Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் யார்? ஆதி தமிழன் யார்? வரலாற்றில் எது உண்மை?

Featured Replies

நாம் யார்? ஆதி தமிழன் யார்? வரலாற்றில் எது உண்மை? எது மிகைப்படுத்தல்? எதை நம்புவது? ஏன் இல்லை? - அறிவு சார்ந்து மட்டுமே சிந்தித்து ஆராய்வோம் வாருங்கள் !

தமிழ் வரலாற்றில் ஒரு குறைபாட்டைக் காணுகிறேன். 

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் எத்தனையோ மன்னர்கள் ஆண்டார்கள் என்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் குறித்த வரலாறு எழுதி வைக்கப் படவில்லை. இலக்கியங்களில் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் அவை முழு சித்திரத்தை வழங்கும் அளவில் இல்லை. அந்த இலக்கியங்கள் கூடப் பாதுக்காப்படவில்லை என்பது வேறு விடையம். அதே காலகட்டத்தில் உலகின் பல்வேறு திசைகளில் வாழ்ந்த மன்னர்கள் குறித்து தெளிவான வரலாறு எழுதப் பட்டிருக்கிறது, பாதுகாக்கப் பட்டுள்ளது.

மாசிடோனியாவில் இருந்து ஆசியா நோக்கி படையெடுத்து வந்த அலெக்சாண்டர் தன்னுடன் வரலாற்று ஆசிரியர்களை உடன் அழைத்துச் சென்றுள்ளான். அவனது ஒவ்வொரு படையெடுப்பு குறித்தும், வெற்றிகள் குறித்து மட்டுமின்றி படையெடுத்துச் சென்ற நாடுகள் குறித்த செய்திகளையும் எழுதி வைத்துள்ளனர். அதுவும் 2300 ஆண்டுகளுக்கு முன்பு! நமது கம்ப ராமாயணத்தைக் காட்டிலும் மிக மிகப் பழையது. திருக்குறளைக் காட்டிலும் பழமையானதாக இருக்கக் கூடும். இந்தியாவில் தனது இறுதி யுத்தத்தில் போரஸ் என்கிற மன்னனுடன் மோதுகிறான் அலெக்சாண்டர். இந்தியாவிற்குள் நுழைய வேண்டுமெனில் பாஞ்ஜாலத்தின் இரண்டு நதிகளைக் கடக்க வேண்டும். அதற்கு அலெக்சாண்டரின் படைகள் என்னென்ன யுக்திகளைக் கையாண்டன, எவ்வாறு கடந்தன என்பது எழுதப்பட்டுள்ளது. முதல் நாள் போரஸின் மகன் கொல்லப் பட்டு விடுகிறான். போர் நடந்த அன்று மழை பெய்திருந்ததால், போரஸின் ரதப் படையணி பலனற்றுப் போயிற்று. ரதங்களின் சக்கரங்கள் சேற்றில் புதையுண்டு விட்டன. அலெக்சாண்டரின் படைப்பிரிவில், குதிரை மீது சவாரி செய்தவாறே அம்புகள் தொடுக்கும் சிறப்புப் படை ஒன்று இருந்தது. இன்றைய இரான் தேசத்தில் வெற்றிகொண்டு அவன் தன் படையுடன் இணைத்துக் கொண்ட படை அது. எதிரிகளை தாக்கிவிட்டு , சீண்டிவிட்டு, குழப்பம் உருவாக்கும் கொரில்லா யுக்தியில் தேர்ந்த படையணி அது. அது அவனுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது. போரஸின் ஒரு பலம் யானைப் படை. அதுவரை கிரேக்கர்கள் கண்டிராத படை அது. இறுதியில் அதுவும் உதவவில்லை. இவைமட்டுமின்றி, அந்த ஒரு போர்க்களத்தில் மட்டுமே பயன்படுத்தப் பட்ட பல்வேறு உளவியல் மற்றும் போர் நுணுக்கங்களை விலாவரியாக எழுதி வைத்துள்ளனர். இறுதிவரை சளைக்காமல், பின்வாங்காமல் யுத்தகளத்தில் போரிட்ட மாவீரன் போரஸ் மீது அலெக்சாண்டருக்கு பெருமதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இறுதியில் தோல்வியின் விளிம்பில் இருந்த போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நேரில் சந்தித்துப் பேசுகிறான். அவர் பேசிய உரையாடலை வரிவிடாமல் அப்படியே பதிவு செய்திருகிறார்கள், உடன் சென்ற வரலாற்று ஆசிரியர்கள்.

அதே போல, ஆல்ப்ஸ் மலையைக் கடந்து ரோமாபுரியின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட கார்தோஜீனிய வீரன் ஹன்னிபல் குறித்த வரலாறும் முழுமையாகக் கிடைக்கிறது. அவனது காலம் கிமு முதல் நூற்றாண்டு. கிரேக்க வரலாற்றில் 300 மெய்க் கப்பாளர்களைக் கொண்டு தேர்மாபிலே யுத்தத்தில் லட்சக்கணக்கான பாரசீகப் படைகளை தடுத்து நிறுத்தி வீரமரணம் அடைத்த லியோனிடாஸ் வரலாறு தெளிவாக எழுதப் பட்டுள்ளது. அவன் வாழ்ந்த காலம் கிமு 5-6 ஆம் நூற்றாண்டு. இந்தியாவில் புத்தமும் சமணமும் தோன்றிய நூற்றாண்டு எனலாம். வரலாற்றின் தந்தை என அழைக்கப் படும் கிரேக்கத்தின் வரலாற்று ஆசிரியர் ஹெரோடோடஸ் வாழ்ந்த காலமும் கிமு 5 ஆம் நூற்றாண்டு. அதாவது ராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு! தமிழில் கம்பராமாயணம், செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி போன்ற வெகு சில நூல்களில் போர் குறித்து எழுதப்பட்டுள்ளன. ராமாயணம் செவிவழி கதையின் பதிவு என்பதால் விட்டுவிடுவோம். கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களை எடுத்துக்கொண்டால், அவை தகவல்கள் பொதிந்தன என்பதைக் கட்டிலும், மிகைப்படுத்தப்பட்ட உவமைகளும், உருவகங்களும் கொண்டு புகழ் பாடும் தொனியில் இருப்பதைக் காண்கிறோம். பரணிபாடுதல் என்றால் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரன் ஒருவன் பெற்ற வெற்றியின் புகழ் பாடுதல் எனப் பொருள்படும். அலெக்சாண்டரின் படைகளை எதிர்த்த போரஸின் படையில் மொத்தம் 130 யானைகளே இருந்தன. ஆனால் தென்னிந்திய மன்னன் ஒருவன் எப்படி ஆயிரம் யானைகளைக் கொல்ல முடியும்? கலிங்கத்துப் பரணியில் ஒரு உவமை எனக்கு நினைவிற்கு வருகிறது. போர்க்களத்திற்கு உச்சிவெயில் நேரத்தில் ஆகாயத்தில் ஒரு கழுகு பறக்கிறதாம். நிலத்தின் சூடு தாங்க முடியாமல் அந்தக் கழுகின் நிழல் வேகமாக ஓடுகிறதாம். இப்படியான உவமைகள் தான் அதிகம் நிறைந்துள்ளது. இத்தனைக்கும் கலிங்கத்துப் பரணி எழுதப்பட்டது கிபி 1200 வாக்கில். அலெக்சாண்டர் காலத்திற்கு 1500 ஆண்டுகளுக்குப் பிறகு!

இந்தியாவிற்கு பயணம் செய்த சீனத்து புத்த துறவி பா கியான் வாழ்ந்த காலம் கிபி மூன்றாம் நூற்றாண்டு. அவரது பயணக் குறிப்பில் இருந்து அன்றைய இந்திய தேசங்கள் குறித்த பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல, வெனிஸ் நாட்டு வணிகன் மார்கோபோலோ வின் பயணக் குறிப்புகளில் இருந்து கிடைத்த தகவல்களும் ஏராளம். மார்கோபோலோ இந்தியா வந்தது 12 ஆம் நூற்றாண்டில். தோராயமாக சடையப்ப வள்ளல்,கம்பர், ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலத்தில் எனலாம். கடல் வணிகம் செழித்த காலம் எனலாம். நபிகளார் வாழ்ந்த காலம் கிபி 7 ஆம் நூற்றாண்டு. அதம் பிறகு வந்த இஸ்லாமிய பொற்காலம் அந்த காலகட்டத்தைச் சேரும். அப்போதுதான் கடல் வாணிகம் அதிகம் நடந்துள்ளது. அப்போதுதான் கடல் வணிகம் நடைபெறத் தொடங்கியது என எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலப்பதிகாரக் காலம் கிபி 3 ஆம் நூற்றாண்டு. அப்போதே கிரேக்க, ரோமானிய, அராபிய நாடுகளுடன் கடல் வாணிகம் செழித்திருந்துள்ளது. தென்னகக் கடற்கரையில் இருந்து என்னென்ன பண்டங்கள் போயின எனப் பட்டினப்பாலையில் குறிப்பு உள்ளது. கிழக்குடன் நிலம் வழியாகத் தொடர்புகொள்ள இருந்த பட்டுப்பாதையை பலர் கைப்பற்ற, இடையூறு கொடுப்பதுமாக இருக்கவே, அதற்க்கு மாற்றாக கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. தென்மேற்கு, வடகிழக்கு பருவக் காற்றுகள் பாய்மரம் செலுத்த உதவியுள்ளன. இத்தகைய கடல் மார்க்கமாகக் கண்டுபிடிக்கப்பட்ட பாதையில் முக்கிய இடத்தைப் பெறுவது தென்னிந்தியக் கடற்கரை. எனவே 2000-3000 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் வாழ்ந்த மனித சமூகத்தினர் இடையே தொடர்பும், தகவல், அறிவுப் பரிமாற்றமும் நிகழ்ந்துகொண்டே தான் இருந்துள்ளது. அரிஸ்டாட்டில் கூறுகிற பஞ்சபூதமும், நம் புராணங்களில் குறிப்பிடப்படுகிற பஞ்சபூதங்களும் ஒரே போல் தான் உள்ளன. எண் கணித ஆராய்ச்சிகள் பரவியுள்ளன. இவை ஒவ்வொன்று குறித்தும் ஆழமாகச் சென்றால் மிக விரிவாகப் பேசலாம். அது இப்போது வேண்டாம்.

நான் சொல்ல வருகிற கருத்து , எத்தனையோ வேந்தர்கள், பேரரசுகள், சிற்றரசுகள் கோலோச்சிய தமிழ் நிலத்தில், கல் தோன்றி முன் தோன்றா காலத்தில் தோன்றிய மொழி என பெருமிதப் படும் இனத்தில், தெளிவான வரலாறு ஏன் எழுதி வைக்கப் படவில்லை? வரலாறுதான் வருங்காலத்தை வழிநடத்தும் என அறியாமலா இருந்திருப்பார்கள்? நிச்சயம் இருக்காது. அலெக்சாண்டர் போரஸ் இடையே நடந்த விவாதத்தை வரிவிடாமல் எழுதி வைத்திருக்கிறான். ஆனால் அது நடந்து 1200 ஆண்டுகள் கழித்து , கடாரம் வரை சென்று வெற்றிக் கோடி நாட்டிய , அன்றைய உலகின் மிகப்பெரும் கப்பல் படை வைத்திருந்ததாகச் சொல்லப்படும் சோழ மன்னர்கள் குறித்து, அவர்கள் போர் முறை, சமூகக் கட்டமைப்பு, அன்றாட செயல்பாடுகள் குறித்து விலாவாரியாக எழுதி வைக்கப் படவில்லை என்பது எனது கருத்து .

