Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

விடியல் பிறந்திடுமோ......?

என்று எதிர் பார்த்து தலை

மயிர் நரைத்து விட்டது

விடியலை எதிர் பார்த்து

கண்களும் பூத்து விட்டது

தலைவா இன்று உன்

காலடியில் நாம் எல்லாம்

சரணடைந்து விட்டோம்

எங்கள் காலங்களை

எதிரியிடமிருந்து

பறித்துக் கொடுத்து

விடு தலைவா..............

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

தலைவா எம்

ஆசைகள் நீ

கொண்டு எமக்காய்

வாழும்போது எம்

வாழ்வுவிடியும்

விரைவில்

துன்பங்கள் தாம்

தொலைத்து இன்பமாய்

வாழ்வோம் ஒர்நாள்

இனித்திடும் நாட்களுக்காய்

காத்திருப்போம் உம்மோடு

காத்திருப்போம் உம்மோடு..

விடியல் வெகுதூரமில்லை...

களைபிடுங்கி உரமிட்டார்..

விளைபூமி செழிக்கையிலே...

புகழோடு தோன்றி இப்புவியையும்

பூக்கவைத்த தமிழன்...

நெஞ்சில் வீரம்..கொண்டு

நேர்மைத்திறனும் கொண்டு..

வஞ்சக பூமியையும் வென்று

நெஞ்சம் மகிழ கண்டிடுவார் ஈழம்..

ஈழத்து மண்ணே

உன்மடிமீது சில

காலம் வாழ்த்திட

வேண்டும்

அகதியின்றி தமிழனாய்

மீண்டும் பிறந்திட

வேண்டும் இங்கே

தொலைத்து விட்ட

நின்மதியை உன்னிடத்தில்

மீண்டும்

தேடிவரவேண்டும்

தேடிவர வேண்டும் உன்னை

ஆயிரம் சொந்தங்கள்

அதுதான் உனக்கழகு

உன்னை விட்டு போன

சொந்தங்களை நினைத்து

எதற்க்கு வேதனைப் படுகிறாய்.........?

உன் உச்சத்தை அடைந்தால்

உன்னைத் தேடி ஆயிரம்

உறவுகள் வரும் எதற்க்கு

நீ கலங்குகிறாய்..........?

நாளை எம்நாள் கலங்காமல்

தூங்கு எந்தன் நண்பா...........!

எந்தன் நண்பா எந்தன் நண்பா

எத்தனை நாள் நீயழுவாய்...??

பகைவன் உன்னை தாக்கையிலே

எத்தனை நாள் பொறுத்திருப்பாய்...???

இல்லை உன்னில் வீரமென்றா

இத்தனை நாள் பொறுந்திருந்தாய்...??

காத்திருந்த போதும் நண்பா

களமுனைக்கு தாவிவிடு....

ஏந்தி கையில் துப்பாக்கி

எதிரியரை ஆடி விடு

பந்தய பகையவரை

பாடையிலே ஏற்றி விடு....

நீயழுத காலமதை

நீயே இன்று அழித்துவிடு

நீண்டழுத தமிழினத்தின்

நீர் விழியை துடைத்து விடு...

ஆயுள் முழுதும் உந்தனையே

அன்னை தமிழ் வணங்கி விடும்

அதற்கெனினும் என் நண்பா

வேங்கையாக மாறிவிடு...!!

மாறிவிடு என் பெண்ணே

நீ மாறிவிடு உன்

சுகத்திரத்தை தப்பாக

பாவிக்காமல்

மாறிவிடு

நாகரிகமோகத்தில்

என் பெண்ணெ

நீ தடுமாறி

நிக்காது மாறிவிடு

வேதனையாய்

உள்ளதம்மா

உன் மீது குற்றங்கள்

சாட்டும் போது

எம் குடும்பத்தின்

குத்துவிளக்கே

உனக்காய் மாறிவிடு

மாறிவிடு அன்பே

என் காதலுக்காக

உனக்காக என் இதயம் ஏங்குதே

ஏமாற்றியது நீ

எனக்கேன் தண்டினை

உனக்காக உறவுகளை

பகைத்தேனே

உயிர் நண்பர்களை

வெறுத்தேனே

நீயே என் உலகம் என்றேனே

அதற்காக நீ தந்த பரிசா

உன் திருமணம்...........

