Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி Jaffna central vs St johns (படங்கள் இணைப்பு)

Featured Replies

கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி

 

மதுபானம் அருந்திய நிலையில் வருபவர்கள் மைதானத்துள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டி நடைபெறவுள்ளதாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பிரதி அதிபர் வி.எஸ்.டி.துஸிதரன் தெரிவித்தார்.

 

வடக்கின் மாபெரும் போரின் ஏற்பாடுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வடக்கின் மாபெரும் போர் எதிர்வரும் மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறும். இம்முறை போட்டியும் ஏயார்டெல் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும்.

 

இம்முறை போட்டிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத வகையில் பொலிஸார் பாதுகாப்பு வழங்குவர். மதுபானம் அருந்தியவர்கள், போதைவஸ்து பாவித்தவர்கள் மைதானத்துக்குள் நுழைய முடியாது. போட்டி நடைபெறும் போது மைதானத்துக்குள் எவரும் நுழைய முடியாது.

போட்டி நடைபெறும் போது பாடசாலை சீருடை அணிந்த மாணவர்கள்  வீதிகளில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் கப் கலக்ஸன் என்ற பெயரில் வர்த்தக நிலையங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் மாணவர்கள் பணம் வசூலித்தல் இம்முறை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

 

இரண்டு கல்லூரிகளின் ஒப்புதலின் அடிப்படையில் போட்டியின் நடுவர் நியமிக்கப்படுவார். போட்டிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல், சர்வதேச விதிமுறைகளுக்கமைய விளையாட்டின் புனிதம், பண்பு பேணப்பட்டு போட்டி நடத்தப்படும் என இரண்டு கல்லூரிகளின் அதிபர்களும் ஒப்பமிட்டு அறிக்கை தயாரித்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி போட்டிகள் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/140729#sthash.1QzNuGGd.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வடக்கின் மாபெரும் போர்; அனல்தெறிக்கும் அதிரடி ஆட்டம் ஆரம்பம்

juczg1.jpg

 

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 109 ஆவது கிரிக்கெட் போட்டிகள், எதிர்வரும் 5ஆம், 6ஆம் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

 

கிரிக்கெட் போர் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கடந்த ஆண்டு, இரண்டு கிரிக்கெட் போர்களிலும் நடைபெற்ற குழப்பங்கள், கொலை, சச்சரவுகள் தான்.

கிரிக்கெட் என்பதன் மகத்துவத்தை கடந்த வருட சம்பவங்கள் குலைத்திருந்தன. கனவான்களின் விளையாட்டில் கனவான்கள் தங்கள் திறமைகளை மைதானத்தில் நிலைநிறுத்த, கனவான்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வெளியில் இருந்தவர்கள் போட்டியை குழப்பினார்கள்.

 

கடந்த வருடம் நடைபெற்ற பொன் அணிகள் போரில் இடம்பெற்ற கொலையை அடுத்து, அந்தப் போட்டி அப்படியே கைவிடப்பட்டுள்ளது.

வடக்கின் மாபெரும் போரில் கடந்த வருடம் நடுவரால் கொடுக்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பில் இரு அணியினரின் ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் போட்டி இடைநடுவில் கைவிடப்பட்டு, பின்னர் இரு அணிகளும் மேற்கொண்ட சமசரத்தின் அடிப்படையில் அத்தருணத்தில் வெற்றியின் அருகில் நின்றிருந்த சென்.ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

 

இம்முறை போட்டிகள் கனவான்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், வரலாற்று பாரம்பரியம் கொண்ட கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை கட்டிக்காப்பதற்காகவும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

 

வடக்கின் மாபெரும் போரானது 1901ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த கிரிக்கெட் போட்டியானது 108 போட்டிகளை கடந்து வந்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் சில போட்டிகள் நடைபெறவில்லை.

 

இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகள் முடிவு தெரியாத நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டும் உள்ளன.

 

1993ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு பெற்ற 354 ஓட்டங்கள், ஒரு இனிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்டமாகவுள்ளது. சென்.ஜோன்ஸ் கல்லூரி 1999 ஆம் ஆண்டு 6 விக்கெட்டுக்கள் இழப்புக்குப் பெற்ற 326 ஓட்டங்கள் அந்த அணியின் அதிகூடிய ஓட்டங்களாக இருக்கின்றது. இதுவரையில் 18 சதங்கள் பெறப்பட்டுள்ளதுடன், 1990ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் எஸ்.சுரேஸ்குமார் பெற்ற 145 ஓட்டங்கள் அதிகூடிய தனிநபர் ஓட்டமாகவுள்ளது.

