Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படாத கோபத்தில் ஹைதராபா

 

ஹைதராபாத் அணிக்காக ரூ.2 கோடி செலவில் ஏலத்தில் வாங்கப்பட்டவர் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து நாட்டின் அதிரடி வீரரான பீட்டர்சன், வெகு காலமாக அந்த அணியில் சேர்க்கப்படாமல் உள்ளார். எனவே, இங்கிலாந்து அணிக்காக எப்படியும் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில், ஐபிஎல் தொடரை பீட்டர்சன் புறக்கணித்து வந்தார். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மாஜி வீரர் ஆன்ட்ரூ ஸ்டார்ஸ், பீட்டர்சனை மீண்டும் அணியில் சேர்க்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்.

 

 இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனக்கு மிகவும் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும், ஐபிஎல் தொடரில் ஆடி வேதனையை போக்க உள்ளதாகவும் பீட்டர்சன் கூறியுள்ளார். ஹைதராபாத் அணியும், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாகும். ஆனால், இன்னும் தகுதி பெறவில்லை. 2 லீக் ஆட்டங்கள் அந்த அணிக்கு எஞ்சியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை, மும்பைக்கு எதிராக கடைசி லீக்கில் அந்த அணி ஆடும். அதில், பீட்டர்சன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-angry-hurt-kevin-pietersen-join-sunrisers-hydera-226682.html

  • Replies 449
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பஞ்சாப் அணி 106 ரன்கள்

 

மொகாலி: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 106 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் ஐ.பி.எல்., லீக் தொடர் நடக்கிறது. மொகாலியில் இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. மழை பெய்ததால் உண்டான ஈரப்பதம் காரணமாக, போட்டி 2.45 மணி நேரம் தாமதமாக துவங்கியது. போட்டி தலா 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பவுலிங் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு சகா (31) அதிரடி துவக்கம் தந்தார். வோரா (11), மேக்ஸ்வெல் (10), மில்லர் (14) உள்ளிட்டோர் விரைவில் வெளியேற, பஞ்சாப் அணி 10 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் (20), ரிஷி தவான் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1251335

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பஞ்சாப் அணி வெற்றி
 

மொகாலி: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 50வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மழை காரணமாக துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

 

 

'டாஸ்' வென்ற பெங்களூரு அணி முதலில் 'பவுலிங்' தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 10 ஓவரில் 6 விக்கெட்டுகு்கு 106 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு அதிரடி வீரர்களான கெய்ல், டிவிலியர்ஸ், கோஹ்லி சொத்த, 10 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து 22 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1252158

  • தொடங்கியவர்

29ppydd.png

 

9iu06h.png

  • தொடங்கியவர்

அடுத்த நாட்களில் நடைபெற இருக்கும் போட்டிகள்

 

Thu May 14 (20 ovs) 20:00 local (14:30 GMT | 16:30 CEST)
51st match - Mumbai Indians v Kolkata Knight Riders Wankhede Stadium, Mumbai LIVE D/N
Partly Cloudy30 - 32° C

 

Fri May 15 (20 ovs) 20:00 local (14:30 GMT | 16:30 CEST)
52nd match - Sunrisers Hyderabad v Royal Challengers Bangalore Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad LIVE D/N
PM Thunderstorms25 - 35° C

 

Sat May 16 (20 ovs) 16:00 local (10:30 GMT | 12:30 CEST)
53rd match - Kings XI Punjab v Chennai Super Kings Punjab Cricket Association Stadium, Mohali, Chandigarh LIVE D/N
Sunny23 - 38° C

 

Sat May 16 (20 ovs) 20:00 local (14:30 GMT | 16:30 CEST)
54th match - Rajasthan Royals v Kolkata Knight Riders Brabourne Stadium, Mumbai LIVE D/N
Mostly Sunny30 - 34° C

 