உன் திருமணம்

பற்றி நமக்கென்ன

கவலை?

வீணே ஓடி வந்து

களத்தில் கல்லெறிந்து

விளையாடி

சொல்லோடு கருத்துப்

பிழை செய்யும்

உன் திருமணம்

பற்றி நமக்கென்ன

கவலை...?

என்றாலும் பண்பாடு

கருதி

வாழ்த்துகின்றேன்

ஒரு வரி எழுது

எப்போது

உன் திருமணம்?

திருமணமாம் திருமணம்

பத்துப் பொருத்தம்

தான் பார்த்து

சாதி மதம்

கூடி வர

நட்சத்திரம்

சேர்ந்துவிட

காசு பொருள்

ஒத்து வர

இரண்டு குறிப்புகளின்

சங்கமமா

திருமணம்?

இது உணர்வுகள்

கொண்ட

இதயங்களின்

நீண்ட நாள்

கனவன்றோ?

புரிந்து கொள்ளா

இதயங்களை

தெரியாத காரணத்தால்

சேர்த்துவிட்டு

சிதைப்பது தானோ

திருமணம்?

புரிவது எப்போது?

Edited by கஜந்தி

எப்போது புரிவாயோ

என் மனதை அறிவாயோ...??

இதயமுடைந்தழுகிறேன்

என்னவளே பதில் சொல்லு...

நெஞ்சமதில் உன் நினைப்பை

நெருக்கமாக சுமந்தவனை

தீ கொண்டு வார்த்தையாலே

தீண்டி வந்து ஏன் சுட்டாய்...???

என்ன தீங்கிழைத்தேனென்று

என் மனசை நீ மிதித்தாய்...???

வங்சமில்லா நெஞ்சமதில்

வடுக்களயேன் நிறைத்தாயடி....???

உன்னை எண்ணி வாழயிலே

உன் மனசை எறியலாமா...??

இதயமது உனக்கிரந்தால்

இன்று பதில் சொல்லிடடி....???

:lol::lol::lol::D

புரிவது எப்போது?

இந்த மானிடம்

பண்பாடு பாதை மாறி

சமுகத்தை சீர்குலைக்கின்றது

காதல் திசை தெரியாது

அலைமோதி

குடும்பத்தை சிதைக்கின்றது

திருமணம் அர்த்தமற்று

குழந்தை அனாதையாய்

வீதியில் அலைகின்றது

அன்பு சுயநலமாய் வாழ்கின்றது

இதை புரிவது யாரோ

யாரோ இது?

ஏதேதோ பிசத்தி நின்று

கவிதையிது வென்று

காட்டி

அம்பலத்தில்

அரங்கேற்றுகின்றார்

பாடு பொருள்

மாற்றலின்றி

அரைத்த மாவையே

அரைப்பது

தகுமோ?

'சகி'க்கமுடியவில்லை!

சண்டித்தனம் செய்யாதீர்

சரளமாய் தமிழ்

வந்து விளையாடலின்றி

சகதிக்குள் இறங்கி

அழகு காட்டுகின்றார்

சற்றே நன்று

கவனித்து

சங்கதி மாற்றி

எழுதும்

முடியாவிடின்

மூச்சடக்கி

முத்துக்குளிக்கும்

கனவு மறந்து

கரையில் நின்று

வேடிக்கை பாரும்!

பாரும் செழிக்காத நாளை

யார் பாலைக்கிறைக்கவில்லை

தன் நீரை....

