Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலாட்டுதே வானம்.... நாவுக் அரசனின் அனுபவ பகிர்வுகள்

Featured Replies

பெட்டிசம் பாலசிங்கம்

 

யாழ்பாணத்தில சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் ,அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய புலமை உள்ளவர். அதாலா பெட்டிசம் எழுதுறது, யாரை யாரிட்டப் போட்டுக் கொடுக்க வேண்டும் எண்டு இலங்கை ஜனநாஜக சோஷலிச குடியரசின் நீதி நிர்வாக  சட்ட திட்டங்கள் நல்லாத் தெரியும்.

 

                              பெட்டிசம் அதை ஒரு சமூக சேவைபோல தான் செய்தார் ,ஆனால் அவரின் சேவை பலருக்கு பீதியக் கிளப்புவதால்  அவரை ஊருக்குள்ள ஒருத்தருக்கும் பிடிக்காது . அயலட்டையில் யாருமே அவரோடும் ,அவரின் மனைவியோடும் கதைபதில்லை , நன்மை தீமையில் அவர்களை ஒதுக்கித்தான் வைத்து இருந்தார்கள் ,பெட்டிசம் மென்மையான மனிதர், அதிர்ந்து பேசமாட்டார் , வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போல " வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடீனேன்,," என்பதுபோல நிலம் அதிராமல் , தலையைக் குனிந்துகொண்டு போறது தெரியாமல் போவார் , வாறது தெரியாமல் வருவார் ,ஆனால் அவருக்கு ஊருக்குள்ள என்ன நடக்குது எண்டு கடுவன் பூனை போல எல்லாம் தெரியும் ,

 

                                    பெட்டிசம் முக்கியமா, ஊருக்குள்ள விதானை வசதியான யாருக்கு கூப்பன் காட் கொடுத்திருகுரார் எண்டு A.G.A என்ற உதவி அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார் , A.G.A எந்த மதகு கட்டுற கொன்ட்ராகில எத்தினை சீமெந்து பாக்கை சுருட்டினது எண்டு G.A என்ற அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார், பெட்டிசம் தனிப்படவும் புரளியைக் கிளப்புவார் ,முக்கியமா எங்களின் சந்தியில் சில்லறைக்கடை வைச்சு இருந்த சுப்பிரமணியத்தை , அவர் சில்லறைக்கடை வைச்சு இருந்ததால் சில்லறை மணியம் என்று சொல்லுவார்கள் ,அவரைத்தான் பெட்டிசம் கண்டபடி விமர்சிப்பார்

 

                             " சில்லறை மணியம் வாழைப்பழம் ஒருகிலோ 25 ரூபாய் எண்டு போட்டு , பழத்தோட தோல் ,காம்பு எல்லாத்தையும் அதுக்குள்ளேயே  நிறுக்குறான், சில்லறை மணியம் காசு உரப்பையில அள்ளிக்கட்டுற திரிக்கிஸ் விளையாட்டு இனி கனகாலத்துக்கு ஓட்டுறது கஷ்டம் , அவனுக்கு நிறுத்தல் அளவு திணைக்களத்துக்கு கொம்பிளேன் எழுதி வைக்கப் போறான் பார் ஆப்பு  ... "

 

                                        எண்டு சொல்லுவார். சுப்பிரமணியத்துக்கும்  கொம்பிளேன் எழுதி வைக்கப் போற ஆப்பு பற்றி  தெரியும்,  சில்லறை மணியம் கோவத்தில எப்பவும்

 

                        " பெட்டிசம் ,கையில் அம்புட்டான் எண்டால், அவன்ட்ட ........   ரெண்டையும் நல .....எடுத்துப் போட்டுதான் விடுவன் " எண்டு திட்டுவார்,

 

                                 ஆனால் ஒருநாளும் அவர்கள் இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதும் அந்த குருசேத்திரப் போர் நடக்கவேயில்லை , உண்மையில் அவர்கள் இருவரின் சண்டைக்கு வேற ஒரு காரணமும் இருந்தது ,அது பெட்டிசதின் பொஞ்சாதி பரமேஸ்வரி !

 

                                   முறிஞ்சு விழுகிற மாதிரி மெலிந்த தோற்றம் உள்ள திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம் என்ற அந்த பரமேஸ் , எங்கள் ஊரில் ஒரு காலத்தில் பஸ் கொம்பனி வைச்சு நடத்தின பணக்காரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவா. அரசாங்க உத்தியோகம் செய்யும் ஆண்களை கலியாணம் கட்டுவது ஒரு வித ஸமூக அந்தஸ்து என்று அடையாளம் இருந்த நேரம் கச்சேரியில் கிளார்க் ஆக இருந்த பாலசிங்கத்தை அவாவுக்கு கட்டிவைக்க,அந்தக் கிளார்க் எவளவு கரைச்சல் பிடித்த மனுஷனா ஊரில் உள்ளவர்களுக்கு எதிர் காலத்தில் மாறுவது பற்றி அந்த மனுசிக்கி தெரிய வாய்ப்பே இல்லைதான்.

 

                                      மற்றப்படி அவாவை பெட்டிசம் யாரோடும் பேச அனுமப்திபதில்லை . வீராளி அம்மன் கோவிலில் கேதாரகெளரி விரதம் நடக்கும் நேரம் , கெளரி  காப்பு போட்டுகொண்டு , குழந்தைகள் இல்லாத காரணத்தாலோ தெரியவில்லை  எப்பவுமே அபிராமி அந்தாதி கண்களில் நீர் வழிய தலையைக் குனிந்துகொண்டு " நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! " என்று மனமுருகி படிப்பதை பார்க்கலாம். மற்றப்படி வெளியே காண்பதே அரிது .

 

                                    ஆனால் கொஞ்சம் விரசமாக பெட்டிசத்தின் பொஞ்சாதி எப்பவுமே சுப்பிமணியம் கடையில வந்து நிண்டு சில்லறைச் சாமான் வேண்டி முடியவும் அவரோட சிரிச்சு சிரிச்சு பேசிக்கொண்டு நிற்பா. அவாவோட ஊருக்குள்ள ஒருவரும் கதைககாததால அல்லது வேற ஏதும் காரணமா எண்டு எனக்கு தெரியாது. முதலில் மணியமே ஒரு சுவாரசியம் இல்லதா ஒரு மனிதப்பிறவி அவரோட எப்படி ஒரு பெண் மணிக்கணகில பேசுறா எண்டு விளங்கவேயில்லை. ஆனாலும் இந்த உலகத்தில பெண்களுக்கு யாரை உண்மையாகப் பிடிக்கும் ,பிடிக்காது எண்டும் அறுதியா சொல்லவே முடியாது, சில நேரம் பேச யாருமே இல்லாததால் ஒரு நட்பாக சில்லறை மணியதுடன் பேசியும் இருக்கலாம் , இல்லையா ,  சொல்லுங்க பார்ப்பம்.

 

                பெட்டிசதின் பொஞ்சாதி விசியம் இல்லாமல் சுப்பிரமணியம் கடையில நிண்டு நோகாமல் நொங்கு தின்னுரா எண்டு கதைவெளியே  கசிஞ்சு , அது மலிஞ்சு சந்தைக்கும் வர ,ஊருக்குள்ள எப்படியோ கதைவெளி வந்திட்டுது , இவளதுகும் மணியம் ஒரு பழைய பஞ்சாங்கம், பாக்கிறதுக்கு மண்ணெண்ணெய் பரல் போல வாட்ட சாட்டமான உடம்புள்ள அவர் ஒரு நாளுக்கு ஒரு சுருட்டுதான் பத்துவார், சுருட்டை வாயில வைச்சு கொண்டு இருப்பார் பத்தவே மாட்டார் , ஆனால் பத்தினா, அது பத்தி முடியும்வரை அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார், அவர் கடையில் சேட்டுப் போட்டாமல் , கட்டி இருக்கிற சங்கு மார்க் சாரத்தை பொம்பிளையல் குளிக்கும்போது பாவாடையை உயர்த்திக் குறுக்குக்  கட்டு கட்டுவது போலக் கட்டிக்கொண்டு, அவர் வைச்சு இருக்கிற ரேடியோவில் எப்பவுமே கண்டசாலா ,திருச்சி லோகநாதன் பாடல்கள் பாடும் இலங்கை வானொலி தமிழ் சேவை இரண்டில் பழையபாடல் நிகழ்ச்சிதான் பாட விட்டுக்கொண்டு இருப்பார்.

 

                       ஒருநாள் அவர் " என்னட்டை ஒரு கேசட் இருக்கு , பரமேஸ் கொண்டு வந்து தந்தாள் ,உங்கட வீட்டு கேசட் ப்ளேயர்ஐக் கொண்டு வந்து  அது என்ன பாட்டு எண்டு போட்டுக் காட்டுறியா?"   எண்டு கேட்டார் ,

 

                        நான் பரமேஸ் யார் எண்டு கேட்கவில்லை, நான்  அவரிடம் இருந்து அந்த கெசட்டை  வேண்டிக்கொண்டு வீட்டு கேசட் ப்ளேயரில்  போட அதில முதல் பாடல்

 

                       " நேற்று ராத்திரி யம்மா ,,தூக்கம் போனதே யம்மா , ஆத்தாடி நான்  அல்லாடுறேன்....எங்கே சுகம் ..,,"

 

                எண்டு கேசட் ப்ளேயர் படத்தொடங்க,  அம்மா வந்து  

 

                          "  நிப்பாட்டடா இந்தக் கண்டறியாத பாட்டை,  இந்தப் பாட்டுதானா  இப்ப உனக்கு கேக்குது,  இந்தப் பாட்டுக்  கேட்கிற வயசா இப்ப உனக்கு,  எங்க இருந்துதான் இந்த சீ எண்டு போற வளருற பிள்ளைகளைக் சீரளிக்கிற பாட்டுகளை எடுத்துக் கொண்டு வாரியோ அம்மாளாச்சி ஆனா இந்தப் பொடியிண்ட போக்கே ஒண்டும் விளங்குதில்லை "

 

                                   என்று  சாயங்காலப் பூசையை ஆரம்பிக்க, நான் பேசாமல் கேசட்டையும் , எங்களின் கேசட் ப்ளேயரையும்  கொண்டு போய் அவரோட கடையில் வைச்சிட்டு  

 

                            " நல்ல நல்ல பாடல் எல்லாம் இதில இருக்கு மணி அண்ணே , நல்லா ரசிசுக் கேளுங்கோ மணியண்ணை ,கேட்டு முடிய பிறகு வாறன் மணியண்ணே" எண்டு போட்டு .நான் பேசாமல் வீட்டை வந்திட்டன்.

 

                                  சுப்பிரமணியம் தனியாத்தான் அந்தக் கடையை நடத்திக்கொண்டு இருந்தார் , அவருக்கு மனிவி பிள்ளைகள் இல்லை எண்டுதான் ஊருக்குள்ள அறிய்பட்டாலும், அவர் கடைக்கு பின்னாலா ஒரு பத்தி இறக்கி சின்ன இருட்டானா ரூமில ,நிறைய யானைச் சோடாப் பெட்டிகளால் அந்த ரூம் வாசலை மறைச்சு ,அது அலாவுதீன் குகை போல இருக்க ,நான் ஒருநாள் அதுக்குள்ளே என்ன இருக்கு எண்டு சந்தேகமா எட்டிப்பார்த்தன் ,மணியம் என்னைக் கண்ட்டுடு  ,

 

                       " பிறன் மனை நோக்குதல் பஞ்சமா பாதகம் " எண்டு சந்தேகமாவே சொன்னார் ,

 

                           நான் அவருக்கு உதவி செய்வேன் ,சனிகிழமை முலவை சந்திக்குப் போய் அரிக்கன்  கிடாய்இறைச்சி வேண்டிக் கொடுப்பேன் ,அவர் அதை முகர்ந்து பார்த்து ,கிடாய் மொச்சை மனம் வந்ததான் சமைப்பார் ,இல்லாட்டி அவர் வளர்கிற நாயிட்க்கு உடனேயே அதை போடுவார் ,

 

                                 மணியம் ஒழுங்கா , ஸ்டயிலா இல்லாட்டியும் அவர் ஒரு நாய் வளர்த்தார் ,அந்த நாய்க்கு மொடெர்னா " டிம்பிள் " எண்டு பெயர் வைச்சு இருந்தார் ,அதுக்கு அவர் கடையில விக்குற ஆணைக் கோட்டை உதய சூரியன் நல்லெண்ணெய் போட்டு போலிஷ் பண்ணுவார் ,டிம்பிள் நல்லென்னைப் போத்தல் போல மினுக்குமினுக்கு எண்டு இருக்கும் ,டிம்பிள் காப்டிய போலதான் அதுவும் பவுசு விட்டுக்கொண்டு அவரோட காலுக்கை திரியும்.