Sun May 17 (20 ovs) 16:00 local (10:30 GMT | 12:30 CEST)
55th match - Royal Challengers Bangalore v Delhi Daredevils M Chinnaswamy Stadium, Bangalore LIVE D/N
Thunderstorms21 - 29° C

 

Sun May 17 (20 ovs) 20:00 local (14:30 GMT | 16:30 CEST)
56th match - Sunrisers Hyderabad v Mumbai Indians Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad LIVE D/N

 

 

  • தொடங்கியவர்

இக்கட்டான நிலையில் மும்பை அணி

 

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதுகி்ன்றன. இதில் வாழ்வா, சாவா நிலையில் களமிறங்கும் மும்பை அணி, சொந்த மண்ணில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 8வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 51வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, காம்பிர் வழிநடத்தும் கோல்கட்டா அணியை எதிர்கொள்கிறது.

 

 

கட்டாய வெற்றி:

மும்பை அணி, இதுவரை விளையாடிய 12 போட்டியில் 6 வெற்றி, 6 தோல்வி உட்பட 12 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றாமல் மட்டுமே ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலையில் மும்பை அணி உள்ளது.

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்ற மும்பை அணி, பெங்களூருவிடம் ‘அடி’ வாங்கிய சோகத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக அரைசதம் கடந்த சிம்மன்ஸ் மீண்டும் கைகொடுக்கலாம். துவக்க வீரராக பார்த்திவ் படேல் எழுச்சி காண வேண்டும். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (376 ரன்), போலார்டு (309) நம்பிக்கை தருகின்றனர். ‘மிடில்–ஆர்டரில்’ அம்பதி ராயுடு, உன்முக்த் சந்த் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.

 

பெங்களூருவுக்கு எதிராக மும்பை அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. இப்போட்டியில் பவுலிங்கில் சொதப்பிய பம்ரா, பாண்ட்யா ரன் வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். வேகப்பந்துவீச்சில் மலிங்கா (16 விக்.,), மெக்லீனகன் (10) சிறப்பாக செயல்படுகின்றனர். ‘சுழலில்’ ஹர்பஜன் சிங் (12) ஆறுதல் தருகிறார். இவருக்கு சுசித் ஒத்துழைப்பு தர வேண்டும்.

 

 

உத்தப்பா நம்பிக்கை:

கோல்கட்டா அணி, இதுவரை விளையாடிய 12 லீக் போட்டியில் 7 வெற்றி, 4 தோல்வி உட்பட 15 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான முதலிரண்டு இடங்களை உறுதி செய்யலாம்.

‘டாப்–ஆர்டரில்’ ராபின் உத்தப்பா (325 ரன்), கேப்டன் காம்பிர் (288), மணிஷ் பாண்டே (203) நம்பிக்கை தருகின்றனர். சூர்யகுமார் யாதவ் எழுச்சி கண்டால் நல்லது. ‘மிடில்–ஆர்டரில்’ யூசுப் பதான் (216 ரன்), ரசல் (287) ஆகியோரின் அதிரடி தொடரும் பட்சத்தில் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.

வேகப்பந்துவீச்சில் ரசல் (11 விக்.,), உமேஷ் யாதவ் (9 விக்.,) சிறப்பாக செயல்படுகின்றனர். மார்னே மார்கல் அணிக்கு திரும்பும் பட்சத்தில் வேகத்தின் பலம் அதிகரிக்கும். ‘சுழலில்’ பியுஸ் சாவ்லா (11 விக்.,), பிராட் ஹாக் (9 விக்.,), சுனில் நரைன் (6) இருப்பது பலம். பகுதி நேர பந்துவீச்சில் யூசுப் பதான், போத்தா கைகொடுத்தால் சுலப வெற்றி பெறலாம்.

 

இதுவரை...

ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா, மும்பை அணிகள் 15 முறை மோதின. இதில் கோல்கட்டா 10, மும்பை 5 போட்டிகளில் வென்றன.

