Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

எனக்கூட்டுவீரோ? எனநான் கேட்டேன் லங்கா

எரிகிறதாம் தணல்விட்டு எயாப்போட்டாம்

குளிர்கிறது எங்கள் மனம் செய்தியாலே அந்தப்

புலிதந்த பரிசினிற்கு நன்றிசொல்வோம்

நன்றிசொல்ல நான்யாரெனக் கேட்டேன்? அட

ஒன்றுமில்லை நீயுமொரு தமிழந்தானே

என்று ஒருகுரல்கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்

எக்கருகில் நின்றிருந்தாள் ஈழமாதா.

ஈழமாதா உனக்கென்று விடுதலையென்றேன். அவள்

வாழவே அல்லலுறும் தமிழருக்காய்

வாளாது தமிழ்த்தலைவன் வன்னியிலே இனி

தாழாது காலமதைத்தந்திடுவானென்றாள்.

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

என்றாலும் ஈழமாதா..

உனை இகழ்வாரைத் தாங்குவதேன்..

இலங்கை மண்ணாளும் கோ.. முட்டை

ஒரு

கூமுட்டை என அறிந்தும்

கண்டுகொள்ளாதிருப்பதென்ன :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன என்று புரியாத வாழ்க்கையில்

ஏதேதோ சில புரியாத வதைகள்

தூய்மை நினைவுகள் மட்டுமே

துயர் தீரும் மருந்தாய் மனதினில் தாங்கி

ஐக்கியம் பூண்டு அழகழகாய்

ஐக்கியமாகிப்போன உணர்வுகளுடனே

சமத்துவம் சமாதானம் பேசி பேசியே

சன்னதமாடும் மனிதர்கள்

சமத்துவமும் சமாதனமும் பேசிப் பேசியே

உலகமெல்லாம் சேர்ந்து நம் உறவுகளை

அவலத்துக்குள் தள்ளிவிட்ட பின்னரும்

நம்க்கெதுக்கு சமாதானம்

நமக்கு தேவை சமத்துவம்

அதை யாரும் இங்கே

கொடுக்கத் தேவையில்லை

நம் கரங்களால் நாமே

போராடி எடுத்துக் கொள்கிறோம்

நீங்களெல்லாரும் வாய் மூடி

அமைதியாக இருங்கள்

எங்கள் தலைவனிருக்கிறான்

பகைவனை புறமுதுகு காட்டி

ஓட விட

Edited by வானவில்

மனிதர்கள் சிலர்

பூமிக்குப் பாரமாய்..

தன்னை காக்க..

கரங்கள்..

நின்றுழைக்க கால்கள்..

எல்லாம் இருந்தும்

மனிதர்கள் சிலர்

பூமிக்குப் பாரமாய்..

வயோதிபத்தில்

தந்தை வருந்தி

உழைக்க..

முயலாது வீட்டில்

உண்டு களைத்துறங்கும்

மனிதர்கள் சிலர்

பூமிக்குப் பாரமாய்..

நீ யார்..

வீட்டுக்கென்ன செய்தாய்..

நாட்டுக்கென்ன செய்தாய்..

சுற்றத்துக்கோ சூழலுக்கோ..

உற்றாருக்கோ உறவுக்கோ

என்ன செய்தாய்..?

எல்லாக்கேள்விக்கும்

ஒற்றைப்பதிலாய்

உதடு பிதுக்கும்

மனிதர்கள் சிலர்

பூமிக்குப் பாரமாய்..

முயலாமை..உன்னை

சோம்பேறி ஆக்கும்..

எழுந்து முட்டிப்பார்..

முட்டுக்கல் எட்டிப்பறக்கும்..

அறியாமை எல்லாம்

உற்சாகம் விலக்கும்..

உடல் வருத்தியுதவினால்

சந்தோசம் கிடைக்கும்..

வெற்றிக்கு வழி வீட்டில் கிடப்பதல்ல

சிந்தை விரித்து சிறகை யடித்து

விண்ணில் பறப்பது...

எழுந்திரு மனிதா..

பிறரைக் காயம் பண்ணாமல்..

உன் காயத்துக்கான உணவை

நீ உழைத்தெடு.. நீ

புத்துணர்வு பெறுவாய்..