 

                               மணியம் வருசத்தில ஒருநாளும் கடை மூடவே மாட்டார் , இயக்கம்கள் ஹர்த்தால் எண்டு மூட சொன்னால் ,"சுடுறது எண்டா நெத்தியில ,அல்லது காதுக்க சுடுன்கோடா ,கடை மட்டும் மூடமாட்டன் " எண்டு ஒற்றைக் கதவில திறந்து வைத்துக் கொண்டு இருப்பார் ,

 

                                  ஒரே ஒருநாள் அவரின் கடை காலையிலேயே மூடி ,அதுவும் முன்னுக்கு வெள்ளைக்கொடி போட்டிருர்க்க ,ஊருக்குள்ள அது நெருப்புப்போல பரவ , என்னோட அம்மா " என்னடா நடந்தது மணியத்துக்கு , இந்தநேரம் பார்த்து குஞ்சரத்தையும் சிலமன் காணவில்லையே "எண்டு அங்கலாய்க்க , கீரை விக்குற குஞ்சரம்தான் என்னோட அம்மாவுக்கு வீக்கி லீக்ஸ் போல ப்ரேகிங் நியூஸ் கொண்டு வாறவா ,மத்தியானம் சொல்லி வைச்ச மாதிரி குஞ்சரம்

 

                                 " எடி பிள்ளை விசியம் தெரியுமே , பெட்டிசதிண்ட மனுசி எல்லோ மோசம் போயிட்டுதாம் ...." எண்டு கொண்டு வர...

 

                                         பெட்டிசம் மனுசி எப்படி செத்த எண்டு யாருக்கும் காலையில் தெரியவில்லை ,ஊருக்குள்ள யாரும் முடிஞ்சா காலையில மேளம் கேட்கும் , இந்த நிகழ்வில் அப்படி ஒண்டுமே கேட்கவில்லை , அதைவிட பெட்டிசம் வீட்டில சாவு விழுந்தா அது கொஞ்சம் அமுன்கிதான் வெளியவரும், பெட்டிசம் எங்களின் ஊரை சேர்ந்தவர் ,அவரின் மனுசி பிறத்தி, கொஞ்சநேரத்தில பெட்டிசம் மனுசியின் சொந்தகாரர் எங்களின் வீதிவழியா போறதை பார்த்திட்டு

 

                       " நான் போய் என்ன நடக்குது எண்டு பார்க்கவே"

 

                        எண்டு அம்மவிடம் கேட்டேன் ,அம்மா பொதுவா செத்தவீடுகளுக்கு போகவிடமாட்டா ,ஆனாலும் பெட்டிசம் வீடுக்கு யாரும் போகபோறதில்லை,அதால என்னை அனுப்பி விடுப்பு அறிய விரும்பியதால் போகசொன்னா .

 

                                                         நான் பதுங்கிப் பதுங்கிப் போனேன் ,தோரணமும் தொங்க இல்லை ,வாசலில் சாம்பல் வாழையும் இல்லை, பெட்டிசம் தலையில துவாயைப் போட்டுக்கொண்டு ஒரு மூலையில் இருக்க, அவரோட மனுசியை ஒரு வாங்கில கிடத்தி , மூக்கில பஞ்சு அடைஞ்சு, தலைமாட்டில ஒரு குத்து விளக்கு கொளுத்தி வைச்சு,யாரோ அவர்களின் உறவினர் பெண் ஒரு பனை விசிறியால இலையான்களைக் விசிறிக்  கலைக்க, வேறு சில வயதான பெண்கள் 

 

                             "தாமரகம் பொன் உருக்கி , தங்கமென வளர்த்ந்த சீமாட்டிய ,,காலான் தேதி வைச்சு  , ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் மாலும் ஓலமிட்டலறும்...."   

 

                          எண்டு அறுந்துபோன ஈனக் குரலில் ஒப்பாரி வைக்க, என்னைக் கண்டு போட்டு  பெட்டிசம் எழும்பி வந்து, 

 

                          " உன்ற கொம்மாவுக்கும், ஊரில உள்ள பெண்டுகளுக்கும் என்ன கோதாரியே, நான் தான் எல்லாருக்கும் அள்ளி வைக்கிறன் எண்டு ஒதுக்கினாலும், எண்ட பொஞ்சாதி ஒருத்தருக்கும் ஒரு வஞ்சகமும் செய்யாதா சீவன், அவள் செத்ததுக்கும் வராதா சனங்களும் ஒரு சனம்களே " எண்டு சொன்னார்.

 

                                     நான் மணியத்தை அதுக்குள்ள தேட , அந்தாள் சிலமனே அதுக்குள்ள இல்லை ,நான் அதோட வீட்டை வந்து அம்மாவுக்கு பெட்டிசம் சொன்னதை சொல்லவில்லை , அங்கே என்ன நடக்குது எண்டு மட்டும் சொன்னேன், அம்மா

 

                              " மனியதிண்ட சிலமன் ஏதும் அறிஞ்சியா "

 

                                  எண்டு சந்தேகமா கேட்டா ,  " மணியம் அங்கேயும் இல்லை " எண்டு சொன்னேன் .

 

                                       ரெண்டாம் நாள் காலையிலயும் மணியம்கடை மூடி இருக்க ,அதுவும் முன்னுக்கு வெள்ளைக்கொடி போட்டு,ரெண்டு மூன்று தோரணமும் தொங்க விட்டிருக்க, அண்டைக்கு பின்னேரம் போல பெட்டிசம் வீட்டில இருந்து பிரேதம் எடுத்தார்கள். ஊர்சனம் வேலிகையும் ,மதிலுக்கயும் பதுங்கி இருந்து பார்க்க ,சவ ஊர்வலத்தில பறை மேளம் , அலங்கார தண்டிகை , பட்டினத்தார் பாட்டுக்காரர் ஒருவரும் இல்லை , சும்மா ஒரு பிரேத ஹேர்ஸ் வண்டிய சுற்றி ,அவர்களின் உறவினர் கொஞ்சப்பேர் வர ,

 

                                            எல்லாத்துக்கும் முன்னால , வெள்ளை வேட்டி கட்டி , நசினல் சேட்டு போட்டு , உத்தரியம் போல ஒரு சால்வை சுற்றிக்கொண்டு சுப்பிரமணியம் சோழப்பொரி எறிஞ்சு கொண்டு  மாணிக்கவாசகர்   பாடின செத்திலாப் பத்து  என்ற தொகுதியில் உள்ள  ,"  புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந்துள்ளக் கருத்தினை இழந்தேன் போனார்.....  "  என்ற பாடலைப் பாடிக்கொண்டு போனார் .... 

 

 

நாவுக் அரசன்

ஒஸ்லோ.

 

https://www.facebook.com/notes/10205334545064332/

Edited by ராஜன் விஷ்வா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பித்துக்குளி காட்டின புத்தகம்..

 

குளத்தடிக்  குழப்படிக் குருப்பில் எங்கள் வயசிலேயே இருந்த, பூனை மயிர் போல மீசை அரும்பிக்கொண்டு இருந்த காலத்திலை ,  ஆனால் எங்கள் எல்லாரிலும் பார்க்க பாலியல் இனப்பெருக்க விஞ்ஞான ஆராச்சி விசியன்களில் முன்னோடியா பழுத்த பழங்களையும் மிஞ்சி வெம்பிப் பழுத்துப் போய் இருந்தவன் பித்துக்குளி.

 

                          அவன்தான் முதல் முதல் ஒரு நல்ல நாள் எங்களுக்கு குளத்தங் கரையில் தேய்வேந்திரம் பண்டி வளர்கிற காணியின் மூலையில் இருந்த புளியமரத்துக்கு கீழே இருட்டின நேரம் பளபளப்பான தாள்களில் வெள்ளைகார காராம்பசு போன்ற பெண்கள் உடுப்பு எல்லாத்தயும் கழட்டி எறிஞ்சு போட்டு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு  எல்லாத்தியும் சுழட்டி எறிஞ்சு போட்டு வஞ்சகம் இல்லாமல் தாராளமாக தங்களின் அங்கங்களைக் காட்டிக்கொண்டு வெவ்வேறு கோணங்களில்,காண்டீப வில்லுப் போல வளைந்து  நிக்கும் படங்கள் உள்ள மேலைநாட்டு சஞ்சிகையை காட்டி எங்களின் அறிவுக் கண்ணைத் திறந்த குளத்தடி வாத்தியாயனர்.

 

                                                           இனி நான் சொல்லபோறது கோவிலில் மூன்றுகால சமய அனுஷ்டானப்  பிரசங்கம் வைக்கும் அப்பனுக்குத் தப்பி பிறந்த பித்துக்குளி எங்களுக்கு காட்டிய அந்த செக்ஸ் சஞ்சிகையின் பலனை "காறுதடி கம்பரிசி கசக்கிறது கானுத்தண்ணி இனிக்குதடி நம்ம சீமை இனிப்பயணம் தப்பாது " என்று நாங்கள் அதை அனுபவித்து ஜென்ம சாபல்யம் அடைந்த சம்பவங்கள் .

 

                                  அதுக்கு முதல் பிள்ளையாருக்கு பிடிச்சு வைச்ச கொழுக்கட்டை போல கொழுக்கு மொழுக்கு எண்டு குண்டாக  இருந்த , பித்துக்குளியின் கரக்டர் ,அவனின் " நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு " போன்ற அவனது அலட்சியத் துணிவு பற்றி சொன்னால்தான் உங்களுக்குக் கதை கைலாசம் போற மாதிரி வடிவா விளங்கும். 

 

                                             பித்துக்குளிக்கு பள்ளிக்கூட வரவு டாப்பில் இருந்த உண்மையான பெயர் திருநீலகண்டன். ஆனால் நாங்க எல்லாரும் அவனைப்  பித்துக்குளி என்றுதான் சொல்லுவோம், அதுக்கு காரணம் அவனோட அப்பா ஒரு பிரசங்கி.எங்கள் ஊர்க் கோவில்களில் புராணபடனம் சொல்லுவார், கந்தபுராண விளக்க உரை பிரசங்கம் போல வைப்பார், வள்ளி திருமணம் நாடகத்தை வில்லுப்பாட்டு போல மேடையில் நடத்துவார். அருணாசலக் கவிராயரின் ராமநாம கீர்த்தனைகளை ராகம் தாளம் பல்லவியுடன் நாதப் பிரம்மம் போலப் பாடுவார் .

 

                                  அதை விட அவர் எப்பவும் சைவ சமய தேவாரங்களை ஓதுவார் போல பண்ணோடு பாடுவார், அவர் அப்படி கோவில்களில் பாடும் போது தலையில் ஒரு மஞ்சள்துணி கட்டிக்கொண்டு,நிறைய உருத்திராட்ச மாலை கொழுவிக்கொண்டு,கறுப்புக் கண்ணாட்டி போட்டுக்கொண்டு பார்க்க இந்தியாவில் இருக்கும் ஆன்மிகப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் போல குரலில் தம் பிடிச்சு பாடிக்கொண்டு இருப்பார். அதனால அவரோட இரண்டாவது மகன் திருநீலகண்டனுக்கு நாங்க பித்துக்குளி என்று பெயரை வைச்சோம்.

