Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் ரணில் பாதுகாப்பில் கோட்டா…?

Featured Replies

இலங்கை அரசியலில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது. காட்டுத் தீ போல் சுதந்திரக் கட்சி ஆதிக்கம் சந்திரிக்காவினதும் மைத்திரியினதும் கட்டுப்பாட்டில் வந்த கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு விவகாரம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ பற்றியது.

அவர் எங்கிருக்கின்றார் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டாரா? சிங்கப்பூர் போய்விட்டார். மாலைதீவு போய்விட்டார் என்று ஒன்றுக் கொன்று முறனான செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் எமக்கு கிடைக்கின்ற நம்பகத்தனமான தகவல்களின் படி அவர் கொழும்பை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரை அப்படி சுலபமாக அனுப்பிவைக்கவும் தற்போதய ஆளும் தரப்பு  கடும் போக்காளர்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும்  ரணில் விக்கிரமசிங்ஹவுக்குமிடையில் நடந்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவர் தற்போது ரணில் விக்கிரசிங்ஹாவின் பாதுகாப்பில்  மறைவான இடமொன்றில் கொழும்பில் அல்லது புற நகரில் வைக்கப்பட்டிக்கின்றார் என்று தெரிகின்றது.

ரணில் விக்கிரமசிங்ஹாவின் இந்த நடவடிக்கை ஆளும் தராப்பு கடும் போக்காளர்களுக்கு தெரியவந்து சம்பவம் உறுதிப்படுத்தப்படுமானால்  ரணிலுக்கு இது விடயத்தில் நெருக்கடி நிலை தோன்ற இடமிருக்கின்றது.

எனவே ஏறக்குறைய ரணில் விக்கரமசிங்கஹாவின் வீட்டுக்காவலில் முன்னாள் பாதுகாப்பச் செயலாளர்  பாதுகாக்கப்படுகின்றார் என்று நாம் இதனை எடுத்துக் கொள்ள முடியும்.

கோட்டாவை ரணில் பாதுகாக்கின்றார் என்ற விடயம் கண்டுபிடிக்கப்படும்போது  ரணிலுக்கு ஆளும் தரப்பினர் மத்தியில் பலத்த நெருக்கடிகள் தோன்றும்.

கோட்டாபே அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் அவருக்கு அங்கு செல்வது ஆபத்தான காரியமாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

koththa-600x391.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/37462.html#sthash.ZAV55tOM.dpuf

 

நான் தேசத்துரோகியுமில்லை திருடனுமில்லை: கோத்தபாய ராஜபக்ச

 

rajapaksa_poster-293x150.jpg

 

நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களையும் நாட்டின் ஏனைய விவகாரங்களில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதற்கும் பிரதான காரணமாக இருந்ததாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும், இலங்கை நிர்வாகத்தில் ஈடுபடுத்தப்படுவதற்காகவே விசேடமாக இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட்டவருமான கோத்தபாய ராஜபக்ச மீது முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்ற விசாரணைப் பிரவில் முறையிட்டுள்ளதோடு அவர் சம்பந்தப்பட்ட மேலும் சில முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில் தான் ஒரு தேசத்துரோகியோ திருடனோ இல்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.

யுத்த நிறைவுக்குப் பின்னர் தாம் நாட்டில் ஏராளமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதாகவும் அவற்றை அறிந்து கொள்வதற்கே பல காலங்கள் எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் தான் தேசத்துரோகியோ திருடனோ இல்லையெனவும் தெரிவித்துள்ளதோடு அவற்றிற்கு முகங்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனநாயகம் நிலவியதனால் தான் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளமையும் இறுதி நேரத்தில் இராணுவ உயர் அதிகாரிகளும் ராஜபக்ச சகோதரர்களின் கட்டளைகளை ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.canadamirror.com/canada/37450.html#sthash.cvGBXYVD.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ரணில் பாதுகாப்பில் கோட்டா…?////

ஒரு காலத்தில் கோட்டா தான் பலரின் பாதுகாப்பை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார்......இன்று ரணிலின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய சூழ்நிலை.......எதுவாக இருந்தாலும் சிங்களவன் மற்றைய சிங்களவனை பாதுகாத்து கொள்கின்றான்.....அவனின் வெற்றியின் பலமும் அது தான்......

ஆனால் ஆட்சிகளும் அதிகாரங்களும் பதவிகளும் சில காலங்களுக்கு தான் என்பதனை கோட்டா போன்றவர்கள் புரிய தொடக்கி இருப்பார்கள்........புரிதல்கள் என்பது காலம் கடந்து தானே வருவது............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் ரணில் பாதுகாப்பில் கோட்டா…?////

ஒரு காலத்தில் கோட்டா தான் பலரின் பாதுகாப்பை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார்......இன்று ரணிலின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய சூழ்நிலை.......எதுவாக இருந்தாலும் சிங்களவன் மற்றைய சிங்களவனை பாதுகாத்து கொள்கின்றான்.....அவனின் வெற்றியின் பலமும் அது தான்......

ஆனால் ஆட்சிகளும் அதிகாரங்களும் பதவிகளும் சில காலங்களுக்கு தான் என்பதனை கோட்டா போன்றவர்கள் புரிய தொடக்கி இருப்பார்கள்........புரிதல்கள் என்பது காலம் கடந்து தானே வருவது............

 

வெள்ளைக்காரனிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாள் தொடக்கம் ஈழத்தமிழன் சிங்களவனை பாதுகாத்தே வந்துள்ளான். ஆனால் சிங்களவன் தன்னைதானே பாதுகாத்து வாழ்ந்து வருகின்றான்.
 
எங்கடை ஜாம்பவான்கள்!!!!!  தங்கடை சொந்தபந்தம் நடுத்தெருவுக்கு வந்தாலும்....மற்றவன் எங்களைப் பார்த்து பல்லிளிக்க வைக்கிறதிலை வலு கெட்டிக்காரர்கள். 
 
நல்ல கருத்திற்கு நன்றி சுண்டல்.
  • கருத்துக்கள உறவுகள்

Opps sorry wrong place :D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்

கோத்தாவுக்கு கே பியைப் போல மகிந்தருக்கு கோத்தா இருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே  நாடகம்...

சுபமான முடிவு வரும்  சிங்கள இனவாதத்துக்கு...

 

அமெரிக்கனுக்கு அப்பம்

தமிழனுக்கு

ஆப்பு மட்டும் தான்... :(

  • கருத்துக்கள உறவுகள்

மேர்வின் முறைப்பாடு செய்ததெல்லாம்கூட நாடகமே..

எதிராளி வரமுன்னம் எதிராளியின் நடவடிக்கையை முன்பே செய்துவிடுவதும் ஒரு தந்திரம். உதாரணமாக டாக்டர் கலைஞர் மனிதச்சங்கிலி நடத்தியமை, மூன்று மணிநேரம் உண்ணாவிரதம் இருந்த விடயங்கள். :huh: இதன்மூலம் எதிராளியின் அடுத்த செயற்பாட்டைக் குழப்புவது இலகு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.