Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

சென்னை அணி பந்துவீச்சை தெரிவு  செய்துள்ளது

  • Replies 449
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

RCB 25/2 (5/20 ov)
Chennai Super Kings

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். 2015: சென்னைக்கு எதிரான ஆட்டம்- பெங்களூர் பேட்டிங் தொடங்கியதுபெங்களூரு அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள்

 


RCB 36/2 (6.6/20 ov)


RCB 36/3 (7.1/20 ov)

  • தொடங்கியவர்

RCB 40/3 (8.5/20 ov)

  • தொடங்கியவர்

RCB 46/3 (10/20 ov)


ஐ.பிஎல். 2015 இறுதிக்கு போவது யார்?: பெங்களூர் அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள்

 

ராஞ்சி: நடப்பு ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதை யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான ஆட்டம் ராஞ்சியில் தொடங்கியுள்ளது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை எடுத்துள்ளது. ஐ.பி.எல். முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

20ucyh2.jpg

அடுத்ததாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்தது. 

 

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் வெல்லும் அணியே நாளை மறுநாள் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-csk-choose-bowl-against-rcb-227309.html


RCB 52/3 (11/20 ov)


RCB 65/3 (12/20 ov)

  • தொடங்கியவர்

RCB 67/3 (12.6/20 ov)

  • தொடங்கியவர்

Raina to Gayle, OUT

CH Gayle c & b Raina 41 (43b 2x4 3x6) SR: 95.34


RCB 84/4 (13.4/20 ov)


RCB 90/4 (15/20 ov)


RCB 103/4 (16/20 ov)


Nehra to Karthik, OUT, DK holes out to long-on.

KD Karthik c Sharma b Nehra 28 (26b 4x4 0x6) SR: 107.69


RCB 107/5 (16.2/20 ov)


RCB 113/5 (17/20 ov)


RCB 124/5 (18/20 ov)


Sharma to Wiese, OUT

D Wiese c Bravo b Sharma 12 (7b 0x4 1x6) SR: 171.42


RCB 125/6 (18.2/20 ov)


RCB 131/6 (19/20 ov)


Bravo to Patel, OUT

HV Patel run out 2 (3b 0x4 0x6) SR: 66.66


RCB 137/7 (19.4/20 ov)


 

Bravo to Khan, OUT

SN Khan c Negi b Bravo 31 (21b 4x4 0x6) SR: 147.61


RCB 139/8 (19.5/20 ov)

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

RCB 139/8 (20/20 ov)


ஐ.பிஎல். 2015: பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள்

 

சென்னை அணி வெல்ல 140 ரன்கள் இலக்கு

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Chennai Super Kings 3/0 (1/20 ov)


Chennai Super Kings 10/0 (2/20 ov)


Chennai Super Kings 21/0 (3/20 ov)


Aravind to Smith, OUT

DR Smith c Starc b Aravind 17 (12b 3x4 0x6) SR: 141.66


Chennai Super Kings 21/1 (3.1/20 ov)


Chennai Super Kings 23/1 (4/20 ov)

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

Chennai Super Kings 28/1 (5/20 ov)


Chennai Super Kings 34/1 (6/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 41/1 (7/20 ov)


Chennai Super Kings 47/1 (8/20 ov)


Chennai Super Kings 58/1 (9/20 ov)


Chahal to du Plessis, OUT

F du Plessis b Chahal 21 (22b 2x4 0x6) SR: 95.45


Chennai Super Kings 61/2 (9.2/20 ov)


Chahal to Raina, OUT, Massive blow for Super Kings. Raina bags a duck.

