Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தசாவதாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் தசாவதாரம்

11yl5.jpg

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, இலங்கைத் தமிழ் ஆகிய மொழிகளில் பேசி நடித்த கமல் இப்போது தசாவதாரம் படத்தில் பிரெஞ்சு மொழி பேசி நடிக்க இருக்கிறார்.

நடிகர் திலகம் ஒன்பது வேடங்களில் நடித்த சாதனையை முறியடித்து பத்து வேடங்களில் இப்படத்தில் நடிப்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

மகாநதி, தேவர்மகன், குருதிப்புனல் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் முறையாக சங்கீதம் பயின்று, குற்றாலம் விஸ்வநாத ஐயரிடம் மிருதங்கம் பயின்று, ராஜபார்வை படத்தின் எடிட்டராக இருந்த கமலின் அடுத்த பெரும் சாதனையே தசாவதாரம் படமாகும்.

நாடகத்தில் அவ்வை சண்முகத்தையும், திரைப்படத்தில் கே. பாலசந்தரையும் குருவாக ஏற்ற கமல் தான் எவ்வளவுதான் செய்தாலும் தனது லட்சியப் படம் மருதநாயகம் வந்த பின்புதான் திரை இலட்சியம் நிறைவேறும் என்கிறார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் 10 வேடங்களில் நடித்து வரும் "தசாவதாரம்" படம் இப்போதே பரபரப்பாக பேசப்படுகிறது.

சமீபத்தில் கும்பகோணத்தில் ஒரு கோயிலில் இந்தப் படப்பிடிப்பு நடக்கவிருந்தது. ஆனால் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என பக்தகோடிகள் எதிர்ப்பு தெரிவித்ததால்... கிராபிக்ஸ் மூலம் அந்தக்கோயிலை உருவாக்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் யதார்த்தமாக ஒரு கமல்இ வெளிநாட்டுக்காரராக ஒரு கமல்இ அரசனாக ஒரு கமல்இ பலசாலியாக ஒரு கமல்இ ஒல்லிப்பிச்சானாக ஒரு கமல்... இப்படி பல வேடங்கள். இதில் மிக முக்கியமானது ஒரு பணக்கார கிழவியின் பாத்திரம்.

ஆமாம்... 92 வயது பணக்கார கிழவி வேஷத்தில் கமல் மேக்கப் போட்டுக்கொண்டு வந்தபோது நிஜந்தானா கனவா? என்கிற அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உறைந்து போயிருக்கிறார்கள் யூனிட்டார்கள். அந்த அளவுக்கு வெளுத்துக் கட்டியிருக்கிறார் கமல்.

இந்தப் படத்திற்காக விசேஷ கேமரா ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அந்தக் கேமரா கிடையாது. அதை இயக்கத் தெரிந்தவர்களும் கிடையாது. இதையடுத்து பிரசாத் யூனிட் வெளிநாட்டிலிருந்து அந்தக் கேமராவை குத்தகைக்கு வாங்கியிருக்கிறது. அதை இயக்குவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு ஆபரேட்டரும் வரவழைக்கப்பட்டிருக்கிறார். இந்த கேமராவின் தினசரி வாடகை ஒன்றரை லட்சமாம்.

இப்படி... காஸ்ட்லி கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கமலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமல் ஒரு தலைசிறந்த தமிழ் நடிகன். இவர் வியாபார ரீதியாக நடிப்பை கையாள்வது மிகவும் குறைவு. அவ்வப்போது ஓரிரு படங்களை தவிர. :rolleyes:

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தசாவதாரம்' படத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கும் ஒரு பாடலை, கமலின் மகள் ஸ்ருதி பாடுகிறார்.

"தசாவதாரம்' என்ற படத்தில் பத்து விதமான வேடங்களில் கமல் தற்போது நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத், இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்கிறார். இந்த பாடலை கமலின் மகள் ஸ்ருதி பாடுகிறார். இதற்காக அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ருதியின் குரலில் மல்லிகா ஷெராவத் ஆடவுள்ள இந்த பாடல்இ மிகப்பெரிய "ஹிட்' பாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமல்-கே.எஸ்.ரவிக்குமார் மோதல்!

-ததிங்கிணத்தோம் போடும் தசாவதாரம்!