சங்க காலத்தில் எழுதி வைக்கப் பட்டதெல்லாம் கடல் கொண்டு போய் விட்டது என சமாதானம் சொல்ல இயலாது. வரலாறு எழுதப் பட்டிருந்தால், அதன் மகத்துவத்தை உணர்ந்திருந்தால் நிச்சயம் பாதுகாப்பட்டிருக்கும். கிபி 4 ஆம் நூற்றாண்டில், ஜூலியஸ் சீசர் ஆட்சியில் அன்றைய மிகப்பெரும் நூலகமான அலெக்சாண்ட்ரியா நூலகம் தீக்கிரையானது. அதில் வைக்கப்பட்டிருந்த பழம்பெரும் வரலாற்றுக் குறிப்புகள் தீக்கிரையாயின. நூலகம் எரிந்ததே 1600 ஆண்டுகளுக்கு முன்னால் அதில் உள்ள பழம்பெரும் வரலாறு எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருந்திருக்கக் கூடும்?? தமிழ் சங்க காலம் கிமு 3 முதல் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை என சொல்லப் படுகிறது. உண்மையில் கிமு 3 ஆம் நூற்றாண்டு என்பது மிகப் பழமையான காலம் எனச் சொல்ல இயலாது. ஹெரோடோடஸ் வாழ்ந்த காலம், புத்தர் வாழ்ந்த காலம் சங்க காலத்தைக் காட்டிலும் 3 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளது. பழைமையான நூலாக நாம் கருதும் தொல்காப்பியம் கூட கிமு 3 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள். அது லியோனிடாஸ் காலத்திற்கு பிந்தைய காலம். லியோனிடாஸ் வாழ்ந்த ஸ்பார்டன் காலத்தில், இன்றைய சனநாயக அமைப்பைப் போல அரசியலமைப்பு இருந்ததை மறந்துவிடக் கூடாது. மன்னன் படைநடத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் தான் அவன் 300 பேரை கூட்டிக் கொண்டு போருக்குச் சென்றான். சாக்ரடீஸ் வாழ்ந்த காலத்தை ஒட்டித்தான் நமது சங்க இலக்கியங்கள் எழுதப் பட்டிருக்க/தொகுக்கப் பட்டிருக்க வேண்டும். சாக்ரடீசைக் காட்டிலும் தொல்காப்பியர் மிகப் பழமை வாய்ந்தவர் போன்ற ஒரு பிம்பம் எழுகிறது. அத்தகைய பிம்பம் மிகைப்படுத்தப்பட்ட பழம்பெருமையின் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ளதா?

தொல்காப்பியமே கிமு 3 ஆம் நூற்றாண்டு என்றால் அதற்கு முன்பு எதுவும் எழுதப் படவில்லையா? அல்லது அழிந்து போயினவா? அப்படியானால் அதற்கான காரணிகள் என்ன? திருக்குறளில் கூறப்படாத அறக்கருத்துக்க்களே இல்லை எனலாம் என்பது உண்மைதான். அதில் ஒரு பண்பட்ட சமூகம் தெரிகிறது. அந்தச் சமூகம் அதற்கு முன்பு வாழ்ந்த சமூகத்தினரால் கட்டமைக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தக் கட்டமைப்பிற்கான ஞானம் சில வெளியில் இருந்தும் வந்திருக்கலாம் அல்லவா? ஏன்.. 5000 ஆண்டுகளுக்கு முன்பு பிரமிட் எழுப்பிய எகிப்து தேசத்தில் இருந்து வந்திருந்தால் ? மறுப்பதற்கு வலுவான ஆதாரம் இல்லையெனில் எல்லா கோணங்களிலும் யோசிக்கலாம் தானே. இங்கிருந்துதான் பாரோ மன்னர்கள் அங்கே போயிருக்கக் கூடும் என வாதிட்டால் அதை ஏற்க்க முடிவதில்லை. ஏனெனில் நம்மைக் காட்டிலும் பழைமையான வரலாற்று எச்சங்கள் அங்கே தான் உள்ளது. நதிக்கரை நாகரீகங்கள் சுமேரியா, சிந்து, நைல், மஞ்சளாறு என வகைப்படுத்துகிறார்கள். இவை அனைத்துமே பழமையானது என்றாலும், அவற்றில் மிகப் பழமையானது எதுவாக இருக்குமோ அதுதான் மற்றைய நாகரீகத்தின் தாயாக இருந்திருக்கும். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகள் இடைவெளி அவற்றிற்கு இடையே இருந்திருக்கக் கூடும். வேட்டையாடித் திரிதல், உணவு சேகரித்தல் தான் மனிதனின் ஆதி தொழில். ஓடிக்கேண்டே இருக்கும் வேட்டைச் சமூகத்தால் உட்காந்து சிந்திக்க இயலாது. நதிக்கரையில் விவசாயத்தை மனிதன் கண்ட பிறகுதான் இனக்குழுக்கள் உட்காந்து சிந்தித்து நாகரீகத்தை வளர்த்தெடுப்பதற்கான நேரமும், ஆற்றலும், ஆர்வமும், சூழலும், தேவையும் பிறந்திருக்கும்.

நவீன மரபணு ஆராயிச்சியின்படி இன்றைய மனித இனமே 40 - 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்காவில் இருந்து, குறிப்பாக இன்றைய எத்தியோபியாவில் இருந்து தான் இடம்பெயரத் தொடங்கின என்கிறார்கள். 40ஆயிரம் என வைத்துக் கொண்டாலும், நாகரீகம் தொடங்கி, மொழி வளர்ந்து,செழுமையுற்று, சமூகக் கட்டமைப்பு நிறுவப்பட 20 ஆயிரம் ஆண்டுகள் என வைத்துக் கொள்வோம். அப்போதும் 20 ஆயிரம் ஆண்டுக்கான வரலாறு இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10ஆயிரம் ஆண்டு பழமையான வரலாற்று எச்சம் கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். அவ்வளவு பழமையான எச்சம், எகிப்திலும், சுமேரியாவிலும்தான் கிடைத்துள்ளது. தென்னிந்தியாவில் கிடைக்கப் பெறவில்லை.

5000 ஆண்டுப் பழமையான மம்மிக்கள் எகிப்தில் கிடைத்துள்ளன. சுமேரியாவின் கியூனிபார்ம் எழுத்துக்கள் கிடைத்துள்ளன. இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் களிமண்ணில் அச்சுகள் பதித்து எழுதும் முறை. இந்த எழுத்து முறை 30 ஆயிரம் ஆண்டுப் பழமையானது என்கிறார்கள். அப்படியானால் தொல்காப்பியத்தோடு ஒப்பிட்டே பார்க்க இயலாத அளவிற்குப் பழைய எழுத்துக்கள். களிமண் புத்தகங்கள் இவை. அதில் சில வரலாற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறான் சுமேரியன்.

மேலும் , சிந்துச் சமவெளி நாகரீகம் 5000 முதல் 3500 ஆண்டுகள் பழமையானது. அங்கே சுட்ட செங்கலால் வீடு கட்டி இருக்கிறான், குளம் வெட்டி இருக்கிறான், சக்கரம், உலோகம் பயன்படுத்தி இருக்கிறான், கலைப் பொருட்கள் செய்திருக்கிறான், சாக்கடை வடிகால் அமைத்து திட்டமிட்ட நகரை 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கி இருக்கிறான். ஆனால் தெக்கானத்து பீட பூமியில் (டெக்கான் பிளேடோ) நாகரீகத்தை வளர்த்தெடுக்கும் அளவிற்கு அத்தகைய பெரிய நதிக்கரைகள் இல்லை. அப்படியானால் சிந்து நாகரீகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள்தான் தென்னிந்தியர்களா? அல்லது அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு நிகராக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தெக்கானத்தவர்களா? அப்படியானால் ஏன் அவ்வளவு செழிப்பான நதிப்படுகை நாகரீகத்தை விட்டுவிட்டு இடம் பெயர வேண்டும்?

நமக்குக் கிடைத்துள்ள பழமையான தமிழ் எழுத்துக்களாகக் கருதப் படும் பிரம்மி எழுத்துக்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நமது பழனி மலையில் கிடைத்துள்ளது. அது இன்று நாம் பேசும் தமிழ் அல்ல. ஒருவகை prototype மூல மொழிதான். அந்த மொழிக்கு மூல மொழியாக ஒரு மொழி இருந்திருக்க வேண்டும். தெக்கானத்தில் ஆகப் பெரிய நதி கோதாவரி. அந்த நதிப்படுகையில் ஒரு மொழி பேசப்பட்டுள்ளது. மொழியியல் ஆய்வின்படி அது ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறார்கள். 5000 ஆண்டு பழமையான வரலாற்று எச்சம் கிடைக்கவில்லை, ஆனால் மொழி ஐயாயிரம் ஆண்டு பழமையானதாக எவ்வாறு இருக்க முடியும்? வேறொரு இடத்தில இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தால் இருக்க வாய்ப்புள்ளது. கோதாவரி நதிப் படுகையில் நிலவிய அந்த மூல மொழி தெக்கானத்து மொழிகளுக்கு எல்லாம் தாயாக இருந்து, அக்குடும்பத்தில் இருந்து மருவி கிளைபரப்பிப் பிறந்த 35 மொழிகளுக்கு மூலமாக இருந்திருக்க வேண்டும். தமிழையும் சேர்த்து.

இன்னொரு கோணத்தில் யோசித்தால், 

ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து பரவி வாழ்கிற இனம்தான் மனித இனம். 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடப்பெயர்ச்சி தொடங்கி இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விருமாண்டி என்பவரது மரபணுதான் இந்தியாவின் மிகப் பழமையான மரபணு என்கிறார்கள். ஆபிரிக்காவில் இருந்து தொடங்கி சிந்து நதியைக் கடந்து, விந்தியா சாத்பூரா மலையை ஒட்டி நர்மதா தபதி ஓரத்திலேயே நடந்து இன்றைய இந்தியாவைக் கடந்து அந்தமான் சென்று அதன் வழியே ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா வரை சென்றுள்ளான் மனிதன். இன்றைய அந்தமான் அப்போது தீவாக இல்லை, மலைதொடராக இருந்துள்ளது. கடைசி பனிக்காலம் என்பது 1,10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 12,000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றுப் பெற்றுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் மனிதன் அந்தமான் தீவிற்கு சென்றுள்ளான். பின்னர் பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து அந்தமான் மலைத்தொடர் தீவாக மாறிவிட்டது. அங்கே இருந்த மனித இனம் வெளியுலகில் இருந்து துண்டிக்கப் பட்டுவிட்டது. அந்தமானில் உள்ள பழங்குடியினர் 40,000 ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள். 25000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள் என்கிறது மற்றொரு ஆய்வு. எதுவாகினும், அது பணிகாலத்தோடு பொருந்துகிறது. பின்னர் கடல் மட்டம் உயர்ந்து, அவர்கள் துண்டிக்கப் பட்டுவிட்ட காரணத்தால் அவர்களில் எவ்வித இனக்கலப்பும் ஏற்படவில்லை. பின்னாளில் உருவான நாகரிகமும் அவர்களை வந்து சேர வாய்ப்பில்லை. விசித்திரம் என்னவென்றால் அந்தமான் பழங்குடியினருக்கு நெருப்பு உருவாக்கத் தெரியாது. மேலும், அந்தமானைத் தாண்டி ஆஸ்திரேலியாவைக் கடந்து ஆஸ்திரேலியாவுக்குக் கீழே இருக்கும் டாஸ்மேனியாவில் குடியேறிய பழங்குடியினருக்கும் நெருப்பு உருவாக்கத் தெரியவில்லை. இன்றுவரை வேட்டைச் சமூகக் குழுக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அப்படியானால் அவர்கள் இடம்பெயர்ந்த காலத்தில் நாகரீகமே உருவாக வில்லை என்பது நிரூபணமாகிறது.