SK Raina c Wiese b Chahal 0 (2b 0x4 0x6) SR: 0.00


Chennai Super Kings 62/3 (10/20 ov)


Chennai Super Kings 64/3 (11/20 ov)


Chennai Super Kings 72/3 (12/20 ov)


Chennai Super Kings 81/3 (12.5/20 ov)


Chennai Super Kings 82/3 (13/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 85/3 (14/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 91/3 (15/20 ov)


Chennai Super Kings 105/3 (15.5/20 ov)


Chennai Super Kings 105/3 (15.5/20 ov)


Wiese to Hussey, OUT

MEK Hussey c Patel b Wiese 56 (46b 3x4 2x6) SR: 121.73


Chennai Super Kings 108/4 (16.3/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 120/4 (17.2/20 ov)


Chennai Super Kings 122/4 (17.3/20 ov)


Chennai Super Kings 127/4 (18/20 ov)


Starc to Dhoni, OUT

P Negi run out 12 (6b 0x4 1x6) SR: 200.00


RCB 139/8 (20/20 ov)
Chennai Super Kings 135/5 (18.5/20 ov)


Starc to Bravo, OUT

DJ Bravo b Starc 0 (1b 0x4 0x6) SR: 0.00


RCB 139/8 (20/20 ov)
Chennai Super Kings 135/6 (19/20 ov)


Patel to Dhoni, OUT

MS Dhoni c †Karthik b Patel 26 (29b 1x4 0x6) SR: 89.65


RCB 139/8 (20/20 ov)
Chennai Super Kings 140/7 (19.5/20 ov)
Chennai Super Kings won by 3 wickets (with 1 ball remaining)


:D :D :D :D :D

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.2015: பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது சென்னை

 

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.2015: சபாஷ் சென்னை- பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

 

ராஞ்சி: ஐ.பி.எல். போட்டியின் 2வது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139ரன்களை எடுத்தது.

 

10mm1ya.jpg

 

பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஐ.பி.எல். முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அடுத்ததாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்தது. chennai இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று மோதின.

 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக 'புயல்' கெய்ல், கேப்டன் கோஹ்லி களமிறங்கினர். முதல் 2 ஓவர்களை இருவரும் வெளுத்து விளையாடி மிரட்டினர். ஆனால் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களோ உஷாராக பந்துவீசி மடக்கத் தொடங்கினர். இதனால் பெங்களூரு அணியின் தொடக்க வேகம் அப்படியே முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டதுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது சென்னை அணி. 4.1வது ஓவரில் கோஹ்லியும் அதே ஓவரின் கடைசி பந்தில் அதிரடி மன்னன் டிவில்லியர்ஸும் அடுத்தடுத்து அவுட் ஆனதால் பெங்களூரு நிலைகுலைந்தது. கோஹ்லி 12 ரன்களிலும் டிவில்லியர்ஸ் ஒரே ஒரு ரன்னையும் எடுத்து அவுட் ஆனார்.

 

இதேபோல் மந்தீப் சிங் சிறிது நேரமே நின்ற நிலையில் அவுட் ஆனார். ஆனால் தொடக்க வீரரான கிறிஸ் கெய்ல் மட்டும் நிலைத்து நின்று நிதானமாக ரன்களைக் குவித்து அரை சதத்தை நோக்கி பயணித்தார். அவர் 43 பந்துகளில் 41 ரன்களை எடுத்த போது அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சற்று விறுவிறுப்பாக விளையாடி தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆனார். பின்வரிசை வீரர்களும் நிலைத்து ரன்களைக் குவிக்கவில்லை. கடைசி ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை பெங்களூரு அணி பறிகொடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்பு 139 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணியை வென்று இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸுடன் மோதுவதற்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரன்கள் 140... பொறுப்புடன் ஆடி வென்ற சென்னை இதைத் தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் ஹஸ்ஸியும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர்.