பொதுவாகவே கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களின் இயக்குனர்கள் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களில் திணறிதான் போவார்கள். கமலுக்கும் அவர்களுக்குமான அலைவரிசை ஒன்றாகாவிட்டால் அவர்கள் கதி அதோ கதிதான். கமலே இறங்கி டைரக்ட் செய்ய ஆரம்பித்துவிடுவார்.

இப்படித்தான் கௌதம் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டது. பிறகு போக போக கௌதமுக்கும் கமலுக்கும் இடையே பரிச்சயம் ஏற்பட்ட பிறகுதான் முழுமையாக அவரை தொழில் செய்ய விட்டார் கமல்.

இது புது டைரக்டர்கள் கமலோடு சேர்கிறபோது நடக்கிற விஷயம். ஆனால் அவரோடு பல படங்கள் பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமாருக்கும் அதே மாதிரி ஒரு பிரச்சனை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இவர் இயக்கும் தசாவதாரம் படத்தில் சில காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று ரவிக்குமார் சொல்லிக் கொடுக்க, அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் தன் ஸ்டைலுக்கு நடித்து வருகிறாராம் கமல். இதனால் ஆத்திரமடைந்த கே.எஸ்.ரவிக்குமார் ஒரு நாள் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டாராம்.

இருவருக்கும் நடக்கிற இந்த மோதலை தீர்த்து வைக்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இந்த செய்திக்கு சம்பந்தமில்லாத இன்னொரு விஷயம். இயக்குனர்களிலேயே மிகப்பெரிய வீடு வைத்திருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார்தான். ஏக்கர் கணக்கில் வளைத்து போட்டு இவர் கட்டியிருக்கும் இந்த பங்களா ஒரு அரண்மனை போல் ஜொலிக்கிறது.

http://www.tamilcinema.com/

ஐயோ, ஐயோ! தமிழ் சினிமாவில் ஒருவன் ஒரு வேடத்தில் நடித்தாலே படம் பார்க்கும் போது படத்தில் என்ன நடக்கின்றதென்று ஒரு கண்றாவியும் விளங்காது. நிலமை இப்படி இருக்க, தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்து எங்கடையாக்கள் எத்தனை பேரை விசர் ஆசுப் பத்திரிக்கு அனுப்பப் போறாறோ தெரியாது! எங்கட இடத்தில இப்பத்தான் கொஞ்ச காலமா இளம் பெடியளின்ற சூடுபாடுகள், வெட்டுக் கொத்துக்கள் குறைஞ்சிருக்கு. தசாவதாரத்தைப் பார்த்திட்டு எத்தனை பேர் பணக் காரக் கிழவி வேசம் போட்டுக் கொண்டு உயிர எடுக்கக் கிளம்பப் போறாங்களோ தெரியாது. ஆளவந்தானில் கமலைப் பார்த்து அவங்கள் போட்ட மொட்டை மேக்கப்பை மாற்றிப் போட்டு இப்ப தான் மனுசனாக இருக்கிறான்கள். தசாவதாரத்தை பார்த்திட்டு இவங்கள் திருப்பி முருங்கை மரத்தில ஏறுவாங்களோ? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்! :icon_idea:

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தசாவதாரத்தில், இரட்டை

வேடமா?' அசின் பேட்டி

அறிமுகமான குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி இளம் நாயகர்களுடனும், ஜோடி சேர்ந்து தற்போது உலக நாயகனோடு தசாவதாரத்தின் நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் அசின். தசாவதாரம் படத்தின் கதை என்ன? கமல் அதில் என்னென்ன வேடங்களில் நடிக்கிறார் என்பது பற்றி கோலிவுட்டே பூவா, தலையா போட்டு மண்டையை குழப்பிக் கொண்டிருக்கும் வேளையில் அப்படம் பற்றியும், அதில் தனது கேரக்டர் பற்றியும் அசின் அளித்த சிறப்பு பேட்டி...

கே: குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளீர்கள்? இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?

ப: நடிப்பை ஒரு தொழிலாக பார்க்கவில்லை. முழு ஈடுபாட்டுடன் சந்தோஷமாக இதை செய்கிறேன். முதலிடம், இரண்டாமிடம் என்ற கணக்கில்லாமல் மக்களிடம் நாம் பேசப்பட வேண்டும். அதுதான் முக்கியம். அவ்விஷயத்தில் அசின் என்றால் அனைவருக்கும் தெரிகிறது.

