Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பாடுகளின் கூடாராமாக எதிரணி – பீரிஸ் குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முரண்பாடுகளின் கூடாராமாக எதிரணி – பீரிஸ் குற்றச்சாட்டு!

 

 

gl_peiris_colombo_press--300x182.jpgமுரண்­பா­டு­களின் கூடா­ர­மாக எதி­ரணி காணப்­ப­டு­கின்­றது. ஒவ்­வொரு கட்­சியும் வெவ்­வேறு கொள்­கை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. ஐ.தே.க., ஜே.வி.பி. என்­பன பொரு­ளா­தாரக் கொள்­கையில் முரண்­ப­டு­கின்­றன. இதேபோல் மாகாண சபை முறைமை,வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் ஜாதிக ஹெல உறுமயவும் முரண்­ப­டு­கின்­றன. இவ்­வாறு குழம்­பிய குட்­டை­யா­கவே எதி­ரணி காணப்­ப­டு­கின்­றது என்று வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குற்றம் சுமத்­தினார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் அர­சாங்கம் சிங்­கள அரசு என்றும் தமிழ் மக்களை மாற்­றான்தாய் மனப்­பான்­மை­யுடன் பார்ப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

வடக்கில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்­தியை உற்­று­நோக்­கினால் இதனை புரிந்­து­கொள்ள முடியும். வட­மா­காண சபை மத்­திய அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்துச் செயற்­ப­டு­வ­தாக இல்லை. இருந்­த­போ­திலும் தமிழ் மக்­களின் தேவை­களை நிறை­வேற்­றவே ஜனா­தி­பதி முயன்று வரு­கின்றார் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்­பி­லுள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை சந்­தித்து அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது

கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

அர­சாங்கம் தமிழ் மக்­களை கவ­னிக்­க­வில்லை என்று யாரா­வது கூறினால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. வடக்கில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள அபி­வி­ருத்­தி­களை யாரும் நிரா­க­ரிக்க முடி­யது. வீதிகள், புகை­யி­ரதப் பாதைகள் என வட­ப­குதி அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளது. மக்­களின் வாழ்­வா­தாரம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. பாரிய முத­லீ­டுகள் அங்கு செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ அர­சியல் லாபம் கரு­தாது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட­ப­கு­தி­யினை கட்­டி­யெ­ழுப்பி வரு­கின்றார். வட­ப­கு­தியில் செல­விடும் நிதி­யினை தென்­ப­கு­தியில் செல­விட்டால் நேர­டி­யான அர­சியல் லாபத்தை பெற­மு­டியும். இவ்­வா­றி­ருக்­கையில் ஏன் ஜனா­தி­பதி வட­ப­கு­தியின் அபி­வி­ருத்­தியில் அக்­கறை காட்­டு­கின்றார் என்று சில அமைச்­சர்கள் கேள்வி எழுப்பி வரு­கின்­றனர்.. யத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நலனில் அக்­க­றை­கொண்டே ஜனா­தி­பதி செயற்­ப­டு­கின்றார். அர­சியல் லாபம் கருதி அவர் வட­ப­கு­தியின் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­ள­வில்லை.

இது சிங்­கள அரசு என்றும் தமிழ் மக்­களை ஒதுக்­கு­வ­தா­கவும் கூறப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. வட­ப­கு­தியின் அபி­வி­ருத்­தியை எடுத்­து­நோக்­கினால் இது புலப்­படும்.

வட­மா­காண சபை­யா­னது மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக மத்­திய அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­ட­வேண்டும். ஆனால் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் அவ்­வாறு செயற்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. இலங்கை வர்த்­தக சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள் வட­மா­காண சபைக்கும் வடமேல் மாகாண சபைக்கும் விஜயம் செய்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­யி­ருந்­தனர். வட­மேல்­மா­காண சபை முத­ல­மைச்சர் தயா­சிரி ஜய­சே­க­ரவை சந்­தித்த அவர்கள் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தினர். இந்தக் கலந்­து­ரை­யா­டல்­களில் அவர்கள் திருப்­ப­தி­ய­டைந்­தனர். ஆனால் வட­மா­காண சபை முத­ல­ர­மைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யாடல் திருப்­தி­ய­ளிக்­க­வில்லை.