 

பதிலடி வாய்ப்பு

இம்முறை கோல்கட்டாவில் நடந்த போட்டியில் கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இத்தோல்விக்கு பதிலடி கொடுக்க இன்றைய போட்டியின்மூலம் மும்பை அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

http://sports.dinamalar.com/2015/05/1431536216/rohitindiaipl.html

  • தொடங்கியவர்

Breaking Now ‍ஐ‍.பி.எல். சீசன்-8 தொடாிலிருந்து கெவின் பீட்டா்சன் விலகல்...

 

சன் ரைசா்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாட இருந்தார் கெவின் பீட்டா்சன்

 

 காயம் காரணமாக ஐ‍.பி.எல்.தொடாிலிருந்து விலகுவதாக அறிவிப்

 

இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கிறார்

 

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

மும்பை அணி 171 ரன்கள்


 

மும்பை: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 171 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று மும்பையில் நடக்கும் லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதுகி்ன்றன. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பவுலிங் தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு சிம்மன்ஸ் (14) ஏமாற்றினார். சாகிப் 'சுழலில்' பார்த்திவ் படேல் (21), ராயுடு (2) சிக்கினர். ரோகித் 30 ரன்கள் எடுத்தார். பின் இணைந்த பாண்ட்யா, போலார்டு ஜோடி அதிரடி காட்டியது. பாண்ட்யா அரை சதம் அடித்தார். மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ரோகித் (33), பாண்ட்யா (61)

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1252161

 

  • தொடங்கியவர்

மும்பை அணி வெற்றி

 

மும்பை: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பவுலிங் தேர்வு செய்தார்.

 

மும்பை அணிக்கு சிம்மன்ஸ் (14) ஏமாற்றினார். சாகிப் 'சுழலில்' பார்த்திவ் படேல் (21), ராயுடு (2) சிக்கினர். ரோகித் 30 ரன்கள் எடுத்தார். பின் இணைந்த பாண்ட்யா, போலார்டு ஜோடி அதிரடி காட்டியது. பாண்ட்யா அரை சதம் அடித்தார். மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ரோகித் (33), பாண்ட்யா (61) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கோல்கட்டா அணிக்கு உத்தப்பா (25) வெகு நேரம் நிலைக்கவில்லை. மனிஷ் பாண்டே (1) ரன்-அவுட் ஆனார். காம்பிர் 38 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் (52) அரை சதம் அடித்தார். சாகிப் 23 ரன்கள் எடுத்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பியுஸ் சாவ்லா (1), உமேஷ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1252161

  • தொடங்கியவர்

1zyk9u.png

  • தொடங்கியவர்

‘பிளே–ஆப்’ சுற்றில் சென்னை

 

புதுடில்லி: எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்றது. மீதமுள்ள 3 இடத்தை பிடிக்க, 5 அணிகள் இடையே போட்டி காணப்படுகிறது.

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இந்த வாரத்துடன் லீக் சுற்று போட்டிகள் முடிந்து, ‘பிளே ஆப்’ சுற்று போட்டிகள் அடுத்த வாரம் துவங்குகின்றன.

இதுவரை நடந்த 51 லீக் போட்டிகள் அடிப்படையில், சென்னை (16 புள்ளி), கோல்கட்டா (15), ஐதராபாத் (14), ராஜஸ்தான் (14), மும்பை (14), பெங்களூரு (13) அணிகள் முதல் 6 இடங்களில் உள்ளன.

 

 

டில்லி (10), பஞ்சாப் (6) அணிகள் கோப்பைக்கான போட்டியில் இருந்து வெளியேறி விட்டன.

 

சென்னை எப்படி:

இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூரு அணி தோற்றது, இதையடுத்து, முதல் அணியாக சென்னை (16) ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.

நாளை நடக்கும் கடைசி லீக் போட்டியில் (பஞ்சாப்) சென்னை அணி தோற்றாலும் எவ்வித பாதிப்பும் இல்லை. ஏனெனில், மீதமுள்ள 5 ஏதாவது 2 அணிகள் தான், 16 புள்ளிகள் பெற முடியும்.

