Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி: கருத்து பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். இனிச் சொல்லுவியள். ஒரு பள்ளி உள்வாங்குவது அவர்களைச் சார்ந்தது. ஆனால் அதைப் பற்றி விமர்ச்சித்து, யாழ்பாணத்தான் தான் எல்லாமே என்று தொடங்கத்தில் பிரதேசவாத சிந்தனை கொண்டு வந்து கதைத்தது நீர். நல்லாப் பூச்சுத்துறியள் பாருங்கோ!

இலங்கையரசின் கீழ் செயற்படுகின்ற பாடசாலைகள் எல்லாமே சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டில் தான் செயற்பட முடியும். இன்று முல்லைத்தீவு அரசாங்கா அதிபர்,( திருமதி இமல்டா சுகுமார்) புலிகளின் தேசியக்கொடிக்கு தமிழீழத்தில் சல்யுட் அடித்தாலும் அரசாங்க உத்யோகத்தில் தான் இருக்கின்றார். அரசுக்குத் தெரியும். தமிழீழத்தில் ஒன்றும் புடுங்க முடியாது என்று.

அரசாங்க உத்தியோகத்தார்கள் எங்கிருந்தாலும், அரசாங்கப் பணத்தில் தான் இப்போதும் ஜுவிக்கின்றனர். அப்படியிருக்க கொழும்பில் இருந்து கொண்டு, இலங்கையரசுக்கு எதிராகச் செயற்படு என்று சொல்வது, படு முட்டாள்தனமானது. ஏற்கனவே சிங்கள ஊடகங்கள் புலிச்சாயம் பூச அலையும்போது இவரும் அதற்கு எடுத்துக் கொடுக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றார்.

முன்னர், எழுதிய கருத்துக்களில் உம்மால் எவ்வித ஆதாரங்களையும் வைக்கவில்லையே! பிறகு எப்படி நியாயம் பற்றிப் பேசுவது. முந்திச் சொல்வது எல்லாம் குதர்க்க கதைகளாகத் தானே உதிர்த்தீர்! அதில் நாங்கள் சடைகின்றோம் என்று வேறு பினாத்தல்!

மக்களின் மனவோட்டங்கள் என்று உம் கருத்தை மட்டும் எடுத்து, நம்புவதற்கு ஒன்றும் முட்டாள்கள் அல்ல. மக்களின் குரல் என்று ஒருத்தன் ஓலமிடுவதை எல்லாம் கணக்கில் எடுக்கத் தேவையும் இல்லை. மேலும் நீர் சொன்ன எக்ககருத்துக்களுமே, பாடசாலை வளர்ச்சிக்கு அல்ல, என்பதும் அது வஞ்சத்தால் வந்த கருத்துக்கள் என்பது புரிந்து கொள்ள முடியும்.

றோயல் கல்லூரி ஒரு போக்கைக் கொண்டது. இந்துக் கல்லூரி ஒரு வழியைக் கொண்டது. இணையத்தில் தகவல் தருவது தான் திருத்தம் என்ற முட்டாள்தனமான சிந்தனைகள் இரண்டுக்கும் இடையில் இல்லை. றோயல்கல்லூரி என்பது மேட்டுக்குடிகளின் பாடசாலை. அங்கே சிறிய பார்ட்டி நடந்தாலே, லட்சக்கணக்கில் செலவளிப்பார்கள். ஆனால் இந்துக் கல்லூரி பள்ளிக்கு இடவசதியற்ற, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை உள்வாங்குகின்ற பாடசாலை.

பாடசாலையின் பல அபிவிருத்தித் திட்டங்கள் பெற்றோர், ஆதரவாளர் நிதித் திட்டங்களோடு தான் நட்நதன். பொது மைதானம் முழுக்க முழுக்க, அரசாங்கப் பணம் இன்றித் தான் நடந்தன. அதைச் சொல்லி இங்கே பெருமையடிக்க வேண்டிய தேவையும் இல்லை.

உம் வீட்டு மதிலில் இந்துக் கல்லூரி மாணவர்கள் எழுதட்டும் என்று பார்த்துக் கொண்டு நிற்கின்றது உம் பிழை! அந்த ஏமாளித்தனத்துக்கு நாம் பதில் சொல்ல முடியாது!

