Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுங்கள்!

Featured Replies

ஏ-9 பாதை திறக்க மாமனிதர் ரவிராஜா குடும்பத்தினர் வேண்டுகோள்: மகிந்த மௌனம்

[சனிக்கிழமை, 11 நவம்பர் 2006, 18:21 ஈழம்] [ம.சேரமான்]

20061111003.jpg

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜாவுக்கு இன்று சனிக்கிழமை பெருந்திரளானோர் கண்ணீருடன் இறுதி வணக்கம் செலுத்தினர். அவரது உடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள் குறித்து இன்று சனிக்கிழமை மாலை மகிந்த எதுவித பதிலும் அளிக்கவில்லை.

மாமனிதர் ரவிராஜின் உடல்பேழை அவரது மார்னிங்ரவுன் இல்லத்திலிருந்து பொரளையில் உள்ள ஏ.எஃப்.றேமண்ட்ஸ் இறுதிநிகழ்வு இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மாமனிதர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் பணியாற்றிய மற்றும் மகள் பிரவீணா ரவிராஜ் படித்து வந்த பாடசாலைகளின் மாணவர்கள் பெருந்திரளானோர் இறுதிவணக்க நிகழ்வில் பங்கேற்றனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஸ்ரப், மேற்கு மாகாண ஆளுநர் அலாவி மௌலானா, ஐக்கிய தேசியக் கட்சியின் கரு ஜயசூர்ய, மிலிந்த மொறகொட உள்ளிட்டோரும் இறுதி வணக்கம் செலுத்தினர்.

மாமனிதர் ரவிராஜின் உடலை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ஏ-9 பாதையை திறக்க வேண்டும் என்று மங்கள சமரவீரவிடம் குடும்பத்தினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனால் இன்று மாலை எதுவித பதிலையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் மகிந்தவுக்கு இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

படங்கள்: ரொய்ட்டர்ஸ்/ ஏ.எஃப்.பி

http://www.eelampage.com/?cn=29713

  • தொடங்கியவர்

பின்னர் வந்த செய்திகளின் படி உலங்குவானூர்தி வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது!

ரவிராஜ் தனது நண்பன் என்று கூறிய மகிந்த, நண்பனின் இறுதி ஆசையாகிய ஏ-9 பாதையை திறந்து ஒரு நல்ல நண்பனாக நடந்து கொள்வானா?

ரவிராஜ் நேசித்த மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு பாதை திறக்கப்பட்டு அவரின் ஆத்மா சாந்தியடைய உதவுவானா?

சிரிலங்காவுக்கு உதவி செய்யும் நாடுகளே மகிந்தவுக்கு அழுத்தம் கொடுங்கள்.

அறிக்கை விடும் அரசியல்வாதிகளே மகிந்தவுக்கு ஆலோசனை தெரிவியுங்கள்.

சமாதான நல்லெண்ணம் என்று ஒன்றிருந்தால் அதை வெளிப்படுத்துவதற்கு இது நல்ல சந்தர்ப்பம்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பினரே வெளிப்படையாக அறிக்கை வெளியிடுங்கள்.

மரணத்தை வைத்து அரசியல் நடத்துவது அவரை அகெளரவப்படுத்துவதாக கேகெலிய தெரிவித்துள்ளான்.

அவர் ஒரு அரசியல்வாதி அந்த அரசியலுக்காகவே அவர் கொல்லப்பட்டார். அவரின் அரசியல் அபிலாசையை நிறைவேற்றுவது அவரை கெளரவப்படுத்துவதாகவே அமையும்.

  • தொடங்கியவர்

11_11_06_raviraj_06.jpg

மாமனிதர் நடராஜா ரவிராஜின் இறுதி நிகழ்வுகள் புதன்கிழமை சாவகச்சேரில் இடம்பெற ஏற்பாடு.

சனி 11-11-2006 20:07 மணி தமிழீழம் [செந்தமிழ்]

மாமனிதர் நடராஜா ரவிராஜின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை சாவகச்சேரியில் இடம்பெறுகின்றது. மாமனிதர் ரவிராஜின் புகழுடல் கொழும்பு பொரள்ளையில் றேமன் மலர்சாலையில் வைக்கப்பட்டு நிகழ்வுகள் அஞ்சலி இடம்பெறுகின்றது.

மாமனிதரின் புகழுடலுக்கு அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பெரும் எண்ணிக்கையானோர் மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

(மேலதிக இணைப்பு) ஏ-9 பாதை திறக்க "மாமனிதர்" ரவிராஜ் குடும்பத்தினர் வேண்டுகோள்: மகிந்த மௌனம்

"தன்னை யாழ்ப்பாணத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று "மாமனிதர்" ரவிராஜின் இறுதி ஆசை. அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். "மாமனிதர்" ரவிராஜின் பிறப்பிடமான சாவகச்சேரி முகமாலை முன்னரங்க காவலரணுக்கு அண்மித்து இருப்பதால் ஏ-9 பாதையூடாக கொண்டு செல்வதே இலகுவானது என்றும் சுட்டிக்காட்டினோம். பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ஆராய வேண்டியதிருப்பதாக மகிந்த ராஜபக்ச கூறினார். இதுவரை பதில் அளிக்கவில்லை. மீண்டும் நல்லெண்ண அடிப்படையில் ஆராய வேண்டும் என்று மகிந்தவுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என்றார் மாவை சேனாதிராஜா.

"மாமனிதர்" ரவிராஜின் படுகொலைக்கு கிழக்கிலங்கை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

"அநியாயமான இத்தகைய படுகொலைகளை அரசாங்கம் தடுக்க வேண்டும். தனது சமூகத்தின் விடுதலைக்காக போராடியவர் ரவிராஜ். முஸ்லிம் மக்களுடன் நெருங்கிய தொடர்பினை அவர் பேணிவந்தார். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே "மாமனிதர்" ரவிராஜ் படுகொலை மற்றும் வாகரை படுகொலைகளைக் கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பொது அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

ரவிராஜின் உடலை ஹெலிக்கொப்டரில் யாழ் கொண்டு செல்ல அரசு உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களின் பூதவுடலை, தடைப்பட்டுள்ள ஏ-9 பாதை ஊடாக அவரது சொந்த ஊரான யாழ் தென்மராட்சியில் உள்ள சாவகச்சேரிக்கு கொண்டு செல்வதற்கு அவரது குடும்பத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசாங்கத் தரப்பினர் நிராகரித்துள்ளனர்.

ஆயினும் அவரது பூதவுடலை வான் வழியாக அங்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்துதர அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் இது தொடர்பான வேண்டுகோள் அரச தரப்பிடம் விடுக்கப்பட்டதாக கூறிய இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக் வெல்ல அவர்கள், ஆயினும் ஏ-9 பாதையூடாக அங்கு செல்வதில் பல சிரமங்கள் இருப்பதாகவும், ஆயினும் வான் வழியாக உலங்கு வானூர்தி மூலம் அங்கு கொண்டு செல்ல ஒழுங்கு செய்து தர அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.