Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக அதிரடி ஆரம்பித்த மும்பை..15 ஓவர்கள் முடிவில் 132/5

 


Mumbai Indians 138/5 (15.6/20 ov)


சென்னை சுப்பர் கிங்கை இப்ப யார் வச்சிருக்காங்க, நவீன்ஜி

 

Owner:  Chennai Super Kings Cricket Ltd[1]

 

http://en.wikipedia.org/wiki/Chennai_Super_Kings
 


http://www.yarl.com/forum3/index.php?/topic/152918-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/


Mumbai Indians 155/5 (16.6/20 ov)

  • Replies 449
  • Views 23.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Mumbai Indians 160/5 (18/20 ov)

  • தொடங்கியவர்

Mumbai Indians 175/5 (18.6/20 ov)


19.4

Bravo to Rayudu, OUT

AT Rayudu c Jadeja b Bravo 29 (16b 1x4 3x6) S


19.5

Bravo to Pollard, OUT, that's two in two, full toss gets a wicket now!

KA Pollard c Smith b Bravo 64 (30b 4x4 5x6) SR: 213.33


Mumbai Indians 183/7 (19.6/20 ov)

  • தொடங்கியவர்

சரிவில் இருந்து மீண்ட மும்பை அதிரடி பினிஷிங்..சென்னை வெற்றிக்கு 184 ரன் இலக்கு

 

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால், சிஎஸ்கே வீரர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சால் 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து திணறலுடன் ஆட்டத்தை தொடங்கியது. 5 ஓவர்கள் முடிவில் 20 ரன்களுக்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு மெல்ல மீண்ட மும்பை 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை எடுத்தது.

 

 

ஆனால், அதன்பிறகு அதிரடி காண்பித்த மும்பை 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களையும், ஆட்ட நேர முடிவில் 183 ரன்களையும் குவித்து அசத்தியது. இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சரிவில் இருந்து மீண்ட மும்பை அதிரடி பினிஷிங்..சென்னை வெற்றிக்கு 184 ரன் இலக்கு டாசில் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். சென்னை அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. நெஹ்ராவின் அபார பந்து வீச்சால் மும்பை 1 ரன்னிலேயே பார்திவ் பட்டேலை டக் அவுட்டில் இழந்தது. அந்த அணி 6 ரன்கள் எடுத்திருந்தபோது அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் நெஹ்ரா பந்தில் வீழ்ந்தார்.

 

 

2.5 ஓவரிலேயே மும்பை அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்த ஓவரிலேயே 5 ரன் எடுத்திருந்த தொடக்க வீரர் சிமண்ட்ஸ் ஈஸ்வர் பாண்டே பந்தில், டு பிளசிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு, மும்பை இந்தியன்ஸ் 20 ரன்களுடன் போராடிக் கொண்டிருந்தது. ரோகித் ஷர்மா மற்றும், ஹர்பஜன் சிங் களத்தில் நின்றனர். இந்த ஜோடி அணியை மெல்ல மீட்டெடுத்தது. ஆனால் 9.3 ஓவரின்போது 24 ரன் எடுத்திருந்த ஹர்பஜன், மோகித்ஷர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். 10 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.

 

 

ஆனால், அதன்பிறகு களமிறங்கிய கிரண் பொலாட் சிஎஸ்கே பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். 15வவது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் ஷர்மா 50 ரன்களுடன் நடையை கட்டினார். அப்போது மும்பை அணி 132 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது. இதன்பிறகும், பொலாட் அதிரடியை குறைக்கவில்லை, போதாத குறைக்கு, அம்பத்தி ராயுடுவும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். அம்பத்தி ராயுடு 29 ரன்களில் அவவுட் ஆன நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. பொலாட் அதிகபட்சமாக 64 ரன்களை குவித்தார். சென்னை தரப்பில் நெஹ்ரா 23 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை களமிறங்குகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ipl-2015-mumbai-indians-face-formidable-csk-224942.html

  • தொடங்கியவர்

Chennai Super Kings 6/0 (1/20 ov)