இராமநாதன் பள்ளிக்குள் பந்து அடித்துப் போகும் அளவு தூரம் இல்லை. இரண்டுக்கும் இடையே பெரும்வீதி வேறு உண்டு. அதை விட, இரு பக்கங்களும் மாடிக்கட்டங்கள் உள்ளது. எனவே, இராமனாதன் பள்ளி பக்கத்தில் இருக்கின்றது என்று யாரோ சொன்னதைக் கேட்டு, லண்டனில் இருந்து வரைபடம் போடாதீர்!

  • Replies 86
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது பள்ளி மீது அக்கறையுள்ளவனாகக் காட்டிக் கொள்ள முனையும் நீர், தொடக்கத்தில், வடக்கு மாணவர்கள் முக்கியமாக யாழ்பாணத்தானால் தான் தரம் உயர்வு என்று பிரதேசவாதத்தோடு எழுத முனைந்ததையும், பின் யாழ்களத்தின் மீது 10 கேள்விகள் என்ற பாணியில் இந்துக் கல்லூரி மீது ஆதாரமற்ற காழ்ப்புணர்ச்சி வசனங்கள் எழுதியதை மறக்கக் கூடியதல்ல.

ஆனால் கடைசியில் எந்த வித ஆதாரங்களையும் திரட்ட முடியாமல், சந்தியில் நின்று ஊர்வம்பு கதைப்பது போல, இந்துக் கல்லூரி மீது அசிங்கம் செய்ய முடியும் என்று நினைத்தால் அது உம் மடமையாகும். 4 பக்கங்கள் தாண்டினால், தொடக்கத்தை மறந்துவிடுவோம் என்று நினைப்பதை நிறுத்துவது சாலச் சிறந்தது.

கடைசியில் தலைப்பில் இருந்து கதைக்க முடியாமல் போகும் என்று தெரிந்ததும், முதலே சாட்டுக்களோடு வெளியேறும் உம் புத்தியை மெச்சாமலும் இருக்க முடியவில்லை. வாழ்த்துக்கள்!

அருமையான பதில் தூயவன். (இதுக்கு மேல நான் ஏதாவது சொல்லப்போனால் என் கருத்துக் காணாமல் போய்விடும் :lol::lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திர தினக் கொண்டாட்டம் அது இதென்று சிறீலங்கா அரச நிகழ்வுகளுக்கு தமிழ் மாணவர்களை அனுப்பி பிழைப்பு நடத்தும் ஒரு பள்ளிக்கூடம் நீங்கள் பிரதேசவாதம் பற்றி என்ன பயங்கரவாதம் பற்றியும் பேசுவீர்கள்.

ஏன்ராப்பாமாரே! என்ன எழுதுவதென்ற ஒரு விவஸ்தை இல்லையா??? உந்தப் பள்ளிக்கூடம் யாழ்ப்பாணத்தில்தானே இருக்கு! அவங்கள் கூப்பிட மறுக்க!!

உந்த யாழ்ப்பாணப் பள்ளிக்கூடங்களான் தேசியப் பற்று எல்லாம் தெரிந்த ஒன்றுதான்!! ஒரு அதிபர் கிறிக்கெட் விட்டு மேலை! சிலர் ஓட்டிகளோடு ஒட்டி மேலை! சிலருக்கு ... வேண்டாம்! ஒரு பாடசாலை என்றால்! அதில் நல்லது, கெட்டது ஆயிரம் இருக்கும்! அது எல்லாப் பாடசாலைகளிலும்தான்!!

ஒரு பாடசாலையின் காலத்து நினைவுகளைப் பகிருவது என்பது, குப்பை கொட்டவல்ல!

