Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் பந்து வீச்சை தெரிவு செய்து உள்ளது. :)

  • Replies 449
  • Views 23.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Nehra to Patel, OUT, Faf du Plessis has produced the first bit of magic on the big night. Patel is out for a duck

PA Patel run out 0 (3b 0x4 0x6) SR: 0.00


Mumbai Indians 1/1 (1/20 ov)


Mumbai Indians 17/1 (1.6/20 ov)


28/1 (3/20 ov)


40/1 (4/20 ov)

  • தொடங்கியவர்

47/1 (5/20 ov)


61/1 (6/20 ov)


64/1 (6.3/20 ov)


69/1 (7/20 ov)


78/1 (8/20 ov)


88/1 (9/20 ov)


98/1 (10/20 ov)

  • தொடங்கியவர்

Bravo to Sharma, OUT, slower ball. Guess Rohit picked it but didn't time the shot well.

RG Sharma c Jadeja b Bravo 50 (26b 6x4 2x6) SR: 192.30


Smith to Simmons, OUT

LMP Simmons c †Dhoni b Smith 68 (45b 8x4 3x6) SR: 151.11


Mumbai Indians 120/3 (12.1/20 ov)


125/3 (13/20 ov)

  • தொடங்கியவர்

134/3 (14/20 ov)


144/3 (14.5/20 ov)


146/3 (15/20 ov)


148/3 (15.3/20 ov)


150/3 (16/20 ov)


157/3 (16.2/20 ov)


173/3 (17/20 ov)


181/3 (17.3/20 ov)


182/3 (17.6/20 ov)


183/3 (17.6/20 ov)


191/3 (18.4/20 ov)


Sharma to Pollard, OUT

KA Pollard c Raina b Sharma 36 (18b 2x4 3x6) SR: 200.00


191/4 (19/20 ov)


Bravo to Pandya, OUT

HH Pandya c Raina b Bravo 0 (2b 0x4 0x6) SR: 0.00


Mumbai Indians 202/5 (19.5/20 ov)


Mumbai Indians 202/5 (20/20 ov)

  • தொடங்கியவர்

மும்பை அணி 202 ரன்கள்

மும்பை அணி 202 ரன்கள்

கோல்கட்டா: சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., பைனலில் சிம்மன்ஸ், ரோகித் அரை சதம் அடிக்க மும்பை அணி 202 ரன்கள் குவித்தது.
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 8வது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.

 

மும்பை அணிக்கு பார்த்திவ் படேல் டக்-அவுட்டானார். பின் இணைந்த சிம்மன்ஸ், கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் அடித்தனர். ரோகித் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். சிம்மன்ஸ் 68 ரன்கள் எடுத்தார். போலார்டு (36) அதிரடி காட்டினார். பாண்ட்யா (0) ஏமாற்றினார். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது. ராயுடு (36), ஹர்பஜன் சிங் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1259577

  • தொடங்கியவர்

Chennai Super Kings 5/0 (1/20 ov)


12/0 (1.5/20 ov)


14/0 (2.4/20 ov)


14/0 (3/20 ov)


17/0 (3.3/20 ov)


21/0 (4/20 ov)

  • தொடங்கியவர்

McClenaghan to Hussey, OUT

MEK Hussey c Suchith b McClenaghan 4 (9b 1x4 0x6) SR: 44.44

  • தொடங்கியவர்

31/1 (5.5/20 ov)


31/1 (6/20 ov)


36/1 (6.2/20 ov)


38/1 (7/20 ov)


50/1 (8/20 ov)

  • தொடங்கியவர்

67/1 (10/20 ov)


77/1 (10.5/20 ov)


81/1 (11/20 ov)


Harbhajan Singh to Smith, OUT, Illingworth has given Smith out lbw again. This time, though, he is plumb

DR Smith lbw b Harbhajan Singh 57 (48b 9x4 1x6) SR: 118.75

  • தொடங்கியவர்

343grr9.jpg

 

IPL போட்டி வர்ணனையாளர்கள்

  • தொடங்கியவர்

MS Dhoni b Malinga 18 (13b 1x4 1x6) SR: 138.46

  • தொடங்கியவர்

Mumbai Indians 202/5 (20/20 ov)
Chennai Super Kings 161/8 (20/20 ov)
Mumbai Indians won by 41 runs

  • தொடங்கியவர்

ஐபிஎல்-8: சென்னையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்!

 

 

கொல்கத்தா: ஐபிஎல் பைனலில் மும்பைக்கு எதிராக டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் மும்பை அணி அதிரடியாக ஆடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் 8வது சீசன் பைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. rohit டாசில் வென்ற சென்னை முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து மும்பை முதலில் பேட் செய்தது. முதல் ஓவரில் அணியின் ஸ்கோர் 1 ரன்னாக இருந்தபோது தொடக்க வீரர் பார்த்திவ் பட்டேல் விக்கெட்டை மும்பை இழந்தது. பாப் டுப்ளெசிஸ் எறிந்த அருமையான த்ரோவால் ரன் அவுட் முறையில் பட்டேல் விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் சளைக்காத மும்பை அதிரடி காண்பித்தது. பொல்லார்ட் 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசி 19வது ஓவரில் அவுட் ஆனார். 19 ஓவர்கள் முடிவில், மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஓவரை பிராவோ வீசினார்.

