Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

Chennai Super Kings 85/4 (12/20 ov)


Chennai Super Kings 89/4 (13/20 ov)


Chennai Super Kings 100/4 (14/20 ov)


Chennai Super Kings 106/4 (14.4/20 ov)


Chennai Super Kings 106/4 (15/20 ov)


Chennai Super Kings 113/4 (16/20 ov)


Chennai Super Kings 117/4 (16.1/20 ov)


Chennai Super Kings 122/4 (16.6/20 ov)


Chennai Super Kings 138/4 (17.5/20 ov)


Chennai Super Kings 139/4 (18/20 ov)


Dwayne Bravo (rhb)  50 
MS Dhoni (rhb)  28


Chennai Super Kings 149/4 (18.6/20 ov)

  • Replies 449
  • Views 23.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Chennai Super Kings 156/4 (20/20 ov)

  • தொடங்கியவர்

வெற்றிக் கூட்டணிக்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி: ரோஹித் சர்மா ஆதங்கம்
 

 

மும்பை அணியில் வெற்றிக் கூட்டணியை உருவாக்குவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டோம். ஆனால் அவையனைத்தும் தோல்வி யிலேயே முடிந்தன என்று ஆதங்கப்பட்டுள்ளார் அதன் கேப்டன் ரோஹித் சர்மா.

 

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தோடு சேர்த்து தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்றுள்ளது மும்பை. அதனால் விரக்தியடைந்துள்ள ரோஹித் சர்மா மேலும் கூறியதாவது:

 

அடுத்ததாக எங்கள் அணியின் சரியான வெற்றிக் கூட்டணி (வீரர்கள்) எது என்று பார்க்க வேண்டும். அதற்கான தேடலில் தான் நாங்கள் இருக்கிறோம். கடந்த 4 போட்டிகளிலும் 5 பவுலர் களோடு களமிறங்கியதோடு, பேட்ஸ்மேன்களின் வரிசையை யும் மாற்றிப் பார்த்தோம். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன.

சரியான கூட்டணியை பெறு வதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதல் 3 ஆட்டங் களில் நாங்கள் என்ன செய்தா லும் அதற்கு பலன் கிடைக்க வில்லை. அதனால் சூப்பர் கிங்ஸுக்கு எதிராக புதிய உத்தியைக் கையாண்டோம். அதன்படி ஆண்டர்சனை 3-வது பேட்ஸ்மேனாக களமிறக்கினோம்.

 

 

கடந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 3-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆண்டர்சன் 95 ரன்கள் குவித்ததால் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றோம். அதை மனதில் வைத்தே இந்த முறை 3-வது பேட்ஸ்மேனாக களமிறக்கினோம். அது முற்றிலும் தவறாகிவிட்டது. புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் ஆண்டர்சனை 3-வது வீரராக களமிறக்கியது மிகச் சரியானதுதான் என்றார்.

 

அடுத்த ஆட்டத்தில் நியூஸி லாந்து வீரர் மிட்செல் மெக்லீனா கான் களமிறக்கப்படுவார் எனக் கூறிய ரோஹித் சர்மா, “மிட்செல் திறமையான பவுலர். அவரை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக களமிறக்கலாம் என நினைத்தோம். எனினும் வலுவான பேட்டிங்குடன் களமிறங்க வேண்டும் என விரும்பி யதால் அவரை சேர்க்காமல் சிம்மன்ஸுக்கு வாய்ப்பளித்தோம்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7119011.ece

 


ரோஹித் விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனை: ஆசிஷ் நெஹ்ரா
 

 

ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட ஆரம்பித்தபோது அவரின் விக்கெட்டை வீழ்த்தியதே எங்கள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப் பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.

 

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டி யன்ஸை தோற்கடித்தது. சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள அதேவேளையில், மும்பை அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்தித்துள்ளது.

 

மும்பைக்கு எதிராக 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிஷ் நெஹ்ரா, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் கூறியதாவது: ரோஹித் சர்மா எப்படிப்பட்ட பேட்ஸ்மேன், அவர் ஆட்டத்தின் போக்கை எப்படி மாற்றுவார் என்பது அனைவருக் குமே தெரியும். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தபோது அவரு டைய விக்கெட்டை வீழ்த்தியது தான் திருப்புமுனை.