சரி இடம்பெயர்ந்த மனிதக் குழுவில் ஒரு குழு அந்தமான் பக்கம் போய் விட்டதென்றால், மற்றொரு குழு, விந்திய மலைத்தொடர் முடிந்ததும் தெற்க்கே இறங்கி இருக்கக் கூடும். தெற்கே இறங்கியதும் தென்படுகிற முதல் நதி கோதாவரி. மிகப் பழமையான நதிதான். கோதாவரி டெல்டாவில் கடலுக்கடியில் எண்ணெய் கனிமம் உருவாகிற அளவிற்கு பழமை வாய்ந்தது. நதிகள் நிலத்தில் இருந்து கொண்டு வரும் ஊட்டத் தாதுக்கள் நதி கடலில் கலக்கும் இடத்தில் (டெல்டா, எஸ்ட்டுரி) தான் அதிகம் இருக்கும். அவற்றைக் கொண்டு உண்டு வளர்கிற கடல் பாசிகள்தான் கடலில் படிந்து காலப்போக்கில் எண்ணெய் கனிமமாக மாறுகிறது! அங்கேதான் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஆழ்கடல் எண்ணெய் எடுக்கிறது.

மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், இந்துச் சமவெளியில் தங்கி பிற்காலத்தில் நாகரீகத்தை ஒரு சாரார் நிறுவ, மற்ற குழு கடற்க்கரை ஓரத்திலேயே நடந்து சென்றிருக்கக் கூடும். அவ்வாறு செல்வதாயின், கொங்கன் மலபார் கரை வழியாக நடந்திருக்க வேண்டும். ஏனெனில் இடையில் ஓடும் அடர்ந்த காடுகளைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்லத் தோன்றி இருக்காது. அல்லது அக்குழுவில் ஒரு சாரார் மலைகளில் தங்கிவிட, மற்ற குழு கடற்கரை ஓரப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்ந்து அந்தமான், ஆஸ்திரேலியா வரை வந்திருக்க வேண்டும். இவர்கள் யார்? தீபற்றவைக்கக் கூடத் தெரியாத பழங்குடி வேட்டுவர் மக்கள்.

அப்படியானால், தெக்கானத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் முதன் முதலில் மனிதன் குடியேறி இருக்கக் கூடும். இதற்கு சில சான்றுகளும் உள்ளன. சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை நூல் முருகக் கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டுள்ளது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் மதுரை கணக்காயனார் மகன் நக்கீரர் எழுதியுள்ளார். பொதுவாக ஆற்றுப்படை நூல்கள் மன்னர்கள் அதாவது வன்மையாளராகத் திகழ்ந்த புரவலர்களைத் தான் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்கும். இந்நூல் அதிலிருந்து சற்றே மாறுபடுகிறது. அதற்கான காரணிகளை ஆராய்ந்தால் கிடைக்கிற உண்மை...

பண்டைய தமிழன் வகுத்த ஐவகை நிலங்களில் முதன்மையாக அவன் கருதியது மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தையே. முருகன் குறிஞ்சி நில தெய்வம். தொல்காப்பியத்தில் ஒரு வரி உண்டு , ´´சேயோன் மேயமைவரை உலகமும் ´´என்று. அது உணர்த்தும் பொருள் , உலகில் முதன்முதலாகத் தோன்றி வாழத் தொடங்கியது குறிஞ்சி நிலத்தில்தான் என்று. அங்கே வாழத் தொடங்கிய மக்கள் இயற்கையைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி இருக்கிறான். இந்த இயற்கை இவ்வளவு ஒழுங்குற நடப்பதற்கு ஒரு முழுமுதற் சக்தி, அல்லது கடவுள் இருத்தல் வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்க வேண்டும். இவ்வுலகில் (அவன் அறிந்த உலகில்) உள்ள ஒவ்வொரு அணுவிலும் உறைந்து அதனை இயக்கும் சக்தி அது என நம்பி இருக்கிறான். எதனையும் சாராமல் தன்னிச்சையாக இயங்கும் அந்த சக்திக்கு ´´கந்தழி ´´எனப் பெயர் இட்டு வழங்கியுள்ளனர். பின்னர் அறிவு முதிர்ச்சி பெறத் தொடங்கிய பிற்காலத்தில், உணர்வுகளுக்குப் புலனாகத் தெரிகின்ற அழகு அனைத்தையும் அந்தப் பெயரால் வழங்கத் தொடங்கினர். அதற்கு முருகு என்னும் சிறந்த பெயரையும் வழங்கியுள்ளனர். பின்னர் தமிழ் மொழி வளர்ச்சியுற்று, ஒருவித ஒழுங்கு, இலக்கணக் கட்டமைப்பு, எழுத்து சொல் பொருள் என ஒழுங்குக்குள் சென்ற பொழுது, அந்த பொதுப் பெயருக்கு ஆண்பால் விகுதியாகிய ´´அன் ´´விகுதி வழங்கி ´´முருகன்´´ என வழங்கியுள்ளனர். முருகு என்கிற தனித்தமிழ் சொல்லுக்குப் பொருள், உயரிய கடவுள் பண்பை உணர்த்தும் அழகு, இளமை, இன்பம் என்பதே.

சரி இப்போது, குறிஞ்சிதான் முதலில் மனிதன் குடியேறிய நிலம் எனவும், அதன் கடவுள் முருகன் எனவும் நிறுவியாகி விட்டது. ஆம், நதிப்படுகைகளுக்கு அடுத்து நீரும் உணவும் கிடைக்கப் பெரும் இடம் மலைக் காடுகள்தான். எனவே இதில் உண்மை இருப்பதாக நம்பலாம். அடுத்து எழுகிற கேள்வி, முருகனுக்கு தந்தை சிவன் என்கிறது புராணம். சிந்துச் சமவெளி நாகரீகத்தில் வணங்கப்பட்ட கடவுள் பசுபதி (சிவன்) என அகழ்வாராய்ச்சி சொல்கிறது. தென்னாடுடைய சிவனே போற்றி எனத் தமிழில் கூறப்படுவது சிவன் தென்னாட்டின் கடவுள் என்பதைக் குறிக்கிறது. அப்படியானால், சிந்துச் சமவெளியில் வணங்கப்பட்ட கடவுள் சிவனை தென்னகத்தில் வாழ்ந்து வந்த மலை வாழ் மக்களுக்கு, நாகரீகத்தில் சற்றே முன்னேறிய, சிந்துவெளி நாகரீகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் கொண்டு வந்து பரப்பி இருக்க வேண்டும். அதே மக்கள் இமாலயதிற்க்குத் தெற்கே, கங்கை நதிப்புறத்தில் குடியமர்ந்திருக்க வேண்டும். அதன் மூலம் இமயமலைக்கும், கங்கைக்கும், சிவனுக்கும் இடையே உள்ள தொடர்புக்கு விளக்கம் கிடைக்கப் பெறுகிறது. இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் பசுபதிநாதர் கடவுளாக இருந்திருக்க வேண்டும். இங்கே கடவுள் என்பது, அவனது புலன்களுக்குப் புலப்படாத சக்திகளுக்கு அவன் வழங்கிய பெயர், உருவம், வடிவம் எனக் கொள்ள வேண்டும்.

சிந்து வெளி மக்கள் இடம்பெயர்ந்து கீழே வரக் காரணம் என்ன? 

நாகரீகம் வளர வளர, தேவைகளைத் தேடி நகர்ந்திருக்கலாம். ஏதேனும் நோய் நொடி தாக்கி நகரங்கள் அழிந்திருக்கலாம் (ஹரப்பா, மொஹென்ஜோ தரோ நகரங்கள் சேதாரம் இன்றி புதையுண்டுள்ளதே எப்படி? மக்கள் நோயால் அழிந்திருக்க வேண்டும். அல்லது எதோ காரணத்தினால் பெயர்ந்திருக்க வேண்டும். செயற்கைக்கோள் புவி ஆய்வு அடிப்படையில், நதிகள் வற்றிய காரணத்தால் மக்கள் செழிப்பான நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததுதான் நகரங்கள் வரிதாகப் போனதற்குக் காரணம் என்கிறது ஒரு ஆய்வு. அதை முற்றிலும் மறுத்துவிட இயலாது. இவை நடந்து 20-30 ஆயிரம் வருடங்கள் இருக்கக் கூடும்.

அவர்கள் இடம்பெயர்ந்து தென்னகம் நோக்கி வருவதாக வைத்துகொண்டு பார்ப்போம். தற்போது அந்தமான் தீவில் உள்ள பழங்குடிகள் போல,தெக்கானத்தில் நீர் நிலைகள் நிறைந்த மலை மலை சார்ந்த பகுதிகளில் அதே போல பழங்குடியினர் வாழ்ந்திருக்க வேண்டும். 20-30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற அந்தமான் சகோதரர்களைப் போல அல்லாமல், இவர்களுக்கு சில நாகரீக தாக்கங்கள் சில மெதுவாக வந்து சேர்ந்திருக்கக் கூடும். உதாரனத்திற்க்கு நெருப்பு.

இல கோபாலசாமி .
10639542_10152414692142377_3415352461713

 

  • தொடங்கியவர்

பகுதி -2 (part 2 of 2)

நாம் யார்? ஆதி தமிழன் யார்? வரலாற்றில் எது உண்மை? எது மிகைப்படுத்தல்? எதை நம்புவது? ஏன் இல்லை? - அறிவு சார்ந்து மட்டுமே சிந்தித்து ஆராய்வோம் வாருங்கள் !

கேரளாவில் பதிவு செய்யப்பட ஒரு ஆவணப் படம் பார்த்தேன். அதில் எதோ கிராமத்தில் பல நூறு தலைமுறைகளாக நடக்கிற ஒரு சம்பிரதாயத்தை முதன் முதலாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அதில் ஒரு பெரியவர் குழந்தைகளை தன்முன்னே அமர வைத்துக்கொண்டு, ஏதேதோ சத்தம் எழுப்புகிறார். அதை குழந்தைகள் திரும்பச் சொல்கின்றனர். என்னவென்றால், மொழி உருவாதற்கு முன்பு தங்கள் முன்னோர்கள் இயற்கையில் இருந்து பெற்ற சப்தங்களை குழந்தைகளுக்கு சொல்லித் தரும் முறையாம். தலைமுறை தலைமுறையாக இன்றுவரை அதைக் கடைபிடித்து வருகின்றனர்(ரகசியமாகவும் இருந்துள்ளது). இறுதியில் ஒரு பந்தலை தீமூட்டி சொக்கபம் கொளுத்துவதைப் போலக் கொளுத்தி நெருப்புக் கடவுளுக்கு நன்றி தெரிவித்து சம்பிரதாயத்தை முடித்துக் கொள்கின்றனர். அப்படியானால் நெருப்பு அறிவு பெற்ற ஆனால் மொழியறிவு இல்லாத மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது. அவர்கள் யார்? அந்தமான் தீவு நோக்கி பயணிக்காமல், தங்கிவிட்ட அந்தாமன் குடியின் அண்ணன்கள் அவர்கள் எனலாம்.