 

முதல் பந்தை பாண்ட்யா எதிர்கொண்டார். அதில் ரன் கிடைக்கவில்லை. 2வது பந்தில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து பாண்ட்யா டக் அவுட் ஆனார். 3வது பந்தில் சிங்கிள் கிடைத்தது. 4வது பந்தை எதிர்கொண்ட ஹர்பஜன் சிங் அதை லாங்-ஆப் திசையில் சிக்சராக விளாசினார். 5வது பந்து அருமையான யார்க்கர் என்றபோதிலும், பந்து ஹர்பஜன் காலில் பட்டு பவுண்டரி சென்றது. அப்போது மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்னை எட்டியது. கடைசி பந்தில் ரன் கிடைக்கவில்லை. எனவே, மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. சென்னை வெற்றிக்கு 203 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆடிய சென்னை அணி, தொடக்கம் முதல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 4.4 ஓவர்களில் மைக்கேல் ஹஸ்சி 4 ரன்னில் நடையை கட்டினார்.

 

 

அப்போது அணியின் ஸ்கோர் 22ஆக இருந்தது. இதையடுத்து ட்வைன் ஸ்மித்துடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. சென்னைக்கு ஓரளவுக்கு நம்பிக்கையளித்த ட்வைன் ஸ்மித் 57 ரன்களில் ஹர்பஜன் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். எதிர்பார்க்கப்பட்ட டுபிளெசிஸ் 1 ரன்னில் அவுட் ஆனார். அப்போதே சென்னைக்கு இறங்குமுகம் ஆரம்பித்துவிட்டது. டோணி 18, பிராவோ 9 ரன்கள் என நம்பிக்கை நட்சத்திரங்கள் அனைத்துமே ஏமாற்ற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை பவுலர் மெக்லன்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் இறுதி போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன. இம்முறையும், அதே சாதனை தொடர்ந்துள்ளது. டாசில் வென்றபோதும், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யாமல் பவுலிங்கை தேர்ந்தெடுத்த சென்னை கேப்டன் டோணியின் வியூகம் தவறாக முடிந்துவிட்டது. மும்பை அணி 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது. சென்னை, கொல்கத்தா வரிசையில், மும்பையும், இருமுறை சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது. லீக் சுற்றில் அடுத்தடுத்து தோல்விகண்ட மும்பை, அதிரடியாக முன்னேறி கோப்பையை கைப்பற்றி சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-chennai-super-kings-won-the-toss-elected-field-first-227388.html

  • தொடங்கியவர்

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

தல கல்யாணம் கட்டினதோட வீரியம் குறைஞ்சிட்டுது. இப்படி சொதப்பிட்டுதே தல. :lol:

 

கல்யாணம் கட்டினவை கிரிக்கெட் விளையாடக் கூடாதுன்னு சட்டம் கொண்டு வரனும். :D

  • தொடங்கியவர்

சென்னை கனவு அம்போ: கோப்பை வென்றது
 

கோல்கட்டா: ஐ.பி.எல்., பைனலில் பவுலிங், பேட்டிங்கில் சொதப்பிய சென்னை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சாம்பியன் பட்டம் வெல்லும் கனவு தகர்ந்தது. அபாரமாக ஆடிய மும்பை அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்று அசத்தியது.
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் சென்னை, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

 

'சூப்பர்' ஜோடி:
மும்பை அணியின் பார்த்திவ் படேல் (0) 'ரன்-அவுட்டாகி' ஏமாற்றினார். பின் லெண்டில் சிம்மன்ஸ், ரோகித் சர்மா சேர்ந்து சென்னை பந்துவீச்சை ஒருகை பார்த்தனர். இவர்கள், பவுண்டரி, சிக்சர்களாக விளாச, ஸ்கோர் 'ஜெட்' வேகத்தில் உயர்ந்தது. ஜடேஜா வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த சிம்மன்ஸ், அரைசதத்தை பதிவு செய்தார். கேப்டனுக்கு உரிய முறையில் ஆடிய ரோகித், 25 பந்தில் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த போது ரோகித் (50) அவுட்டானார். ஸ்மித் பந்தில் சிம்மன்ஸ் (68) போல்டானார்.

 

போலார்டு அதிரடி:
இதற்கு பின் போலார்டு தன்பங்கிற்கு வாணவேடிக்கை காட்ட, சென்னை ரசிகர்கள் நொந்து போயினர். இவர், நெஹ்ரா வீசிய 17வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த அம்பதி ராயுடு, ஸ்மித், பிராவோ, மோகித் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது போலார்டு (36) வெளியேறினார். பாண்ட்யா (0) நிலைக்கவில்லை. பிராவோ வீசிய கடைசி ஓவரில் ஹர்பஜன் ஒரு சிக்சர் அடிக்க,
மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அம்பதி ராயுடு (36), ஹர்பஜன் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஸ்மித் அரைசதம்:
இமாலய இலக்கை விரட்டிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆடினர். மைக்கேல் ஹசி (4) ஏமாற்றினார். பின் டுவைன் ஸ்மித், ரெய்னா நிதானமாக ரன் சேர்க்க, 10 ஓவரில் 67 ரன்கள் தான் கிடைத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது ஹர்பஜன் 'சுழலில்' ஸ்மித் (57) சிக்கினார்.

