Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இராணுவ சிப்பாயின் புலம்பல் - ஆங்கிலத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இரானுவ சிப்பாயின் புலம்பல்

WSWS interviews: Sri Lankan soldiers oppose return to war

20 October 2006

As the civil war in Sri Lanka escalates, the military is carrying out a massive recruiting campaign in the press and electronic media. The government is making an explicit communal appeal, declaring that it is the duty of heroes to defend the "Sinhala motherland" against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Recruiting targets have not been met. Within the army, reports have filtered out of disgruntlement and war weariness. Since President Mahinda Rajapakse won office last November, hundreds of soldiers and military personnel have been killed in a conflict that has widened into open warfare.

The overwhelming majority of soldiers come from poor Sinhala families in rural areas. Most had no alternative but to join the army to provide for themselves and their families. In short, they are economic conscripts who have been used by successive governments as cannon fodder in a racialist war.

Despite the government's constant communal agitation, there is widespread opposition to a war that has already lasted two decades and claimed 65,000 lives. Significantly, many people blame not only the government, but the Sinhala extremist Janatha Vimukthi Peramuna (JVP), which has alienated its rural supporters by openly advocating war.

Well aware of the discontent in army ranks, the government and defence authorities have tightened censorship and issued threats to film directors and the media not to undermine morale. The "heroes" hailed in the government's propaganda are not permitted to openly talk to the press. Over the past two decades of war, an estimated 40,000 soldiers have deserted.

The World Socialist Web Site (WSWS) recently spoke to two soldiers who have been serving in the war zone on the Jaffna peninsula and returned home for leave. Their personal details have been withheld.

***

The first soldier lived in a thatched house built near marshy land. The house was only 24 square metres, with a tiny hut behind, used as the kitchen. The floor was covered with bricks but not plastered and so was damp. There was also a new, uncompleted house. The marshy land measuring about 650 square metres belonged to his father.

The soldier was the eldest of three brothers. The second eldest had completed his advance level at high school but had no permanent job. He helped the family by working odd jobs. The youngest was still at school.

The soldier explained: "I had been a vocalist in a local musical group since my school days. Although I loved music, I had to abandon it and join the army.

"Our family doesn't have a proper place to live. So I started to build a new house. I am planning to finish the roof during my next holidays. We are paid an extra 2,000 rupees [$US20 a month] when we are on operational duty and also some other allowances."

Speaking of his battlefield experiences, he said: "We were following a commando group in an operation. Five out of eight in my group were killed. Only seven survived from the 70-member commando group. I also received minor injuries.

"We man forward bunkers. There are three or four of us in a bunker. Meals are provided to the bunker. We work in two-hour shifts. But we cannot rest in the bunker because of the constant tension. It is then that we think about the uncertainty of returning to our villages.

"This war is useless. It is not necessary. The war brings us only death and disability. But now we have no escape from this. When I am on duty in the bunker during the day, I can see only palmyrah trees (a type of palm) and bushes. I wonder why such a fierce war is being fought to capture these lands. Then I become thoroughly disillusioned."

Speaking of his fellow soldiers, he said: "Some are disappointed about the war like me. Some say we have to fight this war. Mostly soldiers keep their thoughts to themselves. Most are very poor like me. The majority are from poverty-stricken farming areas like Anuradhapura and Polonnaruwa."

His father, whose only income was from casual work, said: "See, they are at war again. My son is fighting war now and I burn with fear. What can I do? When the police brought the message that my son had been injured I was so worried about him.

"This is not our war. This war has been created by the political leaders. During the off-season for fishing, we used to go to the north or the east for fishing. We were close like brothers with Tamil fishermen in those days." His son nodded approvingly.

"The responsibility for this devastation rests not only on the politicians of the main parties but also the JVPers. In 1989, my brother was ordered by the JVPers to stand at a village shopping centre with a sign hanging around his neck because he had voted in provincial council elections. He was threatened with death if he defied JVP orders again."

