Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளால் சீரழிந்த பொருளாதாரத்தை விட மகிந்தவின் ஆட்சியே மோசமாகச் சீரழித்தது

Featured Replies

6775_content_chambika.jpg

 

  மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாகவும் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அதேவேளை இனவாதம்  மற்றும் பிரிவினை வாதத்தின் கரங்கள் பலப்படுத்தப்படுமென ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

 

 "ஆலாபாலு ஆர்த்திகிய' ( அழிவடைந்த பொருளாதாரம்) என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வொன்று  நேற்று திங்கட்கிழமை பிட்டகோட்டேயிலுள்ள கோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இப்புத்தகத்தின் எழுத்தாளரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளருமான  பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.

 

 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ;  

 

தீவிரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் படையை  தாமே வெற்றிகொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்து வருகிறார். அது முற்றிலும் பொய்யாகும்.  தேசப்பற்றுள்ள இலங்கை மக்களும் இராணுவமுமே தீவிரவாதத்தை தோற்கடித்து இந்நாட்டை வெற்றியடையச் செய்தன.

 

 யுத்தத்தை தாமே வெற்றி கொண்டதாக மார்தட்டிக் கூறிக் கொள்ளும் ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து சமாதான கூட்டணிக்கு ஒப்புக் கொண்டு அந்த கூட்டணியுடன் ஒப்பந்தமொன்றையும் கைச்சாத்திட்டவர். அது மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சமாதானம் பேசுவதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நோர்வேக்கு அனுப்பி வைத்தவர் தான் இந்த மகிந்த  ராஜபக்ஷ. தமிழீழ விடுதலைப்  புலிகளுடன் யுத்தம் செய்யுமாறு கூறி தேசப்பற்றுள்ள அமைப்புகள் தம்மை பிரச்சினைக்குள்தள்ள முயற்சிப்பதாக  தெரிவித்தவரே இன்று  யுத்த வெற்றி தன்னுடையதென மார்தட்டிக் கூறிவருகின்றார்.  

 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இலங்கையில் தலை தூக்கவிடாமல் தடுப்பதற்கு நாம் உள்ளோம். அதனை வைத்து நாட்டு மக்கள் மத்தியில்  பீதியை ஏற்படுத்தவோ அதனை அரசியல் இலாபத்துக்காகவோ அரசாங்கம் பயன்படுத்துக்கூடாது.  இலங்கையை பஞ்ச பல கேந்திர நிலையமான மாற்றுவதற்கும் ஆசியாவின் ஆச்சரிய நாடாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு மகிந்த சிந்தனை  கொள்கைத் திட்டம் வெளியிடப்பட்டது. ஆனால் இன்று இலங்கை எதனோல், கசினோ, ஆசனிக், சிகரெட், ஹெரோயின் போன்றவற்றில் பஞ்ச பல கேந்திர நிலையமாக மாறியுள்ளது.  

 

இதற்கும் மேலாக இவற்றை கட்டுப்படுத்தும் "மெகா டீல்' ஒன்று ஆட்சியாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  பொருளாதாரம் தொடர்பில் இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யாகும். நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர இலக்கங்களால் மாயாஜாலம் செய்து இலங்கை மக்களை ஏமாற்றி வருகிறார்.  இலகுவாகச் சொல்ல வேண்டுமாயின்  தமிழீழ விடுதலைப் புலிகள் இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு  ஏற்படுத்திய வீழ்ச்சியை விட மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இ ந்நாட்டின் பொருளாதாரத்தை   மிக மோசமாக வீழ்ச்சி அடையச் செய்துள்ளது.