Chennai Super Kings 18/0 (1.6/20 ov)


Chennai Super Kings 29/0 (3/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 50/0 (3.6/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 72/0 (4.6/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 90/0 (6/20 ov)


Second-highest score in the powerplay in IPL. CSK have the record as well, 100 v Kings XI last year


Dwayne Smith (rhb)  50 
Brendon McCullum (rhb)  36

  • தொடங்கியவர்

Chennai Super Kings 107/0 (7/20 ov)


Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 107/0 (7/20 ov)
Chennai Super Kings require another 77 runs with 10 wickets and 13.0 overs remaining


Brendon McCullum (rhb)  46 
Dwayne Smith (rhb)  56


BB McCullum c Vinay Kumar b Harbhajan Singh 46 (20b 6x4 2x6) SR: 230.00


DR Smith c Sharma b Harbhajan Singh 62 (30b 8x4 4x6) SR: 206.66


Chennai Super Kings 115/2 (8/20 ov)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டுவேய்ன் ஸ்மித் உலகக்கோப்பையில் இப்பிடி விளையாடினமாதிரி தெரியேல்லையே.. :unsure: ஓ.. எல்லாம் துட்டு பண்ற வேலையா?? :o:D

  • தொடங்கியவர்

Chennai Super Kings 121/2 (9/20 ov)


Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 128/2 (10/20 ov)


Chennai Super Kings require another 56 runs with 8 wickets and 60 balls remaining


Chennai Super Kings 132/2 (11/20 ov)


Chennai Super Kings 143/2 (12/20 ov)


F du Plessis b Malinga 11 (13b 2x4 0x6) SR: 84.61


Chennai Super Kings 146/3 (13/20 ov)

  • தொடங்கியவர்

Mumbai Indians 183/7 (20/20 ov)
Chennai Super Kings 158/3 (14/20 ov)
Chennai Super Kings require another 26 runs with 7 wickets and 36 balls remaining

  • தொடங்கியவர்

MS Dhoni c & b Pollard 3 (6b 0x4 0x6) SR: 50.00


Chennai Super Kings 168/4 (15/20 ov)


Chennai Super Kings 173/4 (15.6/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 189/4 (16.4/20 ov)


Chennai Super Kings won by 6 wickets (with 20 balls remaining)

  • தொடங்கியவர்

இமாலய ரன் குவித்தும், சென்னையிடம் எளிதாக தோற்றது மும்பை! சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி

 

 

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை இரவு நடந்த போட்டியில் மும்பை முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய சென்னை 16.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி அசத்தியது.

 

 

முன்னதாக, டாசில் வென்ற மும்பை பேட்டிங் தேர்ந்தெடுத்தது. அந்த அணி முதல் 5 ஓவர்கள் முடிவில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு மெல்ல மீண்ட மும்பை 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை எடுத்தது. இமாலய ரன் குவித்தும், சென்னையிடம் எளிதாக தோற்றது மும்பை! சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றி ஆனால், அதன்பிறகு அதிரடி காண்பித்த மும்பை 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களையும், ஆட்ட நேர முடிவில் 183 ரன்களையும் குவித்து அசத்தியது. நெஹ்ராவின் அபார பந்து வீச்சால் மும்பை 1 ரன்னிலேயே பார்திவ் பட்டேலை டக் அவுட்டில் இழந்தது. அந்த அணி 6 ரன்கள் எடுத்திருந்தபோது அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் நெஹ்ரா பந்தில் வீழ்ந்தார். 2.5 ஓவரிலேயே மும்பை அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 

 

அடுத்த ஓவரிலேயே 5 ரன் எடுத்திருந்த தொடக்க வீரர் சிமண்ட்ஸ் ஈஸ்வர் பாண்டே பந்தில், டு பிளசிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு, மும்பை இந்தியன்ஸ் 20 ரன்களுடன் போராடிக் கொண்டிருந்தது. ரோகித் ஷர்மா மற்றும், ஹர்பஜன் சிங் களத்தில் நின்றனர். இந்த ஜோடி அணியை மெல்ல மீட்டெடுத்தது. ஆனால் 9.3 ஓவரின்போது 24 ரன் எடுத்திருந்த ஹர்பஜன், மோகித்ஷர்மா பந்து வீச்சில் அவுட் ஆனார். 10 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அதன்பிறகு களமிறங்கிய கிரண் பொலாட் சிஎஸ்கே பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். 15வவது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் ஷர்மா 50 ரன்களுடன் நடையை கட்டினார். அப்போது மும்பை அணி 132 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது.

