Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் போர் இறக்குமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் போர் இறக்குமதி!

-சோலை

ஈழப் போராளிகளுடன் பேச்சு வார்த்தை கூடாது. போர் தொடுத்து ஈழத்தை மீட்கவேண்டும் என்பது, சிங்கள இனவாதக் கட்சிகளின் கோரிக்கையாகும். அவர்களுடைய ஆதரவுடன்தான் ராஜபக்சே அரசு ஆட்சிக்கு வந்தது.

ஆனால், சிம்மாசனத்தில் அமர்ந்த பின்னர்தான், போர்முனையில் ஈழப் போராளிகளை வெல்லமுடியாது என்பது சிங்கள அரசுக்குப் புரிந்தது. அந்தப் பாடத்தை சந்திரிகா அம்மையாரும் ஏற்கெனவே படித்துவிட்டார்.

ஈழப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று, சர்வதேச சமூகம் தொடர்ந்து நிர்ப்பந்தம் தருகிறது. பேசித் தீர்த்துக்கொள்க என்று, இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் ராஜபக்சே அரசு அமைந்த பின்னர், சிங்கள இனவாதிகளின் கட்டளைகளை ஏற்று, ஈழப் போராளிகளின் நிலைகள் மீது போர் கொடுத்தது. அண்மைக்காலத்தில் ஏற்பட்ட இந்த மோதல்களில் மூவாயிரம் பேர் பலியானார்கள். இரண்டரை லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

சிங்கள அரசு சர்வதேசச் சட்டங்களை மதிப்பதில்லை. தாக்குதல் தொடுப்பதாயிருந்தால், முன்னதாக அந்த வட்டார மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். அதனால் இடம்பெயர்கிறவர்கள் எவ்வளவு பேர் என்று கணக்கிட்டு, அவர்களைத் தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதனை உலக மனித உரிமைக் கழகம் திரும்பத் திரும்ப இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறிவிட்டது. ஆனால். அண்மைக்காலமாக, எந்த முன்னறிவிப்பும் இன்றித்தான் சிங்கள ராணுவம் புலிகளின் குகைக்குள் நுழைந்தது. பலன் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.

எனவே, இந்தச் சூழலில்தான் அண்மையில் மீண்டும் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், இந்தச் சந்திப்பு எந்தப் பலனையும் தராது என்பது எதிர்பார்த்ததுதான்.

Êஏனெனில், சர்வதேச சமுதாயத்தின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்துதான், சிங்கள அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது. சிங்கள இனவாதக் கட்சிகளின் கோரிக்கைகளையே முன் வைத்தது.

ஈழப்போராளிகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவேண்டும் என்பதனையே சிங்கள அரசின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். நியாயம்தான்.

ஆனால் ஈழப்போராளிகள், அதற்குச் சாதகமான கோரிக்கைகளைத்தான் முன்வைத்தனர். Êஏற்கெனவே ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை சிங்கள அரசு செயல்படுத்தவேண்டும் என்பது முதல் கோரிக்கை.

இன்றைக்கு ஈழத்தையே சிங்கள அரசு சிறை வைத்துப் பட்டினி போடுகிறது. செயற்கைப் பஞ்சத்தை உருவாக்குகிறது. மக்கள் அதனாலும் செத்து மடிகிறார்கள். பகலிலேயே ஈழம் இருளில் மூழ்கியிருக்கிறது.

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. அந்தச் சாலையை செங்கல்பட்டோடு அடைத்துவிட்டால் என்ன நிலை ஏற்படும்? தமிழகம் துண்டிக்கப்பட்டுவிடும்.

அதேபோல்தான் தலைநகர் கொழும்பிலிருந்து தமிழ்ப் பிரதேசத்திற்கு ஒரு பிரதான நெடுஞ்சாலை செல்கிறது. அந்தப் பாதையைச் சிறிது தூரத்திற்கு அப்பாலேயே சிங்கள அரசு அடைத்துவிட்டது. இது என்ன அநியாயம் என்றால், அந்தப் பாதை தங்களுக்கு ஆபத்தானது என்கிறது. கடல் வழியாக தமிழ்ப் பிரதேசத்திற்கு உணவுப் பொருள்களை அனுப்புகிறோம் என்கிறது. ஆயிரம் கப்பல்களில் அனுப்பினாலும் தேவை நிறைவு பெறாது.