 

யாருக்கு வாய்ப்பு:

நேற்று கோல்கட்டா அணி (15) தோற்றதை அடுத்து, ‘பிளே ஆப்’ வாய்ப்பு உறுதியில்லாமல் உள்ளது. ஏனெனில், நாளைய போட்டியில் கோல்கட்டா அணி, ராஜஸ்தான் (14) அணியை வீழ்த்த வேண்டும். மாறாக, ராஜஸ்தான் வென்றால் 16 புள்ளியுடன் அடுத்து சுற்றுக்கு செல்லும்.

பெங்களூரு அணியை (13) பொறுத்தவரையில் அடுத்து ஐதராபாத், டில்லி அணிகளை வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்லலாம். மாறாக, ஏதாவது ஒன்றில் தோற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

 

சிக்கலில் ஐதராபாத்:

ஐதராபாத் அணிக்கும் பெங்களூருவின் நிலை (இரு வெற்றி) தான் உள்ளது. ஒருவேளை இன்று பெங்களூவிடம், ஐதராபாத் தோற்கும் பட்சத்தில் 17ம் தேதி இரவு நடக்கும், கடைசி லீக் போட்டியில் (மும்பை, ஐதராபாத், தலா 14) வெல்லும் அணி, ‘பிளே ஆப்’ சுற்றுக்கு செல்லும்.

 

http://sports.dinamalar.com/2015/05/1431620486/chennaiteam.html

  • தொடங்கியவர்

அக்னி பரீட்சையில் வெல்வது யார்?- சன்ரைஸர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்
 

 

ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸும் மோதுகின்றன.

இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகளைப் பெற்றுள்ள சன்ரைஸர்ஸ் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் பிளே ஆப் சுற்றை உறுதி செய்துவிடும். ஆனால் பெங்களூர் அணியோ இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசமாக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.

 

 

ஒருவேளை இன்றைய ஆட்டத் தில் பெங்களூர் அணி தோற்கு மானால், தனது கடைசி ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதேநேரத்தில் மற்ற அணிகளின் போட்டி முடிவுகளுக்காக பெங்களூர் அணி காத்திருக்க நேரிடும்.

 

வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி கண்ட உற்சாகத்தில் பெங்களூர் அணியை சந்திக்கிறது. கேப்டன் டேவிட் வார்னர் நல்ல பார்மில் இருப்பது சன்ரைஸர்ஸ் அணியின் மிகப்பெரிய பலமாகும். இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 504 ரன்களுடன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

 

வார்னர் தவிர, ஷிகர் தவன், மோசஸ் ஹென்ரிக்ஸ், இயோன் மோர்கன், ரவி போபாரா, நமன் ஓஜா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரரான ஹென்ரிக்ஸ் பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லிக்கு எதிராக 74 ரன்கள் குவித்த அவர், பஞ்சாப்புக்கு எதிராக 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

 

வேகப்பந்து வீச்சில் டிரென்ட் போல்ட், ஹென்ரிக்ஸ், புவனேஸ்வர் குமார், பிரவீண் குமார் கூட்டணியை நம்பியுள்ளது ஹைதராபாத். சுழற்பந்து வீச்சில் கரண் சர்மா பலம் சேர்க்கிறார்.

 

கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட பெங்களூர் அணி, இந்த ஆட்டத்தில் முழு உத்வேகத்தோடு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ் கெயில், விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் ஹைதரா பாத் பவுலர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் ஒருவர் நின்று விட்டாலும், பெங்களூர் அணி வலுவான ஸ்கோரை எட்டிவிடும். மிடில் ஆர்டரில் மன்தீப் சிங், தினேஷ் கார்த்திக், சர்ஃப்ராஸ் கான், டேவிட் வியெஸ் ஆகியோர் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் மிட்செல் ஸ்டார்க் தொடர்ந்து அசத்தலாக பந்துவீசி வருகிறார். நாத் அரவிந்த், டேவிட் வியெஸ் ஆகியோர் ஸ்டார்க்கிற்கு பக்கபலமாக பந்துவீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹலை நம்பியுள்ளது பெங்களூர்.

இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் என்பதால் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.

 

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது. இந்த சீசனில் பெங்களூரில் நடந்த முதல் ‘லெக்’- ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை தோற்கடித்துள்ளது ஹைதராபாத்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7209151.ece

  • தொடங்கியவர்

பொலிஸ்காரரின் கண் பார்வையை பறித்த மில்லரின் சிக்ஸர்
2e308rm.jpg

 

ஐ.பி.எல். தொடரில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்த பந்து தாக்­கி­யதில் மைதா­னத்தில் பாது­காப்பு பணியில் இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கண் பார்வை பறிபோனது.

கடந்த மே 9ஆம் ஆம் திகதி ஈடன் கார்டன் மைதா­னத்தில் கொல்­கத்தா அணி பஞ்சாப் அணி­யுடன் மோதி­யது. இந்த போட்­டியில் பஞ்சாப் அணி வீரர் டேவிட் மில்லர் 11
பந்துகளில் 27 ஓட்­டங்­களைக் குவித்தார். ரசல் பந்தில் மில்லர் அடித்த சிக்ஸர் ஒன்று மைதா­னத்தில் இருந்த அலோக் ஏய்ச் என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கண்ணை நேர­டி­யாக வந்து தாக்­கி­யது. பந்து தாக்­கிய வேகத்தில் அவ­ரது வலது கண்ணில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டது.

 

 

இதை­ய­டுத்து அலோக்கை மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­தனர். ஆனால் அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள், அலோக் கண்­பார்வை இழந்து விட்­ட­தாக தெரி­வித்­தனர். தற்­போது 53 வய­தான அலோக்கு இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து வேறு­வி­த­மான பணி கொடுப்­பது குறித்து கொல்­கத்தா பொலிஸ் அதி­கா­ரிகள் ஆலோ­சித்து வரு­கின்­றனர்.

 

இந்­திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்­குலி இது குறித்து கூறு­கையில்இ இது எதிர்­பா­ரா­த­வி­த­மாக நடந்த சம்­பவம். இதற்கு டேவிட் மில்லர் பொறுப்­பாக மாட்டார் என்றார்.
 

 

http://www.virakesari.lk/articles/2015/05/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: ஐதராபாத் அணி பேட்டிங்

 

ஐதராபாத்: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் 52வது லீக் போட்டி ஐதராபாத் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1253427

  • தொடங்கியவர்

k3kn41.jpg

 

மழை :(

  • தொடங்கியவர்

வலைப்பயிற்சியில் தோனிக்கு பந்து வீசியதன் மூலம் கற்றுக் கொண்டேன்: டிவைன் பிராவோ
 

 

டி20, ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதி ஓவர்களை சிக்கனமாக வீச தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக சென்னை சூப்பர் கிங்ஸின் மேற்கிந்திய வீரர் டிவைன் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

 

இது குறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

"நான் எம்.எஸ்.தோனியுடன் வலைப்பயிற்சி மேற்கொள்கிறேன். வலையில் அவரது ஆக்ரோஷ பேட்டிங்கை கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். அவரைக் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், எந்த பேட்ஸ்மெனையும் என்னால் கட்டுப்படுத்த முடியும்" - என்றார் பிராவோ.

