரன்கள் என்பதுதான் முக்கியம்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மழை காரணமாக ஆட்டம் 85 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பிறகு ஆட்டம் தொடங்கிய போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின.

17 ரன்கள் எடுத்த வாட்சன் இசாந்த் சர்மாவின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவர் நோ-பாலுக்காக சரி பார்த்த தருணங்கள் இசாந்துக்கு கவலையாக அமைந்தது ஏனெனில் இந்தப் போட்டியில் அவரது முதல் விக்கெட்டாகும் இது.

 

பிறகு ராஜர்ஸ் தனது அரைசதத்தை எட்டினார். ஆனால், இந்த முறை அபாய பேட்ஸ்மென்/கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 14 ரன்கள் எடுத்த நிலையில் உலக கிரிக்கெட்டில் ஒரு மட்டையான ஃபிளாட் பிட்சில் லெக் ஸ்லிப் வைத்து உமேஷ் யாதவ்வை தோனி பந்து வீசச் செய்த விசித்திரம் நடந்தது. ஆனால் என்ன அதிர்ஷ்டம்! யாதவ் வீசிய மோசமான லெக் திசைப் பந்தை பிளிக் செய்ய முயன்று ரஹானேயின் அபாரமான கேட்சிற்கு ஸ்மித் வெளியேறினார்.

 

பவுன்ஸ் அதிகமாக இருக்கும் கீரீன் டாப் விக்கெட்டுகளில்தான் லெக் ஸ்லிப் வைக்கப்படுவதுண்டு. அல்லது ஸ்பின்னர்களுக்கு லெக் ஸ்லிப் வைக்கப்படுவதுண்டு. பவுன்ஸ் விக்கெட்டுகளில் அது கூட லெக் ஸ்லிப்பாக இருக்காது ஷாட் ஃபைன்லெக் இடத்தில்தான் பீல்டர்கள் நிறுத்தப்படுவதுண்டு அதெல்லாம் தாம்சன் போன்ற பவுலர்கள் இருந்த காலத்தில். ஹூக், புல் ஷாட்கள் சரியாக மட்டையில் சிக்கவில்லை எனில் ஷாட் பைன் லெக்கில் கேட்ச் ஆக வாய்ப்புண்டு. ஆனால் ஒரு மட்டையான பேட்டிங் பிட்சில் உமேஷ் யாதவ்வின் ஒரு சுமாரான வேகத்திற்கு லெக் ஸ்லிப்பை நிறுத்தி அதில் அதிர்ஷ்டவசமாக வெற்றியும் கண்டார் தோனி.

 

ஜோ பர்ன்ஸ் களமிறங்க ராஜர்ஸ் 69 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் பந்து ஒன்றை இரட்டை மன நிலையில் ஆடி பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடில் பட்டு பவுல்டு ஆனது. தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 174/4 என்று இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 9 ரன்கள் எடுத்த அறிமுக வீரர் ஜோ பர்ன்ஸ், இசாந்த் வீசிய பந்தை எட்ஜ் செய்ய தோனி அபாரமான கேட்ச் ஒன்றை பிடிக்க வெளியேறினார்.

பிராட் ஹேடின் 13 ரன்கள் எடுத்து தோனி-யாதவ் கூட்டணியின் லெக் திசை பொறிக்கு சிக்கி ஆட்டமிழந்தார். ஆனால் இம்முறை கேட்ச் பிடித்தது தோனி. நடுவர் தீர்ப்பின் மீது ஹேடினுக்கு திருப்தி இல்லை.

 

கடைசியாக மிட்செல் ஜான்சன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி வீசிய எகிறும் பவுன்சருக்கு மிட்விக்கெட்டில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது. மீண்டும் ஜான்சன் மீது இந்திய வீரர்களின் ஏகவசனம். 5ஆம் நாள் அவர் பயங்கரமாக வீச இன்றே உத்வேகம் அளித்து விட்டார்கள் இந்திய வீரர்கள்.

234/7 என்ற நிலையில் ஹாரிஸ் களமிறங்கி 8 ரன்கள் எடுத்தார். மறு முனையில் ஷான் மார்ஷ் 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

இந்திய அணியில் உமேஷ் யாதவ் ஓவருக்கு 5.21 ரன்கள் வீதத்தில் விட்டுக் கொடுத்தார். மொகமது ஷமியும் ரன்களை வாரி வழங்கினார். இசாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் 2.6 ரன்களுக்குக் குறைவாக விட்டுக் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

மீண்டும் 176/5 என்ற நிலையிலிருந்து கடைசி 2 விக்கெட்டுகள் 85 ரன்கள் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று 85 நிமிட நேர ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், குறைவாக வீசப்பட்ட ஓவர்களை நாளை ஈடுகட்டும் விதமாக ஆட்டம் அரை மணி முன்னால் தொடங்குகிறது. அந்த அரைமணியில் ஆஸ்திரேலிய எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை அடிக்கப் பார்க்கும். எப்படியும் 375-380 ரன்களைக் கையில் வைத்துக்கொண்டு இந்திய அணியிடம் துரத்தலை விட வாய்ப்புள்ளது.