 

ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்களை 3 பகுதியாகவும், டி20 கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் மூன்று ஓவர்களையும், சில நேரங்களில் கடைசியில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்களையும் வீசக்கூடிய பவுலர்களில் நானும் ஒருவன். இன்றைய போட்டியிலும் கூட 15-வது ஓவரை வீச என்னை அழைத்தார் தோனி. அப்போது விக்கெட் வீழ்த்துவது அவசியம். ரோஹித்-போலார்ட் ஜோடி களத்தில் நின்றுவிட்டால் அடுத்த 4 அல்லது 5 ஓவர்களில் 80 அல்லது 90 ரன்கள் குவித்துவிடுவார்கள். அதனால் விக்கெட் எடுக்கப் பாருங்கள். தொடர்ந்து விக்கெட் எடுக்க முயற்சியுங்கள் என்று தோனி என்னிடம் கூறினார். அதுபோலவே விக்கெட்டும் கிடைத்தது என்றார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/article7118998.ece

  • தொடங்கியவர்

Chennai Super Kings 156/4 (20/20 ov)
Rajasthan Royals 1/0 (1/20 ov)


Chennai Super Kings 156/4 (20/20 ov)
Rajasthan Royals 8/0 (2/20 ov


Chennai Super Kings 156/4 (20/20 ov)
Rajasthan Royals 19/0 (3/20 ov)


Rajasthan Royals 32/0 (4/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 156/4 (20/20 ov)
Rajasthan Royals 42/0 (5/20 ov)

  • தொடங்கியவர்

Rajasthan Royals 51/0 (7/20 ov)

  • தொடங்கியவர்

Chennai Super Kings 156/4 (20/20 ov)
Rajasthan Royals 77/0 (9.1/20 ov)

  • தொடங்கியவர்

RR 142/0

  • தொடங்கியவர்

147/1

155/1

  • தொடங்கியவர்

ராஜஸ்த்தான் ரோயல்ஸ் 8 விக்கெட்களால் வெற்றி

  • தொடங்கியவர்

ஐபிஎல்: சென்னையை பந்தாடியது ராஜஸ்தான்
 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இளம் வீரர்களின் ஆதிக்கம் நிறைந்த ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து 3 வெற்றிகளைக் கைப்பற்றிய சென்னை அணி முதல் தோல்வியை சந்தித்தது.

 

இன்றைய ஐபிஎல் 15-வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 157 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

 

துவக்க ஆட்டக்காரர்களான ரஹானேவும் வாட்சனும் சென்னையின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

வாட்ஸன் 47 பந்துகளில் 73 ரன்கள் விளாசிய நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களில் பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காத ரஹானே 55 பந்துகளில் 77 ரன்கள் குவித்திருந்தார்.

 

முன்னதாக, இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்தது.

துவக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித் 29 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். மெக்கலம் 12 ரன்களிலும், ரெய்னா 4 ரன்களிலும், டூபிளஸி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த பிராவோ - தோனி கூட்டணி, ராஜஸ்தான் பந்துவீச்சை விளாசியது. பிராவோ ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 62 ரன்களும், தோனி 37 பந்துகளில் 31 ரன்களும் சேர்த்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் அங்கித் சர்மா, மோரிஸ், தாம்பே மற்றும் பாக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7119311.ece

  • தொடங்கியவர்

மண்ணைக் கவ்வியது சென்னை: ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி

 

ஆமதாபாத்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய சென்னை அணி முதல் தோல்வியை சந்தித்தது. வாட்சன், ரகானே அரைசதம் விளாச ராஜஸ்தான் அணி, தொடர்ந்து 5வது வெற்றியை பெற்றது.      

 

இந்தியாவில் எட்டாவது ஐ.பி,எல்., தொடர் நடக்கிறது. நேற்று ஆமதாபாத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின.

வந்தார் வாட்சன்: இடுப்பு பகுதி காயத்தில் இருந்து மீண்ட வாட்சன்,  ராஜஸ்தான் அணியின் கேப்டனாக களமிறங்கினார். ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.      

 

விக்கெட் சரிவு: சென்னை அணியின் ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆடினர். டாம்பே ‘சுழலில்’ பிரண்டன் மெக்கலம் (12) சிக்கினார். அடுத்து வந்த ரெய்னா (4), மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். டுபிளசியும் (1) ஏமாற்ற, 6.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்து தவித்தது. டுவைன் ஸ்மித் (40) ஓரளவுக்கு கைகொடுத்தார்.