சிந்து வெளியில் இருந்து புறப்பட்ட மனித சமூகம் , கிழக்கே நகர்ந்து கங்கை நதிப்புறத்தில் குடியமர்ந்து, பின் மெல்ல கீழ்நோக்கி வந்திருக்கலாம். அல்லது நேரடியாக தெற்கே நோக்கி கொங்கன் மலபார் கடற்கரை வழியாக இதற்கு முந்தைய மனித இடப்பெயர்வின் தடத்தை பின்பற்றி நடந்திருக்கலாம். முதல் சாத்தியத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால், கங்கையில் இருந்து தெற்கு நோக்கி வந்தால் அடுத்து தென்படுகிற நதி கோதாவரி. அங்கே ஒரு நாகரீகம்/ குடியமர்வு நிகழ்ந்திருக்கவே வாய்புகள் அதிகம். அங்கே பேசப்பட்ட மொழிதான் மூல மொழி, 35 திராவிட மொழிகள் உருவாகக் காரணமாக இருந்த மூல மொழியாக இருந்திருக்கும். அவர்கள் தான் மேலும் தெற்க்கே வந்து , அங்கே வாழ்ந்து வந்த மொழியறிவு அற்ற வேட்டுவர்க்கு மொழியறிவைக் கடத்தி இருக்க வேண்டும். அல்லது நேரே தெற்கு நோக்கி மலபார் வழியாக வந்த சிந்து நாகரீக மக்கள் அவர்களுக்கு மொழியறிவைக் கடத்தி இருக்க வேண்டும். பின்னர் மேற்கு தொடர்ச்சி மலையைக் கடந்து கிழக்கே வந்து, மெல்ல மெல்ல மேல் நோக்கி இமயம் வரைப் பரவி இருக்க வேண்டும். இங்கே நாம் பேசிக் கொண்டிருக்கும் நிகழ்வு நடந்தேற 20 -30 ஆயிரம் வருடங்கள் தேவைப்பட்டிருக்கும், அதுவும் குறைந்த பட்சம் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பதை மறந்துவிட வேண்டாம். சிந்துச் சமவெளி நாகரீகம் 5000 ஆண்டு பழமை என்றுதான் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால், ஒருசாரார் சிந்து நதிக்கரையில் தங்கி அந்த நாகரீகத்தை வளர்த்தெடுக்க, அவர்களிடம் இருந்து பிரிந்து வந்த குழு கோதாவரி நதிக்கரையில், அதே சமகாலத்தில் வேறொரு நாகரீகத்தை வளரத் தெடுத்திருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

கிழக்கேயும் தெற்கேயும் நடந்த மனித இனத்தைப் போல, வடக்கு நோக்கிப் போன இனக்குழுக்களும் இருந்திருக்கும். அவை மத்திய ஆசியக் கண்டத்தில் பரவி ஆயிரக் கணக்கான வருடங்களில் தங்களுக்கென ஒரு நாகரீகத்தை, மொழியை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தான் பின்னாளில், தெற்கு நோக்கி படையெடுத்து வந்திருக்க வேண்டும். இதுதான் ஆரிய ஆக்கிரமிப்பு சித்தாந்தத்தின் அடித்தளம். ஏன்... ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இங்கிலாந்து தீவு, 1500 ஆண்டுகள் கழித்து, பல்லாயிரக் கணக்கான மையில்கள் கடந்து இந்தியாவை , ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிக்க வில்லையா? 1500 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் கடாரம் கைப்பற்றவில்லையா? 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாசிடோனிய மன்னன் அலெக்சாண்டர் இந்தியா வரை படை நடத்தி வரவில்லையா? அதுபோல 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பான நிலப்பகுதியை நோக்கி மத்திய ஆசியாவில் இருந்து ஆரிய இனம் வந்து ஆக்கிரமித்திருக்கக் கூடும். அவர்கள் கொண்டு வந்த மொழி முற்றிலும் வேறு மொழிக் குடும்பத்தைச் சார்ந்ததாக இருந்திருக்கும்.அவர்கள் கடவுளும் வேறாக இருந்திருக்கும். கற்பனையாக எண்ணிப் பார்த்தால், சிந்து மக்கள் வழங்கிய தெய்வம் சிவன் என்றால், அவர்கள் தெய்வம் திருமால். இன்றைய தேசிய எல்லைகள் வைத்துகொண்டு இவர்களது நிலப்பரப்பை நாம் கற்பனை செய்ய முயலக்கூடாது. இயற்கை பரப்பான நிலம், மலை, நதி, கடல் அவை வழங்கும் சூழல் என்பதை வைத்துதான் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

வடக்கிருந்து உயிர் நீத்தல் என்கிற முறை ஒன்று இருந்ததாக இலக்கியங்களில் அறிகிறோம். கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி உட்காந்து உண்ணாவிரதம் இருந்து மடிந்தான் எனப் படித்திருக்கிறோம். உண்ணாநோன்பு இருந்து விரும்புகின்றவர்கள் ஏன் வடதிசை நோக்கி உட்கார வேண்டும்? கிழக்கு, தெற்கு நோக்கி உட்காந்தால் என்ன? யமன் வரும் திசை வடக்கு என்கிறார்கள். அதன் பின்னணி என்ன? வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் பூமியின் காந்தப் புலன்களோடு தொடர்புடையது அது என வியாக்யான விளக்கங்கள் சில சொன்னாலும், அது அறிவியலோடு ஒத்துப்போகவில்லை. மேலும், யமன் உயிரை எடுப்பவன். எருமை வாகனத்தில் வீற்றிருப்பவன். சிவனும் அழித்தல் கடவுள் என்கிறோம். ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட பசுபதி முத்திரையில், பசுபதி மாட்டின் மீது தான் அமர்ந்துள்ளார். இரண்டுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளனவா? சரி... ரொம்பவும் குழப்பிக் கொள்ள வேண்டாம். எளிமையாகச் சொல்வதென்றால், வட திசையில் இருந்து எதோ ஆபத்து மக்களுக்கு வந்துகொண்டிருந்த காரணத்தால் வடதிசை என இருந்திருக்கக் கூடும் என எடுத்துக் கொள்வோம். வடக்கில் இருந்த சிந்துவெளி மக்கள் தெற்கு நோக்கி நகரக் காரணமாக அது இருக்கக் கூடும். அவர்களின் நம்பிக்கையின் எச்சமாக வடதிசை நோக்கிய அச்சம் இந்திருக்கக் கூடும்.

மத்திய ஆசிய மக்கள், சிந்து மக்களை, கங்கைக் கரை மக்களை ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்த பின்பு தான் அவர்கள் தெற்கு நோக்கி வந்தார்களா? என்கிற சந்தேகம்வலுக்கிறது. அதன் பின்னரே தெக்கானத்துப் பழங்குடியினர் வாழ்விடத்திற்கு அவர்கள் வர நேர்ந்ததா ? அவ்வாறு வந்ததால் தான் தங்களுடன் கொண்டு வந்த நாகரீகக் கூறுகளை மொழியறியா பழங்குடிக்கு வழங்கினார்களா? என்பது ஆய்வு செய்யப் பட வேண்டியது. எப்படியோ.. தற்போது தென்னக தெக்கான மக்களுக்கு ஒருவழியாக நாகரீக அறிவு , மொழி வந்து சேர்ந்து விட்டது. புதிய வரலாறு தொடங்குகிறது.

ஒரு மொழி ஒலிவடிவமாக இருக்கும் வரை குறைந்தகாலதிலேயே அது பல மாறுதல்களுக்கும், மருவுக்கும் ஆட்பட்டு விடும். 300-500 ஆண்டுகளில் முற்றிலும் மாறுபட்ட புதிய மொழிகள் பலவாக உருவாக வாய்புகள் உள்ளன. ஆனால் ஒலிவடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்த பின் அந்த மாறுதல்கள் சற்றே தொய்வடைகின்றன. அப்படியானால் ஒரு மொழியின் உண்மையான பிறப்பு என்பதை அம்மொழிக்கு நிலையான வரிவடிவம் கிடைத்த காலத்தை வைத்துதான் கணக்கிட வேண்டும். கிபி 6 ஆம் நூற்றாண்டு வரை மலையாளம் என்கிற மொழியே இல்லை. பழைய தமிழ் மொழி பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் படி, தமிழ் எழுத்துக்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாகதான் இருக்க வேண்டும் என்கிறது. அது ஏறத்தாழ கிமு 3ஆம் நூற்றாண்டு. புத்தர் காலத்திற்குப் பின். கட்டுரையின் தொடக்கத்தில் நான் கூறிய எடுத்துக்காட்டுகளின் அடிப்படியில், 2500 ஆண்டுகள் என்பது பழமை எனச் சொல்லிவிட இயலாது. (ஒப்பீட்டளவில்). தமிழ் பிரம்மி எழுத்துக்களின் காலமான கிமு 300 ஆம் ஆண்டு அசோகர் வாழ்த்த காலகட்டம். புத்த மதத்தை ஏற்ற அரசனாக இருந்துள்ளான். அவன் நிறுவிய இரும்பு தூண் இன்றும் துருப்பிடிக்காமல் நிற்கிறது. இந்திய அரசின் சின்னமாகவும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக , முதன் முதலாக , உலகின் முதல் மனித உரிமை சாசனத்தை வடித்தவன் அசோகன். அதை பல திசைக்கும் அனுப்பி பரப்பவும் செய்துள்ளான். அந்தப் பக்கம் அரிஸ்டாட்டில், பிளேடோ வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த கால கட்டத்தில் தான் தமிழ் எழுத்துக்கள் உருப்பெறுகின்றன.

பள்ளியில் படித்த நியாபகம். பொதிகை மலையில்தான் தமிழும் தென்றலும் பிறந்தது என்று. அகத்திய மாமுனி அங்கேதான் தமிழை உருவாக்கினார் என்கிறது புராணம். (பொதிகை மலை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது - குறிஞ்சி நிலம் ) புராணம் சொல்வது என்னவென்றால், சிவபெருமான் இரண்டு அறிஞர்களை அனுப்பினாராம். ஒருவர் வியாசர் மற்றவர் அகத்தியர். முன்னவர் சமஸ்கிருதத்தை உருவாக்கினாராம், மற்றவர் தமிழை உருவாகினாராம். உருவாக்கினார் என்றால் என்ன அர்த்தம்? ஒன்று ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்திருக்க வேண்டும். அடுத்ததாக இலக்கண விதிகளை வகுத்திருக்க வேண்டும். தோராயமாகப் பார்த்தால் இவை நடந்து 5000 - 3000 ஆண்டுகள் தான் ஆகி இருக்க வேண்டும். ஆனால் பழனியில் கிடைத்த பழைய பிரம்மி தமிழ் எழுத்து 2500 ஆண்டுகளே பழமையானது என முன்பே பார்த்தோம். அப்படியானால் அதற்குப் பிறகுதான் அகஸ்தியர் காலமா? அல்லது அகஸ்தியருக்குப் பிறகு பிரம்மி எழுத்துக்கள், இலக்கணம் கிடைக்கப்பெற்று , சில நூற்றாண்டுகள் கழித்து தொல்காப்பியர் அதை செழுமைப் படுத்தி எழுதி இருக்கிறாரா? ஆம்.. அதற்கு வாய்புகள் அதிகம். தொகாப்பியத்தில், அதற்கு முன்பு வழங்கப்பட்ட எழுத்து முறையில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் எழுத்து முறையில் , பல நூற்றாண்டுகள் கழித்து (கிபி 14 ஆம் நூற்றாண்டு ) பல்லவர் காலத்தில் தான் பெரிய சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது. பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதுவதால் ஓலை கிழித்து விடக் கூடாது என்பதற்காக. அதன் பிறகு அச்சு இயந்திரங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அண்மைய நூற்றாண்டில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் ஒப்பீட்டளவில், மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஒரு கேள்வி எழுகிறது. தமிழ் என்பது உலகின் மிகப் பழமையான மொழி என நமக்குப் பயிற்ருவிக்கப் பட்டது, உணர்வூட்டப்பட்டது உண்மைதானா? இன்று நாம் பேசும் தமிழ் மொழி, தெக்கானத்து (திராவிட) மொழிக்கெல்லாம் பிறப்பு தந்த தாயா? அல்லது உடன்பிறந்த மூத்த அக்காவா? பூர்வகுடித் தமிழன் என்பவன் யார்? குறிஞ்சி நிலத்தில் முதலில் குடியேறிய, நெருப்பு பற்றவைக்கக் கூடத் தெரியாத அந்தப் பழங்குடியா? அல்லது நெருப்பு பற்றவைக்கத் தெரிந்த அடுத்தகட்ட பழங்குடியா? அல்லது சிந்து வெளி மக்களிடம் இருந்து நாகரீகத்தையும் மொழியையும் பெற்றுக் கொண்ட பழங்குடியா? அல்லது இடம் பெயர்ந்து வந்த சிந்துவெளி மக்களா? அல்லது கோதாவரி நதிக்கரையில் இருந்து தெற்கு நோக்கி வந்தவர்களா?

