Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்ரிபாலவின் முதல் 'பஞ்சாயத்து': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முன் அதிபராக பதவியேற்க மறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மைத்ரிபாலவின் முதல் 'பஞ்சாயத்து': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி முன் அதிபராக பதவியேற்க மறுப்பு!
Posted by: Mathi Updated: Friday, January 9, 2015, 12:00 [iST]
 
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்கா. அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே தம்மிடம் அதிகாரங்களைக் குவித்து வைக்கக் கூடிய திவிநெகும என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார்.
09-1420784954-maithripala-sirisena5-600.
ஆனால் இந்த சட்டத்தை செல்லாது என்று அதிரடியாக சிராணி தீர்ப்பளித்தார். இதனால் அவர் மீது நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்வதேச அரங்கத்தில் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. சிராணிக்குப் பதிலாக ராஜபக்சேவால் நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய தலைமை நீதிபதி மொகான் பிரீஸ். இவர்தான் ராஜபக்சே 3வது முறையாக தேர்தலில் போட்டியிடலாம் என்று அனுமதி கொடுத்தவரும் கூட. இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் சிராணி பண்டாரநாயக்காவை நிறுத்த வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பின்னர் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மைத்ரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக அறிவித்தன. சிராணி பண்டாரநாயக்காவும் மைத்ரிபாலவை ஆதரித்தார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால, ராஜபக்சே ஆதரவாளரான தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்பாக பதவி ஏற்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை அரசியல் சாசனப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் முன்பாக அதிபர் பதவி ஏற்கலாம் என்பதால் வேறு ஒரு நீதிபதி முன்னிலையில் மைத்ரிபால சிறிசேன பதவி ஏற்க உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
  • கருத்துக்கள உறவுகள்

உச்சநீதமன்ற நீதிபதிக்கே இந்த நிலை என்றால் முன்னாள் ஜனதிபதியின் ஆலோசகர்களுக்கு? :D

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிங்ம் மைத்ரிபால சிறிசேன அவர்ள் தக்குச் சிறந்த ஆலோசகர்கள் தேவையெனவும் ஆகவே திறன்கொண்டவர்கள் துரிதமாப் பாஞ்சு வந்து விண்ணப்பிக்கும் படியும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். நான் பாஞ்சு சென்று விண்ணப்பித்துவிட்டேன். சிறீலங்கா செல்வதற்கு மலேசிய விமானத்தில் பயனச்சீட்டு வாங்கி, யன்னலோர இருக்கைக்கும் பதிவு செய்துவிட்டேன். :D  :lol:  
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிங்ம் மைத்ரிபால சிறிசேன அவர்ள் தக்குச் சிறந்த ஆலோசகர்கள் தேவையெனவும் ஆகவே திறன்கொண்டவர்கள் துரிதமாப் பாஞ்சு வந்து விண்ணப்பிக்கும் படியும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். நான் பாஞ்சு சென்று விண்ணப்பித்துவிட்டேன். சிறீலங்கா செல்வதற்கு மலேசிய விமானத்தில் பயனச்சீட்டு வாங்கி, யன்னலோர இருக்கைக்கும் பதிவு செய்துவிட்டேன். :D:lol:

மலேசிய விமானமா?? :lol: மைத்திரி தொடர்ந்தும் ஆலோசகர்களை தேட வேண்டியதுதான்.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய விமானமா?? :lol: மைத்திரி தொடர்ந்தும் ஆலோசகர்களை தேட வேண்டியதுதான்.. :o:D

 

 

இவருக்கு

மைத்திரிக்கு ஆலோசகராக போவதைவிட

மலேசிய விமானத்தில் ஏறுவது நல்லமுடிவாக தெரிகிறது போலும்.. :lol:  :lol: .. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.