 

                                              குளத்தடி வயல்க் கிரவுண்டில் கிரிகெட் விளையாடி முடிய இருட்டின மம்மல் நேரம் தான் நாங்கள் புளிய மரத்துக்குக் கீழே வட்டமா குந்தி இருந்து கதைப்பம், அதிகம் ஆரம்பகால வீர தீர இயக்க அரசியல், இளையராஜாவின் சினிமாப் பாடல்கள், ஊருக்குள்ள யாரை யார் சைட் அடிக்கிறது, யாரை யார் வைச்சு இருக்கிறது போன்ற எதிர்கால வாழ்க்கைக்கு முக்கியமான விசியங்கள் கதைப்போம், பள்ளிக்கூடம், படிப்பு, எதிர்கால வேலை சாத்தியங்கள், முன்னேறும் கனவுகள் இதுகள்  பற்றி மட்டும் கதைக்கவே மாட்டோம்.

 

                              ஆனால் எப்பவுமே எல்லாத்தயும் இழுத்து மூடிக்கொண்டு பெண்களை நிமிர்ந்து பார்த்தால் பொறுக்கி என்று நினைக்கும் சூழ்நிலையில் உள்ள ஊரில வாழ்ந்ததால்  பெண்களின் அங்கங்கள் எப்படி இருக்கும் என்று குத்து மதிப்பா குருடன் யானையைத் தடவிப் பார்த்த மாதிரி ஒவ்வொருத்தனும் தாறு மாறா ஒவ்வொரு விதமான கருத்துக்கள் சொல்லிக்கொண்டு ஆக்கமாட்டாத பெண்டாட்டிக்கு  அடுப்புக் கட்டி பத்தாம் போல அதை விவாதித்திக் கொண்டு இருப்போம்,

 

                                 காரணம் சயன்ஸ் பாடப் புத்தகத்தில் மட்டுமே இனபெருக்க பாடத்தில் பெண்களின் அங்கங்கள் குறுக்கு வாட்டில் வரைந்து அதுக்கு அம்புக்குறி போட்டு கருப்பை, கருப்பைச் சுவர், சூலகம் ,சூல்வித்துப்பை, பலோப்பியன் வழித் தடம், என்று பிராக்டிகலா அஞ்சு சதத்துக்கு பிரயோசனம் இல்லாத தகவல்கள்  அதன் பெயர்கள் எல்லாம் குறித்து  அநோட்டோமி என்ற அறிவியல் அளவில் இருக்கும், அதை வைச்சு பாடமாக்கி சப்பித் துப்பி சயன்சில் நல்ல மார்க்ஸ் வேண்டும் என்றால் எடுக்கலாம் வேற வாழ்க்கைக்கு சமாந்தரமா அதன் தகவல்களை வைச்சு ஒண்டுமே செய்ய முடியாது.  அவளவுதான் எங்களின் கொடுப்பினை அந்த நேரம் வேற என்னத்தை சொல்லுறது நீங்களே சொல்லுங்க பார்ப்பம்.

 

                                             ஒருநாள் ஆர்வமாக  பெண்களின் அநோட்டோமி அறிவியலை ஒரு மண்ணும் விளங்காமல் அலசி ஆராந்து கொண்டு இருந்த நேரம், பித்துக்குளியும் கேட்டுக்கொண்டு இருந்தான். ஆனால் அவன் ஒரு கருத்தும் சொல்லவில்லை, " நீங்கள் எல்லாம் மாங்கா மடையார் " என்பது போல எங்களைப் பார்த்து சிரிச்சுக்கொண்டு இருந்தான். அந்த உரையாடல் நடுவில் ஜேசுதாசன் எழும்பிப் போயிட்டான், அவன் கிறிஸ்தவ பாதருக்கு பின் நாட்களில் படிக்கப் போறதா சொல்லிக்கொண்டு இருந்ததால், அவனுக்கு இந்தக் கதைகள்

 

                         " மாம்சதுக்காக அலையும் சத்துருக்களுடன் ஜீவிதம்  செய்யும் விஷப் பரீட்சை " எண்டு சொல்லிப்போட்டுதான் எப்பவும்

                       

                              " நீங்கள் எங்கயடா உருப்படப் போறிங்கள் மூதேசிகள் " என்று திட்டிப்போட்டுதான் போவான், 

 

                      பித்துக்குளி அவனுக்கு                       " போடா போய் அல்லேலுயா  அல்லேலுயா என்று கத்திக்கொண்டு , பரிசுத்த ஆவிக்கும் பங்குத்தந்தைக்கு முன்னுக்கும் பின்னுக்கும் சாம்பிராணி போட்டா "

 

                             என்று பேசுவான். அன்றைக்கும் ஜேசுதாசன் எழுப்பிப் போக பித்துக்குளி முதல் முதல் இந்த சப்ஜெக்டில் அவனோட கருத்தை தெளிவா சொன்னான்,எங்களுக்கு அது ஆச்சரியமா இருந்தது.

 

                        " பித்துக்குளி நீ சொல்லுறதுக்கு உறுதிப்படுத்த என்ன ஆதாரம் இருக்கு "

 

                      என்று குறுக்கு விசாரணை செய்யிற வக்கீல் போலக் கேட்டான் பின் நாட்களில் " ......  " என்ற இயக்கத்துக்கு போய்  சிலிண்டருக்கு சக்கை அடையும் போது டிக்னேடர் இறுக்கி அந்த இடத்திலையே பீஸ் பீசாக வெடிச்சு சிதறிப்போன நொள்ளைக் கண்ணன்.

 

                    அதுக்குப் பித்துக்குளி குழம்பாமல்,

 

                                " என்னட்ட ஒரு வெளிநாட்டு மகஸின் இருக்கு ,வீட்டில மோட்டு வளையில் ஓட்டை போட்டு சீலிங் சீட்டுக்க மடிச்சு ஒளிச்சு வைச்சு இருக்கிறேன், வேண்டும் என்றால் நாளைக்கே கொண்டு வந்து காட்டுறேன் , சும்மா வளுக்கு வளுக்கு எண்டு பேபரில் படம் எல்லாம் நேர்ல பார்க்கிற மாதிரி ஒவ்வொருத்தியும் பித்தளைக் குடம் போல மினுக்கிக் கொண்டு......."  ,,

 

                              என்று இதுக்கு மேல இங்கே எழுத முடியாத விசியங்களை  அவனே சொந்தமா அணு அணுவா ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரை எழுதின மாதிரி சொன்னான். அதைக் கேட்க எங்கட மண்டை வீராளி அம்மன் கோவில் மாவிளக்கு சொக்கப் பானை போல பத்தி எரியத் தொடங்க, ஜெகதீஸ் வெக்கத்தை விட்டு

 

                      " பித்துக்குளி அப்ப  நீ நாளைக்கு அதைக் கொண்டு வந்து எங்களுக்கும் கட்டடா, "

 

                           என்று கெஞ்சி பித்துக்குளிக்கு  கப்பூரம் கொழுத்திக் காலில விழுந்து கும்பிடாத குறையாகக் கேட்டான்.. கொஞ்சநேரம் பித்துக்குளி ஜோசித்துப் போட்டு 

 

                            " சரி நாளைக்கு கொண்டு வாறன் ஆனால் முதல் எல்லாரும் என்னட்டை அந்தப் புத்தகம் இருக்கு எண்டு யாருக்கும் சொல்ல மாட்டம் என்று தலையில அடிச்சு சத்தியம் செய்து தர வேண்டும் ,ஏதும் பிசகு வந்தால் நீங்கள் தான் பொறுப்பு, " 

 

                               என்றான்,நாங்க இருந்த விசருக்கு அவனுக்கு தலை கீழா நிண்டு என்றாலும் " உமாசுதம் சோக விநாஸ காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் " என்று சத்தியம் செய்து கொடுக்கும் ஆர்வக்கோளாறில இருந்ததால் ,சத்தியம்செய்து கொடுத்தோம். பித்துக்குளி அடுத்தநாள் கிரிகெட் விளையாட வரமாட்டான் என்றும், பின்னேரம் அப்பாவோடு திருஞானசம்பந்தர் குருபூசைக்கு அறுவத்தி மூன்று நாயன்மார் சமாதி மடத்தில பஜனை பாடிப்போட்டு அது முடிய , இருட்டின நேரம் தேய்வேந்திரம் பண்டி வளர்கிற காணியின் மூலையில் இருந்த புளியமரத்துக்கு கீழே வைச்சுக் காட்டுறதா சொல்ல, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை தலையே போனாலும் பரவாய் இல்லை அதை நடத்தியே காட்டுறது எண்டு நாங்கள் பிளான் போட்டம்..

 

                                                     பித்துக்குளிக்கு அந்தப் புத்தகம் புதையல் போல எங்கே இருந்து கிடைத்தது என்று அவன் போனபிறகு நாங்கள் கிடந்தது மண்டையப் போட்டு கசக்கினாலும், அவனோட ஒரு மாமா வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கிறார் என்று ஒரு முறை சொல்லி முதல் முதல் அவர் வேண்டிக் கொடுத்த சோலாப் பூ ர் செருப்பு போட்டுக்கொண்டு வந்து காட்டி இருக்கிறான்,அதால அவரிடம் இருந்து அதை அவர் அசந்து மறந்த நேரம்  அவன் சுட்டு இருக்கலாம்,அதால கொஞ்சம் உறுதிப்படுத்த முடிந்தது, ஆனாலும்  பித்துக்குளி அவனா அது எங்க இருந்து கிடைத்தது என்ற விபரத்தை வீராளி அம்மன் மேல சத்தியமா சொல்லமாட்டேன் என்று சொல்லிப்போட்டான் . 

 

                                     அடுத்த நாள் எப்படியோ இந்தக் கதை குளத்தடிக்  குழப்படிக் குருப்பில் எங்களோடு ஒவ்வொரு நாளும் கிரிகெட் விளையாட வராத சிலருக்கும் கசிந்திட்டுது. அவங்கள் எல்லாரும் அன்றைக்கு எங்களுக்கு முதலே வயல் வெளிக் கிரவுண்டில வந்து நிண்டு, ஆளை ஆள் பார்த்து பம்மிக்கொண்டு, " பித்துக்குளி ஏன் இன்னும் வரவில்லை "  என்று ரகசியமா விசாரித்துக்கொண்டு ,  

 

                            " நாங்களும் இன்றைக்கு கிரிகெட் விளையாடப் போறம், பெட்டிங்   போலிங்   தாராட்டியும் பரவாயில்லை ,,பீல்டிங் மட்டும்  தந்தாலும் பரவாயில்லை,,உங்களோட ஒவ்வொரு நாளும் விளையாட வராததுக்கு இப்ப நினைச்சாக் கவலையா இருக்கு  "

 

                                 எண்டு எங்களுக்கு ரெண்டு காதிலையும்  செவ்வரத்தம் பூ வைச்சு  அமளிதுமளியா நிக்க. உண்மையில் எங்கள் எல்லாருக்குமே கிரிகெட் விளையாடும் உற்சாகம் இல்லை, கிரிகெட் விளையாடி என்னத்தைக் கிழிகிறது என்ற மனநிலையில் எப்படா இருட்டும் என்றுதான் ஜோசிதுக்கொண்டு நேரத்தோட விளையாட்டை நிற்பாட்டிப் போட்டு,வெள்ளைச் சொண்டன் வீட்டு பனை மட்டை வரிச்சு வேலிக்கால இறங்கி விளாங்காய் பிடிங்கிக் கொண்டு நல்ல பிள்ளைகள் போல தேய்வேந்திரம் பண்டி வளர்கிற காணியின் மூலையில் இருந்த புளியமரத்துக்கு கீழேபோய் குந்தி இருந்து கொண்டு  பித்துக்குளி எப்பவும் வாற மசுக்குட்டி மாமியின் வீட்டுக்கு பின்னால உடையார் வளவுக்கு அருகில் உள்ள கண்ணாப் பத்தைகள் மறைக்கும் குளத்து  வாய்க்கால் மணல் தள்ளிய மண் பாதையைப்  பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