 

 

இதன்பிறகும், பொலாட் அதிரடியை குறைக்கவில்லை, போதாத குறைக்கு, அம்பத்தி ராயுடுவும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். அம்பத்தி ராயுடு 29 ரன்களில் அவவுட் ஆன நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. பொலாட் அதிகபட்சமாக 64 ரன்களை குவித்தார். சென்னை தரப்பில் நெஹ்ரா 23 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை களமிறங்கியது. ஆரம்பம் முதலே, மெக்கல்லம், ட்வைன் ஸ்மித் ஆகிய இரு தொடக்க வீரர்களும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசினர். இதனால் 6 ஓவர்களிலேயே சென்னை விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 62 ரன்களிலும், மெக்கல்லம், 46 ரன்களிலும், டு பிளெசிஸ் 11 ரன்களிலும் அவுட் ஆன நிலையில், ரெய்னாவுடன், கேப்டன் டோணி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், தடுக்க வேண்டிய பந்துகளை தடுத்தும் ஆடியது.

 

 

இருப்பினும் டோணி 3 ரன்களில் அவுட் ஆனார். சிஎஸ்கே 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு, 168 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த பிராவோ 16.4 ஓவர்களில் ஒரு சிக்சருடன் வெற்றி இலக்கை எட்டச் செய்தார். ரெய்னா 43 ரன்களுடனும், பிராவோ 13 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். இது சிஎஸ்கே அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாகும். முன்னதாக, டெல்லி, ஹைதராபாத்தை சிஎஸ்கே வீழ்த்தியிருந்தது. சிஎஸ்கே தொடக்க வீரர்கள், மும்பையிடமிருந்து வெற்றியை பறித்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இமாலய இலக்கை விரட்டிய சென்னைக்கு, மிக எளிதான வெற்றி கிடைக்க தொடக்க ஜோடி பெரிதும் உதவியது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ipl-2015-mumbai-indians-face-formidable-csk-224942.html

  • தொடங்கியவர்
2wn72p3.jpg
  • தொடங்கியவர்

இன்றைய போட்டிகள்

 

Sunrisers
v Daredevils
(begins in 1h 6m)

 

Kings XI
v KKR
(20:00 local | 14:30 GMT | 16:30 CEST)

  • தொடங்கியவர்

ரூ.16 கோடி கொடுங்கள் என்று நான் கேட்கவில்லை: யுவராஜ்
 

 

டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங்கை ரூ.16 கோடி விலை கொடுத்து வாங்கியது. ஆனால் தனக்கும் அந்த விலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

 

ரூ.16 கோடி அவர் ஆட்டத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த யுவராஜ், “உண்மையில் இல்லை என்றே கூறுவேன். ஏலம் நடைபெறும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு இவ்வளவு தொகை கொடுங்கள் என்று நான் யாரிடமும் கூறவில்லை. என்ன தொகைக்கு ஏலம் எடுத்திருந்தாலும் நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியிருப்பேன்.

 

இப்போதைக்கு இந்த கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறேன், நான் தொலைதூரம் சிந்திப்பதில்லை. ஒரு அணியாக டேர் டெவில்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்ப வேண்டும். 11 தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிக முக்கியம்.

 

எனக்கும் கேரி கர்ஸ்டனுக்கும் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே நீடிக்கிறது. எங்களிடையே நல்ல புரிதல் உள்ளது. என்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர்வதைல் கேரி கர்ஸ்டனின் பங்கு மிக அதிகம்.