பெறுவாய் ஈழமதை

பொறுத்திருந்து பார் தமிழா

ஆள்வாய் ஈழமதை

ஆசையோடு எதிர்பார் தமிழா

வானளவில் கொடிதனை ஏற்ற

வா வந்து இணைந்திடு தமிழா

தமிழீழம் செறிந்து செழிக்க

தலைவர் வழி நடந்திடு தமிழா

நன்றிகள் பல கோடி நண்பா

உறவுகள் உன்னை போல இல்லை

ஆறுதல் சொல்ல

நான் என்ன செய்தேன்

எனக்கே தெரியவில்லை

என் தேவை எல்லாம்

தாயகம் மட்டும்தான்

என் உறவுகளை பார்க்க

யாருமில்லையா..........?

என் தாயகத்தை பர்க்க

எனக்கு உரிமையில்லையா........?

என் குடும்பத்தை பார்க்க

எனக்கு முன்னவனும்

பின்னவனும் இருக்க

தாயகத்தை பார்க்க

நானிருக்க வேண்டாமா........?

முயலாமல் நானில்லை

இயலாமை எனக்கில்லை

சோம்பல் தெரியவில்லை

தாயக காற்றை சுவாசிக்க முடியவில்லை

மூச்சுக் காற்று கொடுத்த

தாயவளை விட எனக்கு

சுதந்திரக் காற்றை சுவாசிக

கொடுப்பவன்தான் தேவை

தேவைகள் பலவிதம்

சேவைகள் பலவிதம்

உனக்கு நான் தேவை

எனக்கு நீ தேவை

தாய்க்கு சேய் தேவை

சேய்க்கு தாய் தேவை

பூவுக்கு தேன் தேவை

நாவுக்கு சுவை தேவை

வானுக்கு நிலா தேவை

மீனுக்கு கடல் தேவை

இப்படி பல தேவைகள்

இன்னும் பல தேவைகள்

இருப்பினும்

தேவைகள் பலவிதம்

சேவைகளும் பலவிதம்

Edited by வெண்ணிலா

பலவிதம் பாரினில்

பாவையர் பலவிதம்

ஆனால்

அதிலும் நீயோ-ஓர்

புது விதம்...! :lol:

சேலைகட்ட வேண்டி நின்றால்

வாங்கித்தாடா என்றுரைப்பாய்...

வாங்கித்தந்து கட்டச்சொன்னால்

கட்டஎனக்கு தெரியா தென்பாய்..!

சரி.... கட்டிவிடுறேன் வாடி என்றால்

தாலி முதலில் கட்டு என்பாய்..... :lol:

பசியால் வயிறு வாடுதென்று

சாதமுன்னை ஆக்கச்சொன்னால்..

சமைக்க எனக்குத்தெரியாதென்பாய்...

பீஷாஹட்டின் நம்பர்தந்து

ரேக்எவே உனக்கும் (சேர்த்து)

ஓடார் செய்யச் சொல்வாய்... :lol:

நாணிக் கோணி நிற்பதுபோல்

நல்லாய் நீ நடிப்பாய்....!

பார் ...பாவியாய்போன

என்னையும் நீ

பார்.....

பாரினில் பாவையர்

பலவிதம்

அதிலும் நீயோ -ஓர்

புது விதம்.... :lol:

Edited by gowrybalan

விதம்விதமா விருந்து வைச்சு

வாஞ்சையுடன் உம்மை அழைக்க

தாயெழுதும் மடல் பார்த்து

சமையல்கலை நான் படித்தேன்

கறிக்குழம்பு சோறும் தான்

பக்குவமா செய்து வைப்பேன்

இரண்டு பிடி அள்ளிவைப்பீர்-பின்

தொடங்கிடுவீர் முணுமுணுக்க

பொண்டாட்டி நான் சமைத்தால்

அது வேண்டாத விஷமென்பீர்

சாப்பிட நீர் வந்திருந்தா-விழும்

பூசைக்கும் குறைவில்லை

மாற்றார் வீடழைத்து

சாப்பாடு தரும் நாளில்

குனிந்த தலை நிமிராமல்

வழித்தெடுத்தே அதையுண்பீர்

பிச்சையே திரிந்தெடுத்து

பழஞ்சாதம் புசித்தாலும்

சொத்தையே விற்றழித்து

சுகங்கெட்டு அலைந்தாலும்

அன்பாக மனைவி செய்த

கஞ்சியை நீர் அமுதென்பீர்

அதை மிச்சமின்றி புசித்திடவே

இல்வாழ்வும் இனித்திடுமே

Edited by Norwegian

இனித்திடுமே அன்பே

உன்னை நினைத்தாலே..