                              அன்றைக்கு என்று  சூரியன் மேற்கில் பண்ணை வளவு பனை மரங்களுக்கு மேலாக மறைந்து இருட்டு படுகுதே இல்லை.அதுக்குள்ள அவனவன் பாலுமகேந்திரா படம் போல அந்த புத்தகம் எப்படி இருக்கும் என்று சொந்தக் கற்பனையில் திரைகதை எழுதிப் படம் ஓட்டிக்கொண்டு இருக்க, பித்துக்குளி வாற சிலமன் இல்லை, சிலருக்கு பொறுமை இழந்து " கண்டறியாத பஜனை பாடிக்கொண்டு இருக்கிறானே பித்துக்குளி " என்று வெறுப்பாக சொல்ல ,எங்களுக்கு அப்பத்தான் கொஞ்சம் சந்தேகம் வந்தது,  

 

                         " பித்துக்குளி சும்மா அனுமான் வெடி போட்டு புத்தகம் இருக்கு என்று எங்களுக்கு சொல்லிப் போட்டு புலுடா விட்டுப் போட்டு போட்டான் போல இருக்கடா ....," 

 

                                  என்று பின்நாளில் ஒரு விளக்கீட்டு  நாள் எங்கள் வயல்க் கிரவுண்ட் அருகில் இருந்த குளத்தில் நீந்தப் போய் சரணவாதம் வந்து கால் இழுத்து குளத்தில் செத்து மிதந்த ஜெகதீஸ் என்ற ஜெகன் சொல்ல , அப்பத்தான் ஜேசுதாசனுக்கு இன்றைக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போறதே தெரிய வந்தது,

 

                                      " பித்துக்குளி என்னடா காட்டப்போறன் , அவன் கொப்பனோட சேர்ந்து  படிக்கிறது தேவாரம், படிச்சுப் போட்டு  இடிக்கிறது சிவன் கோவில் , சரி அதென்ன புத்தகம் அதயாவது சொல்லுங்கடா  " என்று ஜேசு கேட்டான்,

 

                      அதுக்கு நொள்ளைக் கண்ணன்,

 

                              "பாம்பு மரத்தில இருந்து  இறங்கி வாயில அப்பிள் பழத்தைக் கவ்விக் கொண்டு வந்த கதையில வாற  ஆதாமும் ஏவாளும் இருந்த மாதிரியே மனிதர்கள் மறைக்க ஒண்டும் இல்லாத காலப் படம் உள்ள புத்தகம் " என்று சொன்னான்,

 

                             ஜேசுதாசனுக்கு கோபம் வந்திட்டுது சடார் என்று எழும்பினான், நோள்ளைக்கண்ணனை அடிக்கப் போனான் ,

 

                     " அந்த அப்பிளைத் திண்டதாலதான் மனிசருக்கு அறிவு வந்து  இப்படிக் கிடந்தது சீரளியுரிங்கடா மூதேசிகளே ,  நொள்ளைக் கண்ணா,  நீ என்ன எண்டாலும் கதை பரிசுத்த பைபிளை கேவலப்படுத்தி என்னோட மட்டும் கதைக்காதை,வீண் பிரசினை வரும்  " 

 

                               என்று சண்டை பிடிச்சாங்கள்.மற்ற எல்லாருக்கும் அந்த சண்டை அந்த நேரம் முக்கியமே இல்லாத மாதிரி பித்துக்குளி எப்பவும் வாற கண்ணாப் பத்தைப் பாதையை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

                                       " இவங்களோட உத்தரிக்கிரது ஓடிப்போன பெஞ்சாதியைக் கூ ட்டிக்கொண்டு வந்து வைச்சுக் குடும்பம் நடத்துறது போல இருக்கேடா " 

 

                        என்று நொள்ளை கண்ணனையும் ,ஜேசுதாசனையும் அடிக்கப் போனான் ஜெகதீஸ். 

 

                                            மம்மல் இருட்டி, ஆட்காட்டி குருவி குளத்துக் கரையில் ஆரவாரப் பட பித்துக்குளி எப்பவும் வாற மசுக்குட்டி மாமியின் வீட்டுக்கு பின்னால உள்ள உடையார் வளவுக்கால வராமல் தெய்வேந்திரம் பண்டி வளர்கிற மாந்தோப்புக் காணிக்கால விழுந்து எழும்பி வந்தான் .ரெண்டு கையையும் விசிக்கிக் கொண்டு வர சந்தேகமா இருந்தது. அனால்  பித்துக்குளி கிட்ட வர அவனோட இடுப்பு பொம்மிக் கொண்டு இருக்க அவன் கொடுத்த வாக்கை தவறவில்லை போலதான் இருந்தது ,பித்துக்குளி வந்துவுடன

 

                            " என்னடா இண்டைக்கு தேர்த்திருவிழா மண்டகப்படிக்கு கும்பலா வந்து விழுகிற மாதிரி எல்லாரும் வந்து நிக்குரான்களே  " 

 

                                        என்று ஆச்சரியமாக் கேட்டான். கொஞ்ச நேரம் அங்கால இங்கால் பார்த்தான் , முக்கியமா தெய்வேந்திரம் மாந்தோப்பு  கிணத்துக் கட்டில வெறியப் போட்டு படுத்து இருக்கிறாரா  என்று பார்த்தான்,பிறகு வெள்ளைச் சொண்டன் வீட்டு வேலிக்க அவரோட நாய் நிக்குதா என்று பார்த்தான், நாய்  நிண்டால் வெள்ளைசொண்டன் கள்ள விளாங்காய் பிடுங்க வாறவங்களைப் பிடிக்க பதுங்கி இருப்பார், அவர் நாய் கிடந்தது கத்தும் ,வெள்ளைச் சொண்டன் கோவத்தில 

 

                                " அடி சனியனை பிளக்கி,  ஏன் கிடந்தது கத்துறாய், விளாங்காய் களவு போறதுக்கு கையும் மெய்யுமா இவங்களைப் பிடிக்க பதுங்கி இருக்கிறன்,சனியன் கிடந்தது ஊளை இடுகுதே..." என்று ஒளிச்சு இருந்து அவர் சொல்லுறதும் எங்களுக்கு கேட்கும்.

 

                         பித்துக்குளி குளத்தடியில்,வயல் வெளியில்,கிரவுண்டில் வெளி ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு , ஒரு மாட்டுத் தாள் பேபரில் சுற்றி சேட்டுக்க வைச்சு இருந்த அந்த வெளிநாட்டு சஞ்சிகையை வெளிய எடுத்து பேபரைக் கழட்டாமல் அதை வைச்சுக்கொண்டு முதல்க் குண்டை தூக்கிப் போட்டான்,

 

                               எங்கள் குளத்தடி கிரிகெட் டீமில் அவன் இருந்தாலும் பித்துக்குளி கிரிகெட் விளையாடமாட்டான், அவனை சும்மா பொலிவுக்கு எதிர் அணிகளுக்கு அவன் தோற்றம் கொஞ்சம் எங்களின் டீம் பயங்கரமான விளையாட்டு வீரர்கள் உள்ள டீம் என்று காட்டத்தான் அவனை வைச்சு இருந்தம்.பந்து காலுக்கால சாரைப்பாம்பு போல மெதுவாகப் போனாலும் குனிஞ்சு பிடிக்க மாட்டான், அவளவு சோம்போறி,  பிள்ளைப் பெத்த பெண்டுகள் போல நாரிக்கு கையை முண்டு கொடுத்துக்கொண்டு நிற்பான்.ஆனால் சுனில் கவாஸ்கர் போல ஒரு தொப்பி போட்டுக்கொண்டு,சுனில் கவாஸ்கர் போட்டிருப்பது போலவே ஒரு தனி உருத்திராட்ச கொட்டை வைச்சு செய்த தங்கச் செயின் போட்டு இருப்பான் ,  பித்துக்குளி மாட்டுத்தாள் பேபரைக் கழட்டாமல், 

 

                             "  இப்ப புத்தகம் காட்டுறது என்றால், இந்த கிரிகெட் டீமுக்கு என்னை கப்டன் ஆக போட வேண்டும்,அதுக்கு எல்லாரும் கையெழுத்து போட்டு தர வேண்டும் "

 

                                 என்று பொறுத்த நேரத்தில எங்களின் வீக் பொயிண்டைப் பிடிச்சு கழுத்தில கத்தியை வைச்சு உலுப்பினான், எங்கள் தலை எழுத்தோடு விதி விளையாட இது நேரம் இல்லை என்று உடனே எல்லாரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தோம்,

 

                                  பித்துக்குளி அதுக்கு பிறகுதான் அந்தப் புத்தகத்தைக் காட்டினான். நாங்கள் எல்லாருமே ஆர்வமாய்,கொஞ்சம் ஆச்சரியமாய்ப் பார்த்தோம் . மூளையின் ஹிப்போதலமஸ்  பிரதேசத்தில் மின்னல் அடிக்க தெஸ்தெஸ்திரோன் ஹோர்மோன் கொஞ்சம் அதிகமா இடி முழக்கம் போல எல்லார் ரத்தத்திலும் பாய ,காதுக்குள்ள கீர்ர்ர்ர் எண்டு மொரிஸ் மைனர் கார் ஓட, மெதேன் வாயு போல புளியமரக் காற்றுக் கனமாக, நெற்றியில், உள்ளங்கையில் வியர்க்கக் கை நடுங்க ,நாக்கில் தண்ணி இல்லாமல் போய் பேப்பர் போல நுனி நாக்கு உலர , உலகம் அநியாயத்துக்கு  கலர் கலரா தெரிய , முள்ளம் தண்டில ஊசியால குத்தினது போல இருந்தது.

