Jump to content

வேதத்தில் சாதி இருக்கிறதா?


Recommended Posts

இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.

எனக்கு மதங்களைப் பற்றிய அறிவிருக்கிறதா என்ற கேள்வியும் சந்தேகமும் யாருக்காவது எழுந்தால் அவர்கள் என்மேலான தீர்ப்பை எழுதுவதற்கு நான் உதவத் தயாராய் இருக்கிறேன். எனது கேள்விகள் உறுத்தாமல் இருக்கவேண்டுமானால் என்னைப் பற்றிய தீர்ப்பை எழுதி, ஒரு அடையாளமிட்டு வைத்துவிடுவது அவர்களுக்கு நல்லது. எனக்கு மதங்களைப்பற்றிய அறிவு எவ்வளவு என்பதை எந்த அளவையிலும் சொல்ல விருப்பமில்லை. அதேபோல் சக மக்களின் மீதான அன்பையும் எந்த அளவையிலும் சொல்லவிருப்பமில்லை. நான் தீவிர வலதுசாரி இந்து வெறியனாக இருந்திருக்கிறேன். கம்யூனிஸ நம்பிக்கைகளை எடுத்துகொண்டு திரிந்திருக்கிறேன். தமிழ் தேசியம் கொஞ்சகாலம் இருந்தது. எல்லாவற்றையும் எனது அவற்றினூடான தீவிரமான ஈடுபாட்டலும், சார்பாலும் தான் கடந்து வந்திருக்கிறேன்; வெறுப்பால் அல்ல. மக்களின் மேல் உள்ள அன்பும், மதங்களின் (நிறுவனங்களின்) மேல் உள்ள விமர்சனமும் எந்த இசத்தின் பாற்பட்டதுமானது அல்ல. எந்த மேலுலகின் கனிகளுக்காகவோ, கடவுளரின் கருணாவிலாசத்துக்காகவோ அல்லது புதியதொரு பொன்னுலகத்தை நிர்மாணிக்க புறப்பட்டோ இதைச் செய்யவில்லை; இரக்கம், மனித நேயம், கருணை இவை போன்ற பெருமிதப்படத்தக்க பதக்கங்களை என் ஆத்துமாவில் நிறைத்துக்கொள்ளவும் விரும்பி இதைச் (மக்களின் மேலுள்ள என் அன்பும், நிறுவனங்களின் மேலமைந்த என் கேள்விகளும்) செய்யவில்லை. மக்களின் மேலான அன்பு என்மேல் உள்ள சுயகாதல்; இந்தக்கேள்விகள் என்னை நிறுவனப்படுத்தி இருக்கும் அமைப்புக்கு எதிரான சுய விடுதலையை முன்னெடுக்கிற கேள்விகள். அவ்வளவே!

