Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

நீதானே!

நினைத்து பார்க்கிறேன்

நினைவிலில்லை

நிலாவின்

நினைவுகளே

நீயாகி விட்டதால்

நினைவுகளை எப்படி

நினைவில் வைக்கலாம்?

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

வைக்கலாம் என்று விட்டால்... வைப்பதுதான் எப்படி? :angry:

பக்கத்துப் பங்கயமும், அடுத்தாத்து அம்புயமும்

கெக்கட்டம் விட்டுத்தான் கேலி செய்ய மாட்டாரோ? :lol:

கோவரசி தனம் தப்பிக் கோலமிட்டு அறுகு வைத்தால்

மாதரசி உந்தனுக்கு.....மாவாட்டும் துணைவன் என்பர். :angry:

சீராட்டி உன் சிகைக்குச் சீயாக்காய் நான் இட்டால்

சீலைக்குள் புகுந்திருந்து செக்கிழுக்கும் கணவனென்பர். :angry:

பெண்மைக்கு தலைவணங்கில் ஆண்மைக்கு மதிப்பென்ன?

ஆட்டி வைப்பதென்னமோ.....அம்மையின் திருவுருவே! :(:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவுருவே தெவிட்டாத தெள்ளமுதே

தருவாய் வருவாய் சகலநலமும்

தருவாய் திருத்தணி முருகா

திருவடி நினைந்து மனம் உருகுதே

அம்மையின் திருவுருவாய்.

பெரு வடிவாய் நன்மையின் நாயகியாய்

பொக்கிஷமாய் ஆக்கிவிட்டார் பென்னே

உன்னை.......!!!!!!!!!!

கட்டியவனை தொட்ட்னைப்பாய்

பொட்டிடுவாய் - பூவிடுவாய்

பிள்ளைதனை பெற்றிடுவாய்

எத்தனை சுதந்திரம் உன்க்கு???

பெட்டைப்புள்ளைக்கு - மேல்

படிப்பெதற்கு?- கட்டி வைத்தால்

போதும்.....!!!!!!! -உன்

சிறகும் சிந்தனையும்

சிலரிற்கிங்கே சிரமம்

பூந்தளிரா நீ?

சிந்தி...!!!!

ஆறறிவில் ஏதில்லை?

வேராய் இருந்தாய் - போதும்

வெளியேறு புது மரமாய்....!

புதுமரமாய்த் தெளிவோடு

திசைதோறும் நிமிர்வெடுத்து

புலப்பலத்தில் விசையூட்டி

பூவையுன் திறம்காட்டு!

தானையுடன் தமிழ் நடக்கும்!

தரணியெங்கும் தழல் குளித்து

சேனையது மிளிந்தோங்க.....

செய்திடுக! நின் சேவையின்று!

நின் சேவையின்று பார்த்திருந்து-அன்பே

நெஞ்சத்துள்ளுருகிக் காத்திருந்து..

விழிரெண்டும் நோக்காமல்-கண்ணே

விளையாடக்கேட்காமல்..மெல்ல

மாலையிலில்லம திரும்பிட்டபோது-பதி

பசியொன்றும் அறியாப்பெண்ணோ...

பாவை மனக்குறையுணர்த்த -என்

மனத்துனை வதைக்கலாமோ..

வதைக்கலாமோ

வதைக்கலாமோ

வஞ்சகங்கள்

தாங்கி வந்து

வார்த்தையாலே

மாற்றனையே

வஞ்சமின்றி

தாக்கலாமோ....???

தன்னை தானே

மேன்மையாக்கி

மாற்றனையே

இழிவயாக்கி...

அர்தமற்று

வந்துயிங்கு

அரஜகங்கள்

செய்யலாமோ....???

செய்யலாமோ..

பூங்காற்று என்னிடம்..

சேவகம்..

நானென்ன..

பூவா..கிளையா..

தழுவலாமோ..

அலைகளெந்தன்

கால்களை..

நானென்ன

கல்லா..கரையா..

உறவாடலாமோ..