***

The second soldier told the WSWS: "I really had no idea about the army. If I had known, I would never have joined. I started going to sea to fish after dropping out of school. Everyone vomits at sea for the first few days, but with me it was continuous. So I joined the army as there was no other work.

"The war was fierce when Chandrika Kumaratunga] was president. We were assigned to bury the unidentified bodies and body parts of soldiers. After that incident, I didn't report back for duty once I got leave. I deserted for about three years and went back to fishing."

"But after the war started again I was afraid I would be arrested for deserting. I would wake up afraid. Once, when I heard a vehicle approaching at night, I rushed out of the house and ran. I rejoined five or six months ago to avoid this mental torture. Soldiers can [legally] desert under some conditions [by repaying the army its costs]. But we don't have such a large amount of money because we are very poor."

Referring to his fellow soldiers, he said: "Most of them are the children of very poor farmers. They have joined the army because there are no jobs in their areas. They are young people, married and unmarried, hoping to help their families out of severe economic problems'to build house or meet daily expenses.

"I am one of them. My old house was dilapidated and collapsed. I have two daughters. During my leave, I have started to build a new house. But I can only cover the roof with cadjans [coconut leaves]. I hope to finish the walls on my next leave."

Describing army life, he said: "Our subdivision's job is to maintain security after the army captures an area. We patrol for two hours, do other tasks for four hours, then patrol for another two hours. After taking leave, some soldiers do not report back. As a result, our workload is increased. We have to cover their work as well. This time I was away for four and half months."

"The meals for ordinary soldiers like us are poor. Our officers get good food. They can buy liquor at their mess but we have nothing. Higher officers subjugate lower officers next to them and this subjugation continues down the ranks to the ordinary soldiers. Even among soldiers, seniors subjugate juniors. This is the way in the army. Any argument with an officer is a punishable offence."

Speaking about a recent offensive, he said: "This time there were more casualties. The Tigers [the LTTE] had set land mines connected to grenades and arranged them so that about 100 mines would explode at once. The army's multi-barrel [rocket] and heavy artillery attacks have caused severe damage to people and their property.

"We are made [by the army] to see any Tamil person as a Tiger [LTTE member]. Ordinary Tamil people don't like us. I say no to war. The war will bring only death for ordinary people and soldiers and also permanent disability. The war is not necessary."

http://www.wsws.org/articles/2006/oct2006/...i-o20_prn.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழாக்கம் எங்கயப்பா???

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கிராமத்து அப்பாவி இளைஞரை காவு கொடுத்துவிட்டு குளிரூட்டி அறைக்குள் கொழும்பிலிருந்து வாய் சாவாடல் விட்டுக் கொண்டிருக்கிறது பேரினத்தின் பணக்கார வர்க்கம்.

ஈழத்திலிருந்து

ஐhனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தில் சேர்ந்ததே, தமிழரின் சொத்துகளை சூறையாடி, தங்கள், தங்கள் வீடுகளைக்கட்டி பணக்காரனாகலாம் என்ற பேராசையுடனேயே! இப்போது மரண பயம் வந்ததும் ஊளையிடுகிறானுகள். இவனுகளே எத்தனை கொடுமைகளை தமிழர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக எமக்கு செய்திருப்பாங்கள்! கையில் ஆயுதமிருக்கும்போது எப்படி வீறாப்பாக இருந்தான்! இப்ப, நல்லா, அப்பாவிபோல் நடிக்கிறாங்கள்! தெரியாமல்தான் இராணுவத்தில் சேர்ந்தாங்களாம்! யாருக்கு இந்த உல்டா? தமிழரின் உயிரை எடுத்து, அவர்களின் சொத்தில் எத்தனை சிங்களவர் திடீர் பணக்காரனாகியிருக்கிறார்கள்! உனக்கு பணக்காரனாக வேண்டுமென்றால் அரபுநாட்டுக்கு போகவேண்டியதுதானே! தமிழரைவிட சிங்களவருக்குத்தானே வேலை வாய்ப்புக்கு எத்தனை சலுகைகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழாக்கம் எங்கயப்பா???

