Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாப் பேச்சு யாருக்கு வெற்றி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாப் பேச்சு யாருக்கு வெற்றி?

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சுகள் முன் நகர்வு ஏதுமின்றி பயனேது மின்றி தோல்வியில் முடிவடைந்துவிட்டன என்பதே பொது வான அபிப்பிராயம். அப்படித்தான் நடுநிலையாளர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள். பொது மக்களின் கருத்தும் அதுதான். சர்வதேச சமூகத்தின் புரிதலும் அதுவே.

ஆனால், பேச்சுகளில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பேச்சு மூலம் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் எட்டப்படாமையை ஒப் புக்கொண்டு அதற்கான குற்றச்சாட்டுகளை மறுதரப்பு மீது சுமத்து கின்றார்கள். அதேவேளை, தங்களைப் பொறுத்தவரை "ஜெனிவா 2' பேச்சுகள் தங்களுக்கு முழு வெற்றி என்று குறிப்பிடவும் அவர்கள் தவறவில்லை.

பேச்சு முடிந்து நாடு திரும்பிய அரச பேச்சுக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பேச்சுகள் அரச தரப் புக்கு வெற்றியே என்று கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.

அதேபோல, பேச்சு முடிந்து கிளிநொச்சி திரும்பிய புலிகளின் பேச்சுக் குழுத் தலைவரும், புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனும் பேச்சுகள் தங்களுக்கு வெற் றியே என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

""ஈழத் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பேரவலங்களை சர்வதேச அரங்கில் போய் நின்று பகிரங்கப்படுத்தினோம். அந் தப் பேரவலங்களை நமது தமிழ் மக்கள் மீது திணித்து, அவர் களைப் பெரும் கொடூரத்துக்குள் தள்ளியுள்ள இலங்கை அரசு, அந்த அவலங்களிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு மறுத்து, இராணுவத் தந்திரோபாய நெருக்குவாரங்களை அவர்கள் மீது இன்னும் மோசமாகத் திணிப்பதற்குக் கங்கணம் கட்டி முனைப் புடன் செயற்படுகின்றது என்பதை ஜெனிவாப் பேச்சு மேசை யைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத்தின் முன்னால் அம்பலப் படுத்தி, நிரூபித்திருக்கின்றோம். அந்த வகையில் இந்தப் பேச்சுகள் எமக்கு முழு வெற்றியே!'' என்று குறிப்பிட்டிருக்கின்றார் தமிழ்ச்செல்வன்.

அக்கருத்து முற்றிலும் சரியானதுதான்.

அமைதி முயற்சிகள் விடயத்தில், இலங்கை அரசு ஒரு தரப் பாக இருந்தாலும், ஒரு நாடு என்ற அந்தஸ்துக் காரணமாக தகுதி நிலை காரணமாக இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளேயே இருந்து வருகிறது. அதே சமயம், நாடு அல்லாத தரப்பு (Nணிண குtச்tஞு ஊச்ஞிtணிணூ) என்ற முறை யில் புலிகள் அமைப்பு மீதான அழுத்தம் அதிகம் இருந்து வருவ தையும் நாம் உணர முடிகின்றது.

ஆனால், ஜெனிவாவில் நடந்து, தோல்வியில் முடிந்த தற் போதைய பேச்சுகளை உற்றுநோக்கி அவதானித்துள்ள சர்வதேச சமூகம், இனிமேல் தரப்புகள் மீது அழுத்தம் பிரயோகிக்கும் தனது சமன்பாட்டை மாற்றிக் கொள்ளும். அரசுத் தரப்பு மீதான சர்வதேச நெருக்குவாரம் கூடும் என்று புலிகள் எதிர்பார்க்கின்றார்கள். கிளிநொச்சி திரும்பியதும் தமிழ்ச்செல்வன் அளித்த செவ்வி, புலிகளின் இந்த எதிர்பார்ப்பை நம்பிக்கையை வெளிப்படுத்தி நிற்கின் றது.

"ஜெனிவா2' பேச்சு மேசையில் நடந்தவற்றை ஆராய்பவர் கள் புலிகளின் இந்த எதிர்பார்ப்பை அர்த்தமுள்ளது நியாய மானது என்பதை ஒப்புக் கொள்வார்கள்.

"ஜெனிவா 1' பேச்சுகளின் பின்னர் களத்தில் தங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் மனிதாபிமான நெருக்கடிகளையும், வாழ்வியல் சிக்கல்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துவதிலும், அவற்றுக்குத் தீர்வு காண முயற்சிப்பதிலும், தற்போதைய "ஜெனிவா2' பேச்சுகளில் புலிகள் முனைப்பாக விடாப்பிடி யாக உறுதியாக நின்றார்கள்.