 

இந்தியாவுக்கு பயிற்சி அளிக்கும் போது அவர் 16 வீரர்களை கையாண்டால் போதும் ஆனால் டெல்லி அணிக்காக அவர் 25 வீரர்களைக் கையாள வேண்டியுள்ளது.” இவ்வாறு கூறியுள்ளார் யுவராஜ்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8216-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/article7116946.ece

  • தொடங்கியவர்

மும்பை பேட்டிங்கை விட எங்களது பவுலிங் குறித்தே கவலைப்பட்டேன்: தோனி
 

 

மும்பை இந்தியன்ஸை மடித்து அனுப்பிய வெற்றிக்குப் பிறகு சென்னை கேப்டன் தோனி, மும்பை பேட்டிங் பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.

 

ஆட்டம் முடிந்தவுடன் கேள்விகளுக்கு பதில் அளித்த தோனி, “மும்பை பேட்டிங் வரிசையை விட எங்களது பவுலிங் குறித்தே நான் அதிகம் கவலையடைந்தேன்.

 

ஆனால், எங்களது திட்டத்தை நாங்கள் கடுமையாகப் பின்பற்றவில்லை அவர்கள் ஆட்டத்துக்கு ஏற்ப நாங்களும் உத்திகளை மாற்றி வந்தோம்.

 

ஹர்பஜன் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடியதால் இந்த முறை முன்னதாக களமிறக்கப்படுவார் என்பதை எதிர்பார்த்தோம், அவருக்கு ரன் கொடுப்பதில்லை என்பதை முடிவு செய்தோம். அவர் பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர். ஆனாலும் அவரை ரன் எடுக்கவிடாமல் செய்ய திட்டமிட்டோம்.

 

முதலில் பவுலிங் செய்வதை நாங்கள் விரும்புவதன் காரணம், பிற்பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதாலேயே. ஆனால் தொடக்க ஓவர்களை நாங்கள் அபாரமாக வீசினோம் என்றே கூறுவேன்.

 

மேலும் 180-190 ரன்கள் துரத்த முடியக் கூடியதே என்றே நான் கருதுகிறேன். முதல் சில ஓவர்கள் அபாரமாக அமைந்ததால் வெற்றி சுலபமானது” இவ்வாறு கூறினார் தோனி.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article7116990.ece

  • தொடங்கியவர்

மாயங்க் அகர்வாலின் அபார தடுப்பினால் டெல்லி அணி வெற்றி

 

  

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை டெல்லி டேர் டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த டெல்லி டேர் டெவில்ஸ் அணி சீரற்ற பிட்சில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

 

கடைசி ஓவர்: மாயங்க் அகர்வாலின் அபார தடுப்பும் கூல்ட்டர் நைலின் துல்லியப் பந்துவீச்சும்

 

சன் ரைசர்ஸ் விரட்டலின் போது 19-வது ஓவர் முடிவில் 158/6 என்று இருந்தது. 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

கிரீஸில் ஆஷிஷ் ரெட்டி, கரண் சர்மா ஆகியோர் உள்ளனர். டெல்லியின் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் கூல்ட்டர் நைல் வீசினார். வைடாக யார்க்கர் லெந்த்தில் வீச அடிக்கும் வாய்ப்பு குறைவானது. முதல் பந்தில் 1 ரன் மட்டுமே தேர்ட் மேன் திசையில் வந்தது.

 

2-வது பந்தை ஆஷிஷ் ரெட்டி எதிர்கொண்டார். மீண்டும் வைடு யார்க்கர், பந்து சிக்கவில்லை. கரண் சர்மா, ரன்னர் முனையிலிருந்து 1 ரன்னை ‘பை’ முறையில் எடுத்து ஸ்ட்ரைக்கை தன் வசம் கொண்டு வர நினைத்து ஓடினார். ஆனால் ரெட்டி தாமதமாக வினையாற்றியதால் கீப்பர் நேராக பவுலருக்கு அடிக்க கூல்ட்டர் நைல் ஸ்டம்பில் அடிக்க ஆஷிஷ் ரெட்டி ரன் அவுட் ஆனார்.