 

விக்கெட் மடமட:
சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரெய்னா (28), ஹர்பஜனிடம் சரணடைந்தார். டுவைன் பிராவோ (9) நிலைக்கவில்லை. மலிங்கா 'வேகத்தில்' கேப்டன் தோனி (18) போல்டாக, சென்னை தோல்வி உறுதியானது டுபிளசி (1), அஷ்வின் (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2வது இடம் பெற்று ஆறுதல் தேடியது. ஜடேஜா (11), மோகித் சர்மா (21) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் மெக்லீனகன் 3, ஹர்பஜன், மலிங்கா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

500
ரவிந்திர ஜடேஜா பந்தை சிக்சருக்கு அனுப்பிய மும்பை அணியின் சிம்மன்ஸ், இம்முறை 500 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த 5வது வீரர் என்ற பெருமை பெற்றார். இவர், 13 போட்டியில் 6 அரைசதம் உட்பட 540 ரன்கள் எடுத்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தின் வார்னர் (562 ரன்), ராஜஸ்தானின் ரகானே (540), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (513), விராத் கோஹ்லி (505) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர்.

 

25
ரோகித் சர்மாவை அவுட்டாக்கிய சென்னை அணியின் டுவைன் பிராவோ, இம்முறை 25 விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார். இவர், 17 போட்டியில் 26 விக்கெட் வீழ்த்தினார். கடந்த 2013ல் நடந்த தொடரில் 32 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் 2வது முறையாக ஒரு தொடரில் 25 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமை பெற்றார்.

 

202
அபாரமாக ஆடிய மும்பை அணி 202 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., பைனலில் முதலில் 'பேட்டிங்' செய்து அதிக ரன்கள் குவித்த அணிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் சென்னை அணி (205 ரன், எதிர்-பெங்களூரு, 2011) உள்ளது.

 

இரண்டாவது முறை
நேற்றைய பைனலில் அசத்திய மும்பை அணி, இரண்டாவது முறையாக (2013, 2015) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை (2010, 2011), கோல்கட்டா (2012, 2014) அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. மூன்று அணிகளும் தலா 2 முறை கோப்பை வென்றன. ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

 

வார்னர் 'டாப்'
இம்முறை அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியலில் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்தார். இவர், 14 போட்டியில் 7 அரைசதம் உட்பட 562 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான 'ஆரஞ்சு' நிற தொப்பியை பெற்றார்.
அடுத்த நான்கு இடங்களில் ராஜஸ்தானின் ரகானே (540 ரன்), மும்பையின் சிம்மன்ஸ் (540), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (513), விராத் கோஹ்லி (505) உள்ளனர். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக பிரண்டன் மெக்கலம் 436 ரன்கள் எடுத்தார்.

 

பிராவோ மிரட்டல்
அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கான வரிசையில் சென்னை அணியின் டுவைன் பிராவோ முதலிடம் பிடித்தார். இவர், 17 போட்டியில் 26 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இவர், அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான 'பர்பிள்' நிற தொப்பியை கைப்பற்றினார்.
அடுத்த நான்கு இடங்களில் மும்பையின் மலிங்கா (24), பெங்களூருவின் சாகல் (23), சென்னையின் நெஹ்ரா (22), பெங்களூருவின் மிட்சல் ஸ்டார்க் (20) ஆகியோர் உள்ளனர்.

 

ரூ. 15 கோடி பரிசு
இம்முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ. 15 கோடி பரிசு வழங்கப்பட்டது. பைனல் வரை முன்னேறி 2வது இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 10 கோடி வழங்கப்பட்டது.

 

நான்காவது முறை
ஐ.பி.எல்., அரங்கில் 6 முறை பைனலுக்கு முன்னேறிய பெருமை பெற்ற சென்னை அணி 2 முறை (2010, 2011) மட்டுமே கோப்பை வென்றது. நான்கு முறை (2008, 2012, 2013, 2015) பைனலில் தோல்வி அடைந்தது. இதில் இரண்டு முறை (2013, 2015) மும்பைக்கு எதிராகவும், தலா ஒரு முறை ராஜஸ்தான் (2008), கோல்கட்டா (2012) அணிகளிடம் பைனலில் வீழ்ந்தது.

 

692
இம்முறை மொத்தம் 692 சிக்சர் அடிக்கப்பட்டன. அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் 38 சிக்சர் விளாசினார். மும்பையின் போலார்டு (28 சிக்சர்), பெங்களூருவின் கோஹ்லி (23), சென்னையின் மெக்கலம் (23), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (22) ஆகியோர் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் 'டாப்-5' வரிசையில் உள்ளனர்.

 

இம்முறை....
எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் 4 சதம், 89 அரைசதம் உட்பட 18, 332 ரன்கள் எடுக்கப்பட்டன. பவுண்டரி, சிக்சர் மூலம் 10, 580 ரன்கள் கிடைத்தன.
* ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் பெங்களூருவின் டிவிலியர்ஸ் (133 ரன், எதிர்-மும்பை) முதலிடம் பிடித்தார். கெய்ல், வாட்சன், மெக்கலம் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர்.

