Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போ.நி.க.கு வின் திடீர் ஞானோதயம்

Featured Replies

ஏ-9 பாதை மூடப்பட்டமை யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்: கண்காணிப்புக் குழு

[ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 07:01 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழர் தாயகப் பிரதேசங்களை யாழ். குடாநாட்டுடன் இணைக்கும் ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

"சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும் 5 இலட்சம் மக்களை யாழ். குடா நாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஓலப்ஸ் டொடிட்டர் தெரிவித்துள்ளார்.

"ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப்ச்சுக்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் ஏ-9 பாதையை மூடியிருப்பதன் மூலமாக அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை" என்றும் அவர் கூறினார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் உள்ள குழந்தைகள் போசாக்கின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுவருவதாக யாழ். போதனா மருத்துவமனை நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று ஆசிய மனித உரிமைகள் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பாவிலிருந்து கடந்த வாரம் இலங்கைக்கு வந்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொஹான் ஷோல்வ்பெர்க்கும் ஏ-9 பாதை திறப்பு தொடர்பாக இந்த வாரம் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

http://www.eelampage.com/?cn=29621

  • தொடங்கியவர்

ஏ-9 பாதைக்கு மாற்றாக பூநகரியூடான பாதை: சிறிலங்கா யோசனை

[ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 07:13 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழர் தாயகப் பிரதேசங்களை யாழ். குடாநாட்டுடன் இணைக்கும் ஏ-9 பாதையைத் திறக்காமல் பூநகரியூடான மாற்றுப் பாதை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் யோசனை தெரிவித்துள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களினுடாக விடுதலைப் புலிகளுக்கு இந்த யோசனையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனீவா - 02 பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ஏ-9 பாதை திறப்புக்கான முயற்சிகளில் இணைத் தலைமை நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஏ-9 பாதையை திறக்க சிறிலங்காவுக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் மாற்றுப் பாதை யோசனயை சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ளது.

இதனிடையே ஏ-9 பாதை திறக்கப்பட உள்ளதாக யாழ். பண்பலை வரிசையில் ஒரு செய்தி ஒலிபரப்பானது. முகமாலை பகுதியில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வரும் நிலையில் இது சாத்தியமில்லை என்பதால் மக்கள் குழப்பமடைந்தனர்.

http://www.eelampage.com/?cn=29622

  • தொடங்கியவர்

யாழில் 1 கிலோ அரிசி ரூ. 300- சீனி ரூ. 250- 1 நெருப்புப்பெட்டி ரூ. 20

[ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 04:51 ஈழம்] [ச.விமலராஜா]

யாழ்ப்பாணத்தில் 1 கிலோ அரிசி ரூ. 300, சீனி ரூ. 250, 1 நெருப்புப்பெட்டி ரூ. 20-க்கு விற்கப்படுவதாக யாழ். அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். நிலைமைகள் தொடர்பில் கே.கணேஸ் கூறியதாவது:

யாழ். சந்தைகளில் குறிப்பிட்ட அளவுதான் பொருட்கள் உள்ளன. இதனால் யாழில் பட்டினி கிடக்கும் அவலம் அதிகரித்துள்ளன.

அண்மைய கடல் நடமாட்டத் தடைகளால் சுமார் 8026 மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்குள் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கும் குறிப்பிட்ட அளவிலான பொருட்களே வழங்கப்படுகின்றன.

யாழில்

ஒரு கிலோ சீனி ரூ. 250

ஒரு கிலோ அரிசி ரூ. 300

ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ. 300

கொழும்பில் ரூ. 2-க்கும் ரூ. 3-க்கும் விற்கக்கூடிய நெருப்புப் பெட்டி ஒன்றின் விலை ரூ. 20 ஆக உள்ளதால் பொதுமக்கள் பலரும் பொருட்களை வாங்கத் தயங்குகின்றனர்.

யாழ்ப்பாணத்துக்கு மேலதிகமான பொருட்கள் வரும் நிலையிலேயே இந்த விலை உயர்வு குறையும் என்றார் அவர்.

