Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துட்டகைமுனு போல் கதிர்காமத்தில் திரிசூலத்தை காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிய மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று காலை 8.12 என்ற சுபநேரத்தில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் தங்கத்தில் செய்யப்பட்ட ஆறு அங்குலம் உயரமான திரிசூலம் ஒன்றில் வெள்ளி காசு ஒன்றை கட்டி தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

துட்டகைமுனு மன்னன் போருக்கு செல்லும் முன்னர் இப்படியான வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றியதாக வரலாற்று கதைகளில் கூறப்பட்டுள்ளது.

இதனால், மகிந்த ராஜபக்சவின் வேண்டுதலில் ஏதேனும் விசேடம் இருக்கலாம் என பலர் கூறுகின்றனர்.

சில நேரம் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலுக்கு வர எண்ணியிருக்கலாம் என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி நேற்று கதிர்காமம் சென்றிருந்ததுடன் 84 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டதுடன் கிரிவேஹேர விகாரையில் இரவு தர்ம உபதேசத்திலும் கலந்து கொண்டார்.

அவருடன் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, புதல்வர்களான நாமல் ராஜபக்ச, யோஷித்த ராஜபக்ச, அண்ணன் மகனான ஷசீந்திர ராஜபக்ச, உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோரும் சென்றிருந்தனர்.

முன்னர் மகிந்த ராஜபக்ச, கதிர்காமம் செல்லும் போது அவருடன் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் அரசியல்வாதிகள் அங்கு செல்வது வழக்கம். எனினும் இம்முறை அவர்களைக் காணக்கிடைக்கவில்லை.

tamilwin.com

 

  • கருத்துக்கள உறவுகள்

துட்டகைமுனு மன்னன் காலத்தில் கதிர்காமக் கந்தனின் ஆலயத்திற்கு அருகே புத்தர் பெருமானின் புத்த தூபி இருந்ததாகத் தெரியவில்லை. அந்த வேளையில் மன்னன் வேண்டுதலைத் தனது நேரத்தையும் பாராது கந்தன் நிறைவேற்றி இருக்கலாம். தற்போது புத்தரும் அவர் தூபியும் அருகிலேய இருக்கும்போது புத்தரிடம் செல்லாது என்னிடம் வந்து எனது நேரத்தையும் வீணடிக்கிறானே என்ற கோபத்தில் மகிந்தவின் வேண்டுதலை கந்தப் பெருமான் நிறைவேற்றாது புறக்கணிக்கவும் செய்யலாம்.  :icon_idea:    

கதிர்காமத்தில் மகிந்த குடும்பத்துடன் வழிபாடு – மீண்டும் அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் திட்டம்? FEB 24, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

mahinda-kataragama-1-300x200.jpgசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கதிர்காமத்தில் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக் காலை வரை வழிபாடு நடத்தியுள்ளார்.

இது அவர் அரசியலில் மீண்டும் இறங்குவதற்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட வழிபாடாக இருக்கலாம் என்று கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு கதிர்காமத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற மகிந்த ராஜபக்ச, அங்குள்ள கிரி விகாரையில் இரவிரவாக வழிபாடுகளில் ஈடுபட்டார்.

முன்னதாக, அவர் கதிர்காமம் சென்ற போது, ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள கதவு மூடப்பட்டிருந்தது.

எனினும், அந்த கதவின் சாவிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கி கால்நடையாகவே ஆலயத்துக்குச் சென்றிருந்தார்.

கிரி விகாரையில் 1108 விளக்குகளை ஏற்றி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் வழிபாடு செய்தனர்.

mahinda-kataragama-1.jpg

mahinda-kataragama-2.jpg

mahinda-kataragama-3.jpg

அதன் பின்னர், நேற்றுக்காலை கதிர்காமம் முருகன் ஆலயத்தில், மகிந்த ராஜபக்ச சுப நேரமான 8.12 மணியளவில் வழிபாடு செய்தார்.

இதன் போது அவர், ஆறு அங்குல நீளமான வெள்ளியில் செய்யப்பட்ட திரசூலம் ஒன்றை ஆலயத்துக்கு வழங்கினார்.

துட்டகெமுனு மன்னன், போருக்குச் செல்வதற்கு முன்னர், இவ்வாறு வெள்ளி திருசூலத்தை அர்ப்பணித்ததாக, வரலாற்றுக் கதைகளில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்சவுடன், அவரது மனைவி சிராந்தி, மகன்கள் நாமல், யோசித, மற்றும் முன்னாள் ஊவா முதல்வர் சசீந்திர ராஜபக்ச, மற்றும் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே, உதய கம்மன்பில ஆகியோரும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

படங்கள்- டெய்லி மிரர், லங்காதீப

http://www.puthinappalakai.net/2015/02/24/news/3916

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

நேற்றுமுன்தினம் இரவு கதிர்காமத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்ற மகிந்த ராஜபக்ச, அங்குள்ள கிரி விகாரையில் இரவிரவாக வழிபாடுகளில் ஈடுபட்டார்.

முன்னதாக, அவர் கதிர்காமம் சென்ற போது, ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள கதவு மூடப்பட்டிருந்தது.

எனினும், அந்த கதவின் சாவிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கி கால்நடையாகவே ஆலயத்துக்குச் சென்றிருந்தார்.

 

மைத்திரி பால சிறிசேன அண்மையில் திருப்பதிக்கு சென்ற போதும், கோவில் கதவை திறக்க முடியாமல்.. அதனை உடைத்து தான்... உள்ளே சென்று வழிபட்டார். மகிந்தவுக்கும்... அதே நிலை.

அரசியல் வாதிகளை கண்டவுடன்... சாமிகளும், ஒழித்து திரிகிறார்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.