ஏக்கங்களும் தித்திக்குமே..

கனவுகளும் சுகமே..

யாவும் அழகே..

அருமையே..

நீ நிஜமாய் வராதவரை

இனித்திடுமே அன்பே

உன்னை நினைத்தாலே..

ஏக்கங்களும் தித்திக்குமே..

கனவுகளும் சுகமே..

யாவும் அழகே..

அருமையே..

நீ நிஜமாய் வராதவரை

நீ வந்த பின்னர் என் வாழ்க்கை

இனிக்கும் என்றிருந்தேன்

நீ வந்த பின்னர்

என் விடியல்கள் இரவுக்குள்

மறைந்து விட்டது

என் கனவுகள் கனவுகளாகவே

பிரிவில் உள்ள இனிமை

உன் அருகில் இல்லையே.............

இல்லையே என்ற சொல்

காதில்

விழுவதில்லையே..-என்

இலட்சியப்பாதையில்

கற்களும் முற்களும்

தெரிவதில்லையே..

வளைவையும்..நெளிவையும்

பயணத்தில் ரசித்து

இடைவெளித் தடைகளில்

அனுபவம் படித்து

என் இலட்சியப்பாதைக்குப்

போகும் என் காதுளில்

இல்லையே என்ற சொல்

காதில்

விழுவதில்லையே..-

இல்லையே என்ற சொல்

காதில்

விழுவதில்லையே..-என்

இலட்சியப்பாதையில்

கற்களும் முற்களும்

தெரிவதில்லையே..

வளைவையும்..நெளிவையும்

பயணத்தில் ரசித்து

இடைவெளித் தடைகளில்

அனுபவம் படித்து

என் இலட்சியப்பாதைக்குப்

போகும் என் காதுளில்

இல்லையே என்ற சொல்

காதில்

விழுவதில்லையே..-

விழுந்தாலும் மீசையில்

மண் ஒட்டுவதில்லை

எமக்கு

ஏனென்றால் எமக்கு மீசையே இல்லை :P

இல்லைத்தான் வானவில்லே

உனக்கும் வேலை இல்லை

எனக்கும் வேலை இல்லை..

மழை விழா நிலமாய்..

மண் படா வானமாய்..

காற்று நுழையாத

கல்லறையுள் வாழும்

கிமு வாய்

என் வாய்....

இருக்குமா அடக்கமாய்..

அச்சம் விட்ட பெண்ணிருக்க

அடுக்களை மறந்த பெண்ணிருக்க

நாணம் போன நங்கையை விட்டுவிட்டு

சோரம் போகாத மீசை மழித்த

விகடனை வம்புக்கிழுப்பதென்ன நியாயமோ..

அன்பே என்னை

தவிக்க விட்டது

நியாயமா?

என் உணர்ச்சிகளை

சிறையிட்டது

நியாயமா?

தொலைந்து போன

வாழ்கைதனை

கனவுக்குள் தேடவைத்தது

நியாயமா?

தனிமை சிறைக்குள்

என்னை அடைத்து

தள்ளி நின்று _நீ

ரசிப்பது நியாயமா?

நியாயமே இல்லாமல்

என்னை விட்டு - நீ

பிரிந்துசென்றது

நியாயமா?

நியாயமே இல்லாத

உன் நியாயத்தை

கூற நியாயமாய்

வருவாயா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருவாயா கஜந்தி களத்துக்கு தினமும்

கருவினில் தோன்றியதை எழுத்தாய் கோர்த்து

உருவாய் படைத்து எம் மனத்தினில்

தருவாய் இன்பக் களிப்பை

தருவோம் நாமும் பாராட்டினை தந்து

வாழ்த்திடுவோம் மனதார

வாழ்த்துக்கள் சொல்ல

ஆயிரம் நெஞ்சங்கள்

உண்டு இங்கே

அன்பென்று வந்தவர்களை

அன்போடு அரவணைக்க

ஆயிரமாயிரம் உறவுகள்

சொந்தஙக்ளை விட்டு

பிரிந்த போதும் பல சொந்தங்கள்

சேர்ந்து உலாவருவோம்

உனக்கென்ன வேணும்

எனக்கேக்கும் ஆதரவு

இங்குண்டு

அதுதான் எங்கள்

உங்கள் அன்பான

யாழ் களம்

களம் பல கண்டு -கவிக்

கற்கண்டு உண்டு...