வட­மா­காண சபையை எடுத்­துக்­கொண்டால் பிர­தம செய­லாளர், ஆளு­ந­ரு­ட­னான முத­ல­மைச்­சரின் முரண்­பா­டுகள் அர­சி­யல்­ரீ­தி­யான விட­யங்­க­ளாகும். அதனை விடுத்து முத­ல­மைச்சர் மத்­திய அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்து அப்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். வடக்கில் மக்­க­ளுக்கு பெரும் தேவைகள் உள்­ளன.

பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு

பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் கத­வா­னது இப்­போதும் திறக்­கப்­பட்டே உள்­ளது. அமைச்சர் பஷில் ராஜபக் ஷ வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை சந்­தித்து பேச முயன்­றி­ருந்தார். ஆனால் அவர் அதனை தவிர்த்­தி­ருந்தார். அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண தயா­ராக உள்­ளது. தமிழ் மக்கள் நன்­மை­ய­டைய வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும்.

ஜனா­தி­ப­தியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் மலை­யக மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வுகள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. 7 பேர்ச்சஸ் காணியில் வீடு அமைத்­துக்­கொ­டுக்­கப்­படும் என்றும் ஆசி­ரியர் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­டு­மென்றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யா­னது சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு பாது­காப்­பா­ன­தாகும். அது சிறு­பான்­ய­மை­யி­னரைப் பொறுத்­த­வ­ரையில் முக்­கி­ய­தா­ன­தொரு விட­ய­மாகும். அவர்­க­ளது உரி­மை­களைப் பெறு­வ­தற்கும் இந்த அதி­காரம் தேவை­யா­னது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வு­செய்­யப்­பட்டால் என்ன நடக்கும்? எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறு­மய மாகாண சபை முறை­மையை ஒழிக்­க­வேண்டும் என்ற கொள்­கையைக் கொண்­டுள்­ளது. தேச வழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம் என்­ப­வற்றை ஒழிக்க வேண்­டு­மென்று ஜாதிக ஹெல உறு­மய அர­சாங்­கத்தில் அங்கம் வகித்­த­போது கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

மகா­ணாக்­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வேண்­டு­மென்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு அவ­சியம் என்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கோரு­கின்­றது. ஆனால் ஜாதிக ஹெல உறு­ம­யவோ மாகாண சபை முறைமை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் வடக்கு, கிழக்கு இணைக்­கப்­ப­டக்­கூ­டாது என்றும் கூறி வரு­கின்­றது. ரணிலின் இலங்­கையை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான திட்டம் தனியார் மயப்­ப­டுத்­து­வதை இலக்­காகக் கொண்­டது. இந்த விட­யத்­துடன் ஜே.வி.பி.க்கு பெரும் முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

அத்­து­ர­லிய ரத்ன தேரரின் விங்­ஞா­ப­ன­மா­னது ஐ.தே.க.வின் கொள்­கை­க­ளுடன் முரண்­ப­டு­கின்­றது. ஐ.தே.க.வுக்கும் ஜே.வி.பிக்­கு­மி­டையில் பொரு­ளா­தாரக் கொள்­கையில் முரண்­பாடு நில­வு­கின்­றது. இவ்­வாறு அடிப்­படைக் கொள்­கையே அற்ற நிலை­யி­லேயே எதி­ரணி உள்­ளது. இவ்­வா­றான எதி­ர­ணி­யினால் எவ்­வாறு நாட்டை கொண்­டு­ந­டத்த முடியும்.

