Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசி வீரவன்சவுக்கு விளக்கமறியல் – மோசடிக்கு விமல் வீரவன்சவும் உடந்தை

Featured Replies

wimal-sashi-300x200.jpg

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திரக் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவை வரும், 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன், அவர் வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம், மாலபேயில் உள்ள மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்ட சசி வீரவன்ச, தொடர்ந்தும், காவல்துறை பாதுகாப்புடன், அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று மாலபே மருத்துவமனைக்குச் சென்ற கொழும்பு பிரதம நீதிவான், சசி வீரவன்சவை 25ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகவும் எனவே அவரது கடவுச்சீட்டை முடக்க வேண்டும் என்றும்  குற்றப்புலனாய்வுத் துறையினர், நீதிவானிடம் கோரியிருந்தனர்.

இதையடுத்து, அவரை வெளிநாடு செல்ல நீதிவான் தடைவிதித்தார்.

sashi-hospital.jpg

மருத்துவமனையில் பிள்ளைகளுடன் சசி வீரவன்ச. படம்- அததெரண

அதேவேளை, மோசடியான முறையில் பெறப்பட்ட இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, 2010ம் ஆண்டுக்குப் பின்னர், சசி வீரவன்ச ஆறு  தடவைகள் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

2010 செப்ரெம்பர் 13ம் நாள் வழங்கப்பட்ட D3642817 இலக்கமுடைய இராஜதந்திர கடவுச்சீட்டில், சசி வீரவன்சவின் பெயர், ரன்துனு முதியான்சலாகே சேஹஷா உதயந்தி ரணசிங்க என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவர் முதல் முறையாக 2010 செப்ரெம்பர் 22ம் நாள் கோலாலம்பூர் சென்று வந்துள்ளார்.

அதன் பின்னர், 2011 ஏப்ரல் 10ம் நாள் டுபாய்க்கு ஏழு நாள் பயணத்தை மேற்கொண்டார்.

மீண்டும், அதே ஆண்டு மே 21ம் நாள் டுபாய் சென்ற அவர், 24ம் நாள் நாடு திரும்பினார்.

2011ஒக்ரோபர் 20ம் நாள் மும்பைக்குச் சென்று மறுநாள் திரும்பினார்.

கடந்த ஆண்டு, இரண்டு முறை வெளிநாடு சென்றுள்ளார். ஏப்ரல் 14ம் நாள்  சிங்கப்பூர் சென்ற சசி வீரவன்ச 17ம் நாள் திரும்பினார்.

அதன் பின்னர், ஜூன் 25ம் நாள் வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றுக்கு, யுஎஸ் 001… விமானத்தில் சென்றுள்ளார். இது சிறிலங்கா அதிபரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  ஜூன் 30ம் நாள் அவர் நாடு திரும்பியிருந்தார்.

அவர் இராஜதந்திரக் கடவுச்சீட்டை கடைசியாக பயன்படுத்தியது இதன்போதேயாகும்.

அவரது சாதாரண கடவுச்சீட்டு N1284124 என்ற இலக்கத்தில், 2004 மே 24ம் நாள் சீர்ஜா உதயந்தி வீரவன்ச என்ற பெயரில் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ள குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, முன்னாள் அமைச்சர் என்ற வகையில் விமல் வீரவன்ச எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை அடுத்தே, சசி வீரவன்சவுக்கு இராஜதந்திரக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிரடையே, சசி வீரவன்சவின் தேசிய அடையாள அட்டை தொடர்பான ஆவணங்கள், ஆட்பதிவுத் திணைக்களத்தில் இருந்து காணாமற்போயுள்ளதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமல் வீரவன்சவும் தனது வயதைக் குறைத்து ஆவணங்களில் மோசடி செய்துள்ளதும் அம்பலத்துக்கு வந்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/02/24/news/3911

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் பக்கம் தாவியிருந்தால் வீரமங்கிக்கு இந்தப் பிரச்சனை வந்திருக்காது..

  • தொடங்கியவர்
விமல் வீரவன்ஸவின் ஊழல்களை அம்பலப்படுத்திய சஷி வீரவன்ஸ
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 12:37.41 PM GMT ]
vimal_wife.jpg
சஷி வீரவன்ஸவின் வாக்குமூலத்தால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலியான தகவல்களுடன் இரண்டு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியமை சம்பந்தமான விமல் வீரவன்ஸவின் மனைவி நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போதும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சஷி வீரவன்ஸ, தான் கைது செய்யப்படவிருப்பதை அறிந்து கொண்டதை அடுத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பாரிய கொள்ளை, ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ள தனது கணவர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்களை கைது செய்யாமல், அவர்களுடன் ஒப்பிடும் போது சிறிய தவறை செய்த தன்னை போன்றவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் எனக் சஷி வீரவன்ஸ, அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்டுள்ளார்.