 

             இரவு வீட்டை வந்த நேரத்தில் இருந்தே ஒரே குழப்பமா இருந்தது, நான் நினச்ச மாதிரி அந்தப் புத்தகம் தவறாக எதையுமே காட்டவில்லை போல இருந்தது. அதெப்படி உலகத்தின் வேற ஒரு திசையில் மனிதர்கள் வேறு விதமான சிந்தனையில் இப்படி வெளிப்படையான சுதந்திரமாக வாழ முடியும் என்பதை நினைக்க குழப்பமா இருந்தது,  கலாசார விழுமியங்களில் கட்டிக் காக்கும் ஒரு கட்டுப்பெட்டி சமுதாயமாக  நாம் வென்றுவிட்டதாக  நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்  போலவும் ஆனால் அறிய வேண்டிய விடயங்களை மறைக்கும்  தனி மனித சுதந்திரத்தில்  நாம் தோற்றுவிட்டோம் போலவும் இருந்து  ,அதை ஜோசிதுக்கொண்டு புரண்டு புரண்டு படுத்திட்டேன்  

 

                              அந்தப் புத்தகத்தில் இருந்தவள் போலவே ஒரு வெள்ளைக்காரி மாதுளம் பழ நிறத்தில ,ஒரு உடுப்பும் இல்லாமல் ஏவாள் போல வந்தாள் ,நான் ஆதாமை அருகில் தேடினேன், ஆதாம் பூவாளி மார்க் சரம் கட்டிக்கொண்டு மேலுக்கு மைக்கல் ஜாக்சன் போல மினுங்கல் மினுங்கல் வைச்ச கோட் போட்டுக்கொண்டு வர, வாயில வாழைப்பழத்தை கவ்விக்கொண்டு   ஒரு புடையன்  பாம்பும்  அவளுக்கு கிட்டவா வந்துகொண்டு இருக்க, பக்கத்தில் நின்ற வேப்ப மரத்தில இருந்து செண்பகம் மசுக்குட்டியை உதறி உதறி வாயில வைச்சு ருசி பார்க்க ,ஆச்சரியமாகி அவளை முழுவதும் பார்க்க வெக்கப்பட்டு , பாம்பைப் பார்த்திட்டு அவளிடம்

 

                         " பைபிள் ஆதியாகமத்தில் பாம்பு அப்பிள் பழம் எல்லா கொண்டு வந்தது , இதென்ன வாழைப்பழத்தைக் கவ்விக்கொண்டு வருகுதே " என்று தமிழில் கேட்டேன்  

 

                    அவள் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவாள் என்று நினைக்க  வெட்கமே படாமல் என்னை நெருங்கி நெருங்கி நெருங்கிக் கிட்ட வந்து, தமிழில் 

 

                               " இது நீர்வேலி இதரை வாழைப்பழம், உனக்கு வேணுமா இதைத் திண்டால் முதலில் மண்டையில் உள்ள பித்தம் இறங்கும் வேணுமா உனக்கு ,கஜாந நம்பூத கணபதி ஸேவிதம்  க  பித்த ஜம்பு பலஸார பக்‌ஷிதம் , இதரை வாழைப்பழம்  வேணுமா உனக்கு " 

 

                                   என்று தமிழில்  சொல்லிக்கொண்டே எனக்கு மேல பாய 

 

               நான்  " அய்யோ அய்யோ எனக்கு  வாழைப்பழம் வேண்டாம் "

 

                              என்று பிசதிக்கொண்டு எழும்ப. அம்மா எழும்பி ஓடிவந்து

 

                           " என்னடா  இதரை வாழைப்பழம் எண்டு வாய் உளருறாய், இதுதான் நான்  ஒவ்வொருநாளும் சொல்லுறது இருட்டினப் பிறகு தெய்வேதிரதிண்ட புளிய மரப் பக்கம் போகாதை எண்டு  ,என்னவோ காத்துக் கருப்பு பட்டு இருக்கு,அந்த மரத்தில மோகினிப் பிசாசும் ,சுடலை மாடனும் இருக்கு என்டு குஞ்சரம் எப்பவும் சொல்லிக்கொண்டு தெரியிறது உண்மைதான் போல கிடக்கு,,நீ என்னதையடா பாத்தனி "

 

                                     என்று எனக்கு பிள்ளையார் தட்டில இருந்து திருநீறு எடுத்துக் கொண்டு வந்து நெற்றியில் பூசிக்கொண்டு கேட்டா, நான் கொஞ்சநேரம் கண்ணை உருட்டி உருட்டி பாம்பைத் தேடிப்போட்டு .

 

                            " மோகினிகளைத் தான் பார்த்தேன் அம்மா " என்று சொன்னேன்.

 

நாவுக் அரசன் 

ஒஸ்லோ

 

https://www.facebook.com/notes/10205560189145293/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

                                                                                               வளவிற்குள்ளே வாழ்க்கை

 

 

 

யாழ்பாணத்தில் எங்கள் வீடு இருந்த வளவின் ,தென்மேற்கு மூலையில் குபேர திசை என்று வாஸ்து சாத்திரம் சொல்லும் திசையை பார்த்து ஆட்டுக் கொட்டில் இருந்தது. அதில எப்பவும் ஒரு மறியாடு, கிளுவங் குழையைக் சப்பிக்கொண்டு குட்டி போட்டு கொண்டு எப்பவும் இருக்கும், கெடாய்க்குட்டிகள் வளர்ந்து திமிரத் தொடங்க அம்மா அதுகளை விப்பா,அது போட்ட மறிக்குட்டி வளர்ந்து ருதுவாக ,எப்பவும் தாய் ஆடு வயதாகி ஒரு நாள் திடீர் எண்டு வாயில நுரை தள்ளி, தலையைப் பக்கவாட்டில சரிச்சு வைச்சு சீவன் போய்க் காலையில் குபேர திசை தென்மேற்கு மூலையில் இறந்தாலும் ஆடுகள் எங்கள் வீட்டின் முக்கியமான பால் விநியோக மையம் போல இருக்க,கெடாய் குட்டிகள் உபரி வருமானம் போல இருந்ததுக்கு முக்கிய காரணம் வளவைச் சுற்றி நிறைய மரங்கள் இலை குழைக்குப் பஞ்சமில்லாமல் நாலுபக்க சுற்று வேலிக்கு சாட்சியா நின்றது.

ஆடு எங்கட வீடில நின்டதால் ஆட்டுக்கு பெரிய லாபம் ஒண்டும் இல்லை,அது நிண்டதால எங்களுக்குப் பெரிய நஷ்டமும் சொல்லும் படியா ஒண்டும் இல்லை.வீட்டு பின் வளவு முழுவதும் அருகம் புல்லும்,கோரைப் புல்லும் அள்ளு கொள்ளையா வளர்ந்து கிடந்த காணியில் ஆடு அது பாட்டுக்கு மூன்று நேரமும் மேஞ்சு கொண்டு நிக்கும்..முக்கியமா இழுப்பு வியாதியால் அவதிப்பட்ட என்னோட ஒரு தம்பிக்கு ஆட்டுப்பால் தேவைக்கு தான் ஆடு எப்பவும் எங்கள் வீடில் நின்றாலும்,அது குட்டி போட வைக்க அதுக்கு கலியாணம் கட்டும் நிகழ்வு வருஷத்தில் ஒரு முறை எப்பவம் நடக்கும், மற்றப்படி ஆட்டுப் புழுக்கை எங்கள் வீட்டின் பின்னால நின்ற வாழை மரத்துக்கு உரமாக,ஆட்டுக் குட்டிகள் எங்கள் வீட்டின் நடு ஹோலில் துள்ளி விளையாடும் செல்லப் பிள்ளைகள் போல வளரும்.

எங்கள் வீடுக்கு கொஞ்சம் தள்ளி இலுப்பையடி சந்தியில் இருந்த " ஆட்டுக்கு விடுற சங்கரன் " என்பவரின் வீட்டில்தான் கெடாய் ஆடுகள் இருந்தது, " ஆட்டுக்கு விடுற சங்கரன் " எண்டு அவரை சொல்லுவார்கள் ,அப்படிச் சொல்லவதால் எசகு பிசகா தப்பாகா நீங்க நினைக்கக்கூடாது, அவரிடம் நிறைய சீமைக் கெடாய் வைத்து ஆட்கள் கொண்டு வரும் மறியாடுகளுக்கு கொஞ்ச நேரம் கலியாணம் கட்டி வைப்பதால் அவரை அப்படி சொல்லுவார்கள். சங்கரனும் சுருட்டைத் தலை முடியோட ,வாட்ட சாட்டமான சீமைக் கெடாய் போல எழும்பின ஆம்பிளை,எப்பவும் சாரத்தை உயர்த்திக் கட்டிக் கொண்டு ,சீமைக் கெடாய் போல நாடியில் கொஞ்சம் ஆட்டுத் தாடி வைச்சு அதை எப்பவும் தடவிக்கொண்டு இருப்பார்.

ஆடு எப்பவும் கத்தி சத்தம் எழுப்பாது. அமைதியா ஆடாய்ப் பிறந்து தொலைத்த பாவத்தில் எங்களை பார்த்து பெரு மூச்சு விட்டுக் கொண்டு அடுத்த பிறப்பிட்க்கு ஏங்கிக் கொண்டு இருக்கும்.ஆனாலும் கொட்டிலில் கட்டின இடத்திலையே , கழுத்து இழக் கயிறில் ஒரு வட்டத்தில் நிண்டு சுழரும் ஆடு சில நாட்கள் திடீர் எண்டு அதிகாலை ஏக்கமாக

" செந்தூரப் பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே "..

எண்டு 16 வயதினிலே படத்தில வார பாடல் போல

" என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே "

என்று கத்தும், அந்த சத்தம் சொல்லும் சந்தம் கொஞ்சம் விரகதாபம் போல இருக்க அம்மா உசார் ஆகி எங்க வீடுக்கு கொஞ்சம் தள்ளி அரசடிக் குறுச்சியில் வசித்த எங்க வீடில தென்னை மரம் ஏறி தேங்காய் பிடுங்கும் நட்சத்திரம் என்பவரை கையோட போய்க் கூடிக்கொண்டு வரச் சொல்லுவா,

நட்சத்திரம் வயதானவர்,வேட்டி கட்டிக்கொண்டு வருவார்,மேலே சேட்டு போடமாட்டார்,ஒரு சால்வையைக் கழுத்தில சுற்றிக் கொண்டு தென்னை மரத்தில ஏறுற மாதிரி கெந்திக் கெந்தி நடப்பார், வாயில எப்பவும் வெத்திலை போட்டு, பெரு விரலில் நிரந்தரமா சுண்ணாம்பு வைச்சுக்கொண்டு அதை இடைக்கிடை நாக்கில ஒரு இழுப்பு இழுத்து போட்டு, ரெண்டு விரலை சொண்டில வைச்சு அதுக்கு நடுவால பளிச் எண்டு துப்புவார் .

அவர் தான் ஆட்டை சங்கரன் வீடுக்கு இழுத்துக்கொண்டு போவார், அவரை கண்டால் ஆடு கொஞ்சம் கலியாணக் களை வந்த பெண்கள் போல சந்தோசம் ஆகிடும். உண்மையில் ஆடு கிளுன்வங் குழையை கையில வைச்சுக்கொண்டு அவர் இழுத்துக்கொண்டு போனாலும் ஆடு,குழையில இண்டரெஸ்ட் இல்லாத மாதிரியும்,கலியாணத்தில இண்டரஸ்ட் போலவும் விறுக்கு விறுக்கு எண்டு நட்சத்திரத்தை இழுத்துக்கொண்டு முன்னால போகும் .ஒரே ஒரு முறை நானும் ஆட்டுடன் சங்கரன் வீடுக்கு ஆடு கலியாணம் கட்டுறது பார்க்கப் போயிருக்கிறேன்...

சங்கரன் வீட்டு வாசலில் நாங்க ஆட்டோட நிக்க, சங்கரன் வந்து எங்கள் ஆட்டைப் பார்த்திட்டு ,

 

" சரி உள்ளுக்க கொண்டு வாங்கோ "

எண்டு சொல்லிப்போட்டு,

" சித்தப்பு , இவன் சின்னப் பொடியன என்னத்துக்கு இதுக்க இழுத்துக்கொண்டு வந்தனி "

எண்டு சொல்லிபோட்டு என்னை உள்ளுக்க விடவில்லை, எப்படியோ எங்க ஆடு வெளிய நிண்டு

" தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருந்தேன் "

எண்டு ஏக்கமா கத்த ,உள்ளுக்கு நிண்டு சீமைக் கெடாய்கள் எல்லாம் ஒரே நேரத்தில வில்லங்கமா தமிழ் சினிமா படத்தில வார வில்லன்கள் போல சத்தம் எழுப்பி சிக்னல் கொடுக்க, கொஞ்ச நேரத்தில எங்க ஆடு உள்ளுக்குப் போய்,கொஞ்ச நேரத்தில கலியாணம் கட்டி, கொஞ்ச நேரத்தில முகம் முழுவதும் சந்தோஷ திருப்தியுடன் வெளிய வந்து, திரும்பி எங்க வீட்டுக்கு வர மாட்டன், புகுந்த வீட்டிலேயே வாழப்போறேன் எண்டு அடம்பிடிக்க, அதுக்கு கிளுவங் குழையை காட்டியும் அது அசையிற மாதிரி தெரியவில்லை கடைசியில், அதைக் கொற இழுவையில் குழறக் குழற இழுத்துக்கொண்டு வந்தோம். ஆடு வீட்டுக்கு வார வழி முழுவதும் சத்தியவான் சாவித்திரி நாடகம் போட்டு கொண்டு வந்து கொட்டிலில் கட்டிய பின்னும் கிடந்தது

" என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே "

என்று அழுது வடிந்து ஒரு கிழமையில் அடங்கி விட்டது...