எனக்கென்ன எனக்கென்ன

எனப் போனால்..

எவர் முலம் பூக்குமிப்பூமி..

நான் போட்ட விதையில்

என் பிள்ளை இளைப்பாறுவான்..

என்ற சுயநலத்திலேதும்..

ஒரு மரம் நட்டாயா...

மானிடா...

மானிடனே..மானிடனே மாறாயா...?

மனிதத்தை உலகமதில் நாட்டாயா...?

நெல்லுக்கு நாடுவினிலே களையாக- நீ

நெடுங்கால மாழ்வதனை மாற்றாயா...??

கல்லுக்கு மனசுள்ள காலத்தினிலே- நீ

கல்லாகி நிற்பதனை மாற்றாயா...??

தொல்லைகள் இல்லாத தேசத்தினிலே - நீ

தொல்லையாகி நிற்பதனை மாற்றாயா...??

கூவத்தை வாயடக்கி குலவுகிறாய்- உனை

புனிதனாய் உலகதில் ஏன் காட்டுகிறாய்...??

மனிதத்தை மறந்திட்ட மானிடனே- நீ

மனிதனாய் என்றிங்கு வாழ்வாயோ....???

வாழ்வாயோ என்

அன்பே

மகிழ்ச்சியாய்

வாழும்காலம் அது

கொஞ்சம் இதில்

யார் மனசில்தானில்லை

சோகங்கள் _நீ சொல்லு

கொஞ்சம்

மாற்றங்கள் கொண்டதே

வாழ்கை இதில்

மாறாது தவிப்பது ஏன்

அன்பே_ நீ சொல்லு

உனக்கும் எனக்குமில்லை

சோகங்கள் இங்கே

எல்லோர் மனதிலும்

மாறாத காயங்கள்

வலிகொண்ட வாழ்கைதனை

வெற்றிகொண்டு்

வாழ்த்துவிடு

உனக்காய் கொஞ்சம்

உனக்காய் கொஞ்சம்

வாழ்ந்து விடு உறவே

துயரத்தில் ஏனோ

துன்பத்தை தேடியோடினாய்

ஒர் நிமிடம் தடுமாறிய நீ

சிந்தித்தாயா உன் உறவை

உன் நினைவுடன் வாழும்

உறவை கண்ணீரில் கரைக்கின்றாய்

கரைக்கின்றாய் என்

கல் போன்ற மனதை...

முயற்சியால் அடைய

முடியாத பாதை

கண் அசைவாலே

அசையாத..கரும்பாறை

அன்பென்ற மழை பெய்தும்

ஈரம் ஒட்டாத பாலை

அழுதாய்..அடம் பிடித்தாய்..

ஆர்ப்பரித்தாய்..

அனுதாபம் சேகரித்தாய்..

அணுவும் இடமில்லை

என்னை இதயமில்லாப்

பிராணியென்றாய்..

தீயால் சுட்டதுவும்..

விழிநீரை ஊற்றுவதும்..

எதற்குத் தாயே..

நீ சொன்னது சரிதான்..

ஏற்கனவே இன்னொருத்தி

புடுங்கிப்போன இதயத்தை

அவளால் இறந்து போன

இதயத்தை

எப்படி தருவேன்

உனக்கு?

உனக்கு அன்று வரைந்த

காதல் மடல்கள்

இன்னும் என்

இதய நூலகத்தில்

உன்னை நினைவு படுத்தியபடி....

கண்ணுக்குள் உனையிருத்தி

கனவாக காண்கிறேன்..

மீண்டும் நீ வருவாயென்றி

மீளாத ஞாபகத்தில்....

உனக்கு எப்படி புரியும்...- என்

உள்ள குமுறல்கள்...?

அருகில் நீயிருந்தால்

அழுது களைப்பாய்....

ஒரு முறை எந்தன்

இதய நூலகம் வந்து பார்....