இதனிடையே "யாழ்ப்பாணத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பியிருப்பதாக அரசாங்கம் கூறினாலும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை நீடிப்பதாக" யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

"ஜெனீவா-2 பேச்சுவார்த்தை தோல்வியடைந்த உடனே யாழில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துவிட்டன" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"ஒரு நெருப்புப்பெட்டியை கூட வாங்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். ஏனெனில் அதன் விலை ரூ. 20" என்றார் அவர்.

"சிறிலங்கா அரசாங்கமானது அரிசி மற்றும் மா ஆகியவற்றைத்தான் அனுப்பியுள்ளது. இவை இரண்டை மட்டும் வைத்து மக்கள் வாழ முடியாது. தேங்காய், பால் மா மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் ஆகியவை கடுமையாக உயர்ந்துள்ளன. இவற்றையும் அரசாங்கம் அனுப்ப வேண்டும். ஏ-9 பாதை திறக்கப்படும் போதுதான் அத்தியாவசியப் பொருட்கள் தாமதமின்றி கிடைக்கும்" என்றும் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

வெள்ளவத்தை தபாலகத்திற்க்கு படையெடுக்கும் உறவுகளுக்க ஒரு வேண்டுகோள்.

ஒட்டும் நாடாக்கள், மண்ணிற காகிதங்கள், கத்தரிக்கோல்கள் என்பவற்றுடன் நீங்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க நிற்பதைக் கண்டேன்.

நீங்கள் உங்கள் அன்பு உறவுகளுக்காக அனுப்பிய பொதிகளால் தபாலகமே நிறைந்து வழிகிறது.

சக்தி தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவித்த திருமலை தபாலக அதிபர் அனுப்பப்படும் பொதிகள் அங்கு தேங்கிக் கிடப்பதாகவும் அவை அனைத்தும் கடற்படையினரால் வெட்டித்திறந்து சோதனை செய்த பின்னர் அவை தபாலக ஊழியர்களால் மீளப் பொதிசெய்யப்பட்டு வாய்ப்புக் கிடைத்தால் கடற்படையினால் சிறிது சிறிதாக கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களையே அனுப்ப முடியாது திண்டாடிக்கொண்டுள்ள அரசு இவற்றை முன்னுரிமை கொடுத்து அனுப்புமா?

அப்படி நீங்கள் அனுப்பும் அத்தியாவசியப் பொருட்கள் தாமதமாக செல்லும் போது பழுதடைந்து விடாதா?

ஏற்கனவே அனுப்பப்பட்ட இவ்வாறான பொருட்களின் ஒரு தொகுதியேனும் சென்று உரியவரைச் சேர்ந்ததா?

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எனப்படுவோர் இந்த சிறிய விடையங்களிளாவது தலையிட்டு மக்களுக்க உதவுவார்களா?

  • தொடங்கியவர்

குடாநாட்டுக்கு உணவுப் பொதிகளை

தபாலில் அனுப்பத் தடையேதும் இல்லை

அஞ்சல்மா அதிபர் சேனாதீர தகவல்

யாழ். குடாநாட்டிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி களை தபால் நிலையங்கள் ஊடாக அனுப்பிவைக்க முடியும் என்று தபால்மா அதிபர் சேர்வின் சேனாதீர நேற்று தெரி வித்தார்.

யாழ். குடாநாட்டிற்கு அனுப்பவென ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதிகள் உரி மையாளர்களிடமே திருப்பி வழங் கப்படுவதாக வெளியாகிய செய்திகளை அவர் மறுத்தார்.

அத்தியாவசிய உணவுப் பொதிகள் பஸ் அல்லது ரயில் மூலம் திருகோண மலைக்கு அனுப்பப்பட்டு

அங்கிருந்து கடல்மார்க்கமாக காங்கேசன் துறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்றும் தபால் மா அதிபர் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் அத்தியாவ சியப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு உருவாகி பட்டினி நிலைமை ஏற்பட்டிருப்பதை அடுத்து குடாநாட் டில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு சீனி, பால்மா, சவர்க்காரம் போன்ற பொருள் களை கொழும்பில் உள்ள தமிழர்கள் தபால் மூலம் அனுப்பி வருகின் றனர்.