 

3-வது பந்தை கரண் சர்மா ஓங்கி அடிக்க லாங் ஆஃபில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரவீண் குமாருக்கு மீண்டும் வைடு ஆஃப் ஸ்டம்பில் வீச கவர் திசையில் 1 ரன் மட்டுமே வந்தது.

 

5-வது பந்துதான் அந்த அருமையான தடுப்பை நிகழ்த்தினார் மாயங்க் அகர்வால், 5-வது பந்தை கூல்ட்டர் நைல் சற்றே லெந்த்தில் வீச கரண் சர்மா அதை ஸ்லைஸ் செய்தார் பந்து பாயிண்ட் திசையில் பவுண்டரிக்கு மேலாக சென்று கொண்டிருந்தது. மாயங்க் அகர்வால் அதனை சிறப்பாகக் கணித்து பதற்றமடையாமல் எல்லைக்கோட்டு கயிற்றுக்கு அருகில் சென்று நன்றாக எழும்பி பந்தை மைதானத்துக்குள் தட்டி விட்டார். 2 ரன்கள் ஆனது. மிக அருமையான பீல்டிங், ஆட்டத்தை வெற்றி பெறச் செய்த பீல்டிங்.

 

கடைசி பந்தும் வைட் ஆஃப் திசை பந்தாக அமைய கரண் சர்மா அதனை அடிக்க பந்து சரியாக சிக்காமல் லாங் ஆஃபில் மேத்யூஸ் வசம் கேட்ச் ஆனது. அந்த ஓவரில் 6 ரன்களே வந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி டேர் டெவில்ஸ். அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா இதே போன்ற ஒரு பீல்டிங்கைச் செய்தது நினைவுகூரத் தக்கது.

 

பந்துவீச்சில் டுமினி அருமையாக வீசி 3 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து வார்னர், தவன், பொபாரா, மோர்கன் ஆகிய அதிரடி வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 54 ரன்களை எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் டெல்லி கேப்டன் ஜே.பி.டுமினி.

 

ஸ்ரேயஸ் ஐயர்-டுமினி அபார அரைசதம்:

டெல்லி அணி முதலில் பேட் செய்ய களமிறங்கிய போது அதிரடி வீரர் மாயங்க் அகர்வால் 1 ரன்னில் புவனேஷ் குமாரிடம் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு ஸ்ரேயஸ் ஐயர், டுமினி இணைந்து 9 ஓவர்களில் 78 ரன்களை விளாசினர். இன்று சன் ரைசர்ஸ் அணியில் டேல் ஸ்டெய்ன் விளையாடினார். டுமினி விக்கெட்டை வீழ்த்தினார்.

 

ஸ்ரேயஸ் ஐயர் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 60 ரன்கள் விளாசினார். கடைசியில் பிரவீன் குமாரிடம் ஆட்டமிழந்தார். டுமினி 54 ரன்களில் ஆட்டமிழக்க யுவராஜ் சிங் 9 ரன்களில் ஆஷிஷ் ரெட்டி பந்தை சிக்சருக்கு தூக்கி அடிக்க பவுண்டரி அருகே வார்னர் அதனை எம்பிப் பிடித்தார். அது சிக்சருக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அபாரமாக பிடித்ததால் யுவராஜ் ஆட்டமிழந்தார்.

 

கடைசியில் மேத்யூஸ் 15 ரன்களையும், கேதர் ஜாதவ் 19 ரன்களையும் எடுக்க டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.

புவனேஷ் குமார் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 21 ரன்களை கொடுத்து அபாய வீரர் மாயங்க் அகர்வாலை வீழ்த்தினார்.