***

இப்போது விதயத்துக்கு வருவோம். இந்து மதம் என்று இன்று முன்னிருத்தப்படுகிற வேதங்களை ஒத்துக்கொள்ளும் எந்த தத்துவப்பிரிவும் மனிதனுக்கு எதிரானது. பெண்களையும் உள்ளடக்கியே! இதில் யோனி-லிங்க வழிபாடுகள், பெண்களை சக்தியாகவும், தெய்வமாகவும் சித்தரிக்கும் வழிபாடுகள் போன்றவை வேத மதங்களுக்கு எதிரானதாக உண்மையில் தோன்றிய தந்திரா வகை தத்துவங்களை சேர்ந்தவை. அதே போன்று வேத மதங்களை எதிர்த்தே 2300 ஆண்டுகளுக்கு முன்னேயே புத்தரும் தோன்றி இந்தத் துணைக்கண்டமெங்கும் மனித விரோத வேத மதங்களை (இன்றைய இந்து மதமாக முன் வைக்கப்படும் உள்ளீட்டை) வீழ்த்தி அப்புறப்படுத்தினார். இதற்காக அவர் மேற்கொண்ட விவாதங்கள், எதிர்கொண்ட சதிகள் போன்றவைகளை பெளத்த- சமண தத்துவங்களில் பரிச்சயம் கொள்ள முனையும் யாவரும் அறியலாம். தென்னிந்தியாவில் தோன்றி இருந்த உலகாயத்தை முன்வைத்த தத்துவப்பிரிவுகள் மிக எளிதாக பெளத்தத்தோடு இணங்கி, பரவிவந்த வேத அடிப்படை கருத்துக்களை எதிர்கொண்டதற்கான குரலை திருக்குறளிலும், மற்ற காப்பியங்களிலும் காணலாம். புத்தரின் இந்த வெற்றியைத் தொடர்ந்தே கர்ம காண்டமாகிய வேதமதங்கள் யாகம் போன்ற சுரண்டல் வழிகளை குறைத்துக்கொண்டன. சாதி என்ற வருண அமைப்பின் மீதான அதன் பிடி தகர்ந்துபோனது. புத்த மத்தின் தாக்கங்களாலேயே ஞானமார்க்கங்கள் தளிர்விடத்துவங்கி உபநிடதங்கள் தோன்ற ஆரம்பித்தன. பெளத்த நெறிகளை வேராகவும் தந்திரா போன்ற வழிபாட்டு முறைகளை தனது உடலாகவும் கொண்ட சன்மதங்களை ‘பிரசன்ன பெளத்தராகிய‘ சங்கரர் ஸ்தாபித்து அவற்றின் மூலம் வேத மேலாண்மையை மீளக்கொண்ர்ந்தார். அதற்காக பிராமணீயம் அவருக்கு தீராத கடன்பட்டிருக்கிறது. வேத தத்துவங்களை அதன் மனித விரோத தன்மைக்காக புத்தர் தொடங்கி (புத்தருக்கு முன்பாகவே செயினர், சார்வாகர்கள், சாக்கியம், லோகாயத்தின் பலபிரிவுகளும் இந்த எதிர்ப்பைச் செய்திருந்தாலும்) பல நூற்றாண்டுகளாக பல ஞானிகளாலும், சித்தர்களாலும் எதிர்க்கப்பட்ட உழைக்கும் சமூக விரோத, ஆணாதிக்கச் சிந்தனைகள் என அடையாளங்காட்டப்பட்ட ஒன்றை அம்பேத்காரும், பெரியாரும் ஒழிக்க நினைத்தது, முயன்றது ஏதோ நேற்று நடந்த சமூக மாற்றமோ, ஒரு சாதிக்கு எதிரானதோ அல்ல. பாரத தேசத்திலே புத்தமதம் ஜீவகாருண்யம், சர்வஜன சமத்துவம் என்ற இரண்டு தர்மங்களையும் நெடுந்தூரம் ஊன்றும் படி செய்தது என்கிறார் பாரதி (பாரதியின் பகவத்கீதை). சாஸ்திரங்கள், இதிகாசங்களை முற்றாகப் புறக்கணித்து உபநிடதங்களின் மேலாக சாதி/ வருண மறுப்பைத் தொடர நினைத்த ஆரியசமாஜம் போன்ற செயல்பாடுகளும் வேதக்கொடுமைகளை ஒழிக்கக் கிளைத்தவையே. இந்த சீர்திருத்தங்களும் ஏனைய வேத மதங்களின் உள்ளேயே நடந்த மற்ற சீர்த்திருத்தங்களை (இராமனுஜர் போன்ற) போல வருணாஸ்ரமத்தையும், மனுவையும் தாங்கி நிற்கும் பகுதியினரால் வெற்றிகொள்ளப்பட்டன. இப்போது இரண்டு கேள்விகள் இருக்கின்றன. 1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? 2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு (அதைக்காப்பற்ற முனைகிறவ்ர்களுக்கு) வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா?இவைகளைப் பார்ப்போம்.

1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? வேதத்தை மூலப்புத்தகமாகக் கொண்ட பல சாஸ்திரங்களும், சமயப்புத்தகங்களும் வருணாசிரமத்தை, சாதி அடிமைமுறையை, பலவேறு சாதிகளின் கடமைகளை பிராமணர்களின் மேலாதிக்கத்தைச் சொல்லுவன. இதில் குறிப்பாக மனுஸ்மிருதியைக் குறிப்பிடலாம். அது சூத்திரர்களின் வாழ்விடங்கள் மண்ணால் கட்டப்பட்ட்டிருக்கவேண்டும், உலோகங்களை பாத்திரங்களாக பயன் படுத்தக்கூடாது, மண்ணிற்கு அடியில் உள்ள கிழங்குகள் , வேர்களையே சாப்பிட வேண்டும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் இடுப்புக்கு மேல் உடையணியத் தடை, அத்தியாவசியத்தின் காரணமாக ஊருக்குள் நடக்கும் போது கைக்கொள்ளவெண்டியமுறைகள், பொது நீர்நிலைகளை பயன்படுத்த, கல்வி கற்க, இடம்பெயர செய்யப்படவேண்டிய தடைகள், அவை மீறப்பட்டால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகள் போன்ற பலவற்றை விரிவாகப் பேசுகிறது. அது தவிர பெண்ணடிமைத்தனம், பால்யவிவாகம், பால்யவிவாகம் செய்யாவிட்டால் ஏற்படக்கூடிய பாதகங்கள், சதி (உடன் கட்டை ஏறல்) போன்ற கருத்துக்களையும் சொல்கிறது. இது தவிர பிராமணர்களுக்கான சலுகைகள், சிறப்புகள் போன்றவையும் குறிப்பிடப்படுகின்றன.

