Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

மறந்தேனே என் மூச்சை விட மறந்தேனே

பிறந்தேனே உன்னைக்கண்டு மீண்டும் பிறந்தேனே

பறந்தேனே காதல் விமானத்தில் பறந்தேனே

இறந்தேனே மீண்டும் பிறக்க இறந்தேனே

இறந்தேனே என்று தொடங்கலாம்....

இறந்தேனே

உன் வாயுதிர் வார்த்தை கேட்டு...

உள்ளம் உடைந்தேனே

உன் அலட்சியம் கண்டு...

கண்முன்னே அழகுகாட்டி

இனியும் வராதே என்முன்னே...

இதயத்தில் நடந்த

உன் பாதச்சுவடுகளை

ஒவ்வொன்றாக அழிக்கின்றேன்

போடி...

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

நீ பாடு நெஞ்சே..

மெய் வாய் திறந்து

நீ பாடு நெஞ்சே...

ஆயிரம் ஆயிரம்

நினைத்தே-அழகாய்

ஒன்றே உரைக்கும்..

வாய் மெய் மறந்து

உரைத்தால்..

வாய்மை எங்கணம் வாழும்..

புகழுக்கு பொய்யுரை ஏனோ..

திறமைக்கு புகழ் வரும் தானே..

நீ பாடு நெஞ்சே

ஆசான் சொல்வார் வேதம்

அவருக்கே இடுவோம் சாபம்

அம்மா என்பவர் தெய்வம்..

அவரையும் மறப்பதேன் மனிதம்..

ஈரம் காய்ந்த உலகில்...

பொய்மைதானே வாழும்..

வாயது பேசா மெய்யை..

நீயேனும் பேசு நெஞ்சே..

சாட்சிக்குப் பொய் சொல்லும்..

உன் வாய்..மனச்சாட்சியைக்

கொன்றதேன்..செவ்வாய்..

ஒருமுறை ஏனேனக்கேளாய்..

உயரிய வாழ்வை வாழ்வாய்..நெஞ்சே

floatinheartsze8.gif

நெஞ்சே நீ நில்லு

இனி போகுமிடம்

ஏது சொல்லு..?

கனவுகளில் வாழ்கின்றாய்

கற்பனையில் மாழ்கின்றாய்

நினைவுகளில் சாகின்றாய்

நான் போகுமிடம் போக

ஏனோ முரண்டு பிடிக்கின்றாய்...?

கண்ணிமைக்கும் நேரத்தில்

காததூரம் போகின்றாய் -நான்

முன்நோக்கிப் போகையில்

நீயோ

பின்னோக்கிப் போகின்றாய்....

இருக்கும் இடம் விட்டு

எங்கே நீ போகின்றாய்....?

நான் போகுமிடம் போக

ஏனோ முரண்டு பிடிக்கின்றாய்..?

என் உடலில் நீ வாழ

உன் துடிப்பால் நான் வாழ

என் துடிப்பை ஏனோ - நீ

உணர மறுக்கின்றாய்...?

நாம் போகுமிடம் போக

உனை நானும்

எனை நீயும் கூட்டிச்செல்ல

நெஞ்சே நீ நில்லு.....!

heartsburstfromhearthwcx1.gif

பாவித்து முடித்ததும் மறக்காமல்..........

..inthebinbp7.gif

Edited by gowrybalan

\\தாலாட்டு நீ பாடு

உன் மடிமீது தலைவைத்தேன்

தலைமீது வகுடெடுத்து

�#8220;ர் பாட்டு நீ பாடு......!

அடிக்கின்ற மனதோசை

இசையாக இணைந்தோர் பாட்டு

துடிக்கின்ற இமை மூட

தாலாட்டு நீ பாடு...!

ஆளானபோதும்

ஆண்பிள்ளை - தான்

நானான போதும்

ஆசை மனம் கேட்கும்

உன் மடி தேடி முகம் புதைக்(க)கும்

அன்னை நீ என்று

தாலாட்டு நீ பாடு...!\\

எல்லாருடைய கவிதைகளும் நல்லா இருக்கு.