மல்லிவாசம்..

உயிர்வரை..

நானென்ன..

கொடியா..மலரா..

துள்ளலாமோ

மழைத்துளிகள்...

மேனிமேல்..

நானென்ன

நீரா..நிலமா...

மழைதுளிகள்

விழுந்த

எம் தேசம்

இன்று

கண்ணீத் துளி

பட்டு கனக்கிறது....

நித்தம் ஒரு இறப்பு

அதை கண்டு

மனம் சலிப்பு....

வீட்டுக்கு வீடு

விருந்துவைத்த

உறவுகள்

ஒப்பாரி வைத்து

ஓலமாய் அழுகிறது...

வலிகள்

நிறைந்து

நெஞ்சு வலிக்கிறது

யாரை

யார் தேற்ற....???

வானைத்தொட்ட

மனித தோப்பு

முறிந்து விழுந்து

முண்டமாய்கிடக்கிறதே....

கூடி வாழ்ந்த

உறவு கூட்டம்

கூடு சிதைந்து

முகவரியற்று

எங்கே...

காணவில்லை...???

தேடி போனவர்

இன்னும்

வீடு திருமபவில்லை

அவரையும்

தேடியபடி.....

கண்ணீரோடு

அலைகிறோம்

எமக்கு

என்று

விடுதலைகிடைக்கும்....???

விடுதலை கிடைக்கும்..

விடுதலை கிடைக்கும்

வீரத்தமிழன் சொன்னான்..

விழுந்திட்ட மண்ணில்

எழுந்திட்ட தமிழன்..

ஏறெனெ நிமிர்ந்து

ஏழ்கடலுமதிரச் சொன்னான்

விடுதலை கிடைக்கும்..

விடுதலை கிடைக்கும்

வீரத்தமிழன் சொன்னான்..

கண்ணீர்வழிந்த மாதர் கையில்

ஆயுதம்தந்தான்..

மண்ணின மானம்..

உயினிலும் பெரிதென..

ஊரே அறியச் சொன்னான்

விடுதலை கிடைக்கும்..

விடுதலை கிடைக்கும்

வீரத்தமிழன் சொன்னான்..

இழந்திட்ட உயிர்கள்..

ஏராளம் இருந்தும்..

பிறந்திட்ட மலரைக்

காத்திட சொன்னான்..

விடுதலை கிடைக்கும்..

விடுதலை கிடைக்கும்

வீரத்தமிழன் சொன்னான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தமிழன் வீறு கொண்டு எழுந்தான்

விதண்டாவாதம் வீணே கொண்டு

வீம்பு பேசுவதற்காக அல்ல

விழித்துக்கொண்டான் விடியலை நோக்கி

வீரத் தமிழன் நாமென்றே

வீறாப்புத் தான் பேசுகின்றோம்

புலத்தில் வாழும் நாமெங்கள்

பணியைச் செய்யத் துணிந்தோமா?

உணவைத் தேடி அலைகின்ற

உறவின் நிலையை பார்க்கின்றோம்

உறவின் நிலையை உலகிற்கு

உணர்த்த ஏதும் செய்தோமா?

நியாயம் கேட்கத் துடிப்பவரை

நீசர் கொன்று குவிக்கின்ற

நிலையைக் கண்டும் குமுறாமல்

நித்தம் மௌனி ஆனோமே

வீரத் தமிழர் நாமென்று

வீர வசனம் பேசாமல்

விடியல் வேண்டும் தேவையினை

விரைந்து எங்கும் உரைப்போமா?

மன்னிக்கவும் என்னுடைய கவிதை பிந்தி விட்டது.

கறுப்பியின் கவிதை வரியிலிருந்தே தொடர்வோம்.

விடியலை நோக்கிப் பயணிக்கும்

வீரத் தமிழர் தாய்நிலத்தை

விரைவாய் மீட்கும் குறியொடு

விரைந்தே எங்கள் பணிசெய்வோம்

விடியலை நோக்கி

விட்டில் பூச்சிகள் போல்..