மனுவின் இந்த சட்டப்புத்தகம் மிக முக்கியமான ஸ்மிருதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்மிருதிகள் என்பவை நினைவில் வைக்கப்பட்டது என்று பொருள் படுபவை. இவை யுகங்கள் தோறும் மாறக்கூடியவை என்றாலும் யுகங்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்டதால் நடைமுறையில் அவை மாறாத தன்மைகொண்டவையாகவே இருக்கின்றன. மனு ஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக செல்வாக்கு செலுத்தி வருவது அப்படியே. மேலும் ஸ்ருதி (ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டவை என்று பொருள் கொள்ளலாம்; ஸ்ருதிகள் என்றும் மாறத்தன்மை கொண்டவை) என்றழைக்கப்படும் வேதங்களையும் இந்த ஸ்மிருதிகளையும் எந்தக்காரணம் கொண்டும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது மனுவின் சட்டம் (மனு ஸ்மிருதி (பாகம் 2 சூத்திரம் 10).

இந்நிலையில் மனு உலகத் தொடக்கம் பற்றிய பகுதியிலேயே மனிதனின் உருவாக்கத்தைப்பற்றி பேசும் போது“But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.” (மனு ஸ்மிருதி பாகம் 2 சூத்திரம் 31) இப்படியாகக் குறிப்பிடுகிறார். இதில் நான் குறிப்பிடவிரும்புவது மனிதனைப் படைக்கும் போதே அவனை நால் வருணங்களாய் படைக்கிறார் என்பதைத்தான். செய்யும் தொழிலைக்கொண்டே வருணங்கள் பிரிக்கப்பட்டன என்று விளக்கமளிக்கும் ‘சமத்துவபுர ஜெண்டில்மேன்கள்‘, நவீன பெளராணிகர்கள் இதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கலாம். இதை வருணாஸ்ரமத்துக்கான துவக்கப்புள்ளி என்பதால் (இந்தப்புத்தகத்தில்) குறிப்பிடுகிறேன். மற்ற சாதியக் கடமைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், பெண்களுக்கு எதிரான சதித்திட்டங்களை வாசகர்கள் படித்தறிய வேண்டுகிறேன். ஆங்கில மனுஸ்மிருதிக்கான சுட்டி கீழே உள்ளது; தமிழில் திரிலோக சீத்தாரம் மொழிபெயர்த்த (தமிழினி வெளியீடு என்று நினைக்கிறேன்) மனுஸ்மிருதியும் கிடைக்கிறது. இதைத்தவிர வேறு சில பதிப்புகளும் கிடைக்கின்றன. சரி மனுஸ்மிருதி மாறக்கூடியது. இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம், மூலப்புத்தகமான வேதத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா என்று நண்பர்கள் வினாவலாம். வேதங்களில் பழமையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவது ரிக். அதன்கண் உள்ள புருச சூக்தத்தில் (PURUSHA SUKTA, Verse 13) காணப்படுவதே மனுவினால் எடுத்தாளப்பட்டுள்ளது. 13 வது சம்ஹிதை இது.

brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: |

ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 ||

(asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:)

the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:)

Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were

made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet

(shoodro) were the servants (ajAyata) born.