 

தோனி மந்தம்: பின் தோனி, டுவைன் பிராவோ சேர்ந்து போராடினர். அதிரடியாக ஆடிய பிராவோ,  டாம்பே பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு அரைசதம் எட்டினார். மறுமுனையில் தோனி ஆமை வேகத்தில் விளையாட, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. பிராவோ (62), தோனி (31) அவுட்டாகாமல் இருந்தனர்.                     

                

படுத்தது பந்துவீச்சு: எட்டக்கூடிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ரகானே, வாட்சன் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இவர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். பிராவோ வீசிய 12வது ஓவரில் ஒரு சிக்சர் இரண்டு பவுண்டரி அடித்த வாட்சன், அரைசதம் எட்டினார். மீண்டும் பந்துவீச வந்த பிராவோ ஓவரில் இம்முறை ரகானே, ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தபோது, ஜடேஜா ‘சுழலில்’ வாட்சன் (73) ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் (6) ஏமாற்றியபோதும், ராஜஸ்தான் அணி 18.2 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. ரகானே (76), கருண் நாயர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

ஆட்ட நாயகன் விருதை ரகானே வென்றார்.

தோனி ஒப்புதல்

நேற்று படுமந்தமாக ஆடிய சென்னை கேப்டன் தோனி, 37 பந்தில் 31 ரன்கள்(ஸ்டிரைக் ரேட் 83.78) தான் எடுத்தார். இதுவும் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இதனை ஒப்புக்கொண்ட இவர் கூறுகையில்,‘‘நான் நிறைய பந்துகளை ‘விழுங்கினேன்’. ஆடுகளம் சிறப்பாக இருந்தும் ரன் சேர்க்க முடியவில்லை. வெயிலின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தியது. மொத்தத்தில் நேற்றைய நாள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இதிலிருந்து விரைவில் மீள்வோம்,’’என்றார்.

 

144 ரன்கள்           

ராஜஸ்தான் அணி சார்பில் நேற்று முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்(144) சேர்த்து சாதித்தனர்  வாட்சன், ரகானே. இதற்கு முன் 2009ல் கிரேம் ஸ்மித், நமன் ஓஜா ஜோடி 135 ரன்கள் (எதிர்–பஞ்சாப், டர்பன்) சேர்த்தது.  

          

‘சேசிங் கிங்’      

ஐ.பி.எல்., அரங்கில் 150 ரன்களுக்கு மேல், ராஜஸ்தான் அணி 17வது முறையாக ‘சேஸ்’ செய்தது. இதன் மூலம், அதிக முறை 150 ரன்களுக்கு மேல் ‘சேஸ்’ செய்த அணிகளின் பட்டியலில் முதலிடத்தை சென்னையுடன் பகிர்ந்து கொண்டது.     

       

106     

இத்தொடரில், இதற்கு முன் விளையாடிய 3 போட்டிகளுடன் ஒப்பிடுகையில், இம்முறைதான் சென்னை அணி முதல் 15 ஓவரில் குறைந்த (106) ரன்னை எடுத்தது.    

  

வெயில் அதிகம்     

போட்டி நடந்த ஆமதாபாத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சில வீரர்கள் அவ்வப்போது குளிர்பானம் அருந்தியபடி இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2015/04/1429367965/IPLCricketChennaiRajasthan.html

  • தொடங்கியவர்

சிம்மன்ஸ், உன்முக்த் அரைசதம்

 

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சிம்மன்ஸ், உன்முக்த் சந்த் அரைசதம் விளாச, மும்பை அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.                 

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான 16வது லீக் போட்டியில், பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.           

 

      

மும்பை அணிக்கு பார்த்திவ் படேல் (12) ஏமாற்றினார். பின் இணைந்த சிம்மன்ஸ், உன்முக்த் சந்த் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பெங்களூரு பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். வருண் ஆரோன் வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த சிம்மன்ஸ், 36 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.

 

இவருக்கு ஒத்துழைப்பு தந்த உன்முக்த் சந்த், யோகேந்திர சாகல், இக்பால் அப்துல்லா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இரண்டாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த போது சாகல் பந்தில் சிம்மன்ஸ் (59) அவுட்டானார். டேவிட் வைஸ் வீசிய 16வது ஓவரில் 4 பவுண்டரி விளாசிய உன்முக்த் அரைசதம் அடித்தார். இவர், 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.                 

