Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதைகுழிக்குள் மேல் நின்று பேச்சுக்களை மேற்கொள்ள முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதைகுழிக்குள் மேல் நின்று அமைதி மற்றும் அரசியல் பேச்சுக்களை மேற்கொள்ள முடியாது: க.வே.பாலகுமாரன்

புதைகுழிக்குள் மேல் நின்று அமைதிப் பேச்சுக்களையும் அரசியல் பேச்சுக்களையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.11.06) ஒளிபரப்பாகிய "நிலவரம்" நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:

பேச்சுவார்த்தையை 2 வகைகளாக பிரிக்கலாம்.

ஒரு பிரச்சனையின் தொடக்க கட்டத்திலேயே அது முனைப்படையும் போது அதனை அழிக்க அல்லது தனிமைப்படுத்த திட்டமிட்ட வகையிலே பேச்சுக்கள் நடக்கும். உதாரணமாக திம்பு பேச்சுவார்த்தை.

அதற்கு அப்பால் போராடும் இயக்கம் தனது திறன் சமநிலையால் மோதுகின்ற எதிரித்தரப்பை பலவீனப்படுத்தும்போது ஒரு பேச்சுவார்த்தை வரும்.

இதனை புரிந்துகொண்டுதான் சர்வதேச சமூகம் எமது பிரச்சனையில் தலையிட்டது.

ஆனால் சிங்களவர்கள் இன்றுவரை புரிந்துகொள்ளவே இல்லை.

இதில் சிக்கல் என்னவெனில், பேச்சுவார்த்தையில் இடம்பெறுகின்ற ஒருதரப்பானது எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு மாறான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது.

சிங்களவர்களைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதும் இராணுவ ரீதியாக பலவீனப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று நம்புகின்றனர். இது யதார்த்தத்தை மறுக்கின்ற மிக மோசமான மனநிலை.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு புதிய முன்னகர்வான மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர்.

ஜெனீவாவில் தமிழர் தரப்பு எதிரித்தரப்புக்கு தன்னம்பிக்கையோடு முகம் கொடுத்து விவாதம் கொடுத்திருக்கின்றது. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்திருக்கிற நேர்காணல் மகிழ்ச்சியளிக்கிறது.

ஏ௯ பாதை திறப்பைக் காரணம் காட்டி புலிகள் தங்களது சுயநன்மைக்காக புலிகள் பேச்சுக்கு வருவதாக சிங்களவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாங்களோ, அரசியல் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எமக்கு தயக்கம் இல்லை. சரி.. உங்களிடம் உள்ள தீர்வுதான் என்ன? என்று கேட்டபோது சிங்களவர்கள் திடுக்கிட்டிருக்கின்றனர்.

புதைகுழிக்குள் மேல் நின்று அமைதிப் பேச்சுக்களையும் அரசியல் பேச்சுக்களையும் மேற்கொள்ள முடியாது. சிங்கள அரசாங்கத்துடன் நாம் பேச்சுக்களை நடத்தும்போது சிறிய அளவிலாவது எமது மக்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனைச் சிங்களத் தரப்பு நிச்சயமாக செய்ய வேண்டும். ஏனெனில் சர்வதேச சமூகத்தின் கோரிக்கை அது. ஆனால் சிங்களம் மறுக்குமானால் அது சிங்களத்துக்கு அழிவுக்கான வழிதான்.

ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், பேச்சுக்கள் இழுபறிபட்டுப் போனால் சர்வதேச சமூகம் பொறுமையிழக்க வேண்டியதிருக்கும் என்று கூறியுள்ளார். அனேகமாக எங்கள் வாயில் வந்த வார்த்தை அவரிடமிருந்தும் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறோம். எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றும் போது அவரது முகத்திலே ஒரு எரிச்சலும் அதிருப்தியுமான தொனி தென்பட்டது. இத்தகையதொரு உண்மை நிலையை இவ்வளவு விரைவில் அவர் உணர்ந்து கொண்டமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களும் பலியெடுக்கப்பட்டவர்களும் நாங்கள்தான். நாங்களே பிரச்சனையின் முழு பகுதியாகவும் இருக்கிறோம். நாங்களே பிரச்சனையை முழு மூச்சாகத் தீர்ப்பதற்கும் பாடுபடுகிறோம். நாங்கள் பேச்சுக்கும் போனோம்- போருக்கும் போனோம் ஏன்? தீர்வுக்காக. ஆக தீர்வுக்காக என்னென்ன தடைகள் உள்ளனவோ அந்தத் தடைகளை நாங்கள் நீக்கிவிடுவோம்.