அதாவது மாறக்கூடிய ஸ்மிருதியும், மாறாத ஸ்ருதியும் (வேதமும்) மனிதனை பிறப்பினால் பிரிக்கவே செய்கின்றன. மனிதனின் பலவேறு தொழிகளின் பேரில் இப்படி தோற்றம் பெற்றதாக யாரும் இதை ‘திரிக்க‘ முடியாது. ஏனெனில் உலகம் தோற்றம் பெறுகையிலேயே மனிதன் இப்படியான சாதிகளாக தோற்றம் பெறுவதாக மனுவும், புருஷ சூக்தமும் சொல்லுகின்றன. ஆனால் அறிவியலை நம்புகிறவர்கள் பரிணாமவளர்ச்சியில் மனிதனாகி, காட்டாளாகி, சமூகமாய் மாறுகையில் தான் இந்த வேலைஅடிப்படை பிரிவினைகள் தோன்றியிருக்கமுடியும் என்று அறிவார்கள். ஆனால் புருஷ சூக்தம் மற்றும் மனுவின் நோக்கம் மனிதனை அவனது சாதி அடிப்படையிலான பிறப்பே மிக இயல்பானதாகவும், கடவுளின் திட்டமாகவும், மாற்ற முடியாததாகவும் காட்டவும் அதனடிப்படையில் சாதியச் சுரண்டலை காலங்காலமாக நிலைநிறுத்தவும்தான் என்பதை கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த, நேர்மையான அணுகுமுறை கொண்ட எவரும் புரிந்துகொள்ள முடியும். இதனால் தான் வர்ணாசிரமத்தை இத்தனை ஆழமாகவும், ஆண்டுகளாகவும் இந்திய சமூகத்தில் காப்பாற்ற முடிந்தது. சமயச் சீர்திருத்தக்காரர்களால் (இராமானுஜர் போன்ற) நிலையான எந்த சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்குக் காரணமும் அவர்கள் வருணாசிரமத்தின் வேராகிய வேதத்தை மறுக்காததுதான்; ஒழிக்காததுதான். சரி, இந்த வேதமும், மனுவும் ஒழியட்டும். பதிலாக இன்று இந்துக்களின் புனித நூலாக காட்டப்படும் பகவத் கீதையாவது சுத்தமாக இருக்கிறதா என்றால் அதுவும் வருணாஸ்ரமத்தை வலியுறுத்துவதாயும், சாதிக்கலப்பு நடந்துவிடக்கூடாதென பதைப்பதாகவும் இருக்கிறது. பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலேயே பிறப்பதாக பெண்களைப்பற்றிய கருத்தை விதைக்கிறது. இது தொடர்பான ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளும், அதைத்தொடர்ந்து நான் எனது பதிவில் எழுதிய கீதையின் பெயரில் சில கட்டுரைகளும் படிக்கத் தக்கன. தவிர வேதமும், மனுவும் சொல்லும் சம்ஸ்கிருத மேலாதிக்கத்தையும், மற்ற நீச பாசைகளைப்பற்றிய குறிப்புகளையும் அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்:

வைணவத்திலும் சரி… சைவத்திலும் சரி… தமிழ் இப்படி தள்ளிவைக்கப் பட்டதற்கு என்ன காரணம்?இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது.

சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள்.

“தஸ்மாது ப்ராம்மணேன

நம்லேச்சித வை

நம அபபாஷித வை…”

இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை.

அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்சபாஷை… அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள். எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மை யற்ற பாஷை… என்கிறது வேதம். இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார்.

“…தயோ ரேவ அந்ததம் கிரியோஹா

தேவ நதியோஹா யதந்தரம்

தம்தேவ நிர்மிதம் தேசம்

ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா…”

அதாவது… விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்… கங்கை, யமுனை நதிகள் பாயும்… இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும்தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத்தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். அதனால்… இந்த பகுதியை தவிர… மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை….2. இன்றைய இந்து மதமாகக் காட்டப்படுகிற நிறுவனத்துக்கு வருணாசிரமத்தை, மனுநீதியை காப்புற்றும் முனைப்பும், அதை வலியுறுத்தும் வேலைத்திட்டமும் இருக்கிறதா? இந்தகேள்விதான் முதல் கேள்வியைவிட முக்கியமானது. இதற்கான பதிலே இந்துமதத்தை அழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என சொல்லவைக்கிறது. இந்து மதமென்ற இன்றைய நிறுவனம் பலம் பெறும்போது அது வருணாசிரமத்தை, சாதிய படிநிலையை, பெண் அடிமைத்தனத்தை கண்டிப்பாக முன்னெடுக்கும், வலியுறுத்தும். வருணாசிரமத்தை நடைமுறைப்படுத்த அது எந்த வழிமுறையையும் கையாளத் தயங்காது என்பது பலமுறை நிரூபனமான ஒன்று. சமூக வரலாற்றை கூர்ந்து நோக்கும் எவரும் இன்றைய நவீன உலகில் கூட இதைச் செய்யத்தயங்காத இந்துத்துவ சக்திகளின் செய்லபாடுகளை அறியலாம். இது எங்கெங்கே எந்த விதத்தில் நடந்தது? பட்டியல் போட்டுக்காட்டுக என்று நண்பர்கள் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அவர்களும் தங்கள் அக்கறையின் பேரில் கொஞ்சம் உழைக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதத்துக்கு வருணாசிரமத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய கடமையும் இருந்தது, அதற்காக மறைந்த சந்திரசேகர சரஸ்வதியின் தலைமையில் அது இந்திய துணைக்கண்ட (பாகிஸ்தானை உள்ளடக்கிய) அளவில் பாரிய முயற்சியை முன்னெடுத்தது என்பதை இங்கு சொல்லவிரும்புகிறேன். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த காரணத்தால் தான் அது நடக்காமல் போனது. அது மட்டும் நடந்திருந்தால் சுதந்திர இந்தியாவில் வருணாசிரமம் சட்டபூர்வமாக (இன்று மட்டுமென்ன வாழுகிறது!) ஆக்கப்பட்டு சாதியச் சுரண்டலும் பெண்ணடிமைத்தனமும் செய்யபட்டிருக்கும். இதை வெகு முனைப்போடு செய்ய இந்திய அளவில் தமது திறனனைத்தையும் பயன்படுத்தியதால் தான் அவரை ‘மகா பெரியவர்‘ என்று அழைக்கிறார்கள் போலும். இதை யாரோ திகவில் இருந்தவரோ, பெரியார் அடிப்பொடியோ சொல்லவில்லை. வருணாசிரமத்தை சட்டப்பூர்வமாக்க மகாபெரியவரின் ஆக்ஞையை ஏற்று உழைத்த அக்னிஹோத்ரம் இராமாஜ தத்தாசாரியார் நக்கீரனில் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற கட்டுரைத் தொடரிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். (அது இப்போது நூலாக வெளிவந்துள்ளது). வருணாசிரத்தை சட்டப்பூர்வமாக்க ஆடுதுறையில் நள்ளிரவில் அந்தணர்களைக் கூட்டி மீட்டிங் போட்டு செயல்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘மகா பெரியவர்‘. தாத்தாச்சாரியார் எழுதுகிறார்…

இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வருவோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த நேரத்தில்… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது. அதாவது… நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அது பற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக… எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக… பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation இந்த குழு வந்த காலகட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம்.

“ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா… இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ… அதனால… இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட… சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும்… என்ன சொல்றேள்?….”-என மகாபெரியவர் கேட்க… சிஷ்யாளோ… ‘ஸ்வாமி… இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும்… சில விஷயங்களை மாத்தறது நல்லதுதானே…’ என்றனர். ஆனால்… சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார். உட்கார்ந்திருந்த என்னிடம்…`தாத்தாச்சாரீ… நீரும் நானும் தான் மிச்சம்’ என்றார்.

என்ன ஸ்வாமீ?… என்றேன்.

“நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக்கூடாது. நம் சம்ப்ரதாயத்தை காப்பாத்தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைதான் செலக்ட் பண்ணியிருக்கேன்…” என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை… `நீர் இதுக்காக டெல்லிவரை போக வேண்டியிருக்கும்…’ அதுக்கு முன்னால… டெலிகேஷனுக்கு நம் அபிப்பிராயத்தை தந்தி அடிக்கணும்.

அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் தந்தி வாசகங்களை தயார் பண்ணினோம். ஒன்றா… இரண்டா?… நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றால், ரொம்ப கஷ்டம். ஏனென்றால், பெரிய பெரிய நகரங்களில் தான் தந்தி ஆபீஸ் இருக்கும். ஒரு தந்தி என்றால் அடித்து விடலாம். நூறு தந்திகள். ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக் கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்பவேண்டும். `பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாது’ என்பதுதான் தந்தி வாசகம். இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம். 100 தந்திகள்… அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக் கொண்டார். நான் உதவி செய்தேன். தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த மகாபெரியவர், `நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும்… அதை நீர்தான் பண்ணணும்’ என்றார்.

அப்போது… `பார்லிமெண்ட் டெலிகேஷன்’ மெம்பர்கள் பத்திரிகைக் கார்யாலயங் களுக்கெல்லாம் விஜயம் செய்து… ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பல பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன. அந்த வகையில்… சென்னைக்கு வந்தது பார்லிமெண்ட் டெலிகேஷன். அன்று தேஸத்தின் மிக முக்கிய பத்திரிகையான `தி ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது. இதையறிந்த மகாபெரியவர்… உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார். நானும் `ஹிண்டு’ பத்திரிகை ஆபீசுக்குப் போனேன். அப்போது… `ஹிண்டு’வின் எடிட்டராக இருந்த சிறீ.கே. சீனிவாஸன் என்னை பார்லிமெண்டரி டெலிகேஷனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால் `இவர் மதாச்சாரியார்களின் பிரதிநிதி’ என்று.

டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரியாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம்.