 

 இலங்கையின்  கடன் சுமை குறைந்துள்ளதாக இந்த அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் நாட்டின்  வருமானத்தில் பெரும்பங்கு கடனாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நாட்டின் மொத்த வருமானம் 1137 பில்லியன் ரூபா. ஆனால் நாட்டின் கடன் சுமையோ 1036 பில்லியன் ரூபாவாகும். 845 பில்லியன் ரூபா கடன் சுமையை அரசாங்கம் மக்களுக்கு மறைத்து வருகிறது.  அரசாங்க நிறுவனங்களின் கடன்களை அந்தந்த நிறுவனங்களுக்கு சுமத்தி வருவதும் அந்த கடன் சுமை  மக்கள் நுகரும் பொருட்களில் வரித் தொகையாக அறவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

 

 http://www.thinakkural.lk/article.php?local/atlxwp9vsz4089be93cca18714953nhzcte923aabc702667ba5f0d06bzxzg#sthash.DPSHlmRU.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

6775_content_chambika.jpg

 

  மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாகவும் ஆட்சியதிகாரத்தை வழங்கினால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அதேவேளை இனவாதம்  மற்றும் பிரிவினை வாதத்தின் கரங்கள் பலப்படுத்தப்படுமென 

தமிழர்கள் புரிஞ்சுக்குவாங்களா ?? 

உங்கட தொல்லை தாங்க முடியவில்லை அண்ணே , உலக நாடுகளால் எங்கட ஆயுத பலத்தை தானே முடக்கினார்கள் மற்றும்படி ஏனைய அமைப்புகளை ஒன்றும் செய்யமுடியவில்லை . இதில நீங்கள் வேற நான் நீ என சும்மா உரிமை கொண்டடுகிறிர்கள் . தனிய வந்து ஆணையிறவு சண்டையில் அடி வாங்கினதெல்லாம் மறந்து போச்சோ .

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரம் பாதிக்கும்.

அதை ஈடு செய்ய அரசு தொடர்ந்தும் தமிழர் மீது அடக்குமுறையை ஏவும்.

சிங்கள இனவாதம் கொம்பு சீவப்படும்.

குடியேற்றம் விரைவுபடும்.

எந்த தற்காப்பு பலமுமில்லாத எம்மினம் அடியோடு வேறறுக்கப்படும்.

மகிந்தவை வெல்ல வைத்தால் அது எமக்கு நாமே சாவு மணி அடிப்பதற்குச் சமன்.

மக்கள் ஒன்றும் புலம்பெயர்களின் பரிசோதனை எலிகளல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரம் பாதிக்கும்.

அதை ஈடு செய்ய அரசு தொடர்ந்தும் தமிழர் மீது அடக்குமுறையை ஏவும்.

சிங்கள இனவாதம் கொம்பு சீவப்படும்.

குடியேற்றம் விரைவுபடும்.

எந்த தற்காப்பு பலமுமில்லாத எம்மினம் அடியோடு வேறறுக்கப்படும்.

மகிந்தவை வெல்ல வைத்தால் அது எமக்கு நாமே சாவு மணி அடிப்பதற்குச் சமன்.

மக்கள் ஒன்றும் புலம்பெயர்களின் பரிசோதனை எலிகளல்ல.

மேற்குலகு 
முதலீட்டாளர்கள் 
இவர்களுக்கும் ஒரு அரசிற்கும் முரண்பாடு வரும்போது அத விளைவு பாரதுரமாக இருக்கும்.
 
மைத்த்ரிரி வந்தால் வன்முறை இருக்காது ,,,, பேச்சு நீளும் ஒன்றும் நடவாது!
8 வருடம்போயிருக்கும்.
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா நம்பர் மாதம் 1ம் திகதி சிங்கப்பூர் சென்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன நம்பர் 2 முதல் 5ம் திகதி வரையில் சிங்கப்பூரில் தங்கியிருந்தார். சம்பிக்க ரணவக்க நம்பர் 2 முதல் 4ம் திகதி வரையிலும், ரணில் விக்ரமசிங்க நவம்பர் மாதம் 14, 18 மற்றும் 19ம் திகதிகளிலும், திகாம்பரம் நவம்பர் மாதம் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரையிலும் தங்கியிருந்தனர். மங்கள சமரவீர நம்பர் மாதம் 14ம் திகதியிலும், ராஜித சேனாரட்ன 18 முதல் 21ம் திகதி வரையிலும் சிங்கப்பூரில் தங்கியிருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் இவர்கள் சிங்கப்பூரில் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என அனுர பிரியதர்சன யாபா குற்றம் சுமத்தியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.