 

* ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த அணிகளுக்கான வரிசையில் பெங்களூரு அணி (235 ரன், எதிர்-மும்பை) முதலிடம் பிடித்தது.

 

* அதிக அரைசதம் அடித்தவர்களுக்கான பட்டியலில் ஐதராபாத்தின் வார்னர் (7 அரைசதம்) முதலிடம் பிடித்தார்.

 

* அதிக முறை 'டக்-அவுட்டான' வீரர்கள் வரிசையில் சென்னையின் ஸ்மித் (3) முதலிடம் பிடித்தார்.

 

* மொத்தம் 686 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் அதிகபட்சமாக சென்னையின் பிராவோ 26 விக்கெட் வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சை சென்னையின் நெஹ்ரா (4 விக்கெட், 10 ரன்கள் எதிர்-பெங்களூரு) பதிவு செய்தார். இம்முறை ஒரு 'ஹாட்ரிக்' விக்கெட் கூட பதிவாகவில்லை.

 

சாதிக்கும் '2'
ஐ.பி.எல்., புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடிப்பது ராசியானது. 2011(சென்னை), 2012(கோல்கட்டா), 2013(மும்பை), 2014(கோல்கட்டா), 2015(மும்பை) என தொடர்ந்து 5 முறை புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பெற்ற அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.

 

தொடரும் ரோகித் ராசி
கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானம் மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ராசியானது. இங்கு தனது முதல் டெஸ்ட் சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்(264 ரன், எதிர் இலங்கை, 2014) எடுத்து உலக சாதனை படைத்தார். 2013ல் ஐ.பி.எல்., கோப்பை வென்றார். நேற்று மீண்டும் ஐ.பி.எல்., கோப்பையை வசப்படுத்தினார்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1259577

  • தொடங்கியவர்

100 சதவீத திறன் மட்டத்தை எட்டவில்லை: தோல்வி குறித்து தோனி

 

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மும்பையிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இந்தத் தோல்வி குறித்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் குறித்து சென்னை கேப்டன் தோனி கூறும் போது, “மும்பை அணி அதிக ரன்களை எடுத்துவிட்டது. முதல் ஓவர் நன்றாக அமைந்தது. 2-வது ஓவர் சரியல்ல, அங்கிருந்துதான் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.

 

 

பேட்ஸ்மென்களுக்கு பந்தை அடிக்க அதிக இடமும் நேரமும் கொடுக்காமல் இருந்தால் இது ஒரு நல்ல பிட்ச். சீரற்ற பவுன்ஸ் இல்லை. மைதானம் சிறியது, புறக்களம் பந்துகள் வேகமாக செல்லும் வகையில் அமைந்திருந்தது.

 

நாங்கள் அவர்களை (மும்பையை) 180 ரன்களுக்கு மட்டுப்படுத்தியிருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாகியிருக்கும். இது அணியாக திரண்டு விளையாடிய நல்ல முயற்சி. ஆனால் 100% திறன் மட்டத்தை நாங்கள் எட்டவில்லை.

 

மெக்கல்லம் இல்லாதது பெரிய பின்னடைவாகப் போய்விட்டது. ஆனால் இவையெல்லாம் ஆட்டத்தின் இன்றியமையாத அங்கம், இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஒட்டுமொத்தமாக அணியின் ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தது. ஆனால் மீண்டும் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது எப்படி என்பது பற்றி சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

 

மும்பை இண்டியன்ஸ் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூறும் போது, “மிகவும் திருப்திகரமான வெற்றி. இந்த இரண்டு மாதங்கள் மிகவும் சிறப்ப்பு வாய்ந்தது என்று நான் அணி வீரர்களிடத்தில் கூறினேன். அதுவும் சாம்பியன் பட்டமே வென்ற பிறகு இது நினைவில் நீண்ட நாட்களுக்கு நிற்கும்.

 

முதல் 6 போட்டிகளுக்குப் பிறகு அழுத்தம் ஏற்பட்டது. கைகளில் நகங்கள் எதுவும் மீதமில்லை. ஆனால் மீண்டும் எழுச்சியுற்றோம். அணியின் வளர்ச்சி, கேப்டனின் (ரோஹித் சர்மா) வளர்ச்சி, மிகவும் சிறப்பு வாய்ந்த்து. நாங்கள் இறுதிப் போட்டியில் இந்த ஐபிஎல் தொடரிலேயே சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக கருதுகிறேன்.

 

http://tamil.thehindu.com/sports/100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article7244064.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்ட விழாவுக்கு ரசிகர்களை அழைக்கும் மும்பை இண்டியன்ஸ்

 

ஐபிஎல்-8-ல் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து மும்பை வான்கடே மைதான கொண்டாட்டங்களுக்கு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது மும்பை இண்டியன்ஸ் அணி நிர்வாகம்.

