Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ9 போல அம்பாந்தோட்டை வீதியையும் மூடிவிட்டு...

Featured Replies

ஏ9 போல அம்பாந்தோட்டை வீதியையும் மூடிவிட்டு அங்கும் கப்பல் மூலம் பொருள்களை அனுப்பலாமே..!

சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய இறுதிப்பேட்டியில் ரவிராஜ்

இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏ9 வீதியில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக கூறி அதனை பூட்டிவைத்துக்கொண்டு, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலம் பொருள்களை அனுப்ப முயற்சிக்கின்றீர்களே அது போல உங்களது இடமான அம்பாந்தோட்டை வீதியிலும் பாதுகாப்பு பிரச்சினை இருக்கிறது தானே..! எனவே அந்த வீதியையும் பூட்டி விட்டு அங்கும் கப்பல் மூலம் பொருள்களை அனுப்பலாமே! ஏன் அதைச் செய்யவில்லை..? இவ்வாறு மாமனிதர் ரவிராஜ் நேற்று முன்தினம் தாம் கொலை செய்யப்படுவதற்கு சுமார் அரைமணிநேரத் துக்கு முன்பதாக "தெரண' என்ற சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியில் தெரிவித்திருந்தார். மும்மொழிகளிலும் வல்லவரான ரவிராஜ் எம்.பி, சிங்களத்தில் வழங்கிய இந்த பேட்டியில் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:

ஏ9 பாதை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றது. இதனிடையே ஒக்ரோபர் 16ஆம் நாள் வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என்று அதிஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் அந்தத் தீர்ப் பில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. எமக்கு அரசியல் பிரச்சினை உள்ளது. வடக்கு கிழக்கு மக்கள் இணைந்தே வாழ் கின்றனர். வடக்கு கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதே அந்த மக்களின் அபிலாசையாகும். அந்த மக்களினது அடிப்படை மனித உரிமையும் அதுதான்.

1995 ஆம் ஆண்டு ஏ9 பாதை திறப்புக்காக ஜயசிக்குறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை என்று கூறப்பட்டால் அந்த மக்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லை என்கிற தோற்றம்தானே வெளிப்படும். நாங்கள் கப்பலில் உணவுப் பொருள்களை தருகின்றோம் எனில் எல்லாம் எதனை வெளிப்படுத்துகின்றது?

ஏ9 பாதை மூடப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் வரி அறவிடுகிறார்கள் என்று அரசாங்கம் கூறுகின்றது. என்னே ஒரு பொய்? ஏ9 பாதை திறப்பு என்பது 2002 ஆம் ஆண்டு நடந்தது. அதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் எப்படி வாழ்ந்துகொண்டிருந்தனர்.? ஏ9 திறப்புக்கு முன்னர் அவர்கள் நிதிபெறவில்லையா? அவர்களிடம் போதுமான உணவு இதர வசதிகளும் இருந்தது இல்லையா? அரசாங்கத்தின் கீழ்த்தரமான பொய் இது.

நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். ஏழை மக்களுக்கான இலவசமாகப் பிரதேச செயலகங்களினுடே விநியோகிக்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருள்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு போதும் வரி விதித்தது இல்லை. மேலும் எந்த மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வரிசெலுத்துகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவா? , ஹெகலிய ரம்புக்வெலவா? ஏன் இந்த ரவிராஜ் கூட இல்லை...அவர்கள் பிரதேசத்தில் வாழும் மக்கள் தானே..

ஏ9 பாதை திறக்கப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வரி விதிப்புடன் கூட பெற்றோல் விலையில் விலை 10 ரூபாய் வித்தியாசம்தான் இருந்தது. பூநகரிப் பாதை ஊடாக கிளிநொச்சி செல்வது என்பது அதிக தொலைவும் கடினமான சாலையும் கொண்டதாகும். கடலிலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் தான் அந்தப் பாதை உள்ளது. இருந்தபோதும்அந்தப் பாதையை பார்வையிட்டுச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது? கண்காணிப்புக் குழுத் தலைவர் மயிரிழையில் உயிர்தப்பி பதுங்கு குழிக்குள் பதுங்க வேண்டியதாயிற்று. இந்த பூநகரிப் பாதையினூடாக சென்றால் வரி இருக்காதா?

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றை சொல்லி கொள்கின்றேன்... அம்பாந்தோட்டைக்குச் செல்லும் பிரதான பாதையை மூடிவிட்டு கொழும்பிலிருந்து கப்பலினூடே பொருள்களை எடுத்துச்செல்லுங்களேன் அம்பாந்தோட்டையில் பயங்கரவாதப் பிரச்சினை என்கிறீர்களே .. ஏன் எப்போதுமே பயங்கரவாதம் தொடர்பிலான விவகாரத்தையே பேசுகிறீர்கள்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.1 சரத்தில் தெளிவாக ஏ9 பாதை திறக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை அரசாங்கம் விரும்பவில்லை எனில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்று அரசாங்கம் ஏன் சொல்லவில்லை.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிந்து போனால் யுத்தம் தொடங்கிவிடும். அப்பகுதி மக்களுக்கு அதனால் எதுவும் இல்லை. ஏ9 பாதை மூடப்பட்டமையால் அப்பாவி மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி விலங்குகள் கூட பட்டினியால் சாகின்றன. என்றார் ரவிராஜ்.

உதயன்.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.