மேலும் ஒரு சுவாரசியமான நாள் காத்திருக்கிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-326-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article6735369.ece

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்த்திரேலியாவில் 4 போட்டிகளடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு போட்டிகள் ஏற்கனவே அவுஸ்த்திரேலிய அணியின் வெற்றியுடன் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டி மெல்பேர்ன் நகரில் பொக்ஸிங் டே அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்த மூன்றாவது போட்டியில் மூன்றாம் நாளான நேற்று இந்திய அணியின் வீரட் கோலியும், அகிஞ்செய் ரகானேயும் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும்பொழுது அவுஸ்த்திரேலிய வேகப் பந்துவீச்சாளார் மிக்கெல் ஜோன்ஸன் பந்து வீசிக்கொண்டிருந்தார். ஒரு ஓவரின்போது, வீரட் கோலியினால் தடுத்தாடப்பட்ட பந்து ஜோன்சனின் கைக்கு வரவே, கோலி விக்கெட் கோட்டிற்கு வெளியே இருப்பதை அவதானித்த ஜோன்சன், பந்தினை வேகமாக விக்கெட்டினை நோக்கி அவர் ரண் அவுட் ஆகும்படி வீசி எறிந்தார். ஜோன்சன் பந்தை விக்கெட்டினை நோக்கி எறியப்போவதை அவதானித்த கோலி, விக்கெட்டினை மறைத்தபடி தனது எல்லைக் கோட்டிற்குள் ஓடினார். இதனால் பந்து அவர்மீது பட்டு, அவர் கீழே விழுந்தார்.

 

உடனேயே ஜோன்சன் அவரிடம் மன்னிப்புக் கேட்டு, நான் உன்னை நோக்கி எறியவில்லை, விக்கெட்டிற்குத்தான் எறிந்தேன் என்று கூறினார். ஆனால் அவர் சொல்வதைக் கேட்க மறுத்த கோலி, நீ எனக்குத்தான் எறிந்தாய், முடிந்தால் என் மட்டைக்கு எறி எனக்கு எறியாதே, உன் விளையாட்டெல்லாம் என்னிடம் எடுபடாது என்று பொறிந்து தள்ளினார். அதன்பிறகு இருவரும் பரஸ்பரம் வசைகளைப் பரிமாறிகொண்டனர்.

 

போட்டி முடிந்து நிருபர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கோலி பின்வருமாறு கூறினார்.

 

" அவர் பந்தினை எறிந்தது என்னை மிகவும் ஆத்திரப்பட வைத்தது. முடிந்தால் எனது விக்கெட்டினை நோக்கி எறி, என்னை நோக்கி எறியாதே. இதெல்லாம் என்னிடம் செல்லாது" என்று அவனிடம் கூறினேன். அவர்களுக்குச் சரியான செய்தி சொல்லப்படவேண்டும். தேவையில்லாதவர்களின் சொற்களையும், வசவுகளையும் கேட்க நான் அங்கு போகவில்லை. நான் அங்கே போனது விளையாடுவதற்கு. எவரினதும் நன்மதிப்பையோ அல்லது மரியாதையையோ பெறுவதற்கு அல்ல. என்னை மதிக்கத் தெரியாவர்களுக்கு மரியாதை என்ன வேண்டிக்கிடக்கிறது ?

 

"அவுஸ்த்திரேலியர்களின் மனோநிலையே என்னை திறமையாக ஆடத் தூண்டியது. இதனாலேயே நான் அவர்களுக்கெதிராக 5 சதங்களைக் குவித்திருக்கிறேன். அவர்கள் நாள்முழுதும் என்னை நோக்கி ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் என்னை மிதமிஞ்சிய செல்லம் கொடுக்கப்பட்டவன், அதனால் தலைக்கணம் பிடித்தவன் என்று அழைத்தார்கள். நான் அப்படிப்பட்டவந்தான். நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், அது எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களுடனான வாக்குவாதம் என்னை திறமையாக ஆட உதவுகிறது. அவுஸ்த்திரேலியர்களுக்கு எதிராக ஆடுவதை நான் விரும்புகிறேன். ஏனென்றால் அவர்களுக்கு விளையாட்டின்போது நிதானமாக இருக்க முடியாது. ஆகவேதான் நான் அவர்களை வெறுப்பேற்றும் சம்பாஷணைகளில் ஈடுபட்டு எனது திறமையை உயர்த்திக் கொள்கிறேன். அவர்கள் இதிலிருந்து எந்தப் பாடத்தையுமே கற்றுக்கொண்டவர்கள்போல் தெரியவில்லை ".