Edited by Snegethy

இறந்தேனே உன் வாயுதிர்

வார்த்தைகேட்டு...

உள்ளம் உடைந்தேனே

உன் அலட்சியம் கண்டு...

கண்முன்னே அழகுகாட்டி

இனியும் நிற்காதே என்முன்னே

இதயத்தில் நீ நடந்த

பாதச்சுவடுகளை ஒவ்வொன்றாய்

அழிக்கின்றேன்...

போடி...

போடி போடியெனச் சுவடழிக்கும் என்னுறவே

அழித்தாலும் வடுவிருக்கும் ஆறாத ரணமிருக்கும் - அதனால்

அழித்து அழித்துன் இதயத்தை ஓட்டையாக்கி

மாரடைப்பு வருவதற்கு வழிகோலி மாளாதே!

பாதச் சுவடுகள்தானே.. அதற்குமேல்

புதுவிசன் ஒன்றை 'அப்டேற்' பண்ணிவிடு!!

சுவடுகள் மாற்றம் பெற்று சுமைகளும் குறையாதோ?! :P :rolleyes:

சுமைகளும் குறையாதோ-என்

சுட்டெரிக்கும் விழியாளே..

இமைகளில் இறைக்கும்-உன்

ஒளியாலே விட்டிலானேன்..

அமைவிலே நிறைவாக-பின்

அழகாலும் கொல்வதனால்..

சமைந்தனன் இறைசிலைபோல்-ஏன்

இவளே ஒரு வார்த்தை கேளாயோ..

.... கேளாயோ..

கேளாயோ

என் தோழா

நாளாக நாளாக

எம் பகை கூராகும்

குற்றிக் குழித்து

கும்மாளமடிக்கும்

வாளாக மாறிப்

புலி பாயாதோ...

புவி புருவம் நெளித்து

உள்ளுக்குள் குறுநகை

செய்யாதோ... ?

கூலாக கோலோ

நீ குடிக்கின்றாய்

குதித்து எழு...

கூளிங் கிளாஸ் கழற்று...

களம் விரை என்னோடு

பட படக்கும் புலிக்கொடி...

பார்கலாம் நாளை...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை நமக்கில்லை

நிகழ்கால நிஜங்களின் மூச்சில்

நித்தமும் வேதனைக் குமுறல்கள்

நிதமும் வெடித்துச் சிதறுகின்ற

நலிந்து போகின்ற கதறல்கள்

பூஜீத்த தெய்வம் சிலையாகிப் போனதால்

ஆசிக்க மறந்து தெய்வமும் அருவமாகிப் போனதால்

பூஜீக்க மறந்து நானும் சிலையாக

சிலையாக சமைந்து என்

சிந்தையில் நிலைத்தவளே..

கலையே என் வாழ்வின்

கருப்பொருளே கற்ககமே...

உன் விழி பேசும் கலைகள்..

சிற்பிக்கு சொந்தமில்லை..

உன்விரல் பேசும் கலைகள்

நடராஜனுக்கு சொந்தமில்லை...

பாதக்கலைகள் செந்தாமரைக்கு

சொந்தமில்லை...

பாடல்க்கலைகள் கலைகள்

கலைவாணிக்கு சொந்தமில்லை

கூந்தல்கலைகள் கார்மேகத்திற்கு

சொந்தமில்லை...

உன் பேச்சுக்கலைக்கு ஆசானில்லை

உன் மௌனமொழிக்கு மாற்று இல்லை

இனிப்பான சிரிப்புக்கு ஈடுஇல்லை

இதமாக கோபத்திற்கு இணையில்லை

நீ உச்சங்களுக்கு உச்சம்..

உள்ளங்களுக்கு வெளிச்சம்..

ஐந்து வயதிலேயே..தந்தைக்குப்

பாடம் சொன்ன பிஞ்சு மகளே

ஆரபியே அழகே..என்

பிறவிக்குப் பொருள் தந்த

என் குடியிலுதித்த

குட்டிதேவதையே.. :rolleyes:

குட்டித் தேவதையே...