நான் முதலில் 100 தந்தி விடயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். ‘oh’ என ஞாபகப்படுத்திக் கொண்ட சோரன்சன்… ‘We meet tonight’ என்றார்.

அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சன்னை சந்தித்தேன். பத்து மணி ராத்திரிப் பொழுதில் எனக்கும், சோரன்சன்னுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன்.

சோரன்சன்: Welcome. What do you want?

நான்: We lives in India. But havings not any rights to follow our religion. We must need freedom to follow our “Dharma”.

சோரன்சன்: Oh… it is very serious matter… give me a memorandam and meet me in Delhi என்றார்.

நான் உடனே கும்பகோணம் விரைந்து மகாபெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள் சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு… “வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’’ என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம். டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம். அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன்… மெமோரண்டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்துவிட்டோம். பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீடு, பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன்.

`வர்ணாசிரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தைப் பார்லிமெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள்.

இதன் பிறகு… பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித்தோம். மெமோரண்டம் கொடுத்தோம். அவர்களோ “உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’’ என சொல்லி விட்டார்கள். சரி… என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். அவர்… மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு… “சனாதன மதத்தைப்பற்றியும் மடங்களைப்பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப் பணிக்கோ அவர்கள் முன்வரவில்லை.

முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்…’’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல். நான்… `பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரத தேசம் உருவாவதால் அவர்கள் பொதுப் பணிகளை நிறைவேற்றுவார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்… பட்டேல் ஒப்புக் கொள்ளவில்லை. இதை மகாபெரியவரிடம் சொன்னபோது… `ஆமாம் இது முழுவதும் உண்மைதான்’ என்றார். அடுத்து பண்டிட் நேருஜியை பார்த்தேன். ……………

ஏதோ நேரு உறுதியாக இருந்ததால் பிழைத்தோம். அப்புறமும் இந்து மடங்களின் உரிமைகளைக் காக்க (அதாவது வருணாசிரமத்தை அவை வலியுறுத்த இருக்கும் சுதந்திரத்தை, அதிகாரத்தை காக்க) அவர் நாடளாவிய மடாதிபதிகளின் கூட்டமொன்றைக் கூட்டினார். ஆனால் அந்த நேரத்தில் அவ்வளவு விழித்துக்கொள்ளாத வடநாட்டைச் சேர்ந்த மற்ற மடாதிபதிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இப்படி நிறைவேறாமல் போன வருணாசிரமத்தை மீண்டும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றத்தான் பஜகவும் RSS உயிரைக்கொடுத்து (எடுத்து) உழைக்கின்றன.

உயிரைக்கொடுத்துஎடுத்துஉழைக

  • Like 2
Link to comment
Share on other sites

  • 17 years later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

என் புரிதல்

தாந்திரிகம் / தாந்திர வழிபாடு]:


https://www.facebook.com/groups/978753388866632/permalink/1028438713898099/


"வேதம் & புராணம்":

https://www.facebook.com/groups/978753388866632/permalink/1152979954777307/


சாதி வேறுபாடு

கீதையில் கிருஷ்ணன்


चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३)
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஸ்லோகம் 13)

குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது என்கிறார். கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்ற எண்ணம் ஆத்திக வாதிகளிடம் நிலைத்துவிட்டது. அது இன்று குறைந்து கொண்டு வந்தாலும், அது முற்றிலும் மாறியதாக இல்லை என்பதே உண்மை.


 يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏‏
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் என்கிறது குரான் வசனம்.  

குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. 

சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை.இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை/இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்/கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார்.ஒரு சமயம் என்பது நீதி,அன்பு, மானிடம்,சம உரிமை என்பனவற்றினை முலமாக, அடிப்படையாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை,இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல்,அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிடமும் ஒரே தன்மை,நிலைபாட்டை உடையதாக இருக்க வேண்டும்.எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு.இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது.இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை.இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது.இன்று சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று கூறுவரோ? 

ஆதி தமிழில், சாதி உண்டா??


ஆதி தமிழில் மதமும் இல்லை, சாதியும் இல்லை.
ஜா = ஜனித்தல் ( பிறத்தல் ); ஜனனம் என்ற சொல்லில் வருவது ஜாதி!

பத்ம + ஜா = பத்மத்தில் (தாமரையில்) பிறந்தவள்.
ஷைல + ஜா = சைலத்தில் (மலையில்) பிறந்தவள்
பூர்வ + ஜா = முன்பு பிறந்தவள்/ன்
சுப்ர + ஜா = நன்கு பிறந்தவள்/ன்

ஜாதி / जाति = சமஸ்கிருதச் சொல்! அச்சொல்லை, பகவத் கீதை ' அத்தியாயம்' 1:42 சுலோகத்திலேயே நாம் காணலாம்.

'உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத'

ஜா என்ற வடசொல், ஜனித்ததால் வருவதையே குறிக்கும்! தமிழில் கிரந்தம் நீக்கி எழுதுவதால், ஜா = சா ஆகி, சாதி என்று எழுதுகிறோம்
.
ஆனால், நம் தமிழில் கூட ஒரு 'சாதி' உண்டு! ஆனால் அது ஜாதி அல்லாத சாதி; 

சாதிமல்லி, சாதிக்காய், சாதிமுத்து, சாதிப்பொன் - இவையெல்லாம் என்ன சாதி?

நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய
( தொல்காப்பியம் மரபியல் 42)

கடுப்பு உடை பறவை சாதி அன்ன ( பெரும்பாணாற்றுப்படை 229 )

நீர் வாழும் மீன்களுக்கு ஏது சாதி? பறவைகளுக்கு ஏது சாதி? சாதி மரம் என்று தேக்கு மரத்தைத் சொல்வது ஏன்? சாதிக்காய் எனும் பெயர் ஏன்?

தமிழில், சாதி = அஃறிணைச் சிறப்பைக் குறித்து வரும் சொல்!
சாதித்தல் = சிறப்பை அடைதல் அல்லவா?

அதுபோலவே, சிறப்பான காய் = சாதிக்காய்; சிறப்பான மல்லி = சாதிமல்லி, நீர் வாழ் சாதியில், சிறப்பான முத்து = சாதி முத்து!

தமிழ்ச்சாதி (அஃறிணை) வேறு; 
சமஸ்கிருத ஜாதி (உயர்திணை) வேறு! 

ஆனால் வடநெறி, தமிழகத்தில் ஊறியபின், ஜாதி = சாதி ஆகிவிட்டது.

நால் வகை சாதியும், நலம் பெற நோக்கி - ( சிலப்பதிகாரம், வேனில் காதை 41)

நாமம் சாதி.. கிரியையின் அறிவது ஆகும் -
( மணிமேகலை, சமயக் கணக்கர் 23 )

தொல்காப்பிய / சங்க இலக்கியத்தில் இல்லாத 'ஜாதி' , சிலம்பின் காலத்தில் வரத் துவங்கிவிட்டது. சாதி என்ற பழைய அஃறிணைச் சொல் 'ஜாதி / சாதி' என்ற புதிய உயர்திணைச் சொல்லாகவும் மாறிவிட்டது.

நன்றி 

Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2024 at 19:45, kandiah Thillaivinayagalingam said:

என் புரிதல்

தாந்திரிகம் / தாந்திர வழிபாடு]:


https://www.facebook.com/groups/978753388866632/permalink/1028438713898099/


"வேதம் & புராணம்":

https://www.facebook.com/groups/978753388866632/permalink/1152979954777307/


சாதி வேறுபாடு

கீதையில் கிருஷ்ணன்


चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३)
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...  (அத்யாயம் 4 - ஸ்லோகம் 13)

குணம் மற்றும் கர்மங்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள் என்னலே படைக்கப் பட்டது என்கிறார். கடவுளே படைத்திருக்கிறார் என்றால் அதை அழித்தொழிக்க முடியாது என்ற எண்ணம் ஆத்திக வாதிகளிடம் நிலைத்துவிட்டது. அது இன்று குறைந்து கொண்டு வந்தாலும், அது முற்றிலும் மாறியதாக இல்லை என்பதே உண்மை.


 يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏‏
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன் என்கிறது குரான் வசனம்.  

குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை. 

சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று.`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை.இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை/இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்/கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார்.ஒரு சமயம் என்பது நீதி,அன்பு, மானிடம்,சம உரிமை என்பனவற்றினை முலமாக, அடிப்படையாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை,இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல்,அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிடமும் ஒரே தன்மை,நிலைபாட்டை உடையதாக இருக்க வேண்டும்.எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு.இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது.இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை.இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது.இன்று சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று கூறுவரோ? 

ஆதி தமிழில், சாதி உண்டா??


ஆதி தமிழில் மதமும் இல்லை, சாதியும் இல்லை.
ஜா = ஜனித்தல் ( பிறத்தல் ); ஜனனம் என்ற சொல்லில் வருவது ஜாதி!