விளக்கில் விழுந்து..

தப்பநினைத்த..

தவளையது

தாவி பாம்பு வாயில் விழுந்து..

துள்ளியோடும் மான்..

துயர்படுவிதமாய்..

துடித்து விழுந்து..

பூவோடு உறவாடும்..

பூச்சியதை..

பூவிதழே.. தின்று..

இரைகொடுத்து..வளர்த்த ஆட்டை

இறைச்சிக்காய்..வளர்த்தவர்க்க

படைத்தவனே

நொந்து போனான்

நடக்கும் நியாயங்கன்டு

நமக்கேது வம்பென்று

ஒதுங்கிக்கொன்டான்

புத்ததின் சுவீகார

புத்திரர்க்கு

சிந்தனையெல்லாம்

மந்தம்

இரத்தித்திலேனும் சிறிதளவும்

இரக்க்மில்லை

வறண்டு போகிறது தமிழ்-அவரின்

வறட்டு கொளரவத்தால்.....

மத்தளத்திர்கேனும்

இரண்டு பக்கத்தில் தான் அடி

எம்க்கு

வடக்கிலும் கிழக்கிலும் மத்தியிலும்

எங்கனும் அடி

பன்முக மத்தளங்கள் நாங்கள்.....

எரிவது தமிழராயின்

எரி கட்டைகளுக்கும்

அதை கொடுக்கும் கைகளுக்கும்

இலங்கையில் பஞ்சமில்லை...

நியாயங்க்ள் நிலைப்பதில்லை

வெண்ற்வன் சொன்னால் - அது

வேதமும் வரலாறும்.....

சிங்களவன் வென்றால்..

அரக்கரை வென்றோம்

நாமுமோர் முறை என்பான்..

நிஜங்களும் நியாயங்களும்

நிராயுத பாணிகளாய்....

புததனுக்கும் இது புதிதல்ல.....

வென்றால்த்தான் படக்கலாம்

வேதமும் வரலாறும்..

வெல்வது எம் கடன்..

வெல்லுவோம் வாருங்கள்

புததனுக்கும் இது புதிதல்ல....

yes: :rolleyes::)

புத்தனுக்கும் இது புதிதல்ல..

சிங்களத்து சேட்டைகளை..

கண்மூடிச்சகிக்கும்

புத்தனுக்கும் இது புதிதல்ல..

காவிகட்டிய தாதாக்களாய்..

வெள்ளையுடுத்திய கொள்ளையர்களாய்..

கொடுமை செய்பவர்

சொல்லும் சரணம்

புத்தனுக்கும் இது புதிதல்ல..

கொடுமை

அதில்

கொடுமை

நீ

கொண்டாலதில்

பெருமை.....

மாற்றான்

தலையில் குட்டு

நீ

போடுவதால் திட்டு....

வார்த்தையாலே வெட்டு

போட்டோம்

பத்து கட்டு....

உன்

இதயமதில் அழுக்கு

இன்றுயதை ஒதுக்கு

நன்மை வரும் உனக்கு

உனக்கு நானும்..

எனக்கு நீயும்..

போட்ட நிபந்தனையில்

நான் தோற்றுப்போனேன்.

என் தோல்விக்கு காரணம்

நீ போட்ட நிபந்தனையல்லப்

பெண்ணே..

நீதான்..

அது என்ன பொல்லாத

நிபந்தனை என்று யாரும்

கேட்கலாம்..

சொல்லிவிடாதே..

இன்றொருநாள்..

பேசிக்கொள்ளமல் இருக்கவேண்டுமென

சொல்லிக்கொண்டோம் என்று..

சிரிப்பார்கள்..

கணவன் மனைவிக்குள்

இதென்ன விளையாட்டு என்று..