1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வி.சண்முகம் 26 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்க்களை கைப்பற்றிபற்றியமை இதுவரையில் சிறந்த பந்துவீச்சாக காணப்படுகின்றது. 1950 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்த ஈ.ஜி.தேவநாயகம் 33 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்களை கைப்பற்றியமை அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாகவுள்ளது.

பல சாதனைகள் நிகழ்த்தப்பட்ட வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இவ்வருடம் நடைபெறவுள்ள 109ஆவது போட்டி, அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்.ஜோன்ஸ் கல்லூரி

 

5 வருட அனுபவம் கொண்ட சஜீந்திரன் கபில்ராஜ் தலைமையில் களமிறங்கும் இந்த அணியில் ரவீந்திரன் லோகதீஸ்வரன் (உபதலைவர்), பரமானந்தம் துவாரகசீலன், அருள்நந்தன் கானாமிர்தன், மணிவண்ணன் சிந்துர்ஜன், இராஜசிறிபிரிய பிரிசங்கர், செபமாலைப்பிள்ளை ஜெனி பிளமிங், வசந்தன் யதுசன், அமரசேன ஹெர்ஓல்ட் லஷ்கி, தேவராஜா கஜீபன், கனகரட்ணம் கபில்ராஜ், ஜெயக்குமார் கிசாந்துஜன், திலகராசா சிவதர்சன், சந்திரமோகன் தேவபிரசாந்த், றொனி ஷெலுமில், சிவஞானம் டினோஜன், அன்ரோனிப் பிள்ளை கிசஜந்தன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அணியின் பயிற்றுநராக பி.லவேந்திரா உள்ளார்.

மட்டுப்படுத்தப்படாத ஓவர்களுடன் 2 நாட்களை கொண்ட 15 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி விளையாடியது. இதில் 11 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியடைந்ததுடன் 2 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. பெறப்பட்ட 11 வெற்றிகளில் 7 இனிங்ஸ் வெற்றிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைவிட 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்றது,

 

பரமானந்தம் துவாரகசீலன் 4 சதங்களைப் பெற்று மிகவும் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரராக உள்ளார். செபமாலைப்பிள்ளை ஜெனி பிளமிங் 2 சதங்கள், தேவராஜா கஜீபன், மணிவண்ணன் சிந்துர்ஜன் ஆகியோர் தலா 1 சதங்களை பெற்று துடுப்பாட்ட வரிசை பலப்படுத்துகின்றனர்.

கனகரட்ணம் கபில்ராஜ், பரமானந்தம் துவாரகசீலன், தேவராஜா கஜீபன் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகவும், ரவீந்திரன் லோகதீஸ்வரன், அருள்நந்தன் கானாமிர்தன், மணிவண்ணன் சிந்துர்ஜன், இராஜசிறிபிரிய பிரிசங்கர் சுழற்பந்துவீச்சாளர்களாகவும் உள்ளனர். அணித்தலைவர் சஜீந்திரன் கபில்ராஜ் விக்கெட் காப்பாளராக இருக்கின்றார்.
ஒப்பிட்டு ரீதியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி துடுப்பாட்டத்தில் பலமான பணியாகவுள்ளது.

 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 4 வருட அனுபவம் கொண்ட பத்திநாதன் நிரோஜன் தலைமையில் களமிறங்குகின்றது. அணியில் சிவராசா மதுசன் (உபதலைவர்), கணேசலிங்கம் நிதுசன், சிவபாலசுந்தரம் அலன்ராஜ், விஜிலியஸ் டினோஜன், சதாகரன் திரேசன், யோகராசன் கிருபாகரன், சதீஸ் கோமேதகன், உதயகுமார் பிரியலக்ஸன், சுரேஸ் கார்த்தீபன், சிறிஸ்கந்தராஜா கௌதமன், செல்வராசா மதுசன், சிவலிங்கம் தசோபன், அருன்சியஸ் தனுசன், விஜயகுமார் திசோத், கென்றிகுலஸ் தீபன்ராஜ், அமுதநாதர் சில்வெஸ்ரர் ஜெரோசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியின் பயிற்றுநராக எஸ்.சுரேஸ்மோகன் உள்ளார்.