 

ஆனால் ஸ்மித் 3.1 ஓவரில் 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் ஹஸ்ஸியுடன் டூபிளெஸ்சிஸ் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களை குவிக்கத் தொடங்கினர். 22 பந்துகளில் 21 ரன்களை எடுத்த நிலையில் டூபிளெஸ்சிஸ் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 9.2 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்களை எடுத்தது. ஹஸ்ஸியுடன் இணைய வந்த ரெய்னா அதே வேகத்தில் ரன் ஏதுவும் எடுக்காமல் 2வது பந்தில் அவுட் ஆனார். பின்னர் ஹஸ்ஸியுடன் கேப்டன் டோணி கை கோர்த்தார். இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில் சென்னை அணி பொறுப்புணர்ந்து விளையாடியே வந்தது. ஹஸ்ஸி 43 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்களை எட்டியிருந்தது.

 

இருப்பினும் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸ்ஸி அவுட் ஆனார். களத்தில் கேப்டன் டோணியும் நெகியும் நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தனர். 18.5வது பந்தில் நெகி 12 ரன்கள் எடுத்த நிலையிலும் 18.6வது பந்தில் பிராவோ டக் அவுட் ஆகவும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இருப்பினும் கேப்டன் டோணி இருக்க பயமேன் என்ற தெம்பில் சென்னை ரசிகர்கள் காத்திருந்தனர்.. பெங்களூரு அணியின் 139 ரன்களை எட்டியிருந்த நிலையில் கேப்டன் டோணி கடைசி ஓவரின் 4வது பந்தில் அவுட் ஆனார்.

 

பின்னர் வந்த அஸ்வின் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஒரு ரன் அடிக்க சென்னை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்களை எடுத்தது. இதனால் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணி 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-csk-choose-bowl-against-rcb-227309.html

  • தொடங்கியவர்

பைனலில் சென்னை அணி:நெஹ்ரா, ஹசி அசத்தல்



பைனலில் சென்னை அணி:நெஹ்ரா, ஹசி அசத்தல்

ராஞ்சி: எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. நேற்று நடந்த தகுதிச் சுற்று-2ல் மைக்கேல் ஹசியின் அரைசதம் கைகொடுக்க, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி வெளியேறியது.

ராஞ்சியில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று-2ல் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

நெஹ்ரா மிரட்டல்:
பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல், கேப்டன் விராத் கோஹ்லி இணைந்து துவக்கம் தந்தனர். நெஹ்ரா வீசிய 3வது ஓவரில் அதிரடி காட்டிய கோஹ்லி தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்நிலையில் 5வது ஓவரை வீசிய நெஹ்ரா இரட்டை 'அடி' கொடுத்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் கோஹ்லியை (12) அவுட்டாக்கிய இவர், கடைசி பந்தில் டிவிலியர்சை (1) பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த மன்தீப் சிங் (4), அஷ்வின் 'சுழலில்' சிக்கினார்.

 

கெய்ல் ஆறுதல்:
விக்கெட் ஒருபுறம் சரிந்ததால், நிதானமாக ஆடிய கெய்ல், அஷ்வின், மோகித் சர்மா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தினேஷ் கார்த்திக், ரெய்னாவின் 12வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். ரெய்னா பந்தில் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர் அடித்த கெய்ல் (41) ஆறுதல் தந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த தினேஷ் கார்த்திக் (28) நெஹ்ரா 'வேகத்தில்' வெளியேறினார். டுவைன் பிராவோ பந்தை சிக்சருக்கு அனுப்பிய டேவிட் வைஸ் (12) நிலைக்கவில்லை. ஹர்சால் படேல் (2) 'ரன்-அவுட்' ஆனார். பொறுப்பாக ஆடிய சர்பராஸ் கான் (31) ஓரளவு கைகொடுத்தார்.
பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 மட்டும் ரன்கள் எடுத்தது. ஸ்டார்க் (1) அவுட்டாகாமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் நெஹ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

ஸ்மித் ஏமாற்றம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், மைக்கேல் ஹசி ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்மித் (17), அரவிந்த் பந்தில் அவுட்டானார். பெங்களூரு அணியின் சொதப்பலான பீல்டிங்கை பயன்படுத்திக் கொண்ட ஹசி, டுபிளசி ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. 10வது ஓவரை வீசிய சாகல், டுபிளசி (21), ரெய்னாவை (0) அவுட்டாக்கி திருப்பம் தந்தார்.

