Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் 40ற்கு மேற்பட்ட பொதுமக்கள் பலி

Featured Replies

இலங்கை தொடர்பான மௌனத்தை இந்தியா கலைக்க வேண்டும்-கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி

இலங்கையில் தொடரும் வன்முறைகள் பற்றி இந்தியா காத்துவரும் பொறுமை குறித்து மறுசிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்பதை இந்திய நடுவணரசின் கவனத்திற்கு தாம் கொண்டுவருவதாக தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்கே வாகரை கதிரவெளியில், இடம் பெயர்ந்து வந்து பள்ளி ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீது நேற்று-புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில்

48 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கருணாநிதி இன்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர், இலங்கையின் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு உதவியாக வந்த நோர்வே நாட்டு குழுவினர் மீதும் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை கேள்விப்படும்போது, இந்திய நாடு இன்னும் எந்த அளவுக்கு பொறுமை காத்திடப்போகிறது என்ற நியாயமான கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய மறுசிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்பதை இந்திய நடுவணரசின் கவனத்திற்கு தாம் கொண்டுவருவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கை கதிரவெளி தாக்குதலை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக கண்டித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் கருணாநிதியோ அல்லது அவரது பிரதிநிதி ஒருவரோ, தமிழ்நாட்டின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட குழு ஒன்றை புது தில்லிக்கு அழைத்துச்சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தியையும் உடனடியாக சந்திக்க வேண்டும் என்று கோரியுள்ளார்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • Replies 64
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தினமணியில வந்ததென்று தமிழ்க் கனடியனியலை போட்டிருக்கினம். கருணாநிதி கொஞ்சம் மாறுகிரார் போல கிடக்குது!!!

அவரின் ஆதரவு எமக்கு எப்போதும் தேவை!!!

இலங்கைத் தமிழர் பிரச்சினை- மத்திய அரசு அணுகுமுறையில் மாற்றம் தேவை: கருணாநிதி

[ தினமணி ] - [ Nov 09, 2006 21:51 GMT ]

சென்னை, நவ. 10: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மட்டக்களப்பு பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கை ராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் செஞ்சோலை எனும் இடத்தில் சிங்கள ராணுவத்தினர் குண்டு வீசி தாக்கியதில் அநாதைக் குழந்தைகளும், பல சிறுவர்களும் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் தொடர்பான செய்தி அடங்கும் முன்னரே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் நடக்கும் சம்பவங்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு எத்தனை காலம்தான் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்று தெரியவில்லை. இத்தகைய அணுகுமுறையை மாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

இலங்கை விமானப் படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, ஏவுகணைகளை வீசி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கக் காரணமாக இருந்துள்ளது. அத்துடன் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு உதவியாக வந்த நார்வே குழுவினர் மீதும் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மிகவும் சோகமான நிகழ்வாகும்.

சிங்கள ராணுவம் தொடர்ந்து நடத்திவரும் இத்தகைய தாக்குதலை கண்டு இந்தியா இன்னும் எந்த அளவுக்கு பொறுமை காத்திடப் போகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய, மறு சிந்தனைக்கான நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது என்று அறிக்கையில் கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ளார்.

நன்றி: தினமணி Nov 10, 2006

  • கருத்துக்கள உறவுகள்

வாகரை கொலை வெறியாட்டம்: முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் வெளியேறினர்

வாகரை அகதிகள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய கொலை வெறியாட்டத் தாக்குதலையடுத்து முகாம்களை விட்டு இன்று வியாழக்கிழமை ஆயிரக்கணக்கானோர் வெளியேறிவிட்டனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்துக்கு சென்றுள்ள பாலைச்சேனை கதிரவெளி (வயது 29) என்ற பெண் வாகரை சம்பவம் பற்றி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

பாரிய அளவில் எறிகணைகள் விழுந்து வெடித்தன. பெரும் எண்ணிக்கையிலானோர் உயிரிழந்தும் காயம்பட்டும் உள்ளனர். எறிகணைகள் விழுந்து வெடித்த போது நான் பதுங்குகுழிக்குள் இரு பைகளில் துணிகளையும் ஒரு போத்தல் சோடாவையும் எடுத்துக் கொண்டு என் மகளுடன் குதித்துவிட்டேன். அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்றார் அவர்.

