Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனித பாப்பரசரே எளிய சனங்களின் குரல் உங்கள் தேவ செவிகளுக்குக் கேட்டிகிறதா

Featured Replies

புனித பாப்பரசரே எளிய சனங்களின் குரல் உங்கள் தேவ செவிகளுக்குக் கேட்டிகிறதா?
சிங்கக் கொடிகளும் வத்திக்கான் கொடிகளுமாய் தங்களுக்காய் விரிந்திருக்கும் சோடனை செய்யப்பட்ட வீதிகளில் மக்களுக்கு கைகளை காட்டி ஆசீர்வதித்துக் கொண்ட புனித பாப்பரசரே ஒடுக்கப்பட்ட தாய் நிலத்திலிருந்துகொண்டு கண்ணீரோடும் ஆற்றாமையோடும் இருத வாசகங்களுடன் நிற்கும் எங்கள் சனங்களின் குரல்கள் தங்கள் தேவ செவிகளுக்கு கேட்கிறதா? 
 
 
சிங்களப் பேரினவாதத்தின் கொடிய ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கிறது எங்கள் தாய்நிலம். இராணுவ ஆட்சிக்குள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது நாங்கள் வாழும் மண். எதுவும் எப்போதும் நடக்க முடியும் என்ற நிலையில் வாழும் நாங்கள் நம்பிக்கையற்ற பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
 
திருத்தந்தையே! ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் இன அழிப்புப் போரில் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள். சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இந்தப் போரில் இல்லாது செய்யப்பட்டிருப்பதை மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்ந்துள்ளார். 
 
அது மாத்திரமல்ல பிரித்தானியரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்ற நாள் முதல் இன்றுவரை நாங்கள் இழந்தது கொஞ்சனஞ்சமல்ல. பல லட்சம் மக்கள் இல்லாமல் செய்யப்பட்டோம். நாங்கள் இன அழிப்பின்மூலம் இல்லாமல் செய்யவே இந்தப் போர்களும் அதற்கு முந்தைய இனக் கலவரங்களும் தூண்டப்பட்டன. 
 
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் எங்கள் சனங்கள்மீது மனித குலத்திற்கு விரோதமான ஈவரக்கமற்ற முறையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன. இனவொதுத்தல் தன்மையுடனும் இனவழிப்புத் தன்மையுடனும் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போர்க்குற்றங்கள் ஓர் பேரினவாத சமூகத்தின் ஆழமான இன மேலாண்மையின் வெளிப்பாடே.
 
இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றியவர்களின் ஆட்சியின் கீழ் அவர்களின் இராணுவ மயத்தில் ஈழத் தமிழ் மக்களை தொடர்ந்தும் வாழச்சொல்வது என்பது எத்தகைய அநீதி? பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு நீதியும், வாழும் எங்கள் மக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படாதா? என்பதுதானே எங்கள் சனங்களின் மனக்குமுறல். 
 
இன்று காணாமல் போனவர்களுக்காய் கண்ணீரும் கம்பலையுமாய் அலைகின்றனர் எங்கள் சனங்கள். 2006ஆம் ஆண்டில் அல்லைப்பிட்டியில் ஜிம்பிறவுண் அடிகளார் காணாமல் போனார். 2008ஆம் ஆண்டில் கருணாரட்ணம் அடிகளார் இலங்கை அரச படைகளின் கிளைமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார். 
 
லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரம் பேர் காணாமல் போன ஈழ இறுதி யுத்ததின் பின்னர் அருட்தந்தை பிரான்சிஸ்சும் அவருடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணைடைந்த பல ஆயிரம் பேர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். அருட்தந்தை பிரான்சிஸ் உள்ளிட்ட அந்த சனங்கள் யுத்தம் முடிந்த பின்னர்தான் பின்னரே காணாமல் செய்யப்பட்டனர். 
 
தமிழ் இனம் என்பதனால் அவர்கள் சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் பயங்கரவாதிகள் எனப்பட்டு காணாமல் போகச் செய்யப்படுவதும் அழித் தொடுக்கப்படுவதும்தான் இலங்கையில் தொடரும் இன அழிப்புத்துயரம். தந்தை எங்கள் முழுச்சமூகமும் எத்தனை பேரழிவுக்கும் துயருக்கும் கண்ணீருக்கும் முகம் கொடுக்கிறது? 
 
