Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் நிலை - சம்பந்தனிடம் யோசனையை கையளிக்கிறது சிவில் சமூகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
r-sampanthan-300-news2.jpg

வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பான யோசனையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் சில தினங்களில் அறிக்கையாக சமர்ப்பிக்கவுள்ளது. புதுடில்லிக்குச் சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடு திரும்பியதும் அவரிடம் இந்த யோசனை அடங்கிய அறிக்கையைக் கையளிப்பதற்கு வடக்கு, கிழக்கு சிவில் சமூகம் தீர்மானித்துள்ளது.

   

தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என்ற முடிவை எடுக்கும்போது தமது யோசனையையும் கவனத்தில் கொள்ளும் எனத் தாம் நம்புவதாக சிவில் சமூகத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=122259&category=TamilNews&language=tamil

இவர்கள் தங்கள் பதவிகளுக்காக கோட்டை விட்டு விட்டார்கள்.ஏற்கனவே இவர்களிடம் பல வெளி நாட்டு புத்தியீவிகள் ஒன்றிணைந்து கொடுத்த ஆலோசனைகளையும் காற்றில் விட்டு விட்டார்கள்.இறுதி நேரத்தில் கூட தமிழ் மக்களின் வாக்குகளை தமிழர்களின் சுதந்திரத்துக்கான வாக்குகளாக பயன்படுத்தும் படி கேட்கப்பட்டது.அந்த சந்தர்பமும் தவற விடப்பட்டுள்ளது எனலாம்.சம்பந்தர் ஐயா! நீங்கள் ஊரை ஏமாற்றுங்கள்.ஆனால் ஒரு உண்மையை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு இந்திய பிரதமர் மோடி கூறிய வார்த்தை என்ன? உங்களால் மஹிந்தவை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விளக்கமும் தந்தார் தானே.பிறகும் ஏன் இந்தியாவின் பின்னால் இருக்கின்றீர்கள்.உங்களுக்கு இன்னும் பல நாடுகளின் கதவு திறந்துள்ளது தானே.ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஏதாவது உண்டா என்று பார்த்து எஞ்சியுள்ள மக்களுக்காக ஏதாவது பண்ணுங்கள்.வாழும் காலம் வரையும் அரசியல் நடத்த முடியாது.மற்றவர்களையும் அனுசரித்து ஆலோசனைகளையும் உள்வாங்கி வழிகளையும் திறந்து விடுங்கள்.ஒவ்வொரு நாளும் வடக்கு கிழக்கில் ஐந்து தமிழனாவது அனியாயமாக உயிரை விடுகின்றான். இந்த நிலை மாற வேண்டும்.

                                                            “இராமர் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன” 

சிங்கள பேரினவாதம் மாறாது

http://www.yarl.com/forum3/index.php?/topic/149918-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/#entry1062924

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரி! அவர் அல்லது தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் என்னசெய்ய வேண்டுமென்று சற்று தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட முடியுமா?

சரி! அவர் அல்லது தமிழ் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் என்னசெய்ய வேண்டுமென்று சற்று தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட முடியுமா?

 

http://www.yarl.com/...ை/#entry1062924

மே 2009 இற்குப் பின்னரான சூழலில் பொது சன வாக்கெடுப்பைக் கோருவது என்ற உத்தி தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக தமிழர்களது அரசியல் தீர்வு செயன்முறை ஒன்றை அணுகுவது என்பது சனநாயக ரீதியாக முன்வைப்பு (democratic articulation) என்ற வகையில் அறவியல் சார்ந்து மறுதலிக்க முடியாது. சனநாயகம் என்ற ஒற்றை சுலோகம் தாங்குபவர்கள் இதற்கு மறுப்பு சொல்வது என்பது முடியாத காரியம். ஸகொட்லாண்டில், கட்லோனியாவில, மொன்டிநீக்ரோவில், தென்சூடானில் அத்தேசங்களைச் சார்ந்த மக்களுக்கு இந்த சனநாயக வாய்ப்பு இருக்குமென்றால் சர்வதேச அரசியல், குடியியல் பொருத்தனை கூறுகின்ற ‘தாம் விரும்கும் அரசியல் தெரிவை மேற்கொள்வதற்கான’ சுயநிர்ணய உரிமையைச் செயற்படுத்தும் கருவியாக தமிழர்கள் பொதுசனவாக்கெடுப்பை கோருவதற்கான தார்மீக உரிமை உண்டு. இந்தப் பொதுசனவாக்கெடுப்பில் தமிழர்கள் என்ன தெரிவு செய்யப் போகின்றார்கள் என்பதனைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஒரு செயன்முறை சார்ந்த முன்வைப்பாக (process-related articulation) நாங்கள் இதனை முன்வைக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.