Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தீர்மானத்தை தவிர்க்க வேண்டும்- முன்னாள் அமெரிக்க தூதுவர் டெரிஸ்டா ஸ்காவ்வர்: தமிழில்--ரஜீபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி 8 திகதி தேர்தலில் ஆச்சரியமளிக்ககூடிய  வெற்றியை பெற்ற பின்னர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் மைத்திரிபால சிறிசேன அவருக்கு முன்னர் பதவிவகித்தவரை விட வித்தியாசமானவர். 

  உள்நாட்டின் ஆட்சி முறையில் கவனம் செலுத்துவதே அவரது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படப் போகின்றது, அது நடைமுறைப்படுத்துவதற்கு கடினமான விடயம். மகிந்த ராஜபக்சவின் மீதான வெறுப்பு என்ற விடயத்தை தவிர வேறு எதிலும் ஓற்றுமை இல்லாத கூட்டணிக்கு அவர் தலைமை தாங்குகின்றார்.

அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை சரிசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதனை சாத்தியமாக்குவதற்கு அவருக்கும் அவரது வெளிநாட்டு நண்பர்களுக்கும் திறமையும், கற்பனாசக்தியும் அவசியமாகின்றது. மேலும் தனது கூட்டணியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக தனது அரசியல் திறமை முழுவதையும் அவர் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

 இலங்கையின் புதிய அரசாங்கம்தனது நிலையை உறுதிசெய்யும் வரை  அந்த நாட்டின் மீதான ஐ.நாவின் வருடாந்த மனிதஉரிமை கவுன்சில்  தீர்மானத்தை இடைநிறுத்தி வைப்பதே நல்ல ஆரம்பமாக அமையும்.

 

 தான் வெற்றியடைவேன் என நம்பிக்கை கொண்டிருந்த தேர்தல் நடைபெற்ற மறுநாள் காலை, இலங்கையின் பல வருடகால ஜனாதிபதியை மையமாக கொண்ட ஆட்சிக்கு பின்னர் மகிந்த ராஜபக்ச அமைதியாக தனது அலரிமாளிகை அலுவலகத்திலிருந்து வெளியேறினார்,

குறிப்பிட்ட தேர்தல் முடிவுகளால் ஆச்சரியமடைந்தவர் ராஜபக்ச மாத்திரமல்ல, அவருக்கு இலங்கையின் கிராமப்பகுதி வாக்காளர்கள் மத்தியில் அதிகளவு செல்வாக்கு இருப்பதாக கருத்துநிலவியது, அதிகரித்து வரும் ஏதேச்சாதிகார அரசாங்கத்தில் அவரது குடும்பத்திற்கு இறுக்கமான பிடியிருந்தது

சிறிசேனா யார்?

இலங்கையின் புதிய ஜனாதிபதி பொலனறுவையி;ன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்,இது இலங்கையின் புராதன நாகரிகத்தின் மையமாக விளங்கிய பகுதி,அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினராக விளங்கியவர்,1967 இல் இளைஞர் அணியில் இணைந்துகொண்ட இவர்,1971 கிளர்ச்சிக்கு பின்னர் சிறையிலடைக்கப்பட்டார், எனினும் அவர் அதில் ஈடுபடவில்லை எனஅவரது வெப்தளம் தெரிவிக்கின்றது.கட்சியில் பல பதவிகளை வகித்த அவர் 1989 இல் நாடாளுமன்றிற்கு தெரிவுசெய்யப்பட்டார், அடுத்த  இருபது வருட காலப்பகுதியில் அவர் பல அமைச்சுக்களை வகித்தார்,அனேகமாக அவை விவசாயத்துடன் தொடர்புபட்டிருந்தன, சமீபத்தில் 2010 முதல் 14 வரை அவர் சுகாதரா அமைச்சராக பதவிவிகித்தார். வெளிவிவகார கொள்கைகளில் ஈடுபடுவதற்கு அவரிற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

சிறிசேன ; இருபது வருட அரசியல வாழ்க்கை ஊடாக தனது அரசியல் திறமைகளை வளர்;துக்கொண்டவர்,இலங்கையின் விவசாய துறையின் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் குறித்து நன்கு அறிந்தவர்.வெளிவிவகார விடயங்கள் மற்றும் கையாளளும் போதுஅவர் தனது அமைச்சர்களையே பெரிதும் நம்பியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.வலுவான வெளிவிவகார மற்றும் பொருளாதரா குழுவொன்று காணப்படும், அதில் இரு முக்கியகட்சிகளையும் சேர்ந்த அரசியல் வாதிகளும், துறைசர்ர் நிபுணர்களும் இடம்பெற்றிருப்பர் என தெரிவிக்கப்படுகின்றது.