வாழைச்சேனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60-க்கும் மேற்பட்டோர் மட்டக்களப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வாழைச்சேனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

"அப்பகுதியில் எதுவித இராணுவ நிலைகளும் இல்லை. ஆகையால் இந்தத் தாக்குதல் தொடர்பில் இராணுவத் தரப்பின் பதிலை நாம் பெறுவோம்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ப்ஸ்டொட்டிர் தெரிவித்தார்.

இதனிடையே வாகரைத் தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்கள் முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தினர்.

"அரச பயங்கரவாதம் ஒழிக", சிறிலங்கா அரசாங்கமே! தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து!" உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வாகரை கொலை வெறியாட்டம்: இங்கிலாந்து கவலை

சிறிலங்கா இராணுவத்தின் வாகரை கொலை வெறியாட்டத்தில் அகதிகள் கொல்லப்பட்டமை குறித்து இங்கிலாந்து கவலை தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள சிறிலங்காவுக்கான இங்கிலாந்து தூதரகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் நவம்பர் 8 ஆம் நாள் சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சுத் தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளமையானது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சனைகளில் பொதுமக்களும் கூட அடிக்கடி பலியாகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வாகரைத் தாக்குதல்: ஐ.நா. கண்டனம்

வாகரை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வாகரை கதிரவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலையில் வாழ்ந்த அகதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நியாயப்படுத்த முடியாது. மிகவும் அடிப்படையான மனித உரிமைகளை மீறியதாககும்.

கதிரவெளி பாடசாலையில் இருந்த மக்கள் திருகோணமலை மோதலால் இடம்பெயர்ந்து தங்கியிருந்தனர்.

வாகரைத் தாக்குதலை கண்டிக்கிறோம். இத்தகைய கோரச்சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரும் மனித உரிமைகளையும் சட்டங்களையும் பாதுகாக்க வேண்டும்.

2 ஆயிரம் பொதுமக்கள் இடம்பெயர்வதை விடுதலைப் புலிகள் தடுத்ததான வெளியான செய்திகள் குறித்து அதிருப்தியடைகிறோம். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்வதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Sri Lanka: United Nations condemns indiscriminate use of force

(New York: 9 November 2006): “Yesterday’s massive attack on civilians shows that force continues to be used indiscriminately in the conflict in Sri Lanka,” said Jan Egeland, United Nations Under-Secretary General for Humanitarian Affairs.

A Sri Lankan Army artillery bombardment yesterday hit Kathiravelli School, which was hosting some 1,000 internally displaced persons (IDPs) in the Vaharai area in Batticaloa District of Sri Lanka. The Sri Lanka Monitoring Mission in its initial report on Wednesday said that they had counted 23 bodies and that 135 people were being treated in the hospital with serious and minor injuries, but the number of fatalities is expected to increase. The Monitoring Mission found no evidence of military installations. However, there have been equally disturbing are reports that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) prevented some 2,000 civilians from fleeing to safety. Shelling between the two parties has continued in Vaharai over the last few days.

“The people trapped in this camp are terrified and feel that they are completely at the mercy of others,” said Allan Rock, Special Advisor on Sri Lanka to the United Nations Special Representative for Children and Armed Conflict. “The time has come for all parties to respect the basic human rights of these people, which are simply not being observed at the moment,” he added. After his visit to the camp today, Rock described it as a “shocking sight.”

Vaharai is a narrow peninsula north of Batticaloa in eastern Sri Lanka, controlled by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). It hosts over 30,000 IDPs who left their homes in Trincomalee province due to the fighting in August 2006. They have since lived in public buildings and ad-hoc camps in the location, which is quite close to the frontlines. At the moment, UN agencies' access to the area due has been limited by the fighting.