---------------

மன்னிக்க வேண்டும் வடிவேல்,

இந்த நாட்களில் எனக்கு நேரம் காலம் வாய்ப்பதில்லை.

அத்துடன் இங்கு ப்ரு பந்தி தமிழில் தட்டச்சு செய்யவே உயிர் போகிறது...

இந்த முழு பக்கத்தையும் மொழி பெயர்த்து பின் தட்டச்சு செய்ய இரண்டு மூன்று நாட்கள் எடுக்கும்.

யாரவது, எங்கேயாவது அதன் தமிழ் வடிவத்தை பிரசுரிப்பார்கள் என்று நன்பிக்கையுடன் இருக்கிறேன்.

மன்னிக்க வேண்டும் வடிவேல்,

இந்த நாட்களில் எனக்கு நேரம் காலம் வாய்ப்பதில்லை.

அத்துடன் இங்கு ஒரு பந்தி தமிழில் தட்டச்சு செய்யவே உயிர் போகிறது...

இந்த முழு பக்கத்தையும் மொழி பெயர்த்து பின் தட்டச்சு செய்ய இரண்டு மூன்று நாட்கள் எடுக்கும்.

யாரவது, எங்கேயாவது அதன் தமிழ் வடிவத்தை பிரசுரிப்பார்கள் என்று நன்பிக்கையுடன் இருக்கிறேன்.

அந்த இராணுவத்தினர்கள் புலிகளிடம் பிடிபட்டு கைதியாக இருக்கும் பொழுது அர்த்தமற்ற போர் பற்றியும் தமது வறுமையின் நிர்ப்பந்தமும் பற்றி கூறவில்லை. சிறீலங்காவில் இருந்து கொண்டு சிறீலங்காவின் அர்த்தமற்ற போர் பற்றி கூறியது அதன் உண்மைத்தன்மைக்கு மேலும் வலுச் சேர்க்கிறது. அந்த வகையில் அவர்கள் 2வரும் கூறியது முக்கியத்துவமானது.

எவ்வாறு ஆனந்தசங்கரி டக்கிளஸ் மூலம் எமது விடுதலைப்போராட்டத்தை அர்த்தமற்றது என்று காட்ட சிறீலங்கா முயல்கிறதோ அதே போல் சிங்கள இனவதாத்தை தோலுரித்து காட்டவும் அவர்களின் அர்த்தமற்ற யுத்தத்தையும் அதன் அவசியமற்ற அவலங்களையும் அழிவுகளையும் உணர்த்த நாம் இப்படியான சிங்களவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஈழவிடுதலைப் போராளிகள் "மன்னிக்கப்பட்டு" ஜனநாயக நிரோட்டத்தில் கலந்துவிட்டார்கள் என்ற போர்வையில் கைக்கூலிகளாக்கப்பட்டு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்றால் தவறை உணர்ந்த முன்னாள் சிறீலங்கா படையினரை சரியாக பயன்படுத்துவதால் இரு தரப்பிலும் இழப்புகளை குறைத்து விடுதலையை விரைவு படுத்தலாம்.

யுத்தத்திற்கு திரும்பிச் செல்ல மறுக்கும் சிறிலங்கா படையினர்.

சிறிலங்காவில் உள்நாட்டு சண்டை வெடித்ததைத் தொடர்ந்து இராணுவம் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் உடகங்களிலும் பாரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றது. சிங்கள தாய்நாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பது நாட்டின் வீரபுருசர்களின் கடமை என்ற அறிவித்தலின் மூலம் அரசாங்கமானது வெளிப்படையாகவே இனவாத வேண்டுகோளை விடுத்து வருகின்றது.

