Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் ஆரம்பம்

Featured Replies

44444.jpg
 
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொது எதிரணியின் ஏனைய கட்சித்தலைவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
 
கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் வைத்தே இந்த ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்படுகின்றது.
இந்த வைபவம் இன்று காலையிலிருந்த சுபநேரமான காலை 10.31க்கு மதவழிபாடுகளுடன் ஆரம்பமானது.
 

எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் - Live Blog

அசாத் சாலி :  பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்நாட்டு முஸ்லிம் மக்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவர். எனவே இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவது நிச்சயமாகும்.

மனோ கணேசன் :   வரலாற்று முக்கியதுவமிக்க நாள் இது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக உள்வாங்காவிட்டாலும் சிங்கள சகோதர்களுடன் இணைந்து எமது பயணத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இன்று நீதித்துறை செயலிழந்துள்ளது, அதை ஜனாதிபதியே இயக்குகின்றார்: சோபித தேரர் :   உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத ஜனாதிபதி பதவி எமது நாட்டில் இருக்கின்றது. இன்று பொலிஸ் திணைக்களத்தில் கூட நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அது அரசியல் ரீதியாக செயற்படுகின்றது. ஜனாதிபதி தன்னிடம் பைல்கள் உள்ளதாக சொல்கிறார். அந்த பைல்கள் அவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்க கொடுக்கப்படவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிடம் கொடுத்து விசாரணை செய்யவே கொடுக்கப்படுகின்றது. இன்று நீதித்துறை செயலிழந்துள்ளது. அதை ஜனாதிபதியே இயக்குகின்றார்.

11:21 am - சோபித தேரர் உரை

சரத்பொன்சேகா :  மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியில் நாடு ஊழலின் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் 80 வீதமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. எமது நோக்கம், பயணம் மற்றும் இலக்கு என்பன ஒன்றாக உள்ளதால் நாம் இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

11:04 am - சரத் பொன்சேகா உரை

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க :  நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். நாட்டில் ஊழல், இலஞ்சம்,கொள்ளை, கொலை, வெள்ளை வேன் கடத்தல் என பல குற்றச் செயல்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனவே இவற்றை இல்லாதொழித்து நாட்டை பரிசுத்தமாக்க வேண்டி நேரம் வந்துள்ளது. மக்களுக்காக செயற்பட வேண்டிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். இதேவேளை சுதந்திரக் கட்சியில் இருந்து இன்னும் பலர் எம்மோடு வந்த இணைய உள்ளனர். இது சவாலான போராட்டம் என்றாலும் எமது உயிரை பணயம் வைத்து இந்நாட்டின் மக்களின் உயிரை காப்பாற்ற களமிறங்கியுள்ளோம். 9 வருடங்கள் நான் அரசியலிருந்து விலகி இருந்தேன். நாடு அழிவுப்பாதைக்குச் செல்வதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவேதான் எமது நாட்டு பிள்ளைகளை அழிவிலிருந்து பாதுகாக்க சவாலான போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

10:50 am - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உரை

மைத்திரிபால சிறிசேன :  இலங்கையர் என்றவகையில் சவால்களை எதிர்கொள்ளும் இந்நேரத்தில் பேதங்களை தவிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை நான் மதிக்கிறேன். அதனை நான் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கின்றேன்.

 

image_0.jpg

 

10:50 am - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உரை

மைத்திரிபால சிறிசேன :  இலங்கையர் என்றவகையில் சவால்களை எதிர்கொள்ளும் இந்நேரத்தில் பேதங்களை தவிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு என் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை நான் மதிக்கிறேன். அதனை நான் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கின்றேன்.

10:42 am - பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரை

ரணில் விக்கிரமசிங்கவின் உரை :  அழிவடைந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும். பொதுமக்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டு கொண்டிருக்கின்றன. திறைச்சேரி பணம் ராஜபக்ஷவின் குடும்பத்தினால் பயன்படுத்தப்பட்டுகொண்டிருக்கின்றன. எனவே ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிப்பதை எமது நோக்கமாக கொண்டு புதிரய அரசியல் முறைமையை ஏற்படுத்துவோம்

10:39 am - ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரை

ஒப்பந்தங்கள் மற்றும் உடனடி குறிக்கோள்கள்

  1. நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் இல்லாதொழித்தல்.
  2. மக்களுக்கு பொறுப்பு கூறும் புதிய பாராளுமன்ற முறைமையை ஏற்படுத்தல்
  3. ஜனாதிபதி நாட்டின் தேசிய தலைவராக இருப்பதோடு தேவைக்கு ஏற்ப அதிகாரங்களும் பொறுப்புகளும் வழங்கப்படும்
  4. ஜனாதிபதி பதவியை நாட்டின் சின்னமாக பிரகடனம் படுத்தல்
  5. அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை இல்லாதொழித்தல்
  6. நீதி சேவை, பொலிஸ் சேவை, தேர்தல் முறைமைகள் மற்றும் கணக்காய்வாளர் நிர்வாகம் ஆகியன சுயாதீனமாக செயற்பட வழிவகுத்தல்
  7. விகிதாசார தேர்தல் முறைமையை இல்லாதொழித்து ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென ஓர் பாராமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யும் வகையில் பழைய பாராளுமன்ற தேர்தல் முறைமையை ஏற்படுத்தல்.

10:37 am - எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சோபித தேரர் கைச்சாத்திட்டார்

10:35 am - எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எம்.கே.எஸ். குணவர்தன கைச்சாத்திட்டார்.

10:33 am - எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராஜத்த சேனாரத்ன கைச்சாத்திட்டார்.

10:30 am - எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அர்ஜுணா ரணதுங்க கைச்சாத்திட்டார்.

10:29 am - எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சரத் பொன்சேகா கைச்சாத்திட்டார்.

10:28 am - எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிக்கா குமாரதுங்க கைச்சாத்திட்டார்.

10:27 am - எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டார்.

10:25 am - எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டார்.

10:22 am - மத ஆசீர்வாதம் இடம்பெறுகின்றது

image.jpg

10:15 am - சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித்பிரேமதாஸ, ரவி கருநாணாயக்க, முசம்மில், சரத் பொன்சேகா, ஹேமகுமார நாணயக்கார, ராஜித்த சேனாரட்ன, திஸ்ஸ அத்தனாயக்க, அர்ஜுணா ரணதுங்க, மனோ கணேசன், மங்கள சமரவீர, டி.எம். சுவாமிநாதன் உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வருகை

10:11 am - மைத்திரிபால சிறிசேன வருகை 

10.05 am - எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆரம்பம்

 


http://virakesari.lk/

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்தவிற்கான எதிரணி மட்டுமே. தமிழர்களுக்கு இந்தச் சிங்களக் கூட்டுக்களால்.. எந்த விமோசனமும் இல்லை. ஆபத்துத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
 அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள்  இதில் கையெழுத்திட்டுள்ளன.
 
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், கையெழுத்திட்டுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி, உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன. 
 
 
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருகின்றன.
 
இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். 
 
image%282%29.jpg
 
B3v3dikCEAAle4F.jpg
 
B3v0Qb3CUAA6UhO.jpg
 
 
 image-2-1024x575.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=260843689801176872#sthash.fWuZkmK6.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.