கே: தசாவதாரத்தில் உங்கள் கேரக்டர் என்ன?

ப: ஆள விடுங்க சாமி. தசாவதாரத்தை தவிர எது வேண்டுமானாலும் கேளுங்கள். ஷýட்டிங் முடியும் வரை அதை பற்றி மூச்சுக் கூட விடக் கூடாது என்பது இயக்குனரின் உத்தரவு.

கே: தசாவதாரத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறீர்களாமே?

ப: தசாவதாரத்தில் கமல் 10 வேடத்தில் நடிக்கிறார். அதைதான் சொல்ல முடியும். நான் எத்தனை வேடங்களில் நடிக்கிறேன் என்பது பட ரிலீசுக்கு பின்னர் தெரியும்.

கே: நடித்ததிலேயே உங்களை கவர்ந்த கேரக்டர் எது?

ப: நிச்சயம் கஜினியில் நான் நடித்த கல்பனாதான். இயல்பான எனது குணாதிசியத்தை அப்படியே பிரதி பலிக்கும் வகையில் துருதுருவென்று நகைச்சுவை உணர்வோடும், அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் அந்த கேரக்டர் இருந்தது. மீண்டும் அது போன்ற ஒரு கேரக்டரில் நடிப்பேனா என்பது தெரியவில்லை.

கே:விஜய், அஜீத், சூர்யா இவர்களில் யாரை பிடிக்கும்?

ப: சிக்கலில் மாட்டி விடுகிறீர்களே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு. அவர்களுக் கென்று நடிப்பு பாணியும் உண்டு. அந்த குறிப்பிட்ட அம்சங்கள் ஒவ்வொன்றும் எனக்கு பிடிக்கும்.

மாலைசுடர்.கொம்

  • 4 months later...

தசாவதாரத்துக்கு போட்டா போட்டி!

தசாவதாரம் ஃபீவர் உச்சத்தை எட்டத் தொடங்கியுள்ளது. கலைஞானியின் இந்த சாதனைப் படம் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் - ஒரு காட்சியில் பத்து கமல்ஹாசன்களும் சந்திப்பது போல காட்சி இடம் பெறுகிறதாம்.

உலகத் திரை வரலாற்றிலேயே முதல் முறையாக கமல்ஹாசன் 10 வேடம் புனைந்து நடித்து வரும் தசாவதாரத்தின் ஷூட்டிங் வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. படத்தின் முக்கால்வாசிப் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் கிளைமேக்ஸ் காட்சிக்காக கமல், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யூனிட்டார் ரெடியாகிக் கொண்டிருக்கின்றனர்.

கிலைமேக்ஸ் காட்சிக்காக சென்னை நகரிலும், வெளியிலுமாக ரூ. 7.5 கோடியில் பிரமாண்ட செட்கள் போடப்பட்டுள்ளனவாம்.

இப்படத்தில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், துறவி, நீக்ரோ பழங்குடி, சோழ மன்னன், சாப்ட்வேர் என்ஜீனியர் என 10 விதமான கேரக்டர்களில் கமல் நடிக்கிறார்.

ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படு விறுவிறுப்பாக இருக்குமாம். அதாவது அக்காட்சியில் 10 கமல்ஹாசன்களும் ஒரே ஷாட்டில் வருவது போல படமாக்கியுள்ளனராம்.

சென்னை அருகே முட்டுக்காட்டில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில் இந்தக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியிலும் 9 விதமான சிவாஜியும் ஒரே ஷாட்டில் வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே படத்தின் வியாபாரம் குறித்த வேலைகள் தெடாங்கி விட்டனவாம். படத்திற்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக சென்னை நகர விநியோக உரிமையை வாங்க பலரும் போட்டியிடுகின்றனராம். சிவாஜி பட உரிமையை வாங்கிய அபிராமி ராமநாதனும் அதில் ஒருவர்.

ஆனால் படத்தைத் தயாரித்து வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரனே சென்னை நகர விநியோக உரிமையை வைத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

-thatstamil-

  • 2 months later...

நடிப்பு - கமல், அசின்

இயக்கம் - கே. எஸ். ரவிக்குமார்

இசை - ஹிமேஷ் ரேஷமையா

( கதை )

சமூகத்தின் மீது அக்கறைகொண்ட பொறுப்பான ஒரு மனிதனின் கதை.