1990 களில் முதல்தடவை பிரதமராக பதவிவகித்த வேளை ரணில்விக்கிரமசிங்க பொருளாதார விடயங்களிலேயே அதிகளவு அக்கறை காட்டினார்,இலங்கையின் நெருக்கடியான இனஉறவுகளில் அவர் ஓரு ஆக்கபூர்வமான குரலாக காணப்பட்டார்.

ஆரம்பகால முன்னுரிமைகள். நல்லாட்சியும் பொருளாதார நிவாரணங்களும்,

தேர்தலுக்கு பின்னர் அரச ஊடகம் புதிய அரசாங்கத்தின் சவால் மிக்க 100 நாள் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஆட்சிமுறையை மாற்றுதல்,பொருளாதார நிவாரணம், ஊழல் ஓழிப்பு போன்ற விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆட்சிமுறை தொடர்பில் புதிய அரசாங்கம் தேர்தல்முறைகளில் மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போதைய விகிதாச்சார முறையை மாற்றுவதற்கு அது திட்டமிட்டுள்ளது,மேலும் இலங்கையின் நீதித்துறை,பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணையகத்தின் சுதந்திரங்களை மீண்டும் ஏற்படுத்தப்பபோவதாகவும் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் மாற்றமாக அமையும்.

மூன்று தசாப்தகால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஓழிப்பதற்கான சிறிசேன அரசாங்கத்தின் முயற்சிகளே கடினமாக அமையும்.

தற்போதைய முறைக்கு மக்கள் மத்தியில்  ஆதரவு இல்லாதது குறிப்பிடத்தக்கது.பல ஜனாதிபதி வேட்பாளர்கள் அதனை நீக்குவதாக உறுதியளித்துள்ளனர்.தன்னை மீண்டும் தெரிவுசெய்யப்பட்டால் அதனை நீக்குவதாக மகிந்த ராஜபக்சவும் உறுதியளித்தார்,எனினும் எந்த ஜனாதிபதியும் அதனை நீக்குவதற்காக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் அந்த ஜனாதிபதி முறையின் கீழ் உள்ள அதிகாரங்களை அனுபவிக்க முயன்றனர்.

இதற்கான அரசமைப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில்இரண்டு பெரும்பான்மை அவசியம், சிறிசேன முன்னைய அரசாங்கத்திலிருந்து விலகியவர்களை நம்பியிருப்பதாலும், இவர்கள் எத்தனை பேர் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்ற எண்ணிக்கை தெரியாததாலும் சிறிசேனவின் பாராளுமன்ற பலத்தை கணிப்பிடமுடியாதுள்ளது.

முன்னைய ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் புதிய அரசாங்கத்திற்கு தோல்வியொன்றை வழங்க விரும்பினால் சிறிசேனாவால் மூன்றில் இரண்டை பெறமுடியாமல் போகலாம்,

இலங்கையி;ன் இன அரசியலே அரசமைப்பு மாற்றத்திற்கு இன்னொரு தடையாகவுள்ளது.தற்போயை சட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தெரிவுசெய்யும் ஓரேயொரு பதவியாக ஜனாதிபதி பதவி காணப்படுகின்றது.சிங்கள மக்களின் வாக்குகள் இரு வேட்பாளர்கள் மத்தியில் பிளவுபட்டால் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக சிறுபான்மையினர் மாறுகின்றனர். இம்முறை இதுவே இடம்பெற்றது. இந்த சாதகத்தன்மையை விட்டுக்கொடுப்பதற்கு சிறுபான்மை கட்சிகள் தயங்கலாம்,

மக்களுக்கான நிவாரண திட்டங்களும் நூறு நாள் திட்டங்களில் அடங்கியுள்ளன. வறிய மக்கள்,விவசாயிகள், அரசஊழியர்கள் போன்றவர்களுக்கான ஊதிய அதிகரிப்பு, விலைவாசியை கட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கடந்த சில வருடங்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகள் வரவுசெலவு திட்டத்தை பாதிக்கலாம்,அவர்கள் பாரிய ஊழல்கள் குறித்து விசாரணைகளை மேற் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர். சிறிசேனவின் பிரச்சாரத்தின்  இது மக்களை கவரும் முக்கியமான திட்டம்.