 

டுமினி அபாரப் பந்துவீச்சில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்:

தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி வார்னர், தவன் மூலம் 6 ஓவர்களில் 50 ரன்கள் என்ற விரைவு கதி தொடக்கம் கண்டது. ஆனால் டுமினி வீசிய 7-வது ஓவர் திருப்பு முனையாக அமைந்தது. 18 ரன்களில் இருந்த தவன், டுமினி பந்தை தவறாகக் கணித்து பவுல்டு ஆனார்.

அதே ஓவரில் 3-வது பந்தில் வார்ன்ரையும் வீழ்த்தினார் டுமினி. வார்னர் 20 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து அபாயகரமாக ஆடிவந்த போது பந்து ஒன்று சற்றே நின்று வர, மிட்விக்கெட்டில் ஆட நினைத்த வார்னரின் மட்டை முன் விளிம்பில் பட்டு டுமினியிடமே கேட்ச் ஆனது.

 

இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூஸ் பந்தை கொஞ்சம் அதிகமாக ஒதுங்கிக் கொண்டு லெக் திசையில் ஆட முயல, பந்து சிக்கவில்லை நேராக லெக் ஸ்டம்ப் காலியானது. 89/3. நமன் ஓஜாவை 12 ரன்களில் இம்ரான் தாஹிர் வீழ்த்தினார்.

ரவி பொபாரா 30 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் நம்பிககை அளித்த நிலையில் 17-வது ஓவரில் ஸ்கோர் 128 ஆக இருக்கும் போது டுமினியின் 3-வது விக்கெட்டாகச் சாய்ந்தார். அதே ஓவரில் டுமினி, இயன் மோர்கனையும் வீழ்த்தினார். 17-வது ஓவர் முடிவில் 129/6.

 

ஆனால் அடுத்த 14 பந்துகளில் ஆஷிஷ் ரெட்டி, கரன் சர்மா இணைந்து 30 ரன்களை விளாசினர். கரன் சர்மா 2 அபாரமான சிக்சர்களை அடித்தார். ஸ்கோர் 159 ரன்களை எட்டிய போது 4 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்தான் 5-வது பந்தை மாயங்க் அகர்வால் சமயோசிதமாக, அற்புதமாக தடுத்து 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க, சன் ரைசர்ஸ் அணி தோல்வி தழுவியது.

 

டெல்லி அணியில் டுமினி 4 விக்கெட்டுகளைத் தவிர கூல்ட்டர் நைல் 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றி சிக்கனம் காட்டினார். யுவராஜ் பேட்டிங்கில் 9 ரன்கள் எடுத்து சொதப்ப, பந்து வீச்சில் ஒரே ஓவரில் 10 ரன்களைக் கொடுத்து மேலும் மோசமானார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7117274.ece

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி

 

மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் இன்று நடந்த இரண்டாவது லீக் சுற்றில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோல்கட்டா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய கோல்கட்டா அணி 17.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள்எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1233222

  • தொடங்கியவர்

ரசல் விளாசலில் கோல்கட்டா வெற்றி: வீழ்ந்தது பஞ்சாப் அணி

 

புனே: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஆன்ட்ரூ ரசல் அரைசதம் விளாச, கோல்கட்டா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.      

புனேவில் நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.           

 

 

பெய்லி ஆறுதல்: பஞ்சாப் அணிக்கு முரளி விஜய்(0) ஏமாற்றினார்.  சகா (15), சேவக் (11) நிலைக்கவில்லை. 13 ரன்னில் யூசுப் பதான் தயவில் கண்டம் தப்பிய மேக்ஸ்வெல், 33 ரன்கள் எடுத்தார். பெரேரா (9), குர்கீரத் சிங் (10) நீடிக்கவில்லை. கேப்டன் பெய்லி இத்தொடரில் 2வது அரைசதம் எட்டினார். முதல் இரு போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத, சுனில் நரைன், நேற்று அக்சர் படேலை (1) வெளியேற்றி ஆறுதல் அடைந்தார்.        