 

ஆனால், சில போட்டிகளாகவே தோனியினால் அவரது பழைய அதிரடி முறைகளைக் கடைபிடிக்க முடியவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது. அவர் மீது இத்தகைய விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் பிராவோ இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிராவோ 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

அவர் மேலும் கூறியதாவது: "அடிப்படையில் நான் பேட்ஸ்மென் எப்பேர்பட்டவர் என்பதைப் பார்ப்பேன். அவர் முன் கூட்டியே நகர்ந்து ஆடுபவர் என்றால் நான் பந்துகளை மாற்றி வீசுவேன், அவர் நகராமல் இருந்தால் யார்க்கர்கள் வீசுவேன். பேட்ஸ்மென் என்ன நினைக்கிறார் என்பதை அவருக்கு முன்னதாகவே நான் கணித்து விடுவேன்.

 

நாங்கள் (மே.இ.தீவு வீரர்கள்) எப்போதும் பொழுதுபோக்கு விரும்பிகள், இந்தியர்கள் போலவே கொண்டாட்ட நாட்டம் உடையவர்கள், இதனால்தான் இந்திய ரசிகர்களிடையே மேற்கிந்திய வீரர்கள் வெகுசுலபமாக ஒன்றி விடுகின்றனர்” என்றார் பிராவோ.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B/article7210146.ece

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 122/1 (9.2/11 ov)

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 135/3 (11/11 ov)

  • தொடங்கியவர்

பெங்களூரு அணி இலக்கு 136 ரன்கள்


 

ஐதராபாத்: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஐதராபாத் அணி 135 ரன்கள் எடுத்தது.

 

இந்தியாவில், 8வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. ஐதராபாத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.

 

மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி 2.45 மணி நேரம் தாமதமாக துவங்கியது. இதனால், போட்டி தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

 

ஐதராபாத் அணிக்கு தவான் 8 ரன்களில் வெளியேறினார். இதன் பின் இணைந்த வார்னர், ஹென்ரிக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. இருவரும் அரை சதம் விளாசினார். ஹென்ரிக்ஸ் 57 ரன்கள் குவித்தார். மார்கன் (11) நிலைக்கவில்லை. ஐதராபாத் அணி 11 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. வார்னர் (52) அவுட்டாகாமல் இருந்தார்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1252859

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 135/3 (11/11 ov)
RCB 83/4 (5.5/6 ov, target 136)
Royal Challengers Bangalore won by 4 wickets (with 1 ball remaining)

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

ஐதராபாத்: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் 52வது லீக் போட்டி ஐதராபாத் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. .

 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

 

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 11 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை பெய்ததை தொடர்ந்து, பெங்களூரு அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 6 ஓவரில் 81 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பெங்களூரு அணி 5.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1253908

  • தொடங்கியவர்

t9z9fm.png

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப்புடன் இன்று மோதல்
 

 

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன.

இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் சூப்பர் கிங்ஸ், இந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தும்பட்சத்தில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள சென்னை முதல் இரு இடங்களையும் உறுதி செய்து விடும்.சன்ரைஸர்ஸ், கொல்கத்தா, பெங்களூர், மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு இருப்பதால், அந்த அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே சூப்பர் கிங்ஸின் பிளே ஆப் வாய்ப்பு அமையும்.

 

 

ஏற்கெனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்ட பஞ்சாப் அணி, இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் கடைசி ஆட்டத்தை வெற்றியோடு முடிக்க விரும்பும். அதனால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

 

தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வரும் சூப்பர் கிங்ஸ் அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலம் கொண்டதாக இருந்தபோதும், கடந்த ஆட்டத்தில் டெல்லியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதனால் இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் மிகுந்த எச்சரிக்கையோடு விளையாடும்.

மெக்கல்லம்-டுவைன் ஸ்மித் கூட்டணி வலுவான தொடக்கம் ஏற்படுத்தும் பட்சத்தில் சூப்பர் கிங்ஸ் நல்ல ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, டூபிளெஸ்ஸி, கேப்டன் தோனி, டுவைன் பிராவோ உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.