வெளிவிவகார கொள்கை

இலங்கைக்கு அருகிலுள்ள அதன் நண்பர்கள், மேற்குலகில் உள்ளவர்கள் குறித்தும் சிறிசேனவின் கடந்த காலங்களை அடிப்படையாக வைத்து எதiiயும் தீர்மானிக்க முடியாமலுள்ளது. இலங்கையின் தலைமைத்துவத்தில் ஏற்பட்;ட மாற்றம் காரணமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் உறவுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளது.

அவரது தேர்தல் விஞ்ஞாபனம இந்தியா மற்றும் சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்துதல் குறித்து தெரிவிக்கின்றது.

அவருக்கு அருகில் உள்ளவர்கள் நேர்மையான அணிசேராக்கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் எந்த அரசாங்கமும் சீனாவை தனிமைப்படுத்த விரும்பாது,கடந்த 60 வருடங்களாக அந்த நாட்டுடனான உறவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

எனினும் புதிய அரசாங்கத்திற்கு சீனாவின் நீர்மூழ்கி விஜயம் இந்தியாவில் அச்சத்தை தோற்றுவித்துள்ளமை தெரிந்திருக்கும், அதனை சரிசெய்ய அது விரும்பும்.

சீனாவிற்கு இலங்கை எவ்வளவு தூரம் கடன்பட்டுள்ளது, துறைமுக திட்டங்களில் அந்த நாட்டிற்கு எவ்;வளவுதூரம் விட்டுக்கொடுத்துள்ளது என்பதை புதிய அரசாங்கம் தீவிரமாக ஆராயும்,

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் மனித உரிமை விவகாரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.இரு நாடுகளும் இது குறித்து பேசியுள்ளன, இலங்கையின் பாதுகாப்பிற்கும்,பொருளாதராத்திற்கும் மிகவும் அவசிமான இந்த பேச்சுவார்த்தைகளை மீள தொடர்வதற்கு சில தந்திரோபாய நடவடிக்கைகள் அவசியம்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தன்னாள் முன்னெடுக்கப்படும் கொள்கை மாற்றங்கள் உள்நாட்டில் வகுக்கப்பட்டவை என்பதை இலங்கை மக்களுக்கு உணர்த்தவேண்டும்,வாசிங்டனில் திட்டமிடப்பட்டடவை அல்ல என்பதை உணர்த்தவேண்டும், வாசிங்டன் தனது தொனியை குறைக்கவேணடும்.

பலவீனங்கள்

மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியில் உள்ளகட்சிகளே அவருக்கு மிகப்பெரும் சவாலாகஉள்ளன.அவரின் வெற்றிக்கு சிறுபான்மையினரே முக்கியமானவர்களாக காணப்பட்டனர். சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பகுதிகளிலேயே அவருக்கு  அதிகமாக வாக்குகள் கிடைத்தன.

இதேவேளை அவசரஅவசரமாக உருவாக்கப்பட்ட கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஓரு கொள்கையை தவிரவேறு கொள்கைகளில் ஒற்றுமை இல்லாதது குறிப்பிடத்தக்க விடயம்.அந்த கூட்டணியில் ராஜபக்சாவின் கூட்டணியில் இடம்பெற்றிருந்தவர்களும்,கடந்த முறை தேர்தலில் பாரிய தோல்வியை சந்தித்த ஐக்கியதேசிய கட்சியும் முக்கியமாக இடம்பெற்றுள்ளன. முன்னாள் புரட்சியாளர்களான ஜே.விபி, சிங்கள பௌத்த கட்சி மற்றும் பிரதான முஸ்லீம்கட்சி,தமிழ்கட்சி ஆகியனவம் இடம்பெற்றுள்ளன.

இந்த கட்சிகளை வைத்துகொண்டு சிறிசேனா பாராளுமன்றத்pல் பெரும்பான்மையை பெறமுயலலாம், முக்கிய எதிhகட்சியை சேர்ந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கை ஆனவர்களும் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

ஏப்பிரல் மாதத்தில் பாராளுமன்ற தேர்தலொன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது, அரசியல் அனுபவமுள்ள ராஜபக்ச இந்த கூட்டணியை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்,

இனப் பிரச்சினைக்கு தீர்வை காண்பதே இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமான விடயமாக அமையும், எனினும் இனப்பிரச்சினை குறித்து வௌ;வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள்தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலையையும், ராஜபக்ச தரப்பிலிருந்து  எதிர்ப்புகளையும் இது உருவாக்கலாம். சிங்கள பௌத்தர்கள் தனக்கே வாக்களித்தனர் என ராஜபக்ச தெரிவித்து வருகின்றார், அவர் எதிர்காலத்தில் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை மேற் கொள்வார் என்பதற்கான தெளிவான அறிகுறியிது.

