Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்டினம் விருது விழாவில்

Featured Replies

ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்டினம் விருது விழாவில்
802945_zpse65cc26e.jpg

கெபிடல் மகா­ராஜா ஓர்­க­னை­சேஷன், ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் ஆகிய நிறு­வ­னங்கள் ஒன்­றி­ணைந்து நடத்­திய முத­லா­வது ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்­டினம் விருது விழாவில் மூன்று பிர­தான விரு­து­களும் வாழ்நாள் விருதும் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை சார்ந்­த­வர்­க­ளுக்கு வழ ங்­கப்­பட்­டது.

வரு­டத்தின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீரர், ஜன­ரஞ்­சக வீரர் ஆகிய இரண்டு விரு­து­களை இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் வென்­றெ­டுத்தார். வரு­டத்தின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீராங்­கனை விருது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்­தப்­பத்­த­வுக்கு கிடைத்­தது.

வாழ்நாள் விருது எவ்­வித சந்­தே­கத்­திற்கும் இட­மின்றி 1996 உலகக் கிண்ண சம்­பியன் அணிக்கு தலை­வ­ராக விளை­யா­டிய அர்­ஜுன ரண­துங்­க­வுக்கு வழங்­கப்­பட்­டது.

 

8029Untitled-18_zps9c66788a.jpg

இலங்­கையில் உள்ள விளை­யாட்­டுத்­துறை நட்­சத்­தி­ரங்­களின் அதி சிறந்த ஆற்றல் வெளிப்­பா­டு­களை அங்­கீ­க­ரிக்கும் வகையில் ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்­டினம் விருது விழா 2014 ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 

8029Untitled-19_zps7ec97ecc.jpg

22 வகை­யான விளை­யாட்­டுத்­து­றை­க­ளி­லி­ருந்து அதி­சி­றந்­த­வர்கள் தெரிவு செய்­யப்­பட்டு விரு­துகள் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டனர்.

இலங்­கையின் முன்னாள் வீர, வீராங்­க­னை கள் உள்­ள­டங்­கிய பிரத்­தி­யேக மத்­த­ியஸ்த குழு­வி­னரால் அதி­சி­றந்த விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள் தெரிவு செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

8029Untitled-38_zps0d438ef1.jpg

மத்­தி­யஸ்த குழுவில் தம­யந்தி தர்ஷா, டில் ரோய் பெர்­னாண்டோ, சுனில் குண­வர்­தன, ஜுலியன் பொலிங், டயான் கோமஸ், கே. கோமஸ், ஹேம­சிறி பெர்­னாண்டோ, ஹேமக்க அம­ர­சூ­ரிய, என். எஹ­ர­கல ஆகியோர் இடம்­பெற்­றனர்.

கெப்­பிடல் மகா­ராஜா ஓர்­க­னை­சேஷன் குழுமப் பணிப்­பா­ளர்­க­ளான ஷான்தி பகி­ரதன், கிருபா குமா­ர­கு­ல­சிங்கம், ஷெவான் டெனியல், ருத்ரானி பாலசுப்பிரமணியம், சந் திமல் ரொட்றிகோ, ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் ரூபசிங்க ஆகியோர் பிரதான பரிசில் களை வழங்கினர்.

10261980_822531344476196_588266977818274

 

1553472_823055461090451_7606490669688825

 

1779303_823054507757213_7474980673232927

 

802938_zps7922726c.jpg

8029Untitled-888_zpsf0b73600.jpg

 

802956_zpsc0a09d91.jpg

 

802961_zps35f15fe2.jpg

விருது பெற்றவர்கள் விபரம்:

 

அதிசிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்:
தரிந்த மெண்டிஸ் (அம்பலாங்கொடை தர்மாசோக்க)

அதி சிறந்த பாடசாலை றக்பி வீரர்:
ஓமல்க குணரட்ன (இஸிபத்தன)


அதி சிறந்த பிறமாவட்ட விளையாட்டு வீரர்:
ஹிமாஷ ஏஹான் (மெய்வல்லுநர்துறை, களுத்துறை வித்தியாலயம்)

அதி சிறந்த பாடசாலை அணி :
இஸிபத்தன றக்பி அணி


முன்னேறிவரும் விளையாட்டு வீராங்கனை:
கிமிக்கோ ரஹிம் (நீச்சல்)

முன்னேறிவரும் விளையாட்டு வீரர்:
அக்கில ரவிஷன்க (மெய்வல்லுநர், இரத்தினபுரி சீவலி வித்தியாலயம்)
விளையாட்டுத்துறையில் பல்கலைக்கழகங்கள் மத்தியில் அதிசிறந்தவர்
மேனக்கா நிசன்சலா விஜேசிங்க (பட்மின்டன், மொறட்டுவை பல்கலைக்கழகம்)


அதி சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர்:
ஏ. டி. நந்தாவதி (மெய்வல்லுநர்துறை, கேகாலை புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி)
படைத்துறையில் அதி சிறந்த விளையாட்டு வீரர்
யோஷித்த ராஜபக் ஷ (றக்பி, கடற்படை)

மீள்வருகையில் சாதித்த வீரர்:
அநுருத்த ரட்நாயக்க (குத்துச்சண்டை)
மோட்டார் போட்டிகளில் அதிசிறந்தவர்
டிலன்க மாலகமுவ (மோட்டார் கார் சாரதி)


மாற்றுத்திறனாளிகளில் அதி சிறந்த விளையாட்டு வீரர்:
பிரதீப் சஞ்சய (மெய்வல்லுநர்)

அதிசிறந்த பயிற்றுநர்:
சிறிமல் அப்போன்சோ


அதிசிறந்த அணி:
கடற்படை றக்பி அணி

அதிசிறந்த பாடசாலை விளையாட்டு வீராங்கனை:
மச்சிகோ ரஹிம் (நீச்சல்)


அதிசிறந்த பாடசாலை விளையாட்டு வீரர்:
ரசிக்க ஏக்கநாயக்க (குருநாகல் மலியதேவ)

அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை :
சந்திரிகா சுபாஷினி ராசநாயக்க (மெய்வல்லுநர்)


அதிசிறந்த விளையாட்டு வீரர்:
இந்திக்க திசாநாயக்க (பளுதூக்கல்)
அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை:
சமரி அத்தப்பத்து (இலங்கை மகளிர் அணித் தலைவி)

அதிசிறந்த கிரிக்கெட் வீரர்:
ஏஞ்சலோ மெத்யூஸ் (இலங்கை அணித் தலைவர்)
விளையாட்டுத்துறையில் ஜனரஞ்சகம் மிக்கவர்:
ஏஞ்சலோ மெத்யூஸ்


வாழ்நாள் சாதனையாளர்:
அர்ஜுன ரணதுங்க (இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர்)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8029#sthash.mQ4lWJK1.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

யோசித ராஜபக்ச மகனுக்கு விருது கொடுக்காட்டில் மகிந்தா மண்டையில் போட்டு விடுவான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.