Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

77ca6aca9b79b7b843bd547ddb9e3a19.jpg

யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
 
இடம்பெயர்ந்த மக்கள் வாழுகின்ற சில முகாம்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து அந்த மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
 
மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப் பகுதிகளில் உள்ள பொது நோக்கு மண்டபங்கள் பாடசாலைகள் என்பனவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
 
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் உள்ள 18 குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சேந்தாங்களம் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். 
 
அதனை அண்மித்துள்ள வலித்தூண்டல் பகுதி மக்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள ஜே 219 அளவெட்டி தெற்கு முகாமில் உள்ள 17 குடும்பங்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து இடம்பெயர்ந்து அளவெட்டி தெற்கு அமெரிக்கன் மிசன் பாடசாலையில் தஞ்சம் புகுந்தன.
 
தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக அந்தப்படசாலையிலிருந்தும் இடம்பெயர்ந்து அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
 
வலி.வடக்கின் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கோணப்புலம்,சபாபதிபிள்ளை, கண்கணி முகாம்களில் முற்று முழுதாக மழைவெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது.இதனால் 460வது குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
 
மேலும் காரைநகர் களபூமி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் நீரில் மூழ்கியுள்ளது.  இதனால் 250 மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது. 
 
நேற்றைய தினம் வரை அருகிலுள்ள தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அந்த பகுதியும் வெள்ளத்தில் முழ்கியதன் காரணமாக அருகிலுள்ள சுந்தரமூர்த்தி ஆரம்ப பாடசாலையில் தங்கியுள்ளனர். 
 
இதேவேளை காக்கை தீவு, பொம்மைவெளி, வசந்தபுரம், நித்தியவெளி,போன்ற தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
சில பிரதேசங்களூடான வீதிகளை குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்து வருவதால போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.
 
1(181).jpg
 
2(144).jpg
 
3(126).jpg
 
4(98).jpg
 
5(79).jpg
 
6(57).jpg
 
7(38).jpg
 
8(48).jpg
 
11(63).jpg
 
16(11).jpg
 
IMG_0256.jpg
 
12(39).jpg
 
IMG_0219(1).jpg
 
5%20copy(10).jpg
 
 
 
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=783223694402261687

  • கருத்துக்கள உறவுகள்

நவாந்துறை முதல் பொம்மைவெளி வரை: தண்ணீரில் மிதக்க வைச்சான்! யாழ்ப்பாணத் தம்பி:

 

வடக்கு கிழக்கில அபிவிருத்தி செய்யிறம். ஆச்சரியம் ஆக்கிறம் எண்டு புளுடா விட்டிச்சினம். அடிப்படைத் தேவையள செய்யாமல் அவலப்படுற மக்களின்ட கண்ணீரை துடைக்காமல் ஆசியாவின்ட ஆச்சரியம் இதுவெண்டு காட்டப் போறினமே? 
 
ஓ... யாழ்ப்பாணத்தின்ட கரையோரப் பிரதேசங்களில இருக்கிற மக்களின்ட கண்ணீர் நிறுத்தப்படுற மாதிரி தெரியேல்ல கண்டியளோ. தரைமேல் பிறக்க வைததான் தண்ணீரில் மிதக்க வைத்தான் எண்டு அந்த மக்களின் கதை தொடருது...
 
ஓ.. போன வருசமும் அந்த மக்கள் போராடினவையள். வெள்ளம், மழை, சேறு, சகதி, இலையன் என்று அந்த மக்களின் வாழ்வில துயரம் வீசுது பாருங்கோ...
 
நாவாந்துறை முதல் பொம்மைவெளிவரைக்கும் அந்த மக்கள் படுற பாடு தெரியுமே? அதுகளின்ட வீடும் வாசலும் தெரியுமே? பொம்மைவெளியில போய் பாருங்கோ. எங்கட குழந்தையள் மழை வெள்ளத்திற்குள் குப்பை பொறுக்கி சீவுக்குதுகள். 
 
பாத்தால் வயித்தப் பத்தி எரியுமே!
 
ஆனால் பாக்க மாட்டியள். வலி வடக்கை பாக்க மாட்டியள். வலி வடக்கு மக்களின்ட முகாங்கள் எங்கயோ சோமாலியாவில இருக்கிற மாதிரி இருப்பியள். இப்ப இந்தச்சனங்களயும் கண்டு கொள்ள மாட்டியள். 
 
அப்பிடித்தான் யாழப்பாண அமைச்சர் கண்டுகொள்ளாமல் போனவர் எண்டு சனம் சொல்லுதுகள். அந்த மக்கள் தெருவுக்கு போராடிக் கொண்டிருக்கேக்குள்ள சிங்கள காவல்துறை அடிச்சு அந்த சனத்த துரத்திச்சாம்... 
 