தேவை அற்ற விவாதங்களைத் தவிர்ப்போம்! பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருங்கோ!!! எனது முன்னைய கல்லூரியும் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமானதே! நான் படிக்கும் காலகட்டத்தில், சில உயர்தர வகுப்பு மாணவர்கள், வேறு பாடசாலையில் களவில் ஈடுபட்டு பிடிபட்டார்கள். இன்னும் சிலர் ஓர் அப்பாவி சக மாணவனை பாலியல் சித்திரவதை செய்ததனால், அம்மாணவன் தற்கொலை செய்தது, அன்று யாழையே உலுக்கிய செய்தி! ... இப்படிப் பல பல!! அதற்காக அப்பாடசாலை பிழையானதா?

தொழிலற்ற புண்ணாக்குக் கூட்டங்கள்! எதுக்கு விவாதம் என்று ஒரு விவஸ்தை இல்லையா???????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயதேவன்..யாழில் நிகழ்ந்த நிகழ்வுகள் உடனடியாக பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு அவற்றிற்கு தீர்வுகளும் எட்டப்பட்டுள்ளன. யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பகிடி வதை சித்திரவதைகள் கூட அப்படி பொதுமக்களால் வெளிக்கொண்ரப்பட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலை மாணவர்கள் பொதுமக்களை துன்புறுத்தும் வகையிலான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டுதலும் தவிர்த்தலும் குப்பை கொட்டுவது என்று நீங்கள் கருதினால் மக்கள் குப்பைகளோடுதான் காலங்கடத்த வேண்டிய சூழல் வரும்.

புதிய மாணவர்களை ராக்கிங் செய்வது கூட இந்தப் பாடசாலையின் நடந்தது. அந்தளவுக்கு மோசமான நிலை இருந்தது. இன்று அந்த நிலை வெகுவாக குறைந்து குழுச் செயற்பாடுகளே ஆபத்தான அளவில் நடக்கின்றது. இதுவே யாழ்ப்பாணம் என்றால் இங்கு எழுதத் தேவையில்லை.பரிகாரம் கண்டிருப்பார்கள் அங்கையே.

அரசின் நிகழ்வுகளுக்குச் செல்வதை ஏன் இவர்கள் பகிஸ்கரித்திருக்க முடியாது. வடக்குக்கிழக்குப் பாடசாலைகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் பகிஸ்கரிப்புக்களைச் செய்த போது இவர்கள் ஏன் செய்ய முடியாது. அரச விசுவாசத்தைக் காட்டி அரச உதவி பெற்றவர்கள் என்பதை மறுக்கவும் முடியாது. தமிழ் பாடசாலைகளுள் அதிகம் அரச உதவி பெற்ற பாடசாலை இது என்றாலும் தவறில்லை.

இன்று வடக்குக்கிழக்கு மாணவர்களின் வருகையையும் அதன் பின்னான வளர்ச்சியையும் ஒத்துக்கொள்ள மறுக்கும் இவர்களா தமிழ் விசுவாசுகள்???! யாழ் பிரபல்ய ஆசிரியர்கள் இடம்பெயர்ந்து யாழ் மாவட்ட மாணவர்கள் கல்விக்காக திண்டாடிய வேளைகளை எண்ணிப்பார்த்திருந்தால் பிரதேசவாதம் கதைப்பதாக கதையளந்து தங்கள் தவறுகளை மறைக்க முனைவரா?

எதுவாகவும் இருக்கட்டும் கொழும்பில் தமிழ் மக்களின் கல்வியில் இன்று முக்கிய இடம்பெற்றுவிட்ட இப்பாடசாலை இன்னும் சிறப்புற மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அவா. அந்த வகையில் நிறைகளை மட்டும் நோக்காமல் குறைகளை நோக்கியும் அவற்றைத் தவிர்க்கவும் முனைவதே ஒரு சிறந்த கல்லூரிக்கு அழகு. அந்தப் பக்குவம் இங்கு யாழில் உள்ள இக்கல்லூரி மாணவர்கள் சிலரிடம் இல்லை என்பதற்காக நாம் அக்கல்லூரி மாணவர்கள் எல்லோரும் அப்படி என்று முத்திரை குத்தினால் அது எம்மையும் தான் தாக்கும். :idea:

