Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பேரினவாத ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் தினத்தந்தி அலுவலகத்தினை முற்றுகை இடுவோம்!

Featured Replies

மகிந்த ராஜபக்சேவுடன் பேட்டி எடுத்து ஒளிபரப்பும் அவசியம் தந்தி தொலைக்காட்சி ஏன் வருகிறது?...

மகிந்தாவிற்கு இந்த விளம்பரத்தினை ஏன் தந்தி தொலைக்காட்சியின் பார்ப்பன செய்தி தொகுப்பாளர் கும்பல் செய்ய வேண்டும்?

கடந்த வருடம் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியில் ராஜேஸ் சுந்தரம் அவர்களால் எடுத்து வெளியிடப்பட்ட “இலங்கையின் இனப்படுகொலை” எனும் ஆவ்ணப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து “தந்தித் தொலைக்காட்சியில்” ஒளி பரப்பிய பொழுது, “இனப்படுகொலை” என்பதை மறைத்து “ போர்க்குற்றம்” எனும் திரிபுபடுத்தி ஆவணப்படத்தின் அரசியலை நீக்கியதை ஏன் தந்தி தொலைக்காட்சி செய்தது?

நியூஸ் எக்ஸ் எனும் காங்கிரஸ் தலைவர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆங்கில இந்திய தொலைக்காட்சியே “இனப்படுகொலை” எனும் வாசகத்தோடு ஒளிபரப்பிய பொழுது “தந்தி தொலைக்காட்சியின் “ இந்த துரோக அரசியல் எங்கிருந்து வருகிறது?...

நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியின் மீதும், ராஜேஸ் சுந்தரத்தின் மீதும் இலங்கையின் தூதர் வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டிய பொழுது மே17 இயக்கத் தோழர்கள் இலங்கையின் இனப்படுகொலைக்கான ஆதாரத்தினை அளித்து துணை நிற்போம் என்றும், இலங்கை தூதர் மீது கடந்த வருடம் மே 17 ஒருங்கிணைப்பாள்ர் லேனாகுமார் ( Lenakumar Kumar) பதிவு செய்த உயர் நீதிமன்ற வழக்கின் விவரங்களை கொடுத்த பொழுது பதுங்கிய ஒரு கொலைகார கும்பலை எதிர்கொண்டு நேர்மையாக நிற்கும் தைரியத்தினை இழப்பவர்கள் எப்படி நேர்மையான பத்திரிக்கையாளராக அறிய இயலும்?

2009இல் இனப்படுகொலை நிகழ்ந்த போது எந்த செய்தியும் வெளியிடாமல் கருணாநிதி-காங்கிரஸ் ஆட்சிக்கு கட்டுப்பட்டு தமிழினப்படுகொலை நிகழும் செய்தியை தமிழர்களிடத்தில் கொண்டு செல்லாமல் காத்த கள்ள மெளனத்தினை ஆதித்தனார் மீதான மரியாதை நிமித்தம் தமிழர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்தார்களோ என்று சந்தேகம் இருந்தது.

தமிழரின் அரசியலை தமிழக மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தில் தந்தைப் பெரியார் அவர்கள், அய்யா.சி.பா. ஆதித்தனார் அவர்களிடம் சென்னையின் மையத்தில் எழும்பூரில் இருந்த திராவிடர் கழகத்தின் இடத்தில் ஒரு பகுதியை மிகக்குறைந்த விலையில் அளித்து பத்திரிக்கை நடத்த உதவியது இந்த தலைமுறையினருக்கு மறந்திருக்கலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் மறக்கவில்லை.

தொடர்ச்சியாக, தமிழின விரோத பார்ப்பன புத்தியுடன் செயல்படும் உயர்சாதித்திமிர் கொண்டவர்களை,முன்னிறுத்தி ஆய்வு அரங்கம் செய்கிறோம் என்கிற பெயரில் மக்கள் இயக்கங்களை கொச்சைப்படுத்துபவர்களை தந்தி தொலைக்காட்சி நிறுவனம் ஏன் இதுவரை தடுத்து நிறுத்தவில்லை?....

தமிழ்த் தேசிய-பெரியாரிய-சூழலிய- மார்க்சிய இயக்கத்தவர்களையும், அவர்களது தத்துவங்களை-செயல்பாடுகளை தொடர்ந்து கொச்சைப்படுத்திவரும் விவாதங்களை ஏன் இதுவரை மீளாய்வு செய்யாமல் தந்தி தொலைக்காட்சி அனுமதித்திருந்தது? ...