(நடிகர் )

கமல்ஹாசன், நெப்போலியன், நாகேஷ், அசின், மல்லகா ஷெராவத், கே. ஆர். விஜயா, ஜெயப்ரதா, ரேகா மற்றும் பலர்.

(சிறுதுளிகள் )

* கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் படம். இளைஞனாக, முதியவராக,கறுப்பு இனத்தவர் , ஆன்மிகவாதி, பின்லேடன், புஷ் உள்ளிட்ட வேடங்கள் இதில் அடங்கும்.

* ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் 80 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.

* கமலுக்கு ஜோடியாக நடிக்கும் அசின், அக்ரஹாரத்து பெண்ணாக சொந்த குரலில் பேசி நடிக்கிறார்.

* பத்தாயிரம் பக்தர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான காட்சியை நேரு ஸ்டேடியத்தில் படமாக்கியுள்ளனர்.

* படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகளை மூன்று பெரிய நிறுவனங்கள் செய்கின்றன.

* பாரதி, பி. வாசு, ஆர். சுந்தர்ராஜன், ஈரோடு செளந்தர், ரமேஷ்கண்ணா உள்ளிட்ட பல இயக்குனர்கள் நடித்துள்ளனர்.

* கமலுடன் கமல் மோதிக்கொள்ளும் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி படத்தில் இடம்பெறுகிறது. இதற்காக அமெரிக்காவிலிருந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் வரவழைக்கப்பட்டு படமாக்கட்பட்டுள்ளது.

* இரண்டு பாடல் காட்சிக்காக மட்டும் மூன்று கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

* சென்னை , சிதம்பரத்தை அடுத்துள்ள பி்ச்சாவரம், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

* ஹிமேஷ் ரேஷமையா இசையில் வாலி, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

:wub::o

Edited by kirubakaran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த 10 வேடங்கள் என்பது மக்களை தியேட்டருக்கு வர வைக்கும் ஒரு மாய வலை. ஆளவந்தான் மாதிரி ரெயிலர் பாத்திட்டு ஏமாந்த மாதிரி தான் இந்தப்படமும் வரும்.நல்ல கதை, கருத்து உள்ள படமா இருந்தா வேட்டையாடு விளையாடு படம் மாதிரி பெரிதாக விளம்பரம் இல்லாமல் வரலாம் தானே?

என்ன வழமைபோல் புறக்கணிப்பு என்று தொடங்கவில்லையா?? தொடங்கினால் விளம்பரம் கிடைத்த மாதிரித் தானே சிவாஜி போல் ஓடாவிட்டாலும் புறக்கணிப்பு விளம்பரத்தால் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். எங்க நம்ம ஜம்மு உம்ம பங்கிற்கு எடுத்துவிட வேண்டியது தானே!! :wub::o

நீக்ரோ என்ற சொல் தடை செய்யப்பட்டதல்லவா? இந்திய எழுத்துக்களில் அது இன்னமும் தொடர்கிறது. அதை நாமும் தொடர்வது சரியல்ல. இந்த தகவலை நீங்களாக எழுதவில்லை என்று தெரிகிறது, ஆனால் திருத்தினால் நல்லதல்லவா?

  • 3 months later...

தசாவதாரம் படத்தில் ஏற்கனவே 10 அவதாரங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எட்டு அடி உயர மனிதன் ஒருவரை இப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம் கமல்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பிரமாண்டமான ஒருவர், கமல்ஹாசனின் தீவிர பாதுகாவலராக கூடவே வருவார். பீம் பாய் பீம் பாய் என்று பாப்புலரான அந்த கேரக்டரை யாரும் மறந்திருக்க முடியாது.

இப்போது தசாவதாரத்திலும் ஒரு மகா பிரமாண்டமான நபர் ஒருவர் வருகிறாராம். சர்தார் வேடத்தில் வரும் கமல்ஹாசனுக்கு பாதுகாப்பாக கூடவே இவர் வருகிறாராம்.

எட்டு அடி உயரமுள்ள இவர் அமெரிக்கர். கமல்ஹாசனின் பிரபத்தையும், அவரது நடிப்புத் திறமையையும் அறிந்த அவர் உடனடியாக அந்தக் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.

