Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் பள்ளிவாயலை நாம் பாதுகாப்போம்: மஹிந்த

Featured Replies

10882101_10152420966011467_3176131783057

முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை நாம் பாதுகாப்போம் என ஜனாதிபதி மஹிந்த  ராஜபக் ஷ தெரிவித்தார். 
 
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில்   நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
 
அவர் மேலும் குறிப்பிடுகையில், 
 
காத்தான்குடிப் பிரதேசம் எனக்கு புதிய இடமல்ல. நான் இங்கு பல தடவைகள் வந்துள்ளேன். உங்கள் பள்ளிவாயலுக்கு அத்திபாரம் போடுவதற்கு நான் இங்கு வந்தேன். 
அது நான் செய்த பாக்கியமாகும். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எங்கள் வீட்டுப் பிள்ளை. இந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப என்னை நீங்கள் பூரணமாக நம்பலாம். 
 
காத்தான்குடியில் நான் செய்த அனைத்து அபிவிருத்தி வேலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். பல கோடி ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் சூலேஸ் திட்டம் காத்தான்குடியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளேன். 
 
பல்கலைக்கழக கல்லூரியை வழங்கியுள்ளேன். முஸ்லிம்களின் கலாசாரம், வரலாறுகளை பாதுகாக்க இஸ்லாமிய நூதனசாலையை காத்தான்குடியில் நிர்மாணித்துள்ளோம். 
 
காத்தான்குடியில் இடம்பெற்ற பள்ளிவாயல் படுகொலைச் சம்பவம் இனிமேல் இடம் பெற முடியாது. 
 
இன ரீதியான அரசியல் வேண்டாம். நாம் எல்லோரும் ஒரே தாயின் பிள்ளைகளே. இலங்கைத் தாய் மக்களே நாம். 
 
அரசாங்க வானொலியில் ஐந்து நேரமும் அதான் சொல்லுவதை ஆரம்பித்தது நான்தான். முஸ்லிம் மக்கள் எப்போதும் எமது சகோதரர்கள். முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை எப்போதும் நாம் பாதுகாப்போம். 
 
பள்ளிவாயல்களை நிர்மாணிக்க நாம் உதவி செய்வோம். உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை நீங்கள் யோசிக்க வேண்டும். 
 
அனைத்து மக்களையும் பாதுகாப்போம். இன வாத அரசியல் வேண்டாம். பொய்ப்பிரசாரத்தை நம்ப வேண்டாம். 
 
நாம் முன்னோக்கிப் போவதா அல்லது பின்னோக்கிப் போவதா என்பதை நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். 
 
ஒளிமயமான எதிர்காலத்துக்காக என்னுடன் சேருங்கள். ஆசியாவின் அதிசயமான நாடாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் தெரிவித்தார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசல்களை உடைக்காவிடில், காச்சல் கொள்ளும் பொது பல சேனவை யாரு பாதுகாப்பதாம்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பள்ளிவாசலை உடைச்சது.. இந்த அரசியலுக்காகத் தானா. அப்போ மகிந்தவுக்கு இலாபம் வரும் என்றால் அவர் அதிகாரத்தில் இருக்கும் போது..எதனையும் தகர்ப்பார்.. மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற தகர்த்ததை.. மீளமைப்பார் அப்படியா.

 

நல்லா இருக்கு மகிந்த சிந்தனை. இதற்கு முஸ்லீம்கள் மயங்குவார்களாக இருந்தால் அவர்களை விட்ட புத்திபேதலித்தோர் யாராகவும் இருக்க முடியாது. இதை விட்டு வேறு உருப்படியான காரணங்கள் இருந்தால் அவர்கள் மகிந்தவை மீண்டும் தெரிவு செய்யலாம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேல்லை  ஹிஸ்புல்லா எண்டு கத்தினாலே அந்த இடத்துக்கு ஓட்டமெற்றிக்காய் குண்டு விழுந்து வெடிக்குமாம்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
பிழைத்த கணக்கு
 
அண்ண, தம்பிமார் எதிர் பார்த்தது ரணில் எதிராளியை நிப்பார் எண்டு....
 
தங்கண்ட, SLFP வாக்குகள் அப்படியே இருக்க, UNP ல் இருந்து கிளப்பக் கூடிய பெளத்த வாக்குகளை ஆட்டையைப் போடுற ஐடியாவில, பொது பல சேனவைக் கிண்டி விட்டு முஸ்லிம்களையும், சந்திரஸ்ரீ, டக்லஸ், கருணா மூலம் தமிழர்களையும், பாதிப்புற வைத்ததன் மூலம், அதை சாதிக்க நினைக்க, பாழ்படுவார், மைத்திரியை கொண்டு வந்து, UNP, தமிழ், முஸ்லிம் வாக்குகள் அப்படியே சுலையாகவும், SLFP வாக்குகள் பிரியும் நிலையில் வைக்க, மாமு, அல்லாடிக் கொண்டு முஸ்லிம் பள்ளி வாசல் களைப் பதுகாப்பாராம்.
 
முல்லைத்தீவில நிண்டு கொண்டு தமிழில, எல்லாத்தையும் மறந்து போடுங்கோ என்று குளறுது மனிசன்.
 
பயம் வந்து விட்டுது போல கிடக்குது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.