2148hoh.jpg

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி மும்பையை வந்தடைகிறது. இன்று இரவு 8 மணியளவில் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர், நிதா அம்பானி ஆகியோர் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

 

ஒட்டு மொத்த அணி, மற்றும் அணியின் பயிற்சியாளர்கள், உடல்தகுதி நிபுணர்கள் ஆகியோர் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக 8 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒன்று கூடுகின்றனர்.

 

கொண்டாட்டத்தைக் காண, பங்கேற்க ரசிகர்களுக்கு அனுமதி இலவசம். மாலை 6.30 மணியிலிருந்து வான்கடே கதவுகள் ரசிகர்களுக்காகத் திறக்கப்படுகிறது.

மேலும் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் முன்னாள், இந்நாள் நட்சத்திரங்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரம் நடைபெறலாம் என்று தெரிகிறது.

 

2013-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னையை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றிய மும்பை இண்டியன்ஸ் நேற்று மீண்டும் அதே எதிரணியை மேலும் எளிதில் வீழ்த்தி கோப்பையை 2-வது முறையாகக் கைப்பற்றியது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7244115.ece?homepage=true

  • தொடங்கியவர்

சீறிய டிவில்லியர்ஸ், சிக்கன சிரிப்பழகன் நெஹ்ரா.. கலக்கிய ஐபிஎல் ஹீரோக்கள்!

 

கொல்கத்தா: ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அத்தோடு, 8வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பல்வேறு அணிகள் மற்றும் வீரர்களால் படைக்கப்பட்ட சாதனைகள், கலக்கல் ஆட்டங்கள் பற்றிய ஒரு பார்வை:

 

4 சதங்கள் நடப்பு சீசனில் மொத்தம் 4 சதங்கள் விளாசப்பட்டன. டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் கெய்ல் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் தலா 1 சதங்கள் விளாசியிருந்தனர்.

 

சீறிய டிவில்லியர்ஸ் டிவில்லியர்ஸ் தனிப்பட்ட முறையில் ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த வீரராகும். மும்பை அணிக்கு எதிராக 133 ரன்களை அதிரடியாக விளாசி, நாட்அவுட்டாக நின்று பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தார் டிவில்லியர்ஸ்.

 

அதிரடி சதம் அதிவிரைவாக செஞ்சுரி அடித்தவர் என்ற பெருமை, கிறிஸ் கெயிலுக்கு உரியது. பெங்களூர் வீரரான அவர், பஞ்சாப் அணிக்கு எதிராக 46 பந்துகளில் சதம் விளாசினார். அந்த போட்டியில் பெங்களூர் அணி எளிதில் வென்றது.

 

அதிரடி அரைசதங்கள் 19 பந்துகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக அரை சதம் அடித்த கொல்கத்தா வீரர் ஆன்ட்ரே ரசல் மற்றும் பஞ்சாப்புக்கு எதிராக 19 பந்துகளில் அரை சதம் அடித்த ஹர்பஜன் ஆகிய இருவருமே அதிவிரைவாக அரை சதம் அடித்த வீரர்களாகும்.

 

பவுண்டரி நாயகன் நடப்பு சீசனில் அதிகப்படியான பவுண்டரிகள் விளாசியது ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னராகும். அவர், 65 பவுண்டரிகள் விளாசியிருந்தார்.

 

சிக்சர் மழை நட்பு சீசனில் மொத்தம் 692 சிக்சர்கள் விளாசப்பட்டன. 686 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. மும்பைக்கு எதிராக 1 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 235 ரன்கள் எடுத்தது ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

 

சிக்கன நெஹ்ரா பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது நடப்பு சீசனின் சிறந்த பவுலிங்காகும். பஞ்சாப் அணியின் மிட்சேல் ஜான்சன், 151.11 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதுதான் நடப்பு சீசனில் ஒரு பவுலர் வீசிய அதிவேக பந்து வீச்சாகும்.

 

ஜாகீர், நெஹ்ரா ஜோடி சென்னைக்கு எதிரான போட்டியில் ஜாகீர்கான் 18 டாட் பந்துகளை வீசினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 9 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆக, 18 பந்துகளில் ரன்னே கிடைக்கவில்லை. நடப்பு சீசனில் ஒட்டுமொத்தமாக நெஹ்ரா 170 டாட் பந்துகளை வீசி முதலிடம் பிடித்துள்ளார். 22 விக்கெட்டுகளையும் நெஹ்ரா வீழ்த்தியுள்ளார்.

 

கலக்கிய இளம் வீரர் நடப்பு சீசனில் அதிக மெய்டன் ஓவர்களை வீசியது பஞ்சாப் அணியின் இளம் வீரர் சந்தீப் ஷர்மா. லீக் ஆட்டத்தோடு, பஞ்சாப் நடையை கட்டினாலும்கூட, அவர் 4 மெய்டன்களை வீசியிருந்ததை வேறு பவுலர்களால் முறியடிக்கமுடியவில்லை.

 

முந்தைய சாம்பியன்கள் 2014- கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2013- மும்பை இந்தியன்ஸ், 2012- கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2011- சென்னை சூப்பர் கிங்ஸ், 2010- சென்னை சூப்பர் கிங்ஸ், 2009- டெக்கான் சார்ஜர்ஸ், 2008- ராஜஸ்தான் ராயல்ஸ்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-full-list-important-statistics-227412.html

  • தொடங்கியவர்

சமத்துப் பையன் சென்னை, ஊதாக் கலர் தொப்பி பிராவோ.. ஐபிஎல் விருதுகள் அறிவிப்பு!