குட்டிக் கரணம் போட்டுக்

கும்பிட்டுக் கேட்கின்றேன்

சட்டித் தலையன் என்று

சட்டை செய்யாது

போகாதே

கட்டி ஒரு

கனி முத்தம் கொடேன்!

எட்டி நின்று எத்தனை

நாள் பார்ப்பது?

உன்னிதயம்

தட்டி காதல் மனுச்

செய்தேன்...!

ஓடி வாவேன்...

ஒன்றாக ஊரெல்லாம்

சுத்தலாம்

விண் முட்டும் வண்ணம்

காதல் செய்யலாம்

வாடி என்னிதயம்

ஆழ்பவளே...!

  • 2 weeks later...

என்னிதயம் ஆள்பவளே..

ஏந்திழையே..

கூந்தலோரப்பூக்களாய்..

என்னை உலரமுன்

இறக்கிவைத்த காரணமென்னடி

காரிகையே..

மயக்கம்தான் கலைந்திட்டதோ...

மங்கை மனம்தான்

மாறிவிட்டதோ..

எதுவெனிலும்..

உனக்கொருஅறிக்கை

என்னிடம் நீ

முத்தங்களை பெற்றதை

மறந்து விடாதே

கடனைத்திருப்பிவிட்டு..

வெறுப்பை விருத்திசெய்

என்னிதயம் ஆள்பவளே..

ஏந்திழையே..

கூந்தலோரப்பூக்களாய்..

என்னை உலரமுன்

இறக்கிவைத்த காரணமென்னடி

காரிகையே..

மயக்கம்தான் கலைந்திட்டதோ...

மங்கை மனம்தான்

மாறிவிட்டதோ..

எதுவெனிலும்..

உனக்கொருஅறிக்கை

என்னிடம் நீ

முத்தங்களை பெற்றதை

மறந்து விடாதே

கடனைத்திருப்பிவிட்டு..

வெறுப்பை விருத்திசெய்

விருத்திசெய்யென்று

வில்லங்கம் பேசும்

விகடகவி ஐயா,

விநோதமாய் உள்ளது

உம் கணக்கு...!

முத்தக் கணக்கெல்லாம்

மெத்தை மீது விட்டிறங்குவதே

அழகய்யா...

சத்தம் போட்டு

ஜதி பிடித்து

உலகறியச் சொல்ல

இதுவென்ன சிறீலங்கா

ராணுவத் தலைக் கணக்கா?

பட படக்கும் கரு விழி

அழகில் சருகாக

உதிர்ந்து விட்டு...

இதயத்தை இழந்துவிட்டு....

புலம்ப வேண்டாம் ஐயா

போகட்டும் அவள்...

ஆண்களின் அன்பை

அத்தனை பெண்களும்

புரிந்து கொள்வதில்லை...!

புரிந்துகொள்ளவில்லை..

பெண்போக்கையென்றால்..

அது உங்கள் கவிவாதம்..

தெரியாமல் பேசும்

தகமை எனக்கில்லை..

ஏனிந்தப் பிடிவாதம்..

காதல்வழக்குக்காய்..

நீதிமன்றம் போன கதை

அறியாயோ சகோதரா...

நான் விளையாட்டாய்

கேட்டதை விபரீதமென்று

எண்ணினையோ சோதரா..

கண்ணையும் தந்து முன்

பெண்ணையும் அலைய வைத்த

சிவனைக் கேளும்

ஆண்மன அலைச்சலும்..

ஆழ்மன உளைச்சலும்

அவனுக்கும் தெரியும் :D

தெரியும் சோதரா

உன் விளையாட்டும்

விகடமும்! :lol:

அவன் அறிவான்

என்பது சரி தான்

கவணில் கல் வைத்து

அடித்தால் சில நாள் வலி

புருவவில் வழைத்து

இதயத்தால் அடித்தால்

என்றும் வலி

இப்படிப் பலவும்

அறிவான்அவன்...!