புலத்தமிழ் எல்லாம் கூடி..

பூந்தென்றலாய் தேடி..

ஒன்றாய்ச் சேர்த்த இடம்- மின்

ஒளிவலையில் யாழ்களம்..

பல நூறாண்டு நிறைவுகண்டு-பெரும்

பெயர் கொண்டு வாழியவே..

எங்கள் நூற்றாண்டு

வாழ்வை விட

ஒரு நொடி சுதந்திர

ஈழத்தின் தென்றல்

காற்றை

சுவாசித்தாலே

போதும் நண்பா

அன்று யாழிற்க்கு

கிடைக்கும் வெற்றி

தலை குணிந்து

ஏற்றுக் கொள்வேன்

அந்த வெற்றியை

என்னுடன் சேர்ந்து

எல்லோரும்

கொண்டாடுங்கள் அன்று

வெற்றி முரசை

முரசைக் கொட்டும் சேதி கூட

யாழ் முற்றத்திற்கே முதலில் வரும்

என் நண்பன் கேட்டான்

ஈழம் கிடைக்குமா என்று..

நான் சொன்னேன்

ஈழம் என்றோ கிடைத்ததடா..

ஏற்புக்காக மட்டம் காத்துள்ளதடா என்று..

காதலித்து மணங்கொண்ட தம்பதியை

காலங்களில் பெற்றோர் மன்னிப்பார் சேர்ப்பார்

அதுபோல்..எம் போராட்ட வழிகள்

கொடுத்த வலிகளை உலகம்

மன்னிக்கும் அங்கீகரிக்கும்..

விடுதலைக்காய் குண்டைக்கட்டி

தன்னுயிரை முதலீந்த..மில்லர்

மண்ணில் இட்ட குருதியில் ஈழம் மலர்ந்ததடா..

நீர்கூட அருந்தாமல்..

தாயக சுதந்திரத்தின்

தாரகத்தை ஓதிக்கொண்டு

திலீபன் அண்ணா வித்திட்ட ஈழம்

அன்றே மலர்ந்ததடா..

ஆயிரமாய் ஆயிரமாய்..

வேங்கைகளின் ஆகுதியில்

மக்களெல்லாம்

கூடி நின்று சேர்தத அன்றே

ஈழம் மலர்ந்ததடா..எனறே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.

ஈழம் மலர்ந்திடும்

அந்த கணத்தில்

என்னுயிர் இருக்குமோ

தெரியவில்லை

அந்த செய்தி கேட்ட

கணத்தில் என் இதயம்

ஆனந்தத்தில் துடிப்பதை

நிறுத்தினாலும் நிறுத்தும்

அதற்கு முன்னே போர்கள்ம்

நோக்கி சென்று நானும்

ஆயிரமாயிரம் வேங்கைகளுடன்

போரிட்டு மாண்ட்டிடலாம்

நாளைய சமுதாயம் என்

பெயரை சொல்லும் உலகம்

அழியும் மட்டும் அதுதான்

என்னுடைய வெற்றி முரசு

வாவ். சூப்பராக இருக்கு. மீண்டும் கவிதை அந்தாதி உயிர் பெற்ரதையிட்டு ரொம்ப சந்தோஷமாக இருக்கு, ம் தொடருங்கள்.

முரசு கொட்டி முழங்கடா

அரசு கட்டில் நடுங்கட்டும்

பரிசு தரப்போகிறான்

தலைவன்

கொலுசு கட்டி ஆடடி

குழந்தாய்...

கொக்கரிக்கும் கோழிகள்

சமையலாகப் போகுது

சிவப்புத் தோல் போர்த்திய

நரியடா மகிந்தன் - அவன்

திட்டம் எல்லாம்

மண்ணாகப் போகுது

பண்ணாகப் / Fun ஆகப் பாட்டெழு

தம்பி...

பலதேசம் கேட்கப் பாடலாம்

ஒரு தேசம் தமிழனுக்கென்று

வருமடா நாளை

அப்போது ஓடிப் போன

கூட்டமெல்லாம்

வந்தாட்டுமடா வாலை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.