Jump to content

பிரக்கோலி கோஃப்தா


Recommended Posts

sl3062.jpg

 

என்னென்ன தேவை?
 
கோஃப்தாவுக்கு 
 
பிரக்கோலி -1/2 கப், 
வேகவைத்த உருளைக்கிழங்கு -2, 
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன், 
நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
 
மசாலா செய்வதற்கு 
 
வெங்காயம் -1, 
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,  
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், 
பச்சை மிளகாய் - 2, 
முழு உலர்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய் - 2,  
கொத்தமல்லி (தனியா ) விதைகள் - 2 டீஸ்பூன், 
சீரகம் - 1 டீஸ்பூன், 
கசகசா - 2 டீஸ்பூன், 
கொத்தமல்லித் தழை - சிறிது.
 
குழம்பு செய்வதற்கு 
 
மசித்த தக்காளி - 5, 
க்ரீம் -100 கிராம், 
நெய் - 1 டீஸ்பூன்,  
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, 
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
 
பிரக்கோலியை ஆவியில் வேகவைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் உருளைக்கிழங்கு, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது , பச்சை மிளகாய் சேர்க்கவும். உருளைக்கிழங்கை மசிக்கும் போது இவை எல்லாவற்றையும் நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை சிறு பகுதிகளாக பிரித்து உருண்டை போன்ற வடிவில் செய்து கொள்ளவும்.   ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டை களை சிவக்கும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவை மொறு மொறுப்பாக இருக்க வேண்டும். சூடாகப் பரிமாறவும். 
 
குழம்பு செய்முறை   
 
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கிக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் மசாலாக்களை  5 நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.  தக்காளியை மசித்து இத்துடன் சேர்த்து நெய், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கொள்ளவும். நெய் தனியாக பிரியும் வரை வதக்கவும்.  நன்கு கலந்து கொதிக்கும் வரை விடவும். பரிமாறுவதற்கு முன்பு செய்து வைத்துள்ள பிரக்கோலி உருண்டைகளை குழம்பில் சேர்த்து க்ரீமை மேலே விட்டுப் பரிமாறவும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ராக்கோலி கோத்தா...
இந்தப் பெயருடன், கறி சமைச்சு... ஆரும், சாப்பிடுவானா?
இந்தச் சாப்பாடு... ஓடிப் போன ஒட்டுக்குழுக்களுக்கு உரியவை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல ஆரோக்கியமான உணவு , பெயர் வைப்பதில் அரசியல் ஊடுருவியுள்ளது.... நானும் இதை வண்மையாய் கண்டிக்கிறேன் ,

 

நாங்கள் இதை பிரோக்கோலி ஆத்தா என்று பெயர் சூட்டி ஆக்கிச் சாப்பிடுவோம்...!! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.