வந்துபார் எனது

வத்திக்கான் பங்களாவை!

நான் கடவுளின் தூதுவன்!

புத்தனும் யேசுவும் எனக்கு பூட்டன்கள்!

சங்கராச்சாரியார் மானசீக குரு!

சாய்பாபா எதிரி!

சாக்கடையினுள் வீழ்ந்துள்ள

சாதாரண மக்களை

இரட்சிக்க வந்த

போப்பாண்டவன் நான்!

போப்பாண்டவர் நானெ

போதனை செய்பவரே

வறுமையில் தவிக்கிறோம்- எம்

வறுமையை ஒழிப்பீரா...??

.ரட்சிக்க வந்த

இயேசுவின் பிள்ளையே

நோயினால் தவிக்கிறொம்- எம்

நொயினை துடைப்பீரா...??

பாவத்தை துடைத்திடவே

பாவியாகி வந்தவரே

கண்ணை திறந்தெம்மை

காத்தருள்வீரா...???

..................................................

பி.கு.-

கலைஞனே வந்தாய்- நல்

கவிதனை தந்தாய்

வாழ்த்தியே உன்னை

வணங்கியெ செல்கிறென்...

.......................................................

காத்தருள்வீரா

காலமெல்லாம் குண்டுபோட்டு

கலங்கடித்த எம்தலையில்

குண்டுவிழும் அவலத்தைத்

தடுத்திடுவீரா

விதைத்தவினை இதுவென்று

விதியைநொந்து நிற்பதுவோ

சிதைத்ததமிழ் உயிர்களது

சதியென்று சொல்வதுவோ

எதுவாய் இருந்தாலும்

பொதவாய் வழிசொல்லும்

Edited by Manivasahan

காத்தருள்வீரா

இறைவா

எம் இனத்தின்

துயரங்களை

அது தத்த காயங்களின்

வலிகளை எம்

இனம்வாழும் போதே

நீ வரவேண்டும்

கல்லாய் நீ இல்லை

என்றால்

கல்லாய் நீயில்லை என்றால்

கருணை காட்டு..

என் காட்டுவழிப் பயணத்தில்..

காதலை நுழைத்தவளே..

என் காட்டைப் பத்தவைத்தவளே..

கல்லுக்குள் ஈரத்தை

கசியச்செய்து..

பாறையில் செடிகளைப் பரவச்செய்து..

மொட்டவிழும் கணத்தில் எனை

விட்டுவிட்டு போனாயே..

நிஜம் கசக்குதே..

நீ வருவாயென்றிருந்த என்

இமாலய நம்பிக்கையில்

ஈட்டி எறிந்து

இறக்க செய்தவளே..

ஒன்று மட்டும் புரியவேயில்லை

உன் முதல் குழந்தைக்கு

என் பெயராமே..

ஏன் வைத்தாய்..

உன் வாலிப விளையாட்டின்..

களிப்புகளை..

எண்ணி

எண்ணி நகைப்பதற்கா..

போகட்டும் விடு..

இன்னும் என் வீட்டில்

எனக்கு பெண் பார்க்கிறார்கள்..

என் பெயர் கெர்ணட

உன் பையனுக்கும்

நீ பெண் பார்க்கிறாயாமே..

வாழ்த்துக்கள்.

நீ பெண் பார்க்கிறாயமே

வாழ்த்துக்கள்.

பாவம் நீ – உனக்கு

தெரியாத என்னை

மணம் முடித்தவள் நீயென்று….??

எப்படி உனக்கு

நினைவு வரும்

நீதானே தாசியாய்

தரணியல் உலவுகிறாய்…

வேடங்கள் தாங்கிய

வேடகியே- காளையரை

எத்தனை முறை

நீ காதலிப்பாய்….???

முறந்து போய் வந்து

உன்னிடம் கேட்கிறேன்

மடையன் நான்…

ஆம் நீ பெண்ணில்லையே…

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.