The fighting in Sri Lanka between the LTTE and the Government has displaced almost 200,000 people since April 2006. In addition, hundreds of thousands of Sri Lankans are displaced due to previous conflict and by the tsunami.

On 2 November, Sri Lankan Army aerial bombardment hit the vicinity of the hospital in the LTTE-held town of Kilinochchi, in northern Sri Lanka. The bombing killed 5 civilians and damaged the hospital’s maternity ward.

“I call upon all parties to the conflict to ensure the protection of civilians under all circumstances in accordance with International Humanitarian Law,” Jan Egeland said.

http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900S...CG?OpenDocument

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே அரசாங்க இணையத்தளத்தில் இருந்து

Norway very troubled by the deteriorating situation in Sri Lanka

Minister of International Development Erik Solheim is very troubled by the deteriorating situation in Sri Lanka. In recent days there have been intensive military operations, some involving repeated aerial bombardment, which have particularly affected innocent civilians.

“I am very troubled by the Government’s onslaught today in Vakarai, in the eastern part of Sri Lanka. Yet again it is civilians who are being killed and made to suffer due to military operations. I am extremely disappointed that the parties are not honouring the promises they made in Geneva a week and a half ago to refrain from launching any military offensives and to abide by the Ceasefire Agreement,” said Minister of International Development Erik Solheim.

“It is very worrying that the civilian Sri Lanka Monitoring Mission, headed by Lars Sølvberg, came close to being hit by grenades fired by the Sri Lankan army near Pooneryn, in northern Sri Lanka. We have asked the Sri Lankan Government for an immediate explanation,” said Mr Solheim.

The International Development Minister’s duty press officer is available on 91 39 50 00

http://www.odin.dep.no/ud/english/news/new...937/dok-bn.html

  • கருத்துக்கள உறவுகள்

வாகரைத் தாக்குதல்- இனி எந்தக் காரணத்தைக் காட்டியும் மெளனம் சாதிக்கக் கூடாது: மருத்துவர் இராமதாஸ்

உலகத்தின் பிற பகுதிகளில் இது போன்ற தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் முதலில் கண்டனக் குரல் எழுப்பும் இந்திய அரசு, ஈழத் தமிழர்கள் இப்படிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வரும் நேரத்தில் இனி எந்தக் காரணத்தைக் காட்டியும் மெளனம் சாதிக்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் அவர் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் ஈழத் தமிழர்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. முப்படைகளின் தாக்குதல்களால் ஈழத் தமிழர்கள் வீடு வாசல்களையும் உடமைகளையும் விட்டுவிட்டு உயிர் பிழைக்க தப்பி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று இலங்கையில் இருந்து வரும் செய்திகள் நம்மை பதைபதைக்கச் செய்கின்றன.

2 தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் உள்ள பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்த தமிழர்கள் மீது ராணுவம் ஏவுகணைகளை வீசித் தாக்கி வரலாற்றில் இதுவரை கண்டறியாத மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறது. ஈழ யுத்தம் தொடங்கிய 20 ஆண்டு காலத்தில் நடந்திராத மிகப் பெரிய கொடுமை என்று இந்த தாக்குதலை சர்வதேச செய்தி நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் வர்ணித்துள்ளன.

அப்பாவி பொது மக்கள் அடைக்கலம் புகுந்த இடங்களைத் தாக்கக் கூடாது என்பது சர்வதேச போர் மரபு. ஆனால் ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு, தமிழ் மக்களைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிற சிங்கள இனவாத அரசு, அப்பாவித் தமிழர்கள் தஞ்சம் புகுந்துள்ள பள்ளிக்கூடங்களையும், கோவில்களையும், தேவாலயங்களையும், மருத்துவமனைகளையும் குறிவைத்து தாக்கி வருகிறது.

உலகத்தின் பிற பகுதிகளில் இது போன்ற தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் முதலில் கண்டனக் குரல் எழுப்பும் இந்திய அரசு, ஈழத் தமிழர்கள் இப்படிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வரும் நேரத்தில் இனி எந்தக் காரணத்தைக் காட்டியும் மெளனம் சாதிக்கக் கூடாது.