ஒன்று மட்டும்

அறியான் அவன்...

உமைபின் இமையாது சுற்றியதுவும்

மன்மதனை முழுநேர

வேலைக்கு அமர்த்தி

அடுத்து செய்வதென்னவென்று

ஆராய்ந்ததுவும்

முக்கண்ணால் அவள் தான்

வேண்டும் என்று அழுத கதையும்

அடியேன் அறிவேன் என்று

அறியான் அவன்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறியான் அவன் ஆரணங்கின் ஆழ்மனம்

அறியாமலே அறிந்தவன் போல் படைத்திடுவான்

கவிகள் பல விகடமாய் நயம் தரும் பாக்களாய்

தாவும் மனதுடன் படித்திடுவேன் தரும்வேளைதனில்

ஆவி உள்ளவரை ரசித்திடுவேன்

ரசித்திடுவேன் என்ற ரசிகையே..

ஆரணங்கு அழகறிவேன்..அவள்

அகத்தின் அடியறியேன்...

அம்பெறியும் விழியறிவேன்-ஏனோ

வில்வளைத்த நோக்கறியேன்..

கன்னக்குழி அழகறிவேன்-அவள்

நெஞ்சுக்குழியில் யாரோ ஏனவறியேன்..

கருவிழிகள் நிலைப்பதறிவேன் -அவன்

மனவலைச்சல் சிறியேனறியேன்..

அழகு அழகு அழகு அவள் அழகு மட்டுமறிவேன்-பாவி

நான் வேறேதுமறியேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறியேன் வேதாந்தம் படித்தது இல்லை

அறியாமையால் உழல்வது மனந்தான்

ஆதாரம் தேடலின் முடிவாய் அமைகின்ற

கீதையின் உபதேசம் வாழ்வது நிஜமானால்

போகின்ற பாதையின் முட்கள் என்றும்

தருகின்ற தரிசனங்களின் சந்தோஷங்கள்

சந்தோசங்கள்..சங்கீதங்கள்..

காலை உல்லாசம்..

பன்னீர் தூவும் பனியின் துளிகள்

யாவும் சுகவாசம்..

ஒரு வானம்பாடி

கானம்பாடி

ஊரைக்கூட்டுமடி...

புகைவண்டிச்சத்தம்

நெஞ்சுக்குள்ளே

நாதம் கூட்டுதடி..

நீ நலமா நலமா என்று

எனை நாணல் கேட்கிறதே..

ம்.. சுகமே சுகமே என்று..

எனக்காய் தென்றல் சொல்கிறதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்கிறதே உன் மெளனத்தின் மொழி

சொல்கின்ற பரிபாஷையில் என் விழிகள்

சிந்திடும் காதலின் மென்மையான சிலிர்ப்பினை

அந்திப் பொழுதுகளில் கண்டிருக்கின்றாய்

அனல் கக்கிடும் விழிகளின் வெப்பம்

தணலாய் சுடுகின்ற பொழுதுகளின்

உணர்வினைக் கண்டிருக்கின்றாயா

மழையின்றியே மனதில் வானவில்லாய்

வழிமாறிப் போகின்ற பொழுதுகளில்

குடை பிடித்தாலும் நனைந்து போகின்ற

தடை மீறிப்போகின்ற சாரல் நீயாக

நீயாக என்மனத்துள் நிறைவாயிடம் பிடித்து

நானென்ற வொன்றை இல்லாமற் செய்துவிட்டாய்.

ஏனென்று பலமுறை என்னையே நான் கேட்டும்

ஆனதொரு பதிலேதும் கிட்டவில்லை.

அறிந்துவிடும் ஆவல் துடித்தெழுந்த போதெல்லாம்

ஆசானென்றுனை யெண்ணி அறிவுபெற வந்தேன்

பேசா ஓவியமாய் உன் கண்பார்வையினாலே

காதல் என்றே கண்ணியமாய் சொல்லி நின்றாய்.