படைச்சேர்ப்பு இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை. இராணுவத்தினரிடையே வெறுப்பும் மற்றும் போரிடும் உட்சாகம் குன்றிய தன்மையே நிலவுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பரில் மகிந்த ஆட்சியை பிடித்த பின்பு பரந்த யுத்தத்தை நோக்கி விரிவடைந்து செல்லும் மோதல்களில் நு}ற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

படையில் சேர்க்கப்பட்ட பெரும்பான்மையானவர்கள் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். இவர்களில் அதிகமானவர்கள் வேறு மாற்றுவழிகளின்றி குடும்பத்திற்காக தம்மை ராணுவத்தில் இணைத்துக் கொண்டவர்கள். பொருளாதார நிர்ப்பந்தத்ற்கு ஆளான இவர்கள் விரைவில் இனவாதப் போரில் ஆட்சியில் உள்ள அரசால் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் இடைவிடாத இனவாத துண்டல்களுக்கு மத்தியிலும் ஏற்கனவே இரண்டு தசாப்தங்கள் நீண்டுவிட்ட மற்றும் 65,000 உயிர்களை காவுகொண்டுவிட்ட யுத்தத்திற்கு எதிரான பரந்தளவிலான எதிர்ப்பு அங்கே உள்ளது. முக்கியமானதாக அதிகளவிலான மக்கள் அரசாங்கத்தை மட்டுமல்லாமல் சிங்கள இனவாத மக்கள் விடுதலை முன்னனி எனப்படும் துஏP ஐயும் குற்றம் சாட்டுகின்றனர். வெளிப்படையாக யுத்தத்தை ஆதரிப்பதன் காரணமாக இது தனது பின்தங்கிய பிரதேச ஆதரவாளர்களிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறியப்பட்ட இராணுவ அதிகாரிகளிடையே நிலவும் அதிருப்தியின் பொருட்டு அவர்களின் மனஉறுதியை சீர் குலைக்காமலிருக்க திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் தணிக்கை மற்றும் பயமுறுத்தல்கள் அரசாங்கத்தாலும் பாதுகாப்பு தரப்பினராலும் விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிரசாரங்களில் வீரர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் ஊடகங்களுக்கு வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகத் தொடரும் யுத்தத்தில் 40.000 வீரர்கள் தப்பியோடியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உலக சமத்துவ இணையத்தளம் (றுளுறுளு) அண்மையில் இரண்டு வீரர்களை பேட்டிகண்டது. இவர்கள் யாழ்பாண யுத்த வலயத்தில் சேவையாற்றி விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர்கள் அவர்களது விபரங்கள் வெளியிடப்படவில்லை.

முதல் வீரர் சதுப்பு நிலமொன்றில் ஓலையினால் வேயப்பட்ட வீடு ஒன்றில் வசிக்கிறார். அந்த வீடு 24 சதுர மீட்டர்கள் மாத்திரம் கொண்டது. பின்னால் இருக்கும் சிறிய குடிசை ஒன்றே சமையலறையாக பாவிக்கப்படுகின்றது. அங்கே கட்டி முடிக்கப்படாத வீடு ஒன்றும் காணப்படுகின்றது. அந்த சதுப்புநிலத்தில் 650 சதுர மீட்டர்கள் கொண்ட இடம் அவரது தகப்பனாருக்கு சொந்தமானது.

மூன்று சகோதரர்களில் இவர் மூத்தவர். இரண்டாமவர் தனது உயர்தரத்தை புூர்த்தி செய்துவிட்டு நிரந்தர வேலையின்றி இருக்கிறார். நாட்கூலி வேலை செய்து அவர் தனது குடும்பத்திற்கு உதவி செய்கிறார். இளையவர் இன்னமும் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

அவர் தன்னை விபரிக்கையில்: நான் எனது பாடசாலை நாட்களிலிருந்து உள்ளுர் இசைக்குழு ஒன்றில் பாடகராக இருந்தேன். நான் இசையை விரும்பிய போதும் அதனை கைவிட்டு ராணுத்தில் சேர வேண்டி ஏற்பட்டுவிட்டது.

வாழ்வதற்க்கு பொருத்தமான இடம் எனது குடும்பத்திற்கு இருக்கவில்லை. அதனால் நான் ஒரு வீட்டை கட்டத் தொடங்கினேன். எனது அடுத்த விடுமுறையின் போது கூரை வேலையை முடிக்க எண்ணியுள்ளேன். இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எங்களுக்கு மேலதிகமாக ரூபா 2000 (ருளு கூ20) மற்றும் வேறு சில கொடுப்பணவுகளும் வழங்கப்படும்.