இந்தியா தலையிட்டு வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. எந்த விடயத்திலும் ஒரு உச்சகட்ட நிலை என்பது இருக்கும். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் அந்த எல்லை எப்போதோ கடந்து விட்டது. இனியும் இந்திய அரசு தயக்கம் காட்டினால், அந்தத் தயக்கத்தைப் போக்கி தலையிட வைக்க வேண்டிய கடமை தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும், அவர்களின் பிரதிநிதியாக உள்ள தமிழக அரசுக்கும் இருக்கிறது.

தமிழக அரசும் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்க கூடாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அங்கம் வகிக்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அழைத்துக் கொண்டு முதல்வரோ, அல்லது அவரது பிரதிநிதியாக மூத்த அமைச்சரோ தலைமை ஏற்று பிரதமரையும், மத்திய அரசுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கச் செய்ய வேண்டும். அத்துடன் பிற கட்சித் தலைவர்களையும் சந்தித்து இதற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இந்தத் தருணத்தை கைவிட்டு விட்டால், ஈழத் தமிழர்கள் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடுவார்கள். ஈழத் தமிழர்களின் அழிவைத் தடுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வாகரையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவில்லை: கண்காணிப்புக் குழு

வாகரையில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவிப்பது போல் விடுதலைப் புலிகள் தங்கள் முகாம்களிலிருந்து தாக்குதல் நடத்தவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஓல்ப்ஸ்டொட்டிர் கூறியுள்ளதாவது:

சிறிலங்கா இராணுவத்தினரால் நேற்று முன்தினம் புதன்கிழமை தாக்குதலுக்கு இலக்கான இரு பாடசாலைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ முகாம் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. உயிர்தப்பிய சிலரிடம் விசாரண நடத்தினோம். அப்பகுதியில் போராளிகளின் இராணுவ முகாம் இருப்பதற்கான எதுவித ஆதாரமும் இல்லை.

சிறிலங்கா இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறது. ஆனால் அப்பகுதியிலிருந்து இராணுவத்தினரை நோக்கி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை.

வாகரைத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டும் 600 பேர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியான போதும் 23 உடல்களை கண்காணிப்புக் குழுவினர் பார்த்தனர். 137 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளே வலிந்த தாக்குதலை நடத்தினர் என்று சிறிலங்கா அரசாங்கத் தரப்பு தொடர்ந்து கூறிவரும் நிலையில் கண்காணிப்புக் குழுவினர் தெளிவாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வாகரைப்படுகொலைக்கு ஏன் கனடா மெளனம் சாதிக்கிறது?. கனடா பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி

Canada Continues Silence as Refugees are Killed by the Sri Lankan Armed Forces

-The Honourable Albina Guarnieri, P.C., M.P.

Member of Parliament

Mississauga East - Cooksville

The shelling of refugees sheltered in a school in Kathirveli by the Sri Lankan Armed Forces has claimed at least 50 lives and is the latest in a continuing campaign that has terrorized the civilian Tamil population.

It has been over two months since Swedish retired General Ulf Henricsson, then head of the Sri Lanka Monitoring Mission, ruled that the Sri Lankan military were responsible for the murders of 17 aid workers of the French group “Action Contre La Faim”. He called the mass murder of these aid workers, who were all shot in the head at close range: “one of the most serious recent crimes against humanitarian aid workers worldwide”.

While the EU condemned the killings, there has been continued silence from Canada. Not a word of condemnation has been heard for this mass murder or a targeted bombing that killed 61 schoolgirls, nor has there been any comment on the use of land mines by the Sri Lankan military.

Emboldened by the silence of friends like the current Canadian Government, the government of Sri Lanka continues to act with utter disregard for civilian lives. A crucial highway has been closed to Jaffna cutting off supplies and confining thousands to a growing humanitarian crisis. Bombing attacks continue to hit civilian targets, damaging schools and hospitals. As well, the International Committee of the Red Cross has received no less than 350 reports of targeted abductions and murders of Tamil civilians in the last ten months, many in the capital of Colombo.