 

 

அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா, அபு நேசிம் வீசிய 17வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுத்தார். டேவிட் வைஸ் வீசிய 19வது ஓவரின் 2, 3வது பந்தில் போலார்டு (5), அம்பதி ராயுடு (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்த பந்தில் ரோகித் பவுண்டரி அடிக்க, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. துல்லியமாக பந்துவீசிய வைஸ், 5வது பந்தில் ரோகித்தை (42) வெளியேற்றினார். அபு நேசிம் வீசிய 20வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 2 சிக்சர் விளாச, ஸ்கோர் 200 ரன்னை கடந்தது.      

           

மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா (16) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் டேவிட் வைஸ் 4, சாகல் 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2015/04/1429368164/IPLCricketMumbaiBangaluru.html

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

  • தொடங்கியவர்

மூச், பேசப்படாது.... நடுவரின் எச்சரிக்கையால் வாயில் "செல்லோடேப்" ஒட்டிக் கொண்ட போலார்ட்!

208ct9u.jpg

 

பெங்களூரு: வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது என நடுவர் எச்சரித்ததைத் தொடர்ந்து, வாயில் செல்லோடேப் ஒட்டிக் கொண்டு வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் கீரன் போலார்டின் நடவடிக்கையை மைதானத்தில் கூடி இருந்த ரசிகர்கள் கைதட்டி ரசித்தனர். ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டம் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அனல் பறக்க நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் 3வது ஓவரின் போது பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலுக்கு அருகில் கடமையே கண்ணாக பீல்டிங் செய்து கொண்டிருந்தார் போலார்ட்.

 

சக மேற்கு இந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த கெய்லை சீண்டுவது போல நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து போலார்டை அழைத்த நடுவர், ‘வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது' என எச்சரிக்கை விடுத்தார். மூச், பேசப்படாது.... நடுவரின் எச்சரிக்கையால் வாயில் ‘நான் ஒண்ணுமே செய்யலையே' என தெரிவித்த போலார்ட்டிடன், ‘இது வெறும் எச்சரிக்கை தான்' என்றார் நடுவர். இதனால் கோபமான போலார்ட், ஓவர் இடைவேளையின் போது ஓடிப்போய் ஒரு செல்லோ டேப்பை வாயில் ஒட்டிக்கொண்டு சமத்துப் பிள்ளையாக மைதானத்துக்குள் வந்தார். பவுண்டரி லைனில் இருந்த ரிக்கி பாண்டிங் உட்பட மும்பை அணி வீரர்கள் அனைவரும் போலார்டின் இந்த நடவடிக்கையை பார்த்து சிரித்தனர்.

 

 

அது மட்டுமல்லாமல் சக வீரர்களுடன் பேசுவதாக இருந்தால் டேப்பை லேசாக நீக்கி பேசி விட்டு மறுபடியும் ஒட்டிக் கொண்டார் போலார்ட். இது மைதானத்தில் இருந்த பிரம்மாண்டமான திரையிலும் காட்டப்பட்டது. ரசிகர்களும் போலார்ட்டின் செய்கையைக் கண்டு ரசித்துச் சிரித்தனர். இதனால் மைதானமே சிரிப்பில் ஆழ்ந்தது. இறுதியில், அதே திரையில் 'சைலன்ஸ் ப்ளீஸ்' என்று காட்டிய பிறகுதான் ரசிகர்களின் சிரிப்புச்சத்தம் கொஞ்சம் அடங்கியது. ஒரு முரட்டு சிங்கத்துக்குள் இப்படி ஒரு சிரிப்பு ரோஜாவா...!!

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-silence-please-kieron-pollard-tapes-his-mouth-after-warning-from-umpire-225037.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ஐபிஎல் காசுக்காக அடிக்கிற குத்துக்கரணம் தாங்க முடியல.. :lol:

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணியின் இலக்கு ‘147’
ஏப்ரல் 19, 2015.

 

புதுடில்லி: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.

 

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கோல்கட்டா, டில்லி அணிகள் மோதுகின்றன.

இதில் ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர், பீல்டிங் தேர்வு செய்தார். மறைந்த அன்கித் கேஷ்ரிக்கு இரு அணி வீரர்களும் இரு நிமிடம் இரங்கல் தெரிவித்தனர்.