கௌரவமும்; நிம்மதியும் கொண்ட வாழ்வை எங்கள் மண்ணில் நாங்கள் வாழ்வதையே  பல நீதியான போராட்டங்களின் ஊடாகவும் நாங்கள் வேண்டிக் கொண்டிருக்கிறோம். மானிடருக்காய் கடவுள் இரத்தம் சிந்தினார். நாங்கள் வாழும் எமக்காக இரத்தம் சிந்தினோம். எங்கள்மீதான அநீதியை துடைத்த இரத்தம் சிந்தினோம்.
 
புனித திருத்தந்தையே, நாங்கள் பலியெடுக்கப்படாத ஒரு காலத்தையும் வாழ்வையும் பெற வேண்டும். நாங்கள் நித்தியமும் நிம்மதியும் பெறும் ஒரு வாழ்வை தொடரும் விதமாய் எங்கள் தாய்நிலம் விடுதலை பெற வேண்டும். அதற்காய் எங்கள் மண்ணை ஆசிர்வதியுங்கள். 
 
குருதியில் குளித்து இனப்படுகொலையால்  சாட்சிகளற்றுப் புதைக்கப்பட்டவர்களோடுடிருக்கும் எங்கள் தாய் மண்ணை ஆசீர்வாதியுங்கள். உரிமைகளுக்காய் போராடி மாண்டவர்களும் உரிமைக்காய் குரல் எழுப்பியமைக்காய் கொல்லப்பட்டவர்களும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட மக்களும் சமாதானமும் அமைதியும் திரும்பும் எங்கள் மண்ணுடன் உயிர்த்தெழும் விதமாக ஆசீர்வதியுங்கள் தந்தையே. 
 
வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் மரியண்ணை நாங்கள் அனுபவித்த அத்தனை துயரங்களையும் சந்தித்த பாதைகளையும் ஓர் சாதாரண மனிதரைப்போல சந்தித்தாள். 
 
திருத்தந்தையே, எங்கள் எளிய சனங்களின் குரல்கள் உங்களுக்குக் கேட்கிறதா? யாவும் அறிந்த மடு மாதா அண்னையிடம் கேளுங்கள் அவள் சொல்வாள் எங்கள் கதையை. 
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
 
  • கருத்துக்கள உறவுகள்

அது கேட்காது. அவர் எப்போதுமே அடக்குமுரையாளர்களுடந்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆகவே அடக்கப்பட்டவர்களின் ஓலம் அவரின் காதுகளுக்கு ஒருபோதுமே ஒட்டாது. அவர் கொழும்பிற்கு வந்ததே தெற்கில் உள்ள சிங்களக் கிறீஸ்த்தவர்களைப் பார்க்கத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அது கேட்காது. அவர் எப்போதுமே அடக்குமுரையாளர்களுடந்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆகவே அடக்கப்பட்டவர்களின் ஓலம் அவரின் காதுகளுக்கு ஒருபோதுமே ஒட்டாது. அவர் கொழும்பிற்கு வந்ததே தெற்கில் உள்ள சிங்களக் கிறீஸ்த்தவர்களைப் பார்க்கத்தான்.

 

 

உண்மைதான்

இதுவரை அதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை

 

சிலவேளை ஏதாவது எல்லை தாண்டி தம்மை நெருங்குகிறது என்று அவர்களது எஐமானர்கள் சொன்னால்

வாய் திறப்பார்... :(

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர் முடிந்து 5 வருடங்களுக்கு பின்னர் அங்கு விஜயம் செய்துள்ள போப்பாண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், உண்மையை கண்டறியுங்கள் என்று கூறியுள்ளார். பழைய காயங்களை கிளறுவதற்காக அல்ல இது என்றும், நீதியையும் ஆற்றுப்படுத்தலையும் ஒற்றுமையையும் மேம்படுத்தவே இது என்று அவர் கூறியுள்ளார். - 

 

 

இதைத்தான்  மகிந்தவும் சொன்னார்

போன உயிர்களைவிட

வேறு எல்லாவற்றையும் தருவேன் என......

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நாங்கள் அவருக்கு திருப்பி குடுத்திட்டாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னது உண்மையை கண்டறிகிறதா?? அதற்கு பிரார்த்தனை உதவாதா?? அத்தனை உண்மைகளும் வெள்ளை எஜமானர்களின் கைகளிலும், ஐநாவிலும் உள்ளனவே.. ஆற்றில் போட்டதை எதுக்கு குளத்தில் தேடுறீங்கள்?

நியானி: மேற்கோள் காட்டிய செய்தி முழுமையாக இணைக்கப்படாததால் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.