அவரது கள அனுபவம் பற்றி தெரிவிக்கையில் அவர் கூறினார்: நாங்கள் ஒரு நடவடிக்கைக்காக கமாண்டோ அணியொன்றில் வழிநடத்திச் செல்லப்பட்டோம். எனது குழுவிலிருந்த 8 பேரில் 5 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 70 பேரை கொண்ட கமாண்டோ குழுவிலும் 7 பேரே எஞ்சினர். எனக்கும் இலேசான காயம் ஏற்ப்பட்டது.

நாங்கள் முன் காப்பரண்களில் நிறுத்தப்பட்டிருந்தோம். எங்களில் 3 அல்லது 4 பேர் இருந்தனர். காப்பரண்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. நாங்கள் 2 மணிநேர முறை மாற்று பணியில ஈடுபடுத்தப்பட்டிருந்தோம். ஆனாலும் தொடர்ச்சியான பதட்டமான சுூழல் காரணமாக எங்களால் காப்பரணில் ஓய்வெடுக்க முடிவதில்லை. எமக்கு மீண்டும் கிராமத்திற்கு போக வாய்ப்பு கிடைக்குமா என சந்தேகமே எங்களுக்கு இருந்து.

இந்த சண்டை பயனற்றது. இது தேவையற்றது. சண்டை எங்களுக்க இறப்பையும் அங்கயீனத்தையுமே ஏற்படுத்துகின்றது. ஆனால் இப்போது எங்களுக்கு இதிலிருந்து தப்ப வழியில்லை. நான் பகல் வேளைகளில் கடமையிலிருக்கும் போது பனை மரங்களையும் புதர்களையுமே காண்கிறேன். இந்த நிலத்தை பிடிப்பதற்காக ஏன இவ்வளவு கொடும் சண்டை என்று நான் ஆச்சரியமடைந்தேன். இதனால் நான் விரக்தி அடைந்தேன்.

தொடரும்..

(எனது மொழி பெயர்ப்பில் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தத்திற்கு திரும்பிச் செல்ல மறுக்கும் சிறிலங்கா படையினர்.

தொடரும்..

(எனது மொழி பெயர்ப்பில் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்)

-------------------------------------

சானக்கியன்,

உங்கள் மொழி பெயர்ப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது, நன்றி.

உங்கள் சேவை தொடரட்டும்.

மிகுதி....

தன் சக வீரர்கள் பற்றி பேசும் போது, அவர் சொன்னார் "சிலர் என்னைப் போல் யுத்தம் குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். வேறு சிலர் நாங்கள் சண்டையிட வேண்டும் என்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மை நிறைந்த அனுராதபுரம் மற்றும் பொலநறுவை போன்ற விவசாய பிரதேசங்களிலிருந்தே வந்தவர்கள்"

நாட்கூலித் வேலை செய்யும் அவரின் தகப்பனார் கூறும் போது, "பாருங்கள், அவர்கள் மீண்டும் யுத்தம் புரிகின்றனர். எனது மகனும் யுத்தத்திலீடுபட்டுள்ளார், நான் இங்கே பயத்துடன் வாழ்கின்றேன். என்னால் என்ன செய்ய முடியும்? பொலிசார் எனது மகன் காயமடைந்து விட்டதாக செய்தி கொண்டுவரும் போது மகனைப் பற்றி நான் மிகவும் பயந்துவிட்டேன்"

இடையில் குறுக்கிட்ட அவர் மகன் "இது எங்களின் யுத்தமல்ல. இந்த யுத்தம் அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. மீன்கள் குறைவாக கிடைக்கின்ற காலங்களில் நாங்கள் வடக்கு மற்றும் கிழக்கு கடலுக்கு மீன் பிடிக்க போவதுண்டு. முன்னைய நாட்களில் நாங்கள் தமிழ் மீனவர்களுடன் சகோதரர்கள் போன்று மிக நெருக்கமாக இருந்தோம்" என்று தெரிவித்தார்.