 

"நான் வேறு நாட்டு அணியினருக்கு எதிராக விளையாடும்போதும், அவர்கள் எவ்வளவு நிதானமாக ஆடும்போது, எப்படியாவது ஓரிருவரை ஆத்திரமடையைச் செய்துவிடுவேன். அவர்களைக் குறிவைத்து எனது சம்பாஷணைகளைத் தொடக்குவேன். அவர்களும் அதற்குள் இழுபட்டு விடுவார்கள்" என்று உதட்டில் ஒரு சிறிய நக்கலுடன் சொன்னார்.

 

"அவர்கள் இரண்டு போட்டிகளில் வென்றுவிட்ட திமிரில்த்தான் இந்தியர்கள் முக்கிய அழுத்தக் கட்டங்களில் சோடை போவதாகக் கூறுகிறார்கள். நல்லது, அப்படியே இருக்கட்டும். இந்த போட்டிகளில் 1 - 1 என்கிற அடிப்படையில் முடிந்திருந்தால் அவர்கள் இதையேதான் சொல்லியிருப்பார்களா என்று பார்க்கலாம்".

 

 

"இது வினோதமானது. நீங்கள் வெல்லும்போது எதையும் சொல்லலாம். ஆனால் தோற்கும்போது, நீங்கள் உங்களை நிரூபிக்க வேன்டும், நீங்கள் சொல்வதை களத்தில் செய்துகாட்ட வேண்டும். இவர்களுடன் நாம் இந்தியாவில் விளையாடியபோது நாம் எது சொன்னாலும், எவருமே வாய் திறக்கவில்லை. இது ஆச்சரியமானது. ஆனால் நாங்கள் இரு போட்டிகளிலும் தோற்றபோதும் அவரகளுக்கு நிகராக விளையாடினோம், பேசினோம், இந்திய அணி என்றால் இப்படித்தான் என்று காட்டியிருக்கிறோம்".

 

நீங்களும் இப்படித்தானே ஜோன்ஸன் துடுப்பெடுத்தாடும்போது கேலி செய்தீர்கள் என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, " அவர் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார். அவரின் மேல் எந்த அழுத்தமும் இருக்கவில்லை. அவரை ஓட்டங்களிக் குவிக்குமாறு எவரும் கட்டாயப்படுத்தவில்லை. அது அவரது வேலையுமில்லை. அவரது வேலை பந்து வீசுவது மட்டும்தான். ஆனால் அவர் அந்த வேலையச் செய்யாது பந்து வீச்சில் ஓவர் ஒன்றிற்கு 4.7 ஓட்டங்களை வாரி இறைத்துக்கொண்டிருந்தார். ஒரு விக்கெட்டினைத்தானும் நாள்முழுதும் பந்து வீசியும் அவரால் பெற முடியவில்லை. ஆகவேதான் நான் வேண்டுமென்றே அவரை சம்பாஷணைக்குள் இழுத்து விளையாடிக் கொண்டிருந்தேன். ஒருமுறை மட்டும் பேசிவிட்டு பின்னர் பின்வாங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. பேசியதை செயலிலும் காட்ட வேண்டும். ஆகவேதான் அவர் பந்துவீச வரும்போதெல்லாம் அவரை சம்பாஷணைக்குள் இழுப்பது மட்டுமல்லாமல், அவரைக் குறிவைத்து ஆடவும் செய்கிறேன். அவருடன் விவாதிப்பது பற்றி எனக்கொரு பிரச்சினையுமில்லை, அவருக்கும் இது தேவையாக இருக்கிரதென்றுதான் நான் நினைக்கிறேன்". 

 

 

 

 

 

 

201815.jpg

Mitchell Johnson apologises after hitting Virat Kohli while he was aiming for the stumps 

இறுதியாக கோலி ஜோன்சனின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.

 

"எனக்கு எனது துடுப்பாட்டத் திறமையில் முழு நம்பிக்கையும் இருந்தது. அதனால்த்தான் நான் அவருடன்  பின்வாங்காது தொடர்ந்தும் மோதிக்கொண்டிருந்தேன். அதுமட்டுமல்லாமல் அடுத்த பக்கத்தில் என்னுடன் விளையாடிக் கொன்டிருந்த ரகானேயும் ஜோன்சனின் பந்துவீச்சைத் துவசம் செய்துகொண்டிருந்தது, எனது வேலையைச் சுலபமாக்கியது. நான் பந்துவீச்சாளர்களிடம் தர்க்கித்துக்கொண்டிருக்க ரகானே அவர்களை அடித்தாடிக்கொண்டிருந்தார். இப்படித்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்பட வேண்டும்".

