Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா கொடியுடன் இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள் கண்காணிப்பதற்கு நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புதன், டிசம்பர் 3, 2014 - 08:12 மணி தமிழீழம் | சயந்தன்
சிறிலங்கா கொடியுடன் இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள் கண்காணிப்பதற்கு நடவடிக்கை!
Then%20Seenakkadal.jpg
சிறிலங்கா கொடியுடன் இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள் வேறேதும் பணிகளில் ஈடுபட்டுள்ளனவா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
சிறிலங்கா கொடியுடன் மீன்பிடியில் ஈடுபடும் சீனக் கப்பல்கள் தமது வருமானத்தில் 10 வீதத்தை சிறிலங்கா அரசுக்குச் செலுத்தும் என்றும், பிடிக்கப்படும் மீன்கள் சிறிலங்கா கரைக்குக் கொண்டு வந்தே விற்பனை செய்யப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.
 
இதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என்று கூறி, சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒரு தொகுதி சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
 
சிறிலங்கா துறைமுகங்களில் இருந்து சிறிலங்காவின் தேசியக் கொடியுடன் சென்று அனைத்துலக கடற்பரப்பில் இந்த சீன மீன்பிடிக் கப்பல்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தன.
 
ஆனால், இந்த 8 சீனக் கப்பல்களில் மூன்று கப்பல்கள் மாத்திரமே, இரண்டு தடவைகள் பணம் செலுத்தியுள்ளதாகவும், ஏனைய கப்பல்கள் எதுவித பணத்தையும் செலுத்தவில்லை என்றும் பதில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சரத்குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.
 
ஏனைய ஐந்து கப்பல்களும் எந்த மீன்களும் இன்றியே கரையை வந்தடைந்திருப்பதாகவும் கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில்  அவர் கூறியுள்ளார்.
 
“இதில் ஏதோ இரகசியமொன்று மறைந்துள்ளது.
 
அந்தக் கப்பல்களில் பிடிக்கப்பட்ட மீன்கள் நடுக்கடலிலேயே வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டு விட்டன.இது விடயம் தொடர்பில் ஆராய்வதற்கும், குறித்த கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த கப்பல்கள் மீன்பிடியில் மாத்திரமன்றி வேறேதாவது வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இவை குறித்துக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.சுங்கத் திணைக்களத்தின் உதவியுடன் இவற்றைக் கண்காணிக்கவுள்ளோம்.
 
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்துள்ளமையானது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.சிறிலங்காவைப் பழிவாங்கும் எண்ணத்துடன் இவ்வாறானதொரு தடை கொண்டு வரப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் உருவாகியிருக்கிறது.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும்போது புதிது புதிதாக அவர்கள் நிபந்தனைகளை விதிக்கின்றனர்.இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அமைச்சர் சரத்குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/35783/57//d,article_full.aspx
  • கருத்துக்கள உறவுகள்

------

ஆனால், இந்த 8 சீனக் கப்பல்களில் மூன்று கப்பல்கள் மாத்திரமே, இரண்டு தடவைகள் பணம் செலுத்தியுள்ளதாகவும், ஏனைய கப்பல்கள் எதுவித பணத்தையும் செலுத்தவில்லை என்றும் பதில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சரத்குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.
 
ஏனைய ஐந்து கப்பல்களும் எந்த மீன்களும் இன்றியே கரையை வந்தடைந்திருப்பதாகவும் கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில்  அவர் கூறியுள்ளார்.
 
“இதில் ஏதோ இரகசியமொன்று மறைந்துள்ளது.
 
அந்தக் கப்பல்களில் பிடிக்கப்பட்ட மீன்கள் நடுக்கடலிலேயே வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டு விட்டன.இது விடயம் தொடர்பில் ஆராய்வதற்கும், குறித்த கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
குறித்த கப்பல்கள் மீன்பிடியில் மாத்திரமன்றி வேறேதாவது வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இவை குறித்துக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.சுங்கத் திணைக்களத்தின் உதவியுடன் இவற்றைக் கண்காணிக்கவுள்ளோம்.
 
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்துள்ளமையானது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.சிறிலங்காவைப் பழிவாங்கும் எண்ணத்துடன் இவ்வாறானதொரு தடை கொண்டு வரப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் உருவாகியிருக்கிறது.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும்போது புதிது புதிதாக அவர்கள் நிபந்தனைகளை விதிக்கின்றனர்.இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அமைச்சர் சரத்குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.

கண்காணித்து என்ன செய்ய, உத்தேசம்.

ஏற்கெனவே.... சீனா, இலங்கையில் ஆழ கால் ஊன்றிவிட்டது.

தலைக்கு மேல், வெள்ளம் போனபின், ஓடி முழித்து பிரயோசனமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கொடியுடன் சீனா கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளமை அமைச்சர் ஒருவரின் கருத்து மூலம் புலனாகியுள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் கடந்த வருடம் இலங்கைகொடியுடன் மீன்பிடித்த எட்டு சீனா கப்பல்களும் அரசாங்கத்திற்கு உறுதிவழங்கியளவு மீன்களை வழங்கவில்லையென மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத்குணரட்ண தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தி;ன் படி இலங்கைக் கொடியுடன் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சீனா கப்பல்கள் தாம்பிடிக்கும் மீனில் 10 வீதத்தைவழங்கவேண்டும்,எனினும் அவை அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கப்பல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன,சுங்க திணைக்களத்திற்கும் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம், அந்த கப்பல்களை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர், குறிப்பிட்ட ஒப்பந்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
  
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114116/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.