ஜயா நெடுக்கால போவான் கனவில் கண்டதெல்லாம் எழுதாதயும் நான் பாடசாலையை சார்ந்தவன் என்னை பற்றி துயவன் அல்லது அருவியிடம் கேளும் எனக்கு அங்கு நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் தெரியவரும் நீர் இப்போது சொல்வது போல ராகிங் நடந்ததாக நான் அறியவில்லை நான் 8 வருடங்கள் இக்கல்லூரியில்தான் படித்தேன் 2000- 2003 வரை மாணவர்தலைவர் ஒன்றியத்திலும் உருப்பினராக இருந்தேன் எமக்குதெரியாத ஒன்ரு உமக்கு தெரிந்திருக்க வாய்பே இல்லை என நான் உறுதிபடக்கூறுகின்றேன்

நைனா அப்போது சங்கரலிங்கம் அவர்கள் அதிபராக இருந்திருக்கவேண்டும் என நினைக்கின்றேன் அப்போ வெலுப்பிள்ளை அசிரியரிடம் படித்திருபீர்கள் என நினைக்கின்றேன்

அரசின் நிகழ்வுகளுக்குச் செல்வதை ஏன் இவர்கள் பகிஸ்கரித்திருக்க முடியாது. வடக்குக்கிழக்குப் பாடசாலைகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் பகிஸ்கரிப்புக்களைச் செய்த போது இவர்கள் ஏன் செய்ய முடியாது. அரச விசுவாசத்தைக் காட்டி அரச உதவி பெற்றவர்கள் என்பதை மறுக்கவும் முடியாது. தமிழ் பாடசாலைகளுள் அதிகம் அரச உதவி பெற்ற பாடசாலை இது என்றாலும் தவறில்லை.

ஒரு பாடசாலை தனித்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தால் யாழில் இன்று அப்பாடசாலை இயங்கமுடியாத சூழ்நிலை நிலவியிருக்கும். கொழும்பில் பகிஸ்பரிப்பில் ஈடுபட முடியாத சூழல் காணப்படுவதனைப் புரிந்துகொள்ளவேண்டும். கொழும்பிலே இருந்து அரசிற்கு எதிராக ஏதாவது தனித்துச் செய்யும் போது அவ்விடத்தில் இருந்து மறைந்துபோகக்கூடிய சூழலே அங்கு காணப்படுகிறது. அரச விசுவாசத்தினைக் காட்டி அரச உதவிகளைப் பெறவில்லை. சூழ்நிலையை அனுசரித்துப் போகவேண்டிய சூழல் காணப்படுகிறது. அவ்வாறு சூழ்நிலையை அனுசரித்துப் போகாதிருந்தால் உலகில் மனிதப் பரம்பலே அமைந்திருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நெடுங்கால போவன், எதிர்வரும் காலங்களில், கொழும்பு பொலிசில் மாட்டுப்பட்டாலோ, அல்லது இராணுவத்திடம் மாட்டுப்பட்டாலோ, தான் தமிழ்தேசிய ஆதரவாளன் என்றும், புலிகளுக்கு ஆதரவு செய்வதாகவும் பகிரங்கமாக ஒத்துக் கொள்வார் என்று மேலே சொன்ன வார்த்தைகளால் உறுதிப்படுகின்றார் என நம்புகின்றோம்.

அவ்வாறு அவர் செய்யாத பட்சத்தில், அவர் தன்னைத் துரோகி என்று ஒத்துக் கொள்வதற்கு ஈடானது. இதனால் பொலிசுக்கும் அதிக கஸ்டமும் இல்லை. இப்படியே nவுறு யாரும் செய்ய முனைந்தாலும் செய்து உங்களின் தேசியப் பற்றைக் காட்டிக் கொள்ளுங்கள்!

அரச உதவி அரச உஅதவி என்கிண்ரீரே பாடசாலைக்கு அரசௌதவி கிடைத்ததற்கானா ஆதாரங்கலை இங்கே இணையும் பாப்போம் உமது ஸ்ரைலிலே கேக்கிறேன் *********

******* நீக்கம் யாழ்பாடி.

வேறு பகுதிகளில் எழுதப்படும் விடயங்களை அப்பகுதியுடன் நிறுதுவது நல்லது.. தேவையற்று மற்றைய தலைப்புக்களில் எழுதப்படும் விடயங்களை தொடர்புபடுத்தி எழுதுவதை தவிருங்கள். நன்றி.