பத்ம + ஜா = பத்மத்தில் (தாமரையில்) பிறந்தவள்.
ஷைல + ஜா = சைலத்தில் (மலையில்) பிறந்தவள்
பூர்வ + ஜா = முன்பு பிறந்தவள்/ன்
சுப்ர + ஜா = நன்கு பிறந்தவள்/ன்

ஜாதி / जाति = சமஸ்கிருதச் சொல்! அச்சொல்லை, பகவத் கீதை ' அத்தியாயம்' 1:42 சுலோகத்திலேயே நாம் காணலாம்.

'உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத'

ஜா என்ற வடசொல், ஜனித்ததால் வருவதையே குறிக்கும்! தமிழில் கிரந்தம் நீக்கி எழுதுவதால், ஜா = சா ஆகி, சாதி என்று எழுதுகிறோம்
.
ஆனால், நம் தமிழில் கூட ஒரு 'சாதி' உண்டு! ஆனால் அது ஜாதி அல்லாத சாதி; 

சாதிமல்லி, சாதிக்காய், சாதிமுத்து, சாதிப்பொன் - இவையெல்லாம் என்ன சாதி?

நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய
( தொல்காப்பியம் மரபியல் 42)

கடுப்பு உடை பறவை சாதி அன்ன ( பெரும்பாணாற்றுப்படை 229 )

நீர் வாழும் மீன்களுக்கு ஏது சாதி? பறவைகளுக்கு ஏது சாதி? சாதி மரம் என்று தேக்கு மரத்தைத் சொல்வது ஏன்? சாதிக்காய் எனும் பெயர் ஏன்?

தமிழில், சாதி = அஃறிணைச் சிறப்பைக் குறித்து வரும் சொல்!
சாதித்தல் = சிறப்பை அடைதல் அல்லவா?

அதுபோலவே, சிறப்பான காய் = சாதிக்காய்; சிறப்பான மல்லி = சாதிமல்லி, நீர் வாழ் சாதியில், சிறப்பான முத்து = சாதி முத்து!

தமிழ்ச்சாதி (அஃறிணை) வேறு; 
சமஸ்கிருத ஜாதி (உயர்திணை) வேறு! 

ஆனால் வடநெறி, தமிழகத்தில் ஊறியபின், ஜாதி = சாதி ஆகிவிட்டது.

நால் வகை சாதியும், நலம் பெற நோக்கி - ( சிலப்பதிகாரம், வேனில் காதை 41)

நாமம் சாதி.. கிரியையின் அறிவது ஆகும் -
( மணிமேகலை, சமயக் கணக்கர் 23 )

தொல்காப்பிய / சங்க இலக்கியத்தில் இல்லாத 'ஜாதி' , சிலம்பின் காலத்தில் வரத் துவங்கிவிட்டது. சாதி என்ற பழைய அஃறிணைச் சொல் 'ஜாதி / சாதி' என்ற புதிய உயர்திணைச் சொல்லாகவும் மாறிவிட்டது.

நன்றி 

தகவலுக்கு நன்றி 

என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது. 

Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

தகவலுக்கு நன்றி 

என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது. 

Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும். 

 

Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால்

சைவ சித்தாந்தம் மிக மிக அழுத்தமாக தெளிவாக விடை கூறியுள்ளது 
உதாரணமாக 

 புறநானூறு 192,இல் கணியன் பூங்குன்றன்,

"சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;"

என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதி தன்று, கரு விற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான். 

அத்துடன்,பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கி யார் அடித்துச் சொல்கிறார்.மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று. 

"கறந்தபால் முலைப்புகா, 
கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, 
இறந்தவர் பின் பிறப்பதில்லை,
இல்லை, இல்லை இல்லையே!" 

அதே போல,கம்பராமாயணத்தில்,

"நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா" 

என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிர்ரை காக்க முனையேன்.ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன்.

அப்படி என்றால், அதுமட்டும் அல்ல எம்  சிந்தனை, அனுபவம், வரலாறு [புராண மற்றும் அவைபோன்ற சமய கருத்துக்களை தவிர] போன்றவற்றையும் சேர்த்து அலசி உண்மையை பாருங்கள் 
சைவ சித்தாந்தம் அதற்கு துணை போகும் 

மேலும் சில உதாரணம் கீழே 

இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான,  பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என


"நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி"


என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை கூறுகிறது 


"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று."    

அப்படி என்றால், அதை அனுபவரீதியாக விளங்கிக்கொள்ள முடியும் என்றால்

எதற்கு வேண்டும் 

ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடமான  வேத மதம் ???
பொய்களை இன்னும் வாழவைக்கவா ????

Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.