"இந்த அழிவுகளுக்கான பொறுப்பு பிரதான கட்சிகளுக்கு மட்டுமின்றி JVP இனரையும் சாரும். 1989 ஆம் ஆண்டுகளில் எனது சகோதரர் மாகாணசபைத் தேர்தலுக்க வாக்களித்த காரணத்தால் கழுத்தில் வாசகம் எழுதப்பட்ட அட்டை ஒன்றுடன் கிராமத்தின் கடைத்தெருவில் நிற்குமாறு பணிக்கப்பட்டார். மீண்டும் JVP இன் கட்டளையை மீறினால் அவருக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது"

இரண்டாவது வீரர் WSWS இற்கு தெரிவிக்கையில் "இராணுவம் பற்றி எனக்கு எந்த அறிவும் இருக்கவில்லை. எனக்கு அது தெரிந்திருந்தால் நான் ஒரு போதும் போயிருக்க மாட்டேன். பாடசாலையிலிருந்து விலகிய பின்னர் நான் கடலுக்கு மீன்பிடி தொழில் செய்ய போனேன். ஆரம்பத்தில் எல்லோரும் சிலநாட்களுக்கு வாந்தியெடுத்தனர். ஆனால் எனக்கு அது நிற்காமல் தொடர்ந்தது. ஆகையால் எனக்கு வேறு வேலை கிடைக்காமையால் நான் ராணுவத்தில் சேர்ந்தேன்"

"சந்திரிக்கா குமாரனதுங்க ஜனாதிபதியாக இருந்த போது சண்டை மிகவும் உக்கிரமமாக இருந்தது. அடையாளம் காணப்படாத உடல்களையும், இராணுவ வீரர்களின் உடல் பாகங்களையும் புதைக்குமாறு எமக்கு கட்டளையிடப்பட்டது. அந்தச் சம்பவத்தின் பின்னர் விடுமுறையில் சென்ற நான் மீண்டும் பணிக்கு சமுகமளிக்கவில்லை. சுமார் 3 வருடங்களாக இராணுவத்தை விட்டு விலகி தலைமறைவாக இருந்த போது நான் மீண்டும் மீனவத் தொழிலுக்குச் சென்றேன்"

"ஆனால் மீண்டும் யுத்தம் ஆரம்பித்த பின்பு நான் தப்பியோடியமைக்காக கைது செய்யப்படலாம் எனப்பயந்தேன். இரவில் திடுக்குற்று நித்திரையில் இருந்து பயந்து எழுவேன். ஒரு தடவை இரவில் திடீரென வாகனம் ஒன்று வரும் சத்தம் கேட்டு வீட்டை விட்டுத் தப்பியோடினேன். பின்னர் இந்த மனஉளைச்சலில் இருந்து தப்புவதற்காக 6 மாதங்களிற்கு முன்னர் நான் மீண்டும் இணைந்து கொண்டேன். சில நிபந்தனைகளின் கீழ் இராணுவத்திலிருந்து விலக முடியும் (இராணுவத்திற்க்கான முழுச் செலவையும் மீளச்செலுத்துவதன் மூலம்). ஆனால் நாங்கள் ஏழைகள் என்பதினால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடிவதில்லை."

தன் சக வீரர்கள் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர்களில் பெரும்பாலானவர்கள் வறிய விவசாயிகளின் பிள்ளைகள். அவர்கள் பிரதேசங்களில் வேறு வேலைகள் இல்லாமையே அவர்கள் இராணுவத்தில் இணைந்தமைக்கான காரணம். அவர்கள் இளையவர்கள், திருமணம் முடித்தவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள், தங்களின் குடும்பங்களை கடுமையான பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீட்கவும், வீடுகட்டிக் கொள்ளவும், நாளாந்த செலவுகளிற்காகவும் எதிர்பார்புடன் உள்ளவர்கள்"