ஆடு கொஞ்ச நாளில் வயிறு பெருக்குறதைப் பாத்து ,அம்மா ,

" அடி வயிறு இப்படி சளியுது இந்த முறையும் கெடாய்க்குட்டி தான் போடும் " எண்டா,

அதுக்கு பிறக்கு வாயும் வயிறும இருந்த ஆட்டுக்கு நாங்க பின்னேரம் சந்தியில் இருந்த பிலாப்பழ ஆச்சி வீடில போய் பிலாக் குழை குத்திக்கொண்டு போடுவோம். ஒரு வெள்ளிகிழமை காலை ஆடு முனகுற சத்தம் கேட்டு கொட்டிலுக்குப் போய்ப் பார்க்க ஆடு,ஏறக்குறைய குட்டியை வெளிய தள்ளி,வேதனையில் முகத்தை வைத்துக்கொண்டு நிக்க,அம்மா எங்களை அது குட்டி போடுறதை கிட்ட இருந்து பார்க்க விடலை,ஆட்கள் பார்த்தல் குட்டி போடாது எண்டு சொன்னா, எப்படியோ போட வேண்டிய நேரத்தில ஆடு குட்டியைப் போட்டுதான் ஆகும் எண்டு அவாவுக்கு சொன்னா பிரச்சினை வரும் எண்டு தெரிந்ததால் ஒண்டும் சொல்லவில்லை,

குட்டி போட்ட பிறகு இளங்கொடி எண்டு ஒன்று வெளியே சொப்பிங் பாக்கில தண்ணி நிரப்பின மாதிரி ஆட்டின் ஜனன உறுப்பில் இருந்து இறங்க அதையும் போடுறதை அம்மா கிட்டத்தில் இருந்து பார்க்க விடலை, பார்த்தால் இளங்கொடி போடாது எண்டு சொன்னா ஆடு இளங்கொடியை வலியோடு முனகி முனகிப் போட்ட உடனையே அம்மாவே கூப்பிட்டு

" இளங்கொடி போடப் போக்குது போட்ட உடன அதை எடுத்து மாட்டுத்தாள் பேபரில் சுற்றி பாசல் பண்ணி அம்மச்சியா குள ஆலமரத்தில் கட்ட " சொன்னா,

" ஏன் அப்படிக் கட்ட வேண்டும் " எண்டு கேட்டதுக்கு

 

" அப்படி செய்தால் குட்டி நல்லா வளரும் "

எண்டும் சொன்னா. சொன்ன படியே செய்தோம்.ஆல மரத்தில ஏற்கனவே குட்டிகள் நல்லா வளர வேண்டும் எண்டு மரம் முழுவதும் வேற பல பொட்டல்கள் மரத்துக்குப் பாரமாகத் தொங்க்கிக் கொண்டு இருந்தது .

வீட்டை வர தாய் ஆட்டின் மடி தொங்கிக்கொண்டு இருக்க,அதன் முலைக்காம்பில் இருந்து பால் வடிந்தது,அம்மா அந்தக் கடும்புப் பாலை கறந்து எடுக்க, குட்டி மலங்க மலங்கப் பார்த்துக்கொண்டே ,

" என்னோட பாலை எதுக்கு பிறந்தவுடனே களவு எடுகுரிங்க, .....இந்த வீட்டில என்னோட சீவியம் கிழியத்தான் போகுது .. "

என்பது போல இயலாமையில் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க, அம்மா அந்தப் பால் முழுவதையும் எடுத்து சட்டியில ஊற்றிக் காச்ச அது மஞ்சள் நிறத்தில திரண்டு வந்தது ..

போட்ட கெடாய் குட்டியை முதல் நாள் முழுவதும் ஆடு வாஞ்சையுடன் நாக்கால நக்கிவிட அது ஒண்டுமே தெரியாத மாதிரி அப்பாவியாப் படுத்தே கிடந்து ,எங்களை " நான் ஏன் பிறந்தேன் " என்பது போலப் கண்ணை முழிச்சுப் பார்க்கிற மாதிரியும்,பார்க்காத மாதிரியும் கிடந்தாலும் , அடுத்தநாள் அது நாலு காலில் எழுத்து நிக்க முயற்சித்து ,தாய் மொழி கொஞ்சம் பழகி ,ரெண்டு நாள் தடுமாறி விழுந்து , மூன்றாம் நாள் பாலன்ஸ் பிடிச்சு,நாலாம் நாள் நாட்டியம் கொஞ்சம் ஆடப் பழகி, அஞ்சாம் நாள் எங்கள் அடுப்படியில் ஆட்டுப் புழுக்கை போட்டு, ஆறாம் நாள் வீட்டு நடு ஹோலில் மூத்திரம் பெய்து. ஏழாம் நாள் அது எங்கள் குடும்ப அங்கத்தினர் ஆக,ஏறக்குறைய அதை பார்த்துக்கொண்டு இருப்பதே சுவாரசியமா இருந்தது. அது வீடு முழுவதும் ஓடித் திரியும், " என்னை ஏன் பெத்தாய் என்னை ஏன் பெத்தாய் " எண்டு அம்மா ஆட்டோடு சண்டை பிடிக்கும் , முகத்தை முகத்தோடு உரசும் , முன்னம் காலில் துள்ளிக் குதிக்கும், பின்னம் காலில் பாயும் ,பின்னுக்கு வாழை மரங்களுடன் கிளித் தட்டு விளையாடும்,கிணத்தை எட்டிப் பார்க்கும்,களைத்துப் போய் ஓடி வந்து " பால் முழுவதும் எனக்குதான் " என்பது போல முட்டி முட்டி உறிஞ்சி உறிஞ்சிப் பால் குடிக்கும் ,

மார்கழி மாதம் அடை மழை நேரம் , ஆட்டுக் கொட்டில் தகரத்தில் மாரி மழை அள்ளிக் கொட்டி டொக்கு டொக்கு எண்டு விழுந்து அதிர வைக்கவும், மழைக் குளிரிலும் ஆட்டுக்குட்டி பயந்து இரவெல்லாம் கத்தும். சத்தமில்லாம் இருட்டோ இருட்டா அதை வீட்டுக்க கொண்டு வந்து வைச்சால், அது வீட்டுக்க நிண்டு

" அம்மே அம்மே , அ ம்மே அ ம்மே ,அம் மே அம் மே , அ ம் மே அ ம் மே "

எண்டு அம்மாவையும் கொண்டுவா எண்டு கத்தும்,அந்த சத்தத்தில் அம்மா எழும்பி

" இவன் என்னடா மனுசரை அசந்து நித்திரை கொள்ளவிடாமல்க் கொல்லுறான் ,ஏண்டா மிருகங்களை வீட்டுக்க கொண்டுவந்து உயிரை எடுகுறாய், நீ பேசாமா போய் ஆட்டுக் கொட்டிலுக்க படடா "

எண்டு சண்டை தொடக்குவா .

ஒருநாள்க் காலை ..... ஆட்டுக் கொட்டிலில் சிலமன் ஒண்டும் இல்லை எண்டு வந்து எட்டிப் பார்க்க,ஆடு அலங்கோலமாய் விழுந்து கிடந்தது, அதன் வாயில நுரை தள்ளி, முகத்தில இலையான் மொய்க்க, ஆட்டுக் குட்டி அப்பவும் பால் குடிக்க ஆட்டை இடிச்சு இடிச்சு எழுப்ப, ஆடு எழும்பவில்லை,அம்மா வந்து பார்த்திட்ட ,

" கொஞ்சநாள் ஒரு மாதிரி தான் நிண்டது, நான் நினைச்சது சரியாதான் போச்சு "
எண்டு சொன்னா,வேற ஒண்டுமே சொல்லவில்லை. குட்டி எங்களை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டு அம்மா அம்மா எண்டு கத்த,அம்மா ஆட்டுக் கல்லில் இருந்துகொண்டு,

" வாழை மரத்துக்கும், மாதுளை மரத்துக்கும் நடுவில கிடங்கு வெட்டச் " சொன்னா.

மம்பட்டியை எடுத்துக்கொண்டு போய்க் கிடங்கு வெட்ட ஆட்டுக் குட்டி அப்பவும் கிடங்கைச் சுற்றி துள்ளி துள்ளி ஓடி விளையாட ,அம்மா ஆட்டை இழுத்துக்கொண்டு போக சொன்னா,எனக்கு ஆட்டைப் பாக்க பாவமா இருக்க,அதை தூக்கிக்கொண்டு போக முயற்சிக்க அது பாரமா இருக்க,அம்மாவுக்கு கோவம் வந்திடுது,

" பின்னம் காலில பிடிச்சு இழுத்துக் கொண்டு போடா, செத்த ஆட்டை வைச்சு கொண்டு இவன் என்னடா தாலாடுப் பாடிக்கொண்டு நிக்குறான் ,இழுத்துக்கொண்டு போடா "

எண்டு சொன்னா,நான் நிலத்தில தேயும் எண்டு முடிந்தளவு ஆட்டுக்கு நோகாமல் அதை இழுக்காமல் தூக்கியே கொண்டு போய்க் கிடங்கில வளர்த்தினேன்,

ஆடு கிடங்கில கிடந்தது மேல பார்த்துக்கொண்டு இருந்தது, அதுக்கு போற வழிக்கு ஒரு தேவராமாவது பாடி வழி அனுப்பி மண் போடுவம் எண்டு நினைக்க அந்த நேரம் பார்த்து ஒரு தேவாரமும் நினைவில வரவில்லை ,

" அத்திப் பழம் சிகப்பா-எங்க
அக்கா பொண்ணுசிகப்பா, அத்திப் பழம் சிகப்பா-எங்க அக்கா பொண்ணுசிகப்பா ,,"

 

என்ற சினிமாப் பாட்டுதான் திருப்பி திருப்பி நினைவு வந்தது. இந்தப் பாட்டு செத்த வீடுக்கு உதவாது எண்டு போட்டு வீட்டுக் ஹோலில இருந்த பிள்ளையார் சிலையில இருந்து கொஞ்சம் திருநீறு எடுத்துக்கொண்டு வந்து அதன் தலையில பூசிப்போட்டு,

" மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு ...................... "

எண்டு பாடி முடிய, ஆடு ஒருக்கா தலையை சரிச்சுப் பார்த்திட்டு திருப்பி படுத்திட்டுது,மண்ணை சலிச்சு மூடிப்போட்டு அதுக்கு மேலே செவ்வரதம் பூ ஒரு கொப்போடு பிடுங்கிக் கொண்டு வந்து வைச்சுப்போட்டு, ஆட்டுக்குப் பிடித்தமான கிளுவங் குழையும் கொஞ்சம் மேல குத்தி வைச்சு முடியும் வரை அம்மா ஆட்டுக் கல்லில் இருந்து பார்துக் கொண்டு இருந்தா,ஒண்டும் சொல்லவில்லை,

அம்மா அந்த ஆட்டுக் குட்டியை பிறகு கொஞ்சம் வளர வித்தா, அதுக்குப் பிறகு எங்கள் வீட்டில் ஆடு வளர்க்கவில்லை,ஆட்டுக் கொட்டிலை கொஞ்சம் சிமெந்து போட்டு ஒரு ஸ்டோர் போலக் கட்டி ,அந்த இடத்தில ஒரு காலத்தில் ஆடு நின்ற நினைவுகள் மட்டும் அதன் சுவர் முழுவதும் அப்பி இருக்க, ஒரு கட்டத்தில் நாங்க எல்லாருமே அந்த வீட்டை விட்டு தேசிக்காய் மூட்டையை அவுத்துக் கொட்டின மாதிரி ஒவ்வொரு பக்கத்தால சிதறிப் போன்னோம்,ஆடு வளர்த்த அம்மா அமரிக்கக் கண்டத்தில,மற்ற சகோதரங்கள் ஒவ்வொரு நாட்டில, ஒவ்வொரு கோலத்தில.....