 

ஹசி அரைசதம்:
தனது அனுபவ ஆட்டத்தை தொடர்ந்த ஹசி, சாகல் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதத்தை பதிவு செய்தார். வைஸ் பந்தில் ஹசி (56) வெளியேறினார். ஹர்சால் பந்தில் சிக்சர் அடித்த நேகி (12) 'ரன்-அவுட்' ஆனார். ஸ்டார்க் 'வேகத்தில்' டுவைன் பிராவோ (0) போல்டானார்.

'திரில்' வெற்றி:
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்சால் படேல் பந்துவீசினார். முதல் பந்தில் தோனி 2 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் 2 ரன் கிடைத்தது. நான்காவது பந்தில் தோனி (26) அவுட்டாக, 2 பந்தில் ஒரு ரன் தேவை என 'டென்ஷன்' ஏற்பட்டது. ஐந்தாவது பந்தில் அஷ்வின் ஒரு ரன் எடுக்க, சென்னை அணியின் வெற்றி உறுதியானது.

சென்னை அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அஷ்வின் (1), அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் சாகல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மும்பை அணியுடன் மோதல்
கோல்கட்டாவில் நாளை நடக்கவுள்ள பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன. இம்முறை தகுதிச் சுற்று-1ல் மும்பை அணியிடம் சந்தித்த தோல்விக்கு பைனலில் சென்னை அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

500
நெஹ்ரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, இம்முறை 500 ரன்களை கடந்த 4வது வீரர் என்ற பெருமை பெற்றார். இவர், 16 போட்டியில் 3 அரைசதம் உட்பட 505 ரனகள் எடுத்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தின் டேவிட் வார்னர் (562 ரன், 14 போட்டி), ராஜஸ்தானின் அஜின்கியா ரகானே (540 ரன், 14 போட்டி), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (513 ரன், 16 போட்டி) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.
* தவிர இவர், ஐ.பி.எல்., அரங்கில் 3வது முறையாக ஒரு தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் 2013 (634 ரன்), 2011 (557 ரன்) தொடரில் இந்த இலக்கை அடைந்தார்.

 

மாறிய வரலாறு
ஐ.பி.எல்., அரங்கில் மே 22ல் நடந்த போட்டியில் இரண்டு முறை (எதிர்- 2011ல் பெங்களூரு, 2014ல் ஐதராபாத்) சென்னை அணி தோல்வியை தழுவியது. ஆனால் இந்த சோகமான வரலாறு நேற்றைய போட்டியில் தலைகீழானது. சென்னை அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

5...6...7...
சென்னை அணி, பேட்டிங்கின் போது 5வது ஓவரில் 5 ரன், 6வது ஓவரில் 6 ரன், 7வது ஓவரில் 7 ரன் எடுத்தது சற்று வித்தியாசமாக இருந்தது.

சொதப்பல் பீல்டிங்
நேற்று பெங்களூரு அணியின் 'பீல்டிங்' படுமோசமாக இருந்தது. அரவிந்த் வீசிய 4வது ஓவரின் 2வது பந்தில் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் டுபிளசி கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை கெய்ல் நழுவவிட்டார். பின், இந்த ஓவரின் 3வது பந்தில் 3 ரன்கள் எடுத்திருந்த மைக்கேல் ஹசி துாக்கி அடித்த பந்தை ஹர்சால் படேல் கோட்டைவிட்டார். டேவிட் வைஸ் வீசிய 7வது ஓவரின் 2வது பந்தில் 11 ரன்கள் எடுத்திருந்த ஹசி கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை தினேஷ் கார்த்திக் நழுவவிட்டார். ஒரு சில 'ரன்-அவுட்' வாய்ப்புகளும் வீணடிக்கப்பட்டன. இதனை பயன்படுத்திக் கொண்ட ஹசி அரைசதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