சிங்கள பேரினவாத ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் தந்தி செய்தி நிறுவனத்தினை முற்றுகை இட இயக்குனர் புகழேந்தி அழைப்பு விடுத்திருக்கிறார்.

இன்று ஒளிபரப்பப்பட இருக்கும் ” இனப்படுகொலைகாரனின் விளம்பர பிரச்சாரத்தினை” கட்சி-இயக்க எல்லை கடந்து அனைவரும் திரண்டு நின்று தடுத்து நிறுத்துவோம்.

மே பதினேழு இயக்கம். http://www.pathivu.com/news/36428/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

ஈழத்தமிழ்க் கொலைகாரன் இராஜபக்சே பேட்டி ஒளிபரப்பைத் தடுக்க தினந்தந்தி அலுவலகம் முற்றுகை! வைகோ அறிக்கை!

vaiko_1308131.jpgஆதித்தனார் கல்லறை தினத்தந்தி குழுமத்தை ஒருநாளும் மன்னிக்காது! ஈழத்தமிழ்க் கொலைகாரன் இராஜபக்சே பேட்டி ஒளிபரப்பைத் தடுக்கதினந்தந்தி அலுவலகம் முற்றுகை! வைகோ அறிக்கை!

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை மிகக் கொடூரமாகப் படுகொலை செய்த மாபாவி இராஜபக்சே இந்திய நாட்டுக்குள் எங்கு வந்தாலும், அவன் வருகையை எதிர்த்துப் போராடி வருகிறோம். ஈழத்தமிழரைக் காக்க முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் நெருப்பில் குளித்து உயிரைக் கருக்கி மடிந்தனர். இராஜபக்சே வருகையை எதிர்த்து சாஞ்சிக்கே சென்று போராடினோம். ஏன், நரேந்திர மோடி பதவி ஏற்ற நாளிலேயே டெல்லியில் கருப்புக்கொடி அறப்போர் நடத்தினோம்.

எண்ணற்ற இடிகள் தமிழர் தலை மீது விழுந்தன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மூவர் குழு, தனது அறிக்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலையை ஆதாரங்களோடு வெளியிட்டு இருக்கின்றது. கடந்த ஆண்டு ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில், ஈழத்தமிழர் படுகொலை குறித்த உண்மைகளை அறிய, சுதந்திரமான விசாரணைக் குழுவை அமைத்தது. அந்த விசாரணைக்குழுவை இலங்கை மண்ணில் நுழைய விட மாட்டேன் என்று ராஜபக்சே திமிரோடு சொன்னான்.

ஆனால், இன்று (29.12.2014)தினந்தந்தி ஏட்டில் இன்று முதல் பக்கத்தில், தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்க முனைந்து விட்ட கொடியவன் இராஜபக்சே அட்டகாசப் புன்னகையோடு, தமிழர்களுக்கு எதிரி அல்ல நான்; தமிழர்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை;  இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது; எதிர்க்கட்சிகள் எங்கள் மீது புழுதிவாரித் தூற்றுகின்றன என்று தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்து இருப்பதாகவும், முழுமையான பேட்டி இன்று இரவு எட்டு மணிக்கு தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற செய்தியைக் கண்டு இரத்தம் கொதிக்கிறது.

இலங்கையில் தமிழ் இனம் என்று ஒரு இனமே கிடையாது; அவர்களின் பூர்வீகத் தாயகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று கொக்கரித்த கயவனின் பேட்டியை, தமிழ்நாட்டில் இயங்கும் தந்தித் தொலைக்காட்சி வெளியிடுமாம்; தமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா இதைச் சகிப்பதற்கு?  

ஈழத்தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படாத காலத்திலேயே தமிழர் தந்தை ஐயா ஆதித்தனார் அவர்கள் , ஈழத்தமிழர்களின் உரிமைக்காகத் தன் வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்தார். ஈழத்தமிழர்களை அரவணைத்து ஆதரித்தார். ஈழத்தமிழ் இனக்கொலை நடைபெற்ற காலத்தில் அவர் உயிரோடு இருந்திருந்தால் எரிமலையாகச் சீறி இருப்பார். அன்னாரது புதல்வர் ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களும் ஈழத்தமிழர்களின் உரிமையிலும், நலனிலும் முழுமையான ஈடுபாடு கொண்டு இருந்தார்.

தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டி வெளியானால், பிரதமர் நரேந்திர மோடி மட்டும் என்ன, தமிழகமே ராஜபக்சேயை வரவேற்கிறது என்று, சிங்களக் கொலைகாரக் கூட்டம் கொட்டமடிக்கும். தமிழ் இனக் கொலைகாரன் இராஜபக்சே பேட்டியைத் தந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பக் கூடாது என்பதை வலியுறுத்தி, இன்று (29.12.2014) மாலை மூன்று மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தலைமையில், பெரியார் திடல் அருகில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தை முற்றுகை இடும் கருப்புக் கொடி அறப்போர் நடைபெறும்.

கழகக் கண்மணிகளும், ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறேன்.

‘தாயகம்’    வைகோ

சென்னை - 8    பொதுச்செயலாளர்,

29.12.2014    மறுமலர்ச்சி தி.மு.க http://www.pathivu.com/news/36429/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்

தந்தி தொலைக்காட்சியில் இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் - தொல்.திருமா கடிதம்

thirumavalavan.pngஇனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும்  தொல்.திருமாவளவன் கடிதம்

பெறல்

திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள்

இயக்குநர்,

தந்தி தொலைக்காட்சி

சென்னை.

வணக்கம்.

தங்களின் காட்சி ஊடகமான தந்தி தொலைக்காட்சியில் 29-12-2014 அன்று இரவு சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் நேர்காணல் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தெரிய வருகிறது. இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த, இனப்படுகொலைக் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள இராஜபக்சேவின் நேர்காணலை தங்கள் தந்தி தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்புவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும். தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கும்.

எனவே இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இதனைத் தங்களின் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருத வேண்டாம். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வழித்தோன்றலான தங்களுக்கும் தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளை மதிக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டு என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம்.

உரிமை உணர்வுடன் கூடிய எமது இந்த வேண்டுகோளை ஏற்று இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன். http://www.pathivu.com/news/36432/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று இரவு 8 மணிக்கு நேர்காணல் ஒளிபரப்படும் என்று தற்போதும் தந்தி தொலைக்காட்சி சொல்கிறது

thnthitv.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் தந்தி தொலைக்காட்சி ஒலிபரப்புச் செய்யும். எதிர்த்து நிற்பவர்களின் இனப்பற்று எவரும் அறியாதது அல்ல. ^_^

Edited by வாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இணையத்தில் தந்தி ரீவியை பார்க்க...!

யாழின் விதிகளுக்கு முறணானது என்றால் மட்டுறுத்தினர்கள்... கடமையை செய்யுங்கள்

  • தொடங்கியவர்

ராஜபக்சே பேட்டியின் எதிரொலி! சென்னையில் தினத்தந்தி நாளிதழ்கள் எாிப்பு!

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை மிகக் கொடூரமாகப் படுகொலை செய்த மாபாவி இராஜபக்சே தமிழர்களுக்கு எதிரி அல்ல; தமிழர்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை; இனத்தின் அடிப்படையில் என்னால் பாகுபாடு காட்ட முடியாது; எதிர்க்கட்சிகள் எங்கள் மீது புழுதிவாரித் தூற்றுகின்றன என்று தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
thinathanthi%20paper-4.JPG
இதனை தமிழகத்தில் ஒளிபரப்பக் கூடாது என்று பலர் வற்புறுத்தி வருகின்றனர்.
thinathanthi%20paper-1.JPG
இந்த நிலையில் மதிமுக காஞ்சி மாவட்ட செயலாளா் சோமு அவா்கள் தலைமையில் தாம்பரம் ரெயில் நிலையம் முன்பு தினத்தந்தி நாளிதழ் எாிக்கும் போராட்டம் நடை பெற்றது.
thinathanthi%20paper-2.JPGthinathanthi%20paper-3.JPGபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி:

http://www.pathivu.com/news/36434/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

தந்தி டிவி இப்ப நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டு இருக்கு. அய்யோ அய்யோ தமிழகமும் அதன் --------- -------- --------. :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நான் கூட தவறாகத்தான் நினைத்தேன். இது ஒர் அருமையான நிகழ்வு. நல்லகாலம் தந்தி டிவி இந்த அலம்பல்களுக்கு பயந்து நிப்பாட்டவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?v=6espSb6wZiE

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.