The Harper Government’s continuation of aid and trade support for the Sri Lankan government and its absolute silence about continuing atrocities are bound to encourage a regime that is now clearly responsible for human rights abuses of horrific and historic proportions. It is time for the Canadian Government to remember our nation’s commitment to human rights and call for an end to military atrocities in Sri Lanka.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்பிழைத்த பொதுமக்களின் தகவல்களின் படி புலிகள் அகதி முகாம்களில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்று டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

LTTE didn’t fire from camp: SurvivorsThe Sri Lanka Monitoring Mission said yesterday there were no signs of the existence of an LTTE military camp in the vicinity of the two schools which came under attack from Government troops on Wednesday.

SLMM acting spokeswoman Helen Olafsdottir told the Daily Mirror the monitors had interviewed some of the survivors of the incident and so far no one had provided evidence to suggest the presence of a rebel military camp in the area

She said the survivors had also not given any indication to suggest the LTTE may have fired from the area towards the security forces before fleeing in anticipation of a retaliatory response on the area.

Meanwhile despite earlier reports of the attack in Vakarai killing 60 civilians and injuring some 600 more the SLMM said it has seen only 23 bodies thus far while another 137 were receiving treatment at the Batticaloa hospital.

The ICRC which also visited the site said it had seen 23 bodies while its officials also assisted in transporting 69 seriously injured civilians to the Valaichchenai hospital for treatment.

  • கருத்துக்கள உறவுகள்

கதிரவெளிக் கொடூரம் தொடர்பாக

சர்வதேச சமூகம் கூறப் போவது என்ன?

இராணுவ நடவடிக்கைகளினால் தமது வீடு, வாசல்கள் மற்றும் உடைமைகளைத் துறந்து, இடம்பெயர்ந்து, வாகரை, கதிரவெளிப் பகுதியில் பாடசாலை ஒன்றில் தஞ்சம் புகுந் திருந்த ஏதிலிகள், அரச படைகளின் கண்மூடித்தனமான கொடூர ஷெல், பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களில் உடல் சிதறிப் பலியாகியிருக்கின்றனர். பச்சிளம் சிசுக்கள், வயோதிபர்கள், பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் அதிகமா னோரின் உயிர்களைக் குடித்து, நூற்றுக்கும் அதிக மானோரைப் படுகாயத்துக்குள் ஆழ்த்திய இக்கொடூரத்தால் தமிழர் தாயகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர்கள் செய்வதறியாது திகைத்துப் போயிருக் கின்றார்கள்.

இந்த மோசமான செயலைப் புரிந்து விட்டு வெறும் துரதிஷ்டம் என்றும், அகதி மக்களைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன் படுத்தியமையால் வந்த வினை என்றும் சாக்குப் போக்குக் கூறித் தப்பிக்கொள்ள எத்தனிக்கின்றது தென்னிலங்கை அரசு.

இத்தகைய கொடூரத்தை மனித குலத்துக்கு எதிரான நாசத்தை புரிந்தமைக்காக இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் சட்டத்தின் கீழ் யாரும் விசாரணைக்கு முகம் கொடுக்கமாட்டார்கள்; யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், இத்தகைய கோரப் படுகொலைகளுக்கு சட்ட விலக்களிப்பு வழங்கும் விசேட ஏற்பாடு இந்தத் தேசத்தின் சட்டப் புத்தகங்களில்தான் பொதிந்துள்ளன.

இத்தகைய கொத்துக் கொத்தான கோரப் படுகொலைகள், விடுதலைப் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கும் தமிழர் தாயகத்துக்கு ஒன்றும் புதியவையல்ல. அப்பாவி அகதிகளின் உயிர்களைப் பலி கொண்டு, பழிவாங்கும் போக்கு கடந்த இரண்டு தசாப்த காலமாக அரங்கேறும் கொடூரம்தான்.