 

மட்டுப்படுத்தப்படாத ஓவர்களுடன் 2 நாட்களைக் கொண்ட 12 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றிபெற்றது. 2 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகள் சமநிலையிலும் நிறைவடைய ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. வெற்றிபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகள் இனிஸ்ங் வெற்றி ஆகும்.

கொழும்பு சென்.பீற்றர்ஸ் அணியுடன் விளையாடிய 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

சிவபாலசுந்தரம் அலன்ராஜ் இந்த வருடத்தில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். யோகராசன் கிருபாகரன் (2 அரைச்சதம்) பத்திநாதன் நிரோஜன் (2 அரைச்சதம்) சதாகரன் திரேசன் (2 அரைச்சதம்) ஆகியோர் 400 ஓட்டங்களுக்கு மேல் இந்தவருடத்தில் பெற்றுள்ளனர்.

 

வலதுகை சுழற்பந்துவீச்சாளரான சிவராசா மதுசன் இவ்வருடத்தில் 67 விக்கெட்டுக்களை வீழ்த்தி? அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக உள்ளார். சதாகரன் திரேசன், யோகராசன் கிருபாகரன் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் அச்சுறுத்தவுள்ளனர். சிவபாலசுந்தரம் அலன்ராஜ் சுழல்பந்துவீச்சில் கலக்கி வருகின்றார். விஜிலியஸ் டினோஜன் விக்கெட் காப்பாளராக இருக்கின்றார்.

 

துடுப்பாட்டத்தில் பலம் பொருந்திய சென்.ஜோன்ஸ் அணியும், பந்துவீச்சில் பலம் பொருந்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் மோதும் இந்த போட்டி, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/140885#sthash.e5FJ7k3e.dpuf

  • தொடங்கியவர்

av0j8i.jpg

  • தொடங்கியவர்

நிதானமான ஆட்டத்துடன் பரியோவான் கல்லூரி
 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி  மற்றும் பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் 'வடக்கின் 109 வது'  பெரும் துடுப்பாட்டமானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .

இதில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லுரி  முதலில் கடத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி யாழ்.பரியோவான் கல்லூரியணி 4 ஓவர்கள் நிறைவில் 9 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.
களத்தில் அணித்தலைவர்  எஸ்.கபில்ராஜ் மற்றும் உப அணித்தலைவர் எம்.சிந்துராஜன் ஆகியோர்  நிதானமான ஆட்டத்துடன் ஓட்டங்களை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=253933901805841279#sthash.zb1xp9Ey.dpuf


1yk8wm.jpg


miihvl.jpg


5tylax.jpg

  • தொடங்கியவர்

யாழ்.பரியோவான் கல்லூரி நிதானமான துடுப்பாட்டம் (173 ஓட்டங்களுக்கு 2விக்கெட்)

 

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .

 

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை 59 ஓவர்கள் நிறைவில் 173 ஓட்டங்களுக்கு  2 விக்கெட்டை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.

மேலும் . பிளமின் 67 ஓட்டங்களுடனும் கானாஅமீர்தன் 17 ஒட்டங்கலுடனும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

 

11t6cn5.jpg

 

15rhbbn.jpg

 

mwwkeh.jpg

 

msp0sj.jpg

 

28mogwk.jpg

 

 

2cd8u4m.jpg

 

28b6yz4.jpg


2lvbcdi.jpg

 

http://yarlsports.com/?p=1051&cat=16


k9c8yx.jpg

 

 

 

2z66ooz.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

0098888_zpscb6tpyzb.jpg

 

00_zpsxkuswffl.jpg

 

0_zpsmo1lmeu9.jpg

 

099_zpsx5l9lmv5.jpg

 

0900999999_zps3s3ldnbw.jpg

 

0999999_zps32pi3t3r.jpg

 

09888_zpst41jnaua.jpg

  • தொடங்கியவர்

பிலமின் அதிரடி சதம் : பரியோவான் கல்லூரி (217ஓட்டங்களுக்கு 3 விக்கெட்)

 

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .

 

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை  69 ஓவர்கள் நிறைவில் 227 ஓட்டங்களுக்கு  3 விக்கெட்டை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.

மேலும் . பிளமின் 102 ஓட்டங்களுடனும் ,துவாரசீலன் 2 ஓட்டங்கலுடனும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

 

http://yarlsports.com/?p=1051&cat=16

  • தொடங்கியவர்

அடித்து விளாசும் பரியோவான் கல்லூரி

 

 

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .

 

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை  81 ஓவர்கள் நிறைவில் 262 ஓட்டங்களுக்கு  5 விக்கெட்டை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.

மேலும் . யதுசன்  6 ஓட்டங்களுடனும் ,துவாரசீலன் 28 ஓட்டங்கலுடனும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

 

http://yarlsports.com/?p=1051&cat=16

  • தொடங்கியவர்

அடித்து விளாசும் பரியோவான் கல்லூரி

 

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை  87 ஓவர்கள் நிறைவில் 300 ஓட்டங்களுக்கு  7 விக்கெட்டை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.

 

http://yarlsports.com/?p=1051&cat=16

  • தொடங்கியவர்

அடித்து விளாசும் பரியோவான் கல்லூரி

 

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .

 

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

 

அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை  87 ஓவர்கள் நிறைவில் 300 ஓட்டங்களுக்கு  7 விக்கெட்டை இழந்த நிலையில்  தனது துடுப்பாட்டத்தை நிறுத்தி யாழ்பாணம் மத்திய கல்லூரி அணியினரை தொடர்ந்து துடுப்பெடுத்தாட பணித்தனர் இதனை தொடர்ந்து நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ள இப் போட்டியில் 301 எனும் வெற்றியிலக்கை கொண்டு யாழ் மத்தியின் மைந்தர்கள் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://yarlsports.com/?p=1051&cat=16

  • தொடங்கியவர்

109th BATTLE OF THE NORTH DAY 01
1ST INNINGS
SJC 300/7d
JCC 9/0 end of day 01.

  • கருத்துக்கள உறவுகள்
battle-of-north-200-news.jpg

யாழ். மத்திய கல்லூரி - சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான வடக்கின் பெரும் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமானது. இன்று இடம்பெற்ற ஆட்டத்தில் சென்.ஜோண்ஸ் கல்லூரி அணி 87 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஜெனி பிளெமிங் 107 ஓட்டங்களைப் பெற்றார்.

   

10 வருடங்களின் பின்னர் வடக்கின் பெரும் போர் கிரிக்கெட் போட்டியில் இம்முறையே சதமடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கபில்ராஜ் 50 ஓட்டங்களையும், ஞானாமிர்தன் 33 ஓட்டங்களையும் துவாரகசீலன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். அதையடுத்து யாழ்.மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாடத் தொடங்கியது.

 

battle-of-north-050315-seithy%20(1).jpg

 

 

battle-of-north-050315-seithy%20(2).jpg

 

 

battle-of-north-050315-seithy%20(3).JPG

 

 

battle-of-north-050315-seithy%20(4).jpg

 

 

battle-of-north-050315-seithy%20(5).JPG

 

 

battle-of-north-050315-seithy%20(6).JPG

 

http://seithy.com/breifNews.php?newsID=127732&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

10 வருடங்களின் பின்னர் வடக்கில் மாபெரும் சதம்

 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக அணியை சேர்ந்த செபமாலைப்பிள்ளை ஜெனிபிளமிங் சதமடித்தார்.

வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் கடந்த 2005 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் அணியின் ஏ.மயூரதன்   122 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் சதம் எதுவும் பெறப்படவில்லை.

 

109 ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வியாழக்கிழமை (05) காலை முதல் நடைபெற்று வருகின்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் பத்திநாதன் நிரோஜன் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார். முதலில்  களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேகரித்தது.

 

அதிரடியாக ஆடி ஜெனி பிளமிங் 196 பந்துகளில் 19 பவுண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களைப் பெற்று, ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்தில் விக்கெட் கொடுக்காமல் ஓட்டங்கள் சேர்த்த சென்.ஜோன்ஸ் அணி, முதல்நாள் ஆட்டத்தின் 3 ஆவது செஸனில் விக்கெட்களை இழந்தது. சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 88 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்று தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

 

சஜீந்திரன் கபில்ராஜ் 50, அருளானந்தம் கானாமிர்தன் 33, பரமானந்தம் துவாரகசீலன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பாக, சிவராசா மதுசன் 22 ஓவர் பந்துவீசி 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், கணேசலிங்கம் நிதுசன், சிவபாலசுந்தரம் அலன்ராஜ்,சதாகரன் திரேசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

- See more at: http://www.tamilmirror.lk/141077#sthash.dulYmrqP.dpuf

  • தொடங்கியவர்

வடக்கின் போரில் 10 வருடங்களின் பின்னர் சாதனை

 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்.பரியோவான் கல்லாரி அணி சார்பாக செபமாலைப்பிள்ளை ஜெனிபிளமிங் சதமடித்தார்.

வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் கடந்த 2005 ஆம் ஆண்டு யாழ்.பரியோவான் கல்லூரி அணியின் ஏ.மயூரதன் 122 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் சதம் எதுவும் பெறப்படவில்லை. 109 ஆவது வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது.

 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் பத்திநாதன் நிரோஜன் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.

முதலில் களமிறங்கிய யாழ்.பரியோவான் கல்லூரி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேகரித்தது. அதிரடியாக ஆடி ஜெனி பிளமிங் 196 பந்துகளில் 19 பவுண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களைப் பெற்று, ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 

http://yarlsports.com/?p=1122&cat=16

  • தொடங்கியவர்

மத்திய மைந்தர்களின் அனல் பறக்கும் ஆட்டம் தொடருமா? :யாழ்.பரியோவான் கல்லூரியின் ஆதிக்கம் நீடிக்குமா?

 

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .

 

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை  87 ஓவர்கள் நிறைவில் 300 ஓட்டங்களுக்கு  7 விக்கெட்டை இழந்த நிலையில்  தனது துடுப்பாட்டத்தை நிறுத்தி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினரை தொடர்ந்து துடுப்பெடுத்தாட பணித்தது.

 

இதனை தொடர்ந்து களமிறங்கிய யாழ்.மத்திய கல்லூரி அணி சற்று முன்னர் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 9 ஓட்டங்களுக்கு எதுவித விக்கெட்டுக்களையும் இழக்காமல் துடுப்பெடுத்தாடிய வேளை  இன்றைய ஆட்டம் நிறைவு பெற்றது.

 

யாழ்.பரியோவான் கல்லூரி அணி சார்பாக  ஜெனி பிளமின் 196 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களும்  அணித்தலைவர் கபில்ராஜ் 143 பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக துடுப்பெடுத்தாடி 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தனர்.

 

யாழ்.மத்திய கல்லூரி அணிசார்பாக மதுசன் 22 ஓவர்கள் பந்த வீசி 77 ஒட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொடுத்தார்.

மேலும் நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப் போட்டியில் இன்னமும் முதல் இன்னிங்ஸில் யாழ்.பரியோவான் கல்லூரி அணியின் இலக்கை பிடிக்க 292 ரன்களை யாழ்.மத்திய மைந்தர்கள் பெறவேண்டி உள்ளது.

 

இதேவேளை நாளைய போட்டியில் இரண்டு அணியும் தமது திறமையும் வெளிப்படுத்துவர்.எனவே நாளைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://yarlsports.com/?p=1051&cat=16

  • தொடங்கியவர்

மேலும் இன்று காலை ஆரம்பமான இரண்டாம் நாள் ஆட்டத்தில்யாழ்.மத்திய மைந்தர்கள் 19.5 ஓவர்கள் நிறைவில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டினை இழந்து தடுமாறுகின்றது.

  • தொடங்கியவர்

இரண்டாம் நாள் ஆட்டத்தில்யாழ்.மத்திய மைந்தர்கள் 25.3 ஓவர்கள் நிறைவில் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டினை இழந்து தடுமாறுகின்றது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இரண்டாம் நாள் ஆட்டத்தில்யாழ்.மத்திய மைந்தர்கள் 38 ஓவர்கள் நிறைவில்72 ஓட்டங்களுக்கு3 விக்கெட்

  • தொடங்கியவர்

தடுமாறும் மத்திய மைந்தர்கள்(100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்

  • தொடங்கியவர்

109th BATTLE OF THE NORTH DAY 02
1ST INNINGS
SJC 300/7d
JCC 136/7

  • தொடங்கியவர்

தடுமாறும் மத்திய மைந்தர்கள்,( 161 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்)

 

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் நேற்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

 

அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை  87 ஓவர்கள் நிறைவில் 300 ஓட்டங்களுக்கு  7 விக்கெட்டை இழந்த நிலையில்  தனது துடுப்பாட்டத்தை நிறுத்தி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினரை தொடர்ந்து துடுப்பெடுத்தாட பணித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய யாழ்.மத்திய கல்லூரி அணி சற்று முன்னர் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 9 ஓட்டங்களுக்கு எதுவித விக்கெட்டுக்களையும் இழக்காமல் துடுப்பெடுத்தாடிய வேளை  நேற்றைய ஆட்டம் நிறைவு பெற்றது.