அந்தச் சாலை திறக்கப்படவேண்டும் என்பது ஜனநாயகக் கோரிக்கை மட்டுமல்ல; மனிதாபிமான கோரிக்கையாகும். அந்தக் கோரிக்கையை ஏற்க இயலாது என்று சிங்கள அரசு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் எப்படிப் பேச்சுவார்த்தை வெற்றி பெறமுடியும்?

கொழும்பு_யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை அடைத்ததன் மூலம், ஈழம் தனிநாடு என்று சிங்கள அரசு அறிவிக்கிறதா? தமிழ்ப் பரப்பை எதிரியின் நாடு என்று பிரகடனம் செய்கிறதா?

எல்லா வழிகளிலும் ஈழப் போராளிகளின் கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு, ஜனநாயகக் குதிரையில் சவாரி செய்வோம் வருக! என்ற வாதத்தை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

உண்மையில் சிங்கள இனவாத அரசு பேசித் தீர்க்கும் நிலையில் இல்லை. அந்த அரசை சிங்கள இனவாதக் கட்சிகள் அழிவின் முனைக்கு இழுத்துச் செல்கின்றன.

சரித்திரத்தை சற்றுத் திரும்பிப் பார்க்கவேண்டும். சிங்கள அரசிற்கும் ஈழப் போராளிகளுக்குமிடையே 2002_ம் ஆண்டு போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. அன்றைக்கு ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி போராளிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை ஐக்கிய சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிகாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, அவர் இரண்டு பிரதான சிங்கள இனவெறிக் கட்சிகளுடன் கூட்டணி கண்டார். இலங்கை ஒரே நாடு. சிங்களம் ஒரே மொழி. பௌத்தம் ஒரே மதம் என்ற கோட்பாடுகளைக் கொண்டவைகள் அந்தக் கட்சிகள்.

மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் கூட்டணி ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட கூட்டணி போன்று தோன்றும். உண்மையில், ஈழப் போராளிகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட கூட்டணியாகும். போர் நிறுத்த உடன்பாட்டை ரத்து செய்! போராளிகளுடன் பேசாதே! போர் தொடுப்போம்! என்பதுதான் சந்திரிகா கூட்டணியின் முழக்கங்களாக இருந்தன. அதனையே முன்வைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றது. இந்தச் சூழலில் எப்படி சிங்கள அரசு உள்ளத் தூய்மையுடன், உள்ள உறுதியுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லமுடியும்?

நார்வேயின் சமரச முயற்சியை Êஏற்காதே! பேச்சுவார்த்தைக்குப் போகாதே! போர் தொடு! என்று, ஜனதா விமுக்தி பெரமுன என்ற இனவாதக் கட்சியும், ஜாதிகாஹெல உருமையா என்ற இன்னொரு இனவாதக் கட்சியும் பௌத்தப் பண்டாரங்களைத் திரட்டிக்கொண்டு இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றன. இந்த இனவெறிக் கட்சிகளின் தோள்களில்தான் இன்றைய ராஜபக்சே அரசு அமர்ந்திருக்கிறது. உடன்பாடு என்று வந்தால், இந்த இனவெறிக் கட்சிகள் ராஜபக்சே அரசைக் கடலில் தூக்கிப் போட்டுவிடும். அதே சமயத்தில், சர்வதேச சமுதாயத்தின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து ஜெனீவாவிற்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

திரிகோணமலையிலிருந்து ராமேசுவரத்திற்கு அகதியாக வந்த ஒரு சகோதரர் கூறுகிறார்.