6வது முறை
தகுதிச் சுற்று-2ல் பெங்களூரு அணியை வீழ்த்திய சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கில் 6வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக விளையாடிய 5 பைனலில் 2ல் (2010, 2011) வெற்றி பெற்று கோப்பை வென்றது. மூன்றில் (2008, 2012, 2013) தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது. கடந்த 2009ல் அரையிறுதி வரை முன்னேறிய சென்னை அணி, கடந்த ஆண்டு 'பிளே-ஆப்' சுற்றோடு திரும்பியது.

* ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சென்னை, மும்பை அணிகள் மூன்றாவது முறையாக (2010, 2013, 2015) மோத உள்ளன. முன்னதாக மோதிய 2 பைனலில் இரு அணிகளும் தலா ஒரு முறை (2010ல் சென்னை, 2013ல் மும்பை) வெற்றி பெற்று கோப்பை வென்றன.

கோல்கட்டாவில் பைனல்
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு துவங்கவுள்ள பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி வெல்லும் பட்சத்தில் 3வது முறையாக கோப்பையை கைப்பற்றலாம். மும்பை அணி வென்றால் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லலாம்.

 

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1258130

  • தொடங்கியவர்

5வது முறையாக முதல்வரான ஜெ.... 6வது முறையாக பைனலுக்குப் போன சிஎஸ்கே... செம!

 

சென்னை: தமிழ்நாட்டுக்கு இந்த "வீக் என்ட்", பரபரப்பான வாரம்தான். இன்று ஜெயலலிதா 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார். நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 6வது ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. வழக்கில் ஜெயலலிதா ஜெயித்து விட்டார், மீண்டும் முதல்வராகியுள்ளார். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாளைய போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் ஆகுமா என்ற ஆவல் ரசிகர்களிடம் மொய்த்துக் கொண்டிருக்கிறது.

 

 

 217 நாள் வீட்டு வாசத்தை முடித்துக் கொண்டு நேற்றுதான் முதல் முறையாக தனது போயஸ் தோட்ட வீட்டை விட்டு வெளியே வந்தார் ஜெயலலிதா. அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தன்னிடம் சிக்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை அழகாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஜெயலலிதா இன்று முதல்வராகப் பதவியேற்றபோது அதைக் காண வந்த பார்வையாளர்களில் ஒருவர் என்.சீனிவாசன். அதாவது பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன். இதே சீனிவாசனுக்குச் சொந்தமானதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ்.

 

நாளை இந்த அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது. ஒரே கேப்டன் தலைமையில் தொடர்ந்து செயல்படும் ஒரே ஐபிஎல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். டோணி தலைமையில் 6வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்னை முன்னேறியுள்ளது. இதில் 2 முறை கோப்பையை வென்றுள்ளது. நாளைய போட்டியில் சென்னை அணி வென்றால் அது 3வது கோப்பையாக இருக்கும். தமிழகத்தின் அரசியல் "ராணி"யே வென்று முதல்வராகி விட்டார்.. சென்னை சூப்பர் "கிங்ஸ்" மட்டும் சும்மாவா இருப்பார்கள்.. !

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/jayalalithaa-becomes-cm-csk-make-6th-ipl-final-super-weeke-227348.html

  • தொடங்கியவர்

23jpzsp.jpg

  • தொடங்கியவர்

ஐபிஎல் பைனலில் மும்பையை விட்டுவிட்டு மழையோடு போட்டிபோடப்போகிறது சென்னை!

 

கோல்கத்தா: ஐபிஎல் பைனலில் நாளை சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ள நிலையில், போட்டி நடைபெறும் கோல்கத்தாவில் பெரும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது.

