Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசாவிலும் தனது பெயரைப் பொறித்து விட்டார் மகிந்த! - ரணில் விக்கிரமசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ranil-wickramasinghe-200-news.jpg

முன்னாள் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் ஏழு நட்சத்திர மாளிகை அமைத்ததைப் போல தனது பெயரில் பாலஸ்தீனத்தில் தொழிற்பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்கு 13 கோடி ரூபா செலவு செய்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுரகுமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

   

யாழ்ப்பாணத்தில் 57 அறைகளுடன் ஏழு நட்சத்திர மாளிகையொன்றை அமைப்பதற்கு முன்னைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. விசேட விருந்தினருக்கான மூன்று விடுதிகளை உள்ளடக்கியதாகவும், கடலிலிருந்து 100 அடி தூரத்தில் இந்த மாளிகை அமைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் மாத்திரமன்றி பலஸ்தீனத்தின் காசா பள்ளத்தாக்கிலும் பெயர் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், இதனாலேயே தன்னுடைய பெயரில் 13 கோடி ரூபா செலவில் தொழிற்பயிற்சி நிறுவனத்தையும் அமைத்திருந்ததாகக் கூறினார். மக்களின் பணம் வீணான முறையில் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

இதன்போது குறுக்கிட்ட அநுரகுமார திசாநாயக்க, உயிருடன் இருக்கும்போது ஒருவருடைய பெயரில் கட்டடங்கள் அமைப்பதில்லையென்ற தீர்மானத்துக்கு வர நீங்கள் தயாரா எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த பிரதமர், உயிருடன் இருக்கும்போதல்ல, உயிருடன் இல்லாதபோது கூட பொது மக்களின் பணத்தில் கட்டப்படும் எந்தவொரு கட்டடத்துக்கும் சொந்தப் பெயர்களை வைக்கக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றும் கூறினார்.

 

அப்படி உருவாக்கப்படுவதானால் அவருடைய சொந்தப் பணத்தில் உருவாக்க வேண்டும். ஆனால் மஹிந்த சிந்தனை திட்டத்தில் இவை அனைத்தும் மாற்றமடைந்து விட்டன. எனது தொகுதியில் இது போன்றவற்றுக்கு இடமில்லை. தனது சொந்த பணத்தில் அமைத்தால் தனது பெயரை வைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

 

டி.எஸ்.சேனநாயக்க போன்ற ஐ.தே.க தலைவர்கள் உயிருடன் இருக்கும்போது தமது பெயர்களை எந்தவொரு பொது கட்டடங்களுக்கோ அல்லது மைதானங்களுக்கோ வைக்கவில்லை. பண்டாரநாயக்க இறந்த பின்னரே அவருடைய பெயர் மாநாட்டு மண்டபத்துக்கு வைக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=127629&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிந்தனை இஸ்ரயேலில் பரவியிருந்தால் பரவாயில்லை.
காசாவில் காலூன்றவிட்டது தப்புத்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

பதவியிலிருந்திருந்தால் அந்த மனுசன் சந்திரமண்டலத்திலயும் தனது பெயரை பொறித்திருப்பார்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.