வேண்டு கோளை ஏற்ற நிர்வாகத்தினருக்கு நன்றிகள்

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

ஏன்ராப்பாமாரே! என்ன எழுதுவதென்ற ஒரு விவஸ்தை இல்லையா??? உந்தப் பள்ளிக்கூடம் யாழ்ப்பாணத்தில்தானே இருக்கு! அவங்கள் கூப்பிட மறுக்க!!

உந்த யாழ்ப்பாணப் பள்ளிக்கூடங்களான் தேசியப் பற்று எல்லாம் தெரிந்த ஒன்றுதான்!! ஒரு அதிபர் கிறிக்கெட் விட்டு மேலை! சிலர் ஓட்டிகளோடு ஒட்டி மேலை! சிலருக்கு ... வேண்டாம்! ஒரு பாடசாலை என்றால்! அதில் நல்லது, கெட்டது ஆயிரம் இருக்கும்! அது எல்லாப் பாடசாலைகளிலும்தான்!!

ஒரு பாடசாலையின் காலத்து நினைவுகளைப் பகிருவது என்பது, குப்பை கொட்டவல்ல!

தேவை அற்ற விவாதங்களைத் தவிர்ப்போம்! பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கியிருங்கோ!!! எனது முன்னைய கல்லூரியும் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமானதே! நான் படிக்கும் காலகட்டத்தில், சில உயர்தர வகுப்பு மாணவர்கள், வேறு பாடசாலையில் களவில் ஈடுபட்டு பிடிபட்டார்கள். இன்னும் சிலர் ஓர் அப்பாவி சக மாணவனை பாலியல் சித்திரவதை செய்ததனால், அம்மாணவன் தற்கொலை செய்தது, அன்று யாழையே உலுக்கிய செய்தி! ... இப்படிப் பல பல!! அதற்காக அப்பாடசாலை பிழையானதா?

தொழிலற்ற புண்ணாக்குக் கூட்டங்கள்! எதுக்கு விவாதம் என்று ஒரு விவஸ்தை இல்லையா???????????

ஜெயதேவன் சார்...அந்த அப்பாவி ஸடூடண்ட் அவங்களை பொண்ணு மாதிரியே நினைச்சுக்கு வாங்களாம் ரொம்ப பசங்களுடன் காதல்(ஓரின) வைச்சிருந்தங்காளாம்... காதல் போட்டி, பொறாமை., தோல்விங்க.. எக்ஸ்ற்ரா,எக்ஸ்ற்ரா.....

அது தான் உயிரை மாய்சுட்டாங்க.... எனக்கென்ன சார் தெரியும்... தினத்தந்தியிலை.... பார்த்து கிட்டதா பேசி கிட்டாங்க

  • 4 months later...

1. சர்மா ஐயா அதிபராக இருந்த போது அகதிகளாக வந்த மாணவர்களிடம் கூட ஈவு இரக்கமில்லாமல் 10,000 ரூவைக் கறந்ததும் ஒரு கட்டிடம் கூட புதிதாகக் கட்டாததும் அதன் பின்னர் அரசின் பண உதவி பெற்று முத்துக்குமாரர் கட்டியதுகளும் பம்பலப்பிட்டிய வாழ் மக்கள் அறிவார்கள்.

2. சரஸ்வதி மண்டபத்துக்கு முன்னால் உள்ள வீதிகளின் மதிலோரங்கள் எங்கும் கறுப்பு எண்ணைச் சோக் கட்டிகளால் எழுதித் தள்ளியதை நாங்களே அழித்திருக்கும் போது நீங்கள் பொய் என்றால் எனிப் புகைப்படத்துடன் தான் தகவல் போட வேண்டும். அதுவரை அது பொய்யாகவே இருக்கட்டும்.

3. சோடாப் போத்தல்கள் சகிதம் கல்கிசை தோமியன் சென்று சிங்கள மாணவர்களோடு மோதியதும் காயங்கள் ஏற்படுத்தியதுவும் கொழும்பில் பரப்பரப்பாக செய்திகளில் பேசப்பட்டதும் பத்திரிகைகளில் வந்து இந்துவின் பெயரை நாறடித்தவும் உண்மை இல்லை என்றாகிடுமா?