- சிங்கள அரசாங்கத்தினது போர் முனைப்பைத் தணித்தோம்

- சிங்கள தேசம் ஒன்றுபட வேண்டும் என்று நாம் கூறியிருந்தோம்- கொள்கை ரீதியாக. ஆனால் அதற்குள் நடக்கின்ற குத்து-வெட்டு அரசியலைப் பற்றி நாம் கதைக்கவில்லை. சிங்களத்தின் இரண்டு பெரிய கட்சிகள் இணைவு தொடர்பில் கூட எரிக் சொல்ஹெய்ம் பெரிய அளவில் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. அதை விடுவோம்.

இன்று பிரச்சனைக்கு தடையாக உள்ளது யார்? அதனை ஏன் சர்வதேச சமூகம் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறது? அந்த தடை யார் என்று அடையாளம் கண்டு அவர்கள் மீது அழுத்தம் செலுத்த என்ன தயக்கம்?

ஆக நாங்களும் பொறுமையிழக்கிறோம். முதலில் பொறுமை இழந்தது தமிழ்த் தேசிய மக்கள்தான் என்பதை எரிக் சொல்ஹெய்ம் புரிந்துகொள்ள வேண்டும்.

"சிங்கள மைண்ட்" என சிங்கள மனத்தைக் கையாள்வதுதான் இப்போது எல்லோருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

அண்மைக்காலத்தில் சிங்களவர்களுக்கு ஒரு பெரிய இராணுவ வெற்றியைக் காட்டி- புலிகளை பூனைக்கூட்டம் என்று சொல்லும் அளவுக்கு விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தினார் மகிந்தர். அந்தக் கருத்துகள் முறியடிக்கப்பட்ட நிலையில் உடனடியாக திகைத்துப் போன சிங்களமானது தனது இயல்பு நிலைக்குத் திரும்ப குறிப்பிட்ட காலம் தேவைப்படுகிறது.

ஆகையால் புதியதாக ஒரு சமாதான வேடமிட்டு அதனை சிங்கள மக்களுக்குக் காட்டுவதற்காக பெருந்தொகையான ஊடகவியலாளர்களை ஜெனீவாவுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

சிங்களமானது

- ஏதாவது ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்

அல்லது

- கடும்வழியிலான நிலைப்பாட்டுக்குச் செல்ல வேண்டும்.

அதேநேரத்தில் எந்த ஒரு நிலைப்பாட்டை சிங்களம் மேற்கொண்டாலும் அதற்கு முகம் கொடுக்க தமிழ் மக்கள் தயாராகவே உள்ளனர். ஏனெனில் தமிழ் மக்களிடத்தில்தான் எந்த ஒரு சூழலிலும் பழைய நிலைக்குத் திரும்புகின்ற ஆற்றல்- இயல்பு நிலை எம்மிடமே உள்ளது. சிங்களத் தரப்புக்கு அப்படி இல்லை. ஒரு நெருக்கடி வரும்போது அதனை மாற்றிவிட ஒரு சதித்திட்டம்தான் தேவையானதாக இருக்கிறது.

இனிவரும் பேச்சுக்களோடு ஒரு திட்டவட்டமான முடிவை நாம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்று நாம் நம்புகிறோம். அதே நேரத்தில் பேச்சுவார்த்தையை இழுபறி நிலைக்குக் கொண்டு செல்லவும் மகிந்த திட்டமிடக்கூடும். அதற்கும் முகம் கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.

