Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது : அநுரகுமார திஸாநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மைத்திரியின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது : அநுரகுமார திஸாநாயக்க
 
பொது எதிரணியின் வெற்றியில் மறை முகமான பங்கு எமக்கு உள்ளது எனினும் பொது எதிரணியில் உறவு வைத்துக்கொள்ளவோ வெற்றியில் பங்கு கேட்கவோ விரும்பவில்லை நாம் சுயாதீனமாக செயற்பட ஆசைப்படுகின் றோம் என தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது. வெற்றியை தீர்மானித்த சக்தி அவர்களெனவும் குறிப்பிட்டார்.

1736106478anura5_3.jpg

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் கட்சியின் தலைவரிடம் தேர்தல் வெற்றி தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

மைத்திரிபால சிறிசேனவின் பொது எதிரணியின் நேரடி பங்குதாரராக நாம் இருக்கவில்லை. எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியினை கவிழ்க்க எமது முழுமையான பங்கினையும் வழங்கினோம். இதை பொது எதிரணி பல மேடைகளில் சொல்லியுள்ளது. இப்போது நாம் பொது எதிரணியின் வெற்றியில் பங்குதாரராக உரிமை கொண்டாடுவதை விடவும் நல்லாட்சிக்கான அழுத்தம் கொடுக்கவே தயாராகியுள்ளோம். தேசிய அரசில் பங்கு கொள்வது தொடர்பில் நாம் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. அதே போல் தற்போது நாட்டில் ஜனநாயகத்திற்கான பாதை திறந்துள்ளது. மக்கள் மாற்றத்தினை விரும்பி ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இது இலங்கையின் மாற்றத்திற்கான வரலாற்றின் மைல்கல்.

மேலும் இம்முறை தேர்தலில் பொது எதிரணியின் வெற்றியினை தீர்மானித்ததில் தமிழ் பேசும் மக்களின் பங்கு அதிகமானது. வடக்கு கிழக்கின் வாக்குகளே பொது எதிரணியின் வெற்றியில் முக்கிய பங்கினை எடுத்துள்ளது. அதே போல் சிங்கள மக்கள் இரு சாராருக்கும் சம பங்கு வாக்குகளை வழங்கியிருக்கின்றனர். அதேபோல் 2005 ஆம் ஆண்டில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தடுக்கப்பட்டமையும் 2010 ஆம் ஆண்டில் 18 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி வெற்றி பெற்றமையும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை தற்பெருமை கொண்ட ஆட்சியாக மாற்றி விட்டது. இம்முறை வெற்றி இரு சாராருக்கும் நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் மக்கள்தான் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக விளங்குவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/articles/2015/01/10/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0

 

  • கருத்துக்கள உறவுகள்

நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரியுது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி கூட்டமைப்பினதும், முஸ்லிம் காங்கிரஸினதும் வாக்குகளால் மாத்திரம் வெற்றி பெறவில்லையாம்: சம்பிக்க 

 
 

65949193champika_Ranawaka_0.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், முஸ்லிம் காங்கிரஸினதும் வாக்குகளினால் மாத்திரம் வெற்றியீட்டவில்லை.

 

 அவ்விரு கட்சிகளின் பங்களிப்பு 12 வீதமே. தெற்கு மற்றும் ஏனைய மக்களினால் வழங்கப்பட்ட மேலதிக 9 வீதமான வாக்குகளே வெற்றியை தீர்மானித்தது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையக காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த தேர்தலின் மூலம், ஊழல், மோசடி மிக்க சர்வாதிகார ஆட்சி மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. போலியான தேசப்பற்று தோற்கடிக்கப்பட்டு உண்மையான தேசப்பற்று வெற்றியீட்டியுள்ளது.

மேலும், நாட்டின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் கட்சி என்ற வகையில், நாட்டின் ஐக்கியம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன உறுதிசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர்கள் அரச பணத்தை செலவிட்டு வந்தனர். அவர்களது தேர்தல் பிரசாரத்திற்காக செலவிட்டப்பட்ட 250 பில்லியன் ரூபாவானாது, நாட்டின் மொத்த செலவில் 10 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவர் மேலும் கூறினார்.

http://newtamils.com/fullview.php?id=12202

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.