அத்துடன் தனது கணவருடன் இருந்த கொள்ளையர்கள், ஊழல்வாதிகள் சம்பந்தமான அவர் விபரமான தகவல்களை அமைச்சரிடம் கூறியுள்ளார். குறிப்பாக தனது கணவரான விமல் வீரவன்ஸவின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான விரிவான தகவல்களை அமைச்சர் ராஜிதவிடம் சஷி வழங்கியுள்ளார்.

கொழும்பு டாலி வீதியில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான காணியை போலி காணி உறுதியை செய்து விற்றமை, கொழும்பு துறைமுகத்திற்கு கருங்கல் விநியோகிகத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றமை, தார் அனுமதிப்பத்திரத்தை பெற்றமை, சலாக உரிமையாளரான பெண்ணுடன் இணைந்து சர்வதேச வர்த்தகர்களுடன் மேற்கொண்ட நிதி கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமான விபரமான தகவல்களை சஷி வீரவன்ஸ, அமைச்சர் ராஜிதவிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர வேறு முறைகேடான கொடுக்கல், வாங்கல்கள் பற்றியும் கூறியுள்ளார். அத்துடன் விமல் வீரவன்ஸவின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு பெண்கள் பற்றிய தகவல்களையும் சஷி வீரவன்ஸ வெளியிட்டுள்ளார்.

இந்த சகல விடயங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவிக்குமாறு கூறிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதன் பின் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக கூறியுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக அறிந்து கொண்ட விமல் வீரவன்ஸ, குழம்பி போயுள்ளதுடன் தனது ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு சஷி வீரவன்ஸ தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது தனது மனைவி என குறிப்பிட வேண்டாம் என கேட்டுள்ளார். விமல் வீரவன்ஸவின் பிள்ளைகளின் தாய் என குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீரவன்ஸ தம்பதியினர் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஒற்றுமையாக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதாகவும் இந்த சம்பவத்துடன் அந்த பிரச்சினை மேலும் முற்றியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns6J.html

 

மகிந்தவின் உதிரிகளுக்குதான் ஆரம்பமோ ? ..... பார்ப்பம் 

  • கருத்துக்கள உறவுகள்

 

vimal_wife.jpg

போலியான தகவல்களுடன் இரண்டு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியமை சம்பந்தமான விமல் வீரவன்ஸவின் மனைவி நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போதும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சஷி வீரவன்ஸ, தான் கைது செய்யப்படவிருப்பதை அறிந்து கொண்டதை அடுத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பாரிய கொள்ளை, ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ள தனது கணவர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்களை கைது செய்யாமல், அவர்களுடன் ஒப்பிடும் போது சிறிய தவறை செய்த தன்னை போன்றவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் எனக் சஷி வீரவன்ஸ, அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்டுள்ளார்.

----

 

என்னப்பா.... இந்த மனிசி, கணவனையே.... போட்டுக் கொடுக்குது.smiley4262.gif:D 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை மீண்டும் கொண்ட வர முயன்றால் கம்பி எண்ண வேண்டும் என மோடவன்ச புரிந்து கொண்டிருப்பார்.

உந்தாளுக்கு 6 வைப்புக்களாமே! :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா.... இந்த மனிசி, கணவனையே.... போட்டுக் கொடுக்குது.smiley4262.gif:D

பின்ன?

ஏலுமெண்டா, என்ற மனிசியை பிடிச்சுப் பாருங்க என்று பொலீசுக்கே, நுகேகொட மகிந்த ஆதரவு கூட்டத்தில் சவால் விட்டு, கைதை உறுதிப்படுத்தினால், மனிசியும் கொதியில போட்டுக் கொடுக்கும் தானே. :lol:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை மீண்டும் கொண்ட வர முயன்றால் கம்பி எண்ண வேண்டும் என மோடவன்ச புரிந்து கொண்டிருப்பார்.

உந்தாளுக்கு 6 வைப்புக்களாமே! :D

 

முனிக்கு.... இந்த விஷயங்கள் எல்லாம், டக்கெண்டு தெரிய வந்துவிடும். :icon_idea:  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

முனிக்கு.... இந்த விஷயங்கள் எல்லாம், டக்கெண்டு தெரிய வந்துவிடும். :icon_idea::lol::D

அட, இது ஊர் முழுக்க தெரிந்த விசயம் எல்லோ.... உங்களுக்கு எண்னெண்டு தெரியாமல் போனது? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.