 

"சில அவுஸ்த்திரேலிய வீரர்களுக்கு நான் மரியாதை கொடுப்பேன். அவர்களுடன் நகைச்சுவையாக உரையாடுவேன். ஆனால் என்னை மதிக்கத் தெரியாதவர்களுக்கு நான் மரியாதை குடுக்கப்போவதில்லை. நான் இங்கே வந்தது மற்றையவர்களின் மரியாதைக்கோ அல்லது நன்மதிப்பிற்கோ அல்ல. நான் விளையாடவே வந்திருக்கிறேன். முடிந்தால் எனது விளையாட்டை ரசியுங்கள், பிடிக்கவில்லை என்றால் அதுபற்றி நான் கவலைப்படப் போவதில்லை. என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி நான் ஒருபோதுமே கவலைப்பட்டது கிடையாது"

 

என்று கர்வம் மேலிடக் கூறியிருந்தார்.

 

இதுபற்றிக் கருத்து தெரிவித்த முன்னால் இந்தியப் பந்துவீச்சாளரும், முக்கிய கிரிக்கெட் வர்ணனையாளருமான அஜித் அகர்கார், "கோலி விவரம் இல்லாது பேசுகிறார். அவரது பேச்சில் கண்ணியமில்லை. மைதானத்தில் நடந்ததை பத்திரிக்கையளர் மாநாட்டில் வந்து பெரிதுபடுத்திக் கூறியிருக்கத் தேவையில்லை. இது அவரது பக்குவமற்ற போக்கைத்தான் காட்டுகிறது. இந்தியாவின் வருங்கால தலைவராக பொறுப்பேற்க வேண்டியவர் பேசும் பேச்சாக இது தெரியவில்லை" என்று வருத்தத்துடன் கூறினார்.

 

http://www.espncricinfo.com/ci/content/video_audio/814669.html

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

வீரட் கோலி - மமதை பிடித்த வட இந்தியன் !

 

http://www.cricket.com.au/news/feature/virat-kohli-mitchell-johnson-blowing-kisses-sledging-boxing-day-test-mcg/2014-12-28

  • தொடங்கியவர்

வீரட் கோலி - மமதை பிடித்த வட இந்தியன் !

 

http://www.cricket.com.au/news/feature/virat-kohli-mitchell-johnson-blowing-kisses-sledging-boxing-day-test-mcg/2014-12-28

 

எதை வைத்து மமதை பிடித்த வட இந்தியன் என்கிறீர்கள்?

 

மைதானத்தில் நடந்ததை ஊடகவியாளர் சந்திப்பில் கதைத்ததையா?  அப்படி என்றால் ஆஸ்திரேலியா வீரர்கள் அப்படி கதைப்பதில்லையா?

 

உங்களுக்கு என்னக்கு எல்லோரும் ஒரு வித திமிர், மமதை இருக்கு :o  அது கோலிக்கும் இருப்பதில் என்ன தவறு? அல்லது இந்திய கிரிக்கெட்

 

வீரர்களுக்கு இது எல்லாம் இருக்க கூடாது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மட்டும் இருக்கலாம் என்கிறீர்களா? :lol:

  • தொடங்கியவர்

இன்னும் ரன்கள் தேவை என்கிறார் டேவிட் வார்னர்
.

 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ரன்கள் போதாது இன்னும் ரன்கள் தேவை என்கிறார் டேவிட் வார்னர்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இதே போன்ற சூழ்நிலையில் இந்தியா 350 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை வெற்றி பெறும் நோக்கத்துடன் துரத்தி கடைசியில் கோலி தனது அபாரமான 141 ரன்களில் அவுட் ஆக இந்தியா 315 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. இது ஆஸ்திரேலிய வீரர்கள் மனதில் இருந்து வருகிறது.

இந்நிலையில், டேவிட் வார்னர் கூறும்போது, “அடிலெய்ட் டெஸ்டில் இந்திய அணி எப்படி எழுச்சி பெற்று வெற்றிக்கு ஆடியது என்பதைக் கண்டோம். அதிர்ஷ்டவசமாக கோலி அவுட் ஆனதால் வெற்றி கிட்டியது இல்லையெனில் அந்த டெஸ்ட் போட்டி வேறு கதையாகியிருக்கும். இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றிருக்கும்.

 

கோலியும் ரஹானேவும் அதிர்ஷ்டத்துடன் ஆடினாலும் பெரிய அளவில் ரன்களை ஜோடி சேர்ந்து எடுக்கும் திறமை உடையவர்கள் என்பது தெரிந்தது. எங்கள் மனதில் அவர்கள் ஆடிய இன்னிங்ஸ் இடம்பிடித்துள்ளது. தன்னம்பிக்கையான கிரிக்கெட்டை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே நாளை 10 விக்கெட்டுகளை வீழ்த்தவே நாங்கள் போராடுவோம்.

 

ரன்களை வறளச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை வீழ்த்த முயற்சி செய்வோம், பந்து கொஞ்சம் மென்மையான பிறகு ரிவர்ஸ் ஸ்விங் ஆகும், இதுவே முக்கியமான தருணம். 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்கான சந்தர்பங்களை நாங்கள் உருவாக்குவோம்” என்றார் வார்னர்.