தோற்றது நானாக

இருந்தாலும்..பரிசு

இருவருக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரிசு தருவாய் என்றே நானும்

பரிவாரங்களோடு காத்திருந்தவேளையிலே

பரிசம் போட பல்லக்கில்

வந்த மச்சானைக்கண்டு

பரிதவித்துப்போன வேளைதன்னில்

அச்சாரமாய் ஒன்று கேட்டபோது

அச்சாத்தால் என் நாடி நரம்மெல்லாம்

சுருதியிழந்து போனதே

சுருதியிழந்து போனதே..

இவன் இல்லாத போது..

இவள் மீட்டுகின்ற வீணையும்..

ராமனைத்தேடும்

அசோகவனத்து சீதையோ..

கண்ணணை நினைந்துருகிய..

மீராவோ..

யாரிவள்..

எதற்காக இந்த முகாரி...

ஏனிந்த கண்ணீர்..

யாரும் கேட்கவில்லை..

அவளும் சொல்லவில்லை..

சொன்னாலும்..

போர்வீரன் மனைவி

அழுவதா என்பார்களே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம்

இறைவன் கொடுத்த வரம் இது

மலர்ந்த வாழ்வில் கஷ்டநஷ்டம் அதில்

பங்கேற்று உண்மையானவளாய்

அன்பு காட்டுபவளாய் அமைந்துவிட்டால்

வாழ்க்கையே இனிய சொர்க்கமாக

மனைவி சொல்லே மந்திரமாக

மந்திரமாக மாதவள் நாமம்..

எந்தநாளுமே. ஓதிடும் நாயகன்

சிந்தையேறியே சீரினைச்செய்வதாய்

கந்தல்துணி போலெனை யாக்கிதென்ன

உந்தன் பார்வைக்கு பணிகளாற்றியே..

அந்தம் காணுமோ ஆடவன் வாழ்வு

சொந்தக்கதையிலே சோகம் நிறைந்ததால்..

வந்து கேட்கிறேன் நான் ஆணுரிமை... :lol::lol:

சோகம் எனக்கு

பாவம் உனக்கு

செய்தாய் எதுக்கு

துரோகம் எனக்கு....???

துரோகம் உனக்கு

நீ

செய்தாய்..தோழா

அன்பைப் பொழிந்த

காதலியை

யாரோ மணக்க

நீ அழுதாய்..

ஆண்மைகொண்ட

ஆடவனாய்

காதலைக் காக்க

நீ மறந்தாய்..

அவள்..மணங்கொண்ட

ஆடவன் பொருளானாள்..

நீ..

அவள்

பார்வையில் விழுந்து

படுத்துவதேன்..

அவளை நெஞ்சில்

நிறுத்தி

யாசிப்பதேன்..

முளையில்

கிள்ள

நீ மறந்தாய்..

மூவர் வாழ்வைச்

சிதைக்கின்றாய்..

மெய்யில் அவளைக்

காதலித்தால்..

பேரன்பு உன்னிடம்..

குடியிருந்தால்..

அவளை நிம்மதியாக

வாழவிடு

உன் காதல்

காலங்கள் மறந்துவிடு..

நின்மதி

மீண்டும்

உன்னால்

நின்மதியின்றி...

என்ன

இழைத்தேன்

என்றென்னை

திட்டுகிறாய்....????

வாhர்த்தையாலே

என்

நெஞ்சதை

ஏன்...

குத்துகிறாய்...,???

எத்தனை

நாள்கள்

இன்னும் நான்

அழுவேன்.....???

காலங்கள் புர

எனக்கு

கண்ணீர்

ஏன்...???

ஏன் பெய்கிறாய் என நீ

கேட்டால்-இந்த

வான் மழை நிற்குமா..

ஏன் உதிக்கிறாய் என நீ

கேட்டால்-இந்த

சூரியன் மறையுமா..

ஏன் இருள்கிறாய் என நீ

கேட்டால்-இந்த

இரவு வர மறுக்குமா..

ஏன் வருகிறாய் என நீ

கேட்டால்-இந்த

கடலலகைள் வாராது போகுமா..

இதுபோல்தானடி

ஏன் காதலிக்கிறாய் என நீ

கேட்டால்-என்

காதலை என்னால்

தடுக்கமுடியாதடி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.