தொண்ணூறுகளில் யாழ். நவாலியில் கிறிஸ்தவ தேவா லயம் ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்த 170 இற்கும் அதிகமான ஏதிலிகளை ஒரே தடவையில் விமானக் குண்டு வீச்சு மூலம் கொன்றொழித்த இலங்கைப் படைகள், அப்படி ஒரு சம்ப வமே நடக்கவேயில்லை என்று சாதித்து முழுப் பூசணிக் காயைச் சோற்றில் மறைக்க முற்பட்டமை நமக்குத் தெரிந் ததுதான்.

அப்போது, வெளித் தொடர்பின்றி, தகவல் தொடர்பு வசதி களின்றி, யாழ். குடாநாடு அரச படைகளின் முழு முற்று கைக்குள் சிக்கியிருந்ததால் விமானக் குண்டு வீச்சு மூலம் 170 பேர் வரை ஒரே கணத்தில் கொடூரமாகக் கொல்லப் பட்டமையைத் தென்னிலங்கையால் மூடி மறைக்க முடிந் தது. அப்படியிருந்தும் காலம் பிந்தியேனும் உண்மை கசிந்து, சிங்களத்தின் கொடூரம் அம்பலமாயிற்று.

ஆனால், இப்போது நவீன தகவல் தொடர்பு வசதிகள் முன்னேறியிருப்பதால் கதிரவெளிக் கொடூரத்தை மூடிமறைக்க முடியவில்லை. அல்லது இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைப் புலிகளே நடத்தினார்கள் என்றோ அல்லது உயிரிழந்த வர்கள் அப்பாவி அகதிகள் அல்லர் விடுதலைப் புலிகளே என்றோ திரிப்பு வேலை செய்ய முடியவில்லை.

அதனால், சம்பவம் துரதிஷ்டமானது என்று கூறி ஒப்புக் கொள்ள வேண்டிய இக்கட்டு படைத் தரப்புக்கு.

சரி. இந்தக் கொடூரம் குறித்து சர்வதேச சமூகம் என்ன செய்யப்போகின்றது என்ன சொல்லப்போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.

கிளிநொச்சி வைத்தியசாலை மீதான விமானக் குண்டு வீச்சில் ஐவர் உயிரிழந்தமை தொடர்பாக அச்செயலுக்குக் காரணமான அரசுத் தரப்பைக் கண்டிக்காமல் வெறும் கவலை வெளியிட்டமைபோல

கதிரவெளியில் ஐம்பதுக்கும் அதிக அப்பாவி ஏதிலி களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட கொடூரத்துக்கும் வெறும் கவலை தெரிவிப்பதோடு இணைத் தலைமை நாடுகள் அமைந்து விடுமா என்பதே தமிழர் தரப்பின் மன தைக் குடையும் வினாவாகும்.

""தமிழர் தாயகப் பூமியில் புலிகளின் படை நிலைகளுக்கு அப்பால் அப்பாவி மக்களின் குடியிருப்புகள் மீது இலங்கை அரசுப் படைகள் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடருமானால் தென்னிலங்கையில் சகல இடங்களும் எமது தாக்குதலுக்கு இலக்காவது சட்ட ரீதியாக நியாய மானதாகும்.'' என்று புலிகள் எச்சரித்துள்ள பின்னணியில் கிளிநொச்சி வைத்தியசாலை மீதான விமானக் குண்டு வீச்சு, கதிரவெளி அகதி முகாம் மீதான ஷெல் தாக்குதல்கள் போன்ற கொடூரங்கள் அரங்கேறியுள்ளமையைச் சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மோதல்கள், வலிந்த தாக்குதல் நடவடிக்கைகள், இரா ணுவ நடவடிக்கைகள் போன்றவற்றை இலங்கை அரசுத் தரப்பும், விடுதலைப் புலிகளும் மேற்கொள்வதைத் தவிர்த்து அமைதி முயற்சிகளில் இதய சுத்தியுடன் ஈடுபட வேண் டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வரும் சர்வதேச சமூகம், கதிரவெளித் தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் அத்தகைய அமைதி முயற்சிகளுக்கு நிரந்தரமாக ஆப்பு வைக்கும் வேலை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கெப்பிற்றிக்கொல்லாவை, ஹபரணை, காலித் துறை முகத் தாக்குதல்கள் தொடர்பாக விழுந்தடித்துக் கொண்டு கண்டனம் வெளியிட்டு, அதிர்ச்சி தெரிவித்த அதே வெளிப்பாட்டை கதிரவெளிக் கொடூரம் தொடர்பாகவும் சர்வதேச சமூகம் வெளிப்படுத்துமா என்பதைக் கண்டறியக் காத்திருக்கின்றார்கள் ஈழத் தமிழர்கள்.

""நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரமன்றி நிலைநாட் டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்'' என்பார்கள்.

இலங்கை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கையாளும் விடயத்தில் தான் நீதியாகச் செயற்படுவதை சர்வதேச சமூகம் நிரூபிக்க இது ஒரு வாய்ப்பான சந்தர்ப்பம்.

நீதியாகச் செயற்பட்டு, தனது நிலைப்பாட்டை நெறி முறையாகப் பிரதிபலித்து, நியாயம் செய்யுமா சர்வதேச சமூகம்?

-உதயன்

கண்காணிப்புக் குழுவுக்கு குண்டடிச்ச உடன சொல்கெய்ம் துள்ளிக் குதிக்கிறார். மக்களுக்கெண்டால் வெறும் கண்டனம் அதுவும் வேண்டாவெறுப்பாய்.

சாட்டோடு சாட்டாய் இரண்டு கண்காணிப்பு நாய்களை போட்டால் நல்லம் போல.

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அப்பதான் சர்வதேசத்திற்கு நல்ல வசதியாக போகும் APKF கொண்டுவாறதுக்கு. ஆப்பிழுத்த குரங்குமாதிரி இருக்க வேண்டியான்.

இஸ்லாமியர்களை கிழக்கு மாகாணங்களில் கொலைசெய்து போட்டு புலிகளில் பழி போட்டமாதிரி இதையும் நடத்திப் போட்டு பழிபோட்டால் இல்லை என்று மறுதலித்து உண்மை சொல்ல ஒரு சர்வதேச தரத்து ஊடகம் இல்லை. மத்திய கிழக்கில நடக்கிறதுகளை உலகம் முழுக்க சொல்ல Aljazeera/ Aljazeera International இருக்கு. நாங்கள் தமிழில பா... பா... பா... பே... பே... எண்ண வேண்டியான்.

சர்வதேசம் தனது உயிர் இழப்புகளை தனக்கு சாதகமாக தனது கபட அரசியலை நிறைவேற்றத்தான் பாவிக்குமே அன்றி உங்களை அங்கீகாரிக்க பாத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பமாக காரணமாக இருக்கப் போவது இல்லை.

அளவுக்கு மிஞ்சி போனா சிறீலங்கா வருத்தம் தெரிவிக்கும் மன்னிப்பு கேக்கும் 2...3 பேரை பிடித்து வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கி சிறையில் அடைத்து அழுத்தத்தில் இருந்து தப்பித்து கொள்ளும். பிற்காலத்தில் தேசப்பிரிய விருது கொடுத்து கொளரவிக்கும்.

கூடவே சாணக்கியனும் சின்னப்புவும் போய் கேட்டியள் எண்டா சிறீலங்கா ஏதாவது விருதும் தருவாங்கள். :evil:

தவறு-தவிர்க்க முடியாதது-கவலை'

[10 - November - 2006]

கதிரவெளி பாடசாலை மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்திருக்கும் அரசாங்கம் இத்தாக்குதல் சரியானதென ஒருபோதும் நியாயப்படுத்தப் போவதில்லையெனவும் ஆனால், விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடருகின்ற போது, இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாதிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

புலிகளின் இலக்கை அடையாளப்படுத்திக் கொண்டே இராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் அதற்கு அண்மித்ததாக ஒரு கிலோ மீற்றருக்குள் இப்பாடசாலை அமைந்திருந்ததாலேயே இந்த கவலை தரக்கூடிய சம்பவம் இடம்பெற்றதாகவும் அரசு கூறுகிறது.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய் தியாளர் மாநாட்டில் அரச பாதுகாப்பும் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கதிரவெளியில் இடம்பெயர்ந்தோர் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீதான இராணுவ தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரம்புக்வெல மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது:

