Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி.க்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது ஜே.வி.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

LTTE-money-provider-KP.jpg

புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஜே.வி.பி. இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை ஆயுதப் போராட்டத்திற்கு உதவியமை தொடர்பாக கே.பி. க்கு எதிராக முன்னைய அரசாங்கம் எதுவித சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும்  அவரிடமிருந்ததாக கூறப்படும் கப்பல்கள் தங்கம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை என கூறியுமே ஜே.வி.பி.  உயர்நீதிமன்ற்ததில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/01/19/கேபிக்கு-எதிராக-வழக்குத்-தாக்கல்-செய்தது-ஜேவிபி

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி. கைது செய்யப்பட்டு விசாரணையினை எதிர்நோக்கி தண்டனை கொடுக்கப்பட்டால் இவரால் பராமரிக்கப்பட்டு வரும் 200-க்கும் அதிகமான பெண் சிறுவர்கள், 80-க்கும் அதிகமான ஆண் சிறுவர்கள் நடுத்தெருவுக்குத்தான் செல்ல வேண்டி வரும்.

இவ்வாறான நிலை ஏற்பட்டால் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்கள் அந்தச் சிறுவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

சரி-பிழைகளுக்கு அப்பால் போரில் கொல்லப்பட்ட போராளிகளினதும் பொதுமக்களினதும் பிள்ளைகளை கடந்த 4 வருடங்களுக்கு மேலாக மிகத் திறம்பட பராமரித்து வருகின்றார்.

இங்கே கே.பி.யை நான் தூக்கிப் பிடித்து நல்லவர் என்று கூற வரவில்லை. நேரடியாக கண்ட காட்சியினை வைத்தே கூறுகின்றேன். பிற பராமரிப்பு இல்லங்களுக்கு சென்றிருந்த வேளை அங்கே சிறுவர்கள் மகிழ்வாக இருந்தது இல்லை. பல இல்லங்களில் இடம்பெற்ற மோசடிகள், துஷ்ப்பிரயோகம் கே.பி.யால் பராமரிக்கப்பட்டு வரும் இல்லங்களில் இடம்பெற்றது இல்லை.

என்னைப் பொறுத்த வரை கருணா, டக்ளஸ் போன்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எத்தனையோ முன்னாள் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் உதவிகள் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடயம் ஆகும்.

அண்மையில் 'செஞ்சோலை', 'பாரதி' இல்லங்களில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வு படங்களின் இணைப்புக்களை கீழே போடுகின்றேன். அனைவரும் ஒரு தடவை பாருங்கள்.

Bharathi Illam: http://www.bharathyillam.org/?p=126

Sencholai Illam: http://www.sencholai.org/?p=2151

cleardot.gif

 

Edited by nirmalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.