முக்கிய விவகாரம்-

இன அரசியல் மைத்திரிபால சிறிசேன தீர்வு காணவேண்டியுள்ள முக்கிய பிரச்சினையை ராஜபக்சவின் செய்தி மேலும் சிக்கலானதாக்கும்,

தமிழ் மக்களுடனான – சிறுபான்மை சமூகங்களுடனான அரசாங்கத்தின் அரசியல்உறவே அந்த முக்கிய விவகாரமாகும், இது இந்தியா ,அமெரிக்கா மற்றும் மேற்குலகுடனான இலங்கையின் உறவுகளை கூட பாதிக்கலாம்.

சிறிசேன நல்லிணக்கம் குறித்தோ அல்லது தேசிய நீரோட்டத்திற்குள் சிறுபான்மை சமூகங்களை எப்படி உள்வாங்கப் போகின்றார் என்பது குறித்தோ இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை. எனினும் தேர்தலுக்கு மறுநாள் அவர்விடுத்த அறிக்கை சில முடிவுகளிற்கு வருவதற்கு உதவியாகவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக் கேற்ப சகல இனத்தவர்கள் மற்றும் மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக அவர் உறுதியளித்தார், குறிப்பிட்ட ஆணைக்குழு 2009 யுத்த முடிவிற்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டது, முழுமையாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டது,ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் போது அளவுகோலாக கருதப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் இவ்வருடத்திற்கான கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகின்றது.

ஐ.நாவின் தீர்மானங்கள் மிதமான மொழியில் காணப்பட்டாலும் அவை மேற்குலகிற்கு எதிரான கடும் எதிர்ப்புகளை இலங்கையில் தோற்றுவித்துள்ளன.

புதிய அரசாங்கம் தன்னை பலப்படுத்திக் கொள்ளும்வரை, தன்னுடைய புறச்சூழலை வெற்றிகொள்ளும்வரை,ஜெனீவா தீர்மானத்தை தவிர்ப்பது இலங்கைக்கும் அமெரிக்கா மற்றும் மேற்குலகிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண்பதற்கு உதவியாக அமையும், இந்தியாவுடனான பதட்டமான கருத்து பரிமாற்றத்தையும்  இது  தவிர்க்கும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான பரிந்துரைகள் சிலவற்றை, அமைதியான முறையில் நடைமுறைப் படுத்துவதே அமெரிக்காவும், இந்தியாவும் இதனை சாதிப்பதற்கு இலகுவான வழியாகும்.

இதேவேளை தமிழ்கட்சிகளை நோக்கி நேசக்கரங்களை நீட்டுவதும் முக்கியமானது,ராஜபக்ச அரசாங்கத்திற்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையில் பல சந்திப்புகள் இடம்பெற்றன ஆனால் முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை.தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை அரசாங்கங்கள் குறித்த தங்களது நம்பிக்கையீனம் சரியானது என கருதினர்.

இலங்கையின் நண்பர்களுடன் இணைந்து ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு எடுக்ககூடிய சிறிய ஆரம்பகட்ட நடவடிக்கை  இலங்கையிலேயே உருவாகக்கூடிய நல்லிணக்கத்திற்கான நிகழ்ச்சி நிரலொன்றிற்கு  வழிவகுக்கலாம்.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115770/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் சொல்கேட்கிற ஆக்கள் பதவிக்கு வந்திட்டினம் போல. அப்ப எனி.. போர்க்குற்றமாவது மண்ணாங்கட்டியாவது. அதெல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்   உயிரிழப்புக்கள் சகஜம்   என்று அறிக்கை ஐநாவில்   இருந்து வெளிவந்தாலும்   ஆச்சரியப்பட எதுவும்  இல்லை. இதற்காக   எல்லாம் நீதிக்காக ஏங்கும் தமிழ்மக்கள் சோர்ந்து போகக் கூடாது. வல்லாதிக்க ஆளும் சக்திகள்.. இப்படி எத்தனையே செய்துவிட்டன இந்த  உலகில். அதனை தாண்டியும் சில  இடங்களில் நீதி வெளிப்பட்டுள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.