13ஆவது திருத்தம், பொரு­ளா­தார விட­யங்கள், மாகாண சபை முறைமை உட்­பட பெரு­ம­ள­வான விட­யங்­களில் எதி­ர­ணி­யி­லுள்ள கட்­சி­க­ளுக்­கி­டையே பெரும் முரண்­பா­டு­களே நிலவி வரு­கின்­றது. முரண்­பா­டு­களின் கூடா­ர­மா­கவே பொது எதி­ரணி காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்­து­வது ஒன்றே இவர்­க­ளது நோக்­க­மாகும். இத­னை­விட வேறெந்த கொள்கைத் திட்­டமும் இவர்­க­ளிடம் இல்லை.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை 24 மணி­நே­ரத்­துக்குள் ஒழிப்­ப­தாக சிலரும் 100 நாட்­க­ளுக்குள் ஒழிப்­ப­தாக வேறு சிலரும் 4 வரு­டங்­க­ளி­லேயே ஒழிக்க முடி­யு­மென்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூறி வரு­கின்­றனர். சரத் பொன்­சே­கா­வுக்கு பாது­காப்பு அமைச்சர் பதவி வேண்­டு­மென்றும் கோரப்­ப­டு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழிக்­க­வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தின் மூலம் மட்டும் அதனை மேற்­கொள்ள முடி­யாது. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மா­ன­தாகும்.

பொது எதி­ர­ணி­யா­னது குழம்­பிய குட்­டை­யாக மாறி­யுள்­ளது. ஒவ்­வொரு கட்­சி­யு­டனும் பொது எதி­ரணி வேட்­பாளர் ஒப்­பந்தம் செய்­துள்ளார். இந்­த­நி­லையில் இவை­ய­னைத்­தையும் எவ்­வாறு நிறை­வேற்ற முடியும் ஒரு பக்கம் ரணில் மறு­பக்கம் சந்­தி­ரிகா இருக்­கையில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் எத­னையும் செய்­ய­மு­டி­யாது. பெரும் முரண்­பா­டு­களே காணப்­ப­டு­கின்­றன.

தென்­னா­சி­யாவில் ஸ்திர­மான அர­சி­யலைக் கொண்ட நாடாக இலங்­கையே திகழ்ந்து வரு­கின்­றது. இதனை குழப்­பி­ய­டிக்கும் வகையில் ஜனா­தி­ப­தியை தோற்­க­டிப்­பதை ஒரே நோக்­காகக் கொண்டே எதி­ரணி கள­மி­றங்­கி­யுள்­ளது.

கேள்வி: ஜனா­தி­ப­தியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­ய­மாக எதுவும் குறிப்­பி­ட­ப­ப­ட­வில்லை. இது­கு­றித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: வாக்­கி­யத்தில் ஓடு­வது முக்­கி­ய­மல்ல. வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தி­லேயே ஜனா­தி­பதி கவனம் செலுத்­து­கின்றார். வட­ப­கு­தியில் கடந்த 5 வரு­டங்­க­ளாக ஜனா­தி­பதி மேற்­கொண்ட செயற்­பா­டு­களை நோக்­கினால் இதனைப் புரிந்­து­கொள்ள முடியும். விஞ்­ஞா­ப­னத்தில் இநத விடயம் இல்­லா­விட்­டாலும் 5 வரு­டங்­களில் நடந்­த­வற்றைப் பார்க்க வேண்டும்.

கேள்வி: வடக்கில் மேற்­கொள்­ளப்­பட்­டது அபி­வி­ருத்­தியா அல்­லது புன­ர­மைப்பா என்­பதை தெளி­வு­ப­டுத்த முடி­யுமா?

பதில்: வடக்கில் அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மாவட்ட அபி­வி­ருத்திக் கழக கூட்­டங்­க­ளுக்குக் கூட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் சமூ­க­ம­ளிப்­ப­தில்லை. வட­மா­கா­ண­ச­பையில் அங்கம் வகிக்கும் சில உறுப்­பி­னர்­க­ளுக்கு பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு விருப்­ப­மல்லை.

கேள்வி: சிறி­லங்கா முஸ்லிம் காங்­க­ர­சுக்கும் அர­சாங்­கத்­துக்­க­மி­டையில் பேச்­சுக்ள இடம்­பெ­று­கின்­ற­னவா? முஸ்லிம் தனி அலகுக் கோரிக்­கைக்கு அர­சாங்கம் இணங்­கி­யுள்­ளதா?