 

கொல்கத்தா: ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அத்தோடு, 8வது ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பல்வேறு அணிகள் மற்றும் வீரர்களால் படைக்கப்பட்ட சாதனைகள் மற்றும் பரிசுகள் பற்றிய ஒரு பார்வை:

 

ரூ.15 கோடி பரிசு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. இரண்டாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.10 கோடி பரிசை தட்டிச் சென்றது.

 

அதிக ரன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் அதிகப்படியான ஸ்கோர் அடித்ததற்காக ஆரஞ்சு தொப்பி பரிசு பெற்றார். மொத்தம் 14 இன்னிங்சுகளில் அவர் 562 ரன்களை விளாசியிருந்தார்.

 

பிராவோ அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா கலர் தொப்பி விருதை சென்னை அணியின் ட்வைன் பிராவோ தட்டிச் சென்றார். அவர், 16 இன்னிங்சுகளில் 26 விக்கெட்டுகளை சாய்த்தார். டெத் ஓவர்களில் சிறந்த பவுலிங் பங்களிப்பையும் அளித்தார்.

 

சிக்சர் மன்னன் கெய்ல் அதிகப்படியான சிக்சர்கள் விளாசியதற்காக பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்ல் பரிசு பெற்றார். அவர் மொத்தம் 38 சிக்சர்களை விளாசியிருந்தார்.

 

இளம் வீரர் சிறந்த இளம் வீரருக்கான விருது டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது. 20 வயதான இந்திய வீரரான இவர் 14 போட்டிகளில் ஆடி 439 ரன்களை வாரிக் குவித்தார்.

 

இறுதி போட்டியில் கலக்கல் மேன் ஆப் தி பைனல் விருது மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கிடைத்தது. குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்து அணியை வெற்றிபெறச் செய்ததற்காக அவருக்கு இருந்த விருது கிடைத்தது.

 

பைனல் சிக்சர் இறுதி போட்டியில் அதிக சிக்சர் அடித்தவருக்காக தனி விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மும்பை இந்தியன்ஸ் அணியின் கெய்ரன் பொல்லார்ட் தட்டிச் சென்றார். அவர் 3 சிக்சர்கள் விளாசியிருந்தார்.

 

சமத்து பையன் சென்னை வம்பு தும்பு செய்யாமல், ஒழுக்கமாக, சமத்தாக ஆடியதற்கான விருது ஃபேர்பிளே விருதாகும். இந்த விருது வழக்கம்போல சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்குதான் கிடைத்தது. இத்தனைக்கும் கேப்டன் டோணி, அம்பயர் முடிவை விமர்சனம் செய்து அபராதத்திற்கு உள்ளாகியிருந்தார். ஆனால், பிற அணிகள் இதைவிட அதிக வம்புகளை செய்திருந்தது.

 

சிறந்த கேட்சர் ஐபிஎல் சீசன் 8ல், சிறந்த கேட்ச்சுக்கான விருதை சென்னை வீரர் பிராவோ தட்டிச் சென்றார். பல்வேறு அருமையான கேட்சுகள் பிடிக்கப்பட்டிருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி எல்லையில் பிராவோ பிடித்த அருமையான கேட்சுக்காக இந்த விருது கிடைத்தது.

 

மதிப்பு வீரர் கொல்கத்தா அணியின் ஆன்ட்ரே ரசல், மதிப்புமிக்க வீரராக அறிவிக்கப்பட்டார். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இவர் ஆல்ரவுண்டராக ஜொலித்து வந்தார். இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டன.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-full-list-award-winners-227405.html

  • தொடங்கியவர்

சென்னை வீழ்ந்தது ஏன்

 

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., பைனலில் ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் ‘பவுலிங்’ தேர்வு செய்த போதே பாதி போட்டி கைவிட்டு போனது. இதை பயன்படுத்திய மும்பை அணி 202 ரன்கள் குவித்தது.

 

பின் கடின இலக்கை துரத்திய சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்த்த மைக்கேல் ஹசி ஏமாற்றினார். ரெய்னா, தோனி, ஜடேஜா ஆகியோர் ‘பார்மில்’ இல்லாதது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.

 

இம்முறை தோனியின் ‘ஹெலிகாப்டர் ஷாட்டை’ ரசிகர்கள் காண முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், பார்த்திவ் படேல் ரன் அவுட்டான அந்த ஒரு ஓவர் தவிர, மீதமுள்ள 39 ஓவரிலும் மும்பை தான் ஆதிக்கம் செலுத்தியது. இதன் விளைவாக கோப்பையை தட்டிச் சென்றது.

 

சென்னை அணியை பொறுத்தவரை வீரர்கள் தேர்வு குறித்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும். துவக்க கட்ட வேகப்பந்துவீச்சுக்கு நெஹ்ரா, மோகித் சர்மாவை மட்டும் நம்பி பயன் இல்லை. முன்பு போல ஹில்பெனாஸ், போலிஞ்சர் போன்ற வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

 

http://sports.dinamalar.com/2015/05/1432572178/iplcricketmatchfinalchennaimumbailose.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் ஹைலைட் 10: ஃபேர் பிளே முதல் ட்வீட் மழை வரை!