2n9kpr4.jpg

 

கொல்கத்தாவில் நாளை இரவு 8 மணிக்கு ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மேற்குவங்க வானிலை துறை அதிகாரி ஒருவர் இன்று அளித்த பேட்டியில், நாளை கொல்கத்தாவில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மழை பெய்யும் நேரம் பற்றி நாளை காலை உறுதியாக தெரியும் என்றும் கூறியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் வருண பகவானை வேண்டியபடி உள்ளனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-rain-threat-over-csk-mi-ipl-2015-final-kolkata-227359.html

  • தொடங்கியவர்

மும்பை அணியை வீழ்த்த ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாட வேண்டும்: மைக் ஹஸ்ஸி
 

 

ஞாயிறன்று நடைபெறும் ஐபிஎல்-8 இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

 

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 8 தொடர்களில் 6-வது முறையாக இறுதிக்குத் தகுதி பெற்று ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்குகிறது. இது ஒரு விதத்தில் தோனியின் ஈடு இணையற்ற சாதனைதான். ஒவ்வொரு தொடரிலும் வெவ்வேறு விதமான நெருக்கடிகளை தனது பொறுமையினாலும் நிதானத்தினாலும் முறியடித்து வந்துள்ளார் கேப்டன் தோனி.

 

இந்நிலையில் மைக் ஹஸ்ஸி கூறியதாவது:

மும்பை இண்டியன்ஸ் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே அவர்களை வீழ்த்த நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.

 

போட்டியை சிறப்பாகத் தொடங்க வேண்டும் அந்நிலையிலிருந்து எங்கள் தன்னம்பிக்கை வளர்ச்சி பெறும்.

2013-ம் ஆண்டு தொடர் போலவே இப்போதும் நிகழ்ந்துள்ளது. 2013-இல் பிளே ஆஃபில் மும்பையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றோம். பிறகு இறுதியில் அவர்கள் எங்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

 

இந்த முறை மாறாக பிளே ஆஃபில் எங்களை வீழ்த்தி அவர்கள் இறுதிக்கு நேரடியாகத் தகுதி பெற்றனர். எனவே இறுதியில் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/article7239172.ece

  • தொடங்கியவர்

2013 ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?
 

 

2013-ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸிடன் தோல்வி அடைந்த சென்னை அணி இந்த இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நாளை (ஞாயிறு) இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

8 ஐபிஎல் தொடர்களில் 6-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டிகளில் வெல்லும் தந்திரம் அறிந்தவர் தோனி. அந்த விதத்தில் ரோஹித் சர்மாவுக்கு அனுபவம் போதாது.

 

ஆனால் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் முதல் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து அதன் பிறகு தொடர் அதிரடி வெற்றிகளுடன் எழுச்சியுற்று இறுதிக்குத் தகுதி பெற்றது. இந்த அணியின் எழுச்சியில் சச்சின், பாண்டிங், ஜாண்ட்டி ரோட்ஸ் ஆகியோரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. இதனால் கடைசி 9 போட்டிகளில் 7-இல் வெற்றி பெற்றது மும்பை.

இதே எழுச்சியின் தொடர்ச்சியாக சென்னையை பிளே ஆஃபில் 25 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென்றது மும்பை இண்டியன்ஸ்.

சென்னை அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 ஆட்டங்களில் 18 புள்ளிகளை பெற்று அட்டவணையில் முதலிடம் பிடித்தது. நேருக்க்கு நேர் போட்டி என்று எடுத்துக் கொண்டால் மும்பை இண்டியன்ஸ் 11 போட்டிகளிலும் சென்னை 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

இரண்டு அணிகளிலும் உள்ள மே.இ.தீவுகள் தொடக்க வீரர்களான லெண்டில் சிம்மன்ஸ், டிவைன் ஸ்மித் பேட்டிங்கில் அடித்து நொறுக்க வாய்ப்புள்ளது. அதே போல் சென்னையில் டிவைன் பிராவோ, மும்பையில் கெய்ரன் போலார்ட். பிராவோ 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளுடன் நடப்பு தொடரில் முன்னிலை பெற்றுள்ளார்.