 

    

கடைசி ஒவரில் பெய்லி (60), ஜான்சன் (1) அவுட்டாக, பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டும் எடுத்தது.          சந்தீப் அபாரம்: எளிய இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணி, சந்தீந் சர்மா ‘வேகத்தில்’ அதிர்ந்தது. இவரது பந்துவீச்சில் உத்தப்பா (13), மணிஷ் பாண்டே (12), காம்பிர்(11) அவுட்டாகினர். சூர்ய குமார் (23), சகாவின் அசத்தலான ‘கேட்சில்’ வெளியேறினார். அம்பயர் நந்தனின் (இந்தியா) தவறான தீர்ப்பில், டஸ்காட்டே ‘டக்’ அவுட்டாக, கோல்கட்டா அணி 7.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

 

 

பின் அதிரடியாக ஆடிய ஆன்ட்ரூ ரசல், போட்டியின் போக்கை மாற்றினார். அக்சர் படேல் ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி, சிக்சர் விளாசினார். இவருக்கு யூசுப் பதான் ஒத்துழைப்பு தந்தார். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த ரசல் (66 ரன், 36 பந்து), 28 வது பந்தில் அரைசதம் அடித்து, வெற்றியை உறுதி செய்தார்.

கடைசியில் பியுஸ் சாவ்லா ஒரு பவுண்டரி அடிக்க, கோல்கட்டா அணி 17.5 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.      

பியுஸ் சாவ்லா (4), யூசுப் பதான் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

சேவக் ‘100’           

ஐ.பி.எல்., அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்ற 10வது வீரரானார் பஞ்சாப்பின் சேவக். முதல் 9 இடங்களில் ரெய்னா (118 போட்டி), ரோகித் சர்மா (116), தோனி (115), உத்தப்பா (110), யூசுப் பதான் (109), கோஹ்லி (109), தினேஷ் கார்த்திக் (108), காம்பிர் (107), பியுஸ் சாவ்லா (101) உள்ளனர்.         

  

சாவ்லா ‘106’           

ஐ.பி.எல்., அரங்கில் அதிக சிக்சர் விட்டுக் கொடுத்த பவுலர்கள் வரிசையில் கோல்கட்டா வீரர் பியுஸ் சாவ்லா இரண்டாவது இடம் (106 சிக்சர்) பெற்றார். முதலிடத்தில் தற்போது டில்லி அணியில் உள்ள அமித் மிஸ்ரா (111 சிக்சர்) உள்ளார்.      

     

பெரேரா ‘5’           

ஐ.பி.எல்., தொடரில் அதிக அணிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இலங்கை வீரர் திசரா பெரேரா, 2வது இடம் பெற்றார். நேற்று பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர்,  இதற்கு முன் சென்னை, ஐதராபாத், கொச்சி மற்றும் மும்பை அணிகளுக்காக களமிறங்கினார்.            

சென்னை, ஐதராபாத், கொச்சி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் என, 6 அணிகளில் விளையாடிய பார்த்திவ் படேல், இவ்வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 

           

4           

ஐ.பி.எல்., அரங்கில் கடந்த ஆண்டு 3 முறை, தற்போது 1 என, தொடர்ந்து 4 போட்டிகளில் கோல்கட்டாவிடம் வீழ்ந்தது பஞ்சாப்.      

  

66

நேற்று கோல்கட்டா அணிக்காக பேட்டிங்கில் 7வது இடத்தில் களமிறங்கிய ஆன்ட்ரூ ரசல், 66 ரன்கள் எடுத்தார். ஐ.பி.எல்., அரங்கில் 7வது இடத்தில் களமிறங்கிய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தது ரசல் மட்டும் தான்.

 

http://sports.dinamalar.com/2015/04/1429373799/IPLCricketPunjabKolkata.html

  • தொடங்கியவர்

விண்ணைத் தொடுமா சென்னை: இன்று ராஜஸ்தானுடன் மோதல்

 

ஆமதாபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை அணி அசத்தினால், ராஜஸ்தானின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.     

இந்தியாவில் எட்டாவது ஐ.பி,எல்., தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.      

      

சென்னை அணியை பொறுத்தவரை டில்லிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. பின் ஐதராபாத், மும்பை அணிகளை சாய்த்து, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.            