பேச்சின் முடிவு எதுவாக இருந்தாலும் தமிழ் மக்களின் இறுதி இலட்சியத்தைப் பொறுத்தவரையில் உறுதியாக உள்ளனர்.

ஏ௯ பாதை மூடல் என்பது 6 இலட்சம் மக்களின் கழுத்தைத் திருகுவதானது. அதனைக் கூட சிங்களம் புரிந்துகொள்ளவில்லை. ஜயந்த தனபால, எச்.எல்.டி.சில்வா உள்ளிட்ட எங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் தமிழர்களின் வில்லன்கள்- ஜே.வி.பி.யினரால் மாலை போட்டு வரவேற்கப்படுகிற இந்த நபர்களை ஜெனீவாப் பேச்சுமேசைக்கு அழைத்துச் சென்றிருப்பதானது ஒரு சித்துவேலை. இது எல்லை கடந்ததாக உள்ளதால் பொறுமையை யார் இழந்திருக்கின்றனர்?

சர்வதேச சமூகத்தின் முழு பரிசோதனைக் களமாக தமிழீழம் மாறியிருக்கிறது. இந்த பாரிய இராஜதந்திரத்துக்கும் பலவகைப்பட்ட வல்லரசுகளுக்கும் தன்னந்தனியே முகம் கொடுக்கும் ஒரு சிறிய அணியாக நாங்கள் இருக்கிறோம்.

வடகொரியா அணு ஆயுதம் கொண்டு மிரட்டுகிறது. ஈரானும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் செறிவூட்டப்பட்ட எமது படைபலம் உள்ளிட்டவைகளை பார்க்கிறோம். எங்களுக்குத் தனித்த சிக்கல்கள் உள்ளன.

சர்வதேச சமூகத்தின் இந்த மிரட்டல் போக்கை நாங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஆகையால் நாங்கள் ஏலவே- எமது தீர்க்கமான கோரிக்கையான தமிழீழ கோரிக்கைக்கு மாற்றாக- இந்த சர்வதேச சமூகத்தினது அழுத்தத்துக்கு காப்பரணாக- ஒரு தகுந்த தர்க்க ரீதியான விவாதமாக தன்னாட்சி- சுயாட்சி அதிகார சபையை மக்கள் முன் வைத்தபோதுதான் ரணிலைத் தூக்கி எறிந்தார்கள்.

இன்று தமிழீழ மக்கள் ஒரு புதிய எண்ணங்களை- கருப்பையை- விழுமியங்களை நாடிச் செல்வதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் நாங்கள் வென்றுவிட்டதாகக் கூறவில்லை. வரலாற்றின் பாடங்களை நாம் கற்றுவருகிறோம். ஒரு போர்க்காலத்துக்கு முன்னர் போவதற்கான கடமைகள் என்ன என்பதை வரலாறு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

எமது பிரச்சனையில் கோடிக்கணக்கானவை உள்ளன. அதில் கடைசியானதுதான் ஏ௯. இந்தப் பாதையை திறக்க முன்வந்து மாற்றுத் தீர்வை சர்வதேச சமூகம் முன்வைக்க வருமாயின் நாம் அதனை விவாதிக்கவும் தயாரக இருக்கிறோம்.

அன்று மாவட்ட சபை அதிகாரத்தைக் கூட செயற்படுத்த அமெரிக்காவினாலோ- இந்தியாவினாலோ முடியவில்லை. வரலாறுகளும் பாடங்களும் உடனுக்குடன் வருகின்றபோது நாங்களும் அதனைப் படித்து உடனே தேர்வெழுத வேண்டிய நிலையில் உள்ளோம். இது கடினமானதாக இருந்தாலும் நிச்சயம் நாம் வெல்வோம். இந்த புதிய உலக ஒழுங்கிலும் பயணிப்போம். அதற்குரிய ஆற்றலை எமது தேசியத் தலைமை பெற்றிருக்கிறது என்றார் க.வே.பாலகுமாரன்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.