 

பின் போட்டி துவங்கியதும் டில்லி அணியின் மயங்க் அகர்வால் (1), கேப்டன் டுமினி (5) விரைவில் அவுட்டாகினர். ஸ்ரேயாஷ் 31 ரன் எடுத்தார். யுவராஜ் சிங் (21), கேதர் ஜாதவ் (12), கூல்டர் நைல் (2), மாத்யூஸ் (28) ஏமாற்றினர்.

 

டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது. அமித் மிஸ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா சார்பில் மார்னே மார்கல், உமேஷ் யாதவ், பியுஸ் சாவ்லா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://sports.dinamalar.com/2015/04/1429454903/IPLCricketDelhiKolkata.html

  • தொடங்கியவர்

கொல்கத்தா 6 விக்கெட்டுக்களால் வெற்றி
 

 

டெல்­லியை எதிர்­கொண்ட கொல்­கத்தா 6 விக்­கெட்­டுக்­களால் வெற்றி பெற்று தனது மூன்­றா­வது வெற்­றியை பதிவு செய்­து­கொண்­டுள்­ளது.

டெல்­லியில் நேற்று நடை­பெற்ற ஐ.பி.எல். இரு­ப­துக்கு 20 தொடரின் 17ஆவது லீக் போட்­டியில் டெல்லி டேர்­டெவில்ஸ் மற்றும் கொல்­கத்தா நைட்­ரைடர்ஸ் அணிகள் மோதி­யி­ருந்­தன.

 

நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய டெல்லி டேர்­டெவில்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 146 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்­டது. அவ்­வணி சார்­பாக மனோஜ் திவாரி 5 நான்கு ஓட்­டங்கள் உள்­ள­டங்­க­லாக 32 ஓட்­டங்­களை அதி­க­பட்­ச­மாகப் பெற்­றார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ், பியூஷ் சாவ்லா, மோர்னி மோர்க்கல் ஆகியோர் தலா 2 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய கொல்­கத்தா அணி 18.1 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து வெற்­றி­யி­லக்கை அடைந்­தது.

 

அவ்­வணி சார்­பாக அணித்­த­லை­வரும் ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீர­ரு­மான கௌதம் கம்பீர் 8 நான்கு ஓட்­டங்கள் உள்­ள­டங்­க­லாக 60 ஓட்­டங்­களை அதி­க­பட்­ச­மாக பெற்றார். இவ­ருக்கு துணை­யாக யூசுப்­பதான் 40 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக கொல்கத் தாவின் உமேஷ் யாதவ் தெரிவானார்.

 

http://www.virakesari.lk/articles/2015/04/21/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

  • தொடங்கியவர்

கிரீஸை விட்டு வெளியே வந்து புதிரான முறையில் ஆட்டமிழந்த யுவராஜ் சிங்
 

 

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டேர் டெவில்ஸ் அதிக விலை கொடுத்து வாங்கிய யுவராஜ் சிங் விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவர் அற்புதமாக அமைய கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 ரன்கள், கடைசி 3 பந்துகளில் ரன் இல்லை. அஞ்சேலோ மேத்யூஸுக்கு உமேஷ் யாதவ்வின் பந்தை மட்டையுடன் தொடர்பு படுத்த முடியாமல் போனது.

 

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கம்பீர் 60 ரன்களையும், யூசுப் பதான் அதிரடி 40 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியின் 3-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி பேட் செய்த போது யுவராஜ் சிங் 19 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 9--வது ஓவரில் இறங்கிய யுவராஜ் 15-வது ஓவர் கடைசி பந்தில் விசித்திரமாக அவுட் ஆனார்.

 

பியூஷ் சாவ்லா வீசிய அந்த 15-வது ஓவரின் 5-வது பந்தை புல் ஆடி மிட்விக்கெட்டில் வலுவான பவுண்டரி அடித்தார் யுவராஜ். கடைசி பந்து லெக் ஸ்டம்பில் விழ அதனை ஸ்வீப் ஆட முயன்றார் யுவராஜ் ஆனால் பந்து மட்டையில் சிக்கவில்லை. பந்து கீப்பரிடம் சென்றது, பந்து டெட் ஆகவில்லை. ஆனால் யுவராஜ் சிங் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கிரீஸை விட்டு 2 தப்படி நடந்து வெளியே வந்தார். ஏன் அப்படி செய்தார் என்றே தெரியவில்லை.