இப்படத்தின் ஆரம்ப காட்சி 12வது நூற்றாண்டில் தொடங்குகிறதாம். இந்தக் காட்சிதான் படத்திலேயே மிக மிக முக்கியமான காட்சியாக இருக்குமாம். அந்தக் காட்சியில் சோழ மன்னராக வருகிறார் நெப்போலியன். சண்டையில் தோற்றதால் கோபமடைந்து சாமி சிலையை தூக்கி கடலில் போட்டு விடுகிறார் நெப்போலியன்.

அப்போது நாத்திகரான கமல்ஹாசன் அந்த சிலையை காப்பாற்றி கடலிலிருந்து மீட்டெடுக்கிறார். அங்கிருந்து படத்தின் கதை தொடங்குகிறதாம். அந்தக் காட்சியில் வயோதிகர் வேடத்தில் கமல்ஹாசன் வருகிறாராம்.

முதல் சீனே கலக்கலா இருக்கே!

:huh::wub:

ஏதோ சொல்லுங்கோ. தமிழ் படத்தில ஒருவன் ஒரு வேசத்தில வந்தாலே ஒரு கண்றாவியும் விளங்காது. உதில பத்து வேடத்தில வரப்போறாராம். படத்த பார்த்த முடிவில சனத்திண்ட மூள தட்டாமல் இருந்தால் சரி.

Edited by கலைஞன்

leftcinemavf7.jpg

நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் தசாவதாரம். தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்துள்ள நிலையில் படத்தில் இறுதிகட்ட சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. தற்போது கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதிலும் தசாவதாரத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் தசாவதாரம் திரையில் மின்னும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கமல்ஹாசன் அதிக அளவில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள இப்படத்தைப் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் வருமாறு :

# தசாவதாரம் படத்தை இயக்குபவர் இஈயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

# தசாவதாரம் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட பொறுப்பான ஒரு மனிதனின் கதை.

# படத்தின் கதையை கிரேசிமோகன், சுஜாதா இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். கமலின் பங்கும் இதில் இருக்கிறது.

# புதுமையான இசையை புகுத்தியிருப்பவர் ஹிமேஷ் ரேஷ்மாச்சார்யா.

# கமல் 10 வேடங்களில் நடிப்பதால் அதிக அளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

# பெரும்பாலான கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களால் செய்யப்படுகிறது.

# வெளிநாட்டு ரசிகர்களை கவர தசாவதாரத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிட உள்ளனர்.

# படத்தில் பாரதி, வாசு, ஆ.சுந்தர்ராஜன், சவுந்தர், ரமேஷ்கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களும் நடித்துள்ளனர்.

# நடிகை அசின் தன் சொந்தக்குரலில் பேசி நடித்துள்ளார். இந்த படத்தில் அம்மணி அக்ரஹாரத்து பெண்ணாக வருகிறார்.

# தசாவதாரம் படத்தில் 2 கமல்கள் சண்டையிடும் காட்சி மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்காக அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் வரவழைக்கப்பட்டிருந்தன.

# சென்னை, மலேசியா, அமெரிக்கா, மற்றும் சிதம்பரத்தில் இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன.

# படத்தில் 2 பாடல்கள் ரூ.3 கோடி செலவில் சென்னையில் படம்பிடிக்கப்பட்டது.

# கமலுக்கு ஜோடியாக அசின், மல்லிகா ஷெராவத், ஜெஈயப்பிரதா, கே.ஆர்.விஜயா, ரேகா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். நாகேஷ், நெப்போலியனும் முக்கிய கேரக்டர்களாக நடிக்கிறார்கள்.

# கமல்ஹாசனின் 10 வேட்களில் ஒன்று ஜார்ஜ் புஷ் வேடம்.

# ஜார்ர் புஷ் வேடம் பற்றி கமலிடம் கேட்டபோது, நான் நடித்த அந்த கேரக்டர் பற்றி இப்போதே சொல்வது நல்லதல்ல என்று கூறி மழுப்பி விட்டார்.

