Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் இரசித்த நகைச்சுவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையில் குழந்தையுடன்...

ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள்.

அழுது கொண்டே இறங்கிய அவளிடம், எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்றான்" என்றாள்.

"கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் குரங்கை நான் வைச்சிருக்கேன்" என்றார்.

:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த இன்னொன்று?

அந்தத் தாயக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று அட்டைக் கரி. இன்னொன்று வெள்ளை வெளேர்.

தாய் கலக்கத்துடன் டாக்டரைக் கேட்டாள் "ஏன் இப்படி?"

டாக்டர் பதில் : "வெள்ளைக் குழந்தை உங்களுடையது. மற்றது அதனுடைய கார்பன் காப்பி !"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோட்டில் இரண்டு பேர்இ ஒரு பெரிய கம்பை நிறுத்தி அதன் உயரத்தை அளக்க பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தனர்.

அதை ஜார்ஜ் என்பவர் பார்த்துஇ அவர் களுக்கு உதவி செய்வதற்காக அந்த கம்பை தரையில் போட்டு அளந்து பார்த்து "22 அடி" என்று கூறினார்.

இதைக்கேட்ட அந்த இருவரும்இ "முட்டாளே! நாங்கள் இந்த கம்பத்தின் நீளத்தை அளக்க விரும்பவில்லை. உயரத்தைத்தான் அளக்க விரும்புகிறோம்" என்றனர்.

நன்றாக இருக்குது நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க சிந்திக்க...

நாயை இழுத்துக் கொண்டு மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.

தந்தை அவனைப் பார்த்துஇ "இந்தக் கழுதையோடு எங்கே சுத்திகிட்டு வரே"? என்று கேட்டார்.

"அப்பா! நல்லாப் பாருங்க. இது கழுதை அல்ல நாய்" என்றான் அவன்.

"நான் உன்னோடு எதுவும் பேசவில்லை. இந்த நாயிடம் தான் பேசினேன்" என்றார் அவர். :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடை சொந்தக்காரரின் கெட்டித்தனமா..?

புதிதாக வியாபாரத்தை ஆரம்பித்த ஒருவர் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

ஒருவரும் வந்த பாடாக இருக்கவில்லை அந்த சமயம் பார்த்து ஒருவர் கையில் பெட்டியுடன் கடைக்குள் நுழைவதைக் கண்டவுடன் கடை சொந்தக்காரர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட… வாடிக்கையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வது போல் பாவனை செய்து கதைக்கத் தொடங்கினார்.

கடைக்குள் நுழைந்தவர் "சார் உங்கள் தொலைபேசி வேலை செய்ய வில்லை என்று உங்கள் மனைவி தெரிவித்து இருந்தா. அதைத் திருத்துவற்காக… தொலைபேசிக் கொம்பனியில் இருந்து வந்திருக்கிறன்." என்றார்.

:lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க சிந்திக்க...

நாயை இழுத்துக் கொண்டு மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.

தந்தை அவனைப் பார்த்துஇ "இந்தக் கழுதையோடு எங்கே சுத்திகிட்டு வரே"? என்று கேட்டார்.

"அப்பா! நல்லாப் பாருங்க. இது கழுதை அல்ல நாய்" என்றான் அவன்.

"நான் உன்னோடு எதுவும் பேசவில்லை. இந்த நாயிடம் தான் பேசினேன்" என்றார் அவர். :lol::lol::lol:

இனம் இனத்தோட பேசுது எனக்கென்ன வேலை என்றான் மகன் :?: :lol::lol::lol::(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கிஷான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கயோ சுட்ட ஜோக்..

லவ் மேரேஜுக்கும், அரேஞ்ட் மேரேஜுக்கும் என்ன வித்தியாசம்?

நாமா போய் கிணத்துல விழுந்தா அது லவ் மேரேஜ்.

பத்து பேர் சேர்ந்து நம்மளை கிணத்துக்குள்ள தள்ளிவிட்டா அது அரேஞ்ட் மேரேஜ்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்டோஸுக்க்கும், லைனுக்ஸுக்கும் கல்யாணம்

அந்த அப்ளிக்கேஷன் ஸாஃப்ட்வேரெல்லாம் ஊர்கோலம்

இன்டெர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்

அந்த டிவைஸ் டிரைவர் எல்லாத்துக்கும் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

...

மாப்பிள்ளை 'C' ஸ்ட்ராங்கான ஆளுங்கோ

அந்த மணப்பொண்ணு 'C++'தானுங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

தலைவரு பில் கேட்ஸுதானுங்கோ!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு மேலும் மேலும் இருட்டானது.