இதற்கு விடை கிடைக்காவிட்டால் நான் சோறு சாப்பிடாமல் பட்டினி கிடக்கப் போவதில்லை... ஆனால் தெரிந்துகொண்டால் நம் வரலாற்றின் ஒரு பகுதியை அறிந்து கொண்ட மகிழ்ச்சி ஏற்படுமே. மேலும் வரலாற்றின் அடிப்படி தெரியாமல் இனம், பூர்வகுடி அடிப்படையில் பேசப்படும் இன்றைய அரசியலை எதிர்கொள்ள இயலுமே என்பதற்காகக் கேட்கிறேன்.

உண்மையில், தமிழ் மன்னர்கள் குறித்த தெளிவான வரலாறு ஏன் எழுதப்படவில்லை என்பதைத்தான் அலச நினைத்தேன். கட்டுரை மொழியின் பக்கம் நழுவி, விரிந்து விசாலமடைந்து விட்டது. இப்போது முதல் கேள்விக்கு வருவோம். எகிப்து மன்னர்களின் பிரமிடுகள் 5000 ஆண்டுகள் கழித்து இன்றும் உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிளியோபட்ராவின் அரண்மனை கடலுக்கடியில் உள்ளது. ஆனால் தமிழ் மன்னர்கள் கட்டிவைத்த சில கோவில்கள் தவிர்த்து அவர்களின் வாழ்விடமோ அரண்மனையோ எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை (ஒருசிலவற்றைத் தவிர). 2000 ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டாம். ஆயிரம் ஆண்டுகள் முன் எடுத்துப் பார்ப்போம். எத்தனை அரண்மனைகள் உள்ளன? இத்தனைக்கும் எந்த அந்நிய படைஎடுப்பிற்க்கும் ஆளாக வில்லை. இதற்கு நான் கேள்விப்பட்ட காரணம் என்னவென்றால், எப்போதும் ஒற்றுமைக் குறைவினால் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனராம். ஒரு மன்னன் மற்றொரு மன்னனைத் தோற்கடித்ததும் அவன் வாழ்விடத்தை இடித்து நிர்மூலமாக்கி, அங்கே எள் , ஆமணக்கு செடிகளை நட்டு வைத்துவிட்டுச் சென்றுவிடுவானாம். வரலாறு அதிகம் அறிந்தவர்கள் தெளிவு படுத்தவும்.

இங்கே நாம் பேசிய எந்த இடத்திலும், சாதி குறித்து எத்தகவல்களும் இல்லை. ஏனெனில் வரலாற்றின் அண்மைய கால கட்டத்தில் தோன்றிய நடைமுறையாக அது இருந்திருக்கும். நிர்வாகம், பொருளாதாரம், சமூக இயங்கியல் முதலிய புறக்காரணிகளால் தொழில் ரீதியான சாதிய கட்டமைப்பு உருவாகி இருக்கிறது. சற்றே பின்னே சென்று பார்த்தல் நமக்குப் புரிகிற உண்மை, மனிதர்கள் அனைவரும் ஒரே குழுவில் இருந்து வந்தவர்களே. அவரவர் இனக்குழுக்கள் வாழ்ந்த இடத்தின் தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்ப தோல் நிறம், உருவ அமைப்பு சற்றே மாருபட்டுலல்தே தவிர மனிதர்கள் அனைவரும் ஒன்றே. இந்த உண்மையை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

இறுதியாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு அலெக்சாண்டர், போரஸ் , அரிஸ்டாட்டில், பிளேடோ, சாக்ரடீஸ் போன்றவர்களின் குறிப்புகள், படைப்புகள் அளவிற்கு தெளிவான படைப்புகள் இருந்திருந்தால், இன்றைக்கு பழந்தமிழர் வரலாறு குறித்து மேலும் அதிகமாக, துல்லியமாக நாம் வரையறுத்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவி இருக்கும்.

இன்னும் பல தகவல்களை ஆராயலாம். ஆனால் அவற்றைத் தொகுக்கவோ, தட்டச்சு செய்யவோ, திருத்தப்பட்ட படிவம் வடிக்கவோ நேரமில்லாத காரணத்தால் இத்தோடு நிறுத்துகிறேன். நீண்ட கட்டுரை என்றாலும், குறைந்தபட்சம் வரலாறு அதிகம் அறியாத இளையோர்களுக்கு ஓரளவு மனித குல இடப்பெயர்வு, நாகரீகம், மொழித் தோற்றம் குறித்த மேலோட்டமான சித்திரத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கும். வரலாறு அறிந்தவர்களுக்கு மனதில் பல கேள்விகளை எழுப்பி இருக்கும் என நம்புகிறேன். மேலுள்ள தகவல்கள், நான் அறிந்த தகவல்களைக் கொண்டு எனது அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பதைப் போல, எனக்குத் தெரியாத பல செய்திகள், முரணான தகவல்கள் இருக்கக் கூடும். வரலாற்றை அறிந்துகொள்ளும் நோக்கில் அவற்றை ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டுகிறேன். மேலுள்ளது எனது தீசிஸ் (thesis) .. முரண் கருத்து வருமாயின் அது ஆண்டிதீசிஸ் (anti-thesis) .. இரண்டையும் ஆராய்ந்து புதிய கருத்து பரிணாமம் பெற்றால் அதற்குப் பெயர் சிந்தசிஸ் (synthesis). Synthesis உருவாக்கத்திற்கான பங்களிப்பை உங்களிடம் எதிர்பார்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தமது சொந்த அரசியலுக்காக நிறையவற்றை திரித்தெழுதி தமிழர்களை ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்று நிறுவமுற்படும் எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் அற்ற கட்டுரை. அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று இதன் ஆசிரியரே ஒரு தெளிவில்லாத நிலையில் இருந்துகொண்டு தமிழின் தொன்மையை நாகரீகத்தை மறுத்தெழுத விழைகிறார். தமிழர்களை தமிழர்களே ஆழவேண்டும் என்ற சீமானின் நியாயமான கோரிக்கையை மறுதலிக்க வந்தேறிகளுக்கு வழிசமைக்க அரசியல் மோதலின் தொடர்ச்சியாய் இல கோபல்சாமி தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று நிறுவமுற்படுகிறார். பாவம் அவர்.. இதுவும் கடந்துபோகும். தமிழ்வாழும்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

தமது சொந்த அரசியலுக்காக நிறையவற்றை திரித்தெழுதி தமிழர்களை ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்று நிறுவமுற்படும் எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் அற்ற கட்டுரை. அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று இதன் ஆசிரியரே ஒரு தெளிவில்லாத நிலையில் இருந்துகொண்டு தமிழின் தொன்மையை நாகரீகத்தை மறுத்தெழுத விழைகிறார். தமிழர்களை தமிழர்களே ஆழவேண்டும் என்ற சீமானின் நியாயமான கோரிக்கையை மறுதலிக்க வந்தேறிகளுக்கு வழிசமைக்க அரசியல் மோதலின் தொடர்ச்சியாய் இல கோபல்சாமி தமிழர்களை தமிழர்கள் இல்லை என்று நிறுவமுற்படுகிறார். பாவம் அவர்.. இதுவும் கடந்துபோகும். தமிழ்வாழும்...

இதில் எங்கு சீமான் வருகிறார் சுபாஸ் ..ஒரு தேடலின் கணிப்பு நீங்கள் உங்கள் கருத்து சொல்ல ங்க அரசியல் ஆக்காமல்.

பாஸ் வரலாறு என்பது மிகப்பெரிது. இரண்டு புத்தகத்தை வாசித்துவிட்டும், நீங்கள் கேட்டதை வைத்துக் கொண்டும்  எது உண்மை? எது பொய்? என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் யாரும் கேட்கப் போவதுமில்லை.
 
நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்? நீங்கள் கேட்டது, படித்தது எல்லாவற்றையும் மொத்தமாக உங்களுக்கு ஏற்றவாறு எழுதி யாரை குழப்ப விரும்புகிறீர்கள்?? 
 
மிகைப்படுத்தப்பட்ட உவமைகளும், உருவகங்களும் கொண்டு புகழ் பாடும் தொனியில் இருப்பதைக் காண்கிறோம். பரணிபாடுதல் என்றால் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரன் ஒருவன் பெற்ற வெற்றியின் புகழ் பாடுதல் எனப் பொருள்படும். அலெக்சாண்டரின் படைகளை எதிர்த்த போரஸின் படையில் மொத்தம் 130 யானைகளே இருந்தன. ஆனால் தென்னிந்திய மன்னன் ஒருவன் எப்படி ஆயிரம் யானைகளைக் கொல்ல முடியும்? கலிங்கத்துப் பரணியில் ஒரு உவமை எனக்கு நினைவிற்கு வருகிறது. போர்க்களத்திற்கு உச்சிவெயில் நேரத்தில் ஆகாயத்தில் ஒரு கழுகு பறக்கிறதாம். நிலத்தின் சூடு தாங்க முடியாமல் அந்தக் கழுகின் நிழல் வேகமாக ஓடுகிறதாம்.

 

 

கலிங்கத்துப் பரணி என்பது இலக்கிய நூல். அதில் போய் அப்படியே நீங்கள் வரலாற்றை தேடினால் எப்படிக் கிடைக்கும்? அதில் சொல்லப்பட்ட உவமைகளை கருத்தில் கொள்ளாமல் கருத்துக்களை மட்டும் பிரித்தெடுப்பதுதான் வரலாற்று ஆசிரியர்களின் வேலை.அறிவு சார்ந்து மட்டுமே சிந்திப்போம் என்று சொல்லிவிட்டு இப்படி அபத்தமான கேள்விகள் கேட்டால் என்ன சொல்வது??
 
 
தென்னிந்திய மன்னர்களிடம் ஆயிரம் யானை இருக்க முடியாது என்பதா? இல்லை ஆயிரம் யானைகளைக் கொல்ல முடியாது என்பதா? ஒரு மன்னனுக்கு அறுபதாயிரம் யானைகள் இருந்தது என்று தமிழ் புலவர்கள் சொன்னார்கள் என்றால் நம்ப மாட்டீர்கள் அதனால் ஒரு சீன வரலாற்று ஆசிரியர் சொன்னதை பதிவு செய்கிறேன்.
 
