Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிர்க்கப்பட வேண்டிய தலையீடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவிர்க்கப்பட வேண்டிய தலையீடுகள்

இலங்கையில் இனப்பிரச்சினை, தமிழ்ப் பேசும் மக்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில்தான். இந்தப் பிரச்சினைக்கு அமை தித் தீர்வு காண வேண்டுமானால் நாட்டின் மூவின மக்களான தமிழர் களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் ஒன்று சேர்ந்துதான் அதனை மேற்கொள்ள வேண்டும்.

புறச் சக்திகளின் முறையற்ற தலையீடு மூலம் இலங்கை மீது திணிக்கப்படும் எந்தத் தீர்வு முயற்சியும் பலன் தரப் போவதில்லை. தீர்வு உள்ளிருந்து உருவாக வேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிக்கப்பட வேண்டியதல்ல.

இதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்ல முன்னுதாரணம்; பட்டறிவு. இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்பு களுள் ஒன்றான தமிழர்களோடு பேசாமல் கலந்துரையாடாமல் அவர்களின் நியாயமான ஆதங்கங்களைக் கவனத்தில் எடுக்காமல் அவர்களின் விருப்பு, வெறுப்புகளை உள்வாங்காமல் தன்னுடைய பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றிய சிந்தனையோடும், மேலாதிக்க மேலாண்மைத் திமிரோடும், இலங்கை இனப்பிரச்சினைக்கு உகந்தது எனத் தான் கருதும் தீர்வுத் திட்டம் ஒன்றை இந்த ஒப்பந்தம் மூலம் தமிழர்கள் மீது திணிக்க முயன்றது இந்தியா.

தனது முடிவின் பிரகாரமான தீர்வுத் திட்டத்தை வலிந்து வலோற்காரமாக தனது பெரும் படையணிகளைக் கூட இலங்கைக்கு அனுப்பி, தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்து அத்துமீறியது இந்தியா.

அதன் பெறுபேறாக சுமார் ஆயிரம் படை வீரர்களைப் பலி கொடுத்து, மேலும் பல்லாயிரம் துருப்பினரை நடைப் பிணங்களாக்கி, அவமானத்தோடும், தனது பிராந்தியத்தின் பெரும் வரலாற்று ரீதியான இராஜதந்திரத் தோல்வியோடும் அது தனது நாட்டுக்குத் திரும்ப நடையைக் கட்ட வேண்டியதாயிற்று.

அண்மையில், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பைத் துண்டிக்கும் வகையில் இலங்கை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக் கூட இந்தியாவின் அப்போதைய அந்த அத்துமீறல் முயற்சிக்கு சுமார் பத்தொன்பது ஆண்டுகள் கழித்து விழுந்த அடிதான்.

உலகளாவிய ரீதியில் பல்வேறு பிராந்தியங்களில் பல பிணக்கு கள், இனச் சிக்கல்கள் தீர்க்க முடியாத பெரும் போர்களாக வரலாற்று ரணங்களாக மோசமடைந்து சீழ்ப்பிடித்த புண்ணாகப் புரையோடிப் போய் பேரழிவுகளையும், பேரவலத்தையும் தந்து, இழுபறிபட்டு நிற்பதற்கு அந்தப் பிணக்குகளில் வெளிச் சக்திகளின் அளவற்ற எல்லை கடந்த வரம்பிழந்த தலையீடே முக்கிய காரணமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை இனப்பிரச்சினையைப் பொறுத்தவரை, அதற்கான தீர்வுக்கு வழிசெய்யும் விதத்தில், சம்பந்தப்பட்ட தரப்புகளின் எதிர்கால அரசியல் தகைமையையும், ஆட்சித் தலையெழுத்தையும் தீர் மானிக்க வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரே அன்றி, பிராந் திய வல்லாதிக்க நாடான இந்தியாவோ, சர்வதேச வல்லாதிக்க நாடான அமெரிக்காவோ அல்லது வேறு பிராந்திய சக்திகளோ அல்ல. அவை தேவையானால் தீர்வுக்கான ஒத்துழைப்பை உந்து விசையை ஊக்க சக்தியை வெளியிலிருந்து தரலாம். அவ் வளவே.

2002 இல் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட அமைதி முயற்சிகளில் காலப் போக்கில் சர்வதேச சமூகம், அளவுக்கு அதிகமாகத் தலையிட்டும் பெரும் தவறிழைத்தது. இந்தப் பிணக்கில் சர்வதேசத் தரப்புகள் வேண்டுமென்றே எல்லை மீறி இழுத்து விடப்பட்டன. பிணக்கில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பான தமிழர்களுக்கு எதிராக உலக நாடுகளைத் திருகி விடும் "சர்வதேச வலைப்பின்னல்' என்ற சதித் திட்டத்தை அழகாகப் பின்னியது ரணிலின் அரசு. "இணைத் தலைமை' என்றும், "உதவி வழங்கும் நாடுகள்' என்றும், "சர்வதேச சமூகம்' என் றும் பல்வேறு கோதாக்களில் இவ்விடயத்தில் தலையிட்ட புறச் சக்திகள், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வரம்புகளை வரையறை களை தரப்புகள் மீது திணிக்கத் துணிந்தன.