மனிதப் பேரவலங்களை உடன் விரைந்து தீர்ப்பது குறித்துப் பேசுங்கள் என்று சர்வதேச சமூகம் முன்னரே பேச்சுக்கு முன்பே அறிவித்திருந்த நிலையில், இவ்விவகாரத்தில் பேச்சு மேசை யில் புலிகளின் விடாப்பிடி நிலை சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டுக்கு மாறானதாக அமைந்திருக்கவில்லை.

அதேபோன்று, யுத்த நிறுத்த உடன்பாட்டை முழு அளவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயுங்கள் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்திய பின்னணியில், யுத்த நிறுத்த உடன்பாட் டில் குறிப்பிடப்பட்டுள்ள "ஏ9' பாதைத் திறப்பை செயற்படுத் துங்கள் என்ற புலிகளின் உறுதிப்பாடும் சர்வதேச சமூகத்தின் கருத்தியலை ஒட்டியதுதான். அடியொற்றிச் செல்வதுதான்.

அது மட்டுமல்லாமல், யுத்த நிறுத்தத்தை நூறு வீதம் நடைமுறைப்படுத்தல், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாட்டை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பாக புலி கள் வலியுறுத்தி நின்ற நிலைப்பாடு, சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பை முற்றும் முழுதாகத் திருப்தி செய்யும் அம்சம்தான்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படை விடயங்கள், பன்மைத்துவம், ஜனநாய கத்தை நிலைநிறுத்துதல் போன்ற தலைப்புகளில் பேச அரசுத் தரப்பு விரும்பியபோது அது பற்றியெல்லாம் நாமும் பேசத் தயார் என்று புலிகள் பேச்சு மேசையில் விடுத்த எதிர்பாராத அறிவிப்பு அரசுத் தரப்பை அதிர்ச்சியில் மூழ்கடித்த அதேசமயம், சர்வதேச சமூகத்தை முழுத் திருப்திக்குள்ளும் ஆழ்த்தியிருக்கும் என்பது நிச்சயம்.

அடிப்படை விடயங்கள் (இணிணூஞு ஐண்ண்தஞுண்) குறித்தும் பேச முற்பட்டால் புலிகள் பின்வாங்கி விடுவார்கள் என எதிர்பார்த்து, அந்த விடயம் குறித்துப் பேசுவதற்கு முன் ஆயத்தமின்றி வந்த அரசுத் தரப்புக்கு

""அடிப்படை விடயங்கள் பற்றிப் பேசுவதா? நாம் அதற்கும் தயார். சரி, அடிப்படை விடயங்களுக்கான உங்கள் தீர்வாக என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்? அதை முன்வையுங்கள். பேசுவோம்.'' என்று புலிகள் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் எதிர்பாராத ஒன்று.

""அடுத்து வரும் பேச்சுகளில் அதை முன்வைக்கிறோம். இப்போதுதான் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. ஆகவே, கொஞ்சம் பொறுங் கள்.'' என்று கூறிச் சமாளிக்க வேண்டிய இக்கட்டு அரசுத் தரப்புக்கு நேர்ந்தது.

இதே போலவே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது பற்றிய அரசுத் தரப்பின் உபதேசத்துக்குப் புலிகளின் பதிலடி அமைந் தது.

""ஜனநாயக வழியில் முழு அளவில் செயற்படத் தமிழர் தரப்புத் தயார். ஆறாவது அரசமைப்புத் திருத்தம் மூலம் தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை ஜனநாயக முறையிலேயே பறித்தவர்கள் சிங்கள அரசாகிய நீங்கள்தான். அந்தத் திருத் தத்தை அகற்றி, தமிழரின் ஜனநாயக உரிமையை ஜனநாயக வழியில் திரும்பி வழங்க நீங்கள் இடமளிப்பீர்களானால் தமி ழர்களும் முழு அளவில் ஜனநாயகத்தின் வழிக்குத் திரும்ப முடியும். ஜனநாயகத்தின் பெயரால் பெரும்பான்மை இனமான சிங் களம், சிறுபான்மையினமான தமிழனத்தை அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் ஜனநாயக விரோதப் போக்கை நிறுத்துவதற்கு முத லில் வழிபாருங்கள்'' என்று வாதத்தை முன்வைத்து அரச தரப்பை வாயடக்க வைத்தது புலிகள் தரப்பு.

இந்த விடயங்களை எடுத்துப் பார்க்கும்போது "ஜெனிவா 2' பேச்சு மேசை புலிகளுக்கு வெற்றி என்று தமிழ்ச்செல்வன் கூறுவது நியாயமுள்ளதாகவே அர்த்தமுள்ளதாகவே படுகிறது.ிச்சயத்திலும் நிச்சயம்!

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.