Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் உயிரிழந்த அனைவரும் பொதுநாளில் நினைவு கூரப்பட வேண்டும்! - பிரித்தானிய எம்.பி கருத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
lord-naseby-200-news.jpg

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், பொதுவான நாள் ஒன்றை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க முடியுமா என்பது குறித்து தாம் ஆராய்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பாகவுள்ள நசெபி பிரபு தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட இவர், வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்கார, யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், சிவில் சமூகப் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட தரப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

   

இதையடுத்து, புன்னாலைக்கட்டுவானிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்த பொதுமக்கள் விடுதலைப்புலி உறுப்பினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரை நினைவுகூரும் முகமாக ஒரு நாளை தெரிவு செய்து அந்த நாளை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க சாத்தியங்கள் உள்ளதா என ஆராய்ந்து வருகின்றோம். அவ்வாறானதொரு நாளை அனுஷ்டிக்கும் நிலை நிச்சயமாக உருவாக வேண்டும். அந்நாளே சமாதானத்துக்கான நாளாக இருக்கும்.

பொதுமக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தேன். இராணுவத்துக்கு தேவையான இடத்தை தவிர ஏனைய இடங்களை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்கள். எனவே அதுவும் மிகவிரைவில் சாத்தியம் ஆகும் நிலை உண்டு. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதேவேளை புலம்பெயர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்' என தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=125867&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் இறுதிப்போரில் பொதுமக்கள் ஒருவரும் இறக்கவில்லை என வாதாடியவர்.. இப்ப பிளேட்டை மாத்துது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் இறுதிப்போரில் பொதுமக்கள் ஒருவரும் இறக்கவில்லை என வாதாடியவர்.. இப்ப பிளேட்டை மாத்துது.

 

ஆள் கண்ணும்  கருத்துமாகத்தான் இருக்கு..

புலம் பெயர் தேசங்களில் நடக்கும் மாவீரர் நாட்கள் பெரும் சிக்கலாக இருக்கு இவைக்கு.

அதை மாற்றத்தான் இந்த முயற்சி... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் இறுதிப்போரில் பொதுமக்கள் ஒருவரும் இறக்கவில்லை என வாதாடியவர்.. இப்ப பிளேட்டை மாத்துது.

இந்தாளின் கருத்தை அர்ஜுன் அவர்கள் கொஞ்சநாள் கொப்பி பேஸ்ட் பண்ணிக்கொண்டு திரிந்ததாக ஞாபகம்.

இந்தாள் இப்ப பிளேட்ட மாத்தி இறந்த புலிகளுக்கும் நினைவுநாள் எண்டுது.
இனி இவருக்கு டிலீட் (delete) தான். 
no more copy & paste. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.