 

பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் துவக்கத்தில் அதிரடியாக ரன் சேர்க்கின்றனர். அடுத்து ரெய்னாவும் மிரட்டுவது வரவேற்கத்தக்க விஷயம். கேப்டன் தோனி, டுபிளசி, டுவைன் பிராவோ, ஜடேஜா என ‘பேட்டிங்’ வரிசை நீளுகிறது.     

       

நெஹ்ரா நம்பிக்கை: பவுலிங்கில் ‘சீனியர்’ நெஹ்ரா (6 விக்.,), பிராவோ (6) இருவரும் துவக்கம் மற்றும் கடைசி நேரத்தில் விக்கெட் சாய்ப்பதால் வெற்றிக்கு வசதியாக உள்ளது. தவிர, அஷ்வின், மோகித் சர்மா, ஈஷ்வர் பாண்டேயும் நம்பிக்கை தருகின்றனர்.        

    

ஸ்மித் மிரட்டல்: வாட்சனுக்குப் பதில் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் பொறுப்பேற்ற ஸ்டீவ் ஸ்மித், தொடர்ந்து 4 வெற்றிகள் பெற்று அசத்துகிறார். ரகானே, 19வயது வீரர் ஹூடா, பால்க்னர் ரன்கள் சேர்க்க உதவுகின்றனர். சஞ்சு சாம்சன் ஏமாற்றுவது பலவீனம்.    

       

சவுத்தீ பலம்: பவுலிங்கில் டிம் சவுத்தீ, சென்னை அணியில் இருந்த கிறிஸ் மோரிஸ், ஸ்டூவர்ட் பின்னி, பால்க்னர், குல்கர்னி என ஒரு பெரும் படையே உள்ளது. இவர்களுடன் 43 வயதான பிரவின் டாம்பேவும் அசத்துவது பலம். 

 

இத்தொடரில் அசைக்க முடியாத இவ்விரு அணிகளும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இன்றைய போட்டியின் முடிவு எது ‘பெரிய’ அணி என்பதை தீர்மானிக்கும் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இதுவரை...     

இரு அணிகளும் ஐ.பி.எல்., அரங்கில் மோதிய 13 போட்டிகளில் 8ல் சென்னை, 5ல் ராஜஸ்தான் வென்றன. இத்தொடரில் முதல் முறையாக மோத உள்ளன.

 

http://sports.dinamalar.com/2015/04/1429367965/IPLCricketChennaiRajasthan.html

  • தொடங்கியவர்

Chennai Super Kings have won the toss and they will bat.

  • தொடங்கியவர்

Chennai Super Kings 9/0 (1/20 ov)


11/0 (1.5/20 ov)


BB McCullum c Faulkner b Tambe 12 (7b 3x4 0x6) SR: 171.42


Chennai Super Kings 17/1 (3/20 ov)


28/1 (4/20 ov)


Chennai Super Kings 36/1 (4.6/20 ov)


SK Raina c †Samson b Morris 4 (8b 0x4 0x6) SR: 50.00


39/2 (5.6/20 ov)


F du Plessis c Morris b Ankit Sharma 1 (3b 0x4 0x6) SR: 33.33


Chennai Super Kings 40/3 (7/20 ov)


Chennai Super Kings 52/3 (8.2/20 ov)


Chennai Super Kings 65/3 (9/20 ov)


சொத் சொத்தென்று விழும் சென்னை விக்கெட்கள் - 3 விக்கெட் இழந்து பரிதவிப்பு :D

 


ராஜஸ்தான் அட்டாக்கில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

 


DR Smith b Faulkner 40 (29b 3x4 2x6) SR: 137.93


Chennai Super Kings 66/4 (9.3/20 ov)


Chennai Super Kings 68/4 (10/20 ov)


ஸ்மித்தும் காலி...'தல' டோணி வருகை.. பிராவோவும் இருக்கிறார் :D

 


Chennai Super Kings 73/4 (11/20 ov)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.