Chinese geographer Chau Ju-kua, writing in about 1225, gives the following account of the Chola army:
This [Chola] country is at war with the kingdom of the [west] of India. The government owns sixty thousand war elephants, every one seven or eight feet high. When fighting these elephants carry on their backs houses, and these houses are full of soldiers who shoot arrows at long range, and fight with spears at close quarters.
 
அறுபதாயிரம் யானைகள் பங்கு கொண்ட ஒரு போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொல்வது என்பது ஒரு பெரிய விடயம் கிடையாது. மேலும் போர் என்பது ஒரு நாளில் முடிவது கிடையாது மூன்று மாதம், ஆறு மாதம் ஒரு வருடம் என்ற பல நாட்களாக நடக்கும் போரில் ஒரு படையில் உள்ள வீரர்கள், கருவிகள், அறிவு சார்ந்த விடயங்களை எல்லாம் கொண்டு  ஆயிரம் யானைகளைக் கொல்வது சாத்தியமே!!
 
அலெக்சாண்டர் பற்றி சொல்லப்பட்டதெல்லாம் உண்மை தமிழில் எழுதியவை எல்லாம் பொய் என்பதா ?? தொல்காப்பியத்தின் காலம் எவ்வாறு, யாரால் கணக்கிடப்பட்டது என்பதை கவனியுங்கள் .
 
பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின்[5] இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர்.
 
அலெக்சாண்டரின் காலத்தை எளிதாக கணித்து விடலாம். தொல்காப்பியத்தின் காலத்தை அவ்வளவு எளிதாக கணிக்க இயலாது ஏனெனில் அதன் தொன்மை அத்தகையது. மேலும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், மரபியல் முதலியவற்றையெல்லாம் ஒருமுறை நீங்கள் வாசித்து விட்டு எது உண்மை? எது பொய் என்று ஆராயுங்கள் !!
 
வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பால் அதை நோக்க வேண்டும். உங்களால் முடியுமா என்பது கேள்வியே ?
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் வெந்தது பாதி வேகாததுபாதியாகச் சில விடையங்களைக்குறிப்பிடுகிறார்.

 

ஒரு இடத்தில் 40-60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் ஆபிரிக்காவிலிருந்து மனித இனம் இடம்பெயரத்தொடங்கியது எனக்குறிப்பிடும் இவர், பின்பு பத்தாவது பந்தியில் கூறுகையில் 70ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்காவிலிருந்து மனதர்களது இடப்பெயர்ச்சி தொடங்குகிறது எனக்குறிப்பிட்டுள்ளார்.

 

இவரது குறிக்கோள் தமிழ் தொடர்பான வரலாற்றைக் கண்டுபிடிப்பதல்ல எங்காவது தமிழை இருட்டடிப்புச்செய்து. இலக்கியங்களில் உள்ளதை அப்படியே உள்ளபடி நேரடியாகவே பொழிப்புரை கூறி மட்டம்தட்டுவதே.

 

கம்பன் இராவணனை விமர்சிக்குப்போது "பல்லொரு காதம் பல்லிடுக்கு இருகாதம்" எனக் கூறியிருக்கிறான். ஆக அதன்படி பார்த்தால் இராவணனது தலை இலங்கைத்தீவில் தொண்ணூறுவீதப் பிரதேசத்தை ஆக்கிரமிச்சிருக்கும் அவ்வாறிருந்தால் இராமாயனக் கதையே நடந்திருக்க வாய்ப்பெ இருந்திருக்காது. இவைகளை எல்லாம் இலக்கியம் காப்பியம் எனத் தூக்கிப்பிடிக்கும் இவர்கள் தொல்காப்பியம் புறநாநூறு ஐந்தொகை போன்றவற்றைப் புறந்தள்ளுகிறார்கள் என்பது கனியிருக்கக் காய் கவர்தல் போலானது.

 

மேலோட்டமாக இவரது கருத்துக்களை படிப்போர்க்கு ஓ இப்படியுமிருக்குமோ எனும் உணர்வே வரும் அந்த விதத்தில் இக்கட்டுரையாளர் தனது நோக்கில் வெற்றியடைந்திருக்கிறார்.

 

அஞ்சரன் இக்கட்டுரையை இங்கு இணைத்ததுக்கு நன்றி, காரணம் இவ்வாறான கட்டுரைகள்தான் எமதுமொழிக்கெதிரான எதிரிகள் யார் என்பதனை எம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உளிகள் கொன்டு மீண்டும்,மீன்டும் செதுக்குவதனால், கருங்கல்லின் உருவத்தை மாற்றலாம்!

ஆனால் அதன் நிறத்தை மாற்றுவது கடினம் என எண்ணுகிறேன்!

அவ்வாறான செதுக்கல் கட்டுரை போல இந்தக் கட்டுரை உள்ளது!

  • தொடங்கியவர்

 

பாஸ் வரலாறு என்பது மிகப்பெரிது. இரண்டு புத்தகத்தை வாசித்துவிட்டும், நீங்கள் கேட்டதை வைத்துக் கொண்டும்  எது உண்மை? எது பொய்? என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் யாரும் கேட்கப் போவதுமில்லை.
 
நீங்கள் என்ன சொல்ல விழைகிறீர்கள்? நீங்கள் கேட்டது, படித்தது எல்லாவற்றையும் மொத்தமாக உங்களுக்கு ஏற்றவாறு எழுதி யாரை குழப்ப விரும்புகிறீர்கள்?? 
 

 

கலிங்கத்துப் பரணி என்பது இலக்கிய நூல். அதில் போய் அப்படியே நீங்கள் வரலாற்றை தேடினால் எப்படிக் கிடைக்கும்? அதில் சொல்லப்பட்ட உவமைகளை கருத்தில் கொள்ளாமல் கருத்துக்களை மட்டும் பிரித்தெடுப்பதுதான் வரலாற்று ஆசிரியர்களின் வேலை.அறிவு சார்ந்து மட்டுமே சிந்திப்போம் என்று சொல்லிவிட்டு இப்படி அபத்தமான கேள்விகள் கேட்டால் என்ன சொல்வது??
 
 
தென்னிந்திய மன்னர்களிடம் ஆயிரம் யானை இருக்க முடியாது என்பதா? இல்லை ஆயிரம் யானைகளைக் கொல்ல முடியாது என்பதா? ஒரு மன்னனுக்கு அறுபதாயிரம் யானைகள் இருந்தது என்று தமிழ் புலவர்கள் சொன்னார்கள் என்றால் நம்ப மாட்டீர்கள் அதனால் ஒரு சீன வரலாற்று ஆசிரியர் சொன்னதை பதிவு செய்கிறேன்.
 
Chinese geographer Chau Ju-kua, writing in about 1225, gives the following account of the Chola army:
This [Chola] country is at war with the kingdom of the [west] of India. The government owns sixty thousand war elephants, every one seven or eight feet high. When fighting these elephants carry on their backs houses, and these houses are full of soldiers who shoot arrows at long range, and fight with spears at close quarters.
 
அறுபதாயிரம் யானைகள் பங்கு கொண்ட ஒரு போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொல்வது என்பது ஒரு பெரிய விடயம் கிடையாது. மேலும் போர் என்பது ஒரு நாளில் முடிவது கிடையாது மூன்று மாதம், ஆறு மாதம் ஒரு வருடம் என்ற பல நாட்களாக நடக்கும் போரில் ஒரு படையில் உள்ள வீரர்கள், கருவிகள், அறிவு சார்ந்த விடயங்களை எல்லாம் கொண்டு  ஆயிரம் யானைகளைக் கொல்வது சாத்தியமே!!
 
அலெக்சாண்டர் பற்றி சொல்லப்பட்டதெல்லாம் உண்மை தமிழில் எழுதியவை எல்லாம் பொய் என்பதா ?? தொல்காப்பியத்தின் காலம் எவ்வாறு, யாரால் கணக்கிடப்பட்டது என்பதை கவனியுங்கள் .
 
பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின்[5] இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர்.
 
அலெக்சாண்டரின் காலத்தை எளிதாக கணித்து விடலாம். தொல்காப்பியத்தின் காலத்தை அவ்வளவு எளிதாக கணிக்க இயலாது ஏனெனில் அதன் தொன்மை அத்தகையது. மேலும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், மரபியல் முதலியவற்றையெல்லாம் ஒருமுறை நீங்கள் வாசித்து விட்டு எது உண்மை? எது பொய் என்று ஆராயுங்கள் !!
 
வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், உங்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பால் அதை நோக்க வேண்டும். உங்களால் முடியுமா என்பது கேள்வியே ?

 

 

நன்றி  அண்ணே  இவ்வாறான  வாதங்கள்  கருத்துக்கள்  தான்  இன்னும்  அதிக  தேடலை  உருவாக்கும் அவர்  தனக்கு தெரிந்த  தேடலை  முன்வைக்கும்  போது  அதை  மறுதலித்து  ஒன்னொரு  தேடலை  ஆய்வை  நீங்கள்  முன்வைக்கும்  போதும்  அதன் குழப்பங்கள் ..தவறுகள்  எமக்கு  தெரிய  வரும் ஆக ஆக்கபூர்வமான  எதிர் வாதங்கள்  அரசியல் கலப்பின்றி  வருவது வரவேற்க  வேண்டியது .

உளிகள் கொன்டு மீண்டும்,மீன்டும் செதுக்குவதனால், கருங்கல்லின் உருவத்தை மாற்றலாம்!

ஆனால் அதன் நிறத்தை மாற்றுவது கடினம் என எண்ணுகிறேன்!

அவ்வாறான செதுக்கல் கட்டுரை போல இந்தக் கட்டுரை உள்ளது!

உண்மை  தான் அண்ணே  இது சரி  என்று நாம் முடிவெடுக்க  முடியாது தேடல் எல்லோரிடமும்  இருக்கு  அவர்  என்னத்த  தேடுறார்  என்பதுதான்  அவரின்  எழுத்தில்  இருக்கும் ஆக நாம் இதை  உண்மை  என்று நம்ப வேண்டிய தேவையோ  முக்கியமோ இல்லை ..

 

எனக்கு தெரிந்த நாம் படித்த  எதிர்வினையை  முன் வைக்கலாம்  இல்லையா .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கு சீமான் வருகிறார் சுபாஸ் ..ஒரு தேடலின் கணிப்பு நீங்கள் உங்கள் கருத்து சொல்ல ங்க அரசியல் ஆக்காமல்.

