Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலகுமாரன் உள்ளிட்ட காணாமற்போனோரைத் தேடித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு பசீர் கடிதம்

Featured Replies

paseer_CI.jpg
 
வட, கிழக்கில் காணாமற்போன அனைவரையும் தேடித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இன்று (6)அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
 
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வெளிவந்த பல்வேறு தகவல்களுடன், வடக்கில் கைதான பலர் இரகசிய முகாம்களில் இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இந்த விடயங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பசீர் சேகுதாவூத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதற்கமைய, 2009 ஆம் ஆண்டு படையினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் ஈரோஸ் அமைப்பின் பொதுக் குழுத் தலைவரும், ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவருமான வே. பாலகுமார் மற்றும் அவரது மகன் சூரியதீபன் ஆகியோரைக் கண்டுபிடிப்பதில் நேரடியாக தலையிடுமாறு அவர் கோரியுள்ளார்.
 
வே. பாலகுமாரன் அமைப்புச் சார்ந்த செயற்பாட்டாளர் அல்ல எனவும், அவரது மகன் எந்தத் தருணத்திலும் ஆயுதமேந்தி போராடவில்லை எனவும், வன்னியில் தொலைத்தொடர்பு நிலையமொன்றில் பணியாற்றியவர் எனவும் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
 
எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி கண்காணிப்பு, கரிசனையூடாக குறித்த இருவரையும் கண்டுபிடித்துத் தருமாறும் பசீர் சேகுதாவூத் தமது கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகளையா!

  • தொடங்கியவர்

உயிரோடு இருக்கிறாரா க.வே.பாலகுமாரன்?

 

balakumaran++and+his+son.jpg

 

பத்திரிகை திரு.க.வே.பாலகுமாரன் அவர்கள் 17 மே 2009 அன்று இராணுவத்திடம் வெள்ளைக் கொடியுடனும் மேலும் சில உயர்நிலைத் தலைவர்களுடனும் சரணடைந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

 
இராணுவத்தினரின் பகுதிக்குள் தனது மகனுடன் சரணடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பிரத்தியேகப் புகைப்படத்தினை வெளியிட்டள்ளது. இராணுவத்திற்குள் இருக்கும் தங்களது தகவல் பிரிவிடமிருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படம் இதுவெனத் தெரிவித்துள்ளனர்.
 
படம்:Sri Lanka Guardian
 
இப்புகைப்படத்தின் பின்புலத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக அமைச்சர் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட செய்தி இதன்மூலம் பொய்யென நிரூபிக்கப்பட்டடுள்ளது.
 
புனர்வாழ்வு அமைச்சகத்தின் அறிக்கையிலே திரு.க.வே.பாலகுமாரன் அவர்களினதும் திரு.யோகி அவர்களினதும் துணைவியார்கள் விதவைகளிற்கான நிவாரணம் பெறுவதாகக் கூறியிருந்ததை அடுத்து புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க அவர்களை வினவியபோது சரணடைந்த 11,686 போராளிகளிற்குள் 737 போராளிகள் தீவிர போரளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பட்டியலுக்குள் இவர்கள் பெயர்கள் வரவில்லையெனவும் அறிவித்திருந்தார்.
 
ஆனாலும் இந்தப்புகைப்படம் திரு.க.வே.பாலகுமாரன் அவர்களும் அவரது மகனும் இராணுவத்தின் பிடிக்குள் இருந்ததை நிரூபித்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்டது நிரூபிக்கப்பட்டால் சிறீலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்த்திற்கு இந்தப் புகைப்படமும் பெரிய சான்றாக அமையும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

பசீர் சேகுதாவுத் பற்றி ஒரு தகவல்,

 

1. இவர் கருணா அம்மானுடன் ஒன்றாகப் படித்தவர்

2. கருணாவை விடுதலைப் புலிகளிடமிருந்து உடைத்து வெளியேற்றியதில் ரணிலின் முகவராகச் செயற்பட்டவர்

3. மட்டக்கள்ப்பிலிருந்து கருணா கொழும்பிற்குத் தப்பிச் சென்றது பசீர் சேகுதாவுத்தின் வாகனத்தில்தான்

 

 

இவர் இப்போது புலிகளின் முக்கியஸ்த்தர்கள் பற்றிக் கண்ணிர் வடிப்பது ஆச்சரியமளிக்கிறது!

 

 

ரகுநாதன்

 

அது பசீர் இல்லை.

 

அலி சாஹிர் மௌலானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.