 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் கடந்த ஆட்டத்தில் விளையாடாத ஆசிஷ் நெஹ்ரா இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இடம்பெறும்பட்சத்தில் ஈஸ்வர் பாண்டே நீக்கப்படலாம். நெஹ்ரா தவிர, மோஹித் சர்மா, பிராவோ ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, பவன் நெகி கூட்டணியை நம்பியுள்ளது சூப்பர் கிங்ஸ்.

 

சென்னையில் நடைபெற்ற முந்தைய சுற்று ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்ட பஞ்சாப், இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸுக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட பஞ்சாப், அதேபோன்றதொரு ஆட்டத்தை இன்றும் ஆட முயற்சிக்கும்.

விருத்திமான் சாஹா, மனன் வோரா, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், பெய்லி, அக் ஷர் படேல் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே பஞ்சாப்பின் ரன் குவிப்பு அமையும். வேகப்பந்து வீச்சில் சந்தீப் சர்மா-அனுரீத் சிங் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேலையும் நம்பி யுள்ளது பஞ்சாப்.

 


இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் சூப்பர் கிங்ஸ் 9 முறையும், பஞ்சாப் 6 முறையும் வெற்றி கண்டுள்ளன.

கொல்கத்தா-ராஜஸ்தானுக்கு வாழ்வா, சாவா ஆட்டம்

 

மும்பையில் இன்று நடைபெறும் மற்றொரு ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா, சாவா ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும். தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். கொல்கத்தா அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7213397.ece

  • தொடங்கியவர்

பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்த ஹைதராபாத் கேப்டன் வார்னரின் 'பெரும் தவறு'! 

 

ஹைதராபாத்: வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நேற்றைய லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் கேப்டன் வார்னர் செய்த தவறு மற்றும் கோஹ்லியின் ஆட்ட உதவியுடன் பெங்களூர் வெற்றிக்கனியை தட்டிப் பறித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் தொடங்க இருந்த ஆட்டம் மழை காரணமாக, 11 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. எனவே ஆட்டம், 10.40 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஆட்டகாரர்களாக வார்னரும், தவானும் களமிறங்கினார்கள்.

 

ரன் குவிப்பு தவான் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து களமிறங்கிய மோசஸ் ஹென்ரிக்ஸ் வார்னருடன் சேர்ந்து பெங்களூர் பந்து வீச்சை சிதறடித்தார்கள். அந்த அணி 11 ஒவரில் 135 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 57 ரன்களும், வார்னர் 52 ரன்களும் எடுத்தனர்.

 

மீண்டும் மழை ஆனால் மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஒவர்கள் குறைக்கபட்டு, பெங்களூர் அணி 6 ஒவரில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. கெயில் 10 பந்துகளில் 35 எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆனதால் ஆட்டத்தில் உச்சகட்ட டென்ஷன் ஏறியது.

 

கேட்ச் பிடித்தார் வேறு ஒரு பேட்ஸ்மேனும் சரியாக ஆடாத நிலையில் கோஹ்லி மட்டும் தொடர்ந்து போராடியபடியே இருந்தார். கடைசி இரு பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அந்த ஒவரின் 5வது பந்தை தூக்கி அடைதார். சிக்ஸ் போகும் என்று எதிர்பார்த்த நிலையில் எல்லை கோட்டு அருகே இருந்த வார்னர் அதை கேட்ச் பிடித்தார்.

 

பெரும் தவறு ஆனால் கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் பவுண்டரி எல்லைக்கோட்டை மிதித்துவிட்டார். இதனால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. பெங்களூர் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 44 ரன்கள் எடுத்த கோஹ்லி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். வார்னர், அதீதித மகிழ்ச்சியால் செய்த தவறால் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது, சொந்த ஊர் ஹைதராபாத் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-warner-s-blunder-makes-bangalore-win-tough-chase-226891.html

  • கருத்துக்கள உறவுகள்

சத்திரசிகிச்சை வெற்றி..., நோயாளி மரணம்...!! :o:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.