நிலவு மேலும் மேலும் மேலெழுந்தது.

நான் காரை நிறுத்தினேன்.

அவள் என்னை கள்ளத்தனமாக பார்த்து கொண்டே,

"என்னாச்சு?" என்றாள்.

நான் அவளருகே சென்றேன்.

அவள் முகம் சிவந்தது.

மேலும் நெருங்கினேன்.

அவளிடம் சொல்லி விட வேண்டியதுதான்.

ஆனால் நம்புவாளா!

தயக்கமாயிருந்தது.

கடைசியில் அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியே விட்டேன்.

"பெட்ரோல் இல்லை. எறங்குடி"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடுற எலி வாலை புடிச்சா

நீ 'கிங்'கு

ஆனா...

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகவத் கீதை வசனத்தை இப்படி மாற்றியிருக்கிறார்கள்.. சிரிக்க மட்டும்..

எதை நீ படித்தாய்

அது மறந்து போவதற்கு

எதை நீ புரிந்து கொண்டாய்

பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்

Attendandance lack ஆகாமல் இருப்பதற்கு

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ

அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ

அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ

அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்

மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்

இதுவே கல்லூரி நியதியும்,

ஃபிகர்களின் குணாம்சமுமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முறை ஒரு சர்தார்ஜிக்கு ஒரு SMS வந்தது.

"Sender is Cool

Reader is Fool"

படித்த சர்தார்ஜிக்கு உடனே கோபம் வந்து விட்டது.

உடனே Reply அனுப்பினார்.

"Reader is Cool

Sender is Fool"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் : உங்ககிட்ட நல்ல செண்டிமென்டலான love cards இருக்குமா?

விற்பவன் : இது எப்படியிருக்குனு பாருங்க.

அதில் "TO THE ONLY BOY I EVER LOVED" அப்படின்னு எழுதியிருந்தது.

பெண் : சூப்பர். எனக்கு இதே மாதிரி அஞ்சு கார்ட் வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்திஜி,ஏசுபிரான்,கிருஷ்ணர்

ராமர்…. எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை என்ன.

சர்தார்ஜி: எல்லோரும் அரசு விடுமுறை நாளில் பிறந்தார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவன் இரண்டு நீச்சல் குளங்களை தன் வீட்டில் கட்டினான். அதில் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன் அப்படியென்று கேட்டதற்கு,

"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் பழைய பகிடி இருந்தாலும் இணைக்கிறேன்... பார்க்காதவர்கள் இரசிக்கலாம்..

கண்மணி

அன்போட

ஃபிரெண்டு

நான்! நான் அனுப்பும் மெஸெஜ்.

பொன்மணி

உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா

என் செல்லில் கிடைக்குது

உன்னையென்னி பார்க்கையில்

மெஸெஜ் கொட்டுது,

அதை அனுப்ப நினைக்கையில்

பாலன்ஸ் முட்டுது.

நெட்வொர்க் புரிந்து கொள்ள

இது மொக்க மெஸெஜ் அல்ல

அதையும் தாண்டி மட்டமானது.

அது என்னமோ தெரியல,

என்ன மாயமோ தெரியல

என் செல்லுல பாலன்ஸ் இல்லன்னா

மெஸெஜ் போக மாட்டேங்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபு : ஐயாயிரம் ரூபாய் பணம் இருந்தா கடனா குடுங்க?

பாபு : பணம் சுத்தமா இல்லீங்க.

கோபு : அழுக்காயிருந்தாலும் பரவாயில்லை. குடுங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனைவி : நீங்கள் என்னை எவ்வளவு விரும்புகிறீர்கள்?

கணவன் : ஷாஜகான் அளவுக்கு.

மனைவி : அப்ப எனக்காக எப்ப தாஜ்மகால் கட்டப்போறீங்க?

கணவன் : ஏற்கெனவே நிலம் வாங்கிட்டேன். நீ செத்ததும் கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பில் நீ சிங்கம்

அறிவில் நீ நரி

அழகில் நீ அன்னம்

பொறுமையில் நீ நத்தை

வேகத்தில் நீ புலி

பண்பில் நீ மான்

மொத்தத்தில் நீ ஒரு...

Discovery Channel!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடி ஜோக்..

நீங்க எத்தனையோ ஸ்டேஜ்ல பேசியிருக்கலாம்.

ஆனால்...

கோமா ஸ்டேஜ்ல பேசியிருக்கீங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.