 

விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவின் ஸ்டம்பிங் முயற்சி முதல் முறை தோல்வியடைந்தது. யுவராஜ் அப்போதுதான் விழித்துக் கொண்டார். ஆனால் தாமதமான விழிப்பானது அது. 2-வது முயற்சியில் உத்தப்பா ஸ்டம்பிங் செய்து விட்டார். யுவராஜ் 21 ரன்களில் அவுட் ஆனார்.

 

பந்து ஆட்டத்தில் உயிர்ப்புடன் இருக்கும் போது அவர் ஏன் கிரீஸை விட்டு வெளியே வந்தார் என்று புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

பின்பு பியூஷ் சாவ்லா இது பற்றி கூறும் போது, “ ஸ்வீப் ஆட முயன்ற யுவராஜ் சிங்கின் பேடில் பட்டு சென்றது பந்து. ஆனால் அவர் ஃபைன்லெக் திசைக்குச் சென்றதாக நினைத்து ஓட முயற்சி செய்திருக்கலாம். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர் பந்து அருகில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தார். ஆனால் மீண்டும் கிரீஸுக்குள் வருவதற்குள் ஸ்டம்ப்டு ஆனார்.” என்றார்.

 

நேற்றைய ஆட்டத்தில் டேர் டெவில்ஸ் பேட்ஸ்மென்கள் மோசமான ஷாட் தேர்வில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான சில பேக்ஃபுட் ஷாட்களை ஆடி 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து சாவ்லா பந்தை சுழற்றி பவுல்டு ஆனார். திவாரி, யுவராஜ் சிங் 4-வது விக்கெட்டுக்காக 37 ரன்களை சேர்த்தனர். திவாரி 32 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்த நிலையில் மோசமான ஷாட் தேர்வுக்கு மோர்னி மோர்கெலிடம் வீழ்ந்தார்.

 

கடைசியில் அஞ்சேலோ மேத்யூஸ், கேதர் ஜாதவ் அதிரடியில் டெல்லி அணி 146 ரன்களை எட்டியது. சுனில் நரைன் வீசிய 19-வது ஓவரில் 20 ரன்களை விளாசினர் இருவரும்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணியில் கம்பீர், உத்தப்பா 4 ஓவர்களில் 31 ரன்கள் தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் 5-வது ஓவரில் டொமினிக் ஜோசப் முத்துசாமி உத்தப்பா, பாண்டே இருவரையும் வெளியேற்றினார்.

 

சூரியகுமார் யாதவ் சில பவுண்டரிகளுடன் கம்பீருடன் இணைந்து 48 ரன்களைச் சேர்த்தார். ஆனால் கம்பீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அபாரமான நுணுக்கத்துடன் ஆடி கம்பீர் 60 ரன்களை எடுத்தார். யூசுப் பதான் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

கம்பீர் எடுக்கும் 3-வது அரைசதம் ஆகும் இது. ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடர்ச்சியாக 9-வது முறையாக டெல்லி அணி தோல்வி அடைந்தது. 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/article7126098.ece

  • தொடங்கியவர்

வெற்றி நடை போடும் ராஜஸ்தானை சமாளிக்குமா பஞ்சாப்?
 

 

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள ராஜஸ்தான், தனது வெற்றியைத் தொடரும் முனைப்பில் பஞ்சாபை சந்திக்கிறது. 4 ஆட்டங்களில் விளை யாடி 3-ல் தோற்றுள்ள பஞ்சாப் அணி, ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

தொடர் வெற்றி, கேப்டன் வாட்சனின் வருகை ஆகியவற்றால் புதிய உத்வேகம் பெற்றுள்ள ராஜஸ்தானை வீழ்த் துவது அவ்வளவு எளிதல்ல என்றா லும், பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பார்முக்கு திரும்பும்பட்சத்தில் பஞ்சாப் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ராஜஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. காயத்திலிருந்து மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள கேப்டன் வாட்சன் தனது முதல் ஆட்டத்திலேயே 73 ரன்கள் குவித்து உச்சகட்ட பார்முக்கு வந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

 