 

யாழ்.பரியோவான் கல்லூரி அணி சார்பாக  ஜெனி பிளமின் 196 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களும்  அணித்தலைவர் கபில்ராஜ் 143 பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக துடுப்பெடுத்தாடி 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தனர்.

 

யாழ்.மத்திய கல்லூரி அணிசார்பாக மதுசன் 22 ஓவர்கள் பந்த வீசி 77 ஒட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொடுத்தார்.

மேலும் இன்று காலை ஆரம்பமான இரண்டாம் நாள் ஆட்டத்தில்யாழ்.மத்திய மைந்தர்கள்  79  ஓவர்கள் நிறைவில் 161  ஓட்டங்களுக்கு  8 விக்கெட்டினை இழந்து தடுமாறுகின்றது.

 

http://yarlsports.com/?p=1051&cat=16

  • தொடங்கியவர்

109th BATTLE OF THE NORTH.

SJC 300/7d and 103/6
JCC 164/10 end of day 02

  • தொடங்கியவர்

பரியோவான் கல்லூரியா? மத்திய கல்லூரியா? : சூடு பிடிக்கும் ஆட்டம் நாளை

 

 

யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்.பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் ‘வடக்கின் 109 ஆவது’ பெரும் துடுப்பாட்ட போட்டியானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் நேற்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி யாழ்.பரியோவான் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

 

அதன்படி யாழ்.பரியோவான் கல்லூரி அணி சற்று முன்னர் வரை  87 ஓவர்கள் நிறைவில் 300 ஓட்டங்களுக்கு  7 விக்கெட்டை இழந்த நிலையில்  தனது துடுப்பாட்டத்தை நிறுத்தி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினரை தொடர்ந்து துடுப்பெடுத்தாட பணித்தது.

 

இதனை தொடர்ந்து களமிறங்கிய யாழ்.மத்திய கல்லூரி அணி சற்று முன்னர் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 9 ஓட்டங்களுக்கு எதுவித விக்கெட்டுக்களையும் இழக்காமல் துடுப்பெடுத்தாடிய வேளை  நேற்றைய ஆட்டம் நிறைவு பெற்றது.

 

யாழ்.பரியோவான் கல்லூரி அணி சார்பாக  ஜெனி பிளமின் 196 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களும்  அணித்தலைவர் கபில்ராஜ் 143 பந்துகளை எதிர்கொண்டு நிதானமாக துடுப்பெடுத்தாடி 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தனர்.

 

யாழ்.மத்திய கல்லூரி அணிசார்பாக மதுசன் 22 ஓவர்கள் பந்த வீசி 77 ஒட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொடுத்தார்.

மேலும் இன்று காலை ஆரம்பமான இரண்டாம் நாள் ஆட்டத்தில்யாழ்.மத்திய மைந்தர்கள்  80.4   ஓவர்கள் நிறைவில் 164 ஓட்டங்களுக்கு  சகல விக்கெட்டினை இழந்தது.

மேலும் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த  யாழ்.பரியோவான் கல்லூரி  25.5 ஓவர்கள் நிறைவில் 103 ஓட்டங்களுக்கு 6 விக்கெடுக்களை இழந்தது.

 

எனவே நாளை இறுதி நாள் என்பதால் போட்டியில் இரு அணிகளும் தமது முழுமையான திறமையை வெளிப்படுத்துவர் என்றும் நாளைய இறுதி நாள் ஆட்டத்தில் வெல்லப்போகும் அணி யார்? அல்லது சமநிலை முடிவா? என்பது நாளை தெரியும்.

 

http://yarlsports.com/?p=1051&cat=16

  • கருத்துக்கள உறவுகள்

சென் ஜோன்ஸ் இந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தினால்.. சென்ரல்.. நிதானமாக விளையாடி.. 240 ஓட்டங்களை எடுத்து.. வெல்லலாம்.. அல்லது சமப்படுத்தலாம். எடுத்தோம் கவுத்தோம் என்று ஆடினால்.. ஜோனியன்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்.  :D  :icon_idea:

 

சென்ரல்.. இனிங்க்ஸ் தோல்வியை தவிர்த்தது.. பாராட்டத்தக்கது.  :lol:

  • தொடங்கியவர்

1zgz5es.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.