"நானும் அவர்களில் ஒருவன். எனது பழைய வீடு இடிந்துவிழும் தறுவாயில் உள்ளது. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். எனது விடுமுறையின் போது புதிய வீட்டைக் கட்டத் தொடங்கினேன். ஆனால் என்னால் ஓலைகளால் கூரையை வேய மட்டுமே முடிந்தது. எனது அடுத்து விடுமுறையில் சுவர் வேலையை முடிக்க எண்ணியுள்ளேன்"

தனது இராணுவ வாழ்க்கை பற்றி விபரிக்கையில், "இராணுவம் பிரதேசங்களை கைப்பற்றிய பின்னர் அதில் பாதுகாப்பு கடமையிலீடுபடுவதே எங்கள் துணைப் பிரிவின் பணியாகும், நாங்கள் 2 மணி நேரம் ரோந்திலீடு படுவோம் பின்னர் 4 மணி நேரம் வேறு கடமைகளில் ஈடுபட்டு பின்னர் மீண்டும் 2 மணி நேரம் ரோந்திலீடு படுவோம். விடுமுறையின் பின சில படைவீரர்கள் பணிக்கு திரும்புவதில்லை. இதன் காரணமாக எங்களுக்கு வேலைப் பழு அதிகரிக்கும். நாங்கள் அவர்களின் வேலையையும் சேர்த்தே செய்ய வேண்டி ஏற்படும். நான் இம்முறை நான்கரை மாதங்கள் பணிக்கு செல்லாமலிருந்தேன்"

"எங்களைப் போன்ற சாதாரண சிப்பாய்களின் உணவு மிகவும் மட்டமானது. எங்கள் அதிகாரிகள் நல்ல உணவுகளை பெறுவார்கள். அவர்கள் தங்கள் உணவுச்சாலையில் குடிவகைகளை வாங்கிக் கொள்ள முடியும், ஆனால் எமக்கு ஒன்றும் இல்லை. உயர் அதிகாரிகள் தமக்கு அடுத்துள்ள சாதாரண அதிகாரிகளை அடிமை படுத்துவார்கள், இந்த அடிமை படுத்துதல் இவ்வாறே பதவி வழியே கீழ் மட்டம் வரை தொடர்ந்து சாதாரண சிப்பாய் வரை தொடரும். மேலும் சிப்பாய்களிலும் பழையவர்கள் புதியவரை அதிகாரம் செய்வர். இப்படித் தான் இராணுவம் உள்ளது. அதிகாரி ஒருவருடன் தர்க்கம் புரிவது தண்டனைக் குரிய குற்றம்"

தனது அண்மைய ராணுவ நடவடிக்கை குறித்து பேசும் போது, "இம்முறை அங்கே அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. புலிகள் கண்ணிவெடிகளை கைக்குண்டுகளுடன் இணைத்து ஒழுங்கு படுத்தி வைத்துள்ளனர், எனவே சுமார் 100 கண்ணிகள் வரை ஒரே நேரத்தில் வெடிக்கும். இராணுவத்தின் பல்குழல் ஏவுகணைகள் மற்றும் பாரிய ஆட்டிலரி தாக்குதல்கள் மூலம் மக்களிற்கும் அவர்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது"

"எல்லா தமிழ் குடிமகனையும் புலிகளாகவே பார்க்கும் வண்ணம் (இராணுவம் மூலம்) ஆக்கப்பட்டிருக்கின்றோம். சாதாரண தமிழ் மக்கள் எங்களை விரும்புவதில்லை. நான் சொல்கிறேன் யுத்தம் வேண்டாம் என்று. யுத்தத்தினால் சாதாரண மக்களிற்கும் இராணுவத்தினருக்கும் இறப்பும், நிரந்தரமான அங்கயீனமுமே ஏற்படுகின்றது. இந்த யுத்தம் தேவையற்றது."

முலம்: http://www.wsws.org/articles/2006/oct2006/...i-o20_prn.shtml

மொழிபெயர்ப்பு: சாணக்கியன், www.yarl.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.