சம்பந்தப்பட்ட தரப்புகளின் பக்கங்களில் உள்ள நீதி, நியாயங்களையோ அல்லது தரப்புகளின் ஆதங்கங்களையோ அல்லது வரலாற்று யதார்த்தங்களையோ கள நிலைவரங்களையோ கவனத்தில் கொள்ளாது தம்பாட்டில் தீர்மானங்களை எடுத்து "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு', "ஒன்று பட்ட நாட்டுக்குள் தீர்வு', "இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டையும், இறைமையையும் உறுதிப்படுத்தும் வகையிலான தீர்வு' என்று தீர்வு வடிவங்களைத் தாமே தீர்மானித்து, அவற்றை இந்தச் சமாதான முயற்சிகளுக்கான நெறிமுறை வழிப்படுத்தல்களாக அவை திணித்தன.

ரணிலின் அரசு மேற்கொண்ட சமாதான முயற்சிகள் ஸ்தம்பித்து, பலன்தராமல், செயலற்றுப் போனமைக்கு வெளிச் சக்திகளின் இந்த முறையற்ற தலையீடும் ஒரு முக்கிய காரணமாகும்.

இப்போது மீண்டும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்புக் கருக் கட்டியிருக்கின்றது. இலங்கை அரசும், புலிகளும் நாளை மறுதினம் ஜெனிவாவில் சந்திக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச பொலிஸ்காரனான அமெரிக்காவின் முறையற்ற தலையீடு மீண்டும் மேலோங்கத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரிச்சர்ட் ஏ. பௌச்சர், கடந்த வெள்ளியன்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அப்போது அவர் வெளியிட்ட கருத்து, இவ்வாறு தீர்வுக்கான வடிவத்தின் விடயத்தில் அத்துமீறித் தலையிடுவதாக தமிழர் தரப்பின் நியாயமான அபிலாஷைகளைப் புறம் தள்ளி, வரம்புகளைத் திணிப்பதாக அமைந் திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

""....தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகிய அனைத்து இனத்தவர்களும் சட்டரீதியான நலன்களுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை எட்டத்தக்க, சிரத்தையான கலந்துரையாடலுக்கு வழிவகுக்கும் நடைமுறை ஒன்றை ஆரம்பிப்பது முக்கியமானது. அது (அத்தகைய சட்டரீதியான நலன்கள்) ஒருமைப்பட்ட இலங் கைக்குள் ((Unitary Srilanka)) அடக்கப்பட முடியும்''

என்றார் ரிச்சர்ட் பௌச்சர்.

அவர் "United Srilanka' என்றோ அல்லது"Unified Srilanka' என்றோ பதத்தைப் பயன்படுத்தவில்லை.

சிறுபான்மையினரான தமிழர்கள் மீது பெரும்பான்மையினம் தனது அரசியல் மேலாதிக்கத்தையும், அதிகார மேலாண்மையையும், அடக்குமுறை ஆட்சி நிர்வாகத்தையும் திணிப்பதற்காக ஒற்றையாட்சி முறைக்குள்தான் (Unitary State) தீர்வு என்று ஒற்றைக் காலில் கங்கணம் கட்டி நிற்க

தங்களின் சுயநிர்ணய உரிமைத் தகைமையை அங்கீகரிக்கும் வகையிலான தீர்வு ஒன்றே முடிந்த முடிவு என்று அந்த உரிமைக்கும், தகைமைக்குமான சான்றாதாரங்களுடன் தமிழர் தரப்பு உயிர், உடைமை, உதிரம் இழந்து போராட

இவ்வாறு தீர்வுக்கான கட்டமைப்புக்கு வரம்பு அல்லது வரையறை ஒன்றைத் திணிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார் அமெரிக்காவின் மூத்த பிரதிநிதி ஒருவர். அதுவும் அமைதி முயற் சிகள் தொடர்பான பேச்சுகள் மீள ஆரம்பிக்கவிருக்கையில், இலங் கைக்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவில் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார் அவர்.

இது, தற்போதைய அமைதி முயற்சிகள் இடையே அர்த்தம் மிக்க உள்நோக்கோடு எல்லை கடந்து வரம்பு மீறி தலையிடும் சர்வதேச அழுத்தமன்றி வேறில்லை.

இத்தகைய புறச்சக்திகளின் முறையற்ற தலையீடுகள், அமைதி முயற்சிகளைப் பாழடித்து விடும். அதுதானே நமது அனுபவப் பாடம்?

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.