சொல்லிநின்றாய் செல்லம்மா..

இருவேல்விழி வாசகங்கள்..

மெல்லமுளைத்திடும் கருக்கல்..

சிவப்பாய் இறப்பதுபோல்..

கன்னச்சிவப்பெல்லாம்..

காயமுன் சாய்கின்ற மடி..

உன்னதமானவளே உன்னதடி..

துள்ளித்திரிந்த நம்

பள்ளிக்காலம் முதல்..

அறிந்துமறியாத ஏதோ

ஒன்றை வாலிபபபரிசத்தால்

உணரவைத்த பொழுதில்..

தீயும் தேனும் தேகத்தை எரிக்க

பார்வைப் பாலூற்றி

ஆவியைக் குளிர விட்ட

ஆருயிரே.. விலகிநிற்கும்

வினாடிகள்.. ஆயுளில்

குறையுதடி.. சேர..

விடை சொல்லடி..

சொல்லடி மீண்டுமுன் செந்திரு வாயால்

அல்லல் நீங்கிநின்றேன் உனதன்பினாலே

இன்னொரு பிறப்புண்டென்று கண்டால்

உன்னிடம் சேர என்னுளம் நோக்குதடி.

வாழ்க்கையினிறுதி என்றும் மரணமதுதானே

வாழ்கின்ற போதே உன்னில்நான் மரணமடைந்தேனே

போகின்ற காலஞ்சூட்டும் புகழாரம்நமக்கு

பொய்யாதிவர் காதல் மெய்யானதென்றே.

மெய்யானதென்றே நம்பி

ஆவி துடிக்க அருகில் வந்து

ஐயோ ராசா என்று கதறுவதில்

என்ன லாபம்....?

மரணம் என்பதென்ன?

மறுமொழி உண்டோ..?

பல கதை சொல்வீர்...

ஒரு கதை நான் சொல்லட்டா....?

மரணித்துப் பார்

எல்லாம் விளங்கும்....

விளங்காவிடின் மீண்டும்

பிற... பிறந்து பின் இற....

ஓரிடத்தில் விளங்கும்!

ஓரிடத்தில் விளங்கும்

என்றார்-மெய் தேடி

ஓடாத இடமில்லை..

உடலமது காற்றடைத்த பையென்று

கானம் கேட்டேன்..

மரணம் உயிருக்கில்லை என்று

ஓலம் கேட்டேன்..

உயிருக்கு உருவமில்லையென்று

சொல்லலக்கேட்டேன்..

உருவம் நிலையே இல்லையென்று

உண்மை கேட்டேன்..

உண்மை எது வென்றே ஊரைக் கேட்டேன்..

கேட்டேன் கேட்டேன் கேள்விகளோ பலப்பல

கேள்விக்கோ கேள்விகளே விடைகளாய் விரிந்ததுவே.

மாண்டவர்கள் என்றாவது எங்காவதிங்கு

மீண்டுவந்ததிங்கே எத்தனை பேர் எத்தனை பேர்?

கேட்டேன் கேட்டேன் கேள்விகளோ பலப்பல

மாண்டவரில் மீண்டவர்கள் எத்தனைபேர்?

மாண்டவரில் சித்தர்பலர்மீண்டவர்களே.

மரித்தார் யேசு அவருமதில் மீண்டவரே.

கேட்டேன் கேட்டேன் கேள்விகளோ பலப்பல

மாண்டவரில் மீண்டவர்கள் தம்மநுபவத்தை

மக்களுக்கேன் சொல்லவில்லை?

மக்களாய் மரணித்து அறியட்டுமென்றோ?

கேட்டேன் கேட்டேன் கோள்விகளோ பலப்பல.

மரணித்துப் பார்க்கும் ஆற்றலெனக்குண்டு

மாண்டுவிட்டால் மீண்டும்வர ஆற்றலெனக்குண்டோ?

மக்களில்யாரேனும் மதியை எனக்கூட்டுவீரோ?

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.