இதனையடுத்து இந்திய ஸ்பின்னர் அஸ்வின் கூறும்போது, “கடைசி நாளில் எந்த ஒரு ஸ்கோரும் சற்று கடினமே. கடினமான வேலைதான் ஆனால் அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம், வெற்றி பெறவே இங்கு வந்திருக்கிறோம். தன்னம்பிக்கையுடன் ஆடி எதுவரை செல்ல முடியுமோ அதுவரை செல்வோம்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article6735730.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

நான்காம் நாள் ஆட்டத்தில் வீழ்ந்த ஆட்டக்காரர்கள்.

  • தொடங்கியவர்

நீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. வீரர்களிடம் கோலி
 

 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னை வெறுப்பது தனக்குப் பிடித்திருக்கிறது என்கிறார்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி ஒரு ஷாட்டை அடித்து கிரீஸைத் தாண்டி வந்தார். பந்தை பிடித்த பவுலர் ஜான்சன் ரன் அவுட் செய்வதற்காக பந்தை கோலி முனைக்கு எறிந்தார். ஆனால் பந்து கோலியைத் தாக்கியது. இதனையடுத்து ஜான்சனுக்கும் கோலிக்கும் வாக்குவாதம் முற்றியது. “நீங்கள் ரன் அவுட் செய்யவில்லை, என்னைத் தாக்கவே பந்தை விட்டெறிந்தீர்கள்” என்று விராட் கோலி ஜான்சனிடம் கூறியதாக தெரிவித்தார்.

 

இது குறித்து கோலி கூறும் போது, “வாக்குவாதம் அப்போது தொடங்கவில்லை, நான் களமிறங்கியது முதல் என்னை ‘வீணாய்ப்போன பிள்ளை’ என்று அழைத்து வந்தனர். ஆனால், நான் கூறுகிறேன், நான் அப்படித்தான்...உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை அது தான் நான் விரும்புவது. களத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்துவது பற்றி எனக்கு கவலையில்லை, அது எனக்கு சாதகமாக இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவது எனக்குப் பிடித்திருப்பதற்கு காரணம் என்னவெனில், அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. களத்தில் வாக்குவாதம் செய்வது பற்றி நான் கவலைப்படவில்லை. அது எனக்கு உற்சாகத்தை அளித்தது, அது என்னில் உள்ள சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணருகிறது. எனவே, அவர்கள்தான் பாடம் கற்கவில்லை என்று நினைக்கிறேன்.

 

அந்த அணியினர் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளனர். ஆனால் இதுவே 1-1 என்று இருந்திருந்தால் அவர்களின் வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க சுவாரசியமாக உள்ளது.” என்று கூறியுள்ளார் கோலி.

ஆனால், ஜான்சனுடன் அந்த வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் 2 கேட்ச்களை கொடுத்தார். கோலியின் கவனம் சிதறியது என்றே தெரிந்தது. உண்மையில் ஜான்சன் பந்தை விட்டெறிந்து இவர் மீது பட்டவுடன் உடனடியாக மன்னிப்பு கேட்டார். வாக்குவாதத்திற்குப் பிறகு கோலி தனது கவனத்தை மீண்டும் கொண்டுவர சற்றே சிரமப்பட்டார் என்றே தெரிந்தது.

 

அதுமட்டுமல்ல, எதிர்முனையில் கோலியை விடவும் ஆக்ரோஷமாக ஆடிய ரஹானேயின் கவனத்தையும் கோலியின் வாக்குவாதம் சிதறடித்தது உடனடியாகவே தெரிந்தது.

'ஓ! என் நண்பர்களே நண்பர் என்பவர் இல்லை' என்று பண்டைய கிரேக்க தத்துவ மேதை அரிஸ்டாட்டில் முரண்நகையுடன் குறிப்பிட்டதை பகடி செய்யும் விதமாக 19-ஆம் நூற்றாண்டு கலகச் சிந்தனையாளரும் தத்துவ மேதையுமான பிரெடெரிக் நீட்ஷே, “ஓ! பகைவர்களே, பகைவர் இல்லை” என்றார்.

 

இந்த இரண்டு மகாவாக்கியங்களும் தங்களுக்குள்ளேயும் இடையேயும் ஒன்றுக்கு ஒன்று முரணான செய்தியை தன்னகத்தே ஒரே மூச்சில் கொண்டுள்ளது.

இரண்டு கூற்றுக்களும் சொல்ல முடியாததைச் சொல்ல முயற்சி செய்கிறது. அரிஸ்டாடில் நட்புக்கு ஆதரவாக பேசுகிறாரா? நீட்ஷே நட்புக்காகப் பேசுகிறாரா என்பதெல்லாம் முடிவு காண முடியா நீண்ட நெடும் விவாதங்கள்.