‘‘இலங்கை அரசு ஜெனீவாவிற்கு அமைதிப் பேச்சிற்குச் செல்கிறது. ஆனால், திரிகோணமலை மாவட்டத்துக் கிராமங்கள் மீது தினம் தினம் குண்டு போடுகிறது. வழி நெடுக காவல் சாவடிகள். தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்’’ என்று அவர் கூறுகிறார்.

இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்தில் சிங்கள ராணுவம் படைகளைக் குவித்து வருகிறது. சின்னச் சின்ன சேட்டைகள் செய்கிறது. போராளிகள் தாக்கினார்கள். பதிலடி கொடுக்கிறோம் என்று, துணிந்து பொய் சொல்கிறது.

கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் ஜோசியரும்கூட. நவம்பர் மாதம் வரை இலங்கை அரசிற்குக் கிரகங்களின் சுழற்சி சரியில்லை. அதன்பின்னர் வெற்றி மேல் வெற்றிதான் என்று கூறியிருக்கிறார். இப்போது சிங்கள அரசு ஜோசியத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் ராணுவத் தளபதிகளுக்கு முழுச் சுதந்திரம் அளித்திருக்கிறது. சிங்களச் சிப்பாய்களுக்கு இனவெறி ஊட்டப்படுகிறது. இது நமது பூமி. தமிழ்க் கூலிகளுக்கு உரிமை இல்லை என்று சித்தாந்த போதம் அளிக்கப்படுகிறது. பாவம் அந்தச் சிப்பாய்கள். அவர்கள் கண்களில் நீரைத் தேக்கி வைத்திருக்கிறார்கள். ஈழப் போராளிகள் கண்களில் தீயை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.

சிங்களச் சிப்பாய்களுக்கு இனவெறியூட்டும் காரியத்தை இனவாதக் கட்சிகள் ஏற்றிருக்கின்றன. அமெரிக்கா, இந்தியா, சீனம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சிங்கள அரசு ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும் என்று, அந்த இனவாதக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரத் தீவிரவாத அமைப்பு. ஆகவே தீவிரவாதத்திற்கு எதிராக ராணுவ உடன்பாடு என்று கூறி ஈழப் பரப்பையே அழித்துவிடலாம் என்று அவைகள் வாதம் செய்கின்றன.

எப்படியோ, சிங்கள அரசு, சிங்கள ராணுவம், சிங்கள இனவாதக் கட்சிகள், பௌத்தப் பண்டார அமைப்புக்கள் ஆகிய அனைத்தும் கரம் கோத்து நிற்கின்றன. ஈழத்தின் மீது இறுதிப் போர் நடத்தத் தயாராகி வருகின்றன. அதற்காகத்தான் கொழும்பு _ யாழ்ப்பாண நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. தினம் தினம் தமிழ்க் கிராமங்களின் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. ஈழத் தமிழர்களை முதலில் மனதளவில் தோற்கடிக்க, இத்தகைய கொடுஞ்செயல்களைச் செய்கிறது. ஆமாம். ஈழத்தில் போரை இலங்கை இறக்குமதி செய்கிறது. வியாபாரம் எப்படி இருக்கும்?

-குமுதம் ரிப்போர்ட்டர்

ஈழத்தில் இலங்கை இறக்குமதி செய்கிரது என்பது உண்மைதான் அவற்றில் சில அறவிடமுடியாத கடனாகவும் நஸ்டமாகவும் தான் போகும் அன்ரி லாபம் அடையமுடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது சிங்கள அரசு ஜோசியத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.

மாமனை நம்பி எண்டு தொடங்கிய இந்த பயணம்

கடைசியா ஜோசியத்தழத நம்பி நிக்குது

நாள் குறிச்சி நேரம் குறிச்சி சாத்திரம் பாத்து ரஜனி பாபாட்ட இல்ல சத்தியசாயிபாபாட்ட ஆசீர்வாதம் வாங்கி மொட்டைகளை பிரித் ஓத வைச்சு கையில நூல் கட்டிக் கொண்டு வெற்றி நிச்சயம் என்டு வந்தவ பட்ட பாடு தெரியும் தானே.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.