இது தான் வாழ்க்கை.!!!.

நாவுக் அரசன்
ஒஸ்லோ 22.06.14

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே ஓரிரு ஆடு வளர்ப்பு பல குடும்பங்களுக்கு ஒரு உபரி வருமானமாக இருக்கும். முன்பு எங்களுக்கும் அப்படி இருந்திருக்கு. ஆட்டுக்கு கலியாணம் செய்ய மாவிட்ட புரத்தில் இருந்து வியாவிளானுக்கு  தோட்டங்களினூடே ஒற்றையடிப் பாதையில் நடந்து பலாலி ஏர்போட் ரன்வேயை குறுக்கே கடந்து போவோம்.  வரும்போது அன்னமுன்னா பழங்கள், மொசுமொசுக்கை இலைகள் , என்று இன்னும் பலவிதமான இலைகுழைகள் கட்டிக் கொண்டு வருவோம்...! :rolleyes::)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான் பார்த்தேன்..

 

தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொருமுறை வளவுக்குள் வலம் வந்தமாதிரி உணர்வு ஏற்பட்டது. நல்ல ஆக்கங்கள் தொடருங்கள்.

  • தொடங்கியவர்

நிஜமாகவே ஓரிரு ஆடு வளர்ப்பு பல குடும்பங்களுக்கு ஒரு உபரி வருமானமாக இருக்கும். முன்பு எங்களுக்கும் அப்படி இருந்திருக்கு. ஆட்டுக்கு கலியாணம் செய்ய மாவிட்ட புரத்தில் இருந்து வியாவிளானுக்கு  தோட்டங்களினூடே ஒற்றையடிப் பாதையில் நடந்து பலாலி ஏர்போட் ரன்வேயை குறுக்கே கடந்து போவோம்.  வரும்போது அன்னமுன்னா பழங்கள், மொசுமொசுக்கை இலைகள் , என்று இன்னும் பலவிதமான இலைகுழைகள் கட்டிக் கொண்டு வருவோம்...! :rolleyes::)

 

சென்ற வருடம் நாங்களும் ஒரு ஆடு வளர்த்தோம், அது அரிசியை தின்றதால் வயிறு ஊதி இறந்து விட்டது, அதன் குட்டி ஆடு இறந்த இடத்திற்கு செல்லும் போது கத்தி கொண்டே படுத்துக்கொள்ளும், பிறகு அதையும் கொடுத்து விட்டோம்... கிராமத்து வாழ்க்கையில் இந்த ஜீவராசிகளும் ஒரு உடன் பிறப்பு போல், ஒரு குடும்ப உறுப்பினர் போல் இயைந்து இருக்கும் வாழ்வில்... :rolleyes:

 

வாழ்த்துச் சொன்ன விசகு அண்ணன் கண்மணி அக்காவிற்கு நன்றிகள்.... :)

 நாவுக் அரசனின் பதிவுகள் படிக்க பலா சுளை சாப்பிடுவது போல் இருக்கும்... நகைச்சுவை, சுய எள்ளல், யாழ்ப்பாண வட்டார மொழி, மிகைப்படுத்தாத வர்ணனைகள் என அருமையாய் இருக்கும்... அவரது அனுமதி பெற்று தான் இவற்றை இங்கு இணைக்கிறேன்...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வாழ்கையே ஒரு மேடைநாடகம் என்று நிஜமான உலகத்தில் அப்பப்ப வாழ்க்கை வெறுக்கும் போது இப்பவும் சொல்லிக்கொண்டு இருந்தாலும், என்னோட இளந்தாரி வயதில் , முன் அனுபவம் எதுவுமில்லாமல் இரண்டு நாடகத்தில் மேடையில் மேக் அப் போட்டு நாடக இயக்குனரிடம் திட்டு வேண்டிக் கொண்டு அடிவேன்டாத குறையாக நடிக்கும் வாய்ப்பு, அதுவும் அந்த இரண்டும் தற்செயலாகக் கிடைத்த சம்பவம் போன்ற ஒரு ரியல் அனுபவ சம்பவம் இன்று வரை வேறே எங்கேயும் கிடைக்கவில்லை. அந்த இரண்டு நாடகத்தில், அந்த நாட்களில் கட்டுமஸ்தான தேகக் கட்டில் இருந்ததால் ,சீதாலட்சுமி சுயம்வரம் என்றதில் ஜெனகனின் வில்லை முறிக்க முயல வரும் பன்னிரண்டு தேசத்து ராசாக்களில் ஒரு ராசாவாக வரும் வேடத்தில் கொஞ்ச நேரமே வரும் அந்த ராஜா வேஷம் போட்டேன்.

 

ரெண்டாவது நாடகத்தில், அதில பொம்புளையாக நடிக்க வேண்டிய நடிகர் சின்னமுத்து வருத்தம் வந்ததால் நடிக்கமுடியாமல் போக எந்த வித முன்னறிவுப்பு ஒத்திகை எதுவுமேயில்லாமல், இன்னொருவரின் மனைவியான கிளியோபட்ராவை ஜுலிய சீசர் கடத்திக்கொண்டு வந்து காதலியாக்கிய சம்பவங்கள் வரும் சேக்ஸ்பியரின் ஜுலிய சீசர் நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்துப் போட்ட நாடகத்தில், பிறசியருக்குள்ள தேங்காய் சிரட்டையை வைச்சு நெஞ்சை எடுப்பாக்கி, உயர்த்திக் கட்டிய கொண்டை போட்டு , நீண்ட மினுங்கல் ஒட்டிய கவுன் ஒன்றைக் கொழுவிக்கொண்டு அழகிய எகிப்து நாட்டு இளம் பெண்ணாகிப் பொம்பிளை வேஷம் போட்டு நடித்தேன்.

 

யாழ்பாணத்தில் எங்களின் அயலில் இருந்த வாசிக்கசாலையில் எங்களின் மதிப்புக்குரிய உள்ளுர்க் கவிஞ்சர் கந்தப்பு நாடகங்கள் போடுவார், அதிகம் தமிழ் புராண, சமுதாய , புரட்சி நாடகங்கள் போட்டாலும் சில நேரம் ஆங்கிலதில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாடகங்களும் போடுவார். முக்கிய எவசில்வர் போன்ற பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வேறு இடங்களில் மேடைகளில் நடிக்கும் நடிப்பு நல்லா தெரிந்தவர்கள், அலுமினியம் போன்ற சில்லறைப் பாத்திரங்களில் என்னைப்போல முன்னப்பின்ன அனுபவம் இல்லாத சின்னப் பொடியன்களை பின்னேரங்களில் ,வாசிகசாலை லைபிறேரியில் வைச்சுப் பழக்கிதான் கவிஞ்சர் கந்தப்பு

" பல மேடைகளில் பிரகாசித்த, பிரமாண்டமான நடிகர்கள் நடிக்கும், இதுவரை யாருமே தொடாத எல்லைகளைத் தொடும் பிரமாண்டமான தயாரிப்பு "

என்று விளம்பரம் போட்டுத்தான் நாடகம் மேடை ஏற்றுவார்.

 

ஆனாலும் கவிஞ்சர் கந்தப்பு செய்த இதையும் சொல்லத்தான் வேண்டும் , கொஞ்சம் விளங்கிக் கொள்ள கஷ்டமான நவீன அங்கத ஸ்டைலில் பாதல் சர்க்காரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட ஏபங் இந்திரஜித் என்ற ஓரங்க நாடகத்தை பிறகொரு இந்திரஜித் என்ற மொழிபெயர்ப்பை தழுவி மேடை எல்லாம் இல்லாமல் வாசிக்கசாலை விளையாட்டு மைதானத்தில், அம்மசியா குளக்கட்டுடன் ஓரமாக நின்ற இலுப்பை மரத்துக்குக் கீழேயும், யதார்த்தமாக உங்களில் நாங்களும் ஒருவர் என்ற கொன்செப்டில் மேக் அப் போடாத நடிக்கர்கள் பார்வையாருக்கு இடையில் இருந்து எழுந்து வந்து நடித்து,மறுபடியும் பார்வையாளருக்குள் போய் இருக்கும் மொடேர்ன் அப்சற்ற்க் ஸ்டைலில் நாடகம் போட்டும் இருக்கிறார்.

 

சீதாலட்சுமி சுயம்வரம் நாடகத்தில் ஸ்ரீராமனுக்கு நடித்தது எங்களின் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் ஸ்போர்ட்ஸ் மாஸ்டரா இருந்தவர். அவர் நல்ல உயரம், அவரோட இளவயதில் உயரம் பாய்தலில் வடமாகாண சம்பியன் . அவர் பாஞ்ச உயரத்தை பல வருடமா வேற யாருமே பாயவில்லை என்று சொல்லுவார்கள், அவர் குரல் அண்டங்காகம் சனிக்கிழமை கத்துவது போல இருக்கும், ஆனாலும் அந்த நாடகத்தில் ஸ்ரீராமச்சந்திரமூர்திக்கு பேச வசனம் இல்லை,அவரின் தம்பி லட்சுமணன் டப்பின் ஆர்டிஸ்ட் போல ஸ்ரீராமனுக்கு பக்கத்தில் நின்று சவுண்ட் கொடுப்பதால் நாடகம் முழுவதும் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் அம்மாவாசை இரவு போல நல்ல கறுப்பு, அவருக்கு நிறையப் பவுடர் அடிச்சுதான் அயோத்திக்கே கொண்டுபோய் கவிஞ்சர் கந்தப்பு அந்தாளை ஸ்ரீராமன் ஆக்கின மாதிரி இருந்தது.

 

ஆனால் சீதைக்கு நடித்த அழகான இளம் பெண் மதியாபரணம் டீச்சரின் மகள் பவானி. அவள் மேக் அப் எந்த சோடனைகளும் இல்லாமலேயே கம்பன் வர்ணிச்ச " தே மலர் நிறைந்த கூந்தல்; தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; " மாதிரி இருந்தாள். டவுன் இங்கிலிஸ் பள்ளிக்கூடத்தில கெமிஸ்ட்ரி படிப்பித்துக்கொண்டு இருந்த சயன்ஸ் பட்டதாரியான மதியாபரணம் டீச்சர் எப்பவுமே தமிழ்,சைவ சமயம்,இலக்கியம் இதுகளில் நிறைய ஆர்வம் உள்ளதாலும், கவிஞ்சர் கந்தப்பு மேலே மதிப்பு இருந்ததாலும் , தன்னோட ஒரே மகள் பவானியை சீதாலட்சுமி சுயம்வரம் நாடகத்தில் ஜெனகனின் மகளாக நடிக்க விட்டா.

பவானி நடிப்பது கேள்விப்பட்ட , அவளுக்கு அந்த நேரம் நூல் விட்டுக்கொண்டு இருந்த எங்கள் குளத்தடி குழப்படிக் குருப்பில் இருந்த வாக்குக் கண்ணால பார்க்கும் சின்னக் கண்ணன் வந்து தானும் அந்த நாடகத்தில் நடிச்சே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்க கவிஞ்சர் கந்தப்பு

" டேய் நீ நாடகம் பார்க்கிற சனம்களைப் நேராப் பார்த்தா, உண்ட மண்டை கோணாலா போகுமே, காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி ,,,, "

 

என்று என்னமோ சொல்லி அவனை அடிசுக் கலைச்சு நடிக்க விடவில்லை. ஆனால் பவானி ,சின்னக்கண்ணனை மட்டுமில்லை ,எங்கள் ஊருக்குள்ள எல்லா இளையவர்களின், கனவிலையும் கலர் கலரா வந்து நித்திரையைக் குழப்பிக்கொண்டு மிகப் பிரபலமான அழகில் எல்லாருமே கட்டினால் அவளைக் கட்ட வேண்டும் இல்லாட்டி மொட்டையைப் போட்டுக்கொண்டு சாமியாரப் போக வேண்டும் என்ற மாதிரி ஒரு அலை அந்த நேரம் அடிச்சுக்கொண்டு இருந்தது உண்மை.