"புதன்கிழமை காலை 7.15 மணியளவில் விடுதலைப்புலிகள் இராணுவ காவலரண்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதல் எங்கிருந்து மேற்கொள்ளப்படுகின்றது என்பதை படைத்தரப்பு 11 மணிவரை நுணுக்கமாக ராடர் கருவி மூலம் ஆராய்ந்த பின்னர் சரியான இலக்கை நோக்கி குறி வைத்தனர். கதிரவெளியிலுள்ள புலிகளின் முகாமிலிருந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்த பின்னரே இராணுவத்தினர் ஆட்லறி மற்றும் ஷெல் தாக்குதலை மேற்கொண்டனர்.

புலிகளின் முகாமுக்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்குள் அகதிகள் தங்கியிருந்த பாடசாலை மீது இராணுவம் தாக்குதல் நடத்த எண்ணவே இல்லை. உண்மையிலேயே இது தற்செயலாக இடம்பெற்ற சம்பவமாகும். மகிந்தபுர, கல்லாறு, மாவில் ஆறு, சேருநுவர பகுதிகளில் வாழும் சிங்கள மக்களை வெளியேற்றுவதற்காக புலிகள் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். மகிந்த புரவில் வாழும் மக்களில் 50 சதவீதமானோர் சிங்களவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலைப்புலிகள் அண்மைக் காலமாக புதியதொரு உத்தியைக் கையாண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அப்பகுதி மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். தேசத்தின் இறைமையையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்த முனையும் போது ஏனைய நிலைமை பற்றி சிந்திக்க முடியாது. பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அரசு ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் தவிர்க்க முடியாததாகும் போது படையினரால் எதுவும் செய்ய முடியாது.

கதிரவெளி பாடசாலை மீதான தாக்குதல் சரியானதென அரசு ஒரு போதும் நியாயப்படுத்த முன்வரவில்லை. அங்கு மக்கள் பாதிக்கப்பட்டதையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம். ஆனால், விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தும் போது இராணுவம் பதிலடி கொடுத்தேயாக வேண்டியுள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் இது நடந்திருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.

இதேவேளை, இன்று (நேற்று வியாழக்கிழமை) காலையில் இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நாம் நிலைமைகளையிட்டு கலந்துரையாடினோம். அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாப்பா, மகிந்த சமரசிங்க ஆகியோருடனும் நானும் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டோம்.

அப்போது நடந்த உண்மைகளை வெளிப்படையாகவே எடுத்துரைத்துள்ளோம். விடுதலைப்புலிகள் அப்பாவிப் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பாவிக்கத் தொடங்கியிருப்பதையும் எடுத்துக் காட்டினோம். இராணுவம் நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருவதையும் விடுதலைப்புலிகள் தாக்கும் போது மட்டுமே பதிலடி கொடுப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

சமாதானப் பேச்சு மூலமான தீர்வு குறித்து அரசின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதையும் அரசு இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதியிடம் விளக்கிக் கூறியிருக்கின்றது.

இத்தாக்குதல் சேத விபரங்களை அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்தும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமிருந்தும் பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி கதிரவெளித் தாக்குதலில் 23 பேர் பலியானதாகவும் 125 பேர் காயமடைந்திருப்பதாகவுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பொதுமக்கள் மட்டும் தான் என்று கருத முடியாது. விடுதலைப்புலிகளும் இருக்கலாமென்றே அரசு கருதுகிறது. முழு விபரமும் கிடைக்கும் வரை எதனையும் உறுதியாகக் கூற முடியாதுள்ளது."

http://www.thinakkural.com/news/2006/11/10...s_page14927.htm

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வாகரையில் பொதுமக்கள் மீதான தாக்குதல் படங்கள் சில

http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=27

(கவனிக்க: சில படங்கள் கோரக்காட்சிகளைக் கொண்டவை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.