Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உகண்டாவில் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானோரை தூக்கிலிடுவதற்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[28 - October - 2006] [Font Size - A - A - A]

கம்பாலா,

1999 ஆம் ஆண்டில் 30 வயதான பிறெட் முவாங்க என்ற எச்.ஐ.வி. தொற்றாளர் ஒருவர் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவின் சுற்று வட்டாரத்தில் 3 மாத குழந்தை ஒன்றை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தினால் நாடே அதிர்ச்சியில் மூழ்கியது.

முவாங்கவின் இந்தச் செயல் அரிதான ஒரு சம்பவம் அல்ல. எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான வயது வந்த நபர்கள் நாட்டின் அப்பாவிச் சிறுமிகளையும் சிறுவர்களையும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் செல்கின்றன. இத்தகைய நோயாளர்கள் தங்கள் இச்சையை சிறு வயதினர் மீது தீர்ப்பதால் அவர்களுக்கும் நோய் தொற்றச் செய்கின்றனர். உகண்டாவில் 10 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் எச்.ஐ.வி. கிருமி காவிகளாக அல்லது எய்ட்ஸ் நோயினால் முழுமையாக பீடிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

தற்போது அரசாங்கம் ஒருபடியாக, சிறு வயதினருக்கு தெரிந்து கொண்டே எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தும் நபர்களை தூக்கிலிடுவதற்கான சட்டமூலம் ஒன்றை தயாரித்து வருகிறது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் எச்.ஐ.வி. தொற்றாளர் ஒருவர் 18 வயதிற்கு குறைந்த ஒருவருடன் பாலுறவு கொண்டால் அந்த நபர் "ஆக்கிரமிப்பு அபசாரம்" எனப்படும் பாதகச் செயலை செய்தவராக கருதப்படுவார். இத்தகைய குற்றச் செயலை புரிந்தவர் என்று மேல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் தூக்கிலிடப்படுவார். 18 வயதான அல்லது அதற்கு குறைவான சிறு பராயத்தினருடன் அவர்களது சம்மதத்துடனோ அல்லது சம்மதமின்றியோ பாலுறவு கொள்வது அபசாரம் என்று கருதப்படுகிறது என்று எச்.ஐ.வி./எய்ட்ஸ் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் எலியோடா தும்வேசிக்யே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தினால் இச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் முவங்க மரண தண்டனையை எதிர்நோக்குவார்.

இந்த சட்டமூலம் இலக்குத் தவறிய ஒன்றாகும் என்று உகண்டாவிலுள்ள மனித உரிமைகள் காப்பாளர்கள் கூறுகின்றார்கள். மரண தண்டனையில் குறியாக இருப்பதைத் தவிர்த்து, எச்.ஐ.வி./ எய்ட்ஸ் ஐ எதிர்த்துப் போராடுவதிலும் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரசாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், குற்றச் செயல் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் சிறுவர் பாதுகாப்பு முயற்சிகளுக்கும் அரச முதலீடு கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டுமென கம்பாலாவில் தளத்தைக் கொண்டுள்ள அரச சார்பற்ற நிறுவனமான மனித உரிமைகள் அமைப்பின் (Foundation for Human Right Initiative) நிறைவேற்றுப் பணிப்பாளர் லிவிங்ஸ்ரோன் செவன் யானா `ஐ.பி.எஸ்.'ஸிடம் தெரிவித்தார்.

மரண தண்டனைக்கு நீங்கள் துணை போகும்போது அரசு சட்டத்தையும் ஒழுங்கையும் பேணவேண்டுமென்ற அதன் அடிப்படைச் செயற்பாட்டை விட்டுக் கொடுப்பதற்கு அல்லது மறந்து விடுவதற்கு நீங்கள் காரணத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்து விடுகிறது என்றும் செவன் யானா கூறினார்.

ஒரு நபர் சிறுவயதினர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் போது, அத்தகைய செயலை தடுப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்டதையும் மனதிற் கொள்ள வேண்டுமென்று அவர் கூறினார். மக்களை பாதுகாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கம் தூக்குத் தண்டனையில் கவனம் செலுத்துமானால் அது தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது என்பதே அர்த்தமாகும் என்று செவன் யானா கூறினார்.

பெருமளவில் பரவிவரும் எச்.ஐ.வி./ எய்ட்ஸ் தொற்று நோய் மேலும் தீவிரமடைவதை தடுப்பதற்கான முயற்சியில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கும் பல பிரேரணைகளில் இந்த சட்டமூலம் ஒன்றாகும். இதற்கு முந்திய சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டு பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. நிலைமை கட்டுப்பாட்டுக்கு அப்பால் செல்வதால் எப்படியும் தற்போதைய பாராளுமன்றக் கூட்டத் தொடரில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தும்வேசிக்யே தெரிவித்தார்.

கடந்த மாத முற்பகுதியில், உகண்டா சட்ட சீர்திருத்த ஆணைக் குழுவின் தலைவர் ஜோசப் ககூசா சட்டமூலம் பற்றிய சுருக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவது குறித்து அரசாங்கம் உஷார் அடைந்திருப்பது பற்றி இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.

மற்றவர்களுக்கு எச்.ஐ.வி. கிருமியை பரப்புவோர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. சில நாடுகளில் தெரிந்து கொண்டே ஒருவர் இன்னொருவருக்கு இக்கிருமியை பரப்பினால் அவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. சில நாடுகளில் இத்தகையோர் கொலை காரர்களாக கணிக்கப்படுகிறார்கள் என்று ககூசா ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தில் பேசிய போது தெரிவித்தார்.