அந்தாளு தன் அரசியல் பிழைப்புக்காகத்தான் இந்தக்கட்டுரையே எழுதியிருக்காரு நீங்க வேற இதில அரசியல கலவாதீங்க எண்டுகிட்டு.. தங்க வந்தேறு அரசியலுக்கு ஆபத்துவரும்போது எம் தாய்மடியிலையே கைவைத்திருக்கிறான் ஒருத்தன் அதை நீங்க விவாதத்துக்கு வேறு எடுக்க சொல்லுறீங்க.. சீமான் மீது அரசியல் முரண்பாடு இருந்தால் தாரளமாகா விவாதியுங்கள் மோதிக்கொள்ளுங்கள் ஆனால் மொழி என்பது எமதுதாய்மடி.. இந்தக்கட்டுரை எம் தாயின் நடத்தையை சந்தேகிப்பது போன்றது.. நீங்களும் சீமான் மீதுள்ள முரணில் தாயையே கேவலப்படுத்துபவைகளைகூட பிரித்தறிய முடியா நிலைக்கு போயிட்டியள்.. ஆயிரம் முரண் இருக்கலாம் சீமானின் அரசியலோடு ஆனால் தமிழ் எம் தாய்மடி, அதை ஒருத்தன் அசிங்கப்படுத்துவான் பார்த்துக்கொண்டிருக்கணுமா? இங்கு வந்து கருத்தெழுதிய அத்தனை உறவுகளும் சீமானுக்காக எழுதியவர்கள் இல்லை.. தமிழை சீண்டியபோது பொறுக்கமுடியாமல் வந்தெழுதியவர்கள், இவரெல்லாம் சீமானை தமிழருக்கு எதிரானவர் என்று வீடியோ எடுத்து வெளியிடுகிறார்.. இவர்களைப்போன்றவர்கள் தாங்களாகவே தம் அகமுகங்களை இப்படியான விடயங்களில் காட்டிவிடுகிறார்கள்.. இவர்களைப்போன்றவர்கள்தான் சீமானின் கருத்தியல் நியாயங்களை இன்னும் இன்னும் சிந்திக்க தூண்டுபவர்கள்.. ஒரு தமிழன் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நூற்றில் இல்லை இலட்சக்கணக்கான மடங்கில் இந்தகட்டுரையும் இந்தகட்டுரையாளரின் நோக்கமும் வலுப்படுத்துகிறது..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மொழியும் இனம் குறித்த கவலையும் அந்த மண்ணிண் பிள்ளைகளுக்குத்தானே வரமுடியும். ரஜனி ஒரு மராட்டியர் ரஜனி கடவுளாய்க்கும்பிடும் பால்தாக்கரேயின் மராட்டிய மண்ணில் ஒரு தமிழன் ஆளமுடியுமா? ஆனால் வந்தேறிகள் தமிழனுக்கு அவன் தாய் மொழியையே கேவலப்படுத்தி வகுப்பெடுக்கிறார்கள்..

https://www.facebook.com/video/video.php?v=1505276439754776

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக அருமை, ஒவ்வொரு எழுத்தும் தமிழனையும் அவன் தொன்மையையும் கொச்சை படுத்த தூவப்பட்ட விஷ வித்துகள், தமிழின வரலாற்று அழிப்பின் ஒரு பகுதியாகவே இது உள்ளது, பிரமிடு குறித்து கூறப்படும் புனை கதைகள் உண்மை எம் இலக்கியங்கள் மொழி நடைக்கு கூறிய சில விஷயங்கள் பொய், தமிழினம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆரிய வருகைக்கு பின்பே முன்னேற்றம் கண்டது என நிருபிக்கும் ஆரிய அடிவருடியின் அரைவேக்காட்டு பிதற்றல்களே இது, போரஸ் ஒரு குறுநில மன்னன் அவனும் எம் தமிழ் மாமன்னர்களும் ஒன்றா? 
எம்மை முட்டாள்களாக்க பத்தாம் வகுப்புவரை சொல்லிகொடுக்கப்பட்ட விசயங்களை கொண்டு ஒரு தொன்மையான இனத்தின் வரலாற்றை கூற முற்படும் முதிர்ச்சியற்ற வார்த்தைகள். தமிழின் வரலாற்றை அழிக்க போகி பண்டிகைகளில் எரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஓலை சுவடிகள் சொல்லியிருக்கும் , அழித்துவிட்டீர்களே, படிக்கப்பட்ட சில ஓலை சுவடிகளே மாபெரும் காப்பியங்களாக இருக்கும்போது படிக்கப்படாமல் தூங்கிகொண்டு இருக்கும் ஓலைசுவடிகளை படித்தால்....................

அவ்வளவு ஏன் குமரிகண்டத்தின் ஆய்வு முடிவுகளை இந்திய அரசு வெளியிட தயங்குவது ஏன், 1 க்கு பிறகு 22 இலக்கங்களை கொண்ட எண்ணை இன்றைய அறிவியலில் பெயர் சொல்ல முடியுமா. (அற்புதம்.) சும்மா கண்டுபிடித்து பெயரிட்டு இருக்க மாட்டார்கள் எம் முன்னோர்கள் பயன் படுத்தியதால் வந்திருக்கும், அவ்வளவு ஏன் ஒரு தலை முடியை 7 பாகங்களாக நீளவாக்கில் வெட்டினால் வரும் அளவுகளை கோவில் கட்ட பயன்படுத்தியவர்கள் (ஆயிரமாண்டுகளுக்கு முன்பே) அதை மீள்படுத்த தமிழர்கள் தவறியதன் விளைவு உம போன்ற அரை வேக்காடுகள் எம் வரலாற்றை திரிக்கிறீகள்,  உம் நோக்கம் தெரியாத சில பேர் உம்மை தலையில் வைத்து கொண்டாடலாம், ஆனால் எமக்கு விழிப்பு வந்துவிட்டது, சோழ பேரரசரின் பன்னிரண்டு லட்சம் படைவீரர்களை கொண்ட படையில் எத்தனை யானைகள் இருந்திருக்கும் என்பதை உம கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

/

 

///////தெக்கானத்து (திராவிட) மொழிக்கெல்லாம் பிறப்பு தந்த தாயா? அல்லது உடன்பிறந்த மூத்த அக்காவா? பூர்வகுடித் தமிழன் என்பவன் யார்? குறிஞ்சி நிலத்தில் முதலில் குடியேறிய, நெருப்பு பற்றவைக்கக் கூடத் தெரியாத அந்தப் பழங்குடியா? அல்லது நெருப்பு பற்றவைக்கத் தெரிந்த அடுத்தகட்ட பழங்குடியா? அல்லது சிந்து வெளி மக்களிடம் இருந்து நாகரீகத்தையும் மொழியையும் பெற்றுக் கொண்ட பழங்குடியா? அல்லது இடம் பெயர்ந்து வந்த சிந்துவெளி மக்களா? அல்லது கோதாவரி நதிக்கரையில் இருந்து தெற்கு நோக்கி வந்தவர்களா?/////////

 

சிந்து வெளியிடமிருந்து மொழியையும் நாகரீகத்தையும் பெற்றுகொண்டவன் தமிழன் என கூற வருவதன் மூலமே, இக்கட்டுரையின் நோக்கம் தெரிந்து விடுகிறது, 

இல கோபாலசாமி சீமான் அண்ணாவை நக்கலடித்ததிலிருந்து அவர் அஞ்சரன் அண்ணாவின் மனதில் இடம்பிடித்து விட்டதால் அண்மைக்காலமாக அவர் வீடியோக்கள், கருத்துக்கள், செய்திகளை யாழில் பதிவதில் அஞ்சரன் அண்ணா ஆர்வம் காட்டுகிறார்.

மறைமுகமாக,

சீமான் அண்ணாவுக்கு என்ன தெரியும், அவர் கூறுவதெல்லாம் பொய், இந்தா பார் இவர் கூறுவதை என இல கோபாலசாமியின் கட்டுரையை வேதவாக்காக நம்பி இங்கு இணைத்துள்ளார்.

மற்றபடி நாம் யார், ஆதி தமிழன் யார், வரலாற்றில் எது உண்மை என்பதை நிஜத்தில் தேடும் ஒருவராக, அது சம்பந்தமான கருத்தாடல்களை தேடும் ஒருவராக இப்பதிவை இணைக்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை  தான் அண்ணே  இது சரி  என்று நாம் முடிவெடுக்க  முடியாது தேடல் எல்லோரிடமும்  இருக்கு  அவர்  என்னத்த  தேடுறார்  என்பதுதான்  அவரின்  எழுத்தில்  இருக்கும் ஆக நாம் இதை  உண்மை  என்று நம்ப வேண்டிய தேவையோ  முக்கியமோ இல்லை ..

 

எனக்கு தெரிந்த நாம் படித்த  எதிர்வினையை  முன் வைக்கலாம்  இல்லையா .

 

 
அடிக்கிறவனைத் திருப்பி அடிக்கிறதுக்குப் பின்னிற்கக் கூடாது, அஞ்சரன்!
 
 
அதுக்காகக் கடிக்கிற நாயைத் திருப்பிக் கடிக்கிறது புத்திசாலித்தனம் இல்லை!
 
விலகி நடந்து போறது தான்.. நாய்க்கும் நல்லது... நமக்கும் நல்லது! :D
  • தொடங்கியவர்

 

 
அடிக்கிறவனைத் திருப்பி அடிக்கிறதுக்குப் பின்னிற்கக் கூடாது, அஞ்சரன்!
 
 
அதுக்காகக் கடிக்கிற நாயைத் திருப்பிக் கடிக்கிறது புத்திசாலித்தனம் இல்லை!
 
விலகி நடந்து போறது தான்.. நாய்க்கும் நல்லது... நமக்கும் நல்லது! :D

 

அண்ணா எனத்த சொல்லுறது யாழில்  என்ன  நாம்  செய்தாலும்  அதை  அரசியல் ..அல்லது  சீமான் எதிர்ப்பு  ..என்பதாக ஆக்கப்படுது  யாழ்  இணையம்  சீமான்  கட்சியின்  கூடாரமா  மாறுதா ..ஒரு மாறுபட்ட கருத்தை அல்லது விவாதத்தை  திருப்பி விட்டு அஞ்சரன்  மேல் பழியை  போடுவதாவே  இருக்கிறது ஒழிய  ஆக்கபூர்வமா  ஒரு  எதிர்வினை  ஆற்றப்படுவது  இல்லை ... :)

 

இங்கு இந்த  கட்டுரையை  அஞ்சரன் இணைத்ததுதான்  பிரச்சினையே தவிர கட்டுரை இல்லை முழுமையா  சீமான்  தம்பிய மாறிய தம்பி  சுபேஸ் இணையம் பூர  பொங்குவது  பெரும்  வியப்பை  தருகிறது  :D  :icon_idea:

இல கோபாலசாமி சீமான் அண்ணாவை நக்கலடித்ததிலிருந்து அவர் அஞ்சரன் அண்ணாவின் மனதில் இடம்பிடித்து விட்டதால் அண்மைக்காலமாக அவர் வீடியோக்கள், கருத்துக்கள், செய்திகளை யாழில் பதிவதில் அஞ்சரன் அண்ணா ஆர்வம் காட்டுகிறார்.

மறைமுகமாக,

சீமான் அண்ணாவுக்கு என்ன தெரியும், அவர் கூறுவதெல்லாம் பொய், இந்தா பார் இவர் கூறுவதை என இல கோபாலசாமியின் கட்டுரையை வேதவாக்காக நம்பி இங்கு இணைத்துள்ளார்.

மற்றபடி நாம் யார், ஆதி தமிழன் யார், வரலாற்றில் எது உண்மை என்பதை நிஜத்தில் தேடும் ஒருவராக, அது சம்பந்தமான கருத்தாடல்களை தேடும் ஒருவராக இப்பதிவை இணைக்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.

இதை சீமானின் பேச்சுக்களை  இங்கு  இணைக்கும் போது துளசி  நீங்களும்  சீமானின் பேச்சை வேதவாக்கா  நம்பித்தானே  இணைக்கிறியல் ...ஆக சீமான்  சொலவது எல்லாம் உண்மையா என்பதை உங்களிடமே  விடுகிறேன் . :D

இதை சீமானின் பேச்சுக்களை இங்கு இணைக்கும் போது துளசி நீங்களும் சீமானின் பேச்சை வேதவாக்கா நம்பித்தானே இணைக்கிறியல் ...ஆக சீமான் சொலவது எல்லாம் உண்மையா என்பதை உங்களிடமே விடுகிறேன் . :D

சீமான் அண்ணா சொல்வது, செய்வது அனைத்தையும் வேதவாக்காக நினைத்து நான் இணைப்பதில்லை. அவர் செய்யும் நல்லவற்றை இணைக்கும் அதே நேரம் அவர் பற்றி விமர்சனம் வைக்க வேண்டிய நேரத்தில் விமர்சனம் வைத்தும் இருக்கிறேன்.