பழைய மாணவர்கள் புதிய மாணவர்கள் என்று கொழும்பில் காங் நடத்துவதும் வீதிகளில் நின்று சண்டித்தனம் செய்வதும் தெகிவளை முதல் கொல்பிட்டி வரை தெரிந்த விடயங்கள்.

4. 90, 95 இடம்பெயர்வுக்கு முன்னர் பொதுத்தராதரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் மோசமாக இருந்தமையும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின்னர் பெறுபேறுகளின் உயர்வும் இராமனாதனுக்குப் போட்டியாக இருக்க முடிந்ததுவும் சமகால நிகழ்வுகளை மறைக்கும் செயல்.

5. கொழும்பு வாழ் தமிழர்கள் றோயல் தோமஸ் ஆனந்தா என்று தேடித்தேடி தங்கள் பிள்ளைகளை சேர்த்தது போய் பம்பலப்பட்டி என்று தேடி வந்ததும் வடக்கு கிழக்கு மாணவர்களின் வருகையின் பின் நிகழ்ந்த பரீட்சைப் பெறுபேறுகளின் உயர்ச்சியின் பிந்தான்.

6. பம்பலப்பிட்டிய இந்துவில் படித்த எல்லோரும் ரவுடிசுமோ அல்லது காங்கோ நடத்தவில்லை. ஆனால் தமிழ் ரவுடிகளை காங்குகளை உருவாக்கிய பெருமையும் பம்பலப்பட்டிய இந்துக் கல்லூரியைச் சாரும்.

7. நீங்கள் குறிப்பிட்டது போல 1991 இல்தான் உங்கள் பாடசாலைக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து கிடைத்தது என்பதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

8. இன்று பம்பலப்பிட்டிய இந்துக் கல்லூரி குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒழுக்கத்தில் திகழ்வதற்கு யாழில் இருந்து இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் பலரை உள்வாங்கி இருப்பதுவும் காரணம். அதை மறுக்க முடியுமா?

9. உங்கள் பாடசாலை மாணவர்கள் மீது பம்பலப்பிட்டிய கதிரேசன் கோயில் பக்கம் உள்ள அயலவர்கள் அனுப்பி வைத்த முறைப்பாடுகள் குறித்து உங்கள் அதிபரிடம் விசாரித்து அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்று அவரால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இங்கு தரமுடியுமா?

10. பத்திரிகைகளில் வந்த உங்கள் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை தவறானவை என்று பத்திரிகைகள் மூலம் அறிவிக்க முடியுமா?!

ஐயா நெடுக்ஸ் இப்போதுதான் இந்த தலைப்பைப் பார்த்தேன், நானும் சர்மா காலத்தில் தான் இடம்பெயர்ந்து வந்து இணைந்தேன், நீர் சொல்வது போல எல்லோரிடமும் காசு வாங்குவதில்லை, விரும்பியவர்களிடம்தான் அதுவும் பாடசாலை அபிவிருத்தி சபை சார்பாக பற்றுச்சீட்டு கூட வழங்கப் பட்டு வருட இறுதியில் வரவு செலவு கூட பணம் கொடுத்த்வருக்கு வழங்கப்படும், தேசிய பாட சாலையென்றுதான் பெயர் ஆனால் அரசாங்கம் பாடசாலைக்கென்று நான் படித்த 8வருடத்தில் எதுவும் பண்ணியதாக தெரியாது. நான் படித்த 8வருடத்தில் சுமார் 3கோடிக்கும் மேற்பட்ட பணிகள் நடத்தப் பட்டது அதில் 90% அதிகமான நிதி எப்படி வந்தது.........? நீரா கொடுத்தீர்........? பாடசாலை அதிபரின் முயற்ச்சியால்தான், இது பற்றி அறிய வேணுமானல் கல்லூரி நூலகத்தில் ஆதாரங்கள் இருக்கும் போய் பாரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.