 

15ri0bm.jpg

இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமை சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னருக்கு கிடைத்தது. அவர் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 562 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது.

 

டுவைன் பிராவோ -26

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தட்டிச் சென்றார். 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோவுக்கு ஊதா தொப்பி வழங்கப்பட்டது.

 

வளர்ந்து வரும் வீரர்

இந்த ஐபிஎல் தொடரின் வளர்ந்து வரும் வீரராக டெல்லி டேர்டெவில்ஸ் தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். அவர் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 439 ரன்கள் குவித்தார்.

 

ஃபேர் பிளே விருது

மிகவும் கண்ணியத்தோடு விளையாடிய அணிக்கு வழங்கப்படும் ஃபேர் பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்தது.

 

4 சதங்கள்

இந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்கள் அடிக்கப்பட்டன. பெங்களூர் வீரர்கள் டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர் பிரென்டன் மெக்கல்லம், ராஜஸ்தான் கேப்டன் ஷேன் வாட்சன் ஆகியோர் தலா ஒரு சதமடித்தனர்.

 

சிக்ஸர் சிங்கம்

இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியவருக்கான விருது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெயிலுக்கு கிடைத்தது. அவர் 38 சிக்ஸர்களை விளாசினார்.

 

பவுண்டரி மன்னன்

இந்த ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகளை விளாசியவர் என்ற பெருமை சன்ரைஸர்ஸ் கேப்டன் டேவிட் வார்னருக்கு கிடைத்தது. அவர் 65 பவுண்டரிகளை விளாசினார்.

 

692 சிக்ஸர்கள்

இந்தத் தொடரில் மொத்தம் 692 சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

 

686 விக்கெட்டுகள்

இந்தத் தொடரில் மொத்தம் 686 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.

 

ட்விட்டரில் 35 கோடி

8-வது ஐபிஎல் போட்டியின்போது அது தொடர்பாக 35 கோடி பேர் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உரையாடியுள்ளனர். அதிலும் சென்னை-மும்பை இடையிலான இறுதிப் போட்டி மிகப்பெரிய அளவில் ட்விட்டரில் பேசப்பட்டுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/article7247251.ece

  • தொடங்கியவர்

ஒவ்வொரு ஆட்டத்தையும் இறுதிப் போட்டியாக கருதினோம்: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பெருமிதம்
 

 

ஒவ்வொரு போட்டியையும் இறுதிப் போட்டியாக கருதி விளையாடியதால் இப்போது சாம்பியன் ஆகியிருக்கிறோம் என்று மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

2ia4jz8.jpg

8-வது ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் முதல் 6 போட்டிகளில் 5-ல் தோற்றிருந்த மும்பை அணி, அடுத்த 8 போட்டிகளில் 7-ல் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே ஆப் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மும்பை இண்டியன்ஸ், அதில் மீண்டும் சூப்பர் கிங்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் ஆகியிருக்கிறது.

 

கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை அணி 2-வது முறையாக ஐபிஎல் சாம்பியனாகியிருக்கிறது. இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடன் பகிர்ந்து கொண்டது மும்பை.

 

மும்பை அணி இதுவரை மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அந்த மூன்றிலும் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்ட மும்பை அணி, 2010-ல் மட்டுமே தோல்வி கண்டது. 2013, 2015 இறுதிப் போட்டிகளில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி சாம்பியனாகியுள்ளது.

 

போட்டிக்குப் பிறகு வெற்றி குறித்துப் பேசிய மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, “உண்மையைச் சொல்வதானால் எந்தப் போட்டியும் எங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதுபோன்ற உதாரணம் எதுவும் எங்களிடம் இல்லை. ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டி யாக கருதி விளையாடினோம். கடைசிப் போட்டியிலும் (இறுதிப் போட்டி) அதேபோன்றுதான் விளையாடினோம்” என்றார்.

 

தங்கள் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை பாராட்டிப் பேசிய ரோஹித் சர்மா, “எங்களின் வெற்றியில் பாண்டிங்கின் பங்கு அளப்பரியது. கேப்டன்ஷிப் விஷயத்தில் அவர் எனக்கு நிறைய உதவியிருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டனாகத் திகழ்ந்த அவர், அந்த அனுபவத்தை எங்கள் அணிக்காக பயன்படுத்தினார்” என்றார்.

அணியின் உதவி அலுவலர் களை வெகுவாகப் புகழ்ந்த ரோஹித் சர்மா, “நாங்கள் தோல்வியை சந்தித்தபோது அவர்கள் எங்களோடு இருந்தார்கள். தோல்வி யைச் சந்திக்கும் தருணத்தில் ஒரு கேப்டனுக்கு அவர்களின் ஆதரவு முக்கியமானது. இதேபோல் எனக்கு சிறந்த வீரர்கள் கிடைத்தனர். அவர்கள் அனைவருமே சவாலை எதிர்கொண்டு சிறப்பாக விளையாட விரும்புபவர்கள். எவ்வளவு இக்கட்டான சூழலில் இருந்தாலும், எங்கள் வீரர்கள் சவாலை எதிர்கொண்டு சிறப்பாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இதுபோன்ற விஷயம் ஒரு தொடரை வெல்வதற்கு முக்கியமானதாகும். இந்த வெற்றிக்கான பாராட்டு, களத்தில் விளையாடிய 11 பேருக்கு மட்டுமல்ல, அணியில் இருந்த அனைவரையும் சேரும்” என்றார்.