இதனால் பெருமளவு தபால் பொதி களைக் கையாளும் நிலைமை தபாலகங் களுக்கு ஏற்பட்டிருக்கிறது. (க)

http://www.uthayan.com/Pages/news/today/14.htm

இது உண்மைதானா?

  • தொடங்கியவர்

தேவையான அளவைவிட குறைவாகவே

குடாநாட்டுக்குப் பொருள்கள் கிடைத்தன!

மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலை

இதனால்தான் என்கின்றார் அரச அதிபர்

யாழ். மாவட்டத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கோரப்பட்ட அளவிலும் பார்க்கக் குறைவாகவே அரசால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதா

  • தொடங்கியவர்

ஏ9 வீதியைத் திறப்பது குறித்து ஜனாதிபதியுடன் ரணில் பேச்சு!

பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படாமல் திறப்பது குறித்து விரைவில் முடிவாம்

கொழும்பு,நவம்பர் 4

ஏ9 பாதையைத் திறப்பதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து உண்டாகாத வகையில் அப்பாதையை எவ்வாறு திறப்பது என்பது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி, ரணிலிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தகவல்களை எதிர்க்கட்சித் தலை வரே நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் வெளியிட்டார்.

தேசிய ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்று ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்சொன்ன தகவல்களைத் தெரிவித்தார்.

ரணில் விக்கிரசிங்க இது தொடர்பாகப் பேசுகையில் கூறியதாவது:

ஏ9 பாதை மூடப்பட்டதன் காரணமாக மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று தோன்றி யிருப்பது உண்மை. இந்த நிலையை நீக்க வேண்டியது அவசியம். அதனால், இப் பாதையைத் திறப்பது தொடர்பாக நான் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினேன். ஏ9 பாதையைத் திறப்பதால் நாட்டின் பாதுகாப் புக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது. அவ் வாறு நிகழாதவண்ணம் பாதையை எவ் வாறு திறப்பது என்பது பற்றி விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி என்னிடம் கூறினார்.

இரு தசாப்தங்களாகத் தொடர்ந்த யுத் தத்தால் இந்த நாடு சந் தித்த இழப்புகள் அதிகம். உயிர் மற் றும் பொருள் சேதங் கள் ஏற்பட்டதோடு பொருளாதாரத்திலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் நாடு மிஞ் சாது. உடனடியாக இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண் டும் என்ற உண்மை எம்மால் உணரப்பட் டது.

அதற்கமைவாகவே ஐக்கிய தேசியக் கட்சி 2002 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கான ஒரு வழியை உரு வாக்கியது. நிலையான சமாதானம் எட்டப்படுவதற்கு முன் எமது ஆட்சி கலைக் கப்பட்டமை துரதிஷ்டம்.

இனப்பிரச்சினையைத் தீர்க்க இராணுவ நடவடிக்கை ஒருபோதும் சரிவராது. அரசி யல் தீர்வுதான் ஒரே வழியென இப்போதைய அரசும் உணர்ந்திருக்கின்றது.

சமாதானம் மூலம் தீர்வு ஒன்றைக் காண விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கடந்த மாவீரர் தினச் செய்தியில் ஜனாதிபதிக்கு காலக்கெடு ஒன்றை வழங்கினார்.

இந்தக் காலக்கெடு எதிர்வரும் 27ஆம் திகதி வரும் மாவீரர் தினச் செய்தியுடன் முடிவுக்கு வருகின்றது.

அதன்பின் யுத்தம் வெடிக்கலாம் என்ற ஆபத்து உள்ளது. எனவே, யுத்தநிறுத்த உடன்படிக்கையைச் சீராக நடைமுறைப்படுத்தி யுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்றார். (அக1)

http://www.uthayan.com/Pages/news/today/01.htm

ரணிலின் அரசியல் சாணக்கியம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.