பதில்: முஸ்லிம் காங்­கி­ர­சுடன் நேற்றும் நேற்று முன்­தி­னமும் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன. முஸ்லிம் தனி அலகு என்­பது அடிப்­படை விட­ய­மாகும். அமைச்­ச­ர­வையில் திடீ­ரென இதற்­கான தீர்­மா­னத்தை நிறை­வேற்ற முடி­யாது. நாம் ஆலோ­சிக்க வேண்டும். இதற்குக் கால அவ­காசம் தேவை. தனி அலகு குறித்து தமிழ் சிங்­கள கட்­சி­களின் நிலைப்­பா­டு­களை அறிந்­து­கொள்ள வேண்டும். இத­னால்தான் குறித்த அமைச்சர் கால அவ­காசம் கோரி­யுள்ளார்.

கேள்வி: பொது பல சேனா ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளமை குறித்து என்ன கூறு­கி­றீர்கள்?

பதில்: பல கட்­சிகள் ஜனா­தி­ப­தியை ஆத­ரிக்­கின்­றன. இதேபோல் மைத்­தி­ரி­யையும் ஆத­ரிக்­கின்­றன.

கேள்வி: ஜனா­தி­ப­தியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இறுதி யுத்­தத்­தின்­போது மீட்­கப்­பட்ட நகைகள் மீளக் கைய­ளிக்­கப்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது. யுத்தம் முடி­வ­டைந்து 5 வரு­டங்­க­ளா­கி­விட்­டன. 2005ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை ஒழி­க­கப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த உறு­தி­மொ­ழியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்­த­நி­லையில் இந்த உறு­தி­மொ­ழி­க­ளா­க­வது நிறை­வேற்­றப்­ப­டுமா?

பதில்: 1994ஆம் ஆண்டு தேர்­தலில் போட்­டி­யிட்ட சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் 1995ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் திக­திக்கு முன்னர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழிப்பேன் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால் அது நிறை­வேற்­றப்­பட்­டதா?

கேள்வி: இரா­ஜ­தந்­திர பதவிகளுக்கு ஜனாதிபதியும் நியமனங்களை வழங்குகின்றார். இத்தகைய நியமனங்களுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுவது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: இராஜதந்திரிகளாக வெளியார்களை நியமிக்கும் நடைமுறை தற்போது ஏற்பட்டதல்ல. ஜே.ஆர் ஜயவர்தன காலத்திலேயே இவ்வாறான நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பருத்தித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சேவையானது பாராட்டத்தக்கதாக இருக்கின்றது. உதாரணத்துக்கு அவுஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளுடனான எமது உறவு வளர்ச்சியடைவதற்கு அங்கு கடமையாற்றும் படை அதிகாரிகளே காரணமாக அமைந்துள்ளனர்.

கேள்வி: கடந்த வருடம் நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் வடமாகாண மக்கள் தமிழ் தேசியக் கூடட்டமைப்புக்கே வாக்களித்திருந்தனர். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும்?

பதில்: அவரது செயற்பாடுகளை கருத்தில்கொண்டே வாக்களிக்க வேண்டும். சந்திரலினிருந்து அரிசி கொண்டுவந்து தருவதாக சிலர் வாக்குறுதி அளிக்கலாம். ஆனால் அந்த வாக்கறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பததை மக்கள் சீரதூக்கிப் பார்க்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது செய்றபாட்டின் மூலமே மக்களின் நம்பிக்கையினைப் பெற்றுள்ளார்.

 

http://tamilleader.com/?p=45604

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் ஐயா அவர்கள்

வெல்லும்  பக்கம் செல்பவர்

தேர்தலுக்கு முன்

அல்லது தேர்தலில் மகிந்த  தோற்றால் ஆள் மாறிவிடுவார்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் ஐயா அவர்கள்

வெல்லும்  பக்கம் செல்பவர்

தேர்தலுக்கு முன்

அல்லது தேர்தலில் மகிந்த  தோற்றால் ஆள் மாறிவிடுவார்...

 

இந்த விடயத்தில் ஹக்கீமின் அண்ணா தான் பீரிஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.