மிரட்டும் ரஹானே

அஜிங்க்ய ரஹானே, கேப்டன் வாட்சன், ஸ்டீவன் ஸ்மித், தீபக் ஹூடா, ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி என வலுவான பேட்ஸ் மேன்கள் அந்த அணியில் உள்ள னர். தொடர்ந்து அசத்தலாக ஆடி வரும் ரஹானே, 5 ஆட்டங்களில் 231 ரன்கள் குவித்து இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ரஹானே-வாட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.1 ஓவர் களில் 144 ரன்கள் குவித்தது. ரஹானே 55 பந்துகளிலும் 76 ரன்களும், வாட்சன் 47 பந்துகளில் 73 ரன்களும் குவித்தனர். எனவே ராஜஸ்தானின் ரன் குவிப்பை கட்டுப் படுத்துவதற்கு ரஹானே, வாட்சன் ஆகியோரை ஆரம்பத்திலேயே வீழ்த்துவது அவசியம்.

 

வேகப்பந்துவீச்சைப் பொறுத்த வரையில் கிறிஸ் மோரிஸ், ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரை நம்பி யுள்ளது ராஜஸ்தான். தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வரும் ஆல்ரவுண்டர் மோரிஸ், பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்.

சுழற்பந்து வீச்சில் பிரவீண் டாம்பே, தீபக் ஹூடா, அங்கித் சர்மா ஆகியோர் பலம் சேர்க்கின்ற னர். இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிரவீண் டாம்பே, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கவலையளிக்கும் பேட்டிங்

பஞ்சாப் அணியில் சேவாக், முரளி விஜய், கேப்டன் பெய்லி, மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும் அந்த அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. அதனால் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் மில்லருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா களமிறக்கப்பட்டார். ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. பேட்டிங்கில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார் பெரேரா. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் இதுவரை 65 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஜான்சன், அனுரீத் சிங், சந்தீப் சர்மா ஆகியோரையும், சுழற் பந்து வீச்சில் அக்ஷர்படேல், குருகீரத் சிங் ஆகியோரையும் நம்பியுள்ளது பஞ்சாப்.

இதுவரை

இவ்விரு அணிகளும் 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 9 முறையும், பஞ்சாப் 5 முறையும் வெற்றி கண்டுள்ளன.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/article7125372.ece

  • தொடங்கியவர்

ஜான்சன் பந்தில் ரஹானே அடித்த சூப்பர் ஷாட்டுக்கு மனமார கை தட்டிய சேவாக்
 

 

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. ரஹானே, வாட்சன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

 

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ரஹானே 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.

 

அவர் அடித்த 5 பவுண்டரிகளில் 4 பவுண்டரிகள் ஆஸ்திரேலிய வேகப்புயல் மிட்செல் ஜான்சனின் பந்துகளில் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆட்டத்தின் 4-வது ஓவரை மிட்செல் ஜான்சன் வீச 2-வது பந்தில் ஒரு பலமான எல்.பி.முறையீடு நடுவர் கொடுக்கவில்லை. லெக் ஸ்டம்புக்கு வெளீயே பிட்ச் ஆனது போல் தெரிந்தது. கொஞ்சம் பந்தும் எழும்புவது போல் தெரிந்தது. நாட் அவுட். அடுத்த பந்தும் இன்ஸ்விங்கர், ரஹானே சரியாக ஆடவில்லை பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடைத் தாக்கியது.

 

4-வது பந்து பவுன்சர். ரஹானே புல் ஆடினார். டாப் எட்ஜ் எடுத்து லாங் லெக் திசையில் பவுண்டரிக்குப் பறந்தது.

அடுத்த ஷாட்தான் அற்புதமான ஷாட். இதனைப் மனமுவந்து பாராட்டி கை தட்டினார் சேவாக். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற ஜான்சன் பந்தை ரஹானே முன்னங்காலில் சென்று கட்/டிரைவ் ஆடினார். அதாவது முழுமையான கட்டும் அல்ல, முழுமையான டிரைவும் அல்ல இரண்டுக்கும் இடைபட்ட ஒரு திராவிட் ரக, வெங்சர்க்கார் ரக ஷாட் அது. பந்து பாயிண்ட் பவுண்டரிக்கு பறந்தது.

 

ஜான்சனின் வேகத்தில் இத்தகைய ஷாட்டை ஆடுவது கடினமே. ஷாட்டின் கடினத்தன்மையையும் அதனை ரஹானே ஆடிய நேர்த்தியையும் எதிரணி வீரராக இருந்தாலும் சேவாக் அந்த ஷாட்டின் அற்புதத்துக்காக பாராட்டி கை தட்டினார்.