மேலும் இரண்டு சுவையான மோதல்களில் ரோஹித் சர்மா, தோனி உள்ளனர். இந்த மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக ரோஹித் சர்மா பொறிபறக்கும் 98 ரன்களை விளாசியதை தோனி மறந்திருக்க மாட்டார் என்று நம்பலாம்.

 

அதே போல் பந்துவீச்சில் அங்கு லசித் மலிங்கா, இங்கு ஆஷிஷ் நெஹ்ரா. இதுவரை நெருக்கடி தருணங்களில் இவர்கள் இருவருமே ஆட்டத்தை தங்கள் அணிக்கு சாதகமாக திருப்பியுள்ளனர்.

 

அதேபோல் புது முக இளம் வீரர்களில் சென்னை அணிக்காக பவன் நெகியும் மும்பை அணிக்காக ஹர்திக் பாண்டியாவும் உள்ளனர். இரு அணிகளுக்கும் நெருக்கடி ஏற்படும் போது இவர்கள் இருவரில் யார் நாளை இறுதிப் போட்டியில் ஹீரோவாக எழுச்சி பெறுவார்கள் என்பதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை கூட்டியுள்ளது.

 

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான குறைந்த ஸ்கோர் த்ரில்லராக இது இல்லாமல் அதிக ஸ்கோர் த்ரில்லராக அமைய வாய்ப்புள்ளது.

2013 மே 26-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இதே கொல்கத்தாவில் குறைந்த ஸ்கோர் த்ரில்லராகவே அமைந்தது. முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி போலார்டின் அதிரடி 60 ரன்களுடன் 148 ரன்களையே எடுத்தது.

 

தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. அப்போது தோனி 45 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் அவுட் ஆகாமல் இருந்தும் 149 ரன்கள் என்ற குறைந்த இலக்கை துரத்தி வெற்றி பெற முடியாமல் போய் விமர்சனத்துக்குள்ளானார். அதாவது 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகே தோனி களம் கண்டார். இது விமர்சனத்துக்குரியதானது.

 

http://tamil.thehindu.com/sports/2013-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article7239197.ece

  • தொடங்கியவர்

'தல' இருக்கும்போது எதுக்கு கவலை.. ரெய்னாவின் கோப்பை நம்பிக்கை!

 

கொல்கத்தா: கேப்டன் டோணியின் தலை சிறந்த தலைமை இருக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று அந்த அணியின் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 2 முறை கோப்பையை வென்றுள்ள அணியான சென்னை சூப்பர் கிங்ஸும், ஒருமுறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

 

இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், முதலாவது குவாலிபயர் போட்டியில், மும்பையிடம் தோல்வியைச் சந்தித்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் 2வது குவாலிபயர் ரவுண்டுக்குப் போய் அங்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி தற்போது இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. எணவே இன்று மும்பையை வீழ்த்தி கோப்பையை அது கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 

சுரேஷ் ரெய்னா நம்பிக்கை இந்தப் போட்டி குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், டோணி மிகவம் சிறப்பான கேப்டன். தொடர்ச்சியாக நல்ல தலைமையை வழங்கி வருகிறார். அதுதான் எங்களை ஆறு முறை இறுதிப் போட்டிக்கு அழைத்து வர முக்கியக் காரணம்.

 

நிச்சயம் வெல்வோம் 8வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் நாங்கள் முன்னேறியுள்ளோம். நிச்சயம் இதில் வெற்றி அடைவோம். கோப்பையைக் கைப்பற்றுவோம். டோணியின் தலைமை அதற்கு உதவும்.

 

மும்பையை பழி தீர்ப்போம் இதே மைதானத்தில்தான் 2013 இறுதிப் போட்டியில் நாங்கள் மும்பை இந்தியன்ஸிடம் தோற்று பட்டத்தைப் பறி கொடுத்தோம். அதை நாங்கள் மறக்கவில்லை. நிச்சயம் இந்த முறை அதை சரி செய்து விடுவோம்.