உகண்டாவில் தயாரிக்கப்படும் சட்டமூலம் குறிப்பாக, பாலியல் துஷ்பிரயோகம் மூலம் சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. கிருமியை பரப்புவோர் மீது விசேட கவனம் செலுத்தும்.

உகண்டாவில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று கம்பாலாவில் தளத்தைக் கொண்டுள்ள ஆபிரிக்க சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று (ANPP CAN) தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டில் 3 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 16,800 துஷ்பிரயோக சம்பவங்களில் 82.9 சதவீதமான சம்பவங்கள் பாலியல் சம்பந்தப்பட்டவை என்று கடந்த வருடம் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. முன்னர் வெளியான அறிக்கை ஒன்றில் 2002 ஆம் ஆண்டில் 4,495 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்ட தொகையிலும் பார்க்க, இது அதிகமானதாகும். பெண் பிள்ளைகளே கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள். இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 85.8 சதவீதத்தினர் சிறுமிகளாவர் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாலியல் வல்லுறவு, அபசாரம் ஆகிய குற்றச் செயல்களை புரிந்ததாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதே உகண்டாவின் சட்டமாகும். ஆனால், நீதிபதிகள் விரும்பினால் அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்கலாம். இதுவரை குற்றச்சாட்டின் பேரில் எவருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை.

மரண தண்டனை கட்டாயமாக்கப்பட வேண்டுமா என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பதற்கு மேலாக ஒரு யுவதியை அபசாரத்திற்கு உள்ளாக்கும் நபருக்கு வழங்கும் தண்டனையை ஒரு பச்சைக் குழந்தையை கற்பழிக்கும் நபருக்கும் வழங்குவதா என்பது பற்றி அவர்கள் விவாதிக்க வேண்டும். எனவே, சம்மதம் கொடுக்கக் கூடிய வயதை தீர்மானிப்பது அரசுக்கு ஒரு பிரச்சினையாகும். இந்த வயதை 18 இலிருந்து 16 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனையேயார் இதற்கு இணங்கவில்லை. எனினும், பல பல்கலைக்கழக மாணவிகள் எச்.ஐ.வி. தொற்றுள்ள நபர்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். "சினி டடி" என்று உள்ளூரில் அழைக்கப்படும் இந்நபர்கள் இப்பெண்களை கவர்வதற்கு அதிக பெறுமதியுள்ள பொருட்களை அன்பளிப்பாக வழங்குகிறார்கள். இந்த பாலுறவு சம்பவங்களை ஒழிப்பதற்கும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய மரண தண்டனை வழங்குவதால் அவர்கள் இச் சம்பவங்களை வெளிவிடாமல் இரகசியமாக வைத்திருப்பதற்கே வழி வகுக்கும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாகவே, 90 சதவீதமான குற்றவாளிகளும் நெருங்கிய உறவினர்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் மீது விசாரணை நடத்துவதும் சிரமமாக இருக்கிறது.

பல பெற்றோர் தங்கள் உறவினர்கள் ஆயுட்கால சிறைத் தண்டனை அனுபவிப்பதையோ அல்லது மரண தண்டனை விதிக்கப்படுவதையோ விரும்பாததால் நீதிமன்றம் செல்லாமலே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புகிறார்கள்.

நீதிமன்றம் சென்று தீர்வு காணப்பட்ட பாலுறவு சம்பவங்களிலும் பார்க்க, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட அல்லது ஊடகங்களில் வெளிவந்த பாலுறவு சம்பவங்கள் அதிகம் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. உகண்டாவில் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணப்படும் சம்பவங்கள் அதிகம். பாதிக்கப்பட்ட யுவதி கர்ப்பம் தரித்து விட்டால் பணம் அல்லது கால்நடை அல்லது ஜீவனாம்சம் கொடுத்து சமரசம் செய்து வைக்கப்படும்.

உகண்டாவில் சிறைச்சாலை திணைக்கள பதிவுகளின்படி, 1938 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் ஒரு பெண் உட்பட 377 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி யொவேரி முசவேனியின் அரசாங்கம் 1986 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததிலிருந்து 51 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 27 பெண்கள் உட்பட 555 மரண தண்டனைக் கைதிகள் அவர்கள் மீதான தண்டனை நிறைவேற்றப்படும் வரை உகண்டா சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

மரண தண்டனை என்பது மக்களின் மனித உரிமை மீறலாகும் என்றும் அவர்களுக்கு வாழ்வதற்கான உரிமை உண்டு என்றும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தவறுகளை திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் நீதிச் சேவை முறையை மக்களுக்கு மறுப்பதுடன் தண்டனை பெறுவோர் புனர்வாழ்வை பெறுவதற்கான சகல வழிகளும் மரண தண்டனையால் மறுக்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக மரண தண்டனையை ஒரு தண்டனையாக தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதென ஆர்வலர்கள் கூறுகிறார்கள். எல்லோருமே ஒரு நாள் இறப்பது உண்மைதான். ஆனால், குற்றவாளிகள் திருந்துவற்கு மரண தண்டனை அவகாசம் அளிக்கமாட்டாது என்றும் செவன் யானா தெரிவித்தார்.

-ஐ.பி.எஸ்.-

Thanks;Thinakural

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆபிரிக்கா செய்தி எல்லாம் போட்டுக்கொண்டு அரவிந்தனை மாதிரி படம் எடுத்து போட போறிறோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.