# புஷ் வேடம் தவிர ஆன்மீகவாதி, நீக்ரோ, வயதான தாத்தா, இளைஞர், பின்லேடன் உள்ளிட்ட வேடங்களிலும் கமல் கலக்கியிருக்கிறார்.

# ஆன்மீக கமலுடன் பத்தாயிரம் பக்தர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான காட்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் படமாக்கப் பட்டுள்ளது

# வாலி மற்றும் வைரமுத்துவின் பாடல்கள் எழுதியுள்ளனர்.

# படம் திரைக்கு வரும்போது இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா ஆகிஈய நாடுகளிலும் விடுமுறை காலமாகும். எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

# இந்த படம் நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

# தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். (மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமணர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவையே விஷ்ணுவின் 10 அவதாரங்கள்).

ஆதாரம் தினமலர்

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு........

  • கருத்துக்கள உறவுகள்

கமலுக்கு அவரின் ஒவ்வொரு படத்திலும் திரையுலகினரிலிருந்து தான் தன்னை வேறுபடுத்திக் காட்டவேண்டிய ஒரு கடப்பாடு அல்லது வெறியே உண்டு. தனது ஒவ்வொரு படத்திலும் அதை அவர் நிரூபித்துக்கொண்டுதான் வருகிறார். வெற்றிபெற வாழ்த்துகள். :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

கமல்காசன் - ஒரு சகாப்த்தம் ! இனி ஒருவர் இப்படி இருக்கப்போவதில்லை, முன்னரும் இருந்ததில்லை.

நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கலந்து கொள்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி, ஹாங்காங்கில் ஜாக்கி சானைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பியதும் இந்த தகவலைத் தெரிவித்தார்.

தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்துள்ள நிலையில் படத்தில் இறுதிகட்ட சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. தற்போது கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதிலும் தசாவதாரத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் தசாவதாரம் திரையில் மின்னும் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி உள்ள இந்த பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஹாங்காங், கோவ்லோன் நகரில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானை, படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவியும் அவருடைய சகோதரர் ரமேஷ் பாபுவும் சந்தித்து ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். ஹாங்காங்கில் நடைபெற்ற ஒரு விருந்தில் பங்கேற்ற நடிகர் ஜாக்கி சான் இது பற்றி குறிப்பிடுகையில், கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன்; ஒரு நடிகர் இவ்வாறு 10 வேடங்களில் நடித்திருப்பது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

மார்ச் மாதம் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, உபேந்திரா, நாகர்ஜுன் போன்றோரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: தினமலர்

  • 3 weeks later...

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தின் விற்பனையும், புக்கிங்கும் தொடங்கி விட்டது. கேரள விநியோக உரிமை ரூ. 2.25 கோடிக்கு விற்றுள்ளதாம்.

தசாவதாரம் படத்தின் முதல் விநியோக விற்பனை இதுதான். கேரளாவில் வேறு ஒருவருக்கு படத்தை விற்றுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மற்றும் சில வெளிநாடுகளில் சொந்தமாகவே திரையிடத் திட்டமிட்டுள்ளார்.

ஏப்ரல் 18ம் தேதி படம் திரைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

கேரள உரிமையை என்.ஆர்.ஐ ஒருவர் எடுத்துள்ளார். கேரளாவில் லால் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரையிடுகிறார். இந்தலால் வேறு யாருமல்ல, தமிழில் சண்டக்கோழி, ஓரம்போ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ள நடிகர் லால்தான். கேரளாவில் இவரும் இயக்குநர் சித்திக்கும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர்.

இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் வெளியிடப்படாத வகையில் அதிக அளவிலான தியேட்டர்களில் கேரளாவில் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது.

மேலும் படத்தைப் பெற விநியோகஸ்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாம். மலையாளப் புத்தாண்டு விஷு அன்று தசாவதாரம் அங்கு ரிலீஸாகிறது. மோகன்லால், மம்முட்டி, திலீப் ஆகியோரது படங்களும் அந்த சமயத்தில் வெளியாவதால் திரை ரசிகர்களுக்கு பெரும் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கிடையே, ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் பிரமாண்டமான அளவில் ஆடியோ ரிலீஸ் நடக்கவுள்ளது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த விழாவுக்காக ரூ. 80 லட்சம் செலவில் பிரமாண்ட செலவுகளைச் செய்து வருகிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஜாக்கி சான் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

:lol::lol:

  • 3 weeks later...

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஆகியோர்...........

தொடர்ந்து வாசிக்க.............

http://isoorya.blogspot.com/2008/03/10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.