 

பிறகு 6-வது ஓவரை ஜான்சன் வீச ரஹானே மீண்டும் இரண்டு அருமையான பவுண்டரிகளை அடித்தார். ஒன்று ஸ்கொயர்லெக் திசையில் பறந்தது மற்றொன்று பளார் கட் ஷாட். 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 90 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் இழப்பில்லை.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/article7126750.ece

  • தொடங்கியவர்

வீரர்களிடையே உள்ள தோழமை உணர்வே வெற்றியின் ரகசியம்: தோனி
 

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகளுக்குக் காரணம், மூத்த மற்றும் இளம் வீரர்களிடையே உள்ள அபரிமிதமான தோழமை உணர்வே என்று அந்த அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை ஸ்பான்சர் நிறுவனமான யு.எஸ்.டி. குளோபல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி கூறும் போது, “சென்னை அணியின் சீரான ஆட்டத்துக்கு மூத்த, மற்றும் இளம் வீரர்களிடையே காணப்படும் தோழமை உணர்வுதான் காரணம், இதற்கு பயிற்சியாளர்கள் உதவி புரிந்தனர்.

இளம் வீரர் ஜடேஜா அணிக்கு சிலகாலமாக ஆடி வருகிறார். அதே போல் ஈஷ்வர் பாண்டே, மோஹித் சர்மா, ஆகியோரும் இந்தியாவுக்காக விளையாடுகின்றனர். தவிர பவன் நேகி இருக்கிறார். நிறைய இளம் திறமைகள் உள்ளன. ஆனாலும் பிரெண்டன் மெக்கல்லம் போன்ற மூத்த வீரர்களை உட்கார வைக்க முடியாது, இது எப்பவுமே கடினமான முடிவாகவே இருக்கும்.

 

மேலும், மைக் ஹஸ்ஸி போன்ற மூத்த வீரர்கள் அணியில் இருப்பது இளம் வீரர்களுக்கு எப்பவும் பயனளிக்கும். இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். அதனால்தான் எங்கள் அணியில் இளம் திறமைகள் உள்ளன.” என்றார்.

 

தனது பெண் குழந்தை ஸீவா பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தோனி, “குழந்தை பிறந்த போது நான் இந்தியாவில் இல்லை. அதனால் பார்க்க முடியவில்லை. அது ஒரு கடினமான காலக்கட்டமே.

 

குழந்தையின் சிரிப்பு வாழ்க்கையில் மாற்றங்களைத் தரவல்லது. நான் நாட்டுக்காக ஆடுகிறேனா அல்லது எனது உரிமையாளர் அணியான சென்னைக்கு ஆடுகிறேனா என்பதையெல்லாம் குழந்தை அறியாது. அது அழ விரும்பினால் அழும். குழந்தை நமக்கு நல்லுணர்வை ஊட்டக்கூடியது” என்றார் தோனி.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article7126382.ece

  • தொடங்கியவர்

மந்தமான பந்துவீச்சு...மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ரூ12 லட்சம் அபராதம்!

 

பெங்களூரு: 8வது ஐ.பி.எல். போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ரூ12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் விதிக்கப்பட்டுள்ள முதல் அபராதம் இதுவாகும். 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

 

இதன் 19-வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மந்தமான பந்துவீச்சு...மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ரூ12 லட்சம் அபராதம்! முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்களை எடுத்தது. இதனை சேஸ் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது.

 

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. நடப்பு ஐ.பி.எல். போட்டியில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அணிக்கு இதுதான் முதல் வெற்றியாகும்.

 

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்து வீசாமல் மும்பை அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்தது. இதனால் அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் விதிக்கப்படும் முதல் அபராதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-mi-captain-rohit-sharma-fined-rs-12-lakh-225118.html

  • தொடங்கியவர்

Rajasthan Royals 191/6 (20/20 ov)
Kings XI Punjab 191/6 (20/20 ov)
Match tied

 

super over

  • தொடங்கியவர்

Rajasthan Royals 191/6 (20/20 ov)
Kings XI Punjab 191/6 (20/20 ov)
Match tied (Kings XI Punjab won the one-over eliminator)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.