Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு பிரச்சாரத்திற்கு பணம் வந்தது!! - Pathivu

Featured Replies

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளினை கூட்டமைப்புடன் இணைந்து மேற்பார்வை செய்யவென மைத்திரியின் தேர்தல் பிரச்சார ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் ஒன்பது பேர் யாழ்.வருகை தந்துள்ளனர். அவர்கள் தமிழரசுக்கட்சியின் மார்டின் வீதி அலுவலகத்தில் வைத்து அதன் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

tna_unp_01.png

எதிர்வரும் மூன்று தினம் வடக்கில் தங்கியுள்ள அவர்கள் கூட்டமைப்பின் முகவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முதல் கட்டமாக இக்குழுவினர் வடமராட்சி பகுதியினில் சந்திப்புக்களினை நடத்தியிருந்தனர்.

இதனிடையே மாவட்டமொன்றிற்கு தலா மூன்று மில்லியன் ரூபாவென கூட்டமைப்பிற்கென பிரச்சாரத்திற்கென ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட கொடுப்பனவுகள் பிரச்சார வேகத்தை முன்னிறுத்தி வழங்க்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.pathivu.com/news/36584/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வர வர கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக தலமை என்ற தகுதியை இழந்து வருகிறது.

வர வர கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக தலமை என்ற தகுதியை இழந்து வருகிறது.

காமடி ஆ

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பதிவு போன்ற இணையத்தளங்களின் செய்திகளை யாழ். இணையத்தளம் இணைக்க அனுமதிக்கின்றதா?

தமிழ்நெட், பதிவு போன்றவற்றின் செய்திகள் அண்மைக்காலமாக ஏற்படுத்திய நம்பகத்தன்மை தொடர்பில் யாழ். களத்துக்கு சந்தேகம் வராமல் சென்றது எப்படி?

தொடர்ந்தும் புலிகளின் இருப்பினை போலியாக காட்டி பணம் பறிக்கும் கும்பல்களாகவே தமிழ்நெட், பதிவு போன்றவை செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த உண்மை.

தமிழ்நெட் இணையத்தளத்தின் யூரூப் வீடியோக்களை பார்த்தவர்களின் எண்ணிக்கையினை கணக்கிட்டு பார்த்தாலே அவர்களின் பார்வையாளர் தொகைக்கணக்கு தெரியவரும்.

அன்று எல்லாம் தமிழ்நெட் செய்திகளுக்கு ஒரு நம்பகத்தன்மை இருந்தது. இன்று அவர்களின் செய்திகள் தொடர்பில் அனைத்துலக ஊடகங்கள் தொடங்கி இந்திய ஊடகங்கள் கூட முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

அன்று எல்லாம் தமிழ்நெட் செய்திகளுக்கு ஒரு நம்பகத்தன்மை இருந்தது. இன்று அவர்களின் செய்திகள் தொடர்பில் அனைத்துலக ஊடகங்கள் தொடங்கி இந்திய ஊடகங்கள் கூட முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

 

அனைத்துலக ஊடகங்கள், இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் போடும் செய்தியில் உண்மையில்லையா.???

அப்போ எந்த நிறுவனத்தால் வெளியிடப்படும் செய்தி நம்பகத்தன்மை உடையது...?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெட்டை இப்போ யாரும் சீண்டுவதில்லை. சிவராமோடு அதன் நம்பகம் போயேபோச்சு.

பதிவு ஒரு மஞ்சள் பத்திரிக்கை. தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை, பணம் வந்தது எண்டு திரிக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் மக்கள் எப்பவோ தலையை சுத்தி எறிஞ்சாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நெட்டை இப்போ யாரும் சீண்டுவதில்லை. சிவராமோடு அதன் நம்பகம் போயேபோச்சு.

பதிவு ஒரு மஞ்சள் பத்திரிக்கை. தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை, பணம் வந்தது எண்டு திரிக்கிறார்கள்.

இவர்களை எல்லாம் மக்கள் எப்பவோ தலையை சுத்தி எறிஞ்சாச்சு.

இங்கு..

மக்கள் = கோசான் சே :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் என்ன நினைக்கிறார்கள், கோசன் சொன்னது சரியா எண்டு 9ம் திகதி நியூஸ் பார்த்து அறியுங்கள்

பதிவு செய்திகளை வாசிக்கும் போது அந்த செய்தி எழுதியவரை நான் இப்படிதான் கற்பனை பண்ணி பார்ப்பதுண்டு. கம்பூட்டர் பாவிக்க தெரிந்தவனெல்லாம் பத்திரிகையாளனாகலாம் என்று நினைத்ததால் வந்த வினை இவை எல்லாம்.

 

46751989.jpg

Edited by தெனாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.