 

இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு வாக்கியத்தை நாம் உருவாக்கினால், “உலகில் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை’ என்று நடுநிலைவாத முடிவை எடுக்கலாம்.

ஆஸ்திரேலிய இங்கிலாந்து வீரர்களின் நடத்தை அரிஸ்டாடிலின் வாக்கியத்தையும், கோலியின் நடத்தையும் கூற்றும் நீட்ஷே வாக்கியத்தை ஒத்திருப்பது போல் தெரிகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/article6735529.ece

  • தொடங்கியவர்

சூப்பர் கீப்பர்’ தோனி
டிசம்பர் 29, 2014.

 

மெல்போர்ன்: இந்திய கேப்டன் தோனி, விக்கெட் கீப்பராக அசத்தி வருகிறார்.

மெல்போர்ன் டெஸ்டில் இதுவரை 8 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார் தோனி. இதற்கு முன் பெர்த் (2008, ஆஸி.,),  தாகா (2010, வங்கதேசம்), மும்பை (2011, வெ.இண்டீஸ்) டெஸ்டில் இதுபோல் சாதித்தார். இதன் மூலம் நான்கு டெஸ்டில் தலா 8 வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.      

 

* நயன் மோங்கியா இரு முறை (டர்பன்–1996, கோல்கட்டா–1999) இந்த இலக்கை எட்டியுள்ளார்.                  

* இன்று கூடுதலாக 2 ‘கேட்ச்’ செய்தால், இரு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட் சரிவுக்கு காரணமாக அமைந்த முதல் இந்தியர், உலகளவில் 5வது விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெறலாம்.

 

4 பவுலர்கள்                 

நேற்று இஷாந்த் (2), உமேஷ் யாதவ் (2), அஷ்வின் (2), முகமது ஷமி (1) ஆகிய நான்கு இந்திய பவுலர்களும் விக்கெட் வீழ்த்தினர். இத்தொடரில் இதுபோல 4 பவுலர்களும் விக்கெட் சாய்ப்பது இது தான் முதன் முறை.   

              

4 அரைசதம்                 

கடந்த 10 ஆண்டுகளில் வார்னர், காடிச், பில் ஜாக்சிற்கு அடுத்து, தொடர்ந்து நான்கு அரைசதம் விளாசிய, 4வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார் ரோஜர்ஸ் (55, 55, 57, 69).                 

 

7                                   

நேற்று வாட்சனை வெளியேற்றிய இஷாந்த் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் வாட்சனை, அதிக முறை அவுட்டாக்கிய வீரர்களில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (7) சாதனையை சமன் செய்தார். முதலிடத்தில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் (8) உள்ளார். இஷாந்த் சர்மா பவுலிங்கில் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், அதிகபட்சமாக 8 முறை அவுட்டாகியுள்ளார்.      

           

27                             

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது இன்னிங்சில், 300 அல்லது அதற்கும் மேலான ரன்களை ‘சேஸ்’ செய்து வெற்றி பெற்றது 27 முறை தான் நடந்துள்ளது.      

            

301                 

நேற்று வாட்சனை அவுட்டாக்கிய இஷாந்த் சர்மா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 300வது விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதுவரை 60 டெஸ்ட் (187 விக்.,), 75 ஒருநாள் (106), 8 ‘டுவென்டி–20’ போட்டிகளில் மொத்தம் 301 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419871420/DhoniCricketIndiaWicketKeeping.html

  • தொடங்கியவர்

 

3 வது  டெஸ்ட் 4ம்  நாள்

Dhoni retires from Test cricket

 

MS Dhoni has retired from Test cricket with immediate effect following the drawn Test against Australia at the MCG.

 

 

http://www.espncricinfo.com/ci/content/current/story/814979.html


MS Dhoni has retired from Test cricket with immediate effect following the drawn Test against Australia at the MCG. Virat Kohli will take over as India captain for the final Test of the series, which India has already lost, in Sydney.
 
Dhoni was batting on 24 when the Test was called off early - four overs were left and India had four wickets in hand - and he made no mention of his retirement during the customary captain's press conference at the end of the match. The announcement was made via a BCCI press release shortly after and it cited "the strain of playing all formats" as the reason.
 
"One of India's greatest Test captains under whose leadership India became the No. 1 team in the test rankings, MS Dhoni, has decided to retire from Test cricket citing the strain of playing all formats of cricket," the board said. "BCCI, while respecting the decision of MS Dhoni to retire from Test cricket, wishes to thank him for his enormous contribution to Test cricket and the laurels that he has brought to India. Virat Kohli will be the captain of the Indian team for the fourth and final Test against Australia to be played in Sydney."
 