அத கண்டும் காணாமலும் போனாராம் அமைச்சர். 
 
ஓ.. இதுகள் ஆசியாவின்ட அதிசயம்தான்.. 
 
அந்த சனம் என்ன கேட்டதுகள்? எங்களுக்கு காணி வேணும். காணிக்கு உறுதி வேணும். எங்களுக்கு வீடு வேணும். அடிப்படை தேவையள் நிவர்த்தி செய்யப்படாமல் கஷ்டப்படுறம் எண்டு மழையில நனைஞ்சு கத்திக் கேட்டுகுதுகள். 
 
அந்த மக்கள் வசிக்கிற இடங்கள் தாழ்வான பகுதியள். வருசா வருசம் வெள்ளமும் மழையும் அதுகள பாடாய் படுத்துதுகள். குஞ்சு, குருமான் எல்லாம் மழையில ஜனநாயக முறையில போராட வந்திச்சினம். 
 
எந்த மழையால அவலமோ அந்த மழையில நனைஞ்சு போராட்டம் நடத்தினவையள். அவையள பொலிசு அடிக்க கண்ணை பொத்திக் கொண்டு அமைச்சர் போனார். 
 
இந்த சனத்தின்ட அவலத்திற்கும் நடக்கிற அநியாயத்துக்கும் முடிவில்லையே?
 
யாழ்ப்பாணத் தம்பி 
 

ஊர் முழுவதும் வெள்ளம்;வீதியில் உணவு சமைத்துப் போராட்டம் நடத்திய முஸ்லீம்கள் -
 
யாழ். பொம்மைவெளி மற்றும் அதனை அண்டிய பகுதி முஸ்லிம் மக்கள் வீதியில் உணவு சமைத்து  கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
 
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனால், அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போதும் தமக்குரிய அடிப்படை வசதிகளை எவரும் செய்து தரவில்லை.  நான்கு வருடங்களாக இப்படியான நிலையிலேயே தாங்கள் வசிப்பதாகவும் தெரிவித்தார்கள்.
 
அமைச்சர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் பார்வையிட்டு சொல்கின்றனர்.பின்னர் எங்களுடைய பகுதியினை திரும்பிப் பார்ப்பதே இல்லை. எங்களுக்கு மழை காலம் தொடங்கி விட்டாலே நின்மதியில்லாத வாழ்க்கை தொடங்குகிறது. எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பாக அக்கறை செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
1%28179%29.jpg
 
12%2838%29.jpg
 
00%289%29.jpg
 
000%288%29.jpg
 
000000000000000.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=743943693602675289#sthash.vreWzPsJ.dpuf
 
 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெருவில் வசிக்கும் முஸ்லிம்கள், வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.

2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போதும் தமக்குரிய அடிப்படை வசதிகளை எவரும் செய்து தரவில்லை என்றும் நான்கு வருடங்களாக இப்படியான நிலையிலே தாங்கள் வசிப்பதாகவும் தெரிவித்த அம்மக்கள், வீட்டுத்திட்டத்திலும் தாங்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் இவற்றையெல்லாம் கண்டித்தே வீதியில் உணவு சமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததாக கூறினர்.

pommaiveli-Road.jpgpommaiveli-Road-01.jpgpommaiveli-Road-02.jpgpommaiveli-Road-03.jpgpommaiveli-Road-04.jpg

 

http://www.jvpnews.com/srilanka/88713.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலி.மேற்கில் 12 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு! - நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகள் அசிரத்தை. 

 

vali-west-flood-200-news.jpg

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் மூளாயை அண்டிய பகுதிகளான பாண்டவெட்டை, மூளாய் வேதம், காட்டுக்குளம், வீரவத்தை போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். 3389 குடும்பங்களைச் சேர்ந்த 12021 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து ஆலயங்களிலும்,சனசமூக நிலையங்களிலும், பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

   

இவர்களுக்கான உணவு,குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அரசாங்க அதிகாரிகள் அசமந்தடன் நடந்து வருவதாக பாதிப்படைந்துள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதிப்படைந்து வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை வட மாகாணசபையில் உறுப்பினர்களான சித்தார்த்தன், கஜதீபன் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு சிறுவர்களுக்குத் தேவையான பால் மா வகைகளை வழங்கியுள்ளனர். வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஐங்கரன் நாகரஞ்சனி பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

 

vali-west-flood-031214-seithy%20(1).jpg

 

 

vali-west-flood-031214-seithy%20(2).jpg

 

 

vali-west-flood-031214-seithy%20(3).jpg

 

 

vali-west-flood-031214-seithy%20(4).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=121974&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.