ராமாயணத்தில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த கதையான சீதாலட்சுமி சுயம்வரம் நாடகம் கோசலையின் மைந்தன் தசரதனின் தனயன் ஸ்ரீராமன் , மிதிலை மன்னன் ஜெனகமகாராஜாவின் வில்லை வளைத்துக் காட்ட,ஆயிரம் வருசமா அதே ராமன்,அதே சீதைக்கு மாலை போடும் அரைச்ச தோசை மாவை ஆடுக்கல்லுக்கு குஞ்சரம் கட்டி சோடனை போட்டு அரைக்கும் நிகழ்வு. அது பார்க்க கலியான வீட்டில் மணவறையின் முன் நடக்கும் அமளி துமளி போலவே பிண்ணனி திரைச்சீலையில் அரண்மனை அலங்கார மண்டபங்களின் நடுவில் நடப்பது போன்ற நாடகம், அந்த வில்லை முறிக்கும் காட்சியில் ஒரு பெரிய மரத்தால செய்த வில் வைச்சு இருந்தார்கள்,அந்த மரவில்லை ஸ்ரீராமன் இல்லை யாருமே முறிக்க முடியாது அவளவு பாரமான வில்லு,

பிறகு எப்படி நாடகத்தில் ராமன் வளைச்சு சிவதனுசு வில்லை முருங்கைக்காயை முறிக்கிற மாதிரி முறிக்க முடியும் என்று சந்தேகம் உங்களைப்போலவே எனக்கும் பன்னிரண்டு தேசத்து ராசாக்களில் கலிங்கத்து ராஜா வேஷம் போடும் போது இருந்தது,அந்த வில்லில் ஒரு கொழுக்கி நடுவில் இருக்கு ,அதை கை விரலால் சுண்ட வில்லு ரெண்டா உடையும், ஸ்ரீராமன் மட்டும் தான் அந்தக் கொழுக்கியை விரலால் சுண்டிவிட வில்லு உடைய சீதாப்பிராட்டி விரலால் கொழுக்கியைச் சுண்டிய ஸ்ரீராமனின் ஆண்மையில் சரணடைந்து மாலையை சுயம்வரமாக கழுத்தில் போடுவா,இதுதான் கவிஞ்சர் கந்தப்பு கம்ப இராமயணத்தில இல்லை வால்மீகி ராமாயனதிலையும் இல்லாத அந்த வில்லை உடைக்கிற ஸீனில செய்து வைத்திருந்த உத்தி.

 

அந்த நாடகத்தில் பன்னிரண்டாவதா வரும் ஸ்ரீராமன் தான் ஜெனகனின் வில்லை உடைக்கவேண்டும். ஆனால் நாடகம் தொடங்க முதலே எனக்கு அந்த வில்லில இருக்கிற கொழுக்கியை நினைக்கவே கை குறு குறுக்கத் தொடங்கி விட்டது,அதைவிட அழகாக சோடிச்சு மேடையில் மாலையுடன் நிக்கும் சீதையைப் பார்க்க உடம்பெல்லாம் இன்னும் ஜெனரேற்றர் வைச்சு இழுத்த மாதிரி கரண்ட் பாயத் தொடங்க,எனக்கு முன்னால் நாலு ராஜாக்கள் போய் அந்த வில்லை தூக்கி வளைப்பது போல நடிச்சு, அது முறிக்க முடியாத மாதிரி கீழே போட்டு நடிச்சு கவலையுடன் சீதையை பார்த்துபோட்டு வர ,

 

" வில் கை வீரன் ராமன் நாம் எல்லாம் வெறும் கை வீரர், இதோ இப்போது கலிங்கத்து மன்னன் தன்னுடைய ஆண்மையைக் காட்ட வருகிறார்,வாருங்கள் கலிங்கத்து மகாராஜா "

 

என்று சொல்ல நான் அஞ்சாவதாக குத்துச் சண்டை வீரன் முகம்மது அலி மேடையில் பாயிற மாதிரி நான் மேடையில் பாஞ்சேன்.

அதில பேசுவதுக்கு ஒரு வசனமும் எனக்கு இல்லை,அதால வில்லை எடுத்து கவிஞ்சர் கந்தப்பு சொல்லித் தந்த மாதிரி முறிக்கிற நடிப்பு விட என்னோட நடிப்பு அதிகமானதால் ,சீதை என்னைப் பார்த்துச் சொண்டில சிரிக்க, " மங்கையின் புருவம் வில்லாகும் நோக்கிய பார்வை அம்பாகும் மாமலை ஓர் சிறு கடுகாகும்... " என்ற பாடல் நினைவுவர ,என் விரல் தவறுதால கொழுக்கியில் தட்டுப்பட்டு வில்லு ரெண்டா உடைஞ்சு போச்சு, சிதை குழம்பி மாலையை எனக்குப் போடவா என்று கவிஞ்சர் கந்தப்புவைப் பார்க்க , கவிஞ்சர் கந்தப்பு தலையில ரெண்டு கையையும் வைச்சுகொண்டு நரி போல பல்லை நற நற என்று நெரிசுக்கொண்டு என்னைப் பார்க்க, பார்வையாளர்கள் என்ன நடக்குது என்று விளங்காமல், ஒருவேளை இராமயணத்தை இப்ப மாற்றி எழுதிப்போட்டான்களா என்று நினைச்சோ என்னவோ விசில் மட்டும் பறந்தது.

கவிஞ்சர் கந்தப்பு உடன ஓடி வந்து திரையை இழுத்து ,

 

" அண்ணலும் மேல் நோக்க, அவளும் சற்று கீழ் நோக்கஎன்னதுவோ நடந்துவிட இருவருமே நிலை தவற ,வானமது பூச்சொரிய வையகத்தின் வாழ்த்தொலிக்க நங்கையவள் மண வைபோகம் மங்கலமாய் நடக்கும் , நாடகம் இடைவேளைக்கு பிறகு தொடரும் "

என்று சொல்லி முழு மேடையையும் திரைச்சீலை யால இழுத்து மறைசுப்போட்டு என்னட்ட வந்தார்,வந்து என்னோட காதைப் பிடிச்சு திருகி, " செம்மறி ஏண்டா ,,வில்லை உடைச்சனி, அது ராமன் தாண்ட்டா உடைக்க வேண்டும் , விழுவானே இப்ப நாடகத்தை இடையில நிப்பாட்டி இன்னொருக்க தொடக்கவைச்சுப் போட்டியே,எத்தினை சனம் நீ வில்லை உடைச்சதைப் பார்த்துதுகளோ தெரியாது,ஏண்டா கழுதை வில்லை உடைச்சனி " எண்டு திட்டினார்,

நான் சீதையைப் பார்த்துக்கொண்டே

 

" அய்யா தெரியாமல்,விரல் அந்த கொழுக்கியில தட்டுப்பட ,வில் உடைஞ்சு போச்சு,என்னை மன்னிச்சுக்கொள்ளுங்க அய்யா,நீங்க தானே நானே நடிக்கத் தெரியாது எண் டு சொல்லவும்,என்னோட உடம்பு பொலிவைப் பார்த்து ராசாவுக்கு நடிக்க வற்புறுத்தி பழக்கிநீங்க " என்றேன் .கவிஞ்சர் கந்தப்புக்கு கோபம் வந்திட்டுது,

 

" அடே விழுவானே நான் வில்லு உடைக்கிற மாதிரி நடிக்க எல்லாட பழகினன்னான் ,நீ ஏண்டா விழுவானே கொழுக்கியை இழுத்து சனத்துக்கு முன்னால பரிசு கெடுத்துப் போட்டியே, "

என்று திட்டினார்,நான் சீதையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன், அவளும் மாலையை ஒரு ஓரமாக வைச்சுப்போட்டு கவலையோட இருக்கிற மாதிரிதான் இருந்தாள்.

அதுக்கு பிறகு,

 

" ஆயிரத்தின் யானை பலம் படைத்த அசுரக் கோன் , அண்டை தூர தேசம் சேர்ந்த அமர்ந்த வீர மன்னர் வலிமை வீரம் தீரம் நிறைந்த புவியறிந்த வல்லவர் கலிங்கத்து ராஜா வில்லை உடைக்க முயற்சித்து முடியாமல், அந்த முயற்சியில் தன்னோட நாரியை முறிச்சுக்கொண்டு போய் விட்டார் "

என்ற கவிஞ்சர் கந்தப்புவின் அறிவிப்போடு, மேடையின் திரை விலக ஆறாவது ராஜா மேடையில் போய் வில்லை உடைக்க முயற்சிப்பதில் இருந்து நாடகம் தொடர்ந்து நடக்க ,நான் நல்லா நாரியை நிமிர்த்திக்கொண்டு, கலிங்கத்து ராஜா சோடனை எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு மேடையின் பின் பக்கத்தால குதிச்சு போக வெளிக்கிடும் போது,சீதையை பார்த்தேன் அவள் அப்பவும் கையில மாலையோடு கடைசியில் ஸ்ரீராமன் வந்து கொழுக்கியை சுண்டி வில்லை உடைப்பதுக்கு காத்துக்கொண்டு இருந்தாள்,நான் அவளுக்கு சிக்னலில்

" உது சரி வராது பவானி , நான் வில்லை எப்படி உடைச்சேன் எண்டு பார்தனி தானே பவானி , பேசாம வா பவானி ஓடிப் போவம் "

எண்டு கேட்டேன் ,அதை கவிஞ்சர் கந்தப்பு மேடையின் ஓரத்தில் இருந்து கண்ட்டுடு மறுபடியும் நரி போல பல்லை நற நற என்று நெரிசுக்கொண்டு என்னைப் பார்க்க தொடங்கவே நான் சத்தமில்லாமல் வீட்டை போட்டேன். எப்பவும் போல அந்த நாடகம் " பாவையின் பார்வையில் கூர்மையாய் ஒன்று வில்லது விழுந்தது துண்டுகளாய் இரண்டு எட்டடியில் எழில் சுமந்த அழகின் அவதாரம் சொட்டும் அழகில் நிறைந்த சீதையை மணந்தான் திக்கெட்டும் புகழ் நிறைந்த சக்ரவர்த்தி திருமகன் " என்று குடுத்துவைச்ச ஸ்ரீராமன் வில்லை உடைச்சு சுயம்வரம் நடந்து முடியும். அது எல்லாருக்குமே தெரிந்த முடிவுதான்.

 

அதுக்குப் பிறகு நாடகம் நடிக்கிறது மட்டுமில்லை,,சும்மாவும் வாசிகசாலைக்கு வம்பளக்கவும் போறதில்லை,ஆனால் எப்படியோ மறுபடியும் கவிஞ்சர் கந்தப்பு போட்ட ஜுலிய சீசர் நாடகத்தில் கிளியோபற்றாவா பொம்பிளை வேஷம் போட்டு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,ஆனால் அந்த நாடகத்தில் பொம்பிளை வேஷம் போட்டுக்கொண்டு, மேடையை விட்டு இறங்கி ,,,,,போன நேரம் ஒரு ரோட் சைட் ரோமியாவால் கற்பழிக்கப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவத்தின் பின் நாடகம் நடிப்பதை அடியோடு விட்டேன், ஜுலிய சீசர் நாடகத்தில் எனக்கு நடந்த நாடகத்தைப் பிறகு எழுதுறேன் ..

 

நாவுக் அரசன்
ஒஸ்லோ

 

https://www.facebook.com/arasan.eliyathamby/posts/10205843873357221:0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.