மற்றபடி அவர் மேடைப்பேச்சுகளை, பேட்டிகளை நான் பார்ப்பது குறைவு. இங்கு இணைப்பதும் குறைவு.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எனத்த சொல்லுறது யாழில்  என்ன  நாம்  செய்தாலும்  அதை  அரசியல் ..அல்லது  சீமான் எதிர்ப்பு  ..என்பதாக ஆக்கப்படுது  யாழ்  இணையம்  சீமான்  கட்சியின்  கூடாரமா  மாறுதா ..ஒரு மாறுபட்ட கருத்தை அல்லது விவாதத்தை  திருப்பி விட்டு அஞ்சரன்  மேல் பழியை  போடுவதாவே  இருக்கிறது ஒழிய  ஆக்கபூர்வமா  ஒரு  எதிர்வினை  ஆற்றப்படுவது  இல்லை ...  :)

 

இங்கு இந்த  கட்டுரையை  அஞ்சரன் இணைத்ததுதான்  பிரச்சினையே தவிர கட்டுரை இல்லை முழுமையா  சீமான்  தம்பிய மாறிய தம்பி  சுபேஸ் இணையம் பூர  பொங்குவது  பெரும்  வியப்பை  தருகிறது   :D   :icon_idea:

 

 

அப்படி ஒன்றும் தவறாக நினைக்காதீர்கள், அஞ்சரன்!

 

மற்றவர்கள் எழுதவதைப் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை! அது அவர்களது கருத்துரிமை!

 

எனக்குத் தமிழ் மீது விருப்பு உண்டு... அதன் வளைவுகள், நெளிவுகள், அதன் என்றுமே இளமை மாறாத தன்மை எனக்குப் பிடிக்கும் !

 

கணிதமும், கணக்கியலும், விஞ்ஞானமும் தான் எனது பின்னணி எனினும்...புலம் பெயர் தேசங்களிலேயே எனது வாழ்வின் பெரும்பகுதியைத் தொலைத்தவன் எனினும், தமிழ் என்னைக் கவர்ந்தது!

 

எனது மண்ணின் எளிமையும், அதன் வறுமையும் கூட என்னைக் கவர்கின்றது!

 

பாலாழி மீனாளும் பான்மைத்து, அருளுயிர்கள்,

மாலாழி ஆழும் அறிந்து!

 

என்னும் திருவருட்பயனின் பொருளைப் போல... பாலுக்குள் வாழுகின்ற மீனுக்குப் பாலின் அருமை புரிவதில்லை!

 

அதைப் போலவே, அங்கு வாழ்ந்த காலத்தில் எனக்குத் தமிழின் அருமையும் புரியவில்லை.. எனது மண்ணின் மாண்பும் புரியவில்லை!

 

அங்கு வாழ்ந்த போது... எங்காவது ஒரு தூர தேசத்துக்கு ஓடித் தொலைந்து விடலாமா.. என்றே மனம் எப்போதும் சிந்தித்தது!

 

ஆனால் அவற்றின் அருமையை நான் புரிந்து கொண்ட போது.. எனக்கும் அவற்றுக்குமான தூரம் மிகவும் அதிகமாகி விட்டது!

 

அந்தத் தேடலின் வெற்றிடத்தை.. யாழ் ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்கின்றது!

 

நிழலியின் கவிதையோ அல்லது தீபச்செல்வன், ஜெயபாலன், நெற்கொழு,வல்வை, சுபேஸ்.. சுமேரியர்.. கவிதை,அஞ்சரன் போன்றவர்களின் கவிதைகளை.. இரண்டு தரமல்ல, இருபது தடவைகள் கூட  வாசித்திருக்கிறேன்!'

 

ஏனெனில்.. நான் ஒரு காலத்தில் தொலைத்ததை... மீண்டும் தேடுகிறேன்... அவ்வளது தான் எனது தேடல்! :D

 

எனது ஆங்கில மொழியில் வாசித்தல் மிகவும் அதிகம்.. அதனால் தான் விவசாயி விக்கின் பதிவுகளுக்காக.. யாழுக்கு அடிக்கடி ஓடி வருகிறேன்!

 

ஆனால் தமிழ் மொழி வாசிப்பு அதிகம் இல்லை..ஏனெனில் எனக்கு வாசிப்பதற்கு அதிக வசதிகள் இருக்கவில்லை! 

 

உங்களை போன்றவர்களின் தமிழால் தான்... எனது தமிழை வளர்க்கின்ற ஒரு 'ஏகலைவன்' மட்டுமே.. நான் என்பதை எந்த விதமான வெட்கமும் இன்றி உங்களுக்குக் கூறிக்கொள்கிறேன்!

 

இறுதியாகப்.. பாரதி.. ஒரு பார்ப்பானக் கவிஞன்!

 

அவன் அந்தக்காலத்தில் பாடியது.

 

தெலுங்கு, கன்னடம், துழு, மலையாளம் தோன்றிய தமிழ் மொழியே..!

 

அவன் பிற்காலத்தில் வெறுப்புடன் பாடியது...

 

'மெல்லத் தமிழினிச் சாகும்'!

 

தமிழை ஆய்வு செய்பவர்கள் என்று இப்போது வருபவர்களின் ஒரே நோக்கம்.. அதனை ஆய்வு செய்வதல்ல!

 

அதனை அழிப்பது....அவர்களைப் பொறுத்த வரையில்.. தமிழ் 'நீஷ பாஷா"!

 

தமிழில் வேதத்தை ஓதியவர்கள் காதில்.... ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுபவர்கள் இவர்கள்! :o

 

இறுதியாக உங்களுக்குச் சீமானின் வசனத்திலேயே ஒரு பதில்..!

 

ஓட..ஓடத் திரும்பிப் பார்க்காமல்.. திருப்பி அடிக்காமல்.. இலங்கை வரை ஓடியவன் தமிழன்!

 

ஒரே.. ஒரு இடத்தில் மட்டுமே நின்று.. திருப்பி அடித்தான்...!

 

அது தான் தமிழ் ஈழம்...!

 

நீங்கள் ஆயிரம் கூறுங்கள்...ஆனால் 'தமிழன்' என்ற திமிர் எனக்கு உண்டு! 

 

அது தான் எமது ஆணி வேர்... மூல வேர்!

 

அதை இழந்தால்...நாம்...வெறும் 'விறகு' மட்டுமே! :wub:

யாழில் என்ன நாம் செய்தாலும் அதை அரசியல் ..அல்லது சீமான் எதிர்ப்பு ..என்பதாக ஆக்கப்படுது யாழ் இணையம் சீமான் கட்சியின் கூடாரமா மாறுதா ..ஒரு மாறுபட்ட கருத்தை அல்லது விவாதத்தை திருப்பி விட்டு அஞ்சரன் மேல் பழியை போடுவதாவே இருக்கிறது ஒழிய ஆக்கபூர்வமா ஒரு எதிர்வினை ஆற்றப்படுவது இல்லை ... :)

இங்கு இந்த கட்டுரையை அஞ்சரன் இணைத்ததுதான் பிரச்சினையே தவிர கட்டுரை இல்லை.

தமிழ், தமிழன், தமிழின தொன்மை பற்றி ஆராய வேறு எதுவுமே கிடைக்காமல் இல கோபாலசாமியின் கட்டுரை தான் கிடைத்ததா?

மற்றவன் காதில் பூ சுற்ற நினைத்தாலும் உங்களால் அது முடியாது. உங்கள் பதிவுகளே காட்டித்தந்து விடுகிறது. :)

  • தொடங்கியவர்

தமிழ், தமிழன், தமிழின தொன்மை பற்றி ஆராய வேறு எதுவுமே கிடைக்காமல் இல கோபாலசாமியின் கட்டுரை தான் கிடைத்ததா?

மற்றவன் காதில் பூ சுற்ற நினைத்தாலும் உங்களால் அது முடியாது. உங்கள் பதிவுகளே காட்டித்தந்து விடுகிறது. :)

துளசி எனக்கு என்று  ஒரு  சுய புத்தி இருக்கு உங்களுக்கு சீமான் சொல்லித்தான் நாங்க தமிழர் என்று  தெரியும் என்றால எனக்கு என் பாட்டன் சொல்லி தெரியும் .. :D

 

போராடும்போது  நாங்கள்  தமிழர்  எங்களுக்கு  ஒரு நாடு  இல்லை எல்லோரும் வாருங்கள் களத்துக்கு என்று அன்று தலைவர் பிரபாகரன் அழைக்கும்போது  தெரியாத நீங்கள்   எல்லாம் இன்று  சீமான் சொல்லித்தான்  நாம் தமிழர்  என்று முடிவுக்கு வந்தால் நான் அதுக்கு  பொறுப்பல்ல ... :icon_idea:

 

ஒரு சிறிய வட்டத்தில்  நின்று கொண்டு  ஈழத்தையும் ....இந்திய அரசியலையும் கோர்த்து பார்க்கும் உங்களிடம் எதைபற்றி  பேசியும் பயன் இல்லை ... :)

 

சீமானால் யாரு தமிழன்  என்பதை விடுத்து  முதல் ஜாதிஅனைத்தையும்  ஒன்றினைத்தாலே  தமிழ்நாடு  கையில அது  ஒருநாளும்  முடியாது சும்மா கையை  தூக்கி பேசலாம் எல்லாத்தையும்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்று பெருமைகொள்ளவைக்கும் மாமன்னன் ராஜராஜசோழன்..

ஆனாலும்....

நாங்கள் யார் என்பதை வெள்ளைக்காறன் சிலசில தவறான தகவல்களோடு சொல்லித்தான் தெரியவேண்டி இருக்கிறது என்பது வேதனை.. :(

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பேசுபொருள் தமிழும் அதுசார்ந்த உண்மைகளின் மீதான விமர்சனங்களுமே,

 

தவிர்த்து சீமானோ வைகோவோ அன்றேல் இப்போது தமிழ்த் தேசியம்சார்ந்து போராடிக்கொண்டிருக்கும் எமது நம்பிக்கைக்குரிய யாராவது ஏதாவது ஒரு காரணத்துக்காகச் சோரம்போகலாம், அன்றேல் தங்களது சொந்த வாழ்க்கையை முன்னேற்ருவதற்கான இலக்குகளை மனதில்வைத்து இப்போது காய்களை நகர்த்தலாம், செயற்படலாம்,

 

 

விடையம் அதுவல்ல, எனது மொழியினது செழுமையை, வரலாறை, எக்காலத்திலும் நெகிழ்வுத்தன்னையுடன் இருந்திடும் இயல்பை, அதனது பண்பட்ட குணங்களை, காலத்துக்குக் காலம் சூழ்நிலைக்கேற்றுத் தன்னை மீட்டுக்கொள்ளும், ஏனைய மொழிகளிலிருந்து தன்னை முதன்மைப்படுத்த தானே உருமாறும் தன்மையைப், மேற்கூறிய எவையையேனும் யாராவது பரிகசித்தால் அல்லது மலினம் செய்தால் நாம் பாராதிருந்திடல் கூடாது.

 

வழிப்போக்கர்களும் வணிகர்களும் கவிகளும் போகின்றபோக்கில் பாடிவிட்டுப்போன பாடல்களில் எஞ்சியிருக்கும் பாடல்களின் தொகுப்பான குறுந்தொகையை ஒருதரம் எமது தமிழின் எதிரிகளுக்குப் படிக்கக் கொடுங்கள், இன்னமும் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு அதே செழுமையுடன் ஏனைய மொழிகளைப் புறந்தள்ளித் தன்னை முன்னிறுத்தும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.