  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள்.. சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி

 

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் 4வது பேட்ஸ்மேனாக இறங்கி அதிக ரன்களை குவித்த சாதனையில் சச்சினை முந்தி விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், விராட் கோஹ்லி 499 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்கள், ஒரு அரை சதம் ஆகியவை அடங்கும். ஆறு இன்னிங்சுகளில் ஆடியுள்ள கோஹ்லியின் பேட்டிங் சராசரி 83.16 ஆக உள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள்.. சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி 2007-08ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சுகளில் சச்சின் டெண்டுல்கர் 480 ரன்கள் எடுத்திருந்ததே அந்த நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் ஒன்றில் 4வதாக களமிறங்கி எதிர்தரப்பு நாட்டு வீரரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது. இப்போது கோஹ்லி அதை முறியடித்துள்ளார். சிட்னியில் இன்னுமொரு டெஸ்ட் பாக்கியுள்ளது என்பதால், கோஹ்லி எளிதாக 500 ரன்களை கடப்பார் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக 1977-78ல் குண்டப்பா விஸ்வநாத் 9 இன்னிங்சுகளில் 473 ரன்களும், மேற்கிந்திய தீவுகளின் லாரா 8 இன்னிங்சுகளில் 466 ரன்களும், இங்கிலாந்தின் கென் பாரிங்டன் 8 இன்னிங்சுகளில் 464 ரன்களும் எடுத்திருந்தனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/virat-kohli-breaks-sachin-tendulkar-s-record-australia-218046.html

  • தொடங்கியவர்

கோஹ்லி, ரஹானே பேட்டிங்கால் 3வது டெஸ்ட் டிரா.. தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

 

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இந்தியா நடுவே மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. விராட் கோஹ்லி-ரஹானே ஜோடி இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக பேட் செய்து இந்தியாவை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்தனர். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான போட்டித் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது இந்திய அணி. கோஹ்லி, ரஹானே பேட்டிங்கால் 3வது டெஸ்ட் டிரா.. தொடரை வென்றது ஆஸ்திரேலியா! இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்பட்ட 3வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் தொடங்கியது.

 

டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 530 ரன் குவித்தது. இந்த ரன்னுக்கு இந்தியா பதில் சொல்லட்டும் என்று கொக்கரித்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். இந்தியாவின் முதல் இன்னிங்சில் பிற வீரர்கள் வழக்கம்போல சொதப்பினாலும் விராட் கோஹ்லி 169 ரன்களும், ரகானே 147 ரன்களும் எடுத்து கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி தந்தனர். இருப்பினும் ஆஸ்திரேலியாவைவிட 65 ரன்கள் குறைவாக இருந்தபோது இந்தியா 465 ரன்னில் ‘ஆல்அவுட்' ஆனது. இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன் எடுத்து இன்று காலை டிக்ளேர் செய்தது.

 

ஆஸ்திரேலிய வீரர் மார்ஷ் 99 ரன்னில் அவுட்டானார். எனவே இந்தியாவுக்கு 384 ரன்கள் இலக்காக அமைந்தது. இமாலய ரன்னை ஒரே நாளில் துரத்தி பிடிப்பது கஷ்டம் என்பதால் ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் தடுப்பாட்டம் ஆட முயன்றனர். இருப்பினும் தவான் ரன் ஏதும் எடுக்காமலும், முரளி விஜய் 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதன்பிறகு விராட் கோஹ்லியும், ரஹானேவும் இணைந்து விக்கெட் சரிவில் இருந்து அணியை மீட்டனர். இக்கட்டான நேரத்திலும் சிறப்பாக ஆடிய கோஹ்லி 99 பந்துகளில் 54 ரன்கள் விளாசிவிட்டு ஹாரிஸ் பந்து வீச்சில் ஜோ பர்ன்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

ரஹானே 117 பந்துகளில் 48 ரன் எடுத்து ஹசில்வுட் பந்து வீச்சில் ஷான் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த ஜோடி 85 ரன்கள் எடுத்தது. பின் வரிசையில் களமிறக்கப்பட்ட புஜாரா 70 பந்துகளை சந்தித்து 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, ஆஸ்திரேலிய வெற்றிக்கு 4 விக்கெட்டுகளே தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கேப்டன் டோணியும், பவுலர் அஸ்வினும் இணைந்து தடுப்பாட்டம் ஆடி மேலும் விக்கெட் வீழ்வதை தடுத்தனர். இந்திய அணி 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஆட்டம் முடிய 4 ஓவர்கள் பாக்கியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தும், இந்திய கேப்டன் டோணியும் இணைந்து ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள சம்மதித்தனர். எனவே 4 ஓவர் எஞ்சியிருந்த நிலையிலேயே ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால், பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்டது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/australia-vs-india-third-test-ends-draw-218030.html

  • தொடங்கியவர்

24 பந்துகள் மீதமிருக்கையில் போட்டியை முடித்துக் கொண்டது: ஆஸி. ரசிகர்கள் ஏமாற்றம்
 

 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 70 ஓவர்களில் இந்திய அணிக்கு இலக்கு 384 ரன்கள். ஆனால் 66 ஓவர்களிலேயே ஆட்டம் டிரா என இரு அணித்தலைவர்களும் ஒப்புக் கொண்டு முடித்துக் கொண்டனர்.