 

இறுதிப் போட்டி குறித்துப் பேசிய ரோஹித் சர்மா, “எப்போதுமே பெரிய போட்டிகளில் முதலில் பேட் செய்து அதிரடியாக ஆடி ரன் குவிக்கவே விரும்புவேன். டாஸ் வென்ற தோனி பீல்டிங்கை தேர்வு செய்தபோது என் மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது. இதுபோன்ற பெரிய போட்டிகளில் முதலில் பேட் செய்து வலுவான ஸ்கோரை குவித்துவிட்டால் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட முடியும். நானும், சிம்மன்ஸும் அமைத்த பார்ட்னர்ஷிப் முக்கியமானதாகும்” என்றார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்துப் பேசிய ரோஹித் சர்மா, இந்தப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நன்றாக அமையவில்லை. ஆனால் தோனி ஒரு சாம்பியன். இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் மேட்ச் வின்னர். சூப்பர் கிங்ஸ் நல்ல தொடக்கம் ஏற்படுத்தாத அளவுக்கு அவர்களை கட்டுப்படுத்திய எங்கள் பவுலர்களை பாராட்டியாக வேண்டும்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7247170.ece

  • தொடங்கியவர்

என் கால்கள் தரையில்தான் உள்ளது: ஐபிஎல் பெங்களூரு வீரர் சர்பராஸ் கான்
 

 

ஐபிஎல்-8 தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சில முக்கியமான அதிரடி இன்னிங்ஸ்களை ஆடிய 17-வயது மும்பை வீரர் சர்பராஸ் கான் ஐபிஎல் கிரிக்கெட் தனக்கு பெரும் தன்னம்பிக்கையை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

உ.பி.யில் உள்ள தங்களது மூதாதையர் வாழ்ந்த பாசுபூர் கிராமத்திற்கு வந்த சர்பராஸ் கான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“6-ம் நிலையில் விளையாடுவது எனக்கு கிடைத்த கவுரவம். பொதுவாக அந்நிலையில் மூத்த, அனுபவமிக்க வீரர்களே களமிறங்குவார்கள். ஏனெனில் அந்த நிலையில் களமிறங்குவது அழுத்தங்களை எதிர்கொள்வதற்காகவே. அந்த இடத்தில் நான் களமிறக்கப்பட்டது என் அதிர்ஷ்டம்தான்.

 

அது எனக்கு பெரிய தன்னம்பிக்கை அளித்தது, அதற்காக நான் பறக்கவில்லை, என் கால்கள் தரையில்தான் இருக்கிறது. எப்போதும் இருக்கும்.” என்று தன்னம்பிக்கையை தன்னடக்கத்துடன் சர்பராஸ் கான் வெளிப்படுத்தினார்.

 

மும்பை வீரரான சர்பாராஸ் கானை ஆர்சிபி அணி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நல்ல பந்து வீச்சுக்கு எதிராக 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தது பற்றி சர்பராஸ் கூறும் போது, “கெய்ல், கோலி, டிவில்லியர்ஸ் எனது பேட்டிங்கை வலுப்படுத்த நிறைய ஆலோசனைகளை வழங்கினர்.

வெகுவிரைவில் அவர்களது ஆலோசனைகள் எனது பேட்டிங்கில் எதிரொலிக்கும். குறிப்பாக விராட் கோலி நிறைய உதவிகள் புரிந்தார். அவர் ஒரு நண்பராகவே செயல்பட்டார், கேப்டன் அல்லது வழிகாட்டி என்பது இரண்டாம்பட்சமே” என்றார்.

 

இந்தியாவுக்காக ஆடும் கனவு பற்றி கூறும்போது, “அது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கணிப்பது கடினம், ஆனால் நான் உழைக்கும் விதம், நிச்சயம் இந்திய அணிக்காக என்னை ஆடவைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

சர்பராஸின் தந்தையும், பயிற்சியாளருமான நவுஷத் கான் கூறும் போது, “நான் சர்பராஸை கிரிக்கெட்டுக்கு ஒப்புக் கொடுத்து விட்டேன். சர்பராஸின் தாயார் காலையில் நாலறை மணிக்கு எழுந்து எங்களுக்கு சமையல் செய்து கொடுத்து விடுவார். நாங்கள் வீட்டிலிருந்து 5 மணிக்கு கிளம்புவோம். 7 மணி முதல் பயிற்சியில் ஈடுபடுவோம். இரவு 8 மணியளவில்தான் வீடு திரும்புவோம்.

 

இரவு உணவை முடித்து விட்டு 9 மணிக்கெல்லாம் உறங்கி விடுவோம். இந்தப் பழக்கம் தொடர்ச்சியாக எங்களிடம் இருந்து வருகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7264093.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.