 

10 ஓவர்களுக்குப் பிறகு கவனம் தேவை ஈடன் கார்டன் பிட்ச்சில் பத்து ஓவர்களுக்குப் பிறகு விக்கெட் ஸ்லோவாகி விடும். எனவே நல்ல பார்ட்னர்ஷிப் போடுவதும், பெரிய டோட்டலை எட்டுவதும் முக்கியமானது. குறிப்பாக முன்னணி வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்.

 

டோணி, பிராவோ கலக்க வேண்டும் குறிப்பாக டோணியும், பிராவோவும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். அவர்கள் சிறப்பாக ஆடி விட்டால் பிரச்சினை இல்லை. மேலும் அவர்கள் அதிரடியாகி ஆடி விட்டால், சென்னையின் ஸ்கோரை சேஸ் செய்பவர்கள் தடுமாறுவார்கள்.

 

பஜ்ஜி உஷார்! ஹர்பஜன் சிங் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். எனவே 8 முதல் 12 ஓவர் வரை சற்று கவனமாக இருக்க வேண்டும். பதட்டப்பட்டால் அவுட்டாகி விடுவோம். டி20 கிரிக்கெட் என்பது மிகவும் குறுகிய அவகாசம் கொண்டது. இங்கு பிளான் பிக்கு இடமில்லை. ஒரே முடிவுதான், அதைத் தெளிவாக அமலாக்க வேண்டும்.

 

சூப்பர் பவுலர்கள் அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆசிஷ் நெஹ்ரா பிரமாதமாக ஆடுகிறார். மோஹித் சர்மா, அஸ்வின் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசுகின்றனர். எல்லோரும் விக்கெட் வீழ்த்துகின்றனர் என்றார் அவர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-ms-dhoni-s-consistent-leadership-is-key-chennai-super-kings-success-raina-227373.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கோஹ்லி இல்லாத ஐபிஎல் இறுதிப் போட்டியை புறக்கணிக்கும் 'டயர்ட்' அனுஷ்கா

 

மும்பை: வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் இருப்பதால் நடிகை அனுஷ்கா சர்மா இன்று கொல்கத்தாவில் நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு தனது படம் தில் தக்னே தோவை விளம்பரப்படுத்த மாட்டாராம். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடித்துள்ள இந்தி படமான தில் தக்னே தோ வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் இன்று கொல்கத்தாவில் நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு படத்தை விளம்பரப்படுத்த உள்ளனர்.

 

அனுஷ்கா அனுஷ்கா சர்மாவுக்கு வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை ஓரிரண்டு நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் வலியுறுத்தியுள்ளார் என்று அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

 

ஐபிஎல் ஃபைனல் டாக்டர் ஓய்வெடுக்குமாறு கூறியதால் இன்று கொல்கத்தாவில் நடக்கும் இறுதிப் போட்டியின்போது நடக்கும் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அனுஷ்கா கலந்து கொள்ளப் போவது இல்லை. கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் துவக்க விழாவில் அனுஷ்கா கலந்து கொண்டு நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோஹ்லி அனுஷ்கா தனது காதலரும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான கோஹ்லி ஆடிய போட்டிகளை நேரில் கண்டு ரசித்தார். பட விளம்பரங்களுக்கு இடையே அவர் தனது காதலரை உற்சாகப்படுத்த ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார்.

 

நோட்டீஸ் பெங்களூரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதிய ஐபிஎல் போட்டியை காண அனுஷ்கா ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார். மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதும் கோஹ்லி பார்வையாளர்கள் இருந்த இடத்திற்கு சென்று அனுஷ்காவை கட்டிப்பிடித்து பேசினார். இதையடுத்து விதிகளை மீறியதற்காக அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-anushka-sharma-is-too-tired-attend-ipl-final-227378.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.