இதில் கேப்டன் தோனியின் பங்கு ஒன்றுமில்லை. ஸ்மித் 24 பந்துகளை வீச முடிவெடுத்தால் இந்திய அணி ஆடியே ஆக வேண்டும். ஸ்மித் முடிவு ஏன் ஆச்சரியமளிக்கிறது எனில், மீதமுள்ள 4 இந்திய கீழ்வரிசை விக்கெட்டுகளை வீழ்த்த 24 பந்துகள் போதும் என்றே முந்தைய டெஸ்ட்கள் கூறுகின்றன.

 

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தன் கடைசி 3 விக்கெட்டுகளை 20 பந்துகளில் இழந்தது.

அடிலெய்ட் டெஸ்ட் 2-வது இன்னிங்சில் இந்தியா தனது கடைசி 3 விக்கெட்டுகளை 18 பந்துகளில் இழந்தது.

2-வதாக பிரிஸ்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் கடைசி 3 விக்கெட்டுகள் கொஞ்சம் கூடுதலாக சுமார் 30 பந்துகளில் காலியாகியுள்ளது.

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கடைசி 3 விக்கெட்டுகள் 16 பந்துகளில் சரிந்தது.

 

இப்படியிருக்கையில், இன்று 24 பந்துகள் மீதமுள்ள நிலையில் இன்னும் ஒரு விக்கெட்டை சாய்த்திருந்தாலே ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பிற்கு அருகில் வந்திருக்கும். ஆனால் ஏனோ டெஸ்ட் போட்டி முடித்துக் கொள்ளப்பட்டது.

 

இது ஏன் என ஆஸி. கேப்டன் ஸ்மித் விளக்கமளித்துள்ளார்: “வெற்றி கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. பவுலர்கள் அனைவரும் களைப்படைந்து விட்டனர். எனவே முடிக்க அதுவே சிறந்த நேரம். பிட்ச் உடையவில்லை, பெரிதாக ஒன்றும் நடந்தும் விடவில்லை. எனவே இதுதான் சரி என்று முடிவெடுத்தேன்” என்றார்.

ஆனால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததாக ஆஸி. ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

http://tamil.thehindu.com/sports/24-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6739038.ece

  • தொடங்கியவர்

ஆஸி.க்கு எதிராக 3 சதங்கள் எடுத்த விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் 15-வது இடம்
 

 

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தற்போதைய தரவரிசையில் பேட்டிங்கில் இந்திய பேட்ஸ்மென்களில் கோலி ஒருவரே இத்தகைய இடத்தில் இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கோலி 169 மற்றும் 54 ரன்களை எடுத்ததால் 737 தரநிலைப்புள்ளிகளுடன் 19-வது இடத்திலிருந்து 15-வது இடத்திற்குத் தாவியுள்ளார்.

 

புஜாரா 19-வது இடத்திலும் வேறு ஒரு தளத்திற்கு முன்னேறிய முரளி விஜய் 20-வது இடத்திலும் உள்ளனர்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 147 மற்றும் 48 ரன்களை எடுத்த அஜிங்கிய ரஹானே, 15 இடங்கள் முன்னேறி 26-வது இடத்திற்கு முன்னேறினார்.

மாறாக, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதன் முறையாக பேட்டிங் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறினார். தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி. டிவில்யர்ஸ் மற்றும் சங்கக்காரா ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

 

டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், மொகமது ஷமி ஆகியோர் 8 இடங்கள் முன்னேறி, முறையே 36, மற்றும் 38வது இடங்களில் உள்ளனர். முதலிடம் தொடர்ந்து டேல் ஸ்டெய்னுக்கே.

ஆஸ்திரேலியாவின் ரயான் ஹேரிஸ் 2 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தில் உள்ளார். நியூசி. அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 7-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மாற்றங்கள் இல்லை. வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் தொடர்ந்து முதலிடத்திலும், வெர்னன் பிலாண்டர் 2ஆம் இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி இன்னும் ஒரு டிரா செய்தால் போதும் அந்த அணி நம்பர் 1 டெஸ்ட் அணிக்கான ரிலையன்ஸ் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் பெறும். பரிசுத்தொகை: 500,000 அமெரிக்க டாலர்கள்.

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அடுத்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றால் தென் ஆப்பிரிக்காவை விட 0.2 புள்ளிகள் அதிகம் பெற்று ஆஸ்திரேலியா டெஸ்ட் தரநிலையில் முதலிடம் பெற்று விடும்.

3ஆம் மற்றும் 4ஆம் நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உள்ளன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-3-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6741862.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.